மை ஸ்வீட் ஹேட்டர் 3
மை ஸ்வீட் ஹேட்டர் 3
அத்தியாயம் 3
“நான் விடி சார்கிட்ட பேசிட்டு சொல்றேன். ” என்று கூறி கரண் அலைப்பேசியை வைக்கவும் அவனை கூர்ந்து பார்த்தான் விஜய்.
“விடி ஜி.என் சேனல்ல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க.”
“ஓ.எம்.ஜி. அவங்க பிக்பி ஷோல என்னை காஸ்ட் பண்ணுற அளவுக்கு நான் பீல்ட் அவுட் ஆயிட்டேனா என்ன?” என்று விஜய் அதிர்ச்சியாக கூவவும் கரணிற்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஹே இல்லை விடி. அவங்க இப்ப கேட்டது வேற ஒரு விசயம். இதுவும் ஒரு ரியாலிட்டி ஷோ தான். நாட் பிக்பி.”
“வேற என்ன ஷோ?”
“மை ஸ்வீட் ஹேட்டர்… அப்படின்னு ஒரு ஷோவாம். எப்படி சொல்றது ஒரு பேமஸ் யங் ஹீரோவும் அவரோட ஹேட்டரையும் வைச்சு பிக்பி மாதிரி ஒரு வீட்ல வெளியுலக தொடர்பு இல்லாமல் குறிப்பிட்ட நாட்கள் ஸ்டே பண்ண வைச்சு ரெண்டு பேரோட ரியாக்ஷன்ஸ். தெர் ஹேட் டூ லவ் டெஸ்ட் பண்ணுறது. கைண்டா (kinda) பிடிக்காத இரண்டு பேரை மேரேஜ் பண்ணி வைக்கிற மாதிரி தான்.” என்று கரண் சேனலிருந்து தனக்கு சொன்னதை விஜய்க்கு புரியும் மாதிரி கூற, விஜய்யின் முகமும் யோசனைக்கு தாவியது.
இதுவே முன்பு என்றால் இப்படி ஒரு ஆபரை தூக்கி கொண்டு வந்திருந்தால் கட்டையாலே அடித்திருப்பான் விஜய். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி இல்லை அல்லவா. அவனுக்கு பணம் வேண்டும் அடுத்து அவனின் மேல் இருக்கும் கேவலமான கருத்து மாற வேண்டும் அதற்கு இப்பொழுது ஒரு சூப்பர் டூப்பர் லவ் ஸ்டோரி வேண்டும் அதுவும் ரியலாக. இந்த யோசனை பேக்பயர்(backfire) ஆகவும் நிறைய வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இப்படியே இருந்தால் இப்பிரச்சினை சரியாகும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. இந்த மீடியா மக்களை பகைத்துக்கொண்டதால் காணாமல் போன பல பிரபலங்களில் தானும் ஒரு ஆளாக மாற விஜய் விரும்பவில்லை.
“கரண் எனக்கு இது ஒகே தான். ஆனால் உடனே சரி சொல்லிறாதே. இன்னும் ஒரு இரண்டு நாள் இழுத்து அடிச்சிட்டு அந்த நாய்க்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு கிட்டதட்ட கொண்டுவந்து சரின்னு சொல்லு. நாளைக்கு ஸ்கிர்ப்ட் எடுத்துட்டு டைரக்டர் வர சொல்லு மேன்.” என்று கூறியவாறு தனது அறை நோக்கி சென்றான்.
கரண் விஜயை ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தான். எப்படியும் இதை வேண்டாமென்று சொல்லுவான் என்று தான் எதிர்பார்த்தான். தான் இதை விஜயை ஒத்துக்கொள்ள வைக்க போராட வேண்டுமென்று நினைத்தான். ஆனால் இவன் என்னவென்றால் உடனே சரி என்று சொல்லியது மட்டுமன்றி முப்பது கோடிக்கு டீல் பேச சொல்கிறான். பைத்தியமா இவன் என்பதை போன்று பார்த்தான் கரண்.
‘சரி… காசா பணமா பேசி பார்ப்போம். இருபதுகிட்ட வந்தால் கூட போதும்.’ என்று நினைத்தவன் மீண்டும் அவர்களுக்கு அழைத்து விஜயிற்கு வர விருப்பம் இருப்பது மாதிரியும் அதே நேரத்தில் இல்லாதது மாதிரியும் பேசிக்கொண்டிருந்தான் கரண்.
அதாவது என்னவென்றால் ‘ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்.’
****
“என்ன பூ சொல்ற?” என்று நிவி கேட்க பூஜா அனைத்தையும் கூற, அதை கதைப் போன்று கேட்டுக்கொண்டிருந்த ஜீவி கடைசியில் முடியாது என்றாள்.
“ஏன்?” என்று பூஜா கேட்க,
“அவனை என்னால தொடர்ந்தாப்ல ஒரு ஐந்து நிமிஷம் பார்க்க முடியாது. அவன் கூட போய் தனியா ஒரே வீட்ல வெளியுலக தொடர்பே இல்லாம இருக்கனும் சொல்ற அக்கா. பாகிஸ்தான் தீவிரவாதிங்க கூட போய் வாழசொல்லு வாழுறேன். இல்லையா என்னை மார்ஸ்ல இறக்கிவிட்டு ஏலியன்ஸ் கூட டான்ஸ் ஆட சொல்லு பண்றேன். ஆனால் என் கனவுல கூட இது நடக்காது சொல்லிட்டேன்.”
“உன் முகரைகட்டைக்கு செலவு பண்ணி பாகிஸ்தான், மார்ஸ் அனுப்புவாங்க. ஒவரா சீன் போடாதே சரியா? விடி வேணாம்னு சொல்லனும் நீ இல்லை புரியுதா?” என்று நிவி கடுப்படிக்க,
“ஜீவிமா ப்ளீஸ் டா இந்த பூ அக்காவுக்காக இதை பண்ண மாட்டியா? என் டார்லிங் தானே நீங்க…”
“போ அக்கா. என்னால முடியவே முடியாது. அந்த விடியா மூஞ்சிகூட எல்லாம் நூறு நாள் வாய்ப்பே இல்லை. அவனை பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு தான் அக்கா வரும். இப்ப ஒரு விளம்பரம் வருதே அவனுது. அது எத்தனை நிமிசம் இருக்கும். வெறும் ஒரு நிமிசம் தான் அக்கா. அதைக்கூட என்னால பார்க்க முடியலைன்னா பார்த்துக்கோ… அவன் மூஞ்சிய எப்படி அக்கா அத்தனை நாள் பார்க்க முடியும் பூ அக்கா? ப்ளீஸ்…”
“ஹே உனக்கு இவ்வளவு சீன் எல்லாம் இல்லை டி. நெளிஞ்ச டீன் மாதிரி ஒரு முகரை. இரண்டு வயசு பிள்ளை கையில சாப்பாத்தி மாவை கொடுத்த மாதிரி ஒரு செட்ரக்சர், நீ விடியை விடியாத மூஞ்சின்னு சொல்லுறதலாம் ஒவர் சொல்லிட்டேன்.” என்று நிவி அவள் பங்குக்கு சண்டைக்கு வர
“ஹே ஜீவி… நூறு நாளு எல்லாம் இல்லை. ஒன் மந்த் தான் பிளான் பண்ணிருந்தேன். இப்ப உனக்காக அதை 21 டேய்ஸா மாத்திறலாம் டி.” என்று பூ கூற அதற்கும் மசியாமல் ஜீவிதா முடியவே முடியாது என்று வம்பு பண்ண,
‘ஒருத்தனை நம்ம சொல்றதை செய்ய வைக்கனும்னா அவனுக்கு முதல்ல ஆசையை தூண்டனும்’ என்று பிண்ணனியில் நட்டுவின் குரல் ஒலிக்க பூ ஜீவிதாக்கு ஆசையை தூண்டினாள்.
“ஜீவி யோசித்து பாரு. நீ இதுல கலந்துக்கிட்டு பேமஸ் ஆன உனக்கு ஈஸியா நியூஸ் ரீடர் சான்ஸ் கிடைக்கும். அது மட்டுமா இதை வைச்சே நீ பிக்பி ஷோல கலந்துக்கலாம். அதைவிட முக்கியமான விசயம் விடியை நல்லா வைச்சு செய்யலாம். எப்பயும் நீ சொல்லுவில இந்த விடி சைக்கோ ஆர்மியை எப்படியாச்சும் பழி வாங்கனும்னு இதுல கலந்துக்கிட்டு அவனை பந்தாடலாம். ஒரே கல்லுல மூணு மேங்கோ பேபிமா…” என்று பல்வேறு திரிகளை கொளுத்திப் போட அது ஜீவிதாவிற்குள் பயங்கரமாக வேலை செய்தது.
“ஹான் நீ சொல்றதும் சரி தான் அக்கா. இருந்தாலும் அப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன். ” என்று கூற சகோதரிகள் இருவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
“ஆர் யூ ஒகே பேபி?” என்று பூ கேட்க, நிவி அவளது கழுத்தில் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்.
“பீவர் கூட இல்லைடி. என்ன ஆச்சு?”
“ஹே! இது பெரிய விசயம் இல்லையா? சோ நான் அம்மா, அப்பா அப்புறம் வினோகிட்டயும் கேட்டுக்குறேன்.” என்று கூறியவாறு கையில் அலைப்பேசியை எடுத்துக்கொண்டு சகோதரிகளை விட்டு சிறிது தூரம் விலகிச்சென்று அவர்களது கண்பார்வையில்படுமாறு நின்று பேசினாள்.
சகோதரிகள் இருவரும் மனதில் ஒரே யோசனையுடன் தான் அலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் ஜீவிதாவை பார்த்தனர். அனைத்து விசயத்திலும் சிறந்த முடிவுகளையும், தன்னிச்சையாகவும் செயல்படும் பெண் எப்படி இந்த காதலில் மட்டும் சொதப்பினாள் என்று தெரியவில்லையே?
சந்தோஷமாக பேசி அழைப்பை முடித்ததிலே தெரிந்தது அவள் தனது பெற்றோர்களிடம் பேசினாள் என்பதும் அவர்கள் இதற்கு சரியென்று சொல்லிவிட்டார்கள் என்றும் புரிந்தது.
அடுத்து அழைக்கவிருந்த எண்னை ஒருமுறை பார்த்தவள், சகோதரிகளை பார்த்து ஒரு சோபையான புன்னகை புரிந்தவள் தனது போனிடைலை முன்னிழுத்து அதை இரண்டு முறை சுழற்றினாள். அது அவளின் பழக்கம், மிகவும் பதற்றமான, இறுக்கமான சூழலில் மட்டும் தான் இப்படி செய்வாள். ஒரு காதலனுடன் பேசுவது எந்த இருபது வயது பெண்ணிற்கு பதற்றத்தை கொடுக்கும்.
தன்னை சமாளித்துக்கொண்டு அவனுக்கு அழைத்தாள்.
“ஹலோ வினோ”
“ஜீவி எத்தனை தடவை சொல்லிருக்கேன். இந்த டைம்ல என்னை டிஸ்டர்ப் பண்ணாதேன்னு… உனக்கு புரியவே புரியாதா?”
“இல்லை வினோ. ஒரு முக்கியமான விசயம்.”
“வேகமா சொல்லு ஜீவி”
“பூ அக்கா இருக்காங்கள… அவங்க…” என்று ஜீவி கூற வருவதற்குள்,
“ச்சை… அவங்க கூட எல்லாம் பழக்கம் வைச்சுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன்.”
“லிஸன் வினோ பூ அக்கா பத்தியோ நிவி பத்தியோ எதாவது பேசினா எனக்கு கெட்ட கோவம் வந்துடும்.”
“கோவம் வந்தா என்ன பண்ணுவ? என்னை பிரேக் அப் பண்ணிருவேன்னு மிரட்ட போற அதானே?”
“ஆர் யூ மேட் ஆர் சம்திங்? நான் அப்படி எதாவது சொன்னேன்னா? என்ன தான் பிரச்சினை உனக்கு?”
“இப்ப எல்லாம் நீ மாறிட்ட ஜீவி. உனக்கு வரவர என் மேல இருக்க இன்ட்ரெஸ்ட் குறைஞ்சிக்கிட்டே போகுது. உனக்கு நான் தேவையில்லாதவனா போயிட்டனா ஜீவி? என்னை பிடிக்கலையா? நீ மட்டும் தானே எனக்கு இருக்க? நீ என்னை விட்டுட்டு போனா நான் செத்து போயிருவேன் ஜீவி…” என்று அவன் கூற ஜீவிதாவிற்கு பயங்கர கோவம் வந்துவிட்டது.
இப்பொழுது தான் என்ன கூறிவிட்டோம் என்று இவன் இவ்வளவு சீன் போடுகிறான். எப்பொழுது பார்த்தாலும் செத்து போயிருவேன் என்ற எமோசனல் பிளாக்மெயில் வேறு.
“நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி பேசுற? ச்சை எப்ப பார்த்தாலும் எமோஷனல் பிளாக்மெயில் வேற… ச்சை… வை போனை…” என்று திட்டியவள் அலைப்பேசியை அணைத்துவிட்டு சகோதரிகளை நோக்கி சென்றாள்.
ஜீவிதாவின் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது. முயன்று சமநிலைக்கு வந்தவள் நிவியின் அருகில் அமர்ந்தாள்.
சில நொடிகள் எதுவும் பேசாமல் ஜீவி தனது போனிடெயிலை பிடித்து திருகி, முறுக்கி விளையாடிக்கொண்டிருக்க பூஜா கண்களால் நிவியை ஜீவியிடம் என்னவென்று வினவ சொன்னாள்.
“ஜீவி ஆர் யூ ஆல்ரைட்?”
“எஸ்…எஸ்…” என்று வேகமாக தலையாட்டியவள் பூஜாவை பார்த்து “அக்கா எனக்கு ஒகே… அந்த விடியா மூஞ்சிக்கிட்டே கேட்டு சொல்லுங்க…” என்று கூற , பூஜா சரி என்று கூறியவள் இரண்டு நாட்களில் ஸ்கிர்ப்ட் மற்றும் சட்ட ரீதியான ஒப்பந்தத்துடன் வருவதாக கூறினாள்.
அதற்கு ஜீவிதா பெரிதாக எந்த நாட்டமின்றி சரி என்று தலையசைக்க,
அவளது கரத்தை அழுத்திய நிவி “ஜீவி… சொல்றேன்னு கோவப்படாதே…” என்று ஆரம்பிக்க,
சட்டென்று அவளது கரத்திலிருந்து தனது கரத்தை உருவிய ஜீவிதா “நீயும் ஆரம்பிக்காதே நிவி… எனக்கு தெரியும் நான் என்ன பண்றேன்னு?ப்ளீஸ்…” என்று கூறிவிட மூவரும் அங்கிருந்து தங்களது இருப்பிடம் நோக்கி சென்றனர்.
“என்ன சொல்றீங்க ஜீவன்? ட்வெண்டி கோர்ஸ்… இட்ஸ் இம்பாசிபள். விடி அவன் கடன் எல்லாம் நம்ம தலையில கட்டலாம்னு பார்க்குறான் போல.” என்று கார்த்திக் கூற, ஜீவனும் என்ன செய்வது என்ற குழப்பத்தில் தான் இருந்தான்.
“கார்த்திக் டென் தருவோம்ன்னு சொல்லுவோமா? பூஜா 21 டேய்ஸ்ன்னு சொல்லிருக்கா… சோ தரலாம்…” ஜீவனின் பதிலில் சிறிது நேரம் யோசித்தவன்
“ம்ம்… நமக்கும் வேற ஆளில்லை இவனை விட்டா. டென்க்கு பேசிப்பாருங்க ஒகே அப்படின்னா பண்ணலாம். இல்லாட்டி வேற ஆளு பார்க்கலாம். ” என்று கூற அதை அப்படியே கரணிற்கு கடத்தினார் ஜீவன்.
கரண் அப்படியே அதை விஜயிற்கு கடத்த சிறிது நேர யோசனைக்கு பின் சரியென்றவன் நாளையே டைரக்டர் அண்ட் பேப்பர்ஸ் வரவேண்டுமென்று கூறிவிட எல்லாம் துரிதகதியில் நடந்தது.
மறுநாள் காலை பத்துமணிக்கு பூஜாவும் ஜீவனும் விஜயின் ஆபிஸ்ஸிற்கு சென்று அனைத்தையும் விலக்கி கூற அமைதியாக கேட்டுக்கொண்டவன் தன்னை வெறுக்கும் அந்த பெண்ணை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக பூஜாவிடம் யாரென்று கேட்க, அவள் நிகழ்ச்சி தொடக்கத்தில் தான் சொல்ல முடியும் என்றும் அப்பொழுது ஒரு லைவ் பீலிங் கிடைக்கும் என்று கூறிவிட விட்டுவிட்டான்.
மீதமிருக்கும் சந்தேகங்களை கேட்க பூஜா அனைத்தையும் தெளிவுபடுத்தினாள். கண்டிப்பான முறையில் “மை ஸ்வீட் ஹேட்டர்” செட்டிற்குள் எந்த தொலைதொடர்பு சாதனங்களும், பேப்பர் பேனா, கடிகாரம் என்று எதுவும் அனுமதிக்கப்படாது என்றும், வெளியிலிருந்து யாரும் தொடர்புகொள்ள முடியாது என்றும்… இதற்கு பிக்பிக்கு வருவது போன்று வார இறுதியில் தொகுப்பாளர் எவரும் இல்லை என்பதும் இங்கயும் பிக்பி போன்று இயந்திர குரல் மட்டுமே வழிநடத்தும், பிக்பிக்கு உள்ள அதே விதிகள் இதற்கும் பொருந்தும் என்று கூறினாள்.
நிகழ்ச்சி ஆரம்பித்த பின்பு செல்லும் தடத்தை பொறுத்து அவர்கள் இருவரை தவிர்த்து சிலர் வந்து செல்லலாம் என்று கூற விஜய் அனைத்திற்கும் சம்மதிக்க, இந்த நிகழ்ச்சிக்கான பேப்பர்ஸ் கொடுக்கப்பட அதை முழுவதுமாக வாசித்து பார்த்தவன், இறுதியில் இருந்ததை பார்த்துவிட்டு புருவத்தை சுருக்கி பூஜாவை பார்த்தான்.
அவனது பார்வை புரிந்ததுப்போன்று இந்த நிகழ்ச்சியில இருந்து பாதியில் விலகுனா இருபது கோடி நஷ்டஈடு தரவேண்டும். இது எங்களோட சேப்டிக்கு என்று கூற சரி என்பது போன்று தலையசைத்தவன் அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டான்.
அவனிடம் இருந்து விடைப்பெற்றவர்கள் அதே சூட்டோடு ஜீவிதாவிடம் சென்று அனைத்தையும் கூறி கையெழுத்து வாங்கினர். ஜீவிதாவிற்கு ஒரு நாளிற்கு ஐம்பதாயிரம் என்று 21 நாளிற்கு சம்பளம் குறிக்கப்பட்டிருந்தது. அந்த தொகையே ஜீவிதாவிற்கு அதிகமாக இருக்க தனது பூ அக்காவை நம்பி அதில் முழுமையாக இறங்கினாள்.
பணம்…பணம்…பணம் அனைத்தும் செய்தது.
அன்று மாலையே ஜி.என் தொலைக்காட்சியில் “மை ஸ்வீட் ஹேட்டர்…” ஷோவிற்கான ப்ரோமோ வெளியிடப்பட அவர்கள் நினைத்த மாதிரியே தமிழ்நாடு முழுவதும் என்ன நிகழ்ச்சி என்றும் இதில் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று யூட்யூப், முகபுத்தகம் என்று எங்கும் ட்ரெண்டிங்கில் இருந்தது.
இதே விசையில் போனால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தவர்கள் உடனே செட் போட ஆரம்பித்து இரண்டே நாட்களில் முடித்து, நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த யாதவ் கிருஷ்ணா- ஆருஷா (ம) சித்தார்த்- கனிஷ்கா என்ற நட்சத்திர ஜோடிகளை ஏற்பாடு செய்து ஒரே வாரத்தில் அனைத்தும் செய்து முடித்திருந்தனர்.
ஒரு வாரம் எப்படி போனது என்று தெரியாமலே அந்த ஞாயிற்றும் கிழமையும் வந்துவிட்டது. ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத இருவர் வாழ்க்கையும் ஒன்று சேர நேரம் ஆரம்பமானது.
இந்த ஆண்டவன் இருவரை கோர்த்து விடவேண்டுமென்று நினைத்துவிட்டால் என்னவெல்லாம் செய்கிறான்.