வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 16

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 16
மித்ரன் அவன் வீடு செல்ல, முன் வாயிலில் அவன் மொத்தக் குடிம்பமும் அம்ர்ந்திருந்தது. தன் அன்னையைக் கண்டவன் அவரருகே சென்று அமர்ந்துக்கொண்டான். உடல் மிக மெலிவடைந்திருந்தார்.முன்பு துரு துருவென ஓடியாடி வேலை பார்ப்பவர் இப்போதெல்லாம் தன் படுக்கை விட்டெழுவதும் ஆச்சர்யம் தான். பாக்கவாதம் ஏற்பட்டு மூன்று வருடங்களாக இப்படி, அத்தோடு மித்ரனின் மாற்றமும் கூட. காரணம் என்னவென்று தெரியாத போதும் அவரை இன்னும் பாலவீனப் படுத்தியது.
தன் தங்கை மகள் இப்போது தான் இவனோடு சற்று பேசக் முனைகிறாள். அவளை அருகமர்த்திக்கொண்டவன் அவள் கன்னங்களில் இதழ் பதித்து பதிலுக்கு அவளும் முத்தம் வைக்க. மித்ரனின் மனதில் ஏனோ வீணாவின் முகம் மின்னலாய் தோன்றி மறைந்தது. அதன் தாக்கம் அவன் முகத்தில் புன்னகையை வரவழைக்க அதே சிரிப்போடு,
“என்ன எல்லோருமா ஒன்னா உட்கார்ந்து எதையோ பேசிட்டு இருக்கா மாதிரி இருக்கு.”
“ஆமா மித்து, உங்க மாமா பையனுக்கு வர்ற புதன்கிழமை நிச்சயம் பண்றாங்களாம். இன்னைக்கு ஈவினிங் தான் வந்து அழைச்சிட்டு போறாங்க. நீ இல்லன்னதும் உனக்கு பேசுறேன் சொன்னாங்க.”
“ஓஹ்! இன்னும் இரண்டு நாள் தானேம்மா இருக்கு.சரி போகலாம் மா. உங்களுக்கு முன்னமே போகணும்னா நான் அழைச்சிட்டு போய் மாமா வீட்ல விடட்டுமா?
“வேணாம்பா.நானும்.அப்பாவும் நந்தினியும் பாப்பாவும் காலைல போகலாம்னு இருக்கோம். மாமாவும் நேரா மண்டபத்துக்கு வருவாங்க, நீ நம்ம கூட வரியா இல்ல எப்டின்னு கேட்கதான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.”
சரிம்மா நானும் மண்டபத்துக்கே வந்துர்றேன், கூறியவன் இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு தன் அறைக்கு சென்றான்.
போகும் அவனையே பார்திருந்த மித்ரனின் அன்னை,
“இவனை விட சின்ன பையனுக்கே கல்யாணம், இவன் இன்னும் இப்படியே எவ்ளோ நாளைக்கு இருப்பானோ, நா உயிரோட இருக்கப்பவே ஏதாச்சும் இவனுக்கு நல்லது நடந்துரனுங்க.”
“அதெல்லாம் நடக்கும்ம்மா, நீ அதைப் பற்றியெல்லாம் யோசிக்காத.” கணவன் ஆறுதலாய் அவரைத் தேற்றினார் நேற்றைய தின தன் நண்பனின் உரையாடல் நினைவு கொண்டு.
தன் தலையணைக் கட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தவன் நினைவெல்லாம் வீணா மட்டுமே…
சிலநேரங்களில் அவள் கண்களில் இவனைக் காணவும் இருக்கும் காதலும் பல நேரங்களில் தெரியும் பதட்டமும் மாறி மாறி அவனை இம்சிக்க தன்னால் ஓர் முடிவென்று ஒன்றை எடுக்க முடியாது மனம் குழம்பிய குட்டை என்றே இருந்தது.சிறிது நேரம் கண்கள் மூடி அமைதியாக. முயன்றான், அங்கும் அவள் சிரிக்கும் விழிகள், பல நேர ஏங்கிய விழிகள்.
“கடவுளே!
எதுக்கு இப்டில்லாம் பண்ற. மறந்திருக்க வேண்டியதேல்லாம் என் நினைவில் வைத்து விட்டு நனவோடு என்னில் நிலைத்திருக்க வேண்டியதை ஏனோ மறக்கச் செய்தாய்…”
வாய் விட்டே புலம்பினான் மித்ரன்.
‘நினைவே வரவில்லை, வரவும் தேவையில்லை. அவளுக்கும் உனக்கும் நடந்த நிகழ்வு மறந்திடு.இதற்கு முன் எந்த பந்தமும் இல்லை. இப்போது தான் அவளை கிருஷ்ணாவின் தங்கை என்று பார்க்கிறாய். அவ்வாறு இருக்குமெனில் இப்போது அவளை காதல் கொள்வாயா?’
மனம் அவனிடம் கேள்வி எழுப்ப, இவனுக்கும் அதே அவன் புத்தியும் எடுத்துரைக்க யோசித்தான்.
‘ஒருவர் மேல் உயிராய் உண்மையாய் நிலையாய் கொள்வது தானே காதல். நான் அதை ஒருமுறை செய்தாயிற்றே. மீண்டும் என்னில் காதல் துளிர்தல் தவறோ?’
மித்ரன் எண்ணங்கள் அவனை சுழன்றடிக்க செய்வதறியாது அன்றிரவு தூக்கத்தை தொலைத்தான்…
காலை எழுந்ததும் அவன் முகத்தில் ஒரு தெளிவு,முடிவாய் ஏதோ ஒன்றை எடுத்துவிட்ட சாயல். எழுந்து குளித்துக் கிளம்பியவன் சென்று நின்ற இடம் வீணா இல்லம். இவன் போகவுமே அவர்கள் தயாராகி வண்டியில் ஏற தயாராய் இருந்தனர். மித்ரனின் வண்டியில் ராஜ் மற்றும் வாசுகி ஏறிட அவர்கள் பின்னால் வந்த வீணா எதில் ஏற வென்று பார்க்க, ராஜ்,
“பட்டும்மா, இதுலேயே ஏறிடு.”
என்றிட மித்ரனும் இவள் என்ன செய்கிறாள் என்று பார்த்திருக்க, கிருஷ்ணா அவன் வண்டியில் இருந்து இவர்களை பார்த்தப்படி இருந்தான்.வீணாவோ கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டு போய் மித்ரனின் வண்டியில் ஏறினாள். மித்ரனின் முகம் மலர வண்டியை கிளப்பினான்.
கிருஷ்ணாவின் முகம் வாட்டமாகவே இருக்க, மகிழ் அவனோடு பேச்சு கொடுத்தப்படியே வந்தாள்.
“கிரிஷ் நாளைக்கு நாம நிச்சயத்துக்கு போறப்ப வீணாவையும் அழைத்துக் கொண்டு போகலாம்.”
“சரிடா, அவ வரேன்னு சொன்னா கண்டிப்பா கூட்டி போகலாம்.”
“அவ வரேன்னு சொல்லிட்டா, நாம ட்ரெஸ் கூட செலக்ட் பண்ணி வச்சுட்டோம். ஆனா நாளைக்கு மித்ரா வந்தா என்ன பண்றரது?”
“ஏன் அவனுக்கென்ன?”
“இல்ல அண்ணா, அண்ணி இரண்டு பேரும் வந்திருப்பாங்க அதான்.” மகிழ் கூற,
“மகி, அவனே அதெல்லாம் கடந்து வரணும்னு நினைக்கிறான், அடுத்தவங்களுக்காக அவன் லைப் ஸ்பாயில் பண்ணிக்க அவனே விரும்பல. அவனை விட்டு போனவங்க தான் அவனை எதுக்குடா விட்டோம்னு வருந்தனும், உங்கண்ணன்கிட்ட இவனை விட என்ன இருக்குன்னு அவன் பின்னாடி போய்ட்டா…”
“கிரிஷ் அவங்களை என்ன வேணா சொல்லு, அதுக்கு எங்கண்ணாவ எதுக்கு சொல்ற.”
“உங்கண்ணன ஒன்னும் சொல்லல. அவருக்காவது உண்மையா இருந்தான்னா சரிதான்.”
மகிழ் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வர அதன் பின் அவன் தான் அவளை கொஞ்சி கெஞ்சும் படியாயிற்று, இவர்கள் சமரசம் ஆகவும் வீணாவின் அக்கா வீடு வரவும் சரியானது.
அங்கு மித்ரனின் வண்டியிலோ அமர்ந்த வீணாவின் மனமோ படைப்பை தத்தெடுத்திருந்தது. இந்த வண்டியினை எத்தனைக் கனவோடு பார்த்திருக்கிறாள். எவ்வளவு ஆசையாய் பயணிக்க எண்ணியிருக்கிறாள். இப்படி மூன்றாமவளாய் ஏற ஏதோ மனதில் சிறு வருத்தம்.
இப்படியாக வீணாவின் அக்கா தாமரை வீட்டின் வாயிலில் இரண்டு வண்டியும் ஒன்றன் பின் ஒன்றாக வந்திறங்கியது.
அனைவரும் கொண்டுவந்திருந்த பொருட்களை ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டு இறங்கிச் செல்ல, தாமரைக்கு இவர்கள் வருவது தெரியப்படுத்த வேண்டாம் என முன்னமே கூறியிருக்க வீணாவே முன்னாடி சென்று கதவை தட்ட மனைவி பூ தொடுக்க உதவிக் கொண்டிருந்த சரவணன் அவளருகே அதனை வைத்து விட்டு எழுந்து கதவைத் திறந்தான். அவனுக்குமே அனைவரும் வந்தது பெரும் மகிழ்ச்சியாகி போக,
“ஹாய் மாமா,” என்றபடி வீணா உள்ளே நுழைய அவளைத் தொடர்ந்து அனைவரும் வந்தனர். அனைவரையும் கண்ட மகிழ்வில் தாமரையும் தன் தங்கையை மடியில் இருந்த மலர்களோடே அள்ளி அணைத்துக்கொண்டாள்.
“அம்மா எங்க?” என்று கிருஷ்ணா கேட்கவுமே,
“இதோ வந்துட்டேன்டா…” என வாசுகி உள்ளே நுழைய அவரைக் கண்ட தாமரை தன் மடியில் இருந்த மலர் தட்டையும் மறந்து,
“ம்மா…”என்ற படி எழுந்தவளுக்கு அதற்கு மேல் கண்கள் நீர் நிறைத்து பார்வை மறைக்க அவரையே பார்த்திருந்தாள்…
அவள் எழவும் மலர் தட்டு கீழே விழ அனைவரது பார்வையும் அவள் மேலேயே இருக்க அவள் முகத்தில் எழுந்த மாற்றத்தில் வீணா,
“அக்கா என்னாச்சு என்று அவள் கைப்பிடித்து கேட்க,
“அம்மா?”என தாமரை கூறவும், ஆமக்கா கிச்சாவோட அம்மா என்று அவரை அறிமுகப்படுத்த,
“நம்ம அம்மா…” தாமரைக்கு நா அதற்கு மேல் பேச ஒத்துழைக்க வில்லை.
வாசுகி அவளருகே வந்து,தன்னை போலயே தன் சாயலில் இருக்கும் தன் மூத்த மகளைக் கண்டுகொள்ள முடியாது போக மகளோ தன்னை விட்டுச்சென்ற அன்னையை கண்டுகொண்டாள்.
“எப்படி டா இருக்க? எத்தனை வாட்டி இவங்களை கேட்டிருக்கேன் உன்னை பார்க்க கூட்டி போண்ணு.”
தாமரையின் கன்னம் வருடி கேட்கவும், தாமரை அவர் கைகளை தன் கன்னத் தோடு இருகப் பற்றிக் கொண்டவள், அவர் முகத்தையே பார்த்திருந்தாள்.
எப்டிம்மா இருக்க? சந்தோஷமா இருக்கியா?அந்த நரகத்த விட்டு போறப்ப இவளை மட்டும் அழைச்சிட்டு போயிருக்கலாமே மா?அப்போ கூட இவங்க கூடத்தானே வந்து சேர்ந்திருப்ப. “
தாமரை வீணாவை காட்டி வாசுகியிடம் கேட்க,”அக்கா என்ன சொல்ற?” வீணா தன் அக்காவை கேட்க,
வாசுகிக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னடா?’ எனும் விதமாய் கிருஷ்ணா மற்றும் ராஜ் இருவரது முகம் பார்க்க, கிருஷ்ணா அவர் கலங்கிய கண்களை பார்க்க இயலாது தடுமாறினான். ராஜ் அவர் அருகே வந்து அவள் தோள் சுற்றி அணைத்துக்கொண்டவர்,
“வாசு உனக்கு விபத்து ஏற்பட்டப்ப ஒரு பாப்பா இருந்திருக்கும்னு சந்தேகப்பட்டோம்ல… “
“அதுதான் தாமரையா?”அவர் பட்டென கேட்டிட இல்லையென்று தலையசைத்தவர்,
அதுதான் வீணா.” என்று அவளை அருகழைத்து கூறினார்.
என்னங்க சொல்றீங்க? ஏன் என்கிட்ட இவ்ளோ நாள் யாருமே ஒன்னும் சொல்லல.அப்போ தாமரை…?”அவரை கேள்வியாக பார்க்க,
“அவ உன் மூத்த பொண்ணு, வீணாக்கு தம்பி ஒருத்தனும் இருக்கான். “
“அச்சோ என்னங்க சொல்றீங்க?ஏன் என்கிட்ட யாரும் ஒன்னுமே சொல்லல? என் பசங்களை இப்டி தவிக்க விட்டுட்டு தான் நான் இவ்வளவு நாளா வாழ்ந்துட்டு இருக்கேனா?ஏன் இப்டி பண்ணீங்க?”
வாசுகிக்கு ராஜ் சொல்ல, ‘ஏன் என்னிடம் மறைத்தாய் என்பதாய்’ கிருஷ்ணாவைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் வீண. அவனோ தன் அன்னையை தன்னிடம் இருந்து பிரிதடுவார்களோ எனும் பாவனையில் பார்திருக்க, தன் மகள்களைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தார் வாசுகி.