💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு 6

தற்கொலை என்னும் இருளை தன்நம்பிக்கை, மனத் தைரியம், தெளிவான சிந்தனை, பொறுமை ஆகிய ஒளிகளைக் கொண்டு வெல்லலாம்

மறுநாள் காலை ஷ்யாமின் காரில் லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும் அம்யூஸ்மென்ட் பார்க்க நோக்கி புறப்பட்டனர்.

சென்னையின் பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டு பூங்கா அது. வார இறுதி என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

இவர்கள் டிக்கெட்டுகள் எடுத்துக் கொண்டு உள்ளது சென்றனர்.

அனைத்து ரைடுகளிலும்  உற்சாகமாக விளையாட காலைப் பொழுது கழிந்தது. மதிய நேரம் நெருங்க ஒரே ஒரு ரைடை முடித்துக் கொண்டு உணவருந்தலாம் என முடிவு செய்தனர்.

அந்த ரைடில் இரண்டு இரண்டு பேராக ஏற வேண்டும். அருண் மெத்து ஒன்றாக அமர வர்ஷினி அருகில் அமர சென்றாள் தியா.

ஆனால் அதற்குள் வேறு வழியிலிருந்து வந்த பெண் அமர்ந்து விடவே, ஷ்யாமும் தியாவும் அருகருகே அமர்ந்தார்கள்.

தியா தன் அருகில் அமரவும் ஷ்யாமிற்கு என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு. மனம் மகிழ்ச்சியில் துள்ள, இதழில் அழைக்காமல் வந்து ஒட்டிக் கொண்டது குறுநகை.

அந்த ரைட் தலைகீழாக போகவே தியாவிற்கு என்னவோ செய்ய, அருகில் இருந்த ஷ்யாமின் கையை இறுக்க பற்றி கொண்டாள்.

அவளின் தொடுகை இவளுக்குள் மின்சாரம் பாய்ச்ச, சட்டென அவளை திரும்பி பார்த்தான்.

இவனுக்கு இருக்கும் எந்த உணர்வும் அவளுக்கில்லை. இறுக்கமாக கண்களை மூடி  அமர்ந்திருப்பவளை பார்த்தவன் அவள் நிலை உணர்ந்து, அவள் பற்றி இருந்த கைகளை அழுத்தி கொடுத்தான்.

“இதோ முடிய போகுது தியாமா ஒன்னும் இல்ல”, என்றான் ஆறுதலாக.

ரைடை முடித்து இறங்கவும் அவள் தள்ளாடினாள். அருகே இருந்த ஷ்யாம் அவளை கை தாங்கலாக அழைத்து வந்து ஒரு கல் பெஞ்சில்  அமர்த்தினான்.

அதற்குள் மற்ற அனைவரும் தியாவிடம் நெருங்கி என்ன ஆனது என்று அவளை கவலையுடன் பார்த்தனர்.

“என்ன ஆச்சி”, என்று கேட்டு அருணிடம்,

“தலை சுத்திடுச்சு நினைக்கிறேன்டா”,பதில் உரைத்தான் ஷ்யாம்.

பின், அருகிலிருக்கும் கடைக்கு சென்று ஒரு லெமன் சோடா வாங்கி வந்து தியாவிடம் நீட்ட, அதை வாங்க நீண்டவளின் கை நடுங்குவதை பார்த்தவன் தன் தங்கையிடம் கொடுத்து அவளுக்கு புகட்டச் சொன்னான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் சற்று தெளிந்தாள்.

சற்று சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று அவளை சாப்பிட அழைத்து சென்றனர் அவள் நண்பர்கள்.

அனைவரும் எளிமையான உணவையே உண்டனர். தியாக்கு ஷ்யாம் உலர் பழங்கள் அதிகம் கலந்த பழ சாலட் மற்றும் ஜூஸ் வாங்கி கொடுத்தான்.

அவள் சாப்பிட்டு முடிக்கவும்,

“இப்போ எப்படி இருக்கு” என்றான் கனிவாய்.

“ம்…பரவால்ல ஷ்யாம், ஃபீலிங் பெட்டர்”,  என்றவளின் குரல் சற்றே தெளிந்து இருந்தது.

என்னவோ அவளின் கஷ்டம் இவனையும் இவ்வளவு நேரம் ஆட்கொண்டிருந்தது. இப்பொழுதுதான் ஷ்யாம் நிம்மதியாய் உணர்கிறான்.

“உனக்கு பயமா இருந்தா முன்னாடி சொல்ல வேண்டிய தானே”, அருண் வினவ,

“ரைடுக்கேல்லாம் பயந்ததில்லங்க என்னவோ இன்னைக்கு அவளுக்கு பிரச்சனை ஆயிட்டு இருக்கு உடம்பு.”, என்றால் மித்து தோழியை அறிந்தவளாய்.

ஷ்யாம் அனைவரையும் வீட்டுக்கு கிளம்ப தயாராக சொன்னான்.

“ஏன்?” என தியா வினவ,

“என்ன ஏன் வீட்டுக்கு போனா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேல.” என்றான் அக்கறையாய்.

“நான் நல்லா தான் இருக்கேன் நான் வேணா ரைட்ஸ் போகாமல் இங்கேயே பத்திரமா உக்காந்துக்குறேன். ப்ளீஸ் ஜாலியா இருக்கலாம்னு வந்துட்டு இப்ப என்னால கிளம்பினா எனக்கு ஒரு மாதிரி இருக்கும்”, என்றாள் கவலையோடு.

அவளின் கவலை இவனை பாதிக்க, “சரி ஆனால் யாராவது ஒருத்தர் உங்க கூடவே இருப்போம் ஓகேவா.”

“ம்…சரி”, வேகமாய் தலையாட்டி.

யாரும் அறியாமல் அதை ரசித்தான் ஷ்யாம்.

அங்கேயே அமர்ந்திருந்தத தியாவிற்கு துணையாய் வர்ஷா இருப்பதைக் கூற, மற்றவர் அடுத்த ரைடுக்காக சென்றார்கள்.

“இப்போ எப்படி இருக்குடி?”, என வர்ஷு வினவ,

“பரவால்ல வர்ஷு கொஞ்சம் வெயில்ல அதான் இப்படி ஆயிடுச்சு நினைக்கிறேன்”, என்றாள் தலையில் கை வைத்துக் கொண்டே,

“ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்டி தனியா இருக்க ஒன்னும் பிரச்சனை இல்லையே?”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லடி நீ போயிட்டு வா”

இப்படியாக வர்ஷா ரெஸ்ட் ரூம்க்கு சென்று திரும்பும் வழியில் ‘வர்ஷா’ என யாரோ அவளை அழைக்கும் குரல் கேட்டு திரும்ப, அங்கே இருந்த உருவத்தை பார்த்து மிரண்டாள்.  

அவளின் பயத்தை கண்டு கொண்ட அந்த உருவம், “என்ன வர்ஷு என்ன சுத்தமா மறந்துட்டு ஜாலியா இருக்க போலியே”, என்ன நக்கலாய் கேட்க,

இவள் சுற்றி மற்றும் யாராவது வருகிறார்கள் என பயத்துடன் பார்த்தாள்.

“என்ன உன் ஆளுங்க யாராவது வராங்கன்னு பாக்குறியா? அவங்க இப்போதைக்கு வர மாட்டாங்க, சரி நான் கேட்டது என்ன ஆச்சு?, நீ கேட்ட டைம் முடிய போகுது எனக்கு என்னவோ நீ என்னை ஏமாத்துறீயோனு தோணுது.” என்றான் கடுமையாக.

அவள் கைகால்கள் நடுங்க நின்றாள்.

யாரோ வரும் அரவம் கேட்க, அந்த உருவம் அவசரமாக, “சீக்கிரம் நான் சொன்னது ரெடி பண்ணு இல்ல நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்”, கூறி அங்கிருந்து நகர்ந்தது.

தியா தான் வர்ஷுவை தேடி வந்தாள்.

“என்னடி ஆச்சி இவளோ நேரம் இங்க என்ன பண்ற?”, என இவள் வினவ,

முயன்று தன் குரலை இயல்பாக்கி, “ஒன்னும் இல்லைடி அதோ அந்த ரைடை பாத்துட்டு இருதேன்.”

“சரி வா, அங்க போய் உட்காரலாம்.”

“ம்…”

மீண்டும் இருவரும் அவர்கள் முன்பு அமர்ந்த இடத்திலேயே சென்று அமர்ந்தனர்.

தியா ஏதேதோ பேச, வர்ஷு சற்று முன்பு நடந்த நிகழ்வையே நினைத்திருந்தாள்.

தன் நினைப்பிலேயே உழன்று கொண்டிருந்தவளை உலுக்கினாள் தியா.

“என்னடி ஆச்சி உனக்கு, அப்படி என்ன யோசனை?”

“ஒன்னும் இல்லடி, என்றவள் சுற்றிமுற்றி தன் பார்வையைச் சுழல விட்டாள்.”

“யாரடி தேடுற” என்றாள் இவளும் பார்வையை சுழல விட்டு,

“ஆங்…நம்ம ஆளுங்க வராங்களான்னு பார்க்கிறேன்டி”, என்றாள் பயத்தை மறக்க முயன்று,

“அப்படியா நான் கூட உன் கிட்ட அங்க பேசிட்டு இருந்தாங்களே அவங்க தான் தேடுறியோனு நெனச்சேன்”, என்றாள் அவளையே உற்றுப் பார்த்து,

தோழி இப்படி கேட்கவும் அவளை விழிக்கென நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷா.

மெதுவாய் தயங்கி, “தியா…” என அழைத்தாள்.

“நான் பார்த்தேன்டி பார்த்தது மட்டும் இல்லை பேசுனத்தையும் கேட்டேன்.”

அந்த ரெஸ்ட் ரூமுக்கு இரண்டு பக்க வாசல் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் ஒன்று இருந்தது அதன் பின்புறம் ஒன்று இருந்தது.

வர்ஷா அருகில் இருக்கும் வழியை கவனிக்காமல் சென்று விட்டாள். தியாவும் தலையைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து கண்முடி அமர்ந்திருந்ததால் இவள் போன வழியே பார்க்கவில்லை.

சிறிது நேரத்தில் தியாவும் ரெஸ்ட் ரூம் செல்லலாம் என்று நிமிர அருகே இருந்த வழி அவள் கண்ணில் படவே அதனுள் சென்றாள்.

இன்னொரு வழியில் வர்ஷா செல்வது இவளுக்கு தெரியவே அவளை அழைக்க வாய் எடுக்க, அதற்குள் வேறு யாரோ அவளை அழைக்கவே, வர்ஷாவை தொடர்ந்து அதே வழியில் செல்லப் போனாள். ஆனால் அடுத்த அவள் செவியில் விழுந்த பேச்சுகளால் அப்படியே ஆணி அடித்தார் போல் அந்த இடத்திலேயே நின்று விட்டாள்.

அனைத்தையும் கேட்டவள் இதற்கு மேல் வர்ஷுவை அங்கே நிற்க விடக்கூடாது, என அவள் வந்த வழியே சென்று அப்போது தான் வருவதுபோல் வேண்டும் என்றே கால்களை அழுத்தி சத்தம் போட்டு கொண்டு வந்தாள்.

வர்ஷுக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது.

“வர்ஷு நம்ம வெளிய இருக்கோம் இப்படி அழாத ப்ளீஸ் முதல்ல முகத்தை கழுவு”,  என்ன தண்ணீர் பாட்டிலை நீட்ட,

அதை வாங்கிக் கொண்டவள் முகத்தில் அறைந்து முகம் கழுவ,

அந்தக் குளுமையான நீர் முகத்தில் பட சற்று தெளிந்து தியாவிடம் தன் மனம் திறக்க வர, அதற்கு தடையாய் வந்தான் ஷ்யாம்.

“தியா…அண்ணாகிட்ட எதுவும் சொல்லாதே ப்ளீஸ்” என்றாள் இறைஞ்சிதலாய்.

“ம்… சரி”.

“இந்தா தியா சாக்லேட் கையில் வச்சுக்கோ ஒரு மாதிரி இருந்தா சாப்பிடு”, உன்மையில் அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவிட்டு சில தான் வந்தான்.

தன் தங்கையின் முகம் சற்று வாடி இருக்கவே, “என்னாச்சு வர்ஷம் ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க”, எனக் கேட்க,

“ஒண்ணுமில்ல அண்ணா”.

“ஒன்னும் இல்ல ஷாம் காலையிலிருந்து விளையாடிட்டு இருந்தோம் இல்ல அதான் களைப்பா இருக்கு போல.”, என்றாள் தோழியை பார்த்துக் கொண்டே,

வர்ஷுவும் ‘ஆம்’ என தலையாட்ட.

“ரெண்டு பேரும் முடியலன்றிங்க ஆனா வீட்டுக்கும் கிளம்ப மாட்டேன் அடம் புடிக்கிறீங்க என்னதான் பண்றதுன்னு எனக்கு தெரியல”, என்றான் சற்று எரிச்சலாய்.

“சரி பேசாம ஒன்னு பண்ணுங்க ஸ்விமிங் ஃபுல் கிட்ட வந்து உட்காருங்க உங்கள கவனிச்சா மாதிரியே இருக்கும்”, என்றான்.

உண்மை என்னவென்றால் இவளை இங்கே தனியாய் விட்டு விட்டு அவனுக்கு அங்கே விளையாட மனம் வரவில்லை.

சரியென இருவரும் அங்கே போய் அமர்ந்ததும் ஷ்யாம் நீந்த செல்ல, தனிமையில் அனைத்தையும் தியாவிடம் கூறினாள் வர்ஷு.

“எனக்கு என்ன பண்ணானே தெரியல பேசாம செத்துடவா நான்லாம் எதுக்கு உயிரோட இருந்துட்டு.”, எனக் கூறியவளின் கன்னம் எரியவும் தான் தியா தன்னை அறைந்திருக்கிறாள் என்பதே புரிந்தது.

“என்ன வர்ஷு பேசுற நீ எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இருக்கு அதை யோசிக்காம என்ன பேச்சு இது? அம்மா, அப்பா, அண்ணா, ஏன் நாங்கல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா? இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல பாத்துக்கலாம் விடு.”, என்றால் கோபமும் பரிபவும் கலந்து.

மேற்கொண்டு தோழிகள் பேச முடியாமல் மற்றவர்கள் வர, அங்கிருந்து கிளம்பினர்.

போகும்பொழுது இருந்த உற்சாகம் எப்பொழுது அந்த மகிழுந்தில் இல்லை.

***

தியா வீட்டில் அவள் அன்னை மருந்துடன் காத்திருந்தார். அவள் வந்தவுடன் காபி கொடுத்து மாத்திரையும் போட வைத்தார்.

அனைவருக்கும் எப்பொழுதும் போல் லட்சு ஆன்டியின் காப்பி கிடைத்தது.

“எப்படி ஆண்ட்டி சரியா மாத்திரையோடு வெயிட் பண்ணீங்க”, என அருண் வினவ,

“இன்னைக்கு வெயில் அதிகமா இருக்கும்போதே தெரியும் இவள் இப்படித்தான் வீடு வந்து சேருவானு  அவளுக்கு தான் மைகிரின்(migraine) இருக்கே, அது இல்லாம ஷ்யாம் தம்பியும் போன் பண்ணுச்சு”

மேலும் தொடர்ந்து, “ பல தடவை சொல்லிட்டேன் மாத்திரை கையில வச்சுக்கோன்னு ஆனா கேட்கிறதே கிடையாது”, என்ன மகள் அவஸ்தப்பட்டாலே என்று அவளை கடிய,

“சரி விடு லட்சு பிள்ள ஏற்கனவே கலப்பை வந்து இருக்குது இதுல நீ வேற திட்டிக்கிட்டு”, என அவளுக்கு வக்காலத்து வாங்கினார் அவள் தந்தை.

“உங்க பொண்ண ஒன்னும் சொல்ல கூடாது வந்துருவிங்களே.”, என மகளுடன் கணவனையும் சேர்த்து திட்டினார்.

தியாவின் உடம்பை பார்த்துக் கொள்ளச் சொல்லி, பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு மற்றவர்கள் புறப்பட,

வர்ஷா மட்டும் ஒரு நிமிடம் நின்று இவளை திரும்பி பார்த்தாள். கண் மூடி திறந்து தான் பார்த்துக் கொள்வதாய் அவளிடம் செய்கை செய்ய சரியான தலையாட்டி கிளம்பினால் அவள்.

“போ தியாம்மா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அம்மா நைட் டிபன் ரெடி பண்ணிட்டு உன்னை கூப்பிடுவாங்க”, என் மகளின் சோர்வான முகத்தை பார்த்து கூறினார் சந்திரன்.

சரியென தன் அறைக்கு சென்றவளின்  நினைப்பு முழுக்க வர்ஷுவே நிறைந்திருந்தாள்.

வெகு நேரம் யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் பேசிய எடுத்து ஒரு நம்பருக்கு, “ முக்கிய விஷயம் பேச வேண்டும் என் வீட்டுக்கு அருகே இருக்கும் கோவிலில் நாளை காலை பதினொன்று மணிக்கு காத்திருக்கிறேன் கண்டிப்பாக வரவும்” என மெசேஜ் செய்தாள்.

அந்த புறமிருந்து “சரி” எனப் பதில் வரவும் அவள் அன்னை சாப்பிட அழைக்கவும் சரியாக இருந்தது.

இரவு உணவு முடிந்து நாளை காலை என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என முடிவு எடுத்து படுத்தாள் தியா.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. இந்த தற்கொலை உங்களுக்கோ அல்லது உங்களை கஷ்டப்படுத்தியவருக்கோ கொடுக்கும் தண்டனையல்ல. மாறாக உங்களை உயிராய் நேசிப்பவர்களுக்கு கொடுக்கும் தண்டனை அதுவும் உயிரை வதைக்கும் தண்டனை.

இந்த உயிர் நம்மை கேட்டுக் கொண்டா இந்த பூமிக்கு வந்தது? அது எப்பொழுது எப்படி போக வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது செல்லும். நாம் யார் நம் விதியை நிர்ணயிப்பதற்கு? இந்த உயிரே நமக்கு சொந்தமானது இல்லையே அப்படி இருக்க அதை பறிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

***

ஞாயிற்றுக்கிழமை காலை

காலை உணவை முடித்து ஓய்வாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர் சந்திரன் லட்சுமி இருவரும்.

தியா கோவிலுக்கு செல்ல தயாராகி கீழே வந்தாள்.

“என்ன தியா சண்டே எதுவுமே எங்க கிளம்பிட”, வினவினார் லட்சுமி.

“கோவிலுக்குமா”, என்றாள் பவ்யமாக.

“இன்னிக்கா ஏன் என்ன விசேஷம்”, என புரியாமல் கேட்டார் லட்சுமி.

எப்பொழுதும் வெள்ளி அல்லது சனி அன்று தான் கோவிலுக்கு செல்வாள் இவள். இது என்ன புதிதாக ஞாயிறு அன்று சொல்கிறாளே என்று தான் இவ்வளவு கேள்வி.

‘ஐயோ! மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டேனே இப்ப நான் என்ன சொல்லுவேன்’, என மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தாள். கோவிலுக்கு சென்றால் என்ன கேள்வி வரப்போகிறது என்று யோசித்தவள் இன்று ஞாயிறு என்பதை மறந்து விட்டாள்.

இப்படி அம்மா பெண் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில்,  “லட்சுமி…”, என வாசலின் புறமிருந்து யாரோ அழைக்கும்  குரல் கேட்டது.

பக்கத்து வீட்டு மாமி தான் வந்திருந்தார்.

“வாங்க மாமி…”, என வந்தவரை உபசரித்துக் கொண்டிருந்தார் லட்சுமி.

“இந்தா லட்சுமி இன்னைக்கு சதுர்த்தி அதான் கொஞ்சம் சக்கரை பொங்கல் செஞ்சேன்”,  எனக் கொடுத்தவர். தியா எங்கோ கிளம்ப தயாராகி நிற்பதை பார்த்து அவளிடம்,

“என்ன தியா காலையிலேயே எங்க கிளம்பிட்ட?”, என்றார் கேள்வியாய்.

“கோவிலுக்குத் தான் மாமி…”, என இவள் கூறவும்,

“நல்லதுமா போயிட்டு வா இன்னைக்கு பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை. சீக்கிரம் போ இல்லனா நடை சாத்திட போறா”

‘ரொம்ப நன்றி மாமி என்னடா சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நல்ல நேரத்துக்கு வந்தீங்க’, மனதில் நினைத்து, வெளியில் அவரிடம்

“அதுக்கு தான் மாமி போறேன்”, என்றாள் சமத்தாய்.

“சரிமா சீக்கிரம் போயிட்டு வந்துரு கிளம்பு”, என அவரே துரிதப்படுத்தவும்,

இதுதான் சமயம் என அவர் இருக்கும் போதே, அனைவரிடமும் விடை பெற்று கிளம்பி விட்டாள் தியா.

(தியா யாரை மீட் பண்ண போறா…வர்ஷாக்கு என்ன பிரச்சனை…இந்த கேள்விக்கான பதிலை அடுத்த எபில பாக்கலாம்)

error: Content is protected !!