⛪️லேவியின் நவி அவள்🛕

Screenshot_2023-01-31-23-47-20-79_f08015ff9a3bb9bc58248ef487ff30d6

⛪️லேவியின் நவி அவள்🛕

லேவியின் நவி 8

உன் மீது கடலளவு காதல் இருந்தாலும்…

அதை கடுகளவு காட்டக்கூட பயமாய் இருக்கிறது…

கரை உடைந்த வெள்ளமாய் எப்பொழுது அது உன்னிடம் வெளிப்படுமோ நான் அறியேன்…

இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் அவளிடம் தன் காதலை பற்றி திரும்பத் திரும்ப பேசி அவளை இக்கட்டில் ஆழ்த்தாமல் இருந்தான் அவன்.

அவனுக்கு புரிகிறது அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்று. தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை நினைத்துதான் அவள் புழங்குகிறாள் என்பதும் அவனுக்கு புரிகிறது.

ஆனால் என்ன செய்ய அவளாக வாயை திறந்து எதுவும் சொல்லாத நிலையில் அவன் என்ன கூற முடியும்.

இவ்வாறான எண்ணங்கள் அவள் அவன் தோள் சாய்ந்து அழுது கொண்டிருக்கும் போது அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அவளின் அழுகை இவனை பாதித்தது. தன் தோளிலிருந்து அவளை நிமித்தியவன் அவள் முகவாயை பிடித்து, “என்னதான்டா உன் மனசுல ஓடுது எதுக்கு நீயே உன்னை இப்படி கஷ்டப் படுத்துக்கிற”, என அவன் மென்மையாக வினவ,

அதற்கு மேல் அவனிடம் தன் உணர்வுகளை மறைக்க முடியவில்லை பெண்ணால்.

“எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் லேவி. உன் கூட ரொம்ப வருஷம் வாழனும்னு ஆசையா இருக்கு அதுவும் புள்ளகுட்டி எல்லாம் பெத்துக்கிட்டு அணு அணுவா ரசிச்சு சந்தோஷமா வாழனும்.”, என கண்ணில் கனவோடும் காதலோடும் கூற,

இவனுக்கு அவள் காதல் சொல்லிய விதத்தில் முகத்தில் மென்மையும் உதட்டில் குறு நகையும் குடி கொண்டது.

“ஆனா இதெல்லாம் நடக்கும்மான்னு தெரியல. நம்ம ரெண்டு பேருக்குள்ள எவ்ளோ வேற்றுமை இருக்குன்னு உங்களுக்கே தெரியும்”

“நீங்க கிறிஸ்டியன் நான் இந்து எனக்கு நீங்க சர்ச்சுக்கு போறதோ ஜீசஸ் கும்பிடுறதோ மாதவ கும்பிடுறதோ பிரச்சனை இல்ல…”, என அவள் கூறிக் கொண்டே போக,

“எனக்கும் நீ உன் பிள்ளையாரப்பாவை கும்பிடுறதுல பிரச்சனை இல்ல”, என்றான் அவன் இடைப் புகுந்து.

“தெரியும், நம்ம ரெண்டு பேருக்கும் இது பிரச்சனை இல்ல தான். ஆனா நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு?”, என அவள் கேள்வி எழுப்ப,

இவனுக்கும் புரிந்தது இவர்கள் வீட்டில் எப்படி என்று இவனுக்கு தெரியும் தானே. ஆனால் அவனால் அவன் நவி இல்லாமல் வாழ முடியாதே.

சிறிது நேரம் யோசனைக்கு பின், “நம்ம ரெண்டு பேருமே ஒர்க் பண்றோம், இப்ப தனித்தனியா தங்கி இருக்கோம் இதே கல்யாணத்துக்கு அப்புறம்னா ஒரு வீடு எடுத்து இங்கேயே ஒன்னா தங்க போறோம் அவ்வளவுதான். அந்த மாதிரி நம்ம ரெண்டு பேரும் மட்டும் தாங்கத்துக்கு நம்மளுக்குள்ள ஒற்றுமை இருந்தா போதும்னு நினைக்கிறேன்”, என்ன அவள் பயத்திற்கு விளக்கம் கொடுத்தான் ஜான்.

அவன் கூறியதை உள்வாங்கி இவளும் யோசித்துப் பார்த்தாள். அவன் கூறுவதும் சரிதானே எப்படியும் வேலை எங்கேயோ அங்கே தான் இவர்கள் இருப்பது போல் இருக்கும்.

“நீங்க சொல்றது கரெக்ட் தான். ஆனா கல்யாணம் அதுக்கு நம்ம வீட்ல இருக்கவங்க ஒத்துக்கணும் இல்ல”, என இவள் கேள்வி கேட்க,

“நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு நம்மனா இஷ்டம் நவி. எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நம்ம வீட்ல இருக்கவங்க சம்மதிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன்”, என்றான் அவன் தீவிரமாய்.

அவன் கூறுவதும் உண்மைதான் அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்கள் என்றால் விருப்பம் தான். ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் சம்மதிப்பார்களா என்பது இவளுக்கு கேள்வி குறிதான்?

“எனக்கு தெரியல ஜான் எந்த அளவுக்கு இது சாத்தியப்படும்னு எனக்கு தெரியல.”, என்றாள் அப்பொழுதும் நம்பிக்கை அற்று.

“பேசிப் பார்த்த தானே தெரியும் முயற்சியே பண்ணாம இப்படி பயந்தா என்ன அர்த்தம்.”, என்றான் அவன்.

“சரி முயற்சி செஞ்சு பார்க்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன்”, என அவள் ஏதோ பீடிகை போட,

“என்ன அது”, என்றான் இவன் யோசனையாய்.

“முதல்ல வீட்ல பேசுவோம் சமச்சாங்கன்னா அதுக்கு அப்புறம் இது பத்தி நாம பேசுவோம்”, என்றாள் தயங்கி தயங்கி.

“அதுவரைக்கும் காதலர்கள் மாதிரி நடந்துக்க கூடாது, பேச கூடாதுன்னு சொல்ல வர அதானே”, என்றான் அவள் என்ன கூற வருகிறார் என்பது புரிந்து.

“அதேதான்”, என அவள் வேகமா சொல்ல,

அவளின் பயம் அறிந்து கொண்டதால். இவனும் அதற்கு சரியென சம்மதித்தான்.

***

சென்னை வெள்ளத்தில் மூழ்கிய இரண்டாம் நாள். ஹாஸ்டலில் குறுக்கெடுக்க அலைந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

காயங்கள் என்னும் முழுதாக ஆறவில்லை. ஆனால் சற்றே வலி குறைந்திருந்தது.

இப்போது அவள் கவலை எல்லாம் சிக்னல் எடுக்கவில்லை என்பதுதான்.

அவள் போன் வெள்ளத்தில் போய்விட்டது ஜான் அவன் உபயோகப்படுத்தும் இன்னொரு மொபைலை அவளுக்கு கொடுத்திருந்தான்.

அன்னைக்கு போன் செய்து அங்கு இருக்கும் நிலவரங்கள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள். ஆனால் இவ்வாறு தூர இருக்கும் நிலைமையில் தன் அடிகளைப் பற்றி அவரிடம் சொன்னால் மிகவும் கஷ்டப்படுவார் என தன் அன்னையிடம் எதுவும் கூறவில்லை. தன் அன்னையும் பாட்டியும் நலமாக இருக்கிறார்கள் என்பது இங்களுக்கு புரிந்திருந்தது.

இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் ஜானிற்க்கு லைன் கிடைக்கவில்லை.

ரோடு எல்லாம் தண்ணீரால் நிரம்பி இருக்கவே பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஜானின் ஊருக்கு செல்ல, இவள் ஊரை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே, பஸ் சேவை தொடங்கியவுடன் தன்னுடன் அவளையும் அழைத்துக் கொண்டு செல்வதாய் சொல்லி இருந்தான் அவன்.

இப்போதைக்கு இரண்டு வாரம் விடுமுறை விட்டிருந்தார்கள். அதன் பிறகு தான் பி.சி.பிக்கு எங்கே போடுவார்கள்? என்ன ஏது? என்பது பற்றி கூறுவதாய் கூறியிருந்தார்கள் கம்பெனி நிர்வாகிகள்.

எனவே, ஊருக்கு திரும்பலாம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு பஸ் சேவை நிறுத்தப்பட்டிருந்தது பெரும் தொந்தரவா இருந்தது.

ஜான் தான் பேருந்துகள் இயக்க ஆரம்பித்தவுடன் கூறுவதாகவும் அவளை உடன் அனைத்து கொண்டு ஊருக்கு செல்வதாகவும் கூறியிருந்தான்.

இதோ இன்று காலையிலிருந்து மொபைல் சிக்னல் எதுவுமே கிடைக்கவில்லை. எப்பொழுதும் இவளுக்கு அவளுக்கு நெருக்கமானவர்கள் உடன் இருக்க வேண்டும். யாரும் இல்லாத போனால் ஒரு மாதிரி தனிமையாக உணர்வாள்.

முதன் முதலில் இங்கு வந்த போது அவள் அன்னையையும் பாட்டியையும் விட்டு வந்தது இவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பின் ஜானின் பழக்கம் அவளுக்கு அந்த தனிமையை சற்று போக்கி இருந்தது.

ஆனால் இப்பொழுது அவனுக்கும் லைன் போகவில்லை காலையிலிருந்து ட்ரை பண்ணி ட்ரை பண்ணி இதோ மாலையே வந்து விட்டது.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று முடிவு பண்ணவள். தன் ஹாஸ்டலில் இருந்து கீழே இறங்கி வந்தாள் அவள் இருப்பது முதல் மாடி.

அவர்களின் ஹாஸ்டல் நன்றாகவே மேலே ஏற்றி கட்டப்பட்டிருந்ததால் அங்கே உள்ளே தண்ணீர் எதுவும் புகவில்லை. ஆனால் தெருக்களில் தண்ணீர் ஆறாக போய்க்கொண்டிருந்தது.

தன் பேண்டை தூக்கிக் கொண்டு அதில் இறங்கினாள். அந்த எதிரே இருக்கும் அவர்களின் தெருவுக்கு சென்றால். அங்கே பாதாள சாக்கடை வேறு திறந்து இருக்க, எது குழி எது ரோடு என்றே தெரியவில்லை.

அப்பொழுது அங்கே ஒரு வயதானவர் கையில் பெரும் கோலுடன் நின்று கொண்டிருந்தார்.

இவள் அருகே வந்து அந்த புறம் போக வேண்டுமா என்று கேட்க, இவள் ஆம் என்று தலையாட்டினாள்.

பின் இவளை அழைத்துக்கொண்டு அந்த கோலை ஊன்றி ஊன்றி எது பள்ளம் எது ரோடு என்று பார்த்து நடக்க, இவளும் அவர் பின்னையே நடந்தாள்.

ஜான் இருந்த வீடுகளுக்கு தெரியும் என்பதால் அந்த இடம் சென்றவுடன் இங்கே தான் செல்ல வேண்டும் என கூற, அவரும் சரி என்று அவளிடம் விடை பெற்று சென்றார்.

ஜான் இருக்கும் வீடு மேலே மாடியில் இருக்கும். கீழே ஹவுஸ் ஓனர் வீடு. மெதுவாக மாடியேறினாள்.

மேலே ஜானின் அறை முன் நின்று என்று கதவை தட்ட, வெகு நேரத்திற்குப் பின் அது திறந்தது. அங்கே நிற்க கூட முடியாமல் ஏதோ ஜீவனே அற்றவன் போல இருந்த ஜானை பார்க்கவும் இவளுக்கு திக் என்றது.

“லேவி என்ன ஆச்சு?”, என அவன் கைப்பற்ற. ஏதோ தீயைத் தொட்டால் போன்று அதில் அத்தனை தகிப்பு.

“என்ன இப்படி சுடுது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”, என்றாள் அதற்கு மேல் சும்மா இல்லை.

அவனை கை தாங்கலாக அழைத்து சென்று முதலில் அமர வைத்தாள். கிச்சனுக்கு சென்று பார்க்க, அதை அங்கு எதுவுமே செய்தால் போல் தெரியவில்லை.

இவர்கள் நைட் ஷிப்ட் என்பதால் அதற்கு முன் காலையே அங்கிருந்து ஜானுடன் தங்கி இருந்த மற்றவர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்பி இருந்தார்கள்.

இதை முன்பே ஜான் அவளிடம் கூறி இருந்தான். எனவே யாரும் அற்று இப்படி உடல்நிலை சுகம் இல்லாமல் அவன் இருந்திருக்கிறான் என்பது இவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

பின் அங்கு இருப்பதை வைத்து வேகமாக கஞ்சி காய்ச்சி மெதுவாய் அவனுக்கு புகட்டினாள். ஏதாவது மாத்திரை இருக்கிறதா என்று தேட, இருந்தது அதை எடுத்து எக்ஸ்பைரி டேட் பார்த்து கொடுத்தாள்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அவன் தெளிந்தான். அதன் பின் தான் இவளை கண்டு, “நீ இங்க என்ன பண்ற?”, என கேட்டான்.

“இவ்வளவு நேரம் கழிச்சு ஐயா இப்பதான் இந்த கேள்வியை கேக்குறீங்களா.”

“நீ வந்து எவ்வளவு நேரம் ஆச்சு”, நன்றாய் தெளிந்தவன் கேட்டான்.

“அது ஆச்சு பல மணி நேரம்  கிச்சன்ல போயி ஒவ்வொரு பொருளையும் தேடி கஞ்சி போட்டு, அந்த ஒரு துவையல் அரைச்சு உங்களுக்கு எடுத்துட்டு வந்து ஊட்டி விட்டு, மாத்திரையை போட வச்சு இவ்ளோ வேலை பார்த்த அப்புறம் கேக்குறீங்க நல்ல கேள்வி”, என நீட்டி முழங்கிகினாள்.

அவள் பாவனையில் சிரித்தான் இவன். அதன் பிறகு தான் சூழ்நிலை உரைத்தது அவனுக்கு.

“உனக்கு கொஞ்சமா அறிவு இருக்கா”, என சற்று கடுமையாக அவன் கேட்கவும்,

நன்றாக இருந்தவன் திடீரென்று ஏன் இப்படி பேசுகிறான் என்று புரியாமல் முழித்தாள் பாவை.

அவள் அவ்வாறு முழிக்கவும் இவன் பொறுமையாக, “ நா மட்டும்தான் இப்ப தனியா ரூம்ல இருக்கேன்”, என்றான் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

“அதுதான் எனக்கு தெரியுமே”, என்றாள் அப்பொழுதும் அவன் என்ன கூற வருகிறான் என்பதை புரிந்து கொள்ளாமல்.

“ஐயோ லூசு நான் இப்படி தனியா இருக்கேன் இல்ல, இது பேச்சுலர் ரூம் ஆச்சே நீ இப்படி வந்தது பார்த்தா நாலு பேரு என்ன பேசுவாங்க”, என்றான் விளக்கமாக.

அப்பொழுது தான் அவன் என்ன கூற வருகிறான் என்பதை புரிந்தது இவளுக்கு.

இப்படி ஒரு பார்வையில் அவள் யோசிக்கவே இல்லையே. அவள் யோசித்ததெல்லாம் அவனுக்கு ஏன் போனை போகவில்லை என்ற கவலை தான். ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை சென்று பார்க்கும் படி கூறி கிளம்பி வந்து விட்டாள்.

“சரி இதுக்கு மேல இங்க இருக்க வேணாம் கிளம்பு வா நான் வந்து விட்டுட்டு வரேன்.”, என அவன் எழும்ப,

“இப்பதான் உடம்பு தேறி இருக்கு அதுக்குள்ள எதுக்கு தேவையில்லாம அலையுறீங்க அதெல்லாம் நான் போயிட்டுவேன்.”, என எழும்பியவனே அப்படியே அமர வைத்தாள்.

“எனக்கு இப்ப எதுவும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் ரோடு ரொம்ப மோசமா இருக்கு பாதாள சாக்கடை வேற ரெண்டு திறந்து கிடக்கு எப்படி தான் நீ வந்தன்னு எனக்கு ஒன்னும் புரியல.”, என அவன் கேட்க,

ஒரு பெரியவர் இவளை கூட்டி வந்த கதையை அவனிடம் கூறினாள்.

“நல்ல வேலையா போச்சு நீ பாட்டுக்கு வந்திருந்தா என்ன ஆயிருக்கும் எதுக்கு தேவையில்லாம இந்த ரிஸ்க் எடுக்கிற”, என்றான் அவளின் செயலால்.

“சிக்னல் கிடைக்கவே இல்ல நீங்க என்ன பண்றிங்கன்னு தெரியல இந்த ரோட்ல வேற அதிகமா தண்ணி வந்துட்டதா பேசிக்கிட்டாங்க. அதான் என்ன ஏதாச்சின்னு பாக்க வந்தேன் தப்பா.”, என அவள் பாவமா முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

அவளின் பாவணையில் அவளை அள்ளி அணைக்க துடித்த கைகளை தடுத்து, “ அப்படிலாம் சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வரக்கூடாது நவி. பேச்சிலர் தங்கி இருக்க ரூம் நீ பாட்டுக்கு வந்துட்ட, யாராவது உன்னை தப்பா நினைச்சா? ஏதாவது சொன்னா? நல்லா இருக்குமா சொல்லு. என்னன்னு தெரியல திடீர்னு உடம்பு முடியாம போயிடுச்சு அப்படி இல்லன்னா சிக்னல் கிடைக்கலைன்னு உடனே நானே அங்கு வந்து இருப்பேன்ல. இனி, இது மாதிரி எதுவும் யோசிக்காம பண்ணாத நவி”, என்றான் மென்மையாய்.

உண்மையில் அவளின் அக்கறையில் கரைந்துதான் போயிருந்தான் ஆடவன்.

“இந்த மாதிரி நான் யோசிக்காதது தப்புதான் இனிமே இப்படி பண்ணல. ஆனா இன்னைக்கு நான் வந்தது என்ன பொறுத்த வரையிலும் சரியான விஷயம் தான். நான் வரலைன்னா நீங்க பாட்டுக்கு அப்படியே இருந்து இருப்பீங்க தானே. சரி கஞ்சி நைட்டுக்கும் வரும் ஜஸ்ட் சூடு பண்ணி அப்படியே குடிச்சுக்கோங்க. இல்ல நைட்டுக்கு வேற ஏதாவது செஞ்சு வச்சுட்டு போகவா?”

“இல்ல இல்ல அதெல்லாம் எதுவும் வேண்டாம். கஞ்சி சூடு பண்ணி குடிச்சிக்கிறேன் சரி கிளம்பலாம் வா”, என அவள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

மெதுவாய் அழைத்துக் கொண்டு சென்று, அவளுடைய ஹாஸ்டலில் அவளை சேர்த்தான்.

அந்த நேரம் பார்த்து அவனுக்கு தொலைபேசி வந்தது. அப்பாடா சிக்னல் கிடைத்து விட்டதா என்ற மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிந்தது.

தொலைபேசியை எடுத்துப் பார்த்தால். அவனின் நண்பன் தான் அழைத்து இருந்தான். ஒரு அளவுக்கு மெயின் ரோடுகள் எல்லாம் சரி செய்யப்பட்டுள்ளதால் பேருந்து சேவை நாளை காலை இயக்கப்படும் என்ற விவரம் தெரிவித்தான்.

அந்த நல்ல விஷயத்தை வைஷ்ணவியிடம் கூறிவிட்டு நாளை காலை அவளை தயாராய் இருக்கும்படி கூறி விடைபெற்றான் ஜான்.

மறுநாள் காலை இவனுக்கு உடம்பு நன்றாகவே தேறி குணமாகி இருந்தது. எப்பொழுதும் இங்கே அவன் பெரிதாக எதுவும் வைத்திருக்க மாட்டான் துணிமணி மட்டும்தான்.

அதை மட்டும் எடுத்துக் கொண்டு, வைஷ்ணவிக்கு கால் செய்து, ‘அவள் தயாராகி விட்டாளா?’, என்று கேட்டு அவளை வெளியில் வர சொல்லி இவனும் சென்றான்.

இருவரும் சேர்ந்து பேருந்து நிலையம் செல்ல, அங்கே கூட்டம் உன்னை பிடி என்னை பிடி என்று நின்று கொண்டிருந்தது.

எப்போதும் சென்னையில் பிற பகுதியிலிருந்து பலர் வந்து தங்கி இருப்பார். அதனால்தான் சென்னை வந்தாரை வாழவைக்கும் ஊர் என கூறுவர்.

அதன்படியே பிற ஊர்களில் இருந்தும், பிறகு கிராமங்களில் இருந்தும் வந்தவர்கள் அனைவரும் இந்த வெள்ளத்தினால் அவரவர் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

இப்பொழுது தான் பேருந்து சேவை தொடங்கியது என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நிற்பதற்கு மட்டுமே இடமிருந்த நிலையில், அதையும் விடுவதற்கு வைஷ்ணவிக்கும் ஜானுக்கும் மனம் இல்லாததால் நின்று கொண்டே தங்கள் பயணத்தை துவங்கினர்.

பயணம் முழுக்க ஜானை கண்ணெடுக்காமல் பார்த்துக்  கொண்டிருந்தாள் வைஷ்ணவி. ஏனென்றால் எப்பொழுது ஆபிஸ் சரி செய்து அங்கு செல்வோம் என்பது இவளுக்கு தெரியாது.

இது தற்காலிக பிரிவா அல்லது நீண்ட பிரிவா என்பது தெரியாத நிலையில், அவனை காண முடியுமா என்ற ஏக்கம், கவலை அனைத்தும் சேர்ந்து, இவளை கண் இமைக்க கூட முடியாதபடி செய்திருந்தது.

எங்கே கண்ணிமைத்தால் அவன் உருவம் டக்கென மறைந்து விடுமோ என்ற கவலைப் பெண்ணிற்கு.

ஆனால் அவள் கவலை அனைத்தையும் பொய்யாக்கி அவனுடனே அடுத்த இரண்டு மூன்று நாட்கள் விதி அவர்களை ஒன்றாய் தங்க வைக்கப் போகிறது என்பது பெண்ணிற்கு அப்பொழுது தெரியவில்லை.

லேவியின்  நவி காதல் தொடரும்…

 

error: Content is protected !!