😍உணர்வை உரசி பார்க்காதே! 12😍

😍உணர்வை உரசி பார்க்காதே! 12😍
🌹அத்தியாயம் 12
மஞ்சத்தில், விகுஷ்கி போதையில் எழ முடியாமல் இருக்க, மீத்யுகாவின் மேல் விகுஷ்கி இருப்பதால் மீத்யுகா எழ முடியாமல் இருந்தாள்.
“விகுஷ்கி எழும்புங்க.” என்று அவன் தோள்களை பற்றி தள்ள முயன்றாள்.
“நீ நைட்டில கூட பியூட்டியா இருக்க தெரியுமா?” என்று அவள் இதழ் அருகே செல்ல, அதனை மறுத்து மீத்யுகா கன்னத்தை மறுபுறம் திருப்பினாள்.
“இங்க பாருங்க. நீங்க நிதானமா இல்ல. நீங்க, நீங்களா பேசல உள்ள போனதுதான் இப்படியெல்லாம் பேச வைக்குது. ஏதாவது தப்பாகிரும் எழும்புங்க விகுஷ்கி.”
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம். நீ எனக்கு வேணும் ப்ளீஸ், என்னைய தள்ளாத.” தள்ளாட்டத்திலும் அவனது பார்வை ஊடலோடும் கூடலோடும் அவள் உடலை ஊடுருவியது.
“ஐயோ விகூஷ்கி ப்ளீஸ் என்னைய விடுங்க. நீங்க ஆன்டி ஹீரோ மறந்துட்டீங்களா?” அவன் சுயரூபத்தை அவள் கூறினாள். “ஏன் அப்படி சொல்ற, நான் காலங்காலமா ஆன்டி ஹீரோவாதான் இருக்கணுமா, ரொமான்டிக் ஹீரோவா இருக்க கூடாதா?” மஞ்சத்தில் பள்ளி கொள்ள அடியவளிடம் இறைஞ்சிவாறு தள்ளாடினான்.
ஒரு வழியாக அவனை விடுத்து எழுந்து கொண்டாள். அவளை பின்தொடர்ந்தான், மீத்யுகா கதவை திறக்க முயன்றாள். தடுமாறிய நிலையிலும் அவளுடன் மல்லுக்கு நின்று கதவை தாளிட்டான்.
“விகுஷ்கி நீங்க பண்றது அடாவாடிதனம் உங்களுக்கும் எனக்கும் செட்டாகாது! விலகுங்க.”
“விலகி போறதுக்கா கிட்ட வரேன்.” என்று மீண்டும் அவள் இடை வளைவுகளை கைப்பற்றினான். கைப்பற்றிய கைகள் அவளை சும்மா விடுவதாக இல்லை.
பெண்மைக்கு மூச்சுவாங்க ஆரம்பித்தது. அவள் கழுத்தில் முகம் புதைக்க ஆரம்பித்தான். அவள் தேகம் மென்மையின் தாக்கத்திலும் சருமத்தின் நறுமணத்திலும் அவன் மனம் லயித்து செல்ல அவள் இதழ்களை சிறையிட்டான்.
இதழ் சிறை முடிவடைய மீத்யுகாவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. “நீங்க என்னைய முழுசா ஏத்துக்காம இதெல்லாம் வேணாம் விகுஷ்கி. நாளைக்கு என்னையதான் திட்டுவீங்க. ப்ளீஸ் என்னைய விட்றுங்க.” என்று அவனிடம் இறைஞ்சி நின்றாள்.
“நான்தானே உன் புருஷன், நான்தானே உன் கழுத்துல தாலி கட்டினேன். அப்பறம் ஏன் நீ தயங்குற, ப்ளீஸ் என்னைய தள்ளாத.” என்று உமிழ்ந்த குரலில்(ஹஸ்கி வாய்ஸ்) அதீத ஏக்கத் தாபத்தோடு கூறினான்.
நாணேற்றியவன், உன்னுடைய உற்றவன் என்று அவன் கூற, அவ்வார்த்தைகளுக்கு அவள் மனம் உருக ஆரம்பித்தது. இருப்பினும் சிறு தயக்கம் ஏற்க மறுத்தது.
பெண்மை மறுத்து கூற, “பேசிக்கிட்டே இருந்தா நீ வேலைக்கு ஆகா மாட்ட. என் ஃபீலிங்கஸ உனக்கு புரிய வக்கிறேன்.” என்று கூறியவன் காரியத்தில் இறங்கினான்.
அவன் கை, வைத்த இடத்தில் இல்லாமல் அவள் மேனி முழுவதும் மேய்ந்துக்கொண்டிருந்தது. பெண்மை மறுத்தாலும் ஆண்மை விடுவதாக இல்லை.
பட்டு மெத்தை மீது பாவை இருக்க, பவளத்துளி உடல் மீது விழுவது போல் அவன் அதரத்தினால் இடம்பெறும் முத்தக்குளியல் அவள் உடல் முழுவதிலும். அவன் இயக்கி வைத்த இன்பமானது தெண்டிரை(கடல்) அளவிலும் திகட்டாதது.
ஆடைக்குள் பதுக்கிய அங்கமெல்லாம் அவன் கண் முன் அம்பலமானது. அவன் கைகள் கொடுத்த மன்மத மர்தனம், அவள் விழிகளை சொக்க சொர்க்க செய்தது.
ஆகாயத்தின் ஆலித்துளி ஆழியில் விழ, ஆழிக்குள் இருக்கும் சிற்பியின் வாய் திறந்திருக்க, அவ் ஆலித்துளி கலையாமல் சிற்பிக்குள் விழுந்து, சிற்பிக்குள் முத்தாகிய தருணமது.
பல நாட்கள் பத்தியம் கிடந்தவன் அன்றிரவு பாவையின் மீது பைத்தியமானான்.
விகுஷ்கி மதுபோதை அருந்திய விளைவுதான் அவன், அவளிடம் விழைந்தது.
உடற்களைப்பில் விகுஷ்கி குப்புற தூங்க, கசக்கி எறிந்த ரோஜா இதழ்களை போல் மீத்யுகாவின் உடலும் மனமும் வாடியிருந்தது .
சராசரி பெண்ணாய் எவ்வளவு சண்டை சச்சரவுகளை கடந்து வந்திருப்பாள். கடக்க முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினானே இந்த விகுஷ்கி.
பொழுது விடிந்தால் விகுஷ்கியின் மனநிலை எப்படி இருக்கும், நடந்தவற்றை கூறினால் ஒப்புக்கொள்வானா, மறந்திடுவானா, மறுப்பானா? என்று ஒரே சிந்தனை பல வகையில் அவளை துன்புறுத்தியது.
பெண்மை பூர்த்தியடைந்திருந்தாலும் அவள் மனம் அதை ஏற்கவில்லையே. தன்னை ஏற்றுக்கொள்ளாத ஆணின் இச்சைக்கு இணங்கியதை எண்ணி அவள் மனம் குறுகியது.
விடியும் பொழுதிற்காக விழி திறந்து காத்திருந்தாள். அவன் இன்பத்தை களிக்க அவள் இடமளித்தது சரியா, கணவன் என்கிற ரீதியில் இடமளித்தது தவறா?
அறை முழுவது நிசப்தம், கடிகாரத்தின் ஓசை மட்டும் டிக் டிக் என ஓடிட, அவள் மனம் பக் பக் என்ற பயத்தில் ஆழ்ந்தது.
முழுதுமாய் கலைந்திருந்தவள் இரவு உடையை சரி செய்து கட்டிலின் ஒரு புறம் ஒட்டி ஒடுங்கினாள். கண்களை மூடினால் கண் முன்னே தோன்றும் காட்சிகள் கண்களை திறக்க செய்தது.
பெண் என்றால் எத்தனை அவலம், கணவனென்றாலும் காமம் கொள்வதற்கு மனைவியின் விருப்பமும் அனுமதியும் வேண்டாமா?
சூரன் உதித்த வானம், இரு நாட்கள் உறங்காமல் செக்கச்சிவந்திருந்த மீத்யுகாவின் கண்கள் சுவற்றை வெறித்து பார்த்தபடி இருந்தது.
விகுஷ்கி விழித்திருப்பதை கூட அவளால் உணர முடியவில்லை. விழித்தவன் உடலை முறித்துவிட்டு நேராக குளியலறைக்குள் சென்றான். போதை செய்த மாயம் தலைவலியும் குமட்டலையும் ஏற்படுத்தியது அவனுக்கு.
மெதுவாக குளியல் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தான். அவள் இருக்கும் கோலத்தை பார்த்தவனுக்கு கோபம்தான் வந்தது. “நைட் ஃபுல்லா இந்த மாதிரிதான் டிரஸ் பண்ணிட்டு என் பக்கத்துல தூங்குனியா, ச்சே அசிங்கமா இல்ல உனக்கு.” என்று விகத்தனமாய்(இகழ்ச்சி) பேசிவிட்டு உத்தியோகத்திற்கு செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
அவன் கூறுவதெல்லாம் அவளுக்கு விளங்காமல் இல்லை. பிரமை பிடித்தது போல் இருந்தாள் மீத்யுகா.
“ஒரு மனுஷன் காலைல எழும்பி வேலைக்கு போறேனே, இந்த மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு ஓரமா ஒதுங்கி இருந்தா கூட பரவாயில்ல. உன் முகத்துல முழிச்சுட்டு போற மாதிரி இருக்கியே, இது உனக்கே நியாயமா? கேவலமா இருக்கு உன் முகத்துல முழிச்சிட்டு போன போற காரியம் விளங்குமா? கருமம்!” என்று தலையில் அடித்துக்கொண்டான்.
நேற்று இரவில், இரவு உடையின் அழகி என்ற வர்ணிப்பெல்லாம் அதன் பிறகு அவன் கூறிய வார்த்தைகளில் பஸ்பமாகியது.
அவனை அன்னார்ந்து பார்த்துவிட்டு கட்டிலை விட்டு இறங்கினாள் மீத்யுகா. “ஏன் விகுஷ்கி நடிக்கிறீங்க?” என்று கேட்கும் குரலில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை.
“என்னது நான் நடிக்கிறேனா, உனக்கென்ன லூசா, காலைலேயே வம்பு பண்ணாத டீ.” என்று அதிகார குரலில் கத்தினான்.
“அப்போ நீங்க நடிக்கல, மறந்துட்டீங்க அதான்?” மனதில் உள்ள போராட்டமெல்லாம் கண் வழியே கரை புரண்டு காவிரியானது.
“நீ என்ன பொலம்புற, நான் என்ன ஹம்னிஷியா பேஷண்ட்டா, நடந்ததெல்லாம் மறக்குறதுக்கு.”
அவன் வார்த்தைகளில் சற்று நிம்மதியானவள், “அப்போ அப்போ, எல்லாமே ஞாபகம் இருக்கா, நேத்து நேட் என்ன நடந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா?” என்று பதற்றமான குரலில் அவனுடைய கைகளை பற்றினாள்.
கைகளை உதறியவன், “நீ என்ன லூசா டீ, எதும் கெட்ட கனவு கண்டியா, வொர்க் போகணும் டார்ச்சர் பண்ணாத.” என்று எரிந்து விழுந்தான்.
“விகுஷ்கி ப்ளீஸ், எதும் நடக்கலனு மட்டும் சொல்லிறாதீங்க! நம்ம ரெண்டு பேருக்குள்ளயும்..” என்று அவள் வார்த்தைகள் தந்தியடித்து அவனிடம் இறைஞ்சி நின்றது.
“முருகா! எதுமே நடக்கல, விட்டா பேசிக்கிட்டே இருப்ப, நான் கிளம்புறேன். உன்னாலதான் எனக்கு தலைவலி!” என்று ஆணித்தனமாக கூறிவிட்டு, அறையின் கதவை வேகமாக இழுத்து சாற்றினான். போதை கொடுத்த தலைவலிக்கு பெண்ணால்தான் தலைவலி என்றிருந்தான். அவன் கொடுத்த உடல் வலிக்கு யார் பதில் கூறுவர்?
அவன் செல்லும் வேகத்திற்கு ஈடாய் அவன் பின் சென்று இடைமறித்தாள். “நில்லுங்கள்! நேத்து நீங்க பண்ணதுக்கு என்ன சொல்ல போறீங்க, என்னைய பொண்டாட்டிய ஏத்துக்காம ஏன் அப்படி பண்ணீங்க?” என்று உறுதியான குரலில் நியாயம் கேட்டு நின்றாள்.
“நீ நெனைக்கிற மாதிரி பையன் நானில்ல. தப்பு பண்ணா நானே ஒத்துப்பேன். தப்பு பண்ணா மறைக்கிறதுக்கு நான் ஒண்ணும் உன் அக்கா இல்ல. உன் அக்கா பண்ண தப்புக்காக உங்கிட்ட அசிங்கமா நடந்துகிறதுக்கு நான் ஒண்ணும் கீழ்தரமானவனும் கிடையாது. என்று கூறிவிட்டு படிகட்டை கடந்து சென்றான்.
இப்போது அவன் கூறிய கணக்கில் சித்திரவதை எனும் பெயரில் செய்த சில்மிஷங்கள் அடங்கவில்லை.
‘கடவுளே! இதெல்லாம் நீ பார்த்துட்டுதானே இருக்க, நான் என்ன பண்ணுவேன். வேணாம் வேணாம்னு சொன்னேன். கேக்கலயே! இப்போ கஷ்டப்படுறது நான்தானே!’ நடந்ததை நினைத்து இதற்கு மேல் கண் கலங்கினால் பிரயோஜனமும் இல்லை என்று, அவனுக்கு எப்படி புரிய வைக்க வேண்டுமென்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
முட்டை மேல் கல் விழுந்தாலும், கல்லின் மேல் முட்டை விழுந்தாலும் உடைவது என்னவோ முட்டைதான்.
போதை அவன் புத்தியை எந்த அளவுக்கு மயக்கியிருக்கிறது. முதல் கூடலையே மறந்தானே இவ்வனைத்துப் பெருமையும் போதையையே சேரும்.
‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு’ இக் கூற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டு விகுஷ்கிதான்.
அதன் பிறகு மீத்யுகா மன சஞ்சலத்தை நிறுத்தி, மனதை திடப்படுத்த ஆரம்பித்தாள். “சஷ்டி வரட்டும், நான் அவகிட்டவே நியாயம் கேக்குறேன்.
“இதுக்கு அப்பறம் விகுஷ்கிய பக்கத்துலயே நெருக்க விடமாட்டேன்.”
விரைவாக வைத்தியசாலையை அணுகினாள். செவிலியரிடம் கூறிவிட்டு, அறைக்குள் நுழைந்தாள். “அம்மா ரொம்ப நேரம் இருக்க வேணாம். சார் வர முதல் வெளிய வந்திருங்க.” என்றார் செவிலியர்.
“ஓகே சிஸ்டர்.”
சஷ்டியின் அருகில் சென்றாள். சஷ்டியின் கையின் மீது கையை வைத்தாள் மீத்யுகா. “சஷ்டி, நீ யாருன்னு எனக்கு தெரியாது. நான் யாருன்னு உனக்கு தெரியாது. ஆனா, இப்போ நான் உனக்கு அண்ணி ஆகிட்டேன். உங்க அண்ணன் சொல்லுறதெல்லாம் நம்புற சிடிவேஷன்ல இருக்கேன். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேணும். நீ சீக்கிரமா எழும்பி வரணும். உங்க அண்ணா ஏதோ அஞ்சு மாசம் ஆகும்னு சொன்னாரு.
அது வரைக்கும் இந்த விஷயத்த ஆரப்போட முடியாது. நீ கோம பேஷண்ட் இல்ல சஷ்டி. கண்ண திறக்க டிரை பண்ணு.” இப்படி சில நாட்கள் சஷ்டியிடம் பேசிவிட்டு செல்வாள்.
மீத்யுகாவின் மனம் திடத்தில் குறைந்தாலும் உண்மையாக நடந்ததை அவனுக்கு தெளிவு படுத்த வேண்டுமென்ற ஒரு உத்வேகம் இருந்துக்கொண்டே இருந்தது. சஷ்டியின் விழி திறக்கும் நாளுக்காய் காத்திருந்தாள்.
மதுரையிலும் வழக்கம் போல் வெளியே ஒரு முகத்தையும், இருவரின் அறைக்குள் ஒரு முகத்தையும் மாட்டிக்கொண்டான்.
இதையெல்லாம் மீத்யுகா கண்டு கொள்ளாமல் அல்ல, இப்படியெல்லாம் செய்பவன் இருவருக்கு இடையில் இடம்பெற்ற தாம்பத்யத்தை மட்டும் எப்படி மறந்திருப்பான், என்ற கேள்வியை தொடுக்க காத்திருந்தாள்.
சென்னையில் அவசர வேலை என்று மதுரையில் முழுவதுமாய் இரு நாட்கள் கூட இருக்காமல் மீத்யுகாவையும் சேர்த்து அழைத்துகொண்டு வந்திருந்தான். பதினைந்து நாட்கள் ஓடிய வேகமே தெரியவில்லை.
இரவு படுக்கை அறையில், “என்ன மேடம் இப்போ எல்லாம் எங்கிட்ட வாயாடுறதே கிடையாது.”
அவன் வார்த்தைகளை கேட்டு மௌனமாக இருந்தாள். மீண்டும் சீண்ட ஆரம்பித்தான். “வீட்ட விட்டு துரத்திருவேனு பயம் வந்துருச்சோ?”
அவன் இழிவாக பேசுவதை கூட பொருத்திருந்தாள்.
“உன்னதான் டீ எனக்கு பயந்துட்டியா?” பொறுமை காத்தவள் அறையை விட்டு வெளியேச் சென்றாள்.
மீத்யுகா முகவாட்டத்தை பார்த்த லட்சுமி, “என்னமா ஒரு மாதிரி இருக்க?”
“அக்கா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
“என்னம்மா சொல்லு?”
“அக்கா, சஷ்டிக்கு என்னாச்சு, விகுஷ்கிக்கு வேற ஏதாவது லவ் இருந்துச்சா, ப்ளீஸ் எதையும் மறைக்காம சொல்லுவீங்களா?”
எச்சிலை விழுங்கிய லட்சுமியோ, “சஷ்டி பாப்பாக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஆக்சிடன்ட் ஆகிருச்சுமா,
அதுக்கு அப்பறம் கல்யாணம் நின்னு போச்சு, விகுஷ்கி தம்பியோட கண்டிஷன்க்கு ஏத்த மாதிரி பொண்ணு கிடைக்கல மா.
விகுஷ்கி தம்பி லவ் பண்ணாரானு எனக்கு தெரியல மா, ஆனா எந்த பொண்ணும் தம்பிய தேடி வந்ததே இல்ல. சஷ்டிக்கு எப்போ ஆக்சிடன்ட் ஆகிச்சோ அப்பவே தம்பி உடைஞ்சிட்டாரு மா. அதுக்கு முதல் எல்லாம் ரெண்டு பேரோட சிரிப்பு சத்தம் மட்டும்தான் வீடு ஃபுல்லா கேக்கும்.”
“சரி கா, அவங்க அம்மா, அப்பா என்ன ஆனாங்க?”
“அது எனக்கு தெரியலமா, தாய் தகப்பன் இல்லாத புள்ளைங்க நான் எதும் கேட்டு மனச கஷ்டப்படுத்த கூடாதுன்னு கேக்கமாட்டேன்.”
“சொந்த பந்தம்னு யாருமே வீட்டுக்கு வரமாட்டாங்களா?”
“இல்லமா, சொத்துக்காகதான் சொந்தம் வரும்னு தம்பி யாரையும் சேர்த்துகமாட்டாங்க. நான் ரெண்டு வருஷத்துக்கு மேல இங்கதான் வேலை பார்க்குறேன். எனக்கு தெரிஞ்சது இவ்ளோதான் மா.”
“சரி கா, நான் இதெல்லாம் விசாரிச்சேனு அவர் கிட்ட காட்டிக்க வேணாம்.”
“சரி மா, உங்களுக்குள்ள எதும் பிரச்சனையா?”
கண்களை தாழ்த்தி மூக்கை சுழித்து, ‘ஆம்’ என்பது போல் பாவனை செய்தாள்.
“சஷ்டி பாப்பா வந்ததும் தம்பி பழைய நிலைக்கு வந்துருவாருமா, நீ வேற எதையும் யோசிச்சு கஷ்டப்படாத மா.”
லட்சுமி கூறியதை கேட்ட மீத்யுகாவுக்கு, விகுஷ்கி நிலை கவலைகிடமாய் இருந்தாலும், அவளுக்கு விழைந்தது அவளை பொருத்த வரை அது ஒரு நாசக்கேடுதான்.
நடந்த தவறிற்கு அவன் ஒப்புக்கொண்டாலாவது கணவன் என்கிற ரீதியில் ஏற்றுக்கொண்டிருப்பாள். ஆனால் அவன் அப்படி நடக்காதவாறே பேசுகிறான்.
சஷ்டி சுயநினுவிற்கு வர என்ன செய்ய வேண்டுமோ அதனை திட்டமிட்டாள். கடவுளிடம் வேண்டுதல், பூஜை ஒருபுறமிருந்தாலும், விகுஷ்கி உறங்கிய பிறகு சஷ்டியின் அறைக்குச் சென்று, அவன் பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷப்பேழையை திறந்து இடைகால தகவல்களை திரட்டிக்கொண்டாள்.
ஒரு யுகத்தை மீட்டு எடுப்பவள் மீத்யுகா. சஷ்டியை மீட்டு எடுத்து நடந்த முடிந்த பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பாள்?
***
உணர்வுகள் தொடரும்…