💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு 30

காதலில் சிறு பிரிவு கூட, மனதை பாதிக்கின்றது. அதுதான் காதலின் சக்தியோ?

காரில் இப்பொழுது அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அதை கலைத்தது ஷ்யாமின் குரல்,

“தியா…”

“ம்…”

“என்ன பாரு…”

“ம்கூம்…” இடம் வளமாக தலையாட்டி மறுத்தாள்.

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஃபால் சாரி. நான் வேணும்னு பிளான் பண்ணி பண்ணலை…இட் வாஸ் அன் ஆக்சிடென்ட்…”

“தப்புதான், நீ…ரெடியாயி… இருப்பனு நினைச்சு….தான் நான் வந்தேன்…சாரி”, என தயங்கி தயங்கி கூறினான்.

“இன்னும் ஒன் வீக் தான் நீ ஆபீஸ் வருவ, உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் தானே, நான் இந்த மாதிரி உன்ன பிக்கப்  டிராப் பண்ணலாம்னு   யோசிச்சேன்.”

“நீ இப்படி அமைதியா இருந்தா,  நான் என்ன பண்ணட்டும்?” கேள்வியாய் நிறுத்தினான்.

“ஐ ப்ரோமஸ் யூ, நான் இதை பத்தி உன்கிட்ட எதுவுமே இப்போதைக்கு பேச மாட்டேன் ஓகே வா.”

“ம்…”

“என் மேல கோவமா உனக்கு…”

“இல்ல என் மேலயும் தப்பு இருக்கு, நான் தாழ் ஒழுங்கா போட்டு இருக்கேன் நினைச்சு தான் போனேன்.”

“சரி அத பத்தி பேச வேணாம் விடு, இப்ப நடந்தது அப்படியே மறந்துடு. நம்ம எப்பவும் போல இந்த ஒன் வீக் ஜாலியா ஸ்பென்ட் பண்ணனும் ஓகே.”

‘ம்…’

“இப்படியே நீ ‘ம்’ கொட்டிட்டே இருந்தனா எப்படி?, வாயை திறந்து பேசு.”

“சரி நான் இதை மறந்துடுறேன்.”

“தட்ஸ் குட், சரி இப்ப ஆபீஸ் போலாமா.”

அவளும் சிரித்துக் கொண்டு ‘சரி’ என்று தலையாட்டினாள்.

அவளை சங்கடப்படுத்த விரும்பக் கூடாது என்று தான் இப்பொழுது இவ்வாறு பேசியது, ஆனால் அந்த விஷயம் அவன் மனதில் எந்த அளவு பதிந்தது என்பது பாவைக்கு பின்னாளில் தெரியவரும்.

அதன் பின் இருவரும் பேசி கலகலத்துக் கொண்டு, ஆபீஸ் நோக்கி பயணப்பட்டார்கள்.

இன்னும் ஒருவருக்கொருவர் காதல் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் ஒருவர் மீது மற்றவருக்கு வந்த ஈர்ப்பு காதலால் தான் என்பதை அவரவர் புரிந்து கொண்டார்கள்.

ஒருவர் மீது மற்றவருக்கு காதல் இருக்கிறது என்பதும், அவர்களுக்கு புரிந்துதான் இருந்தது. எப்பொழுது தான் அதை வாய்மொழியாய் கூறுவார்களோ?

***

வர்ஷாவுக்கும் ப்ராஜெக்ட் வொர்க் முடிக்க வேண்டியது இருந்தது. அவளின் அண்ணனின் நண்பன் கம்பெனிக்கு செல்லும் வழியில் தானே இந்த ஆக்சிடென்ட் நடந்தது.

‘இந்த உடைந்த கையுடன் வெளியில் தினமும் சென்று திரும்புவது சரிப்பட்டு வராது” என ராதா கூற அவளுக்குமே அது சரியென பட்டது.

எனவே, அவர்கள் கம்பெனியிலேயே ப்ராஜெக்ட் செய்ய முடிவெடுத்தாள்.

இவளுக்கு தேவையானதை ஷ்யாமும் தியாவும் ஆபீஸிலிருந்து வீட்டிற்கே எடுத்து வந்து தந்தனர்.

இவ்வளவு நாட்கள் எப்படியோ அவள் அன்னையின் உதவியுடன் சிறிது சிறிதாக, தன்  ப்ராஜெக்ட் வர்க்கை அங்கு செல்லாமலே முடித்தாள்.

அதை முழுவதுமாக கம்ப்ளீட் செய்ய, அனைத்தையும் ஒருங்கே சிஸ்டமில் அரேஞ்ச் செய்து கொண்டிருந்தபோது, அவளின் பேசிக்கு கால் வந்தது. ராஜ் தான் அழைத்தான்.

“ம்…சொல்லுங்க”

“என்ன ஏதாச்சும் வேலையா இருக்கியோ.”

“ஆமா, அந்த ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாத்தையும் சும்மா அரேஞ்ச் பண்ணிட்டு இருக்கேன்.”

“அத்தை இல்ல?”

“இல்ல அம்மா சமைச்சுட்டு இருக்காங்க. ஜஸ்ட் சும்மா அரேஞ்சிங் தானே அதான் பாத்துட்டு இருந்தேன்.”

“எதுக்கு தனியா இந்த கைய வச்சிட்டு பண்ணனும், அத்தை வந்த பிறகு பண்ணலாம் இல்ல”

“நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை அப்படியே சோம்பேறி ஆக்கிடுவீங்க போல இருக்கே, லெப்ட் ஹாண்ட் தானே பிராப்ளம், நான் ரைட்ல தான் பண்ணிக்கிட்டு இருக்கேன் அதுல என்ன ஆயிட போகுது?”

“சரி சரி ரொம்ப சின்சியரா பண்ற, பண்ணு பண்ணு. அப்புறம் பதினோன்றரைக்கு ஷார்ப்பா ரெடியாயிடு நான் வந்துடறேன்.”

“எதுக்கு?”

“எதுக்கா இன்னைக்கு செக்கப்க்கு போகணும் இல்ல மறந்துட்டியா”

“ஆமா இல்ல, மறந்தே போச்சு”

“நல்லா மறந்த போ, சரி சரி ரெடியாயிடு எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு,   அங்க வந்துடு பேசுறேன்”

“ஓகே டன்.”

அவள் அன்னையின் உதவியுடன், இவள் தயாராகிக் கீழே செல்லவும் அவன்  வரவும் சரியாக இருந்தது.

பின் ராதாவிடம் கூறிக்கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.

ஹாஸ்பிடல் சென்று சேரவும் காரை பார்க்கிங் லாட்டில் விட்டு விட்டு, வர்ஷாவை நெருங்கினான் ராஜ்.

“அதில் மிரண்டவள் எ…என்ன பண்றீங்க” என்றாள் வார்த்தைகள் தந்தி அடித்தது.

இருக்காதா பின்னே? அன்று அவன் எழுதிய இதழ் கவிதைக்கே பெண் இரவெல்லாம் உறங்கவில்லை.

அவளின் இந்த ரியாக்ஷனில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவள் முக பாவத்தை ரசித்துக்கொண்டே, அவளின் தோள்பட்டையாடே கைகள் எடுத்துக் கொண்டு செல்ல…

இவள் நெளிந்தாள்.

ஸ்லீவ் வைத்த டிரஸ்கள் கைகளுக்குள் நுழைத்து போட கஷ்டமாக இருப்பதினால், அவள் அம்மாவின் உதவியுடன் சோல்டரில் லேஸ் வைத்த டிரெஸ்ஸை தான் அவள் அணிந்து கொண்டு வந்தாள்.

அதில் ஒரு புறம் லேஸ் கழண்டு இருக்க, அதை தான் ராஜ் கட்ட போனான்.

அதைக் கட்டியவுடன் “இதுக்கு இவ்ளோ ரியாக்ஷன்”, எனவும்.

இவள் ‘ஈஈஈ’ என்று இளித்து வைத்தாள்.

“இதுக்கே இப்படினா இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் வேற, என் பாடு திண்டாட்டம் தான் போல”, வாய் விட்டே முணுமுணு தான்.

அது காதில் நன்றாக விழுந்தாலும் விழாதது போலவே, ரியாக்ஷன் கொடுத்து இறங்கி விட்டாள்.

அவள் முன்பு அட்மிட் ஆகி இருந்த அதே ஹாஸ்பிட்டல் தான். ராஜிற்க்கு தெரிந்த அதே டாக்டர் தான்.

இவர்களைப் பார்த்தவுடன் நலம் விசாரித்தார்.

பின் அனைத்து செக்கப்களும் முடியவும், “எலும்பு நன்றாகவே கூடியிருக்கிறது இனி இவள் மெதுமெதுவாக இயல்பாக அந்த கையை உபயோகப்படுத்தலாம்”, என்று கூறினார்.

அவனுக்கு ரெண்டு மாதத்தில் திருமணம் என்று பேச்சு நடந்தாலும் இவளின் உடல்நிலை நினைத்து, அவன் சிறிது யோசித்துக் கொண்டுதான் இருந்தான். டாக்டர் இவ்வாறு கூறவும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தும், தெளிவாக ஒரு முறை டாக்டரிடம் விசாரித்துக் கொண்டான்.

“டாக்டர் இன்னும் டூ மந்த்ல மேரேஜ் பண்ணலாம்னு முடிவு, அவங்க ஹெல்த் நல்லா தானே இருக்கு ப்ராப்ளம் இல்லையே.”

“ஷி எஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட், அண்ட் கங்ராஜுலேசன் ஃபார் யூ மேரேஜ்.”

“தேங்க்யூ டாக்டர், இத நேர்ல வந்து சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்”.

“கண்டிப்பா எங் மேன்” என்று ராஜை பார்த்து கூறியவர்.

“யு ஆர் ரியல்லி லக்கி” என வர்ஷாவையும் வாழ்த்தினார்.

அதற்கு ராஜ் அமைதியாய் சிரிக்க, அவள் முகத்திலோ அப்படி ஒரு பெருமிதம் இவன் தன்னவன் என்று.

பின், இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பினார் அந்த டாக்டர்.

ராதாவுக்கு இவள் உடல் தேறி விட்டது என்று தெரிந்ததுதான் தாமதம், திருமணத்திற்கான வேலைகளை மடமடவென செய்ய தொடங்கினார்.

இன்னும் இரண்டு மாதத்தில் எது நல்ல நாள் என்று பார்த்து முதலில் திருமணத்திற்கு தேதி குறித்தனர். இரண்டு மூன்று தேதிகள் தேர்ந்தெடுத்து, அதில் எதை முடிவு செய்யலாம் என ராஜ் வீட்டுடன் சேர்ந்து ஒரு தேதியை தீர்மானித்தனர்.

இவர்கள் பெரிய ஆட்கள் என்பதால் நிறைய பேர் வருவார்கள் எனவே பெரிய மண்டபமாக புக் செய்தார். அதன் அருகில் இருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம்களையும் புக் செய்தார்.

கும்பகோணத்திலிருந்து தாத்தா வீரராகவன் பாட்டி மீனாட்சியம்மையும் வரவழைக்கப்பட்டனர்.

பெரியவர்களிடம் அனைத்து விஷயங்களும் கேட்டு கேட்டு ஏற்பாடு செய்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தியும் அழைப்பிதழ் அச்சடிக்க கொடுப்பது, பற்றி ராஜ் குடும்பத்தோடு கலந்து பேசி அச்சடிப்பதற்காக கொடுத்தார்.

யார் யாருக்கு கொடுக்க வேண்டும், என்பதை பற்றி ராதா லிஸ்ட் எடுத்தார். முதலில் சொந்த பந்தம், அதன்பின்  கம்பெனி, கம்பெனியின் போர்ட் ஆஃப் டைரக்டர் மற்ற தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஒரு லிஸ்ட்.

பின் அக்கம் பக்கத்தினர், பழகியவர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் ஒரு லிஸ்ட் தனித்தனியே ரெடி செய்தார்.

‘வர்ஷாவை அதிகமாக அலைய வேண்டாம்’ என்று கூறி வர்ஷாவுக்கான புடவைகள் அனைத்தும் இவரே எடுத்து வந்தார். முகூர்த்த புடவை  மட்டும் நல்ல நாள் பார்த்து ராஜ் குடும்பத்தோடு சேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.

ஷ்யாமும் தங்கைக்கு என்னென்ன தேவை என்று பார்த்து அனைத்தையும் வாங்கி தந்தான்.

அனைத்து வேலைகளிலும் ராதாவிற்கு தியாவும் உதவியாக இருந்தாள்.

***

இந்த ஒரு வாரம் தியாவுக்கும் ஷ்யாமுக்கும் மிகவும் நன்றாகவே சென்றது.

தியா ப்ராஜெக்ட் முழுமையாக முடித்துவிட்டு, அங்கிருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவ்வளவுதான் இன்றுடன் இந்த ஆபீஸில் அவளுடைய வேலை முடிந்தது, இனி இதன் பக்கம் அவள் வருவாளா? என்பது அவளுக்கு தெரியாது. ஒருபுறம் ஏனோ மனம் பாரமாக இருந்தது ஷ்யாமுடன் செலவழித்த இத்தனை நாட்களில், அவளின் மனதில் அவன் முழுவதுமாக நிறைந்திருந்தான்.

அவனுடன் இந்த மாதிரி சந்தோஷமாக கழிக்கும் தருணங்கள் மீண்டும் எப்பொழுது வரும் என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இவளுள் எழுந்தது. ‘இப்பொழுது இது முடியப்போகிறதே’ என்ற கவலையும் அவள் முகத்தில் தெரிந்தது.

ஷ்யாமும் அப்படித்தான் மதிய உணவு வேலை, எப்போதடா வரும் என்று காத்திருப்பான். அந்த சிறு அறை ‘இருவருக்கும் ஏதோ திருமணமாகி ஒரே வீட்டிலிருப்பது’ போன்ற நினைப்பை அவர்களுக்கு தந்தது.

கணவன் மனைவி ஒரு வீட்டில் இருந்தால் எப்படி இருப்பார்களோ அதேபோலத்தான் செல்ல சீண்டல்களும், சின்ன ஊடல்களும் நிறைய அக்கறையும் அன்பும் என அவர்களின் அனைத்து செயல்களையும் பார்த்து இருக்கிறது அந்த சிறிய அறை.

இப்படியாக அவர்கள் இருவருக்குமே மனதிற்கு மிகவும் பிடித்தமான அந்த அறையில், மதிய உணவுக்காக இப்பொழுது ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

இது நிரந்தர பிரிவல்ல என்பது இருவருக்கும் புரிந்தாலும், என்னவோ மனம் பாரமாய் தான் இருந்தது.

எப்பொழுதும் போல் ஒருவர் மற்றவருக்கு பரிமாறிக் கொண்டு உண்டனர்.

இப்படியே இருந்தால் நன்றாக இருக்காது என்று ஷ்யாம் தான் சகஜமாய் பேச்சு கொடுத்தான்.

“தியா…”

“ம்…”

“அப்புறம் ப்ராஜெக்ட் எப்போ சப்மிட் பண்ண போற, எப்ப வைவா?”

“என் ப்ராஜெக்ட் கைடு  கிட்ட, எல்லாமே சப்மிட் பண்ணி அப்ரூ வாங்கிட்டேன். பைனல் சேம்க்கு இன்னும் டூ விக்ஸ் தான் இருக்கு, சோ கண்டிப்பா நெக்ஸ்ட் வீக் வைவலாம் முடிச்சுடுவாங்க”.

“ம்…. அப்புறம் இது முடிச்சுட்டு என்ன பண்ணலாம்னு பிளான்”.

“இது பத்தி முன்னாடியே யோசிச்சிருக்கேன். ஹச்.ஓ.டி கிட்ட பேசும் போது டீச்சிங் லைன் போறதா இருந்தா எம்.காம் பண்ண சொன்னாங்க. இல்ல, கம்பெனிகள்னு போறதா இருந்தா எம்பிஏ பண்ண சொன்னாங்க. எனக்கு யோசனையா இருக்கு”.

“இதுல யோசிக்க என்ன இருக்கு எம்பிஏ பண்ணிடு.”

“அப்ப கம்பெனிக்கு வேலைக்கு போக சொல்றீங்க.”

“அதான் நம்ம கம்பெனி இருக்கே, நீ ஏன் வெளியே இன்னொரு கம்பெனிக்கு வேலைக்கு போகணும்.”

“நம்ம கம்பெனியா?”

“ஆமா இது நம்ம கம்பெனி தானே, இன்னும் டூ மந்த்ல ரிலேட்டிவ் ஆகப் போறோம் ஞாபகம் இருக்கா.”

அவள் இவனின் ‘மனைவியாக போகிறாள் என்ற ரீதியில் தான் அவன் பேசியது, இவள் இவ்வாறு கேட்கவும் வேண்டும் என்று ‘ரிலேட்டிவ்’ என்று கூறினான். பின் அவனே  தொடர்ந்தான்.

“ஓ!அப்போ மேல பி.ஜி பண்ற ஐடியா”

“ஆமா”

“அப்ப மேரேஜ் எப்போ?”

இப்படி அவன் கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் கண்ணில் குறும்பு மின்னியது.

உனக்கு நான் சலைத்தவள்  அல்ல என இவளும் “வீட்ல மாப்பிள்ளை பார்த்ததுக்கு அப்புறம்” என்றாள்.

“வீட்ல பாக்குற பையன் தான் கல்யாணம் பண்ணுவீங்களோ”.

“பின்ன”

“சரி விடு” என இவனும் முடித்து விட, இவளுக்கு சப்பேன்றானது இவன் அவனின் காதல் பற்றி, ஏதாவது கூறுவான் என்று தான் அவள் எதிர்பார்த்தாள்.

நீ ‘விடாகண்டன் என்றால் நான் கொடாகண்டன்’ என தான் இருவரும் நடத்துக் கொண்டது  ‘நீ சொல்லல நான் மட்டும் சொல்லணுமா’ என தன் மனதோடு பேசிக்கொண்டான் ஷ்யாம்.

***

நாட்கள் உசேன் போல்ட் வேகத்தில் சென்றது…

தியா, வர்ஷா, மித்து மூவருக்கும் வைவா முடிந்து, எக்ஸாம்ஸ்சும் முடிந்தது.

இன்னும் திருமணத்துக்கு ஒரு மாதமே இருந்தது.

லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவருமே, இந்த திருமண வேளையில் ஈடுபட்டிருந்தனர்.

கல்யாண பரபரப்பு ராஜ் வீட்டிலும் இருந்தது.

இரண்டு வீட்டினரும் சேர்ந்து ஒன்றாகவே பத்திரிகை பிரிண்ட் செய்து கொண்டார்கள்.

பத்திரிக்கை மட்டுமல்ல பொய்ப்பை, அதற்கு தேவையான தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்ற அனைத்துமே பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்தே வாங்கிக் கொண்டனர்.

திருமணத்திற்கு வருவோருக்கு ரிட்டன் கிப்ட் கொடுப்பது தியா மற்றும் மித்து பார்த்துக்கொண்டார்கள்.

வெட்டிங் பிளானர்ஸ் உடன் சேர்ந்து என்னென்ன அரேஞ்ச்மென்ட் செய்யலாம்? எவ்வாறு செய்யலாம்? யார் யார் வருவார்கள்? அவர்களை எப்படி எப்படி கவனிக்க வேண்டும்? இதுபோன்ற வெட்டிங் பிளானிங் அண்ட் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாமே ஷ்யாம் மற்றும் அருண் பார்த்துக் கொண்டார்கள்.

இப்படி இரண்டு வீட்டிலும் நன்றாகவே கல்யாண கலை கட்டியது.

***

லட்சுமி ராதாக்கு கால் செய்து சில விஷயக்கள் கூற கிளம்பச் சொல்ல, ‘சரி’ என காலை கட் செய்துவிட்டு, கிளம்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டார் ராதா.

“வர்ஷு உங்க அத்தை கால் பண்ணங்க. இன்னைக்கு நாள் நல்லா இருக்காம், அதனால முகூர்த்த புடவையும் தாலி செய்யவும் சொல்லிறலாம்னு சொன்னாங்க கிளம்பு”.

‘சரி’ என இவள் ஒரு சுடிதார் எடுக்க.

“சேலை கட்டிக்கோ வர்ஷு”, என அவர் இப்போது வாங்கி வந்த சேலையும் அதற்கு தோதாய் பிளவுஸையும் எடுத்து, பெண்ணின் கையில் கொடுத்து விட்டு சென்றார்.

இப்போது அவளுக்கு கைகள் நன்றாகவே குணமாகிருந்தது, அவளால் அனைத்து வேலைகளையும் செய்ய முடிந்தது.

‘முகூர்த்த புடவை, காஞ்சிபுரம் சென்று எடுக்கலாம்’ என்று நினைத்தார்கள்.

ராதா ஷ்யாமையும் அழைக்க, அவன் ‘ஆபீஸில் ஏதோ வேலை இருப்பதால் வரவில்லை’ என்று விட்டான்.

ராஜ் வீட்டினார் ‘அனைவரும் ஒன்றாய் போகலாம்’ என்று கிளம்பி, இவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

ராமச்சந்திரன் லட்சுமி தம்பத்தியனார், ராஜ், தியா மற்றும் மித்து இவர்கள் அனைவரும் தான் வந்திருந்தனர்

இந்தக் கூட்டத்தில் தியாவை பார்த்தவன் ஆபீஸ்க்கு போன் பண்ணி மேனேஜர் அங்கிளிடம் அனைத்தையும் கவனித்துக் கொள்ள சொல்லி, இவனும் காஞ்சிபுரம் கிளம்ப முடிவெடுத்தான்.

அனைவரும் ஒன்றாக காலை உணவை முடித்துவிட்டு, கிளம்ப தயாராயினர் லட்சுமி ஷ்யாமிடம் “நீயும் வாப்பா” என்றார்.

“இல்ல அவனுக்கு…” ஆபீஸில் வேலை என்று சொல்ல வந்த, ராதாவை பாதியில் நிறுத்தியவன்

“நான் இல்லாமையா அத்தை” என முடித்தான்.

ராதா மகனை ஆவென்று பார்த்தார், ‘சரி இல்லையே’, அவர் மனம் யோசித்தது.

தன் அன்னையின் பார்வை புரிந்து, அவர் பக்கம் கூட திரும்பாமல் குடுகுடுவென ஓடி சென்று கார் எடுப்பதற்கு அமர்ந்து விட்டான்.

ராஜும் வர்ஷாவும் தனி  உலகில் சஞ்சரித்து இருந்தனர். அப்போதுதான் முதன்முதலாய் வர்ஷாவை புடவையில் பார்க்கிறான் ராஜ்.

அவனால் அவள் மேலிருந்து  பார்வை எடுக்க முடியவில்லை. அனைவரும் அதை கவனித்தாலும் கவனியாதது போலவே இருந்தார்கள்.

வர்ஷுக்கோ இவனின் பார்வையால் கன்னங்கள் இரண்டும் நாணத்தில் சிவந்தது.

அது இன்னும் அவளை அழகாய் காட்ட, பார்வையாலேயே பெண்ணைப் பருகிக் கொண்டிருந்தான்.

இரண்டு காரில் சென்றார்கள். பெரியவர்கள் அனைவரும் ஒரு காரிலும், சிறியவர்கள் அனைவரும் ஒரு காரிலும் சென்றார்கள்.

அருணுக்கு கொஞ்சம் வேலை இருப்பதால், ‘அவன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்து கொள்வதாக’ கூறவே, மித்து மட்டும் தனித்து இவர்களுடன் பயணப்பட்டு இருந்தாள்.

மித்து தனியே ‘பின்னே அமர்ந்து கொள்வதாய்’ கூற, தானும் அவளுடன் வருவதாய் கூறினாள் தியா.

“ஏண்டி ஏன்? உன் ஆளு சிவபெருமான் மாதிரி கண்ணாலே என்ன எரிக்கிறதுக்கா…”

“என் ஆளா…?”

“எம்மா அவரு உன்ன ஆள முழுங்கற மாதிரி பார்க்கிறதும் பதிலுக்கு நீயும் லுக் விடுறதையும், நாங்களும் பார்த்தோம் எங்க கண்ணு ஒண்ணும் குருடு இல்ல”.

“இல்ல மித்து இன்னும் நான் அவர்கிட்ட எதுவும் சொல்லிக்கலடி”.

“நீ இப்ப சொல்றதா இருந்தா சொல்லு, இல்ல ஸ்டேயிட்டா அறுபதாம் கல்யாணம் பண்றதுன்னா பண்ணு. உங்களுக்கு நடுவுல நான் வரல சாமி ஆள விட்டு. நான் போய் என் மாமா கூட போன்ல கடலைய வறுத்துட்டே வருவ”.

தோழியின் கிண்டலுக்கு பயந்து ஷ்யாமின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் தியா.

வர்ஷுவும் ராஜும் நடு சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.

இதற்கு முன் கேரளாவில் இதே போல் நடு சீட்டில் அமர்ந்து பயணப்பட்டது நினைவுக்கு வந்தது ராஜிற்க்கு.

“அன்னைக்கு நீ ரொம்ப ஓவரா பண்ண தெரியுமா வர்ஷு”.

“சாரிங்க”, என அன்றைக்கு செய்ததற்கு மன்னிப்பு கேட்பது போல், அவனின் அருகில் ஒட்டி அமர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

ஷ்யாம், தியா மற்றும் மித்து மூவரும் ஒரே நேரத்தில் ‘க்கும்’ என்று  தொண்டை கனைத்தார்கள்.

அதில் வர்ஷா வெட்கப்படு எழ போக, அவளைப் பிடித்து மறுபடியும் சாய்த்துக் கொண்ட ராஜ், “டேய் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் டா”, என சிறுப்புள்ளையாய் கூறினான்.

பின் அவர்கள் இருவரையும் யாரும் தொந்தரவு செய்யவில்லை.

மித்து சொன்னார் போல அருணுக்கு கால் செய்து கடலை போட்டுக் கொண்டு வர,

ஷ்யாம் தியா இருவரின் பார்வையும் அடிக்கடி ஒருவரை ஒருவர் திண்டி சென்றது.

அப்பொழுது எஃப்.எம்-யில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருந்தது. பாடலுக்கேற்ப அவளை ரசித்து கொண்டே வந்தான் ஷ்யாம்.

🎼மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்…
இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க…
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்…
பிரம்மனும் மூா்ச்சையுற்றான்…

  அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று…
உயிரைத் தடவி திரும்பும் போது…
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே…
ஒஹோ… மழையின் துளிகள்…
அவளை நனைத்து மாா்பு கடந்து…
இறங்கும் பொழுது முக்தி அடைந்து…
முத்துக்கள் ஆகின்றதே…🎼

கடைசி வரிகளில் அவனின் பார்வை பெண்ணை எசக்கு பிசக்காய் பார்த்து நிமிர, அவனைக் கண்ணாலே எரித்து கொண்டிருந்தாள் இவள்.

அதில் டக்கென்று பார்வை திருப்பிக் கொண்டவன்,

“பாட்டு போடறான் பாரு, பாட்டு வேற பாட்டு கிடைக்கலையா டா சும்மா மனுசனை உசுப்பேத்திக்கிட்டு” என்று வாய்விட்டு புலம்பி பாட்டை மாற்றினான்.

அந்த பாடலில் கூற பட்டது ‘உண்மை தான்’ என மனதில் மட்டும் நினைத்து, வெளியில் நல்ல பிள்ளையாய் நடத்துக் கொண்டான் அவன்.

இவ்வாறு பயணம் இனிதே முடிய, காஞ்சிபுரம் சென்று சேர்ந்தனர்.

அங்கே யாரும் எதிர்பார்க்காத இருவருக்குள் வாக்குவாதம் வந்தது?

அந்த இருவர் யார்? என்ன வாக்குவாதம் வந்தது?

(போன எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏 இனி அடுத்த எபில சந்திக்கலாம் பை…பை…)

 

error: Content is protected !!