அலை ஓசை – 8

அலை ஓசை – 8
அலை ஓசை – 8
ஆதி ஆர்ப்போட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாப், டோல் கேட் என்று அனைத்து வழியிலும் ரக்ஷன் சென்ற தடையத்தை தேடி அலைந்தான். ஆனால், அவனது முயற்சி தோல்வியையே தழுவியது. பூஜ்யமாக முடிந்த தன் முயற்சியை வருந்தினான். பிறகு, ஏதாவது லோசியல் மீடியா லிங்க் இவர்களுக்குள் இருக்குமா என்று தேடலாம், என்று அந்த முயற்சியில் ஈடுபட்டான்.
இந்த சோஷியல் மீடியாவிலேயே மூழ்கி முத்து எடுத்த தன் நண்பன் இலங்கோவின் உதவியால், பேஸ்புக், வாட்ஸ்அப்யில் மகேஷ், ரக்ஷன் அக்கௌன்ட்டை தேடி பிடித்து, அவர்கள் குரூப் சாட் பண்ணி இருப்பதை அறிந்தனர். அந்த குரூப்பில் மகேஷ், ரக்ஷன், மகேஷின் அப்பா இன்னும் சில பேர் ஆட் ஆகி இருப்பதை அறிந்தான்.
ஆனால், அவர்களின் சாட் அனைத்தும் டெலீட் ஆகி இருப்பதால், மெசேஜை ரிடிரீவ் பண்ண சில சாப்ட்வேர்க்களை லவுண்லோட் செய்து, அந்த பிராசஸ்க்காக காத்துக் கொண்டு இருந்தான். பின், அந்த வேலை நடக்க சில மணி நேரம் ஆகும் என்று, அந்த குரூப்பில் இருக்கும் 10 பேர்களின் டீடய்ஸ் கலெக்ட் செய்யலாம் என்று, குரூப் மெம்பர்ஸை கொடுக்க தன் நண்பனிடம் சொன்னான்.
அந்த குரூப்பில் மொத்தம் 10 பேர்கள் இருந்தனர். அந்த 10பேர்களின் வாட்ஸ்அப் போன்ற எல்லா சோஷியல் நெட்வர்க் எல்லாமே டிஆக்டிவேட் ஆகி இருப்பதை கண்டறிந்தான். அவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் தன் நண்பன் மூலம் அறிந்து கொண்டு, க்ரைம் டிடக்டிவ் பிரகாஷை காண சென்றான். அதோடு அந்த 10பேர்களின் சாட் டீடெயல்ஸையும் பாக் கப் செய்ய தன் நண்பனிடம் கூறவும் ஆதி மறக்கவில்லை.
# # # # #
நம்பிக்கையோடு நீ
படிக்கட்டின் கணக்கை
பார்க்காமல் உன்
முதல் அடியை
எடுத்து வை…
முடியும் வரை
முழு முயற்சி செய்!
உன்னால் முடியும்
வரை அல்ல…
நீ எடுத்த காரியம்
முடியும் வரை!
# # # # #
ருத்ரா மகேஷின் வீட்டை சோதனை போட வேண்டும் என்ற ஆடரை வாங்க கமிஷனர் அலுவலகம் சென்றான். அங்கே கமிஷனர் தீவிரமாக யாருடனோ பேசியதை கவனித்தான். இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டை நம்பினால், கால தாமதம் ஆகிவிடும் என்றே அவன் இந்த வழியில் சென்றான்.
கமிஷனர் மிகவும் ப்ரைவசி பார்ப்பார் என்பதை மனதில் கொண்டே அவன் அவரின் கண்ணாடி ருமிற்கு வெளியேவே காத்திருந்தான். ஆனால், லிப் ரீடிங் தெரிந்த ருத்ரா விற்கு அவர் பேசிய வார்த்தைகள் எல்லாம் இந்த கேஸோடு சம்பந்தப்பட்டதாகவே பட்டது.
அதோடு அவர் கூறிய, “இந்த வேலை பார்த்தது நீ தான் ன்னு தெரிஞ்சா ருத்ராவும் சந்திராவும் என்ன நினைப்பாங்கனேன்னு எனக்கு தெரியல டா. நீ பண்றது சரியா தப்பானு கூட என்னால சரியா சொல்ல முடியல. நான் உன்… ” வரிகள் அவனுக்கு அவ்வளவு சரியாக படவில்லை.
அதுவரை ருத்ரா வந்ததை கவனிக்காத கமிஷனர், தன் போக்கில் பேசிவிட, ருத்ரா தன்னை, அதுவும் தன் உதடு அசைவுகளை கவனிக்கிறான் என்று அறிந்தவுடன், ருத்ரா விற்கு முதுகு காட்டி பேச ஆரம்பித்தார்.
சிறிது நேரத்திற்கு பின், ருத்ராவை அழைத்த கமிஷனர், அவன் கேட்க வந்த ஆடரை கொடுக்க மறுத்து, பின் ருத்ராவின் சந்தேக பார்ப்பவை தவிர்க்கவே சில பல அறிவுரையை கொடுத்த பிறகு ஆடர் பேப்பரில் கையொப்பமிட்டார்.
தன் வீட்டை சோதிக்க வந்ததை தன் போலீஸ் எடுபடி மூலம் அறிந்து கொண்ட ரெட்டி, தன் வீட்டில் இருக்கும் சிலவற்றை இடம் பெயர்த் தான். இதனால், ருத்ரா விற்கு தான் தேடி வந்த எதுவும் கிடைக்காமல் போனது. அவன் கிளம்புவதற்கு ஆயத்தமாகும் போது, அவன் கண்ணிலும் கருத்திலும் சிலது படிந்தது.
கருத்தில் படிந்ததை ருத்ரா அலட்சிபடுத்தாமல், அதே சமயம் ரெட்டிக்கு சந்தேகம் வர கூடாது என்ற எண்ணத்தில், வேறு யுக்தியை கையாள வேண்டும் என்ற முடிவோடு, சந்தேகம் வந்த இடத்தை நோக்கி சென்றான்.
# # # # #
பலசாலி என்றுமே
நம்புவது அவன்
தன்னம்பிக்கையை தான்!
தோல்விகள் உன்னை
தூங்க வைக்கும்
தாலாட்டு அல்ல!
நீ தலை நிமிர்ந்து
நிற்பதற்கான
தேசிய கீதம்!
# # # # #
ஆதி, சந்திரா, ருத்ரா எல்லோரின் மண்ட உளைச்சலுக்கும் காரணமான நிழல் உருவமோ ரக்ஷன், மகேஷ் இருவருக்கும் மயக்க ஊசியை போட்டு, அடுத்து நடக்க வேண்டியவற்றை திட்டம் தீட்டி கொண்டு இருந்தது. பின் எப்போதும் போல, தான் செல்லும் பள்ளிக்கு சென்றது. தன் குழந்தையை பள்ளியில் விட வந்த தாய் அக்குழந்தையை ஆசிரியரிடம் விட்டு விட்டு, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டே செல்லும் தன் குழந்தையின் அழகை ரசித்து பார்த்தாள்.
அவள் நினைவில் குழந்தை பிறந்த போது, லேபர் வார்டில் நடந்த நிகழ்வுகளை படமாக ஓடியது. பிரசவ வலியில் தவித்த போது, கணவனாக கலங்கிய தன் கணவனின் கண்கள், வார்டில் நுழைந்தவுடன் மருத்துவராக மாறி பிரசவத்தை கவனித்த கடமை உணர்வு ஊறிய அதே கண்கள், குழந்தை பிறந்த நொடி, தந்தையாக மாறி கொஞ்சி பாசம் பொருந்திய அதே கண்கள், “எத்தனை ஜாலங்களை காட்டி இருக்கிறாயடா கள்ளவனே?!” தன் கணவனின் கண்களை எண்ணியே நடந்த சென்ற அந்த தாய், தன்னை கடந்து சென்ற ஒருவரை கவனிக்காமல் மோத, மோதிய வேகத்தில் தடுமாறி விழ போனாள்.
அவள் விழாமல் தன் கைகளில் பிடித்த அந்த உருவத்தை அந்த தாய் நிமிர்ந்து பார்த்தாள். அதே சமயம், அந்த உருவத்திற்கு சொந்தமானவனும் பார்த்தான். கண்கள் நான்கும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. தன் முழு உருவத்தையும் மறைத்து இருந்தும், அவனது கண்களே பல ஆயிரம் கதைகள் பேசுவதாய். மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி புரிவதாய். சில நொடிகளில் தன்னை மீட்டு கொண்டு தன் வழியிலே அவன் சென்று விட்டான். செல்லும் அவனையே பார்த்தபடி அவள். திக் பிரம்மை தான் பிடித்து விட்டதோ அத்தாய்க்கு?
‘எந்த கண்களை தான் பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்தாலோ , எந்த கண்களை மண்ணும் புல்லும் அரித்திருக்கும் என்று எண்ணியிருந்தாலோ, அதே கண்கள். இது நிஜம் தானா? இல்லை நினைவில் தன் மனதை கவர்ந்த கள்வனின் கண்களை நினைத்ததன் பிரதிபலிபாக இருக்குமோ? ‘ ஓராயிரம் கேள்விகள் மனதை குடைந்த போதும், பதில் தெரியாமல், பேதையாய் இவளது நிலை!
கால்கள் தன் பாட்டில் பழக்க தோஷத்தில் அந்த தாயை அவள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தது. எப்படி வீடு வந்து சேர்ந்தாய் என்று அவளை கேட்டிருந்தால், பாவம் திருதிரு என்று முழித்திருப்பாள். தன் அறைக்கு சென்று தனது டைரியில் மறைத்து வைத்திருந்த ஒரு போட்டோவை கையில் எடுத்து, அதில் சிரித்துக் கொண்டிருந்தவனுடன் மௌனமே பாஷையாக கொண்டு பேசினாள். பிறகு, அந்த போட்டோக்கு பின் அவன் எழுதிய பாடல் வரிகளை படிக்க ஆரம்பித்தாள்.
உன்னோடு நான்
இருந்த ஒவ்வொரு
மணித்துளிகளும்
மரண படுக்கையிலும்
மறக்காது கண்மணியே!
அந்த பாடல் வரிகளை படித்த அந்த தாயின் உதடுகள் அழுகையில் பிதுங்கியது. என்றும் போல் இன்றும் அவன் காதலின் அலைகள் அவள் மனதில் கரை புரண்டு ஓடியது. அவள் மனதில் அவள் இணையின் நினைவுகள் புயல் போல் ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டு இருந்தது. அவள் மனதை போலவே இயற்கையும் புயலின் அறிகுறிகளை வெளிப்படுத்தி கொண்டு இருந்தது. இயற்கையின் மாற்றத்தை அறியாமல், தன்னை விட்டு , இந்த உலகத்தை விட்டு சென்ற தன் இணையின் காதலை எண்ணி இன்று இந்த பேதை மனது கண்ணீர் விட்டது.
புயல் அறிகுறியால் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை அளித்ததால், குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்த டாடி என்று குழந்தையால் அழைக்கப்படும் அந்த நெடியவன், தன் அறையில் அழுதுகொண்டு இருந்த அந்த தாயின் நிலையை நினைத்து அவன் கண்களிலும் கண்ணீர் பெருகியது. அவளை தனியே விடவும் முடியாமல் அவளிடம் நெருங்கவும் முடியாமல் தவித்து போனான். அந்த தாயின் கண்ணீரும் நெடியவனின் தவிப்பும் கண்டு, அந்த தாயை தொடர்ந்து வந்து அவள் அறையின் பால்கனியின் ஓரத்தில் மறைந்து நின்று கொண்டிருந்த நிழல் உருவமும் கலங்கியது.
# # # # #
காலங்கள் வலிகளை
ஆற்றும் சிறந்த
மருந்தாகுமாம்…
எவனோ பித்தன்
அறியாமையால்
சொல்லி சென்றான்…
காதல் தந்த வலிகள்
காலம் கடந்து மனதை
அரித்து கொல்லும்!
வலிகள் மறைக்க
படலாம் ஒரு போதும்
மறக்க படாது!
# # # # #
வெயிட் அண்ட் வாட்ச்…
அலைகளின் ஓசை அடங்குவதில்லை …
# # # # #