என் உயிரே பிரியாதே

download (1)

என் உயிரே பிரியாதே

                 பிரியாதே 1

 

 குழந்தையுடன் ஒரு வயதான பெண் ஓடிகொண்டிருக்க, அவளையும், அந்த குழந்தையையும் துரத்திகொண்டே ஒரு இளம் பெண் துரத்தி வந்துகொண்டிருந்தாள். அந்த குழந்தையை, கை விடாமல் அவள் அங்குமிங்கும் ஓடிகொண்டிருக்க. அவர்களை துரத்திகொண்டே வந்த இளம் பெண், அவர்களை தேடிகொண்டிருக்க , கையில்  குழந்தையுடன் அந்த பெண் ஒளிந்துகொண்டாள் ஒரு அறையில், அந்த வயதான பெண் ஓவ்வொரு  அறையிலும் ஓடி ஒளிந்துகொள்ள, அந்த பெண்ணும் விடாமல் துரத்தி வந்து கொண்டிருந்தாள். அந்த இளம் பெண்ணோ அவர்களை ஒவ்வொரு அறையிலும் கதவை திறந்து தேடிகொண்டிருந்தாள்.

 

அப்போது, ஒருவன் தூரத்தில் அமர்ந்து மேஜையில் கால் நீட்டி கையில் நாளிதழ் படித்துகொண்டிருக்க. அவனை நோக்கி அந்த குழந்தையுடன் அந்த பெண் ஓடினாள். அவனை நோக்கி ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்தது கொண்டிருப்பதை அறியாமல் அவனின் கையில் இருந்த நாளிதழிலே மூழ்கி இருந்தான்.

 

“சார்.. சார்.. என்னையும், என் குழந்தையையும் அந்த பொண்ணு துரத்தி வர்ரா.” அவனிடம் கூற.

 

“அப்படியா எந்த பொண்ணு.. எங்க துரத்தி வர்ரா..” அவனும் அந்த பெண்ணுடன் சேர்ந்து துரத்தி வரும் பெண்ணை எட்டி பார்க்க. அங்கே ஒரு பெண் தூரத்தில் நின்றிருந்தாள்.

 

“ஏன் அந்த பொண்ணு உங்களை துரத்தி வர்ரா.. என்ன காரணம்.” அந்த பெண்ணிடமே கேட்க.

 

“என் குழந்தையை கேட்டு வந்திருக்கா..” அந்த பெண் கூற.

 

“எதுக்கு கேட்க்கனும் உங்க குழந்தையை… உங்களுக்கு இந்த குழந்தைக்கு என்ன சம்மந்தம்.”

 

“இதோ.. இந்த படத்துல இருக்குறது  என் பொண்ணு தான்.” அவன் முன் அந்த குழந்தையுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை தன் பர்சில் இருந்து அவனிடம் எடுத்துக்காட்ட.

 

அவனோ, “ஏம்மா.. நல்லா பாரு உன்னை துரத்தி வர்ர யார்னு… அந்த பொண்ணு நீ தான்ம்மா.” அவன், அவளிடம் எடுத்து சொல்ல.

 

அவளோ துரத்தி வந்த பெண்ணை திரும்பி பார்த்தாள். அந்த பெண்ணையே, வயதான பெண் உற்று பார்க்க, அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது. இருபது வருடத்திற்கு முன் அந்த வயதான பெண் எப்படி இருப்பாளோ அதாவது இளம் வயது பெண் தான் அந்த புகைப்படத்தில் இருப்பது  போலவே எதிரில் இருந்த்து.

 

அந்த பெண்ணிற்கு அப்போது தான் எல்லாம் புரிந்தது. சிறிது வருடத்திற்கு முன் தன் குழந்தை ஒரு விபத்தில் இறந்து போனதும், அதனால் அந்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்போது தான் இன்னொன்றும் புரிந்தது, இறந்து குழந்தை அவள் கனவில் வருவதும், அந்த குழந்தையுடன் நேருக்கு நேராக பார்ப்பதும், தினமும் பேசுவது, பின் இப்போது பார்த்தாளே, ஒரு இள வயது பெண் துரத்தி வருவது போன்று என நடந்துகொண்டிருக்கிறது.

 

“இங்க பாரும்மா உன் குழந்தை இறந்து போயிருச்சு. அதே நினைப்புல இருக்குறதுனால தான் உன்னால குழந்தையோட இறப்புல இருந்து வெளி வரமுடியலை. உங்க கையில இருக்குற குழந்தையை விடுங்க. உன் கற்பனையில இருந்து வெளிய வாம்மா அப்போ தான் உன்னால இயல்பு வாழ்க்கைக்கு வர முடியும்.”

 

அந்த வயதான பெண்ணோ கையில் இருந்த ஆறு வயது தன் பெண்ணை விட, அவளோ ஓடி சென்று மறைந்து போனாள். இவையெல்லாம், அந்த பெண்ணின் கனவில் நடந்துகொண்டிருந்தது.

 

அவன், அந்த வயதான பெண்ணிடம் பேசிகொண்டே நினைவுலகத்தில் அதாவது அவளோட நினைவுலகத்தில் இருந்து இருவரும் வெளி வந்தனர். உளவியல் சிகிச்சை மூலம்,(ஹிப்னோடைஸ்) அந்த வயதான பெண்ணிற்க்கு எட்டு மாதமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தினான்.

 

“இப்போ சொல்லுங்க ம்மா.. இப்போவும் உங்க பொண்ண நீங்க பார்க்குறீங்களா? பேச முடியதா உங்களால?”  அந்த வயதனா பெண்ணிடம் கேட்க.

 

“என் பொண்ணோட நினைவுகள் மட்டும் தான் இப்போ என்கிட்ட இருக்கு. அவள் இறந்து போனதை இப்போ ஏத்துக்க முடியுது,  அவளை நான் பார்த்தது, பேசுனது எல்லாம் என்னோட கற்பனை தான் ஒத்துக்கிறேன். ஆனா டாக்டர், எட்டு மாதமா எனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்குறீங்க, என் ஆழ் உறக்கத்துல நீங்களும் வரீங்க. ஆனா  அந்த ஆழ் உறக்கத்துல நீங்க எனக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுற டாக்டர்னு ஏன் எனக்கு தெரியலை.” அவள் கேட்க.

 

அவன் சிரித்துகொண்டே “இது தான் ஹிப்னோடைசம் ட்ரீட்மெண்ட் ம்மா. ஏற்கனவே தெரிந்த நபராக இருந்தாலும் அவர்களின் ஆழ் உறக்கத்தில் சென்று உறவு முறைகளை அதாவது, நான் தான் உன் அம்மா, அப்பா,  என சொன்னாலும் உடனே நம்ப கூடியது தான் ஹிப்னோடைசம்.”  அந்த பெண்ணுக்கு அவன் விளக்கி சொல்லிக்கொண்டிருக்க.

 

இதெல்லாம் பிரபல மருத்து கல்லூரியில் அவன் கான்பிரன்ஸில் கலந்துகொண்டு அவன் வீடியோவாக போட்டு காட்டிக்கொண்டிருந்தான். இவனின் கான்பிரன்ஸை பார்க்கவே இன்னொருவரும், அவருடன் முரளியும் வந்திருந்தனர்.

 

சிவகுரு.. ம்கூம் இப்படி சொன்னால் நன்றாக இருக்காது. உளவியல் மருத்துவ நிபுணர், டாக்டர். சிவகுரு என்று சொன்னால் தான் நன்றாக இருக்கும். ஆம், சிவகுரு ஒரு உளவியல் மருத்துவர், அவனின் கையில் ஒரு நோயாளின் கோப்புக்கள் வந்தாலும், அவனே அவர்களை குணப்படுத்தி நிஜ வாழ்க்கையில் அவர்களை சாதாரண மனிதனை போல வாழ வைப்பான். அவன் இந்த மருத்துவ துறையில் பல வெற்றி கண்டவன், சிறந்த உளவியல் மருத்துவன் என பெயர் போனவன் தான் டாக்டர். சிவகுரு.

 

“நீயும், சிவாவும் என்னோட ஸ்டூடண்ட் சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. ஏன்னா, இரண்டு பேருமே படிப்புல அவ்வளோ கெட்டிக்காரவங்க. ஆனா, அவன் ஏன் மும்பை கான்பிரன்ஸ்ல கலந்துக்கமாட்டேனு சொன்னான் முரளி.” முரளி, சிவாவின் ஷீப் டாக்டர் அண்ட் மருத்துவ பேராசிரியரான, டாக்டர்.பிரபாகரன் முரளியிடம் கேட்க.

 

“தெரியலை ஷீப்.. நானும் அவன்கிட்ட பல முறை எடுத்து சொல்லிட்டேன். அவன் ஏன் அந்த மும்பை கான்பிரன்ஸில் கலந்துக்கொள்ள மாட்டேன் வேல்யூபல் ரீசன் சொல்லமாட்டேங்குறான். அதான் உங்க நியாபகம் வந்தது, உங்ககிட்ட சொன்னா, நீங்க அவனை கன்வினியன்ஸ் பண்ணி மும்பை அனுப்பி வைப்பீங்கனு தான் உங்களையும் இந்த கான்பிரன்ஸ்க்கு வரச்சொன்னேன்.”

 

“ஹ்ம்ம்… இன்னும் அவன் பிருந்தாவ மறக்கலையா முரளி.” சிவாவின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்தவன் முரளி மட்டுமே அதனால் தான் இந்த கேள்வி.

 

“மறக்க முடியலைன்ற கட்டத்துல அவன் இப்போ இருக்கான் ஷீப். இன்னமும் பிருந்தா அவன்கூடவே இருக்கானு நினைப்புல தான் அவன் வாழ்ந்துட்டு இருக்கான். மறந்திட்டியானு நீங்களே போய் கேட்டாலும் அவன், சொல்லுற பதில், ‘என் பக்கத்துல இருக்கா’னு சொல்லி உங்களையே நோயாளியாக்கிருவான் ஷீப்.” சோகமாக ஆரம்பித்து அவர்களின் ஷீப்பை கேலி செய்தான் முரளி.

 

”ஹாஹா…ஹா.. சரி தான் சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கு அவன்கூட இருக்குறது நீ தான முரளி அப்போ அவன மாதிரி தான் நீயும் சொல்லுவ.” அவர்களுக்குள் பேசிகொண்டிருந்ததை தூரத்தில் வரும் போது பார்த்துவிட்டான் சிவகுரு.

 

கான்பிரன்ஸ் முடித்துவிட்டு முரளியை தேடி சிவகுரு வந்துகொண்டிருக்க சந்தோஷ அதிர்சியாக அவர்களின் பேராசிரியர் முரளியுடன் நின்று பேசிகொண்டிருப்பதை பார்த்ததும் சிவாவிர்க்கு மகிழ்ச்சி. தூரத்தில் சிவா தங்களை பார்த்துவிட்டதை இங்கே அறிந்துகொண்டார் ஷீப் டாக்டர்.

 

“ஷீப்.. நீங்க எப்போ வந்தீங்க.. அதுவும் என் கான்பிரன்ஸ்ல நீங்க… அன்பிலிவ்பல் ஷீப். முரளி கூட என்கிட்ட சொல்லலை.. டேய்.. ஷீப் வந்ததை ஏன் டா என்கிட்ட சொல்லலை.” பேராசிரியர். பிரபாகரனை பார்த்த சந்தோஷத்தில் அவன் முகம் அவரை எதிர் பார்க்கவில்லை என அவர் அறிந்துகொண்டார்.

 

”எனக்கே சப்ரைஸா தான் இருந்தது சிவா.. நானே இங்க வந்த பின்னாடி தான் ஷீப் அ பார்த்தேன். எனக்கும் உன்னை மாதிரி சப்ரைஸா தான் இருந்தது, ஷீப் சொல்லுங்க. நான் என்னமோ அவன்கிட்ட நீங்க வந்ததை மறைத்தது போல என்மேல் கோவப்படுறான்.” முரளியும்,  தெரியாதது போல சிவாவிடம் காட்டிகொள்ள, இதையெல்லம் புரிந்துகொள்ளாமல் இருப்பாரா.

 

முரளி ஷீப்-இடம் திரும்பி, தெரியாதது போல அவன் காட்டிகொண்டதாக அவரிடம் கண் அசைத்தான். அவரும் அவனுடன் சேர்ந்துகொண்டு சிவாவிடம் பேச ஆரம்பித்தார்.

 

“நானா தான் வந்தேன் சிவா.. முரளிக்கு தெரியாது உன் கான்பிரன்ஸ்ல நான் வருவேனு. அப்படியே உன்னையும், முரளியையும் பார்த்துட்டு போலம்னு வந்தேன் அப்படியே உன் கான்பிரன்ஸ் எப்படி இருக்குனு பார்க்கவும் வந்தேன் சிவா.”

 

தன்னிடம் படித்த மாணவன், சிறப்பு மருத்துவர்களின் முன்னும், வருங்கால மாணவர்களின் முன்னும் அவன் ஆராய்ச்சி செய்து, அறிந்து தெரிந்து கொண்டவைகளையும், அவன் சிகிச்சை அளித்த நோயாளிகளின் வாழ்வியல் தற்ப்போது எப்படி உள்ளது என்பதை பற்றியும் அவன் ஒரு ஆசிரியாராய் பாடம் நடத்துவதை காண்பது மகிழ்ச்சி தான். அது தான், டாக்டர். பிரபாகரனுக்கும் இருந்தது.

 

“அருமையா இருந்தது சிவா உன்னோட கான்பிரன்ஸ் அழகாக உன்னோட உரையாடலும் அதுக்கேற்ற மாதிரி கேள்விக்கு பதிலும் ரொம்பவே அருமையா இருந்தது சிவா. இப்போ தான் எனக்கு பெருமையா இருக்கு, என்கிட்ட படிச்ச மாணவன் வாழ்க்கையில தோற்று போகமாட்டானு நீ நிரூப்பிச்சுட்ட.” அவனின் இரு தோள்களில் கை வைத்து அவனை பாராட்டி கட்டியணைத்தார்.

 

“ஷீப் இதெல்லாம் நீங்க எனக்கு சொல்லிகொடுத்த பாடம் எப்படி மறக்க முடியும். என் இரத்ததுல ஊறி போனது இந்த படிப்பும், இந்த மருத்துவ துறையும். அப்படியிருக்க என் ஷீப் பேர் என்னைக்கு நிலைத்து இருக்க மாதிரி தான் நான் செய்வேன்.” அவனும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

 

“அப்புறம் ஏன் சிவா மும்பை கான்பிரன்ஸ் மீட்டிங்க் போகமாட்டேனு சொன்ன.” அவனின் கண்ணை பார்த்து கேட்க.

 

”ஷீப் நீங்க என்னோட கான்பிரன்ஸ் பார்க்க வரலை, என்னை சமாதான செய்து மும்பைக்கு அனுப்ப பிளானோட வந்த மாதிரி இருக்கு. யார் முரளி உங்களை வரசொன்னான என்னை சமாதானம் செய்ய.” சிவா, குருவுக்கே பாடம் சொல்லிகொடுப்பன் போல அவர்களின் மனநிலையை சரியாக சொன்னான்.

 

சாதாரணமாக ஷீப் டாக்டர் எந்த கான்பிரன்ஸிலும் கலந்துகொள்ள மாட்டார். முக்கியமாக அவரிடம் படித்த மாணவர்கள் வந்து அவரை அழைத்தாலும் அவர் செல்லமாட்டார். அப்படியிருக்க, சிவாவின் கான்பிரன்ஸில் அவனின் ஷீப் வந்தது அவனுக்கு மகிழ்ச்சி என்றாலும்,  அதன் பின் அவரின் கொள்கையை நினைத்து பார்த்துக்கொண்டே தான் அவர்களின் அருகில் வந்தான்.

 

சிவா தன்னை அறிந்துகொண்டான் என அவருக்கு தெரிந்ததும். முரளி ஷீப்பையே பார்க்க, அவரோ “என்னையும் இந்த கான்பிரன்ஸ்க்கு  கூப்பிட்டிருந்தாங்க சிவா. டாக்டர். சோமசுந்தரம் எனக்கு பர்ஸ்னலா அழைப்பு விடுத்தார் சிவா.”

 

”ஷீப், என்னை எப்படி சமாதானம் செய்தாலும் என்னால மும்பை கான்பிரன்ஸ்ல கலந்துக்க முடியாது ஷீப்.” அவன் உறுதியாக மறுத்தான்.

 

இவ்வளவு தூரம் அவன் மறுக்கும் வகையில் அந்த மும்பை கான்பிரன்ஸில் ஏன் கலந்துகொள்ள மாட்டேன் என ஏன் சிவா சொல்கிறான் அவருக்கு பெரிய சந்தேகமாக தெரிய. முரளி, ஷீப் அ பார்க்க, அவரும் முரளியை தான் பார்த்தார். அவர்கள் பார்வையில் என்ன பேசிகொண்டனர் என அவனுக்கு தெரியாது. ஆனால் சிவா ஏதோ ஒன்றை மறக்க முடியாமல் தான் இந்த மும்பை ட்ரிப்பை வேண்டாம் என்கிறானா.. இல்லை அங்கு சென்றால் அவனின் மனவேதனை இன்னும் அதிகமாகும் என்பதலா?

 

                                                பிரியாதே……

 

Leave a Reply

error: Content is protected !!