வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் – 7
இன்று
விஷ்ணு அவளையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் அப்படி ஒரு வெறி எழுந்தது. “ஒரு பெண்ணின் முன்னால் தோற்று விட்டேனே“ இது தான் அவளைப் பார்த்த நிமிடத்தில் இருந்து மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
அவனை மரியாதையாகப் பார்க்கும் கூட்டத்தில் இன்று அவன் முன்னாலையே அவளை உயர்த்திப் பேசியதில் வெறி தலைகேற இறுகி போய் அமர்ந்திருந்தான்.
அவளைப் பார்த்ததும் அவனுக்கு எல்லாம் புரிந்தது, “ஆக. மூர்த்தியின் தயவில் அவனை எதிர்த்துள்ளாள். தன் தாயின் வாழ்கையை அழித்ததும் அல்லாமல் அவனையும். அவன் தொழிலையும் வேருடன் அழிக்க எண்ணியுள்ளார். இவர்களை இவர் போக்கிலே சென்று விரட்ட வேண்டும்“ என்று முடிவெடுத்தவன் எங்கும் கண்களைச் சுழல விட்டான்.
அவனின் இறுகிய முகத்தைக் கண்டவளுக்குச் சந்தோசம் எழுந்தது போல் முகத்தில் கீற்றாக ஒரு புன்னகை வந்து போனது. அவனின் தோல்வி தானே அவளின் வெற்றி!
அவள் ஒரு பெண்ணாக இருப்பதால் தானே அவளை நோக்கி அன்று பணத்தை வீசினான். அந்தப் பணம் அவனுக்கு இல்லாமல் ஆக்க வேண்டும் அது மட்டும் தான் அவளின் முதல் குறி.
அவனின் இறுகிய முகத்தைக் கண்டவள், “அங்கிள் ஒரு நிமிடம்“ எனக் கூறி அவரை விட்டு எழ.
“எங்க போற கீர்த்திம்மா“ மகனின் கோப முகத்தைக் கண்டு சிறு பயத்துடன் அவளிடம் கேட்டார் மூர்த்தி.
“என்னோட பாஸ் கிட்ட பேசிட்டு வாரேன் அங்கிள். பாஸ் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகிட்டு“ அவனைப் பார்த்துக் கொண்டே ஏளன குரலில் கூறினாள் அவள்.
“வேண்டாம்ம்மா. அவனைப் பற்றி உனக்குத் தெரியாது. என்னையே யார் என்று கேட்டு கழுத்தை பிடித்து வெளியில் தள்ளின அரக்கன் அவன். உன்னை ஏதாவது பேசப்போகிறான்“ எச்சரித்தார் மூர்த்தி.
அவர் கூறவும் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்த கீர்த்தி, “எதுக்கும் பயபடாதீங்க அங்கிள். அவனை ஒரு வழி பண்ண தான் நான் வந்திருக்கேன். எல்லாருக்கும் சில பல ஷாக் ட்ரீட்மென்ட் இருக்கு அங்கிள். நீங்க பார்த்துட்டு மட்டும் இருங்க. நானே எல்லாம் பார்த்துப்பேன்” அவரிடம் கூறியவள் அவனை அற்ப பார்வை ஒன்று பார்த்து அவனை நோக்கி நகர்ந்தாள்.
அவளின் பார்வையைக் கண்டவன் அப்படியே எழுந்து செல்லலாமா என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் அவன் மனதில் இருந்த விஷ்ணு என்னும் பிம்பமோ, ‘அவளுக்கு நான் ஏன் பயப்படவேண்டும் என்னைக் கண்டு தான் அவள் பயப்படவேண்டும். அவளுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று எண்ணியவன் கண்களில் இருந்த கூலரை கழட்டி கையில் வைத்துச் சுழற்றிக் கொண்டே அவளையே பார்த்திருந்தான்.
அவர்களுக்குப் பின்னே இருந்த ரிஷி கீர்த்தியையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான். ‘விஷ்ணு கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பெண்’ என்று பலரால் பேசப்பட்டு. அவன் மனதில் உயர்ந்து நின்ற அவளை இன்று தான் நேரில் பார்ப்பதால் அப்படியே பார்த்திருந்தான். பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. கண்களில் மயக்கம் தானாக வந்து அமர்ந்திருந்தது.
அவன் அருகில் இருந்த ரிஷிபாவோ, ‘விஷ்ணுவை நோக்கி செல்லும் அவள் யார்?’ என்ற யோசனையுடன் பார்த்திருந்தாள்.
அவள் அவனை நோக்கி வரவும். அங்குப் பக்கத்தில் நின்றிருந்த பேரரை அழைத்து, “ஒன் கார்லோ ரோஸ்ஸி“ என்றவன் அவளை அலட்சியமாகப் பார்த்து கூலரை மேஜை மேல் வைத்துக் கொண்டு நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து அவளையே பார்த்தான்.
பெண்களுக்கே உரிய உயரம். திருத்தமான முகம். எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அமைதியான அழகு! அந்தக் கண். அந்தக் கண்களில் மட்டும் ஒரு பிடிவாதம். நினைத்ததை முடித்தே தீருவேன் என்ற பிடிவாதம்.
சாண்டல் நிற டிசைனிங் புடைவையும். பார்டரில் தங்க நிற ஸ்டோன் வோர்க்ஸ் பளிச்செனக் கண்ணைப் பறிக்க. அதற்கேற்ற தங்க நிற ஜாக்கெட் கனகச்சிதமாகப் பொருந்த அமைதியான அழகுடன். முகத்தை உரசிக் கொண்டிருந்த முடியை காதின் பின்னே மறைத்தபடியே. கண்களில் தீர்க்கமான பார்வையுடன் அவனை நோக்கி வந்தாள்.
அவளையே அசையாமல் பார்திருந்தவனின் பார்வையில், ‘நாட் பேட்’ என்ற செய்தி ஒளிந்திருந்தது.
அப்பொழுது தான் அருகில் இருந்த அகில் நினைவு வர, “அகில் பார்கிங்ல வெயிட் பண்ணு வருகிறேன்“ என்றவன் அவளையே பார்த்திருந்தான்.
அவன் முன்னால் வந்தவள் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமரவும், பேரர் வைத்து சென்ற வயினைக் கையில் எடுத்துக் கொண்டான் விஷ்ணு.
பின்னால் திரும்பி சொடக்கு போட்டு பேரரை அழைத்தவள், “ஒன் ஆப்பிள் ஜூஸ்“ என்றவள் அவனை நோக்கினாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே வயினை வாயில் வைக்க. அவள் முகம் ஒருமாதிரியான சுணக்கத்தைக் காட்டியது.
அவள் முகத்தையே சுவாரசியமாகப் பார்த்த விஷ்ணு ஒரு மிடறு வயினை வாயில் வைத்தான். அவளுக்கு ஒரு செயல் பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக அவன் அதை ரசித்துச் செய்வான்.
வாயில் வைத்தவன் முகம் அதன் சுவையில் சுழிந்தது. முதல் முறையாகக் குடிக்கிறான் அதனால் வந்த முகச் சுழிப்பு.
அவன் ஒருபோதும் குடிப்பதில்லை. மது. புகை என்று எதையும் தொடமாட்டான் அவன். அதன் பின்னால் சென்றால் மனதை அடிமைபடுத்தும் என்பது அவன் அறிந்தது.
அவனை அடிமைபடுத்தும் எந்தச் செயலையும் அவன் அருகில் அண்ட விடமாட்டான். தொழில் உலகில் அவன் நிறையப் பேரை பார்த்திருக்கிறான். கவர்ச்சியின் பின் சென்று தொழிலையும். புகழையும் விட்டவர்கள் அநேகம் பேர் உண்டு. அதனால் அப்படிப்பட்ட விஷயத்தை அவன் கையில் எடுக்க மாட்டான்.
‘ஏன் அவன் அப்பாவே பெண் என்னும் மாயை பின்னால் சென்று தான் அவரின் கார்மென்ட்ஸ் மூடும் நிலைக்கு ஆளானது’ என்று காரிகை அவர் மனதில் அழுந்த பதிய வைத்திருக்கிறாள்.
இப்படிப் பல கோட்பாடுகளுடன் வாழ்பவன் இன்று அவளுக்காக எடுத்தான். அவனைத் தோற்கடித்தவளுடன் விளையாட அவன் மனம் ஆசை கொண்டது. அவன் ஆடப்போகும் ஆட்டத்தைப் பாவையவள் தாங்கிக் கொள்வாளா? பொறுத்திருந்துப் பாப்போம்.
எதிரி முன்னால் அதைக் காட்ட விரும்பாதவன். கிளாசை மேசை மேல் வைத்து. அவளை யோசனையாகப் பார்பவன் போல் வலது புருவத்தை வருடி “மிசஸ். தேவேந்தரன்“ என்றடி இழுக்க.
அவனின் செயல் அவளின் தேவேந்திரனை நியாபகப்படுத்தியது. அவனும் இப்படித்தான் ஒரு கையை இடுப்பில் வைத்து. மற்றொரு கையால் வலது புருவத்தை வருடி சிந்தனை செய்வான். அதே செயலை இவன் செய்யவும் அவனை அப்படியே அசையாமல் பார்த்திருந்தாள். கண்கள் சிறிது கலங்கினதோ? ஆனாலும் அதை மறைத்து.
“ஹா.ஹா. எதிரியை எல்லாம் நன்றாக நினைவிருக்கிறதா பாஸ்?“ கிண்டலாகக் கேட்டாள் அவள்.
அவளையே ஊன்றி ஒரு நொடி பார்த்தவன். நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து பிடியில் கை முழங்கையை ஊன்றி. நெற்றியில் விரலை வைத்துக் கொண்டு. பேசும் அவளையே அசையாமல் பார்த்திருந்தான். ரசனையாகவா? குரோதமாகவா? அதை அவனே அறிவான்.
“என்ன பாஸ் ஒன்னும் பேசாம இருகிறதிலையே தெரிகிறது உங்கள் கவலையின் அளவு“ என்றபடி சீண்டினாள் அவள்.
அவளைக் கண்டு யோசனையாக (கிண்டலாக) ஒற்றைப் புருவத்தை உயர்த்த.
“அதுதான் பாஸ். காண்ட்ராக்ட் கையை விட்டு எப்படிப் போனது என்று நீங்கள் யோசிக்கவே இல்லை போல?” எனக் கேள்வியாகக் கேட்டவள்,
அவனின் அதீத அமைதியைக் கண்டு, “உங்களைப் பற்றிய ரகசியத்தை நீங்கள் அறியவே உங்களுக்கு நேரம் பத்தாது“ என்றபடி கிண்டலாகச் சிரித்தாள்.
“அப்படியா” என்னும் விதமாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன். அவள் குடித்து வைத்திருந்த ஆப்பிள் ஜூஸ் எடுத்து ஒரு மிடறு குடித்தவன் இடத்தை விட்டு எழுந்தான்.
மேஜை மேல் இருந்த கூலரை எடுத்துக் கொண்டே அவளின் கன்னம் தட்டி, “நான் முதலில் நமது ரகசியத்தை தெரிஞ்சுக்கிறேன் பொண்டாட்டி. எல்லாவற்றிற்கும் ரெடியாக இரு. கேம் ஸ்டார்ட் நொவ்” அவளின் கன்னம் தட்டி ஒற்றைக் கண் சிமிட்டி அவளை விட்டு விலகி சென்றான்.
வாசல் பக்கமாக நடந்து சென்றவன். ஒரு நொடி நின்று மெதுவாகத் திரும்பி பார்த்தான்.
அவன் செயலில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க இருந்தவளின் முகத்தில் திருப்தியானவன் முகம் ரகசிய புன்னகையில் விரிந்தது. இப்பொழுது கூலர் அவன் கண்ணை மறைத்திருந்தது!
வாயில் பக்கம் செல்லவும் அவனை நோக்கி தியாகராஜ் அவர் மகளுடன் வர. உடனே கண்டு கொண்டான் விஷ்ணு, ‘இவள்தான் நான் கட்டிக் கொள்ளப் போகும் ரிஷிபா’ என்று.
வாய் பேச்சுத் தியாகராஜிடம் இருந்தாலும். அவனின் பார்வை அவளையே எடைபோட்டது. அவளுக்கு அவன் மேல் இருந்த ஆர்வத்தை ஒரே நொடியில் அறிந்து கொண்டான்.
ரிஷிபாவை நோக்கி, “ஹாய் பேபி” என்றபடி அவள் அருகில் செல்ல. அந்த நொடி தியாகராஜ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் பறந்தோடியது. ரிஷி கூறியபடி வேறு எந்தக் காரணமும் இல்ல. விஷ்ணு மனசாரத் தான் தன் மகளைத் திருமணம் செய்கிறான் என்று அந்தத் தந்தை உள்ளம் சந்தோஷித்தது…
ரிஷிபா ரெக்கை இல்லாமல் வானில் பறந்தாள், ‘அவனாக அவளைத் தேடி வந்து பேசிவிட்டானே’ மனம் மகிழ்ச்சியில் துள்ள அவனை மெதுவாக அணைத்து விலகினாள்.
அதே நேரம் தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரிஷி முகம் யோசனையில் சுருங்கியதையும். அந்த நிமிடமே அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றதையும் விஷ்ணு கண்கள் குறித்துக் கொண்டது.
“யம்மாடி கீர்த்தி” என்று மூர்த்திக் கீர்த்தித் தோளில் தட்டவும் அதிர்ந்து விழித்தாள் அவள். அவன் என்ன சொல்லி விட்டுச் சென்றான் அவளுக்குப் புரியவே இல்லை.
‘இல்லை… அவன் ஏதோ முடிவெடுத்துவிட்டான். இப்பொழுது கூட ஏதோ காரணத்துக்காகத் தான் என்னிடம் இருந்து பேசியிருக்கிறான்’ என்று எண்ணியவள். மூர்த்தித் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவள், “வாங்க அங்கிள் கிளம்பலாம்” என்றவள் யோசனையுடன் அவருடன் சென்றாள்.
வீட்டுக்கு சென்ற விஷ்ணு சேலம் பேக்டரி பைலை எடுத்து தீவிர யோசனையில் இருந்தான்.
‘சீக்கிரம் வேலையை ஆரம்பிக்க வேண்டும்’ என்று எண்ணியவன் சிறு குறும்புடன் அவளை அழைத்தான்.
விஷ்ணு கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கீர்த்தி. ‘அகிலை பார்த்த விஷயத்தைத் தேஷிகாவிடம் கூறி விடலாமா? அப்படிக் கூறினால் உடனே சென்னை கிளம்பி விடுவாள். என்ன செய்வது’ என யோசனையில் இருந்தவளை போன் அழைப்புக் கலைத்தது.
அழைப்பது யார் என்று பார்க்காமலே, “ஹலோ” என்க.
“ஹலோ பொண்டாட்டி” ஆர்ப்பாட்டமாகக் கூவினான் விஷ்ணு காரிகை.
இது அவனல்லவா. என்று எண்ணியபடி அலைபேசியைக் கையில் எடுத்து பார்த்தாள் “அவன் தான். அவனே தான் ராட்சஷன்” என அவள் வாய் முணுமுணுக்க.
“ரா… ட்… ச… ஷ… ன்” அந்த வார்த்தையையே ஒவ்வொரு எழுத்தாகக் கூறியவன் “ஹே. பேபி ராட்சஷன். ராட்சஷி காம்பினேஷன் நல்லா இருக்குல்ல” என்றபடி அவளைச் சீண்டினான்.
இத்தனை நாளாக அவளைக் கண்டு சீறியவன் இன்று சீண்டுகிறான். இன்று அவளை நேரில் காணவும் அவள் அத்தனை ஒர்த்தாக அவனுக்குத் தெரியவில்லை. இவளை ஈசியாகப் பேசி காரியத்தைச் சாதிக்க எண்ணினான்.
அதிலும் அவனைக் காணும் நேரம் அவள் கண்கள் கலங்குவதைக் கண்டவனால் அவளை ஈசியாகத் தன் வசப்படுத்தலாம் என்று தவறாக அவளைப் பற்றிக் கணித்து அவளிடம் தன் விளையாட்டை ஆரம்பிக்கிறான்.
காரணம் அவனின் பணம் கோடி கணக்கில் சாயப் பட்டறை கட்டுவதில் முடங்கிக் கிடக்கிறது. அதைக் கட்டுவதற்குத் தடையாக இருந்தது அவள் கணவன் தேவேந்திரன். அதில் போட்ட பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும். அது தான் இப்பொழுது அவனின் தாயின் கவலை. தன் தாயின் துயர் துடைக்க அவளிடம் விளையாட ஆரம்பித்தான்.
தேவேந்தரன் இப்பொழுது உயிருடன் இல்லை. அவனின் லீகல் ப்ரோபெர்டிஸ் ஒன்லி ரைட்ஸ் “மனோகீர்த்தித் தேவேந்திரனிடம்” அதை அவளிடம் இருந்து பறிக்க வேண்டும். அவனின் பேக்டரியை அவன் ஆரம்பிக்க வேண்டும் அதற்கு இவன் அவளிடம் நெருங்கி பழகவேண்டும். இது தான் அவனின் இப்பொழுதைய திட்டம்.
அவனின் வெற்றிக்கு இவளை பகடை காயாக உருட்ட போகிறான். இந்தப் பரமபத ஆட்டத்தில் வெற்றி வாகை சூடப்போகிறவர் யாரோ?
அவனின் அழைப்பில் பல்லைக்கடித்தவள், “என்ன பாஸ். அடுத்தக் காண்ட்ராக்ட் எப்படிப் பிடிப்பது என்ற யோசனையில் இருப்பீர்கள் என்று பார்த்தால். எனக்கு அழைத்திருக்கீங்களே“ என்றபடி போலி ஆச்சரியம் காட்டினாள் அவள்.
“அதைப் பத்தி எல்லாம் ஏன் யோசிக்கிற பேபி. இப்போ நீ என்னைப் பத்தி பேசுவியாம். நான் உன்னைப் பத்தி பேசுவேனாம்?“ என உல்லாசமாகச் சிரித்தான் அவன்.
“டேய்“ எனப் பல்லை கடிக்க.
“என்ன பேபி! புருஷனை டேய்ன்னு சொல்லுற. உங்க கிராமத்தில் இப்படிச் சொல்ல கூடாதுன்னு உனக்குச் சொல்லிகொடுக்கலியா “ சீண்டினான் அவன்.
“ஹே. புருஷனா? இது என்ன புதுக்கதை. நீ அந்த ரிஷிபாவுக்குப் புருசனாக மாறபோவதாகத் தானே கேள்வி. என்ன ஆச்சுப் பாஸ் எல்லாத்தையும் போல் இதையும் மறந்துவிட்டீர்களா என்ன?“ வார்த்தையில் போலி பவ்யம் காட்டினாள் அவள்.
“கல்யாணத்தை எப்படி மறப்பேன் பேபி. நீ பஸ்ட். அவள் செகண்ட் அவ்ளோ தான். இதெல்லாம் ஒரு மேட்டரா?“ உல்லாசமானான் அவன்.
“ச்சை. மனுஷனா நீ“ பல்லைக் கடித்தவள் கோபத்தில் கையில் இருந்த போனை விசிறியடித்தாள். “உனக்கு வைக்குறேண்டா பெரிய ஆப்பு“ என்றபடி அதற்கான வேலையை ஆரம்பித்தாள்.
********************************
அன்று லண்டன் காண்ட்ராக் ஒப்பந்தத்திற்காகக் காத்திருந்தான் விஷ்ணு. அந்த நேரம் வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தான் அகில்.
“பாஸ்“
“லண்டன் காண்ட்ராக்ட் ஓகே தானே“ எனக் கேட்டுக் கொண்டே அவனிடம் பைல்ஸ்காகக் கையை நீட்டினான் விஷ்ணு.
“பாஸ். இதுவும் மிஸ் ஆகிட்டு“ எனத் தயக்கமாகக் கூறினான் அகில்தேவ்.
“வாட்“ என்ற கர்ஜனையுடன் இடத்தை விட்டு எழுந்தே விட்டான் விஷ்ணுகாரிகை. லண்டன் கொட்டேஷன் அகிலிடம் குறித்துக் கொடுத்த அமௌண்ட் மிகவும் குறைவானது தான்.
ஆனாலும் கீர்த்திக் கண்டிப்பாக. இவனை ஜெயிக்கவே மிகவும் குறைவாகக் கோட் பண்ணுவாள் என்று அறிந்து. போன முறை அவள் கோட் பண்ணியதை விட இந்தமுறை மிகவும் குறைவாகக் கோட் செய்து பேக்ஸ் அனுப்பிருந்தான் விஷ்ணு. அதுவும் மிஸ் ஆனால் என்ன தான் செய்வான்.
லண்டனில் இருந்து அதற்க்கான எல்லாவேலையையும் முடித்துவிட்டுதான் கிளம்பினான். அமெளண்ட் அனுப்புவதை மட்டுமே கடைசியில் செயலாம் என எண்ணி வந்திருந்தான். இப்பொழுது எல்லாம் வீண்!
‘தான் நினைத்து போல் அவள் சாதாரணமானவள் அல்ல’ என்பதை இந்த ஒரு நொடியில் அறிந்து கொண்டான் அவன்.
அந்த நேரம் போன் அழைக்கவே அகிலை ஏறிட்டான் விஷ்ணு. அவனின் பார்வையைக் கண்டு அமைதியாக வெளியேறினான் அகில்.
அவள் தான் அழைத்திருந்தாள். கோபமாக வந்தது அவனுக்கு. முதல் அழைப்பை எடுக்கவே இல்லை அவன். மீண்டும் அழைத்தாள். கடுப்புடன் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தான்.
“என்ன பாஸ் போன் எடுக்க இவ்வ்ளோ நேரம் ஆகிவிட்டது“ என்று நீட்டி முழக்கினாள்.
“ஏய். ரொம்பப் பண்ணுற. எல்லாம் உன் வேலை தானா?“ என்றபடி பல்லை கடித்தான் அவன்.
“ஏன். என்னால் முடியாதா என்ன? நானே தான் எல்லாம் நானே தான். உன்னை அழிப்பவளும் நானே தான்“ என்றபடி குதுகலத்துடன் பாடினாள் அவள்.
“ஓகே. கங்க்ராட்ஸ் பொண்டாட்டி“ சிரிப்புடன் கூறியவன் உடனே அழைப்பை நிறுத்தினான்.
அவனுக்குக் கோபமாக வந்தது. தான் கோபமாகப் பேசினால் அவளுக்கு மீண்டும் குதூகலமாகும் என்ற எண்ணத்தில்தான் அவளைக் கடுப்பேற்றுவது போல் பேசி அழைப்பை நிறுத்தினான்.
அவளுக்குத் தான் சப் என்றாகியது. அவன். எந்த ரியாக்சனையும் அவனிடம் காணுமே “அவன் கோபத்தில் கத்துவான். அப்படியாவது அவன் வாயில் இருந்து ஏதாவது வருமா என்று தான் அவள் இத்தனை பாடுபடுகிறாள்.
ஆனால் அவனோ எதையும் கண்டும் காணாமல் இருக்கிறான். அதிலும் விஷ்ணுவால் தோல்வியைச் சகிக்க முடியாது என்று மூர்த்திக் கூறி இருந்தார். ஆனால் இப்பொழுதோ கல் மாதிரி அமர்ந்திருக்கிறான்.
அவளுக்கு நன்றாகத் தெரியும் அவன் இவன் இல்லை. அவனைப் போலவே இருக்கும் வேறொருவன். ஒருவனைப் போல் ஏழு பேர் இருப்பது போல் சோட்டுவை போல் இன்னொருவன் என்று தான் மனத்தைத் தேற்றிக் கொண்டிருக்கிறாள்.
ஆனாலும் ஒரு எண்ணம், ஒரே போலவா இருப்பார்கள். அவனைப் போலவே நடக்கிறான். அவனைப் போலவே யோசிக்கிறான். அவனைப் போலவே இருக்கிறான். ஆம். தேவேந்திரனும். விஷ்ணுவும் ஒரே உருவ அமைப்பை பெற்றிருந்தனர்.
தேவேந்திரன் ஓட்ட வெட்டிய முடியுடன். முறுக்கு மீசையும். அளவான தாடியும் வைத்திருப்பான்.
விஷ்ணு தலை நிறைய முடி. சில நேரம் அந்த முடியை சிறு பாண்டில் அடக்கி இருப்பான். முன்னால் பெரிய கற்றை முடி எப்பொழுதும் அவன் முகத்தை மறைத்து கிடக்கும். அளவான மீசையும். அளவான தாடியும் வைத்திருப்பான்.
இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தேவேந்திரனை பார்த்தால் முகம் தெரியும் ஒரு மனிதன் என்ற கணக்கில் எடுக்கலாம். இவனை?
சோட்டு இறந்து விட்டான். ஆனால் அவனைப் போலவே இவன் எப்படி? அவளால் அறியவே முடியவில்லை. அவனும் சென்னைக்கு வந்தவன் தான் அதன் பிறகு முகம் முழுவதும் மூடிய நிலையில் ஆம்புலன்சில் வந்திறங்கினான். அதை நினைத்து பார்க்கவே அவளால் முடியாது. வேண்டாம் எதையும் நினைக்க வேண்டாம்.
சோட்டுவின் ஆசைப்படி ஊரை நன்றாக வைத்திருப்போம். இவர்களை அங்குக் காலெடுத்து வைக்க விடகூடாது என்று எண்ணியவள் அடுத்து அவனை எப்படி வீழ்த்தலாம் என்ற வேலையில் இறங்கினாள்.
அடுத்து அவன் பகடை காயை உருட்ட ஆரம்பித்தான். அதில் அவனுக்கு விழுந்த எண்ணில் வெற்றியுடன் சிரித்தான் விஷ்ணு. அதில் கீர்த்திச் சென்னையில் இருந்து சோளக்காட்டை நோக்கி பறந்து சென்றாள்.
கொ(வெ)ல்வாள்.
தன்னைத் தானே செதுக்கியவன் இவன்
விதி இருட்டினில் கருகியவன் இவன்
வாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன்
வலியில் இன்பம் தேடியவன் இவன்
வெல்வான் எவரையும் வெல்வான் இவன்
கொல்வான் தடையாய் இருப்பவரை கொல்வான் இவன்.