💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 27💋

eiHO4LK40803-0bbf0cb5

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 27💋

அத்தியாயம் 27

இதயம் ஒரு வினாடி ஸ்தம்பிக்க, “டாக்டர், வைஃபும் பேபியும் எப்படி இருக்காங்க?” என்று படபடவென்று கேட்டான் புறஞ்சேயன். 

“ஸ்கீரின பாருங்க. தெரியுதா?” என்று வைத்தியர் கேட்டார்.

“ஒ ஒன்னும் புரியல டாக்டர்” பதறியவாறே கூறினான். பியானாவிற்கும் பதற்றம் அதிகமானது. 

“ஸ்கீரின நல்லா பாருங்க. ரெண்டா தெரியும். டுவின்ஸ் இருக்காங்க. ரெண்டு கருவ உங்க வைஃப் சுமக்குறாங்க” வைத்தியர் கூறி வாயை மூடவில்லை. பியானாவும் புறஞ்சேயனும் ஒரே நேரத்தில் வாயைப் பிளந்தனர். “டாக்டர் என்ன சொல்லுறீங்க?” என்று அதிர்ச்சியில் கேட்டான்.

“உங்களுக்கு டுவின்ஸ் பொறக்க போகுது மிஸ்டர், கங்ராஜிலேஷன்ஸ்” என்று வாழ்த்தைத் தெரிவித்தார். ஒருவருக்கொருவர் கண்களாலேயே மகிழ்வை தெரிவித்துக்கொண்டனர். 

ஒருவித பூரிப்புடன், “பேபிஸ் எப்படி இருக்காங்க டாக்டர்” என்று ஒரு தாயென அவள் இதைதானே கேட்க முடியும்.

“பேபிஸ் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. இது சின்ன ஸ்கேன் மெஷின்தான். சோ நீங்க சூப்பர் ஸ்கேன் பண்ணனும் கூடிய சீக்கிரம்” 

“ஓகே டாக்டர், அப்பா ஏன் பிரீயட்ஸ் வந்துச்சு?” என்று கேட்டாள் பியானா. 

“யெஸ், ஒரு பேபியோட நஞ்சுக்கொடி பணிஞ்சு இருக்கு. அதான் ப்ளீடிங்க் ஆகியிருக்கு. அதுக்குதான் இன்ஜக்ஷன் போட்டேன். ஒரு மாசத்துக்கு நாலு ஊசி போடனும். வாரத்துக்கு ஒன்னு. ஆஸ்பிடல் வந்துதான் போடனும்னு இல்ல. வீட்லயே வேர்லின்க்கிட்ட சொல்லிப் போட்டுக்கோங்க” 

“ஓகே டாக்டர்” என்றாள் அவள். 

“அப்பறம், ஹெல்தியான ஃபுட்ஸ் நிறைய எடுத்துக்கோங்க. மெடிசின் செபரேட்டா தாரேன்” 

வைத்தியர் கூறுவதற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டினர் இருவரும். ஊடுகதிர் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அளவில்லா பேரானந்தம். அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினான். “என் சந்தோசத்த வர்ணிக்க வார்த்தையே இல்ல பியூமா. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி!” 

“சத்தம் போடாதீங்க சேய். ஆஸ்பிடல்”

“ஓகே மேடம்” என்று வேர்லினை கண்டவுடன் அமைதியடைந்தனர். 

“மாம்ஸ் நீங்கப் பெரிய ஆளு! எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கீங்க” என்று வேர்லின் கேலி செய்தாள். 

அவனோ புரியாமல் நிற்க, “என் புருசன கிண்டல் பண்ணாத வேர்லின்” என்றாள் பியானா. 

கண்களை விரித்துத் தன் தலையைத் தானே கோதினான் புறஞ்சேயன். 

“இப்பயாவது புருசனு ஒத்துக்கிறியே, இதுவே பெரிய விஷயம்” 

சந்தோசமான அந்நேரம் இரவு என்பதால் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர். 

வேர்லின் சத்தம் போட்டுவிட்டு செல்ல, செல்வத்தைத் தவிர அனைவரும் விழித்திருந்தனர். 

“என்னைய்யா, இந்நேரம் வெளிய போயிட்டு வாரீங்க?” என்றார் வினவினார் பாட்டி. 

“அது வந்து அப்பாய், நாங்க ஊருக்குப் போகும்போது  ரெண்டு பேரா போயி மூனு பேரா வரச் சொன்னீங்களா?” 

“ஆமாயா, அதான் நீங்க மூனு பேரா வந்துடீங்களே! அப்பறம் என்னவாம்?”

“அதுதான் இல்ல அப்பாய். ரெண்டு பேரா போய் நாலு பேரா வந்துட்டோம்” 

“நாலு பேராவா!” என்று பாட்டி வியப்பில் ஆழ்ந்தார். 

“ஆமா பாட்டி” என்று நடந்தவற்றை வேர்லின் எடுத்துரைத்தாள்.

“ஐய்யோ! குழந்தைங்க நல்லா இருக்கா?” என்று பாட்டி பயத்தில் கேட்டார். 

“நல்லாருக்கு பாட்டி. வாரா வாரம் இன்ஜக்ஷன் போடச் சொல்லிருக்காங்க” என்றாள் பியானா. 

“பியானா அப்போ” என்று தயக்கமாகக் கூறி, “ஒரு குழந்தைய எனக்குத் தாரியா?” என்று முடித்தாள் லக்ஷதா. 

“நான்தான் முதல்லே சொல்லிட்டேனே,  இது உங்க குழந்தேனு, அப்பறம் என்ன ரெண்டும் உங்களுக்குதான் லக்ஷு அக்கா” பியானா கூறுவதை கேட்டுப் லக்ஷதா அகம் மகிழ்ந்தாள். 

“இந்தச் சந்தோசம் நாளைக்கு தொடரலாம் சரியா, இப்போ நேரமாச்சு சீக்கிரம் தூங்குங்க. ரூமுக்கு போங்க” என்றார் புகழ். 

அனைவருக்கும் மகிழ்ச்சிதான் களிப்புற நேரம் போதவில்லை. இருந்தாலும் தத்தமது அறைக்குச் சென்று தாளிட்டனர். 

பியானா தாளிட்டு திரும்ப அவளை முதுகோடு இதமாக அணைத்துகொண்டான். 

“ரெண்டு பிள்ளைக்கு நான் அப்பாவாகப் போறத நினைச்சா உடம்பே புல்லறிக்குது. எல்லாம் நீ குடுத்த சந்தோசம்தான் டா. தேங்க்யூ சோ மச் பியூமா” 

“இந்தப் பெருமை எல்லாம் உங்களைதான் சேரும் சேய்யூ” முன்னே திருப்பியவள் அவன் மார்பின் மீது சாய்ந்தாள். 

“ரெட்டை குழந்தனு சொன்னதுமே  என்ன குழந்த, ஆணா, பொண்ணானு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு” 

“எதுவா இருந்தாலும் நம்ம குழந்தைதானே சேய்யூ. பொண்ணா இருந்தா அம்மாவே வந்து பொறந்ததா நினைப்பேன்” 

“ஆமா ஆமா, எனக்கு ரெண்டுமே பொண்ணுனா கூட ஓகேதான்” 

“உங்களுக்குப் பொண்ணுனா ரொம்ப புடிக்குமோ?” 

“பேபினாலே புடிக்கும். அதுல  பொண்ணு, பையனு ஏன் பிரிச்சு பார்க்கனும்? குழந்தங்குற வார்த்தையே எனக்கு ரொம்ப புடிக்கும். 

நீ, அப்பா மேல வச்சிருக்க பாசம், அக்கறை, அப்பா கிடைக்கனும்னு ஒரு பொண்ணா உன்னோட உணர்ச்சி எல்லாம் கட்டிப்போட்டு தேட ஆரம்பிச்சியே, அப்பவே உன்ன ரொம்ப புடிச்சு போச்சு.

அப்பறம் என்னோட லவ்வ கூட ஏத்துக்காம தங்கச்சி மேல பாசம் காட்டுன பார்த்தியா, அங்க என் லவ் தோத்து போச்சு பியூமா அப்போதான் நினைச்சேன் கட்டுன உன்னதான் கட்டனும்னு. 

நீ, டாடி மேல பாசம் காட்டுறத பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் பொறமையாதான் இருக்கு. அதே மாதிரி நீயும், என்னையும் என் பொண்ணையும் பார்த்துப் பொறாமை படனும். பொறமை பட வைப்பேன். இதுக்குதான் எனக்குப் பொண்ணு வேணும்” என்று சட்டை காலரை தூக்கி விட்டான். 

“ஹா, நல்லாயிருக்கே உங்க கதை!  அப்போ எனக்கும் பையன் வேணும்.  அப்போதான் நானும் என் பையனும் சேர்த்து அடிக்கிற லூட்டி எல்லாம் அப்பனும் மகளும் பார்த்துப் பொறாமை படுவீங்க” என்று இடுப்பி கையை வைத்துகொண்டாள். 

“ஒரு கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. அது நமக்கு நடந்துருச்சு.

சரி இப்போ தூங்கலாம். நம்ம சிங்கக்குட்டிகளுக்கு ரெஸ்ட் வேணும்” 

“பொண்ணும் சிங்கம்தானா?” 

“ஆமா சிங்கப்பெண்” அவள் வாயைப் பொத்தியவன், “பேசவே வேணாம் தூங்கு” என்று தலை கோதி உறங்க வைத்தான். 

*** 

விசேட ஊடுகதிர் எடுக்கும் அறையில், பியானாவை பரிசோதித்த வைத்தியர்கள் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர். “இந்த மாதிரி பேபி ஃபார்ம் ஆகுறது ரார்” 

“டாக்டர் பேபிஸ் எப்படி இருக்காங்க” என்று ஆர்வமாகவும் பயத்தோடும் கேட்டாள் பியானா. 

“நல்லா ஹெல்தியா இருக்காங்க” என்று வைத்தியர் கூறியவுடன் “ஆமென்” எனக் கூறி சிலுவையிட்டுக்கொண்டாள். 

“ரிப்போர்ட் தருவோம். நீங்க ரெகியூலரா செக் பண்ற டாக்டர்க்கிட்ட குடுங்க அவங்க மீதிய சொல்லுவாங்க” 

வழமையான வைத்தியரின் பரிசோதனைக்குரிய நாள் இனி அடுத்த மாதம்தான் அதுவரை பொறுமையில்லை. வேர்லினிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றெண்ணினாள். 

“வேர்லிமா ரிப்போர்ட் வரும் வரைக்கும் வெய்ட பண்ண சொன்னாங்க. நம்ம வழமையா பார்க்கிற டாக்டர்க்கிட்டவே டிடைல்லா கேக்க சொன்னாங்க. அதுக்கு ஒன் மந்த வெய்ட பண்ணனுமே” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கூறினாள் பியானா.

“நான் இருக்கும்போது எதுக்கு அக்கி நீ ஒன் மந்த் வெய்ட் பண்ணணும்” 

“நான் உங்கிட்டவே குடுத்து பார்க்கலாம்னு முன்னவே நினைச்சேன் குட்டி” 

பரிசோதனை பெறுபேறை எடுத்து வந்து வேர்லினின் கையில் கொடுத்தான். 

பெறுபேறை படித்துக்கொண்டிருந்தவள் மனமகிழ்வுதான். “அக்கி நம்ம பேபிஸ்ஸே டிவிஸ்டுதான்!” 

“ஏன் குட்டி அப்படி சொல்லுற?” 

“இடது பக்கம் இருக்கு பேபிதான் மூத்தவங்க. வலது பக்கம் இருக்க பேபி இளையவங்க அக்கி” 

“அது எப்படி குட்டி, பொறக்குறத வச்சிதானே சொல்லலாம் டா” 

“அதானே!” என்றான் புறஞ்சேயன்.

“அது வந்து, ஒரு பேபி இன்னைக்கு ஃபார்ம் ஆகியிருக்கு. இன்னொரு பேபி அஞ்சு நாள் கழிச்சு ஃபார்ம் ஆகிருக்கு.  பிளசன்டா, அம்னிஒன், ச்சொரிஒன், உம்பிலிகல் கொர்டு இது எல்லாமே ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியா இருக்கும்” 

“வேர்லின் நீ படிச்சதெல்லாம் சொல்லும்போது கேக்க நல்லாதான் இருக்கு. எனக்கு ஒன்னுமே புரியல” என்றான் புறஞ்சேயன்.

“எனக்கும் ஒன்னும் புரியல வேர்லின் மா” 

“தமிழ்ல சொல்ல சரியா தெரியல. எனக்குத் தெரிஞ்சா மாதிரி சொல்லுறேன் ஓகே. ம்ம் தனித்தனி ஃபார்ம் ஆகிச்சு சோ கருப்பபை, பனிக்குடம், தொப்புள் கொடி, நஞ்சு கொடி எல்லாமே செபரேட்டா இருக்கும். 

உங்களுக்கு ரெண்டுமே பொண்ணா இருந்தாலும் பொறந்து வளரும்போது பேஸ் கட் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. வேற மாதிரிதான் இருக்கும். ஒரு பொண்ணு ஒரு பையனா பொறக்க கூடச் சான்ஸ் நிறைய இருக்கு” இவற்றை எல்லாம் கூறியவள் பியானா கருதரித்திருக்கும் பிரிவு தீவிரமானது என்று கூறவில்லை. 

இரண்டு வெவ்வேறு அண்டங்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று வந்து, கருவுற்று இரண்டு குழந்தைகளாக வளர்வன ஈரண்ட (பையோவுலர்) அல்லது உடன்பிறப்பிரட்டைகள்(ஃபிரெடெர்னல் டுவின்ஸ்) எனப்படும். இவை இரண்டும் ஒரே பாலினமாகவும் இருக்கலாம். ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் இருக்கலாம். 

ஒருபால் இருபால் இரட்டைகளின் விகிதம் சுமார் பாதிப் பாதியாக இருக்கும். உடன்பிறப் பிரட்டைகள் ஒரே பாலினவானாலும் அவற்றை வேறு பிரித்து அறிந்து கொள்ளுவது எளிது. 

ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவேதான் இந்த உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் காணும். இரட்டைப் பிள்ளைகள் உண்டாவதுபோல மூன்று நான்கு, ஐந்து பிள்ளைகளும் உண்டாவதுண்டு. ஆறு பிள்ளைகளும் பிறந்திருக்கின்றன. ஆறுக்கு மேற்பட்டுப் பிறந்திருப்பதாகத் தெரியவில்லை. மூன்று, நான்கு, ஐந்து குழந்தைகள் ஒரே அண்டத்திலிருந்தும் உண்டாகியிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து அண்டங்களிலிருந்தும் உண்டாகலாம்.

“அப்படியா வேர்லின், எந்தக் குழந்தையா இருந்தாலும் ஓகேதான்” எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன? தாய் சேய் நலமாக இருந்தால் போதும் என்றது அவன் மனம். 

“அக்கி ப்ரெக்னன்ட் இருக்கா, ரொம்ப நேரம் வெளிய இருக்க வேணாம் மாம்ஸ். கொரோனா வேற” 

“ஆமா வேர்லின், நீ சொல்லுறது கரக்ட்” வெகுவாகக் கிளம்பி தந்தையைப் பார்க்கச் சென்றனர். 

மகள் கருவுற்றிருப்பது அதும் இரட்டையர் என்றதும் இரட்டிப்பு மகிழ்ச்சி, “எனக்கு எப்படியும் குறஞ்சது அஞ்சு வருஷத்து தண்டனை கிடைக்கும்மா. நான் வெளிய வரும்போது புள்ளைங்க வளர்ந்து இருப்பாங்க. நான்தான் ஸ்கூலுக்கு அழச்சிட்டு போய் அழச்சிட்டு வருவேன். என் புள்ளைங்களுக்குத்தான் எதுவும் செய்ய முடியல. பேரப்புள்ளைங்களுக்காவது செய்றேன். என் சங்கீதா பொறந்து வருவா எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று ஜான் கூறும் எண்ணமேல்லாம் ஈடேருமா? இரட்டையர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வாரா?

“பார்க்கலாம் டாடி, கோர்ட்ல என்ன முடிவு வருதுன்னு, நல்லதே நடக்கும்” 

“என்னைய பார்க்க வர வேணாம் தன்விமா. டேவிட்டோட ஆளுங்க அடிக்கடி வந்துட்டு போறாங்க. நீங்க என் பொண்ணுங்கனு வெளிய காட்டிக்க வேணாம். கொரோனா நேரத்துல அதிகாம வெளிய எங்கயும் போக வேணாம் தன்விமா. அக்காவ நல்லா பார்த்துக்கோ அன்விமா. 

ரெண்டு பேரையும் கவனாமா பார்த்துக்கோபா. இங்க இருக்க வேணாம் சீக்கிரம் கிளம்புங்க” என்று கூற ஒரு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

கொரோனா தொற்று அதிகரித்து செல்வதால் எங்குச் சென்று வந்தாலும் முதல் குளிப்பதுதான் முதல் வேலை. அதுவும் புறஞ்சேயன் அதித கவனம் செலுத்தினான் பியானா மீது மட்டும். 

வெளியே சென்று வீட்டிற்கு யாரு வந்தாலும் தொற்று நீக்கியை கையில் தெளித்த பின்னரே உள்ளே வர வேண்டும். உள்ளே வந்ததும் நீராட வேண்டுமென்று அனைவரிடமும் தீவிரமாகக் கூறியிருந்தான்.   

இன்றும் அப்படிதான் அவன் குளித்துவிட்டு வந்திருந்தான் அதைப் பியானா கவனிக்கவில்லை. 

“சேய்யூ, வெளியப் போயிட்டு வந்தா குளிக்கனும் தெரியாதா? போங்க சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க” 

“குளிக்க மாட்டேனே! நீ என்னப் பண்ணுவ?” என்று ராகமிழுத்தான்

“அப்பாய் கிட்ட சொல்லுவேன்” பதிலுக்கு அவளும் ராகமிழுத்தாள்.

“சொல்லிக்கோ! இப்போ குளிப்பேன். நாளைக்குகுகு. என்னா பண்ணுவ நீ என்னா பண்ணுவா?” என்று பாடல் முடிந்தது. 

“போங்க சேய்யூ. நான் எனக்காவா சொல்லுறேன். உங்க சிங்கக்குட்டிங்களுக்காதான் சொல்றேன்” என்றவள் பன்னிரண்டு வாரக்கருவை தடவிக்கொடுத்தவாறே கூறினாள். பன்னிரண்டு வாரம்தான் இரட்டையர் என்பதால் நான்குமாத அளவில் மேடுட்டிருந்தது.

“நீ கிட்சன்னல இருந்தியா, நான் குளிச்சுட்டு வந்துட்டேன் டா” 

“அப்பறம் ஏன் இந்தப் பாட்டெல்லாம்” 

“அதுவா, அப்போதான் சிங்கக்குட்டிங்க வந்தா பிறகு அம்மாவும் அப்பாவும் அடிச்ச லூட்டி எல்லாம் சொல்லலாம்” என்று கூறிவிட்டு அவளைப் பின்னே அணைத்து மேடுட்ட வயிற்றை வருட ஆரம்பித்தான். 

“இருக்கட்டும் இருக்கட்டும், நான் போய்ச் சாப்பாடு எடுத்துட்டு வாரேன்” 

பியானா அடுக்களைக்குள் நுழைந்தாள். அங்குச் செல்வமும் இருக்க, “என்னா ரெட்டப்புள்ளையாமே! ரெண்டையும் பொண்ணா பெத்துட்டு என் பையன ஓட்டாண்டி ஆக்கிறாத. பொண்ணா இருந்தா கலைச்சுரு” என்று எச்சரித்தார். 

“ஏன் அத்தை, நீங்கப் பொறந்தததும் உங்க அப்பா ஓட்டாண்டி ஆகிட்டாரா, இல்ல லக்ஷாதாக்கா பொறந்ததும் அப்பா ஓட்டாண்டி ஆகிடாரா? இது என் உரிமை. ஒரு பொண்ணுக்கு குழந்த பெத்துக்கிற உரிமைகூட இல்லயா?”

“ஏய் ஏய்! சௌன்ட கம்மி பண்ணு,  அடக்கிவாசி” என்று ஒற்றை விரலைக் காட்டி மிரட்டினார் செல்வம்.

“ஏன்மா, சத்தமா பேசுனா வெளிய கேட்டுரும்னு பயப்பிடுறீங்களா இல்ல, எனக்குக் கேட்டுரும்னு பயப்பிடுறீங்களா?” என்று உரக்கக்கேட்டான். பியானாவின் பின் புறஞ்சேயன் வந்ததையும் இருவரேமே கவனிக்கவில்லை.  கோபத்தின் உச்சக்கட்டத்தின் அவன். 

 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!