💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-76a3eee4

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு – 9

வாழ்க்கை நமக்கு எப்போதும் ஒளி (மகிழ்ச்சி )நிறைந்த பாதையை மட்டும் காட்டாது….

இருளடைத்த (கவலை, தோல்வி, ஏமாற்றம் )கடின பாதைகளும் அதில் உண்டு…..

நம் திறமையால் அதைக் கடந்தால் வாழ்வு சிறக்கும்.

 

கஃபே காபி டேயில்……..

 

அவன் வர்ஷாவை வரச்சொன்ன இடம் அவள் கல்லூரி அருகே இருக்கும் கஃபே காபி டேக்கு  தான்.

 

வர்ஷா கதவைத் திறந்து உள்ளே வந்தவள்  தனக்கு முன்பே வந்து அமர்ந்திருந்த ரவியைக் கண்டாள்.

 

அவன் மட்டுமா அவர்களின் பட்டாளமே அங்கே தான் இருந்தது.

 

இருவர் இருவராக அமரும் இருக்கைகள் ஒரு புறம், நிறையப் பேர் ஒன்றாக வந்தால் அதற்கு ஏற்றார் போல் இருக்கைகள் ஒரு புறம், என இருக்க.

 

அதில் ஒன்றில் தியா, மித்து  கண்களில் பெரிய கண்ணாடியுடன் தலையில் துணி போட்டு அமர்ந்திருந்தனர், மற்றொன்றில் அருண் தன் மடிக்கணினியுடன் இருக்க அவன் எதிரில் யாரோ ஒரு சிங் அமர்ந்திருந்தார் பார்ப்பதற்கு அவர்கள் ஏதோ அலுவலகம் விடயம் பேசுபவர்கள் போல் இருந்தது.

 

அனைவரும் வர்ஷா வந்ததைக்   கவனித்தாலும் கவனியாதது    போல் தங்கள் வேலைகளைப் பார்ப்பது போல் நடிக்க, ஒருத்தி மட்டும் உண்மையாகவே தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேற யார் நம்ப லைட்ட்டிங் ஸ்டார்ஸ்யின் “சாப்பாட்டு ராமி”, எனப் புகழ்பெற்ற மித்து தான்.

 

“மையிட்டி மன்ச்சர் காம்போ” வாங்கி நன்றாக மொக்கிகொண்டிருந்தாள்.

(மையிட்டி மன்ச்சர் காம்போவில் ஒரு கேப்புசினோ, சாண்விச் மற்றும் கோக்கோ பேஸ்ட்ரி இருக்கும் )

 

தியா அவள் காலை மிதிக்க, கத்தப் போனவளின் வாயைப் பொத்தி கண்களில் வர்ஷு வை காட்டினாள்.

 

“எப்போடி வந்தாள்”.

 

“நீ நிதானமா இல்லை உன் கண்ணு வந்த வேலையைப் பாக்கல்ல முதல தின்னு அப்போ தான் வேல செய்யும் உன் கண்ணு”, என அஞ்சான் வசனத்தை மாற்றிப் பேசினாள் தியா.

 

“தியாமா கவிதை கவிதை”.

 

ம்…. திரும்பவும் அவள் காலை மிதிக்கப் போக இம்முறை அவள் சுதாரித்து கால்களைத் தூக்கிக் கொண்டாள்.

 

பின், ரவி வர்ஷாவின் பேச்சில் கவனத்தைப் பதித்தனர்.

 

“என்ன வர்ஷு டார்லிங் எப்படி இருக்க”.

 

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

“என்கிட்ட முகத்தைத் திருப்புகிற வேலைலாம் வேண்டாம்”. சரி எதுக்கு வீண் பேச்சி, “நான் கேட்ட பணம் என்ன ஆச்சி?”.

 

“நான் தான் சொன்னேனே எனக்கு டைம் வேணும்னு”.

 

“நீ அதைச் சொல்லிப் பல நாள் ஆச்சி. உன்னப்பன் கிட்ட இல்லாத பணமா….. எதுக்கு இன்னும் டைம்”.

 

“அப்பாவிடம் அவளோ பணம் கேட்டா ஏன் எதுக்குனு கேள்வி கேட்பார் என்ன சொல்ல”.

 

“என் லவ்வர்குன்னு சொல்லு”, என தன் பல்லைக் காட்ட,

 

அதை உடைக்கும் ஆத்திரம் வந்தது வர்ஷுக்கு, இருந்தும் தன்னை சமன் செய்துகொண்டு, “இன்னும் கொஞ்சம் டைம் தா”, எனப் பொறுமையாய் கேட்க.

 

“இதுக்கு மேல டைம்லாம் கொடுக்க முடியாது இன்னும் இரண்டு நாளில் என் கையில் பணம் இருக்கனும் இல்ல…. நான் சொன்ன உன்னோட மார்பிங் போட்டோஸ் ரெடியா இருக்கு பேப்பர் டிவில மட்டும் இல்ல பல சைட்லையும் உன் போட்டோ தான் ட்ரெண்டிங்கா இருக்கும் பரவால்லையா”, எனக் கோணல் சிரிப்பு சிரித்தவனை எரிப்பது போல் பார்த்தாள் வர்ஷா.

 

“ப்ளீஸ் இங்க பார் அப்பிடிலாம் செய்திடாதே. நான் என்ன தரமாட்டேனா சொன்னேன் கொஞ்சம் டைம் தானே கேட்டேன்”.

 

“நீ என்னை நம்பலைப் போல இருக்கு அந்த போட்டோஸ் காட்றேன்”, என அவன் தொலைப்பேசியை எடுக்க இவள் முகம் சற்று வெளிறியது.

 

ஆனால் தொலைப்பேசியைப் பார்த்தவனின் முகம் அதற்கு மேல் வெளிறியது.

 

 

அதே நேரம் அவன் அருகே யாரோ வந்து நிற்கவும் நிமிர்ந்து முகம் பார்த்தான்.

 

 

அங்கு நின்றிருந்தவன் யார் என்று அவனுக்குத் தெரியவில்லை ஆனால் கட்டுமஸ்தான உடம்பும் நேர் பார்வையும் அவன் உயரமும் அவனைக் கண்டு சிறு கலக்கம் தோன்றியது உண்மை.

 

“ஹாய் வர்ஷு, நீ எங்க இங்க”.

 

“இவரைப் பார்க்கத் தான் வந்தேன்”.

 

“ஓ! சாரு யார்”, எனக் கேட்டுக் கொண்டே பக்கத்திலிருந்த இடத்தில் அமர்ந்தான்.

 

 

“அவர்  பிஸ்னஸ்மேன் என்கிட்ட ஒரு பத்து லட்சம் கேட்டார் அது சம்பந்தமாய்  பேசிட்டு இருக்கோம்”.

 

 

“ஓ! பத்து லட்சம் கேட்கிற அளவு தேவை இருக்காப்ல எனக்குத் தெரியலையே, சார் அவர் தொலைப்பேசியையும் நம்பலையும் பாக்கறத பார்த்தா அவர் போட்ட முதலுக்கே மோசம் போல”.

 

“அப்படியா சொல்லறீங்க”.

 

“நீ வேணா அவரையே கேளேன்”.

 

வர்ஷா அவனைப் பார்க்க அவன் தன் தொலைப்பேசியைப் பதற்றமாக நோண்டிக் கொண்டு இருந்தான்.

 

அவனைப் பார்த்துக் கொண்டே மித்து தியாவிடம்,  “அவன் மூஞ்சியை பாரேன் பல்லு போன கொசு மாதிரி”.

 

“கொசுகு ஏதுடி பல்லு”.

 

“பல்லு இல்லாம எப்படி நம்பல கடிக்க முடியும்”.

 

 

“கொசுகு பல்லு இல்ல, அதுக்கு பதில்  அது வாயில் ஒரு நீண்ட குழாய் மாதிரி ஒன்னு இருக்குல்ல அதுல இருக்க ப்ரோபோஸ்கிஸ் நம்பத் தோலில் துளையிட உதவிப் பண்ணும் அது மூலம் தான் நம்ப பிளட்ட உறிஞ்சும்”.

 

 

“அது என்னவோ நமக்கு தெரிந்ததுலாம் கொசு கடிச்சா அத அடிக்கணும் அவளோ தான்”.

 

“உன்கிட்ட போய் சொன்னேன் பார் என்ன சொல்லணும்”, என மீண்டும் ரவி வர்ஷா பேச்சில் கவனமானார்கள்.

 

 

அந்த புதியவன் மேலும் பேசினான், “வர்ஷு இடையில் ஒரு ஆறு மாசம் சாரு காணாமற்போய் இருப்பாரே”.

 

“ஆமா ஒரு ஆறு மாசம் ஆள பாக்கல”.

 

“அந்த ஆறு மாசம் சார் எங்க இருந்தாரென்று தெரியுமா”.

 

“தெரியாதே”.

 

ஒரு முக்கியமான இடத்துக்குப் போய் இருந்தார். “அப்படி தானே சார்”.

 

“பை தே வே நான் உங்ககிட்ட என அறிமுகம் பண்ணிக்கவே இல்ல பாருங்க என் பெயர் ராஜேஷ்”.

 

“உங்க அளவு எனக்கு பிசினஸ்லாம் பண்ண வராது அதுனால ஏதோ தெரிஞ்ச வேலையை பாக்குறேன்”.

 

ராஜ் பேசப் பேச இவனுக்கு முகம் பேய்யறைந்தால் போல் இருந்தது. அங்கிருந்து செல்ல எழும்பியவனை அருண் ஒரு புறமும் அந்த சிங் ஒரு புறமும் பிடித்து அமரவைத்தனர்.

 

“அதுக்குள்ள எங்க கிளம்பிட்டிங்க சார்”.

 

சிங் வேடத்திலிருந்த தன் அண்ணனைப் பார்த்த வர்ஷா,  “அண்ணா” என எழும்ப அவளை அமரச் சொல்லி சைகை காட்டினான் அவன்.

 

பின் தியா மித்துவும் அவர்களுடன் ஐக்கியமாகினர்.

 

ஷ்யாம் தான் பிடித்திருந்த ரவியை அடிக்க துவங்க  ஒவ்வொரு அடியும் இடியென அவனைத் தாக்கத் தடுமாறி விழுந்தான்.

 

“ஷ்யாம் விடு என்ன பண்ற”, என அனைவரும் தடுக்க.

 

ராஜேஷ் சிறிது தள்ளி காபி பருங்கி கொண்டிருந்த இருவரை அழைத்தான்.

 

“சார்” என அவன் அருகில் வந்தவர்கள் அவன் கண்ணசைவில் ரவியை வெளியிலிருந்த வண்டியில்  ஏற்றி அழைத்துச் சென்றனர்.

 

“ஷ்யாம் என்ன பண்ற நீ, பப்ளிக்ல இப்படி தான் அடிக்கிறதா இப்போதெல்லாம் எது நடந்தாலும் காணொளி எடுத்துப் போட்டு ட்ரெண்டிங் ஆக்குறானுங்க…உன்னோட முன் கோவம் இன்னும் பள்ளியில் இருந்தா மாதிரி அப்படியே இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துல கம்பெனி பொறுப்பேத்துக்க போற யோசிக்காமல் பண்ணாதடா”, என ராஜ் கண்டிக்க.

 

“முடியலடா அவன் பேசினதெல்லாம் நீங்களும் தானே கேட்டிங்க”.

 

லைட்ட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும் கான்பிரன்ஸ் மூலம் வர்ஷாவுடன் காலிலிருந்தனர். எனவே ரவி வர்ஷா பேசியது அனைவருக்கும் தெளிவாய் கேட்டது.

 

“எல்லாருக்கும் கோவம் தான் மச்சா, ஆன அதை காட்டுற இடம் இதுவல்ல. நல்லவேளை இந்த விஷயத்தை முன்னாடியே ஓனர்கிட்ட பேசி வெளியால் யாரும் இல்லாம பாத்துக்கிட்டோம் இல்லனா இது எவளோ பெரிய பிரச்சனை ஆகியிருக்கும் தெரியுமா”.

 

நண்பன் கூறுவது இவனுக்கு புரியாமல் இல்லை, ஆனால் இவனுக்கு இது சிறுவயது முதலே பழக்கம். கோபம் வந்தால் அவனால் கட்டுப்படுத்தவே முடியாது யார், என்ன, எதுவும் பார்க்க மாட்டான். பின் நாளில் இதனால் அவன் அவதிப் படப்போவதை அறிந்திருந்தால் சரிசெய்ய முயன்றிருப்பானோ….

 

“சாரி அண்ணா”, என தன் அண்ணனைக் கட்டிக்கொண்டாள் வர்ஷா.

 

“நீ ஏன் என்கிட்ட மறைத்த வர்ஷு  அவளோ  நம்பிக்கை  உனக்கு என் மேல்”.

 

“சாரி அண்ணா உனக்கு தெரிந்தால் நீ கஷ்டப்படுவியேனு தான் சொல்லலை”.

 

“சரி விடு அம்மா அப்பாக்கு இது எப்பவும் தெரிய வேண்டாம் புரிதா”.

 

“ம்…. புரிது அண்ணா”.

 

“தேங்க்ஸ் ராஜ், நீ மட்டும் இல்லனா இந்த பிரச்சனை இவளோ சீக்கிரம் முடிச்சு இருக்காது”.

 

“நமக்குள்ள எதுக்கு மச்சான் தேங்க்ஸ்லாம்”.

 

“இந்தாங்க அண்ணா”, என ராஜிடம் சாக்லேடை நீட்டி வெல்கம் டூ லைட்ட்டிங் ஸ்டார்ஸ் தங்கள் ஐவரோடு கூடி அறுவராக வருக வருகவேனா வரவேற்கிறோம்”, என்றாள் தியா.

 

அவனும் சிரித்துக்கொண்டே வாங்கி அவர்களின் கேங்கில் ஒருவனானான்.

 

(ஏற்கனவே நமக்கு லைட்ட்டிங் ஸ்டார்ஸ் ஐவர் பற்றி தெரியும் இப்பொது புதிதாய் வந்தா ராஜ் பற்றி பார்க்கனும் இல்லையா……. பாக்கலாமா)

 

 

ராஜ, ஷ்யாம் மற்றும் அருணின் பள்ளித் தோழன். ராஜின் அப்பா சேகரன் காவல்துறை அதிகாரி. திருவெல்நெலி அவர்கள் சொந்த ஊர். மிகவும் அன்பான குடும்பம் இவர்களுடையது, அம்மா லட்சுமியின் செல்லம் இவன்.

 

இவன் அப்பா மிகவும் நேர்மையானவர். நேர்மையானவர் என்றாலே பிரச்சனை வரத்தானே செய்யும், பிரச்சனை மட்டுமா மாறுதல்களும் கூடவே வரும்.

 

இவருக்கும் பல வந்தது ஆனால் அது எதுவும் அவரை பாதிக்கவில்லை. இப்படியே பல இடங்கள் அவர் மாற மாற ராஜின் படிக்கும் பள்ளியும் மாறிக்கொண்டே இருந்தது.

 

அப்படி தான் சென்னைக்கு மாற்றல் ஆகி வந்தார் சேகரன் அப்போது ராஜ் ஒன்பதாம் படித்துக் கொண்டிருந்தான். பாதி வருடத்தில் வந்தாலும் அவன் அப்பா தன் மாதலை கூறி இடம் வாங்கி விட்டார்.

 

புது இடம் புது மாணவர்கள் ராஜ் அங்கு ஒன்ற மிகவும் கஷ்டப்பட்டான். அவனின் வகுப்பு தான் ஷ்யாம் மற்றும் அருண் ஆனால் அவர்களுள் பெரிய நட்பு இல்லை.

 

ஒரு நாள் பள்ளியில் ராஜ் தன் வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருக்கையில் ஒருவர் வந்து அவன் ஆசிரியரிடம் ஏதோ சொல்லி அவசரமாக அழைத்துச் சென்றார்………..

 

(ஏன் இந்த அவசரம் ராஜ் எங்கே போகிறான்?, ரவியை எங்கு அழைத்துச் செல்கின்றனர்?, ரவியின் தொலைப்பேசிக்கு என்ன ஆனது? இந்த கேள்விகளுக்கான பதில் அடுத்த எபில பார்க்கலாம் மக்களே, பை….. பை….).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!