வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 5

Screenshot_2020-09-30-16-03-02-1-7d3bab26

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 5

V.V 5

 

மூன்று மாதங்கள்  கடந்திருந்தது… 

 

திங்கள் நாளன்று சூரியன் கடலில் கால் நனைத்து வானுயர மேலெழும் நேரம்… 

 

இரவுடையுடனே கையில் தேநீரோடு நின்றிருந்தாள் வீணா. தன் அறை வெளிவராத்திலிருந்து பார்க்க தெரியும் வீட்டின் இடப்பக்கமாய் அமைந்திருந்த தோட்டத்தில் காலை உடற் பயிற்சியை முடித்துக்கொண்டு ஓய்வாக அமர்ந்திருக்கும் கிருஷ்ணாவின் மேல்  தினம் நடக்கும் அபிஷேகத்தை நடத்தியவள் மெதுவாக தலையை மட்டும் விட்டு எட்டிப்பார்க்க கிருஷ்ணா மேலே அண்ணார்ந்து பார்ப்பது தெரியவமும் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். 

 

ஒர் நாள் காலை எதேச்சையாக நடந்த நிகழ்வு அது, கிருஷ்ணா முறைக்கவும் அதைப் பார்க்கவே தினம் இதை வாடிக்கையாக்கி கொண்டாள். 

 

அன்று கிருஷ்ணாவோடு வந்த தினத்திலிருந்து ஒரு வாரமாக தனக்குள்ளேயே சுருண்டு கிடந்தவள், தன்னைதத்தானே தேற்றிக்கொண்டு வெளிவர, அதோடு கிருஷ்ணாவும் தாம் இருக்கும் அடுக்கு மாடி வீடு அவள் மனம் மாற ஏற்ற இடமல்ல என்று உணர்ந்து முன்னமே குடிபுக தயாராக்கிக்கொண்டிருந்த வீட்டு வேலையை துரிதப்படுத்தி அங்கு  குடிபெயர்ந்தனர். இங்கு வந்து ஒரு மாதமாகின்றது. 

 

இங்கு வரவும், வாசுகியும் நிறைய பொழுதுகளை இத்தோட்டத்திலேயே செலவளிக்க தொடங்கியிருந்தார். அவருக்கும் பெரும் மாற்றமாகவே இருந்தது. 

 

“கிச்சா,சோப், டவல் இங்கயே கொண்டு வந்து வக்கிறேன்னா நீதான் கேட்க மாட்டேங்குற. இன்னும் ரெண்டு வாலி தண்ணீரை சேர்த்து ஊத்த சொல்லிர்றேன் இப்படியே குளிச்சிரு டா… “

வாசுகி தலையிலிருந்து நீர்சொட்ட அமர்ந்திருக்கும் கிருஷ்ணாவின் நிலைபார்த்து சிரித்துக்கொண்டே கூற, 

 

“ம்மா கடுப்பேத்தாத… அவளை… “மேலே  பார்க்க, அவள் எப்போதோ உள்ளே சென்றிருந்தாள்.

 

“அய்யே! சும்மா ஜாலியா பண்ணது எதுக்குடா கோவிச்சுக்குற, போ போய் ரெடியாகுடா  வேலைக்கு போக லேட்டாகுதில்ல… “

 

“ம்மா இப்போல்லாம் நீ என்னை கண்டுக்குறதே இல்லை… உனக்கொரு பையன் இருக்கான்னு நானா நினைவு படுத்தினால் தான் உண்டு.இரேன் என் ஆளு வரட்டும் அப்றம்  நா யாரையும் கண்டுக்குறேனா பாரு. “

 

“ஆமா  கண்டிப்பா.வந்தவள வீட்டுக்கு அனுப்பிட்டு என்னடா அம்ம்மாகூட பேச்சு… ”  கூறிக்கொண்டே ராஜ் அவ்விடம் வர, கிருஷ்ணா அவர் முகம் பார்க்காது தலை குனிந்தபடி அமர்த்திருந்தான்.

 

“ராஜ், என்ன பேச்சிது.அவன் என்ன வேணுமா பண்ணான்.நேரம் அப்டி ஆகிப்போச்சு. இனி எல்லாம் சுபமா அமைய போகுது நீங்கவேண்ணா பாருங்களேன். ” வாசுகி கிருஷ்ணாவின் தலைகோதியவரே  ராஜிற்கு பதில் கூறினார்.

 

எழுந்து உள்ளே சென்றுவிட்டான் கிருஷ்ணா.

“என்ன ராஜ் இது காலைலயே அவன் மூட் ஸ்பாயில் பண்ணிட்டு.”

“வசு,டெய்லி அவளை பார்குறப்பெல்லாம் எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? எவ்வளவு ஆசையா வந்த பொண்ணு , அவங்க அப்பா என்கூட பேசுறப்ப ஒருவார்த்தை இதுங்கள பற்றி பேசமாட்டார். அதுவே எனக்கு கஷ்டமாகிரும்.”

 

வாசுகி அமைதியாய் இருப்பதை பார்த்து அவரை அருகே அமர்த்திக்கொண்டவர்,அவர்கையை தன் கைக்குள் எடுத்துக்கொண்வர், 

 

“அவனை பற்றி தெரில உனக்கு.இப்போ  என்ன பண்ணுவான் பாரேன்,நான் அவனை திட்டிட்டேன்னு நீ வருத்தப்படற.ஆனா அவன் இன்னைக்கு பூரா அவளையே நினைச்சுட்டு இருக்கப்போறான்.வேணும்னா பாரு .”

 

“எனக்கும் அவன் சந்தோஷம் தான் முக்கியம், அதுக்காக காலையிலேயே பையனை திட்ற வேலையெல்லாம் வச்சுக்க வேணாம் சொல்லிட்டேன்.” வாசுகி கூற, 

 

“அச்சோ பயந்துட்டேன் .. ‘அவர் தோள் சுற்றி கை போட்டுக்கொண்டவர்,

‘வா உள்ள போகலாம்,” என இருவருமாக உள்ளே சென்றனர் .

 

மேலிருந்து வீணா இவர்களை பார்த்திருக்க அவள் உள்ளம் ஏனோ வில்லனை நினைவு படுத்தியது …

முகம் கவலையை சுமந்திருந்தாலும் அகம் என்னவோ அவன் நினைவு வர சுகமாய் உணர்ந்தது …

 

காலை உணவை நால்வருமாக சேர்ந்து உண்டவர்கள் உண்டு முடிக்கவும்,

 

“ம்மா பட்டு இன்னைல இருந்து கொஞ்ச நாளைக்கு மகிழ் கூட இருக்கட்டும். ஈவினிங் வர்றப்ப பிக்கப் பண்ணிப்பேன். அப்போதான் தனியா எதையும் பேஸ் பண்ண கத்துக்குவா.”

கூறியவன் வீணாவை அழைக்க செல்ல பெற்றோர் இருவர் முகத்திலும் சந்தோஷம்.

 

“பார்த்தியா வீணாவை விடற சாக்குல பையன் பொண்டாட்டிய பார்க்கப்போறார்.”

 

அதன் பின்னர் இருவருமாக கிளம்பிச்செல்ல, மகிழ் அவள் வேளைப் பார்க்கும் இடத்தில் அனுமதி பெற்று அவளோடு வீணாவை இருத்திக்கொண்டாள். சிலநேரங்கள் சோம்பலாய் நேரம் கடந்தாலும் பல வித மனிதர்கள், வலிகள், கஷ்டங்கள் என பலதும் அறிந்து தெரிந்துக்கொண்டாள். 

இதோடு  வீணாவிற்கு இருசக்கர வண்டியோட்ட கற்றுக்கொடுத்ததோடு அனுமதிப்பத்திரத்தையும் மூன்றே மாதத்தில் பெற்றுக்கொடுத்தாள். தோழியாக, அவள் அக்கா தாமரைக்கு நிகராக இருந்து வீணாவை  பார்த்துக்கொண்டாள்.தாமரை, மற்றும் அவர்கள் வீட்டினர் பற்றி மகிழ் அனைத்தும் தெரிந்திருக்க வீணா, 

 

“ஹாப்பிக்கா,எங்க அக்காக்கு பேசுன பையன் ரொம்ப நல்லவங்களாட்டம் தான் இருந்தது. அதோட அக்காக்கு அவங்களை ரொம்ப மனசுக்கு பிடிச்சிருந்தது. என்னால அவங்க வாழ்கை இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை. ஒரு முறை எனக்கு அவங்களை சந்திக்க முடிஞ்சா பேசி பார்ப்பேன். “

 

“ஹ்ம்ம் இதுவும் நல்லா ஐடியா தான்.கிருஷ் கிட்ட கேட்டு பாரேன். மே பி அவன் ஹெல்ப் பண்ணுவான். “

 

“ஐயோ கிச்சாவா! என்னால முடியாது. வீட்டை பற்றி பேசுனாலெ திட்டுவாங்க. “

 

“நானெதுக்கு திட்டப்போறேன்… நல்லது நடந்தா எனக்கும் ஓகே தான்.” 

 

கூறிக்கொண்டே மகிழின் அறைக்குள் நுழைந்தான் கிருஷ்ணா.அவன் நுழைய எப்போதும் போல இவன் வர மகிழ் எழுந்து வெளியே செல்வது வழக்கமாய் இருக்க, அவள் எழுந்து செல்லவும் அவள் கைகளை  பின்னால் பற்றிக்கொண்டான். ஆச்சர்யம் கலந்த பார்வையோடு அவனை மகிழ் ஏறிட, 

 

“உங்க ஹாப்பிக்காவும் வர்றதா இருந்தா அவன் யார் என்னனு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு போய் பார்க்கலாம்” என்றான். 

 

வீணாவிற்கு சந்தோஷம் என்றால், இவர்கள் இருவரையும் விழிவிரித்து பார்த்துக்கொண்டிருக்க, 

“நானெதுக்கு புதுசா என்னன்னு கேளு வீணா?” மகிழ் வீணாவிடம் கூற, 

 

வீணாவோ கிருஷ்ணாவை ஏறிட, 

“இனி அப்படித்தான் என்றவன் அவள் கைகளை விடுவித்தான்.

“ஓஹ் பிரெண்டுக்கு நல்லானதும் தான் என்னை ஞாபகம் வந்துச்சா?இதுக்கு முன்ன தனியாதானே பார்த்துக்கிட்டாங்க. இப்பவும் அப்படியே போகச் சொல்லிரு.” கண் கலங்க சொன்னவள் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள். 

 

கிருஷ்ணா அப்படியே அமர்ந்துவிட, 

“அச்சோ கிச்சா, அவங்க ரொம்ப ஹாப்பியா பீல் பண்றாங்க.நீங்க பேசினத்துல கொஞ்சம் கோபம். மத்தபடி இன்னும்கொஞ்சதுல சரியாகிருவாங்க.” அவன் முகம் வாடுவது கண்டு வீணா கூற 

 

“ஹ்ம்ம்”என்றவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான். 

 

வீணா இப்பொழுது கிருஷ்ணா மற்றும் நம் நாயகன் வீர மித்ரன் இருவரும் இணைந்து நடத்தும் பொதிகை டெஸ்ட்டில்ஸ்(textiles) இன் ஒரு கிளையை திறம்பட  கிருஷ்ணாவின் கண்காணிப்பின் கீழ் நடத்தி வருகிறாள்.இருவருக்கும் தனித்தனி ஒரு அங்காடியும் இருவருக்கும் பொதுவாய் ஒரு அங்காடியும் என மூன்று கிளை இருக்க அதில் புதிதாய் பொதுவாய் ஆரம்பித்ததில் வீணா வேலைக்கு அமர்த்தப்பட்டாள். முதலில் மறுத்தாலும்  பாதுகாப்பாக இருக்கும் தன் கண் முன்னே இருக்கும் படியாக இதுவே சரியென கிருஷ்ணாவுக்கு பட்டது.

அத்தோடு அவளது படிப்பும் உதவ கிருஷ்ணா, மகிழ், வாசுகி இவர்களின்  துணை அவளை ஊக்கப்படுத்தி இன்று மூன்று தளங்களில் அமைந்த ஐம்பது ஊழியர்களைக் கொண்ட அங்காடி அவள் சொல்படி நடக்கிறது. 

 

கிருஷ்ணா வீணாவிடம் கூறியது போல இவள் ஒரு நிலைக்கு வரவும் தாமரைக்கு பேசிய சரவணன் என்பவரை பற்றி தேடியிருக்க ஐடீ நிருவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருக்கும் ஒருவர்,குடும்பத்தினர் சற்றுப்பார்க்க கோபக்காரர்களைப்போன்ற தோற்றம்.இருந்தும் அதை வைத்து கணித்துவிட முடியாதே… 

தனியாக வீடெடுத்து கோவையில் l இவர்கள் இருக்கும் பகுதிக்கு சற்று தொலைவில்  இருந்தார்.கிருஷ்ணாவை விட இரண்டு வயது அதிகம் அதோடு சரவணன் வேறு பார்க்க ஸ்மார்ட்டாக இருக்க கிருஷ்ணாவுக்கு இவ்விடைப்பட்ட காலத்தில் வேறெவரோடும் திருமணம் முடிந்திருக்குமோ எனும் சந்தேகத்தோடு தான் பேசினான். முதலில் பேச மறுத்தாலும் தாமரையின் தங்கை பேச வேண்டும் என்று கூறி அழைக்க இதோ ஓர் நாள் அழைத்தும் வந்தான். கூடவே சொன்னது போல  மகிழும்.

 

இது நடக்கும் போது வீணா அங்காடியை பொறுப்பெடுத்து மூன்று மாதங்கள் இருக்கும், கிருஷ்ணாவின் வீடு வந்து ஒரு வருடம் கடந்திருந்தது. 

 

மூவருமாக ஒரு மேசையில் அமர்ந்திருக்க சரவணன் இருந்த மேசையை நோக்கி செல்லவென எழுந்த வீணாவை தடுத்த கிருஷ்ணா அதோடு மகிழும் தானும் வருவதாகக் கூற, இருவரையும் பார்த்தவள், 

 

“ரெண்டு பேரும் பேசி எப்போ ஒன்னா  வீட்டுக்கு வரலாம்னு முடிவு பண்ணுங்க. அதை விட்டுட்டு சின்னப்பசங்களாட்டம் என் பின்னாடி வராமல்…பேச முடியாதுன்னா இப்போவே உங்க பிரென்ட் கிட்ட என்னை கூட்டி போங்க என்னன்னு அவரோட பேசி முடிவு பண்ணிக்கலாம்.” 

 

பிரெண்ட் என்றதுமே இருவரும் வாய் மூடிக்கொண்டு அமர்ந்து விட, 

 

“பிரென்ட்…’

‘ஹாப்பிக்கா யாராவர்? அவரை பற்றி பேச்செடுத்தாலே ரெண்டு பேரும் எதுக்கு இப்படி முழிக்கிறீங்கன்னே எனக்கு புரில.முதல்ல அவங்க கூட பேசிட்டு வரேன்.’ 

 

என்றவள் செல்ல ஓரடி எடுத்து வைத்து விட்டு மீண்டுமாய் இவர்கள் பக்கம் திரும்பியவள், 

 

‘கிச்சா, நீங்க அந்த டேபிள் போங்க.’

இரண்டு மேசை தள்ளியிருந்த இடத்தைக் காட்டி கூறியவள், ‘அப்போ தான் நல்லா  பேசிக்கலாம்” என்று முறைத்து விட்டு மகிழ் கைப் பற்றி எழுப்பியவள் அவள் அமர்ந்திருந்த க்ரிஷ்ணாவின் பக்கத்து இருக்கையில் அமர்த்திவிட்டு சென்றாள்… 

 

மிக பெரிய மாற்றம் பெண்ணவளிடம். சமூகத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். வீடு, கல்லூரி மட்டுமே வாழ்கை என்றிருந்தவளின் கனவுகளுக்கு வழிக்காட்டினான் கிருஷ்ணா ஒரு அண்ணனாய்,நண்பனாய். தனியாக அவள் வேலைகளைப் பார்க்க கற்றுக்கொடுத்தான். தானே தன்னை செதுக்கிக்கொண்டாள். 

 

சரவணனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,

” ஹலோ சார், ” என்றிட, 

 

“சொல்லுங்க என்ன விஷயமா என்னை பார்க்கணும் சொன்னீங்க? “நேரடியாக  விடயத்தை கேட்டான்.

“உங்க கிட்ட நான் கேட்குறது சரியான்னு கூட தெரில. இருந்தும் என்னால நின்னுபோன கல்யாணம் என்ற ஒரு காரணத்துக்காக பேசலாம்னு வந்தேன். ‘

‘எங்கக்கா தாமரையை கல்யாணம் பண்ணிக்குறீங்களா சார்? என்னை வச்சு அவளை தப்பா நினைக்கவேணாம். என்னையவே அவ, அவ பொண்ணாட்டம் தான் வளர்த்தா…’சரவணன் இடையில் எதுவோ கூற வர,’ப்ளீஸ் நான் பேசிர்றேன்’

 

‘அவ வளர்த்ததாலதானே நான் இப்படின்னு தப்பா சொல்லிறாதீங்க.என்னை விட மூனு வருஷம்தான் பெரியவ ஆனா ரொம்ப பொறுப்பு அதை விட ரொம்ப பொறுமை. நீங்க வந்துட்டு போனதுக்கப்புறம் அதுவும் நீங்க திருமணத்துக்கு சரின்னு சொன்னதுக்கப்றம் அவகிட்ட ஒரு வார்த்தை பிடிச்சிருக்கானு யாரும் கேட்கல.உங்களை ஏனோ அவக்கு ரொம்ப பிடிச்சது போல. சொல்லவே இல்ல. ஆனால் முன்ன விட முகத்துல ஒரு சந்தோஷம் இருந்தது.நீங்க ரெண்டு வாட்டி கடைக்கு வந்ததா அப்பா சொல்லவும் வீட்டுக்கு வரலைன்னு நினைக்கல. அவள பார்க்கத்தான் வந்திருப்பீங்கன்னு புரிஞ்சிட்டா. ஆனால்… “

 

பேச்சை இடை நிறுத்தி அவனைப் பார்க்க அவனும் அமைதியாய் இவள் கூறுவதை முகத்தில் ஏதோ வலி இழையோட கேட்டுக்கொண்டிருந்தான். 

 

“நான் செஞ்ச ஒரு பிழையினால எங்கக்கா கல்யாணம் நின்னு போகும்னு நினைக்கவே இல்லை. நீங்க கண்டிப்பா போயிருப்பீங்கன்னு தான் நினச்சேன். இப்போ தான் என்னால உங்களை பார்க்க முடிஞ்சது. எங்க வீட்ல என்ன நிலை, அக்கா எப்படி இருக்கான்னு கூட தெரில.’

இதை கூறும் போது அவள் குரல் கமறி இருந்தது. 

‘கண்டிப்பா கல்யாணம் பண்ணிருக்க மாட்டா. அது மட்டும் நிச்சயமாக என்னால சொல்ல முடியும். உங்க வீட்டு நிலைமை எப்படின்னு எனக்கு தெரியாது.ஆனா ஒரு முறை முயற்சி பண்ணிப் பாருங்க ப்ளீஸ். அவளை எப்படியாவது உங்ககூட அழைச்சுக்கோங்க. அந்த நரகத்துல ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பா. அவ எப்போவும் அவ ஹாப்பியா இல்லைனு சொல்ல மாட்டா. இப்போ நான் சொன்னது போல சொல்லி நீங்க கூப்பிட்டாக் கூட வர ஒத்துக்க மாட்டா.’

 

‘ஒரே ஒரு முறை எங்க வீட்ல பேசிப்பாருங்களேன். உங்க வீட்ல வந்து பேசணும்னா கூட நானே வந்து பேசுறேங்க.’ அவ கலர் எல்லாம் கம்மின்னு நினைக்கிறீங்களா? உங்க வீட்ல வற்புறுத்துதனாலத் தான் நீங்களும்  ஒத்துக்கொண்டீங்களா? “

 

“ச்சே ச்சே. அப்டில்லாம் இல்ல. நானே விருப்பபட்டுத்தான் ஓகே சொன்னேன் ” 

 

சரவணன் அவசரமாய் அதை மறுத்துக் கூறவும் வீணாவுக்கு அவன் பதில் மனதுக்கு பெரும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தர, 

“அவ மனசு ரொம்ப வெள்ளை.அதை விட ரொம்ப உயிரா இருப்பா.”

 

“ஒரே ஒரு முறை ப்ளீஸ்… “

கைகளை கூப்பியிருந்தாள். இவ்வளவு நேரம் அவளிடம் இருந்த திடம், பேச்சில் இருந்த நிமிர்வு காணாமல் போயிருக்க, இவ்வளவு நேரமும் அடைக்கப்பட்டிருந்த கண்ணீர் இமை ரெண்டும் ஒன்றோடு ஒன்று தொட கன்னத்தில் இறங்கியது.

 

“அச்சோ சிஸ்டர், யாரும் பார்த்துர போறாங்க. என்ன பண்றீங்க.” அவள் நிலைப் பார்த்து சரவணன் கூற, 

 

“சாரி சார்.” என தன் கைக்குட்டையால் கண்ணை ஒற்றிக் கொண்டவள் அவனையேறிட, 

 

“நான் வீட்ல பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்.” 

எங்க வீட்டுக்கு அப்றம் எங்கக்காக்கு தெரிய வேண்டாம்.நீங்களா போறதா இருக்கட்டும். நீங்க அன்னைக்கு வீட்ல கேட்டதை விட இன்னும் அதிகமா கேட்டாக்கூட நான் அதை தரேன்.”

 

“அது எங்க வீட்ல எங்காளுங்க கேட்டது. அதோட உங்க வீட்ல உங்கப்பா முன்னமே தரகர்கிட்ட சொல்லிவிட்டது தான் எங்க வீட்டாளுங்களா கேட்கல.’

 

‘நான் வீட்ல பேசி உங்களுக்கு சொல்றேன். வீகென்ட்  தான் ஊர்க்கு போவேன் இங்க தனியா வீடெடுத்து தங்கி இருக்கேன்.சோ, மண்டே உங்களுக்கு பேசுறேன் உங்க நம்பர்? “

 

“இதோ’ அவள் அழைப்பு அட்டையை அவனிடம் நீட்ட அதை பார்த்தவன் அவள

ளை ஆச்சர்யமாக பார்க்க, கோவையில் பிரபல துணிக்கடைகளில் ஒன்றல்லவா. 

 

‘இது கிருஷ்ணாவோடது இங்கதான் ஒர்க் பண்றேன்.நீங்க மீட்பன்லாம்னாலும் ஓகே தான். உங்களுக்கு எப்படி வசதியோ சொல்லுங்க.’

‘அப்போ நான் கிளம்புறேன்” என்றவள் எழுத்துக்கொள்ள, 

 

“யார்கூட வந்தீங்க தனியா போயிருவீங்களா?’உரிமையாய் கேட்டவன், 

‘உங்க ஹஸ்பண்ட் வரலையா?”

 

“ஆஹ்? ” அவனை கேள்வியாக வீணா ஏறிட, 

 

“மிஸ்டர், கிருஷ்ணா? “சரவணன் கேட்டிருந்தான். 

 

“அதோ அவங்க வைப் கூட இருக்காங்க. ” நாலைந்து மேசை தள்ளி அமர்ந்திருந்த கிருஷ்ணா மற்றும் மகிழை காட்ட, சரவணனும் பார்க்க அவர்கள் இருவரும் மேசைமேல் கைகள் ஒன்றின் மேல் ஒன்று வைத்துக்கொண்ட வண்ணம் பேசிக்கொண்டிருந்தனர்.சரவணன் கேள்வியாக இவளைப் பார்க்க, புன்னகைத்தவள், 

“ஸீ  யூ.” 

விடைபெற்றாள் பெண்ணவள். தான் பிழை செய்யவில்லை என்று தன்னை சரிபடுத்திக்கொள்ளவும் இல்லை. காரணம் கூறவும் தேவையிருப்பதாய் சரவணனுக்கு தெரியவில்லை. ஏதோ பெண்ணவளில் சூழ்நிலை பிழையாய் அவளை சித்தரித்துள்ளதை உணர முடிந்தது.

 

‘தாமரை ‘ சரவணனின் மனம் மெல்லமாய் உச்சரித்துக்கொண்டது. இவ் ஒருவருடமாய்  அவன் மனம் அதைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறது. இருந்தும் தடையாக அவன் வீட்டினரும், சுந்தரமும் இருக்க இவன் நடுவில் ஒன்றும் செய்ய முடியா நிலையில்.இப்போது என்னவானாலும் தாமரையை கைப்பிடிப்பதாக முடிவெடுத்துக்கொண்டே  அவ்விடம் விட்டு சென்றான். 

 

“அச்சோ! ஹாப்பிக்கா என்னாச்சு கை அடி பட்டிருச்சா?” கேட்டுக்கொண்டே அவர்கள் இருவருக்கும் எதிரே அமர சட்டென்று கை விளக்கிக்கொண்டான் கிருஷ்ணா. வீணாவின் தோள்களில் அடித்த மகிழ், 

“ரொம்பதான் பேசுற பட்டு…” கூறியவளும்  சந்தோஷமாகவே இருந்தாள். வீணா அவள் கன்னத்தை நிமிட்ட, 

“சரி என்ன சொன்னாங்க மிஸ்டர் சரவணன்? “

“அது எப்படியும் அடுத்த வாரமே அக்காவை அவரக்கூட கூட்டி போயிருவார்னு  தோணுது.”

“ஓஹ்! அந்தளவுக்கு மேடம் பேசிட்டு வந்திருக்கீங்க…” கிருஷ்ணா கூறி சிரிக்கவும்,

“எல்லாம் தங்கள் சித்தம் குருவே.” என்றிட  அன்று மூவரது மனதும் நிறைத்திருந்தது. 

 

வீணா சொன்னது போலவே வீட்டினரோடு பேசி போராடி அப்படியே இரண்டு மாதங்கள் சென்று தாமரையை மனைவியாக்கிக்கொண்டான் சரவணன். வீணா எவ்வகையிலும் அவள் வீட்டினரை நாட நினைக்கவில்லை. தாமரையை பல முறை காண நினைத்தாலும் தன் மனதை அவளே சமாதானப்படுத்தி அப்போதைக்கு மறந்திடுவாள். 

 

கிருஷ்ணா மற்றும் மகிழ் இருவரும் பேசி எப்போ வீட்டுக்கு அழைத்து வருவதாகக் கேட்க,சீக்கிரமே என்றிருந்தனர். அன்றைய இருவரது பேச்சிலும் அவர்களுக்கான  பேச்சாக இருக்கவில்லை மாறாக வீணாவும் அவர்கள் இருவரது நண்பனும் வீணாவின் வில்லன் வீரமித்ரன் சம்பந்தமாகவுமே இருந்தது. 

 

*****

அன்று வைத்தியசாலை விட்டு வீடு சென்றவன் மூன்று மாத சிகிச்சை, மற்றும் ஒய்வு அவனை பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தது. இருந்தும் அதன் பின் மூன்று மாதங்களாக மலேசியா சென்றிருக்கிறான் அவன் தாய்வழி மாமன் வீட்டிற்கு. கிருஷ்ணா வற்புறுத்தி அனுப்பி வைத்திருந்தான். அதுவும் அவனை இன்னுமாய் பழைய மித்ரனாக மாற்றியிருந்தது, மீட்டிருந்தது. 

 

இவர்களின் அங்காடி கோவை மாவட்ட அங்காடிகளில் சிறப்பு பாராட்டை பெற்றிருக்க அதை கொண்டாட முடிவெடுத்திருந்தான் மித்ரன். அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு கிருஷ்ணாவைக் கூறியவன் அடுத்த வாரம் வருவதாக கூறியிருந்தான்.

 

*****

வீரமித்ரன் ஒரு பக்க கன்னக்குழி விழும் அவன் சிரிக்கையில்.அதோடு அவன் இதழ் பிரிந்து சிரிக்கும் முன்னமே அழகாய் சிரித்திடும் சிறிய கண்கள், கூர் கண்கள் அவை இமை திறக்க வெளிவரும் பார்வை அகம் வரை சிலிர்த்திடச்செய்யும்.அடர் புருவம், நீண்ட கூர் மூக்கு, நெடிய கழுத்து திடமான உடலமைப்பு அளவான ஆணுக்கு தேவையான உயரம்… அவன் நிறம் அது வெள்ளை சந்தனமதில் தேன்விட்டு குலைத்திருக்க வரும் பொன்னிறமது.

 

அவன் அழகை பலமுறை ரசித்தவள், ஒரு பெண்ணாக முதன் முதலாய் தன் உணர்வுகளைத் தனக்கு காட்டித்தந்தவனை, தனக்கே தனக்கனவனாய் உணர்த்தியவனை தன் மஞ்சத்தில் தலை சாய்த்து படுத்திருந்தவள் இமைகளுக்குள் மீண்டும் மீண்டுமாய் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன்னை பலமுறை காயப்படுத்தியிருந்தாலும், தன்னை வஞ்சப்புகழ்ச்சி செய்தாலும்,பெண்ணாய் கஷ்டம் அனுபவிக்கும் நேரங்களில் கூட தன்னை நிந்தித்தவனை, காரணமே இன்றி தன்னை வருத்தியவனை நினைக்க நினைக்க  பிடிக்கிறது பெண்ணவளுக்கு. 

 

தனக்கு எத்தனை கஷ்டத்தை தந்தானோ அதை அவனும் அனுபவித்தானே… ஏனோ அவனுக்காய் மனம் ஓலமிட்டழுதது… பெண்ணவள் உள்ளத்தில் மீண்டுமாய் அவனை சந்திக்க நேர்ந்தால் தன்னை தெரிந்திருக்குமா? அடையாளம் கண்டுக்கொள்வானா?கடலை விட அவனைப் பற்றி  நினைக்க மனம் முழுதும் கரைத்தோடும் நினைவலைகளின் இரைச்சல் பெண்ணவளை கொன்று தின்றது… 

மனமோ  அவனுக்காய்… 

“வீரா… 

ஹேய்  வீரா…

எனக்கு மட்டும் ஏனோ வில்லனாய்  நீ… 

மித்ரனாம் பலருக்கும் எனக்கு மட்டும் ஏனோ  வில்லனானாய்…

அவனது கண் அதன் இமை நொடி திறந்தாலே போதுமே…  நான் வீழ்ந்திட… 

வசியமென்ன சூனியக் கண்களவை யிரண்டும்… 

தென்றலாய் எனை நீ  தீண்டிட வேண்டும் என்று நானோ நினைக்க…

நீயானால் எனை புயலாய்  சுருட்டிக்கொண்டதேனோ…

விடை  உன்னிடம் இருக்க வினா எழுப்ப நானோ சக்தியற்றவளாய்… 

வீரா…  என் வில்லனே… !!! 

நானோ உன் வீணை…  

எப்போது எனை மீட்டுவாய்…!!!

புலம்பிக்கொண்டிருந்தது யாரும் அறியாமல்…

அடுத்த வாரம் வீணாவின் வில்லனவன் வருவான்…  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!