💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiMLJOM20829-7308800b

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு -14

“இறைவன் நமக்கு கஷ்டங்களை அளிக்கும் போது நம்மை அவர் தனியாய் விடுவதில்லை நாம் அதைக் கடந்து வரப் பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள் முக்கியமாக நண்பர்கள் அனைவரையும் நமக்காய் கொடுத்துள்ளார். இதில் யாரவது ஒருவர் நம் மேல் கோவமாய் இருந்தாலும் மற்றவர் உதவுவர்”.

“தியா என்ன சொன்னாள்”, எனக் கேட்டு தங்கையின் முகத்தை ஆவலாய் பார்த்தான் ஷ்யாம்.

அவ ரொம்பலாம் யோசிக்கில “எனக்கு ஒருத்தரப் பாக்கும் போது என்ன பீல் வருதோ அத எக்ஸ்பிரஸ் பண்ணிடுவேன் அருண் அண்ணாவைப் பாக்கும் போது அண்ணனு சொல்ல தோணுச்சு”.

“ராஜ் அண்ணாவைப் பாக்கும் போது கூட பொறந்த அண்ணா பீல் அதான் அவரையும் அண்ணனு சொல்லிடேன்”.

“என் லைப்லயே இவர எப்படி கூப்பிடனு என்னை குழப்புனது ஷ்யாம் தான்”.

“அவர பார்த்தபோது அண்ணனு சொல்ல தோணல எப்படி கூப்பிறதுனு தயக்கத்திலே இருதேன். அப்புறம் ஒருநாள் அவரே ஷ்யாம்னு கூப்பிட சொன்னார். நானும் அப்படியே பழகிட்டேன் அவளோ தான் வேற ஒன்னும் இல்லை”.

இவ்வாறு தியா கூறியதை தன் அண்ணனிடம் பகிர்ந்துக் கொண்டாள் வர்ஷு.

ஷ்யாமின் நினைவு பின் நோக்கிச் சென்றது.

ஒரு நாள் தியாவும் ஷ்யாமும் பேசிக் கொண்டிருக்க, “நீ ஏன் எப்ப பாரு என்னை தயக்கமாவே கூப்புடுற”.

“உங்களை என்னனு கூப்பிட என்ன விடப் பெரியவர் சோ பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது”.

‘ஏன் பேர் சொல்லி கூப்பிடக்கூடாதென்று எதாவது சட்டம் இருக்கா என்ன”.

“இல்லை தான்”.

“அப்போ என் பேர் சொல்லி கூப்பிடு”.

”அது….” அவள் தயங்க,

”இப்போவே என் பேரை சொல்லு”, என விடாப்பிடியாய் அவளைச் சொல்ல வைத்திருந்தான்.

அதை எண்ணி சிரித்துக் கொண்டான் ஷ்யாம்.

“என்ன அண்ணா சிரிக்கிற”.

”ஒன்னும் இல்லடா”.

“வர்ஷு, ஷ்யாம் டீ குடிக்க வாங்க”, என்ற தங்கள் அன்னையின் அழைப்பில் கீழே சென்றனர் இருவரும்.

மறுநாள் கல்லூரியில்….

”எங்கடி போறீங்க….”

”மேம் கூப்பிட்டாங்க தியா போய்ட்டு வந்துடுறோம்”.

”நானும் வரேன்”.

”எங்க இரண்டு பேரைத் தான் கூப்புட்டாங்க, நீ நான் சொன்னேன்ல அந்த சம்மை டாலி பண்ணிவை”.

“சரி போங்க”.

“அப்பாடா, இவகிட்ட இருந்து எஸ் ஆகப் படிப்ப தான் துணைக்குக் கூப்பிட வேண்டியதா இருக்கு”.

“இதுக்கு நேத்து போன்லையே பேசி இருக்கலாம்ல’, என வர்ஷு கேட்க.

“சாரிடி கொஞ்சம் பிஸி….”

‘அருண் அண்ணா கூட கடலையைத் தானே வருத்த”.

“ஈஈஈ….. ஆமாடி, நீ மெசேஜ் பண்ண வேண்டியது தானே”.

“இவ போன் அட்டென்ட் பண்ண மாட்டாலாம் நான் மட்டும் மெசேஜ் பண்ணுமாம்…. போவியா”.

”சரி சரி அத விடு நான் சொன்ன வேலை என்ன ஆச்சி”.

“நீ சொன்னது கரெக்ட்டுடி”.

“ம்…எனக்குத் தெரியும் உங்க அண்ணா என்ன சொன்னாங்க”.

“எதுவும் சொல்லலை சிரிச்சான்”.

 “எதுவும் சொல்லலையா…..”.

 “இல்லை, ஆன முகத்தில் தோஸண்ட் வாட்ஸ் பல்பு எரிந்தது….”.

“எரிந்ததா…. இவ என்னடானா அண்ணானு சொல்ல தோணலன்றா அவரு என்னனா இவளை வெச்ச கண்ணு வாங்காம பாக்குறாரு”.

“நீ எப்போ பார்த்த”.

 “அன்னைக்கு பீச்யில் மாமா சோளம் வாங்க போனாரு, தண்ணி பாட்டில் எடுக்க வந்தேன், பாத்தா…. உன் அண்ணன் தியாவ வெச்ச கண்ணு வாங்காம பாக்குறாரு. பாட்டிலைக் கூட எடுக்காம போய்ட்டேன்”.

“இவளோ நாள் நான் நோட் பண்ணலடி, நேத்து தான் அண்ணாவ நோட் பண்ணேன் தியா ஏன் அண்ணனு சொல்லலைனு தெரிந்துகொள்ள அவளோ ஆர்வமா பார்த்தான். ம்…இதுலாம் எங்க பொய் முடியப்போகுதோ”.

“காதல்ல தான்”.

“அப்படியா சொல்ற அவங்க அப்படி பீல் பன்றா மாதிரி தெரியலையே. ஒருவேளை அண்ணா சும்மா பாத்து இருக்குமோ, தியாவும் நார்மலா தான் அண்ணனு சொல்ல தோணலைனு சொல்லிருப்பாளோ”.

”சரியான மரமண்டைடி நீ. அதுங்க தான் புரியாம இருக்குங்கனா நீயும் லூசுதனமா பேசிகிட்டு”.

”சரிடி திட்டாத”.

”ம்…இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை சரி வா நம்பல தேடி வந்துடப்போறா”.

நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

ராஜ் அவன் ட்ரைனிங்கை திறமையாய் முடித்து ட்ரைனிங்கில் முதலாவதாக வந்தான். எனவே அவன் கூறியது போல் முதலாவது வந்ததால் அவன் கேட்ட சென்னையிலேயே போஸ்டிங் கிடைத்தது இப்போது அவன் சென்னை நகரத்தின் ஏசிபி.

ஷ்யாம் கம்பெனி நிர்வாகத்தில் முன்பு பயில வந்ததை விட இப்போது அதிகம் காற்றிருந்தான். எனவே வியாபாரத்தை திறமையாய் கையாண்டு வந்தான்.

அருண் தன் பிசினஸ் துவங்கி இருந்தான். அவன் பிசினஸ்க்கு தேவையான பலசரக்குக்கள் அடுக்க ஒரு குடோன் அதை கண்காணிக்க ஆட்கள். குடோன்க்கு மேலேயே ஆபீஸ் கஸ்டமர் சர்வீஸ்காக டெலிகம்யுனிகேஷன்(telecommunication) டிபார்ட்மென்ட் அதில் இப்போதைக்கு நான்கு பேர் கால்ஸ் பேச இருந்தார்கள். அவன் பிசினஸ் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. மசாலா பொருட்கள், டீ மற்றும் காபி போன்றவை ஷ்யாம் தருவதாகக் கூற முதலில் மறுத்தவன் அதற்கான தொகையைச் சரியாய் வாங்கி விடுவேன் என்றதும் ஒத்துக்கொண்டான்.

பெண்கள் மூவரும் தங்கள் கல்லூரியின் இறுதி நாட்களில் இருந்தார்கள்.

நண்பர்கள் வாரவாரம் எங்காவது வெளியில் செல்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

வெளியில் போகமுடியாத நிலைமையில் யாராவது ஒருவரின் வீட்டிற்குச் சென்று ஒன்றாய் நேரம் செலவழிப்பதை வழமையாக்கி இருந்தார்கள்.

அவ்வாறே அந்த வாரம் அவர்கள் கூடியிருந்த இடம் ஷ்யாமின் இல்லம்.

தோழிகள் மூவரும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

ராஜின் பார்வை அடிக்கடி வர்ஷு விடம் சென்றது தன் மனது என்ன தான் நினைக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருந்தான் அந்த போலீஸ்காரன்.

(நீயாச்சி ஆராய்ச்சி பண்றியே சந்தோசம்ப்பா)

வர்ஷு தன் அண்ணனின் வழி பின்பற்றி தங்கள் கம்பனிக்கு போகவில்லை. அதன் காரணம் அங்கே அவளை முதலாளியாய் பார்ப்பார்களே தவிர அவளால் தன் ப்ராஜெக்ட்டை சுதந்திரமாய் செய்ய முடியாது.

வர்ஷுவின் கருத்தை ஷ்யாமும் ஆதரித்தான். அவனும் அதே காரணத்தை முன்நிறுத்தித்தான் அவர்கள் கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்யவில்லை, எனவே தன் உடன் பயின்ற நண்பனின் கம்பெனிக்கு அவளைப் போக சொன்னான்.

மித்து அருணின் கம்பெனி செல்ல, தியா தான் பாக்கி.

தியா நீ எங்க போற ஐடியால இருக்க.

அவளை முந்திக் கொண்டு மித்து கூறினாள், “அது தான் இன்னும் தெரியலண்ணா அவ எடுத்து இருக்கறது பைனான்சியல் டாபிக் எந்த கம்பெனிலயும் அவளோ சீக்கிரம் அதுக்கு அனுமதி கிடைக்காது”.

“ஏன் கிடைக்காது நம்ப கம்பனிக்கு போ தியா. அங்க யாரு உன்ன என்ன சொல்ல முடியும், அண்ணா பாத்துப்பான்”. தன் அண்ணனை பார்த்து, “என்ன அண்ணா அப்படி தானே”.

அவனுக்கு என்ன கசக்கவா செய்யும் தனக்கு பிடித்த பொம்மை கைக்கு வந்த சிறு குழந்தையின் குதுகலத்தில் இருந்தான். “கண்டிப்பா நான் பாத்துக்குறேன் தியா நீ வா”.

( நீ எப்படி பாப்பனு எங்களுக்கு தெரியாது)

தியா தயங்கினாள். ஆனால் ஷ்யாமா விடுபவன் ஏன்னென்னவோ பேசி அவளை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டான்.

அவனின் செயலில் மித்துவும் வர்ஷுவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் 48 நாட்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கம்பெனி சென்று ப்ராஜெக்ட் செய்வதற்கு என ஒதுக்கியது.

ஷ்யாமிற்கு கொண்டாட்டமாக இருந்தது கிட்டதட்ட ஒன்றரை மாதம் அவள் அந்த அலுவலகத்தில் (அவனுடன்) செலவழிக்கப் போகிறாள்.

ராஜ் தினமும் தியா வீடு வந்து செல்வதும் வழமையாகி இருந்தது. அந்த குடும்பத்தில் அவனும் ஒருவனாகி இருந்தான்.

லட்சுமி ராமச்சந்திரன் அவனை தங்கள் சொந்த மகனைப் போல் பார்க்க அவனுக்கும் இங்கே வருவது நிறைவாய் இருந்தது.

எப்போதும் வேலை முடித்து நேராய் இங்கே வந்து விடுவான். லட்சுமியும் அவனுக்குக் காபி கூடவே ஏதேனும் பலகாரம் செய்து வைப்பார். இரவு உணவும் அவனிடம் கொடுத்தனுப்பி விடுவார்.

தியாக்கு ராஜைப் பார்க்கும் போதே தன் உடன்பிறந்தானைப் போல் ஒரு உணர்வு தோன்றியதால் இப்போது இன்னும் அவர்கள் உறவு மேம்பட்டு இருந்தது. எந்த ஒளிவு மறைவும் இன்றி பேசத் துவங்கி இருந்தனர்.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் ராஜ் தியா வீட்டிற்கு வந்திருந்தான்.

வழக்கம் போல் லட்சுமியிடம் செல்லம் கொஞ்சி அவர் செய்து வைத்ததை உண்டு தியாவைக் காணப் மொட்டை மாடி நோக்கி சென்றான்.

“என்ன தியாம்மா இங்க தனியா என்ன பண்ற”.

“சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன் அண்ணா”.

“உனக்கு இன்னைக்கி வேலை எப்படி போச்சி”.

“வழக்கம் போலத் தான் எல்லா ஸ்டேஷன் எஸ். ஐ கிட்டயும் ரிப்போர்ட் வாங்கினேன் புதுசா ஒன்னும் இல்லை அதே கேஸ்கள் தான்”.

“ம்…..”

“சரி உனக்கு காலேஜ் எப்படி போச்சி”.

“உன்ன மாதிரி தான் அதே காலேஜ் அதே லெக்சரர் அதே மித்து அதே வர்ஷு”.

‘வர்ஷு இப்போ பரவால்லையா அந்த விடயத்துல இருந்து வெளியே வந்துட்டாளா”.

“முழுசா வந்துட்டாள்னு சொல்ல முடியாது. ஆன முன்னைக்கி இப்போ ஓகே”.

“ம்….”

“அண்ணா நான் ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டியே”.

“சொல்லுடா நான் ஏன் உன்ன தப்பா நினைக்க போறேன்”.

“இப்போ தான் நீ வேலையில் செட்டில் ஆகிட்டல”.

“ஆமா”.

 “அப்புறம் உனக்குனு ஒரு லைப் அமைச்சிக்கலாம்ல”.

அவள் கூறவும் அவனுக்கேன்று ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க அதில் அவன் சரிப்பாதியாய் தெரிந்தது வர்ஷா தான்.

அந்த நினைவில் அவன் முகம் பிரகாசித்தது. இது நடக்குமா எனப் பல விடயங்கள் யோசித்தவன் சோர்ந்தான்.

தன் அண்ணனின் முகத்தில் வந்த கலவையான உணர்வை கண்டவளுக்கு ஒரு சந்தேகம் அதை கேட்டும் விட்டாள்.

தங்கை திடீரென இப்படிக் கேட்பாள் என எதிர்பார்க்காதவன் ஏதும் பேசாமல் அவளையே பார்த்திருந்தான்.

அவள் பல கேள்விகள் கேட்டாள். ஷ்யாமையும் அழைத்தாள்.

ஷ்யாம் தன் நண்பனை பார்த்து “ஏன் இப்படிச் செய்தாய் நான் உன்னிடம் இதை எதிர்பார்க்க வில்லை”, என்றதும் அடிபட்டுப் போனான்.

பிறகு நடந்தவை அனைத்தும் அவன் எதிர்ப்பாக்காதவை.

ஒரு நாள் அவனுக்கு ஒரு கால் வந்தது அதன்படி அவன் ஒரு முக்கிய இடத்திற்கு வந்திருந்தான்.

அவன் மட்டும் அல்ல லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும் இருந்தனர். அவர்கள் மட்டுமா அவர்கள் வீட்டுப் பெரியவர்களும் தான்.

அவர்கள் எங்கே இருந்தார்கள்? எதற்காகச் சென்றார்கள்?

( என்ன நடந்தது….. அதை அடுத்த எபில பாக்கலாம். இப்போ….. பை…பை)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!