💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 28💋

mt41ua-0bb15e29

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 28💋

அத்தியாயம் 28(ஆ)

கடற்கரையின் அழகில் மூழ்கி இருந்த பியானாவுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. அழைப்பை அழுத்திக் காதில் வைத்தாள்.

“சொல்லுங்க சேய்யூ” 

“பீச்ல எந்தப் பக்கம் இருக்கீங்கனு சொல்லுங்க. நான்  வாரேன்” 

“சிவா கடல் உணவகம் அதுக்கு பக்கத்துல இருக்கோம். கோர்ட்ல கேஸ் என்னாச்சு?” 

“எல்லாம் நேர்ல வந்து சொல்றேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். 

அவன் நேரில் வரும் வரை மனம் அவளை இறைவனிடம் மன்றாட வைத்தது. 

“பியூமா!” என்று அவள் பின்னாடி வந்து கண்களை மூடினான். 

“என்ன சேய்யூ விளையாட்டு? கைய எடுங்க” என்று கூறியவுடன் கையை எடுத்தான். 

“முதல்ல கோர்ட்ல என்னாச்சுனு சொல்லுங்க சேய்யூ, ஒரே டென்ஷனா இருக்கு” 

“அப்பாவுக்கு மூனு வருஷம் சிறை தண்டனை கொடுத்திருக்காங்க.  டேவிட்டோட ஆளுங்க, அப்பாவ வெளிய கொண்டு வரும்போது அப்பாக்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னாங்க. 

நான் விடல எதும் வம்பு பண்ணுவாங்கனு. ஜெயில் வரைக்கும் போயிட்டுதான் வாரேன். வேர்லின் டயர்டா இருக்குனு வீட்டுக்குப் போயிட்டா” 

“அப்போ டாடிய மூனு வருஷத்துக்கு அப்பறம்தான் பார்க்கலாமா?” 

“அஞ்சு வருஷ தண்டனை மூனுவருஷமா குறைஞ்சிருக்கு. அதை நினைச்சி சந்தோஷப்படு” 

இவர்கள் இருவரையும் மாத்திரம் கடற்கரையில் விட்டு விட்டு, ஏனையோர் வீட்டை நோக்கிச் சென்றனர். 

“சேய்யூ  சேய்யூ!” 

“என்னமா?” 

“உங்க சிங்கக்குட்டிங்க அசையிறாங்க” 

“எங்க?” என்று அவள் வயிற்றில் முகத்தை வைக்க, இருகுழந்தைகளும் அவனை நன்றாகவே உதைத்தது. 

“என்ன சேய்யூ சொன்னாங்க உங்க சிங்கக்குட்டிங்க” 

“அம்மா சரியாவே சாப்பிடுறதில்ல. எங்களுக்கு நிறைய பசிக்குது. ஒழுங்கா சாப்பாடு குடுடா டாடினு சொல்லி உதைச்சிட்டாங்க” 

“ஐய்யோ! போங்க சேய்யூ சாப்பிடவே கஷ்டமா இருக்கு” 

“இப்படியே சொல்லிக்கிட்டு ரெண்டும் வெளிய வந்து உதைக்கப் போகுது” 

“ஏன், இப்போ மட்டும் உதைக்காமதான் இருக்காங்களா?” 

“ஹாஹா!” என்று நகைந்தான். 

“டெலிவரி டைம் கிட்ட இருப்பீங்களா சேய்யூ?” 

‘கண்டிப்பா இருக்கமாட்டேன் பியூமா. நீ வலில துடிக்கிறத என்னால பார்க்க முடியாது. 

மீடிங்க்னு சொல்லிக் கண்டிப்பா வெளிய எங்கயாவது போயிருவேன்’ என்று அவன் எண்ணம். நடக்கவிருக்கும் இடரை யாரால் தடுக்க முடியும். 

“உங்கிட்டதான் இருப்பேன். இப்போ வீட்டுக்கு  போகலாம்” என்று அவள் கையைப் பற்றிக் கூறினான்.

மெதுவாக நடந்து வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து அமரக்கூட இல்லை.

“அண்ணா!” என்று சத்தமாகக் கூப்பிட்டான் யுவா.

பதற்றத்துடன், “என்ன யுவா? 

“ரஞ்சனா கல்யாணம் பண்ணிட்டாலாம்!” 

“கழுதை கல்யாணம் பண்ணாயென்ன, பண்ணலனாயென்ன?”

“துரைமாமா இப்போ கால் பண்ணாங்க. கழுதை எப்படி கல்யாணம் பண்ணுச்சுனு சொன்னாங்கணா” 

“சரி சொல்லு” என்று சலிப்புடன் புறஞ்சேயன்.

“ஏற்கனவே கல்யாணம் ஆனவனாம். ரெண்டு புள்ளை இருக்காம். அவனோட வைஃப் இறந்துட்டாங்களாம். இவ குழந்தையே பெத்துக்க கூடாதாம். 

அதுனால ஆப்ரேஷன் பண்ண சொல்லிட்டானாம். ரொம்ப வசதியான ஆளாம். அதுனால கல்யாணம் பண்ணிருக்கா ரஞ்சனா” 

“அட, அட இதுதான் குட் நியூஸ், அவ குழந்த பெத்துகலனு கேட்டுக் கேட்டுச் சமூகமே அவள ஒதுக்கி வைக்கனும். அப்போதான் அவ தின்ன உப்புக்குத் தண்ணி குடிச்ச மாதிரி இருக்கும்” ஒரு புறம் ஆனந்தம் என்றாலும் இன்னும் ஒரு புறம் ஆதங்கம் அவனுக்கு. 

“தம்பி அப்படியெல்லாம் பேசாதடா,

அவளும் ஒரு பொண்ணுதானே” துரோகியாக இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் லக்ஷதாவை விட்டுப் போகவில்லை. 

“அக்கா நீ எப்பவும் கரந்து வச்ச பாலா இருக்காத, இப்போ இருக்க காலத்துக்கு ஏத்தா மாதிரி கலப்படம் பாலா மாறிரு” 

“புகழப்பா முதல்லே சொன்னாங்க. தெய்வம் இன்றே கொல்லும்னு. அது நடந்துருச்சு” என்றாள் பியானா.

“சரிண்ணா நாங்க எங்க வீட்டுக்குக் கிளம்புறோம்” 

“எது உங்க வீட்டு, அந்த வாடகை வீடா? நீ கல்யாணம் பண்ணின நாள்ல இருந்து உன்னைய இந்த வீட்ல இருக்க சொல்லுறேன். நீதான் கேக்க மாட்டீங்கிற. அங்க பாரு பிரணவ் எவ்ளோ ஹேப்பியா இருக்கானு, நித்திக்கும் எங்கூட இருக்கிறது புடிக்கும் டா இங்கவே இரு” 

“ஆமா யுவா இங்கவே இருங்க” என்று பியானாவும் கூறினாள். 

“அது வந்து அண்ணி” என்றவன் ராகமிழுத்தான். 

“டேய் உன்ன இங்க இருக்க சொன்னேன்” என்று அதட்டலாகக் கூறினான் புறஞ்சேயன்.

“சரிண்ணா” என்று தனயனின் வார்த்தையைத் தாண்டாத தம்பியானான். 

தினமும் வீட்டில் குதூகலம்தான் பிரணவின் சேட்டைகளைப் பார்த்துப் பொழுது போகும். 

அன்றும் அப்படிதான், “பெம்மாக்கு எப்புடி பேபி வந்துச்சு” என்று அவன் கேட்க, அனைவரும் வாயடைத்து போனார்கள். 

புத்திசாலிதனமாகப் பாட்டி பதில் கூறினார். “அது வந்து கடவுள் கொடுத்த குழந்த கண்ணா” 

“ஓ அப்புடியா, அப்போ நானும் சாமிக்கிட்ட இருந்து வந்தேனா?” 

“ஆமா யா” என்றார் பாட்டி.

“அப்போ ஏன், சாமி வேலி சிட்டிக்கு பேபி குடுக்கல?” சிறுவனின் கேள்வி எல்லாம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. 

வேர்லினோ, “ஏன் பிரணவ் குட்டி, உனக்கு அவ்ளோ ஆசையா?” 

“வேர்லின் சித்தி படிக்கிறாங்களா, படிச்சு முடிச்சதும் குழந்த வரும்” என்று கூறி சமாளித்தார் பாட்டி. 

“அப்போ நான் பொம்ம கூட விளையாடுறேன் பாட்டி” என்று அவ்விடத்தை விட்டு ஓடினான். 

அவ்வேளைப் பார்த்து யுவா நித்தியை அழைக்க, “சரி நித்தி, இனி பிரணவ் விளையாடுறது பொம்ம தேவையில்லன நினைக்கிறேன்” என்று பியானா கிண்டலடித்தாள். 

“ஐய்யோ கா, அவங்க சும்மாதான் கூப்பிடுறாங்க” என்று கூறியவளுக்கு வெட்கமே வந்து விட்டது. 

“சரி சரி ஓடு, தம்பி வெய்ட் பண்ணுவாங்க” என்று பியானா கூற, நித்தி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 

****

ஒரு குழந்தைக்கு இருபதாவது வாரம் ஆரம்பித்திருக்க. இன்னும் ஒரு குழந்தைக்குப் பத்தொன்பது வாரமும் மூன்று நாட்களும். 

விசேட ஊடுகதிர் பெறுபேற்றை எடுத்து விட்டு மாதாந்திர பரிசோதனைக்காக வழக்காமாகப் பார்வையிடும் வைத்தியரை அனுகியிருந்தனர். 

பெறுபேறை பார்வையிட்ட வைத்தியரோ “குழந்தைங்க நல்லா ஹெல்தியா இருக்காங்க. இதுக்கு அப்புறம் அம்மா அப்பா நல்லா பேசுங்க. நல்ல நல்ல கதைகள் சொல்லுங்க. பாட்டு கேளுங்க.   எப்பவும் பாசிட்டிவ் திங்கிங்ல இருங்க. பழங்கள் நிறைய சாப்பிடுங்க. அதிகமா தண்ணீ குடிங்க, பால் சாப்பிடுங்க. 

உங்களுக்குக் கண்டிப்பா நார்மல் டெலிவரி ஆகாது, சிசேரியன்தான். அதுவும் முப்பத்தியாறு வாரம் முடியும்போது பேபிஸ்ஸோட கன்டிஷன்ஸ் பார்த்துட்டு ஆப்ரேஷனுக்கு எடுப்போம்” என்று எடுத்துரைத்தார் வைத்தியர்.

“ஏன் டாக்டர் நர்மல் டெலிவரிக்கு எடுக்க முடியாதா?” என்று பயத்துடனும் உடல் நலத்தை எண்ணியும் கேட்டாள் பியானா.

“உங்களோட ப்ரெக்னன்ட்சி மெதட் சோ கிரிடிகல். இந்த மாதிரி பேபி ஃபார்ம் ஆகுறது ரொம்ப கம்மி. அதும் இல்லாம ரெண்டு பேபிக்கும் எல்லாமே தனி தனியா இருக்கு. நாப்பது வாரம்வரைக்கும் உங்க வயிறு தாங்காது. பேபிஸ்ஸூக்கு இடம் போதாமா போகும். சிசேரியன் பண்றதுதான் நல்லம்”

“ஓகே டாக்டர். பேபிஸ் நல்லபடியா பொறந்தா போதும்” 

“ம் மெடிசின் கன்டினியூவ் பண்ணுங்க” 

“ஓகே டாக்டர் தேங்க்ஸ்” 

வைத்தியசாலையிலிருந்து கிளம்பி வெளிய வரும்போது புறஞ்சேயனுக்கு தெரிந்த தூரத்து சொந்தங்களில் ஒருவர் அவர் கண்டு “என்னப்பா உனக்கு ரெட்டை குழந்தையாமே!” 

“ஆமா மாமா” 

“சரிப்பா வைஃப கவனமா பார்த்துக்கோ, இப்படிதான் என்னோட நாத்தனாரோட பொண்ணு ரெட்டை குழந்ததான் கிடைக்க இருந்துச்சு. அதிகமா சாப்பிட்டு சாப்பிட்டு குழந்தங்க ரெண்டும் வெய்டு கூடிப்போச்சு.

ஒன்னு நாலு கிலோ, இன்னும் ஒன்னு மூனு கிலோ. வயித்துல இடம் பத்தாம வலி எடுத்து ஆஸ்பிடல் வந்தோம் கடைசில ஆப்ரேஷன் பண்ணிதான் எடுதாங்க. ஒரு குழந்ததான் பொழச்சுது ஒன்னு தவறிட்டு” என்றதும் பியானா புறஞ்சேயனின் கையை இறுகப் பற்றினாள். 

“மாமா நாங்க அவசரமா வீட்டுக்குப் போறோம். இன்னுமொரு நாளைக்கு பேசலாம்” என்று மெதுவாகத் தழுவினான். 

‘ச்சே! ஒரு புள்ளத்தாச்சி பொண்ணுக்கிட்ட என்ன பேசனும்கூட தெரிய மாட்டீங்கிது’ மனதில் கருகிக்கொண்டான்.  

“நீ எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத பியூமா” 

“அந்த குழந்த பாவம் சேய்யூ. மனசே ஒரு மாதிரி சங்கடமா இருக்கு” 

“இப்போதான் சொன்னேன் அதைப் பத்தி எதும் நினைக்காதனு” 

“சிசேரியன் பண்ணா ரொம்ப வலிக்கும்ல சேய்யூ” 

“இல்லாடா அப்படி எல்லாம் வலிக்காது. நீ எதுவும் யோசிக்காதடா தங்கமே!” என்று அவன் தோள்களில் அவளைச் சாய்த்தான்.  

‘நீங்க என்னைய சமாளிக்கிறீங்க. எனக்குத் தெரியும்’

ஒரு குழந்தையை உலகத்திற்கு கொண்டு வருவது கடினமான செயல்தான் அச்செயலை பெண்கள் கடினம் என்று அறிந்தே துணிச்சலுடன் குழந்தையைப் பிரசவிக்கின்றனர். குழந்தை பெற்றெடுப்பது மறுபிறப்பு என்று தெரிந்தே சுகமாய் சுமக்கும், சுமந்த, சுமக்கவிருக்கும் அனைத்து தாயுள்ளங்களுக்கும் என் மாரியாதைக்குரிய தலை சிறந்த வீரவணக்கம்.(சல்யூட்)

‘என்ன ஜாதி மனுசன்னே தெரியல எம்பொண்டாட்டிய இப்படிக் குழப்பிட்டானே!” என்றவன் ஆத்திரம் தீரவில்லை. 

இவர்கள் வீட்டிற்கு வந்தது மாத்திரம், அவசர செய்தி கைபேசிகளிலும் தொலைக்காட்டிகளில் பரவியது. 

‘அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கினால் முடக்கம்’

“இனி எத்தன நாளைக்கு கெர்ஃபியூவ் போடுவாங்கனு தெரியலயே! அடுத்த ஸ்கேன் எப்போ பியூமா” 

“டூ மந்த்ஸுக்கு அப்பறம்தான் சேய்யூ” 

“எங்க, வீட்ல யாரையும் காணோம். மழை வேற பெய்ய ஆரம்பிச்சுட்டு” 

“மாமா, பாட்டியும் அக்காவும் அம்மாவ வீட்டுக்குப் போய்த் தேவையான திங்கஸ் எடுத்துட்டு வாரோம்னு போனாங்க” 

“ஐய்யோ லாக்டவுன் போட்டாங்களே! மறுபடியும் எப்படி வருவாங்க” என்று ஒரே குழப்பம் புறஞ்சேயனுக்கு.

“அக்காக்கு வேற டூ மந்த்ஸுல ஆர்ட் சர்ஜரி” என்றாள் பியானா. 

“பார்க்கலாம் டூ மந்த்ஸ் இருக்குல. பியூ அங்க பாரு ஒரு கோழியும் சேவலும் மழைக்கு நம்ம வீட்டு வாசல் பக்கம் ஒதுங்கியிருக்கு” 

“பாவம் சேய்யூ, இப்போ கதவ திறந்து விடுங்க. நைட்டு தூங்குறதுக்கு சின்னப் பாக்ஸ் மாதிரி செஞ்சி வைங்க. அப்படியே நைட்டு தூங்கவும் பழகிரும்” 

அவள் கூறியது போல் வீட்டில் இருந்த சிறு சிறு கம்பிகளையும் கட்டைகளையும் இணைத்து ஒரு கூடு செய்தான். காலை எழுந்து சேவல் கூவி, கோழி கொக்கரித்து அனைவரையும் எழுப்பி விட்டு மேய்ச்சல் முடிய மாலை வந்து ஆறு  தஞ்சமடைந்துக் கொள்ளும். இதையே வழமைப்படுத்திக் கொண்டது.    

இப்போதெல்லாம் குழந்தைகளின் அசைவு அதிகரித்துதிருந்தது. புறஞ்சேயனின் குரலிற்கு நன்றாகவே அசைவு கொடுக்கும். 

“பியூமா சாப்பிடலாமா?”

அவளோ வயிற்றில் கையை வைத்துக்கொண்டு, ” மறுபடியும் சொல்லுங்க சேய்யூ” 

“பியூமா சாப்பிடலாமா?” என்று மீண்டும் கேட்டான். 

“இங்க பாருங்களேன். சாப்பிடலாமானு கேட்டதும் ரெண்ட பேர்ட தலையையும் ஆர்டு ஷேபுல ஜாயின் ஆகியிருக்கு பாருங்க. முட்டிக்கிட்டு வாராங்க” 

“அழகா இருக்கு, நம்ம எடுக்குற பெஸ்ட் பிக்  இதுதான் இந்த ஹியருக்கு. இப்போ இப்படிதான் வாருங்க. வெளிய வந்ததும் சாப்பாட எடுத்துட்டு அவங்க பின்னாடி ஓடப்போற” 

“பார்க்கலாம் சேய்யூ, இப்போ ரெண்டுபேருக்கும் பசிக்குது போல சாப்பிட போகலாம் வாங்க”  உணவு புகட்டிவிட ஆரம்பித்தான். 

“தங்கமே சாப்பாடு நல்லாயிருக்கா?” என்று ஆசையோடு வினவினான் அவன்.

“கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்டா இருக்கு சேய்யூ” 

“நல்லா இருக்கா இல்லயா? அத மட்டும் சொல்லு” 

“பரவாயில்ல நல்லாதான் இருக்கு” 

“சாரி டா, நாளைல இருந்து இன்னும் நல்லா சமைச்சு தாரேன்” 

“நீங்கதான் சமைச்சிங்களா! உங்களோட லவ் ரொம்ப டேஸ்டா இருக்கு சேய்யூ. நான் கொடுத்துவச்சவ” 

“அப்படிலாம் இல்ல. உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நான்தான் கொடுத்து வச்சிருக்கனும்” 

“இல்ல சேய்யூ நான்” அவள் கூற்றை கூறி முடிக்கவில்லை. அவன் முந்திக்கொண்டான். 

“வாயமூடிக்கிட்டு சாப்பிடு இல்ல, மறுபடியும் வந்து முட்ட போறாங்க” 

“ம்” என்று சிறிது நேரம் உணவில் கவனம் செலுத்தினாள். 

“போதும் சேய்யூ சாப்பிட முடியல” 

“இன்னுங்கொஞ்சம் சாப்பிடு பியூ,  நீ சாப்பிட்டது என்னாதுக்கு பத்தும். ஒரு ஆளுக்கே பத்தாதது. இன்னும் ஒன்னு பாவம்ல” அதற்கு பின்னர் இரண்டு மூன்று வாய் சாப்பிட்டவள் உண்மையாகவே அவளால் முடியவில்லை. 

“போதும் குமட்டுது”

அவள் செய்கையில் பதறியவன், “சரி சரி போதும் டா” என்று கூறிவிட்டு, அவன் கையை கழுவி அவள் வாயை துடைத்துவிட்டான். 

“ஒரு மாதிரி இருக்குனு சொன்னல கொஞ்சம் வீட்டுக்குள்ளேயே நடக்குறியா” என்று அவள் கையை பிடித்து அவளுடன் மெதுவாக நடையிட்டான் நாட்கள் வேகமாக ஓடியது. 

இப்போது ஒரு குழந்தைக்கு இருபத்தெட்டு வாரம் ஆரம்பமாகியிருக்க, மற்ற குழந்தைக்கு இருபத்தேழு வாரமும் மூன்று நாட்களும். 

பாட்டி அழைப்பபை விடுத்தார் புறஞ்சேயனுக்கு, “பியானாவுக்கு ஏழாவது மாசம் ஆரம்பிச்சுட்டு எங்களாலயும் வரமுடியல. இங்க லக்ஷதாவும் ஆப்ரேஷன் பண்ணிட்டு இருக்கா, அதுனால ஒன்பதாவது மாசம் வளைக்காப்பு விடலாம்னு சொல்லிரு புறா” என்றார் முத்தாயி பாட்டி.

“சரி அப்பாய், அப்படியே பண்ணலாம். பியானாக்கிட்ட சொல்லுறேன்” பியானவிடம் கூற, அவளும் சரி என்றாள். 

அக்கம் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் பியானாவின் வயிற்றின் பருமனை பார்த்து குழந்தைப்பிறப்பதற்கு திகதி சரியா என்று கேட்க தொடங்கினர். 

நித்தி சமையல் வேலையை கவனமாய் பார்த்துக்கொண்டாள். வீட்டு வேலை பார்ப்பதற்கு ஒரு பணிப்பெண்ணை நியமித்துக்கொண்டனர். 

மீண்டும் ஊடுகதிர் பரிசோதனைக்கு செல்ல, ஒரு குழந்தைக்கு மேல் இன்னும் ஒரு குழந்தை இருப்பதாகவும், மேலுள்ள குழந்தையை மட்டும் பார்க்க, கீழுள்ள குழந்தை மறைந்திருப்பதாகவும் வைத்தியர் தெளிவுபடுத்தினர். 

“கொரோனா தொற்று அதிகமா இருக்கதால, நெக்ஸ்ட் கிளினிக் எப்போனு சொல்ல முடியாது. எதும் வருத்தம் வந்தா உடனே வாங்க. அடுத்த ஸ்கேன்ல மத்த பேபி தெரியலனா உங்கள எட்மிட் பண்ண வேண்டிவரும்” 

வைத்தியர் கூறியதற்கெல்லாம் இருவரும் தலையை ஆட்டினர். 

அடுத்த இரண்டு மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வாங்கிவிட்டு கிளம்பினர். 

“எவ்ளோ சேட்டை பண்றாங்க இப்பவே, வயித்துக்குள்ள இருந்து கண்ணாமூச்சி விளையாடுறாங்க பாரு” 

“பேபிஸ் அசையும் போது சரியா வந்துரும் சேய்யூ” 

கொரோனா அதிகமாக பரவத்தொடங்க, கர்ப்பிணிக்களுக்கு பரிசோதனை நாட்கள் தள்ளிப்போடப்பட்டது.

அதனால் வேர்லின் அவ்வப்போது பியானாவின் உடல் நிலையை பரிசோதிப்பாள். 

இன்றிரவு உணவருந்தி நடைப்பயிற்சி முடிய வயிற்றை தடவி முத்தமிட்டுக்கொண்டிருந்தனர் இருவரும். 

“அம்மாவ கஷ்டப்படுத்தாம சுகப்பிரசவமா ரெண்டு பேரும் பொறக்கனும்” என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டிருந்தான் புறஞ்சேயன். 

“நீங்க சும்மா இருங்க சேய்யூ. எப்படியாவது நல்லபடியா பொறந்தா போதும்” என்று பியானா நாற்காலியில் அமர்ந்து ஜன்னல் வழியே, அடங்காத ஆழிவாய் சத்தத்தை இரசித்துக்கொண்டிருக்க,  புறஞ்சேயனோ தரையில் அமர்ந்து பியானாவின் வயிற்றை முழு நிலவென இரசித்துக்கொண்டிருந்தான். 

திடீரென்று பியானா அடிவயிற்றை பிடித்து, “சேய்யூ” என்று முக்கி தக்கி, “வலிக்குது. ஆ” என்று கத்தினாள். 

“இன்னையோடதான் தேர்ட்டிஒன் வீக், பயப்படாத இன்னும் ஒன் மந்த் இருக்கு” என்று கையை இறுக்காமாப் பற்றினான். 

வலி திடீரென காணாமல் போனது. நன்கு உறங்கிக்கொண்டிருக்க, விடியற்காலை மணி மூன்று. 

பியானாவின் இடுப்பின் நடு எலும்பில் சுருக்கென்று ஒரு வலி, “ஆ, சேய்யூ” என்று அவள் சத்தமிட்டாள். 

திடுக்கிட்டு எழுந்தவன், “என்னாச்சு மா, ரொம்ப வலிக்குதா?” 

“இடுப்புல யாரோ அடிச்சா மாதிரி இருந்துச்சு” என்றவள் முகம் வியர்க்க ஆரம்பித்தது. 

வியர்வையை துடைத்துவிட்டவன், வேர்லினை அழைத்து வந்தான். 

வேர்லினோ உண்மையை கூறாமல், “ஜஸ்ட் பெயின்தான் ஆஸ்பிடல் போகலாம்” என்று கூறும் போது மணி மூன்றரை தாண்டியிருக்க, பியானா எழுந்து நடக்கமுடியாமல் வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். 

புறஞ்சேயனின் மனம் தாளாமல் அவளை தூக்க செல்ல, “மாம்ஸ் இது ஒன்னும் ஃப்லிம் கிடையாது. 

தூக்கும் போது அக்கிக்கு பேக் பெயின் கூடும். இன்னும் ஒன்னு உள்ள இருக்கது ரெண்டு பேர். தூக்கும்போது வயிறு இறுக்கமாகும். குழந்தைங்களுக்கு கஷ்டமா இருக்கும். சோ அக்கிய நடக்க வைக்கிறதுதான் நல்லம்” என்று மெதுவாக நடக்க சொல்ல, பியானாவிற்கோ ஓட வேண்டும் என்பது போல் இருந்தது. 

அளவான வேகத்தில் சீருந்தை செலுத்த ஆரம்பித்தான். ஊரடங்கின் காரணமாக வாகன நெரிசலோ சன நெரிசலோ தெருவில் இருக்கவில்லை அதனால் இலகுவாக மருத்துவ மனையை அடைந்தனர். 

பியானா வலியில் துடிதுடித்தாலும் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்ட பின்னரே அதிதீவிர பிரிவில் அனுமதித்தனர். 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!