யாழ்-29(1)

யாழ்-29(1)

யாழ்-29(1)

நீலாங்கரை!

கடற்கரையின் மாலை நேரத்து இளந்தென்றல் யாழ்மொழியின் முகத்தில், இனிமையாய் தவழந்து செல்ல, கலைந்த கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டவள், மண்ணைக் கையில் எடுப்பதும் வைப்பதுமாக அமர்ந்திருந்தாள் அவள்.

அவள் இங்குவந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. என்னதான் தந்தை, அன்னை, சகோதரன், பாட்டி என அனைவரும் இருபத்திநாலு மணி நேரமும் தன்னுடனே இருந்தாலும், மனதில் வெறுமை அவளுக்கு.

தன்னுடன் கலந்துவிட்டவன் இல்லாத சலிப்பு!

அதற்கென்று சோக சித்திரமாய் அவள் அழவில்லை. அழத்தான் அவளின் வயிற்றில் இருப்பவள் விட்டுவிடுவாளா?

வீட்டிலிருந்து இருநூறு மீட்டர் தூரத்தில் கடல் இருக்க, யாழை மாலை நேரம் நடப்பதற்கு அழைத்து வந்திருந்தான் த்ரூவ். வந்தவன் முக்கியமான ஃபோன் வர எடுத்துப் பேச சற்று தள்ளி சென்றுவிட, அமைதியாய் அமர்ந்திருந்தவளை தன்னவனின் எண்ணம் ஆட்கொண்டுவிட்டது.

‘ஏன்டி உன் அப்பனுக்கு நம்ம ஞாபகமே வராதா?’ மகளிடம் கேட்க அவளோ அன்னையின் வயிற்றில் நச்சென்று ஒன்றைவிட்டு, வளைகாப்பு அன்று இரவு நடந்ததை சொல்லிக் காண்பித்தாள்.

அன்று கையில் பரிசுடன் நின்றவனை ஒரு பார்வை மட்டும் பார்த்தவள், டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சுடு நீரில் அலுப்புத் தீர குளித்து முடித்தவள், டவலை சுற்றிக்கொண்டு வெளியே வர, படுக்கையில் சாய்ந்து பரிசுடன் தன்னவளுக்கு காத்திருந்தவன், தன் அதரங்களில் நெளிந்த மென்புன்னகையை மறைத்துக் கொண்டான்.

அவள் இது மாதிரி விஷயங்களில் இயல்பாகத்தான் இருக்கிறாள். இதில் மட்டும் இல்லை நிறைய விஷயங்களில். அவனிடம் பேசுவதில்லை அவ்வளவு தான்.

சிறிதுநேரம் ஏசிக்கடியில் காற்றாட வெக்கை குறைய நின்றிருத்தவள், கப்போர்டிலிருந்த தனது நைட்டியை எடுத்து பெட்டில் வைத்துவிட்டு, துண்டின் முடிச்சை அவிழ்த்து, இயல்பாக உடையை மாற்ற, அவனும் இயல்பாக பெட்டில் இருந்தபடியே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தாய்மையில் மாறிப் போயிருந்த அவளின் உடலைக் கண்டவனுக்கு நன்கு தெரியும் அவள் படும் அவஸ்தைகள். கால் வீக்கம், திரும்பிப் படுக்க முடியாது, என அவள் அவ்வப்போது யாரிடமும் சொல்லாமல் அவஸ்தைப் படுவதை அவன் அறிவான். ஜிம்மில் எண்பதுகிலோ வரை தூக்கியவள் அவள். இப்போதெல்லாம் நடந்தால் மூச்சு வாங்குகிறாள். ஆனால், சிரித்துக் கொள்கிறாள்.

எதிலும் அவசரக் குடுக்கையாக இருப்பவள், குழந்தை விஷயத்தில் கண்ணும் கருத்துமாக தாய்மையில் மாறிப்போயிருத்தவளை கண்டு, உடலில் இருந்த ரோமங்கள் மெய் சிலிர்த்து நின்றது.

நைட்டியை அணிந்து கொண்டு வந்தவள் பெட்டில் ஏற, அவளின் கரம் பிடித்தவன், அவளிடம் தன்னுடைய பரிசை நீட்டினான். பரிசை பார்த்திருந்தவள் அதை வாங்கவில்லை. அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

“என்னனு பாக்க மாட்டியா?” அவன் வினவ, அவளிடம் பதிலில்லை.

சிறிது நேரம் பொறுத்தவன், அவனே பரிசைப் பிரித்து, அதில் இருந்த வளையல்களை எடுத்தான். ரோஸ் கோல்ட் வளையல் செட்டில், வைரக் கற்கள் பதித்திருக்க, மனைவிக்காக பார்த்து பார்த்து செய்து வந்திருந்தவன், அவள் கரங்களில் இருந்த சில வளையல்களை அகற்றி, தான் வாங்கியிருந்த வளையல்களை அவளுக்கு வலிக்காமல் ஒவ்வொன்றாய் அணிவித்துவிட்டான்.

அணிவிக்க அணிவிக்க, வளையல்களை வெறும் பார்வை பார்த்தவள், ஒன்றும் பேசாது இருக்க, அனைத்தையும் அணிவித்து முடித்தவன், “புடிச்சிருக்காடி?” அவளின் கை விரல்களில் முத்தமிட்டபடி கேட்க, மௌமனே பதிலாய்.

“இப்ப இதை கழட்டிக்கோ. இப்போ வைரம் வேண்டாம். பாப்பா வந்ததுக்கு அப்புறம் போட்டுக்க” அனைத்தையும் கழட்டி வைத்து, பழைய வளையல்களை அணிவித்துவிட்டவன், அதை தங்களது கப்போர்டினுள் வைக்க,

“அதை நான் இங்க வந்தா பாக்கலாம்” பெண்ணவள் கூற, அவளின் குரலில் இருந்த தெனாவெட்டில் ஆடவணுக்கு, கழுத்து நரம்புகள் புடைத்தது.

திரும்பாமலேயே கண்களைமூடி தன்னை சமன் செய்தவன், “என்னை விட்டுட்டு போக முடிவு பண்ணிட்டியா?” அவன் கேட்க, அவளோ படுத்துக் கொண்டாள்.

கோபத்தில் அங்கிருந்த மேசையை அவன் ஆங்காரமாய் குத்த, அதிலிருந்த பூச்சட்டி மேசை அதிர்ந்ததில், கீழே விழுந்து சில்லு சில்லாக நொறுங்கியது.

அது படாரென விழுந்து நொறுங்கி தெறித்ததில், பெண்ணவள் பயப்படவில்லை என்றாலும், அவளுக்குள் இருந்தவள் பழக்கமில்லாத சத்தத்தில் தூக்கிவாரிப் போட்டு அன்னைக்குள் இன்னும் புதைய, மகளின் அசைவு புரிந்தவள்,

ஆவேசமாய் எழுந்து, “அறிவிருக்கா.. வயித்துல குழந்தை இருக்கு.. அது பயபடாதா?” யாழ் தொண்டை கிழியக் கத்த, “அப்ப என் மேல உனக்கு அக்கறை என்ன இருக்கு?” என்று கேட்டவன் மொத்தமாய் கோபத்தை கொட்ட ஆரம்பித்தான்.

“என்கிட்ட நீ பேசி இரண்டரை மாசம் ஆச்சுடி. ஆனா நீ நார்மலா தான் இருக்க. நான் எவ்வளவு கஷ்டப்படறேனு உனக்குத் தெரியுமா. என் நிலை என்னனு புரியுமா. என்னதான் உன்னை தினமும் பக்கத்துல வச்சுட்டு படுத்தாலும் நீயும், குழந்தையும் தூரமா இருக்க மாதிரியேதான் இருக்கு. ஒரு கணவனா ஒரு தகப்பனா உங்களையே தள்ளி நின்னு பாத்துட்டு இருக்கேன். எல்லாம் எதுக்கு?”

“சரி இவளை நாம கஷ்டப்படுத்திட்டோம். இவளை தொந்திரவு பண்ணாம இருக்கணும்னு தான். மத்தபடி கையாலாம எல்லாம் இல்ல. எனக்கும் எத்தனை ஆசை தெரியுமா. இந்த இரண்டரை மாசத்துல அத்தனை பேர்கிட்ட பேசமுடியும் உன்னால. என்கிட்ட முகத்தை கூட காட்டமுடியாது இல்ல?”

“அப்படி நான் என்னடி தப்பு பண்ணிட்டேன். சொல்லாம இருந்தது உன் தப்பா என் தப்பா. யாரா இருந்தாலும் மறைச்சிருந்தா இதைத்தான் நினைச்சிருப்பாங்க. நான் எல்லார் முன்னாடியும் கை ஓங்குனது தப்புதான். என்னோட கோபம் நியாயமானது. எல்லார்கிட்டையும் சொல்லியிருக்க வேணாம். ஆனா, என்கிட்ட சொல்லியிருக்கலாமே”

“சம்யுவை நான் எப்படி தப்பா நினைச்சிருக்கேன், இது தெரிஞ்சப்ப மட்டும் நினைக்க. ஏன் நம்ம இரண்டு பேரும் ஃபோன்ல சிலது பேசுனதே இல்லியா யூ.எஸ்ல இருக்கும்போது” அவன் கேட்க கொதித்தெழுந்தவள்,

“நம்ம அந்த அளவுக்கு போகல. நான் வந்திருக்கவும் மாட்டேன். நான் ஓப்பனா இருந்தனால எல்லாத்துக்கும் ரெடியா இருந்தவனு நினைச்சுக்காத” கூறியவளுக்கு குரல் கரகரத்தது,

“அதுக்காக சம்யு தப்பு பண்ணானு சொல்லலை. அது அவ இஷ்டம். அவ பர்சனல். அதுமில்லாம மித்ரன் அண்ணாவும் அவளும் காதலிச்சாங்க” என்றிட,

“அதைதான் நானும் சொல்றேன். சம்யு தப்பு பண்ணல. அவ லவ் பண்ண பையன் கூட பேசியிருக்கா. நான் ஏன்டி தப்பா நினைப்பேன். உனக்கே அது தப்பா தோணாதப்ப எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்ல. ஏன்னா சம்யுகிட்ட சரியான காரணம் இருந்துச்சு அவ காதலை மறைச்சதுக்கு” அவன் கேட்க,

“அப்ப நான் எல்லாத்துக்காகவும் மறைச்சதுதான் இப்ப தப்பு இல்ல?” கேட்டவள் முகத்தை மூடிக்கொண்டு அழ, வயிற்றில் பிள்ளையை வைத்துக்கொண்டு அழுதவளின் அருகே சென்றவன் அவள் வதனத்தை தன் வயிற்றின்மேல் சாய்த்துக்கொள்ள,

“நீ என்ன விர்ஜினானு கேட்ட ஞாபகம் இருக்கா?” என்று ருத்ரமாய் கேட்டாள்.

“உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன். உன்மேல நான் சந்தேகப்படல. நம்மள ஒருத்தங்க நம்பாம இருக்கிறது எவ்வளவு வலிக்கும் அப்படிங்கறதுக்காக அதைக் கேட்டேன். ஐ டின்ட் மீன் இட்” என்றான் அவளின் கரத்தைப பற்றி.

அவனின் கரத்தை உதறியவள் கண்ணீரை துடைத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “ஆமாடா. எனக்கு உன்கிட்ட பேச புடிக்கல. மூஞ்சி குடுத்து பேச புடிக்கல. உன்கூட இருக்கவும் பிடிக்கல. போதுமா. நான் எங்க அப்பா வீட்டுக்கே போறேன் போ. நீ இங்க சந்தோஷமா இரு. நான் இங்க வரமாட்டேன்” அவள் படுக்க முயற்சிக்க,

அவளைப் பிடித்தவன், “என்னடி உன் பிரச்சனை. உங்க வீட்டுக்கு கூட போகமா இங்க இருக்கேனு ப்ரெக்னன்ட் ஆனப்பவே சொன்ன. ஆனா இப்ப ஏன்டி. ரொம்ப கஷ்டமா இருக்குடி. நீயும் பாப்பாவும் இல்லாம முடியாது யாழ். அட்லீஸ்ட் பாப்பா பொறந்த அப்புறம் வந்திடு டி. சரி என்ன பண்ணனும் சொல்லு?” அவன் கேட்க,

“என்ன சொன்னாலும் செய்வியா?”

“டைவர்ஸ் தவிர வேற என்ன வேணாலும் கேளுடி” அவன் முடிவாகச் சொல்ல,

“குழந்தை பிறக்கிற வரை என்னை வந்து பாக்கவே கூடாது” அவள் கூற, அவளின் பிடிவாதம் அறிந்தவன், வலியோடு, “சரி” என்றவன் அவள் அடுத்த நாள் கிளம்பும் போது கூட, அவளிடம் பேசவில்லை.

அனைத்தையும் நினைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள் மீண்டும் மண்ணில், ‘V’ என்று எழுத, நிழலாடியது. நிமிர்ந்து பார்க்காமலேயே யாரென்று உணர்ந்து கொண்டவள், அமைதியாய் அமர்ந்திருக்க, அவளருகே அமர்ந்தவன்,

“ஒரு மாசம் கன்ட்ரோல் பண்ணேன்டி. என்னால நீங்க இல்லாம முடியல யாழ்” என்றவனின் கட்டுப்பாட்டை நினைத்து அவனுக்கே காறி உமிழலாம் என்றிருந்தது.

“உனக்கு எதுலதான் கன்ட்ரோல் இருந்திருக்கு..” அவள் அவனின் கோபத்தைச் சுட்டிக்காட்டி சொல்ல, அவனோ அதை வேறு விதமாக நினைத்தவன், வதனத்தில் வெட்கத்தைக் காட்ட,

“நான் கோபத்தை சொன்னேன்” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

“எனக்கு இரண்டுலையுமே கன்ட்ரோல் இல்லைதான்டி” என்றவன் வயிற்றில் கை வைக்க, வழக்கம் போல தந்தையின் ஸ்பரிசத்தில் உள்ளே இருப்பவள் துடித்தாள்.

“இவளுக்குக் கூட நீதான் முக்கியம்போல. நீ தொடும்போதுதான் ரொம்ப துடிக்கிறா” என்றவளின் சொற்களில் கர்வம் கொண்டவன் தன்னவளின் கரத்தில் முத்தமிட,

“ஒருவேளை சம்யுவுக்கு பதிலா நான் செத்திருந்தா. உனக்கு நான் பர்ஸ்ட் ப்ரையாரிட்டில இருந்திருப்பனா வருண்?” அவள் கேட்டது தான் தாமதம், ஆத்திரத்துடன் எழுந்தவன்,

“எழுந்திருடி” என்று கத்த, நல்லவேளை யாரும் அங்கில்லை.

“எழுந்திரு” அவன் கர்ஜிக்க, வயிற்றை பிடித்துக்கொண்டு சிரமப்பட்டு எழுபவளை குனிந்து கைகளில் அள்ளியவன், அஷ்வினின் வீட்டை நோக்கி நடந்தான்.

“ஐயோ த்ரூவ் பாக்கறான்” என்றவள் கணவனின் நெஞ்சில் வெட்கத்தில் புதைந்துகொள்ள, வீட்டிற்குள் அவளைத் தூக்கி வந்தவன்,

“அத்தை இவ ரூம் எது?” வரவேற்பறையில் அமர்ந்திருந்த ராஷ்மிகாவிடம் கேட்க, அவள் வாய்பிளந்தபடி மேலே கை காட்ட, தன்னை தூக்கிக்கொண்டு செல்லும் கணவனின் தோள் வழியாக அன்னையை எட்டிப் பார்த்தவள்,

‘பாத்தியா என் புருஷனை’ இருபுருவங்களையும் உயர்த்தி பெருமையாகக் கேட்க, ‘போடி போடி. என் புருஷன் என்னைத் தூக்காததா’ நினைத்துக் கொண்டவள் திருப்பிக்கொள்ள, கணவனை நிமிர்ந்து பார்த்த யாழ்மொழி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

அவளின் படுக்கையறையில் அவளை மென்மையாய் வைத்தவன் கதவை சாத்திவிட்டு வந்து அவளின் முந்தானையை இழுக்க, “என்ன பண்ற?” என்றவளின் கேள்வியை தூக்கியெறிந்தவன்,

அவளின் வயிற்றில் கை வைத்து, “நம்ம குழந்தை மேல சத்தியமா சொல்றேன்டி. நீதான் எப்போமே என்னோட பர்ஸ்ட் ப்ரையாரிட்டி. என் வாழ்க்கைல நான் இவங்கதான் முக்கியம் அவங்கதான் முக்கியம்னு நினைச்சதில்ல. எல்லாரும் ஒண்ணுதான். ஆனா, எப்ப உன்கூட அட்டாச் ஆனனோ அன்னிக்கே நீ எனக்கு வேற எடத்துல இருக்க யாழ்”

“திரும்ப திரும்ப என்னை சொல்ல வைக்காதடி. நீயும் நானும் இருக்க மாதிரி, உன்கிட்ட நான் உரிமையா இருக்க மாதிரி, உன்கிட்ட கோபப்படற மாதிரி, என்னால யார் கிட்டையும் இருக்க முடியாது. புரிஞ்சுக்க. இனிமே சாவு அதுஇதுனு பேசுன நானே உன்னை கொன்னுடுவேன்” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள,

அவனின் அழுத்தம் தாளமுடியாது, “வருண் வயிறு அழுந்துது” என்றவளிடம் இருந்து விலகியவன், அவளை பக்கவாட்டில் இருந்து அணைக்க, “நான் சொன்னா என்னை பாக்க வர்றாம இருந்திடுவியாடா?” அவனின் கன்னத்தில் அறைய, “ஸாரி” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

“ஆரம்பிச்சுட்டியா?” என்றவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

மற்ற ஜோடிகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு வித்தியாசமான ஜோடிதான். எப்போது அடித்துக் கொள்ளும் எப்போது சேர்ந்து கொள்ளும் என்று தெரியாது. ஆனால், உள்ளுக்குள் இருக்கும் காதலுக்கு மட்டும் குறைச்சல இல்லாமல் இருந்தது.

“ஹே! இந்த நேரத்துல சேஃபாடி?” அவன் அவள் உடல்நிலை கருதிக் கேட்க, அவன் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்தவள், அவன் கீழுதட்டை மெல்லமாய் கடித்து சுவைக்க, அதில் போதையேறிப் போனவன், அவளை முரட்டுத்தனமாய் நெருங்கினான்.

“டேய்! டேய்! நான் மட்டும் இல்ல. பாப்பாவும் இருக்கு. மெதுவாடா. வலிக்குது” யாழ் அவனின் கடித்துவைத்து கூற,

“ஸாரிடி ஸாரிடி. ரொம்ப நாள் ஆச்சா. அதுதான் ஒரு வேகம்” என்றவன் வயிற்றைத் தொட்டுக் கும்பிட்டு மகளிடம் மன்னிப்பு கேட்க, வாய்விட்டு சிரித்தவள்,

“ஆமா, வயித்துல கை வச்சு சத்தியம் பண்ண சேலையை விலக்குனா போதுமே. நீ எதுக்கு ஃபுல்லா கழட்டுன?” அவள் படுத்திருந்தபடியே அவனைப் பார்த்து கேட்க,

“அ.. அது..” திணறினான் அவன்.

“ரொம்ப யோசிக்காத உன்னை எனக்குத் தெரியும்” என்றவள், அவனின் சட்டை பட்டனில் கைவைத்து, ஒவ்வொன்றாய் கழற்றி அவனின் நெஞ்சில் கைவைத்து, அவன் ரோமங்களில் விளையாடியவள், அவனின் படிக்கட்டுக்களை எண்ணியபடியே,

“போர் பாக் தான் இருக்கு. இன்னும் இரண்டு எங்க?” அவள் கேட்க,

“அதுதான் மிச்ச இரண்டு உங்கிட்ட இருக்குல்ல. போதும்டி. முடியல வாடி” பச்சையாய் சொல்லிவிட்டு, தன்னவளை இழுத்து இதழைச் சுவைத்து, தன் இதழுக்குள் புதைத்தவன், கைகளை தனக்கு பிடித்த இடங்கள் நோக்கி செலுத்த, பெண்ணவள் மெய் சிலிர்த்துப் போனாள்.

அத்தனை மென்மையாக!

தாய்மையால் அவளின் மாறிப்போன அங்கங்களை கை கொண்டு ரசித்தவன், அவைகளுக்கு முதல் மரியாதை செய்ய, பெட்ஷீட்டை ஒரு கையாலும், கணவனின் கரத்தை ஒரு கையாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், கணவனின் அருகாமையில் மூழ்கினாள்! கரைந்தாள்! கலந்தாள்!

Leave a Reply

error: Content is protected !!