ஹேய் மின்னல் பெண்ணே! – அத்தியாயம் 02

pexels-photo-792777 (1)

ஹேய் மின்னல் பெண்ணே! – அத்தியாயம் 02

அத்தியாயம் 2 

சோபாவில் சாய்ந்தமர்ந்து மடிக்கணனியின் திரையையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்த அபிஷிக்த்தையும் அவன் அருகில் விறைப்பாக பின்னால் கைகளைக் கோர்த்தவாறு நின்றிருந்த விக்ரமையும் பார்த்தவாறே ஹாலிற்கு வந்த சாரதா மகனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். தான் வந்து அமர்ந்த பின்னரும்  திரையையே  வெறித்திருந்த மகனைக்கண்டு மனதிற்குள்ளேயே நொடித்துக் கொண்டவர் அந்தத் திரையை எக்கிப் பார்க்க ஏதோ சிசிடிவியின் பதிவு சென்று கொண்டு இருந்தது. 

பெத்த அம்மா கதைக்க ஆசையா பக்கத்துல வந்து உட்காந்து இருக்கிறேன்! என்ன என்று கூட கேட்காத அட்லீஸ்ட் திரும்பியும் பார்க்காத மகனைப் பெத்து வைச்சு இருக்கேனேஎன்று புலம்ப திரையில் இருந்து விழிகளைத்திருப்பி தாயை முறைத்த அபி மீண்டும் திரைக்குள் புகுந்து கொண்டான். அவன் முறைக்கவும் முகத்தை சுருக்கி பழிப்பம் காட்டியவரின் பார்வை இப்பொழுது நிமிர்ந்து விக்ரமை நோக்கியது. 

என்னடா விக்ரம்! உன்னோட பாஸ் காலையிலையே உன்னைக் கூப்பிட்டு கஞ்சியில துவைச்சு இருக்கான்! உனக்கு எவ்வளவு தடவைடா சொல்றது? இப்படி வீட்டுக்குள்ளேயும் விறைப்பா சுத்திட்டு இருக்காத என்று? பெத்தது தான் சரி இல்லை என்று பார்த்தால் அவனுக்கு வந்து சேர்றதும் அப்பிடித்தான் இருக்குஎன்று தன் பாட்டிற்கு புலம்பவும் சுர்ரென்று கோவம் ஏற மடிக்கணணியை அறைந்து சாற்றிவிட்டு பக்கத்தி தூக்கிப் போட்ட அபி சாரதாவின் புறம் திரும்பி  

அம்மா? இப்போ உனக்கு என்ன பிரச்சனை?” என்று பல்லைக் கடித்தான். 

நீ தான்நீ தான் பிரச்சனைஎன்று அவனுக்கு மேலே கத்தியவரைஇன்றைக்கு மாதாஜி ஏதோ ட்ராமா ப்ளான் பண்ணி இருக்காங்க போலவே?” என்று சுவாரஸ்யமாக நோட்டமிட்டுக் கொண்டு இருந்தான் விக்ரம் 

அன்னையின் பதிலில் பின்னங்கழுத்தை தடவியவாறேஇங்க பாரு மா! நானே டென்ஷன்ல இருக்கேன்! காலையிலேயே புரியாத பாஷைல பேசி  இன்னும் டென்ஷன் ஆக்காம விஷயத்துக்கு வா”  

எல்லாம் உன்னோட கல்யாண விஷயம் தான் ராஜாராஜா என்றழைத்து அவர் வைத்த ஐஸில் உருகாமல் அவரை இயல்பாகப் பார்த்தவன்  

எதுக்கு? இன்னொருத்தியைக் கூட்டிட்டு வந்து உனக்கு பக்கத்தில உட்காரவைச்சு காலையிலேயே ரெண்டு பேரும் என்னை வேலை செய்யவிடாம ரம்பம் போடவா?” வினவியவனின் புருவம் நக்கலாக மேலுயர்ந்து வினா எழுப்பியது. 

அடடா! என்னடா இப்படி சொல்லிட்ட? உன் மனைவி மட்டும் நம்ம வீட்டிற்கு வரட்டும்! நாங்க ரெண்டு பேரும் எங்களுக்குள்ளேயே ரம்பம் போட்டுக்குவோம்! உன்னைத் தொந்தரவே பண்ண மாட்டோம்சூடம் அடிக்காத குறையாக இதுவே சத்தியம் என்ற குரலில் பேசிவரைப்பார்த்து விக்ரமின் உதடு துடித்தாலும் அவரது மகன் அபி கல் போன்று அசையாமலே உட்கார்ந்து இருந்தான். 

நீ கேட்கிறதைப் பார்த்தால் பொண்ணு இனித்தான் பார்க்கப் போறியா? இல்லாட்டி பார்த்துவிட்டு என்கிட்ட பேசுறியா மா?”  அவனின் கேள்வியிலும் பார்வையிலும் சட்டென்று பயத்தில் வேர்த்துப் போக சேலை முந்தானையை எடுத்து முகத்தின் முன்னால் விசிறியவாறேஸ்ஸ்..என்ன வெயில்! என்ன வெயில்என்று பேச்சை மாற்றியவரைப் இமைகள் சுருக்கி பார்த்தவன் பார்வையை அங்கும்  இங்கும் திருப்பவில்லை. “எமகாதகன்என்று பல்லைக் கடித்தவரிற்கும் இப்பொழுது சினமேற 

ஆமாடா! பொண்ணு பார்த்தாச்சு! என்ன இப்போ? குற்றப் புலனாய்வுத்துறையில நீ வேலை செய்தா அம்மாவையும் இப்படித்தான் விசாரிப்பியா? சாப்பாட்டுல பேதி மாத்திரையைக் கலந்துடுவேன் பார்த்துக்கஎன்று  கத்தினார். 

கத்தியவரை அமைதியாக பார்த்தவன்  “இப்போ எதுக்கு இப்படி பதட்டப் படுற மா? பொண்ணு பார்த்து இருக்கியா என்று தானே கேட்டேன்?”  

அது தானே? நாம தான் வாயைக் குடுத்து மாட்டிக்கிட்டோம் போலவேஎன்ற யோசனையில் சாரதா அமைதியாக இருக்கவும் அவர் அருகில் சற்றுக் குனிந்து  

நான் சொல்லவா? பொண்ணு உன்னோட அண்ணா தயாபரனோட மகள் ரைட்டா?”  

..அது..அது எப்படி உனக்கு?” மீண்டும் தடுமாறியவரைப் பார்த்து நக்கலாக சிரித்தவன்  

ஏன் தெரியாம? அது மட்டும் இல்லை. உனக்கே தெரியாத இன்னொரு விஷயமும் சொல்லவா?” 

என்ன குண்டு வரப்போகுதோ என்று பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு இருந்தவரை பார்த்து நன்கு சாய்ந்து அமர்ந்தபடியே 

என்னை ஒருத்தி ஏமாத்திட்டு போனா ? அது போலவே அந்தப் பொண்ணையும் அவ காதலிச்சவன் ஏமாத்திட்டு  போய்ட்டான்! கையை விமானம் பறப்பது போல அசைத்துக் காட்டியவன்  

இதுதான் நல்ல பொருத்தம் போல! இல்ல மா?”, பிரம்மை பிடித்தது போல அமர்ந்து இருந்தவரை உணர்வே இல்லாமல் நோக்கிவிட்டு தனது மாடி அறையை நோக்கி நடந்தான் 

சில வினாடிகளில் தலையைக் குலுக்கி தெளிந்த சாராதா அங்கு தன்னையே பாவமாக நோக்கிக் கொண்டு இருந்த விக்ரமைப் பார்த்து

டேய்! பாவம் டா? அந்தப் பொண்ணுக்கு எவ்வளோ கவலையா இருந்து இருக்க்கும்? இவனைப் போல ரோபோவா அவ. அது புரியாம உளறிட்டு போறான். என்ன தான் இருந்தாலும் அது என்னோட அண்ணன் பொண்ணு.. அவளைக் கட்டிக்க இவனுக்கு கசக்குதாமா? சரி அதை விடு! உனக்கு எப்போ பொண்ணு பார்க்கட்டும்?” என்று கேட்கவும் அருகில் தனது பாஸ் இல்லாத தைரியத்தில்மாதாஜிஎன்று கத்தியவாறே தலையில் அடித்துக் கொண்டவன் அபிஷிக்த்தின் அழைப்பில் அவனைக் காண மேலே சென்றான். 

**** 

தன் முன்னால் அமர்ந்து இருந்த இருவரையும் பார்த்து புன்னகைத்த யுவரத்னாசொல்லுங்க மேடம்? என்ன பிரச்சனை? நாங்க என்ன பண்ணனும்என்றவாறே அவரின் அருகில் அமர்ந்து இருந்த பெண்மணியையும் நோக்கினாள் 

நாங்க எங்க புருஷன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் மேடம். நீங்க தான் எங்க சார்புல வாதாடி அந்த ஆளை ஜெய்லுக்கு அனுப்பனும்”  

ஆமா!”  

இருவரையும் பார்த்து விழித்தவள்உங்க புருஷன் என்றால் நீங்க இரண்டு பேருமே அவருக்கு மனைவிங்களா?”  

ஆமாம்மா! என்னைக் கல்யாணம் பண்ணிட்டு எனக்கு தெரியாம இவளையும் கல்யாணம் பண்ணி இருக்கிறார் அந்த மனுஷன்என்றபடி முதலாமவள் கைக்குட்டையில் மூக்கைச் சிந்தி அழவும் தனது கையால் வாயில் அடித்தவாறே  

இல்லை மேடம்! என்னைக் கல்யாணம் பண்ண அப்புறம் தான் இவளைக் கல்யாணம் பண்ணாருஎன்று கூப்பாடு போட்டாள் 

அவளின் தோள்களைப் பற்றி தன் புறம் திருப்பிய முதலாமவள்ஏன்டி என்னோட வாழ்க்கையைக் கெடுத்ததும் இல்லாம அவர் உன்னைத் தான் முதல் கல்யாணம் பண்ணார் என்று வாய் கூசாம சொல்றியே?” என்று கத்தினாள் 

அவளின் கைகளை தட்டி விட்ட இரண்டாமவள் முதலாமவளின் கூந்தலைப் பற்றி ஆட்டியவாறேநானாடி பொய் சொல்றென்என்று கத்தவும் விழி  பிதுங்கி என்பார்களே அப்படி விழித்துக் கொண்டு இருந்த யுவரத்னாவின்அய்யோ! கொஞ்சம் நிறுத்துங்கமாஎன்ற குரல் அவர்களுக்கு அந்தக் கூப்பாட்டில் கேட்காமலே போனது. 

ஒருவர் ஒருவரின் கூந்தலைப் பற்றியபடி எழுந்த இருவரும் நான் நீ என்று கூச்சலிட்டவாறே ஒரே  இடத்தில் சுற்றிக் கொண்டு இருக்க அவர்கள் இருவரின் நடுவில் சென்று நின்று அவர்களின் கைகளைப் பற்றி விலக்க முயன்று தன்னை அறியாமலேயே அவர்களுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டு இருந்தாள் யுவா.

மூவரும் அப்படி சுற்றிக்கொண்டு இருந்ததில் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைகள் ஒவ்வொரு புறம் சரிந்து விழுந்து சத்தம் எழுப்பியது. எவ்வளவு நேரம் அவ்வாறு சுற்றிக்கொண்டு இருந்தனரோ தெரியவில்லை  

என்ன நடக்குது இங்க?” என்ற உறுமலில் தான் அவர்களின் அந்த சுற்றல் முடிவுக்கு வந்தது. அப்படியே சட்டென்று நின்றவர்கள் வாசலை நோக்கவும் அங்கு வாசலில் நின்றிருந்த அபிஷிக்தின் விழிகள் மூவரினதும் கைகளைத் தான் நோக்கியது. 

இரு பெண்கள் ஒருவர் ஒருவர் கூந்தலைப் பற்றியபடி நிற்க யுவாவின் கைகளோ அவர்களின் கைகள் மேல் இருந்தது. ஒரு நிமிடம் திகைத்துப்போய் அபிஷேக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த மூன்று பெண்களும் திடுக்கிட்டாற் போல கைகளை விலக்கிக் கொண்டனர்.

அபியுடன் உள்ளே நுழைந்த விக்ரமிற்கு அங்கு நின்றிருந்தவர்களைப் பார்க்க்க சிரிப்பு தான் வந்தது. விழித்துக் இரு பெண்களின் தலைமுடி பறவைக் கூடு போல கலைந்து போய் இருக்க  அவர்களின் அருகே மூச்சு வாங்கிய படி வேர்த்துப் போன முகத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டு அபியை பயமாக நோக்கிக் கொண்டு இருந்தாள் ஒரு அழகிய பெண்.

அவளை எங்கோ பார்த்து இருக்கின்றோமே என்று மண்டையை உடைத்துக் கொண்ட விக்ரம் அஷ்வஜித்தின் குரல் கேட்கவும் அவ்னை நோக்கி தனது எண்ணங்களைத் திருப்பினான்.

அங்கிருந்த ஒரு கதிரையை எட்டி எடுத்து  நிமிர்த்தி வைத்த அபி அதில் அமர்ந்தவாறேகேட்கிறேன் ? என்ன இங்க கலாட்டா?” என்று விறைப்பாகவே கேட்டான். இன்று கோர்ட்டிற்கு வருகை தருவதாலோ என்னவோ வெண்ணிற ஷர்ட் அணிந்திருந்தான். கையில் இருந்த காப்பை முறுக்கியவாறே அவன் கேட்டவிதத்தில் பயம் வந்தாலும் தான் பேச வேண்டிய தேவை உணர்ந்து  

சார்! இவங்க இரண்டு பேரும் என்னோட க்ளையன்ட்ஸ்! நான் ஒரு லாயர்! கேஸ் விபரம் சொல்லிட்டு இருந்தாங்க! அதுல இவங்களுக்குள்ளேயே தகறாறு ஆகிடிச்சுஎன்று மென்குரலில் பதிலளித்தாள் யுவரத்னா.

பதில் கூறிய பின்னர்ஆமா இவனுக்கு ஏன் நான் இப்போ பயந்து போய் பதில் சொல்லிட்டு இருக்கேன்மனதிற்குள் தன்னையே கேட்டபடி நிமிர்ந்து அவனை முறைத்தவள்ஆமா! நீங்க யாரு முதல்ல?” என்று சற்று திமிராகவே கேட்டாள். 

அவளை அலட்சியமாக பார்த்தபடி எழுந்து அவளருகில் வந்தவன் சற்றுக் குனிந்து அவளது கண்களை நோக்கியபடிநான் யாரா வேணா இருந்துட்டுப் போறேன்! ஆனா நாங்க இல்லாம நீங்க இல்லை”  இரு பொருள்படக் கூறிவிட்டு ஷர்ட்டில் தொங்கிக்கொண்டு இருந்த கூலிங்க்ளாஸை எடுத்து அணிந்து கொண்டவன் வெளியில் செல்லத் திரும்பினான் 

ஆமா பெரிய இவன்! இவன் செய்யும் ரௌடிசம் இல்லாட்டி எங்களுக்கு கேஸ் வராதாம்! துரை  சுத்தி வளைச்சு சொல்லிட்டு போறான்அவள் முணகியது காதில் விழவும் முன்னால் எடுத்த அடியை பின்னால் வைத்து அவள் புறம் திரும்பி புருவங்களை கித்தாய்ப்பாக உயர்த்திய அபிஷிக்த்

ஹப்பா! என்னே அறிவு! என்னே அறிவு! நான் சொன்னதை சரியா சொல்றீங்களே! அதுனால தான் மேடம் வக்கீலா இருக்காங்க போல! இல்ல விக்ரம்என்று விக்ரமையும் பேச்சுக்குள் இழுத்தான். ‘என்னடா இது அதிசயம் பாஸ் இப்படி இலகுவா பேசுறாருஅதிசயித்தவாறேஆமாம் பாஸ்என்ற விக்ரமிற்குஹௌ இஸ் இட்என்பது போல கெத்தாக அபியைப் பார்த்துக் கொண்டு இருந்த யுவரத்னாவைக் காண மீண்டும் சிரிப்பு வந்து தொலைத்தது. 

விக்ரம் சிரிக்கவும் தான், ஒருவேளை இந்த ரௌடி நம்மளைக் கலாய்க்கிறானோ என்ற ரீதியில் யுவாவின் பார்வை கூர்மையானது! அவளின் பார்வை கூர்மையாகவும் மின்னலென அங்கிருந்து வெளியேறிய அபியின் பின்னால் ஓடிய விக்ரம்பாஸ்! பாஸ்யாரு பாஸ் அவங்க? நீங்க இவ்வளவு நேரம் கேஸ் விஷயம் இல்லாம ஒரு பெண்ணோட பேசி இப்போ தான் பார்க்கிறேன்என வினவவும்  

உன்னோட மாதாஜி நேற்று எனக்கு பார்த்திருக்கிறதா சொன்னாங்களே? அந்தப்பொண்ணு தான்என்று கூறியவாறே ஜீப்பில் சென்று அமர்ந்தான் 

அவனின் பதிலில் ஆஆ என்று வாயைப் பிளந்தபடி அங்கேயே நின்ற விக்ரமிற்கு அதனை உடனே மாதாஜியிடம் சொல்லவேண்டும் போல இருந்தது. அவனின் மனதை அறிந்தவன் போலவிக்ரம்என்று அபி உரத்துக் கூப்பிடவும் குடு குடுவென ஓடிச்சென்று ஜீப்பின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான் அபியின் சிஷ்யன் விக்ரம்! 

error: Content is protected !!