பூவை வண்டு கொள்ளையடித்தால்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 41(1)
சொல்லொண்ணோ உணர்வே, முத்துவின் மனம் முழுதும் வியாபித்து இருந்தது. உதிட்டில் தவழும் மூரலோடு தனது உடைமைகளை எடுத்து வைக்கும் முத்துவின் அழகுச்செயலை ரசித்தவாறு அமர்ந்திருந்தார் லட்சுமணன்.
பிறந்த வீட்டுக்குப் போகும் மனைவிமார்களின் சந்தோஷமும் குழந்தை தனமும் என்றும் குறையாத அழகு தான்.
“ஏங்க, எல்லாம் சரியா தானே வாங்கிருக்கோம்… லிஸ்ட் ல எதுவும் விட்டுப் போகலையே! எல்லாருக்கும் வாங்கிருக்கோம் தானே? ” இத்தோடு பத்தாவது முறையாக, லட்சுமணனிடம் கேட்டு விட்டார் முத்து.. அவரும் சலிக்காமல் பதில் தந்து விட்டார்.
இப்போது மீண்டும் கேட்டு வைக்க முத்துவின் மேல் கோபம் வர்றாமல், காதல் மட்டுமே ஊற்றெடுக்க, காதலாய் பார்த்தவர்,
” முத்து இங்க வாயேன்….” அவரும் முன் கைநீட்டி, விரலை அசைத்தார்.
” என்னங்க? ” அவர் பக்கத்தில் வந்தமர, நெற்றி, மூக்கு, கன்னம் என முத்தம் வைத்து அவரைச் சிவக்க வைத்தார்.
” ஏங்க, எந்த நேரத்துல என்ன பண்றீங்க? விடுங்க..” என்ற வார்த்தைகள் குழைந்து உள்ளே போயிருந்தது .
” உன்னை இப்ப பார்க்க, பழைய முத்துவா தெரிந்த, முதல் முறையா உன்னைப் பார்த்ததும் எனக்குள் வந்த அந்தக் காதல், இப்போதும் வர்ற, உன்னைப் பார்த்தும் நான் செய்ய நினைச்சதை இப்போ செய்றேன்…” என்று மீண்டும் அவர் முத்தத்தைத் தொடர, அவர் நெஞ்சில் கை வைத்து தடுத்தவர் , “பேரன் பேத்திய, கொஞ்ச வேண்டிய வயசுல,என்னைக் கொஞ்சிட்டு இருக்கிங்க”என்றார் வெட்கம் மாறாமல்.
” பேரம் பேத்தி வந்தாலும், உன் மேல வச்ச காதல் குறையாதது போல தான், இந்த முத்தம் வைக்கிற, ஆசையும் குறையாது…” என்று கூற, அவர் உச்சியை முகர்ந்தார்.
” ரொம்ப, சந்தோசமா இருக்கேங்க,. என்னதான் இங்க, நான் சந்தோசமா இருந்தாலும் , அம்மா , அப்பா உடன் பிறந்தவங்களோட ஒட்டும் உறவுக்கு இல்லமா இருந்தது ஒரு குறையா இருந்துச்சுங்க. ஆனா, இப்ப அதுவும் இல்லை… பெத்தவங்க சந்தோஷத்துக்காக மெனக்கெடும் பிள்ளைங்க இருக்க, என்ன சொல்ல, நான் ரொம்ப லக்கிங்க,என் புள்ள மயூ கிடைக்க..” தாய் பாசம் முத்துவிடம் தலைக்தூக்க, பொறாமைக் கொண்டவர்,
” அவன் ஒண்ணும் உனக்காகப்
போலம்மா, அவன் சந்தோசத்துக்காக, அவன் காதலுக்காகப் போயிருக்கான்.” சிறு பிள்ளைப் போல் , அவனை மாட்டி விட, அவர் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி வைத்தவர்..
“மகனைப் புகழ்ந்திட்டா போதுமே உங்களுக்குப் பொறாமை வந்திடுமே.. அவன் காதலுக்காக தான் போனான்.. ஆனாலும் அவன் காதல் கிடைச்சதும் சுயநலமா யோசிக்காம, குடும்பத்தைச் சேர்த்து வைக்க நினைக்கிறான்ல, அதான் என் மயூ.” என்றதும் அவர் இதழைச் சுளித்தார்.
” அம்மா, அப்பா வாங்க, பிளைட்க்கு லேட் ஆச்சு, ” தன் மகளின் குரல் கேட்க பேச்சினை முடித்து விட்டு தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
” அரே ! என் மருமகள் முகம் ரொம்ப பிரகாசமாவும் அழகாவும் இருக்கே..” என்றவர் தன் இடுப்பில் சொருகி இருந்த பணத்தை அவர் தலையைச் சுத்தி, வேலைக் காரிடம் கொடுத்தார்… அவரது இச்செயலில் வெட்கம் கொண்டு நின்றார்..
” அம்மா, உன் மருமக சொந்த ஊருக்கு போறால அதான் முகம் பிராகாசிக்குது… என்ன முத்து உண்மை தானே? ” தனாவும் வினவ, தன் கணவரின் பின் வெட்க பட்டு நின்றார்..
“என்ன அத்தை, பிறந்த வீட்டுக்குத் தானே போறீங்க? இல்ல பொய் சொல்லி மாமா கூட செகண்ட் ஹனி மூன் போறீங்களா? வெட்கம் ரொம்பல படுறீங்க…” நிவியும் அவளும் தன் பங்குக்கு அவரை கலாய்த்தாள்..
” போதும் போதும்… என் மருமகள கிண்டல் பண்ணினது. நீ பத்திராம போய்ட்டு வா முத்து… சீக்கிரமா நம்ம குடும்பம் ஒண்ணும் சேரும்… நாங்களும் சீக்கிரமா அங்க வந்துடுவோம்… மயூ, பேட்டா கல்யாணத்துக்கு… ” என்றதும் அவர் காலைத் தொட்டு வாங்கினார், அவரை ஆசிர்வாதம் செய்தார் சகு..
தன் மாமாவிடம் சென்றவள், அவர் பாதங்களையும் தொட்டு வணங்க, ஆசிர்வதித்தவர்.” நல்லா இருமா.. உன் மனசு போலவே எல்லாம் நடக்கும்… சீக்கிரம் நம்ம குடும்பம் சேர்ந்து பழைய படி, மகிழ்ச்சியா இருப்போம்… பத்திரமா போயிட்டு வா…” என்றார்..
அங்கிருந்து முத்து, வாணி, லட்சுமணன் மூவரும் கிளம்பினார்கள்..
முத்துவிற்குச் சந்தோசம் தாளவில்லை, வீட்டை விட்டு வந்ததிலிருந்து, இன்று வரை அவர் மதுரைக்கு வந்தே இல்லை… வாசு வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த விசேஷங்களில் கூட, கலந்து அத்தை முறை செய்ததே இல்லை.. இன்று தான் அதற்கு ஒரு விமோசனம் கிடைத்தது போல… பரதனின் மகள் பவஸ்ரீ , வயதுக்கு வந்துவிட்டாள்… தன் தம்பி அழைப்புக்கு இணங்க, குடும்பத்தோடு மதுரைக்குக் கிளம்பினார்கள்..
இங்கோ, அந்தப் பெரிய வீட்டில் வேலைகள் தடப்புடலாக நடத்துக் கொண்டிருந்தாது..
பள்ளிச் சென்ற, பவஸ்ரீ ,தன் உடையில் படிந்தக் கரையைக் கண்டு பயந்து, ஆசிரியர்களிடம் அவள் கூறினாள், அவர்களும் அதனை உறுதிப்படுத்தினார்கள்.
பவஸ்ரீயின் வீட்டில் அழைக்க, போனை எடுத்தது அர்ஜுன் தான்… ஆண்குரல் கேட்டதும், அங்கு ஆசிரியர், ” பவஸ்ரீக்கு உடம்பு சரியில்லை, வந்து அழைச்சுட்டு போங்க” என்று மட்டுமே சொல்ல,
இவனோ, சித்தி வேலையாக இருக்க, தானே சென்று அழைத்து விட்டு வருவதாக நினைத்தவன், பைக்கை விடுது.. காரை எடுத்துச் சென்றான்.உடன் ஜெயஸ்ரீயையும் அழைக்க வேண்டும், இருவரையும் அமர்த்தினாலும் பேக் வேற இருக்கும் எதற்கு சிரமம் என்று காரை எடுத்துச் சென்றான்.
அங்கே பவஸ்ரீயின் ஆடை முழுதும், இரத்தம் இருக்க, இடையில் சாலை வைத்து கட்டிருந்தார்கள், ஜெய ஸ்ரீக்குப் புரியவே இல்லை.. அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அங்கு அர்ஜுனும் வர்ற,ஆசிரியர் தயங்கினார்.
” சார், வீட்டில இருந்து லேடீஸ் வர்றலியா ? ” பவ ஸ்ரீயின் ஆசிரியர் வினவ,
” பிவர் தானே, நானே கூட்டிப் போறேன்.. அவ, என் சிஸ்டர் தான்…” என்றான். கொஞ்சம் தயங்கியவர், ” சார், உங்க சிஸ்டர்… ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டாங்க, லேடீஸ் வந்தா நல்லாருக்கும்னு கேட்டேன்..”
” ஏங்க இதை போன் பண்ணும் போதே, தெளிவா சொல்லிருக்கலாம்ல.. எங்க சித்தியைக் கூட்டி வந்துருப்பேன்.. நீங்க மொட்டையா முடியல சொன்னா, நான் காய்ச்சல் தான் நினைச்சு வந்தேன்…” என்றவன், ‘ என்ன செய்யலாம் ‘ என்று யோசித்தான்..
பின் அவன், ” நானே, கூட்டிட்டுப் போறேன்… ” என்றவன் இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு போனான்…
பவா, அமைதியாக வந்தாள், ஜெய ஸ்ரீயோ அவளை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்… இருவரையும் கண்ணாடி வழியே பார்த்தவாறு வந்தான் அர்ஜுன்..
” ஒய், பட்டாசு என்ன அமைதியா வர்ற? வழ வழன்னு பேசிட்டே வருவ, இப்போ என்ன ஆச்சு உனக்கு? ” என்றவனை நிமிர்ந்து பார்க்காது..
” நான் செத்துருவேணா அர்ஜு அண்ணா? ” என்றதும் சடரன் பிரேக் போட்டுக் காரை நிறுத்தினான்…
” ஏன்டி அப்படி சொல்லுற? ” திரும்பி அவன் கேட்க,
” என்….
எனக்கு… பிளட்டா வருது… எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜு அண்ணா” என தேம்பி தேம்பி அழுதாள்..
” ஹேய் பட்டாசு, பிளட் வந்தா செத்து போயிருவாங்கன்னு யாரு உனக்கு சொன்னா ? அதெல்லாம் இல்ல,நீ வளர்ந்துட்ட பட்டாசு.. நமக்கு முடி வளர்வது போல, நகம் வளர்வது போல,உன் உடல் இருக்க உறுப்பு வளர்ச்சி அடைந்து இருக்கு, அது தான் கெட்ட ரத்தத்தை வெளியேற்ற உதவுது.. ரத்தம் போனா செத்துருவோம் நினைக்க கூடாது புரியுதா. இது எல்லா கேர்ல்ஸ், உமேன்ஸ்க்கும் வருவது தான். சித்தி, உனக்கு அதைப் பத்தி சொல்லுவாங்க, நல்லா கேட்டுக்கோ, இப்படி பயப்பட கூடாது.. இதே போல ஜெயாவுக்கு வரும்… விஷ்ணு, மகாவுக்கும் இது போல ஆகிருக்கு, ஆனா, அவங்க ஸ்ட்ரோங்கா தானே இருக்காங்க… உனக்கும் ஒண்ணும் ஆகாது… இதைப் பத்தி உன் சப்ஜெக்ட்ல கூட வரும், அப்ப உனக்குப் புரியும் பட்டாசு.. சோ எதையும் போட்டுக் குழப்பிக்காத, ஒரு டேன் டேஸ் நீ, வீட்டுல தான் இருக்க போற ஹாப்பி இரு…” என்றதும் அவள் கண்கள் பெரிதாய் விரிய, ” அப்படியா அர்ஜு? ” என்று கேட்டவளின் தலையை அழுத்தி, ” ஆமா, செல்லப் பட்டாசு…” என்றதும் பயம் அகன்று சிரித்தாள்..
” அப்ப,நானுமா அர்ஜு, பத்து நாள் வீட்டுல இருக்க போறேன்? “ஜெயஸ்ரீயுன் ஆவலாய் கேட்க, ” நீ இல்ல குட்டச்சி, நீ ஸ்கூலுக்குப் போ, அப்ப தான், அவளுக்கு நீ நோட்ஸ் எடுத்து தர முடியும்…” என்றதும் முகம் வாடியது.. பவா வின் குறும்பு தனம் தலைத் தூக்கியது.. அவளுக்குப் பழிப்பு காட்டினாள்… இருவரின் செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே இல்லம் வந்தான்..
” ருக்கு, அம்மா, சித்தி….” வாசலில் இருந்தவாறே கத்தினான்…
” அட, எதுக்கு டா கத்துற? ” ருக்கு வெளியே வர்ற, அவரைத் தொடர்ந்து, மேகலாவும் வனஜாவும் வெளியே வர்ற, அவர்களிடம் விஷயத்தைப் பகிர்ந்தான்..
மூவருக்கும் மகிழ்ச்சி தாளாவில்லை… அவளைக் கொல்லைப் புறமாக அழைத்து தலைக்குத் தண்ணீர் ஊத்தி விட்டு,
பவா, ஜெயா இருவரது அறையில், அவளை ஓரமாக அமர வைத்துவிட்டு ஜெயாவைக் காவலுக்கு வைத்தனர்..
ஜெயராமனுக்கும் பரதனுக்கும் விஷயத்தைக் கூற, வீட்டுக்கு வந்த, பரதனும் ஜெயராமனும் பவஸ்ரீயின் உச்சி நுகர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்..
தன் அண்ணன், பலராமன் வீட்டிலும், தன் அக்கா, முத்து விடமும் பகிர்ந்தனர்… ஆனால் வீட்டின் பெரிய மனிதரான வாசுவிடம், பரதன் பகிரவில்லை.. ருக்கு சொல்லியே தெரிய வந்தது.. தன் மகன், தன்னிடம் வந்து கூறாது இருப்பது எண்ணிக் கவலைக் கொண்டார்..
பேத்தியைச் சென்று பார்த்தார், ஆனால் தாத்தா, என்று உரிமை, அன்பு அவளிடம் வரவில்லை, பயம் மட்டுமே, அவள் கண்களில் தென்பட்டது..
அதுவே அவரைப் பாதிக் கொண்டது… பரதன் , மகளின் சடங்கைப் பெரிதாய் வைக்க எண்ணினார், ஜெயராமனின் உதவியோடு சொந்தங்களை அழைத்தான்.. ஆனால் பேச்சுக்கு கூட, தன் தந்தையிடம் யோசனைக் கேட்கவும் வில்லை, அவரை அழைக்க வில்லை. அவரைத் தவிர, அனைவரும் அங்கே சந்தோசமாக தான் இருந்தனர்..
வனஜாவிற்கு ஒரு தங்கை மட்டும் என்பதால், மாமன் முறைக்கு லட்சுமணனை அழைத்தான். அவரும் வைகுண்டத்திடம் கேட்டு சம்மதம் வாங்கி விட்டு தான் மதுரைக்கு வந்தனர்..
பெரும் மண்டபத்தில் பவஸ்ரீக்கு, சடங்கை வைக்க பேசி முடிவு பண்ணினார்கள்.. அதற்காக தான் .
மதுரைக்கு வந்தனர் முத்துவும் லட்சுமணனும்…
அவர்களை அழைக்க, சாரதி ஏர்போட்டில் நின்றிருந்தான்.
” அத்தை…” கையை உயர்த்திக் காட்ட, மூவரும் அவனை நோக்கி வந்தனர்.. ” எப்படி இருக்க சாரதி? ” முத்து கேட்க, இருவரது பாதத்தை தொட்டு வணங்கியவன், ” நல்லா இருக்கேன் அத்தை..” என்றான்..
” அப்படியே! சின்ன வயசு பலராமன் அண்ணாவ, பார்த்தது போல இருக்கு…” என்றார் அவன் தடையைப் பற்றி
” அவரோட, ஜெராக்ஸ் தானே அத்தை நான்… ” என்றான்.. அவள் தோளைத் தட்டினார் லட்சுமணன்..
” இது என் பொண்ணு, மது வாணி ” என்று அறிமுகம் செய்து வைத்தார் லட்சுமணன்.. சிறு சிரிப்போடு வரவேற்றான்..
நால்வரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்… சசியை தழுவிக் கொண்டார் முத்து… அங்கே ஒரு நலம் விசாரிப்பு தான்… குடும்பம் மொத்தமும் சந்தோசமாக இருந்தது..
ஆனால், விஷ்ணுவிடம் முத்து பேசிக்கவில்லை… விஷ்ணு எவ்வளவு கெஞ்சியும் மனம் இறங்கவில்லை.. மயூரனும் கெஞ்சிப்பார்த்து விட்டான்.. மலை இறங்கவே இல்லை..வீராப்பாக இருக்க, விட்டுப் பிடிக்கலாம் என்று விட்டாள் விஷ்ணு. முத்து, தன் தம்பி மகளுக்குச் செய்ய வேண்டிய சீர் அனைத்தையும் சசியின் உதவியோடு வாங்கி வைத்தனர்..
அவர்கள் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது . மண்டபத்துக்குச் செல்லத் தயாராக இருக்க, மயூரன் மட்டும் பேண்ட் ஷர்ட் சகிதம் அணிந்திருக்க, விஷ்ணுவின் முகம் சுளிப்பில் என்னவென்று கேட்டான், வேட்டியைக் காட்டி காட்டுமாறு கூறினாள்..
அனைவரும் சொல்லிக் கேட்காதவன், விஷ்ணு சொன்னதும் வேட்டிக் கட்ட முடிவெடுத்தான். ஆனால் பாவம் அவனுக்குக் கட்ட தெரியவில்லை, எவ்வளவு முயற்சி செய்தும் இடையில் நின்றபாடு இல்லை..
” விஷ்ணு, மாப்பிள்ளை என்ன ஆனாரன்னு போய் பாருமா, ரொம்ப நேரமா, உள்ள போனவர், ஆளையே காணோம்…” பலராமன் சொல்ல, நமட்டுச் சிரிப்புடன் அனைவரும் நிற்க, உள்ளே சென்றவள் அவனது நிலையைக் கண்டு சிரித்தாள்…
” எதுக்கு டி சிரிக்கிற, எவ்வளவு ஸ்டரெஞ்சா இருக்கு தெரியுமா இது?” என்றான் எட்டு முழம் வேட்டியைக் கண்டு நொந்து நூடுல்ஸ் ஆகி, நின்றவனைக் கண்டு வயிறைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்..
” ஸ்டாப் இட்.. விஷ்ணு… ப்ளீஸ் ஹெல்ப் மீ…” என்று கெஞ்ச,
” தமிழ்நாட்டுக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு, அதுல இந்த வேட்டியும் ஒண்ணும், எப்படி கட்டணும் கத்துக்க வேணாமா? இரு நான் போய் சாரதியைக் கூட்டி வரேன் ” என்றவளைத் தடுத்தவன்” ப்ளீஸ், அவன் கிட்ட, சொல்லி என் இமேஜ் டேமேஜ் பண்ணிடாத, நீயே கட்டிவிட்டு விஷ்ணு, என்றவள், அவனிடம் வேட்டியை வாங்கி, சொல்லிக் காமித்துக் கட்டியும் விட்டாள்.. வேட்டிக் கட்டிய பின்னும், அவனுக்குள் ஏதோ போல் உணர, பெல்ட் எடுத்தவள், அதை அணியச் சொன்னாள்.. “விஷ்ணு, இப்போ தான் பீல் கமஃபோர்டபில்…” என்றான் முகம் மலர..
“சரி வா… போலாம்..” என்றவள் முன்னே செல்ல, அவளை இழுத்தவன், இடையை வளைத்து, இதழை நோக்கிக் குனிந்தான், அவனது இச்செயலில் முதலில் தடுமாறியவள், பின், அவன் உதட்டில் கை வைத்து தடுத்து, ” என்ன? ” என்று வினவ,
” ஹெல்ப் பண்ணத்துக்கு, ஒரு கிரெடிட்…” என்றவனைத் தள்ளி விட்டவள், ” நீ எப்போ வேட்டியைச் சரியா கட்டிறீயோ , அப்ப இந்தக் கிரெடிட்டை நான், உன்கிட்ட இருந்து வாங்கிறேன்.. இப்போ நோ, ஒழுங்கா வேட்டியைக் கட்ட பழகு, அப்ப தான் நான் உன்னைக் கட்டிப்பேன்…” என்றவள் இலகுவாகச் சொல்லிச் செல்ல, தனக்குப் பெரிய டாஸ்க்கைக் கொடுத்து விட்டுச் செல்பவளைக் கண்டு பரிதாபமாகப் பார்த்து நின்றான் மயூரன்..
கொள்ளை தொடரும்