வில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2

Screenshot_2020-12-18-06-54-30-1-e709fe34

வில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2

Vv final 1

அன்னை மகள்களின் பாசம் பகிர்ந்து சந்தோஷமாய் அன்றைய நாள் முடிந்து கிளம்ப அடுத்த நாளே மகிழின் வழி உறவில் நிச்சய விழாவுக்கு செல்வதற்க்காக 

கிருஷ்ணன் மகிழ் மற்றும் அவர்களுடன் வீணாவும் தயாராகி செல்ல, ராஜ் மற்றும் வாசுகி நேரம் சென்று வருவதாக் கூறினர். அங்கே மித்ரனின் வீட்டினர் அனைவரும் முன்னமே சென்றிருக்க மித்ரன் அந்நேரத்திற்கு கலந்து கொள்வதாய் கூறியிருந்தான்.

 

இரு வீட்டினருக்கும் பொதுவாய் அமைந்த வைபவம் மகிழின் அண்ணன் மனைவி நிஷாவின் சகோதரிக்கும்,மித்ரனின் மாமன் மகனுக்குமான ஒரே குடும்பங்களுக்குள் செய்து கொள்ளும் திருமணத்திற்கான நிச்சய விழா.

 

நிஷாவும் மித்ரனின் மாமன் வழி உறவென்பதால் அவனுக்கு இரு பக்கமும் சொந்தம். மித்ரன் அந்நிகழ்விற்கு செல்ல சரியென்று கூறியதற்காக மட்டுமே தயாராகிக்கொண்டிருந்தான். இருந்தும் மனம் ஏனோ வீணாவையே சுழன்றுக் கொண்டிருக்கு, இரண்டு நாட்களாக வீணா விடுமுறை வேறு சொல்லியிருக்க இவனும் தினம் கிருஷ்ணாவின் வீடு செல்ல சங்கடப்பட்டு இன்று செல்லவேண்டாம் என்று நினைத்திருந்தான். இருந்தும் அவளை பார்க்க வேண்டும் எனும் மனதை கட்டுப்படுத்த இயலாது புலம்பிக்கொண்டே தயாராகி தன்னுடைய வண்டியில் கிளம்பினான்.

 

விழா சிறப்பாக நடைப் பெற்றுக்கொண்டிருக்க இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொண்டிராத வீணாவோ மனம் முழுதும் தன் அன்னை கிடைத்த மகிழ்வு, தன் சகோதரியுடனான நேற்றைய நிகழ்வுகள் என்பன

சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி இருக்க இனிதாகவே கலந்து கொண்டாள். வந்தவர்கள் அனைவரும் அவளை யாரென்று கிருஷ்ணாவிடம் கேட்காவிட்டாலும் ராஜ் வரவும் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்க அவர் மகள் என்றே அறிமுகம் செய்து வைத்தார்.

 

அவர் பேச்சை மீறி அங்கு யாரும் பேசிட முடியாது இவர்களின் மதிப்பு அத்தகையதாக அக் குடும்பங்களின் இடையே காணப்பட்டது.

 

மகிழ் அவள் குடுபத்தினரோடு ஐக்கியமாகி விட்டாலும் அவ்வப்போது வீணாவை கவனிக்க மறக்கவில்லை. கிருஷ்ணாவும் அங்கிருப்பவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் மித்ரன் வரவை பார்த்துக்கொண்டு நேரம் கடத்தினான்.

 

வீணாவும் அவ்விடம் தன்னை பொறுத்திக்கொண்டு அங்கிருந்த பட்டாளங்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்ல விளையாட்டுக்களும் அவர்களுக்குள் போட்டிகளும் வைத்து குதூகளிக்க ஒரு கட்டத்தில் நன்கு வியர்த்து களைத்து போனாள் வீணா.

 

மகிழ் அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்து அவள் கலைந்த கூந்தலை சரி செய்த படி திட்டிக்கொண்டிருக்க,

 

“மகி, அம்மா உன்னை தேடறாங்க.’

என்று கூறிக்கொண்டு வந்த நிஷா,

 

 ‘யாரிது? ” என்று வீணாவை கேட்டிட,

“இது கிருஷ்ணாவோட சிஸ்டர் அண்ணி. நீங்க பார்த்ததில்ல.”

 

“ஓஹ்! ஆனா அவருக்கு சிஸ்டர் இருக்கதா நான் கேள்வி பட்டதே இல்லையே.”

 

“ஹ்ம் வாய்ப்பில்லை அண்ணி இவ வெளியூர்ல தங்கி படிச்சிட்டு இருந்தா

இப்போ கொஞ்ச வருஷமா தான் நம்ம கூட இருக்கா.” என்ற மகிழ்,

“வீணா வா உள்ள போகலாம்.” என இருவருமாய் உள்ளே செல்ல நடந்துக்கொண்டே வீணா,

 

“அண்ணி இதான் மித்ரன் லவ் பண்ண நிஷாவா?” என கேட்க,

 

“ஹ்ம், ஆமாடா பட்டு எங்கண்ணாவ தான் மெரி பண்ணிருக்கா, அதுவும் எங்கண்ணா ரெண்டு பேரும் லவ் பண்றதா சொல்லி தான் கல்யாணம் பண்ணிரக்கிட்டார். இவங்க எதை லவ்னு சொல்றாங்களோ என்னால புரிஜிக்கவே முடில.விடு இவளுக்கு குடுத்து வெக்கல. மித்ரன் இவளை பார்த்தா எப்பிடி ரியாக்ட் பண்ணுவான்னே தெரில. அதான் நானும் கிருஷும் பேசிகிட்டோம். இவ வேற அவன் வந்தப்புறம் பாரேன் அன்னிக்கிதான் கட்டிகிட்டவ போல புருஷனையே ஒட்டிக்கிட்டு திரிவா.’

 

மகிழ் வீணாவோடு பேசிக்கொண்டே வந்தவள் அவளை ஓர் அறைக்கு அழைத்து வந்து, ‘போய் கொஞ்சம் பிரெஷாகிக்கோ.”

 

என்றுவிட்டு சென்றாள். வீணாவுக்கு இப்போது மித்ரனின் மூர்க்க குணங்கள், அவன் மனதில் வெளிப்பட்ட காதலின் மீதானா வெறுப்புகள் எல்லாம் ஒன்றாய் சேர மீண்டும் தன் மனம் தீண்டிய வில்லனை நினைவு கூர்ந்தாள்.

 

அவன் காதல் பற்றி ஒருமுறை இவள் காட்டயப்படுத்திக் கேட்கவும் அவன் காதல் எண்ணி வியந்து போனாள். ‘தன்னோடு வில்லத்தனம் பண்ணும் பொழுதே அவனை அத்தனை பிடித்ததே, அப்போ அவன் அவளைக் காதல் கொண்டிருக்கும் போது எத்தனை இனிமையானவனாய் இருந்திருப்பான்?’

 

‘தன்னோடு இருந்த நாட்கள் அவன் நினைவில் வந்தால் தன்னை தானே மன்னிக்க மாட்டானே. அதற்காகத்தானே அவனை நெருங்க அஞ்சுகிறேன்.தப்பாய் ஏதும் நிகழ்ந்திட வில்லை தான் ஆனாலும் அன்று அவனை பிரிந்து வந்த நாள் அதற்கான வாய்ப்புகள் இருந்ததே…

வேணாம் என் மனதில் பூத்தக் காதல் என்னோடு என் நினைவோடும் புதைந்து போகட்டும்…’

 

மித்ரனின் நினைவில் அவ்வறையிலேயே அமர்ந்திருந்த வீணா மகிழின் அழைப்பில் தான் வெளிவந்தாள். “இதோ வரேன் அண்ணி.” என்று அழைப்பை நிறுத்தியவள் கலங்கிய கண்களை துடைத்து தன்னை சமன் படுத்திக்கொண்டு வெளியே வர, இவள் அறைக்கு நேரெதிரே கிருஷ்ணாவோடு பேசிக்கொண்டு வந்த மித்ரன் இவளைக் காண, கண்டுகொண்ட இவளும் மனதில் நிறைத்து வைத்த காதலை கண் வழியே அவர்களே அறியாது வெளிப்படுத்த இவள் அறை வாயிலில் நின்றப்படியே இருக்க அவன் இவளை நோக்கி முன்னேறினான். விழி எங்கும் அகலாது அவளையே பார்த்த படி வர இவனை பார்திருந்த பல கண்கள் ஆச்சர்யத்தில் இமை விரித்தபடி பார்திருந்தனர்.

 

“என்னடா இப்டி பாக்குறான் என் கண்ணையே நம்ப முடிலயே.” ராஜ் அருகே அமர்ந்திருந்த மித்ரனின் தந்தை தன் கண்ணாடியை கலட்டி கிண்டலாய் மீண்டும் துடைத்து போட்டுக்கொள்ள,

“நான்தான் சொன்னேன்ல அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும்டா. அவளுக்கும் தான். ஆனா எதோ இரண்டு பேருக்குள்ளயும் இருக்கு. சீக்கிரமா அவங்களாவே சரி பண்ணிப்பாங்க. நாம மற்றதை பார்த்துக்கொள்ளலாம். நீ தங்கச்சிட்ட பேசிட்டு சொல்லு என்ன. “

ராஜ் கூறவும்,

 

“கண்டிப்பா ராஜ் அவன் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்.” என்று இவர்கள் பேசிக்கொள்ள, இவன் உள்ளே நுழைந்தது முதல் இவனையே பார்த்த நிஷாவோ, அவன் கண்கள் சென்ற திசைக் கண்டு மனம் இருண்டு போனாள். அவளால் அவன் கொண்ட மனக் கஷ்டங்கள் அவளறியாது பார்த்துக்கொண்டான் கிருஷ்ணா.எனவே அவன் இன்னும் தன்னையே நினைத்து மறுகிக் கொண்டிருக்கிறான் என்றே நினைத்தாள். இவள் இங்கு இப்படி இருக்க மேடை அருகே நின்றிருந்த மகிழும் வாசுகியும் வீணாவை வரச்சொல்லி விட்டு காத்திருக்க அவள் வெளிவந்ததும் இவர்களிடம் வராதுஅங்கேயே நின்றுவிட அவள் பார்வை சென்ற திசை பார்த்து வாசுகியும் பார்த்து,

“மருமகளே’

 

“அத்த…”

‘என்னாதிது இப்டி பார்க்குறா, தினம் பார்த்துக்கிற பசங்க தானே…’

 

“அத்தை இவங்களும் வராங்க, அவ கிருஷ்ணாவைத்தான் பார்க்குறா. நீங்க தப்பா…”

 

“அவள் கன்னம் கிள்ளிய வாசுகி, அவ யாரைப் பார்க்குறான்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்குறியா? அவன் வந்தாலே இவ உள்ள ஓடிருவா, இவன் வந்தா அவளையே கண்ணால தேடிட்டு இருப்பான் நானும் எல்லாம் பார்த்துட்டு தானே இருக்கேன். ‘

‘மகிமா,நேற்று மாமாவும் நானும் இதைப் பற்றி தான் பேசிட்டு இருந்தோம். ஆனா நாம அவசரப்ட்டு அவங்க அப்டில்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டா, அப்றம் அவங்க ரெண்டு பேருமே ஒரே இடத்துல வேலைப் பார்க்குதுங்க, முகம் பார்த்துக்கு கஷ்டமாகிரும்ல அதான் கொஞ்சம் வைட் பண்ணலாம்னு மாமா சொன்னாங்க.”

 

“ஹ்ம் ஆமா அத்த, அவங்களாவே முடிவு பண்ணிக்கட்டும். கிரிஷ் கூட அதான் சொன்னாங்க. “

 

“சரிடா நீ போய் அவளை அழைச்சிட்டு வா.” வாசுகி கூற மகிழ் வீணாவை நோக்கி நடந்தாள். எல்லாமே ஒரு சிறு எல்லைக்குள் என்றாலும் ஒவ்வருவரும் ஒவ்வரு திக்கில் இருந்து பார்க்க, அவர்கள் நான்கு கண்களும் அவர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு.

 

வீணாவின் கண்கள் காதல் மிகை ஏற்று கண்டுக்கொள்வானோ என்று மனம் பதைப்பதைக்க பார்த்திருக்க,

 

‘இனியும் உனை பிரியேன். நினைவில் மறைந்து போனது போனதாகவே இருக்கட்டும், நிஜத்தோடு இனி என் உயிர் கலந்து வாழவேண்டும், வாழ்ந்திட எனக்கு இவள் மட்டுமே வேண்டும்.’என்று மனதில் உறுதி ஏற்கனவே எடுத்திருந்தவன் தன்னவளை உரிமையோடு பார்த்துக்கொண்டு வந்தான்.

 

“டேய் கிருஷ்ணா, உன் தங்கச்சிக்கு ஒரு ஷாக் கொடுக்கலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?”

 

“நா என்னத்த சொல்ல, வேணான்னா விடவா போற.பார்த்து பண்ணுடா ரொம்ப தாங்க மாட்ட.’

‘ டேய் மித்ரா,அதோட என் பாசக்கார மச்சான் பொண்டாட்டி உன்னையே லுக்கு விட்றா அவளுக்கும் ஏதாச்சும் பார்த்து பண்ணுடா.”

 

சரிடா உன் விருப்பதை எப்போ மீறி இருக்கேன். கண்டிப்பா பண்றேண்டா. “

 

சிரிக்கவில்லை இருவரும் உடல்மொழியில் எந்த வித்தியாசமும் இல்லை.ஏதோ தீவிரமாக பேசியப்படி நடந்து வந்துக்கொண்டிருக்க, எல்லாமே ஒரு மூன்று நிமிட அளவிலான நிகழ்வு.

 

“ஹேய் வீணா, இங்க என்னப் பண்ற?”

அவள் நெற்றி வியர்வையை தன் கைக்குட்டையால் சற்று ஒற்றியப்படி கேட்க,

 

இதே வார்த்தை சொல்ல எடுத்த மகிழ் விழி விரிக்க கிருஷ்ணா சிரித்தபடி அவர்கள் பின்னே நின்று மகிழை அருகே அழைத்துக் கொண்டான்.

 

“என்ன இவ்ளோ வியர்திருக்கு, மகிழ் உன்னை இங்க வேலைக்குத்தான் அழைச்சிட்டு வந்தாளா?”

 

அவன் பேச வீணாவின் கைகள் தாமாகவே அவள் நெற்றியில் அவன் ஒற்றும் கைக்குட்டையை தன் கையில் வைத்துக்கொண்டவள்,

 

“அப்டில்லாம் இல்ல, சும்மா பசங்க கூட… “

 

“அச்சோ நா ஒன்றும் உன் வீணாவை வேலை சொல்லல மித்ரா… ‘

‘உங்க வீணாதான் பசங்க கூட விளையாடி களைத்து போய்விட்டாள்.”

 

‘உன்,உங்க’ வில் மகிழ் அழுத்தம் கூறி சொல்ல வீணா மித்ரனை பார்திருக்க அவன் முகத்தில் தெரிந்த காதலில் நாணி தலைக் குனிந்துக் கொண்டாள்.

 

“எல்லாருமே என்ன இங்க நின்னுட்டிங்க. அங்க மேடைக்கு வர சொல்லி எத்தனை தடவை கூப்டாச்சு. ‘

போங்க முதல்ல.வாசுகி இவர்களை அனுப்பி விட்டு மித்ரனின் அருகில் சென்றவர்,

‘நீ இப்டி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட. எதிர் பார்க்கல மித்ரா.”

 

‘”அப்டில்லாம் ஒன்னில்ல மா… நானே வந்து… “

 

அடப் போடா, என்னையும் சேர்த்திருந்தா வீணாவுக்கு இன்னும் கொஞ்சம் ஷாக் கொடுத்திருக்கலாம்ல. “

 

“அச்சோ ம்மா இதைத்தான் சொன்னீங்களா?அடுத்த வாட்டி கண்டிப்பா சேர்த்துக்கிறேன்.இன்னும் இருக்கு “

இருவரும் சேர்ந்து சிரித்திட,

 

“அம்மா இப்போ இது ரொம்ப முக்கியம். போ போய் அங்க என்னனு பாரு.” வாசுகியை முன்னே அனுப்பியவன்.மித்ரனோடு அங்கே போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். இவர்களோடு மகிழின் அண்ணனும் வந்தமர, பொதுவான பேச்சுக்கள் அவர்களிடையே.

 

வீணாவின் எண்ணமெல்லாம் என்ன திடீரென்று வந்து இப்படி உரிமையாய் பேசி, கிச்சாகூட சிரிச்சிட்டே இருந்தான். அவளறியாது அவள் கைகள் தன் கன்னத்தை துடைத்துக் கொள்ள அவன் வாசம் அவள் நாசி தீண்டிச் செல்ல. சிலிர்த்தாள் பெண். அவசரமாக கை கீழே இறக்கியவள் மித்ரன் எங்கே என்று பார்க்க அவனருகே இருந்த கிருஷ்ணா இவளை பார்த்ததும் அவனை வீணாவோ முறைக்க,

 

“டேய் மித்ரா பட்டு என்னை முறைக்கிறாடா, என்னை ஏதாச்சும் கோர்த்து விட்ட மவனே இருக்குடா உனக்கு.”

 

“நா என்ன பண்ணேன். நீ எதுக்கு அவள பார்க்குற.” மித்ரன் கிருஷ்ணாவோடு பேசிக்கொண்டே அவளை பார்க்க வீணாவோ சட்டென. திரும்பிக்கொண்டாள்.

 

இவர்கள் இங்கே இனிதாக கலந்து விழா முடியவும் மித்ரன் எவ்வளவு முயற்சித்தும் வீணா அவனைத் தவிர்த்து கொண்டு இருந்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!