‘இரும்புக்கோர் பூ இதயம்’-அத்தியாயம் 8

Screenshot_2021-06-21-17-30-01-1-cf933a47

‘இரும்புக்கோர் பூ இதயம்’-அத்தியாயம் 8

Epi8

 

தருணிடம் தன் அத்தை பேசுவதைக் கேட்ட விஜயின் அன்னை,

“அப்டியாப்பா எனக்கும் தெரிசவங்க இண்டுவரன் கொண்டு வந்தாங்க, உங்க அம்மாகிட்ட சொல்லி பார்க்கிறேன் நல்ல இடமாக இருந்தது.” எனக் கூற 

 

“அதுவும் நல்லதுதான் அத்தம்மா.ரொம்ப நாள் கல்யாண சாப்பாடொன்னு சாப்டு சீக்கிரமா ஏற்பாடு பண்ணு தருண்.” என ஹரியும் கூற, 

 

நிவிக்கு பற்றிக்கொண்டு வந்தது.’ ஐந்து  வருடமாக லவ் பண்ணுவானாம், கடைசியில அம்மா பார்த்த பொண்ண கட்டிப்பானாம். 

மவனே நானும் எவ்வளவுன்னு தான் பொறுமையா போறது. உன்ன உசுப்பேற்றி விடலாம்னு பார்த்தா…’ நிவி வாய்க்குள் புலம்ப,

 

‘நீ மட்டும் என்னவாம் உன் இலட்சியத்துக்காக , உன் ஈகோ விடாம இப்போதானே விஜயை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்ன.’ என மனம் கேட்க,, 

 

‘அத்து என்னை புரிஜிப்பான்.’ என மனதை அடக்கியவள். 

 

‘இவனை பார்த்துக்கொண்டு இருந்தால் என் ஆசை, கனவு என்னாகுறது. இவன் வாய திறக்க  ஒரு வழி பண்ணணுமே. இன்னக்கி போனான்னா திரும்ப இவனை பிடிக்கிறது கஷ்டம்.’ என யோசிக்க ஆரம்பித்தவள் அப்படியே மாடியில் தனதறைக்கு சென்றாள். 

 

விஜய் முதலில் விளையாட்டாக நிவியை  சமாளிக்க பேசினாலும் அவனுக்கு வீட்டினரை  ஏமாற்றுவதும், நோகடிப்பதும் பிடிக்காத விடயம். எப்போதும் யார் மனதையும் நோகடிக்க மாட்டான். பிழையே என்றாலும் பிறர் மனம் நோக நடக்க மாட்டான்.

 

நிவியின் வார்த்தைகள் குழப்பத்தை தந்தது இவனுக்கு. என்ன செய்வதென்றே  புரியவில்லை. ஏன் இப்படி சுயநலமாய் இருக்காள் என நினைத்தவன்.

‘அப்பா கல்யாணம் பற்றி பேசும் போது அவள்(தாரா ) முகம், அவள் கண்கள் சொன்ன பாஷை, எதுக்கு எனக்கு நினைவு வந்தது.அவள் கண்கள் அன்று எதுவோ சொல்லியதே எனக்கு.அச்சோ முடியல. அவ என் நெஞ்சுக்குள்ள தான் இருக்காளா? ஹ்ம் அதானே அடிக்கடி என்ன இம்ச பண்றா… ‘

 

விஜயும் அவன் குழப்பமான மனதை அடக்க..   

 

மாடி ஏறியவள் தான் செய்யப்போகும்  மடத்தனமான காரியம் அவளையே பாதிக்கப்போவது தெரியாமல் செய்தாள்.  

 

தன் காதலும் வேண்டும், தன் ஈகோவையும்  விட்டுக்கொடுக்க முடியாது. அவன் தான் நட்புக்காக காதலை மறைத்தான் என்றால், தானாவது காதலை தெரியப்படுத்தி  இருக்கலாம், அல்லது தன் தோழன் அத்தானிடமாவது கூறி இருக்கலாம். ஒன்றுமே செய்யாது விஜயையும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி,நீயா நானா என வாழ்வின் முக்கிய தருணத்தில் மனம் கூறுவதை மட்டுமே செய்ய துணிந்தாள்.நிவிதா 

 

(விளையாடிப்பார்க்க துணிந்தாள். )

 

தன் மனதோடு அறிவையும் பயன் படுத்தி இருக்கலாமோ ! 

 

 விஜய்க்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பினாள்.

“அத்து சாரி எனக்கு வேறு வழி தெரியல…

நீயும் என்ன புரிஞ்சுக்கல. (சொன்னாத்தானே  புரிஞ்சிக்க முடியும் ) திஸ் மை லாஸ்ட் ட்ரை அத்து… “

 

இன்னொரு மெசேஜ்,

 “ப்ளீஸ் வீடியோ கால் பண்ணு. ” என இருக்கவும்,

  

தருணுடன் பேசிக்கொண்டு அவனை  வழியனுப்ப வந்தவன் தாராவின் மெசேஜ்  பார்த்து அவளுக்கு வீடியோ கால் எடுக்க, 

நிவி சுழல் நாட்காலியில் ஏறி மின்விசிறியில்  தொங்கிய ஷோலில் தன் தலையை நுழைப்பதையே கண்டான். அப்படி விளங்குமாறு அலைபேசியை செட் செய்து வைத்திருந்தாள். 

 

“நிவி என்ன பண்ற.நாற்காலி விலகிரும்டி  பிடுச்சிக்கோ வரேன்…’

எனக் கத்தியவன் அலைபேசியை தருணிடம்  கொடுத்து விட்டு,

‘ அப்பா…

ஹரிண்ணா…” என கத்திக்கொண்டே அவள் அறை நோக்கி மாடிக்கு ஓடினான். 

அவள் கதவினை தட்டியவன் லோக்  பண்ணியிருக்கும் என நினைத்து பலம்கொண்டு தள்ள அது திறந்தே இருந்திருக்க   உள்ளே நுழைந்தவன் துடிக்கும் கால்களுடன் நிவியை கண்டவன்,

“நிவி… என பதட்டத்தில் தடுமாற,

“நிவி … என பாய்ந்து வந்தவன் அவளை தூக்கி பிடித்து,

“விஜய் என்ன பண்ற ஷாலை கழட்டுடா. ” என தருண் கத்தினான்.விஜய் அலைபேசியை  அவனிடம் கொடுத்து விட்டு ஓட என்னவென்று பார்த்தவன் ஒரு செக்கனே. அடுத்த கனமே ஓடி இருந்தான் விஜயின் பின்னால். தன்னிலை வந்தவன் அவளது கழுத்தில் இருந்த மெலிதான சில்க் ஷாலை ஏறி கழட்டியவன், மூச்செடுக்க  சிரமப்பட்டு மயக்க நிலைக்கு செல்லும் நிவியின் முகத்தை பார்த்து கண் கலங்கினான். வீட்டினர் அவ்விடம் வந்திருக்க, தருண் கண்களில் நீர் வழிந்தது. அப்போதும் விஜய் அவளை அனைவரினது முன்னும் நிராகரித்ததற்காகவே தாங்காது இம் முடிவு என்றே அவனும் அந்நொடி நினைத்தான்.

 

(முட்டாள் உன் காதலை பெறவேண்டும் என்றே இம்முடிவு. இனி யார் இதை கூறுவார் )

விளையாட்டு அங்கே வினை ஆனது. 

 

தற்கொலை செய்துகொள்ள போகும்  போதாவது அவன் காதலை கூறுவான் என்றே வீடியோ கால் எடுத்தது.கீழிருந்து மேல்  அறைக்கு எப்படியும் வந்து விடுவார்கள் என்று அறைக்கதவையும் திறந்தே வைத்திருந்தாள். ஆனால் அறையில் இருந்தது என்னவோ சுழல்  நாற்காலி. சரி பேலன்ஸ் பண்ணிக்கொள்வோம் என்று நினைத்தவள் விஜய் அலைபேசியில் கத்தவும் கால்கள் தடுமாற நாற்காலி விலகியது.

 

அவளை அவசரமாக ஹரி தூக்கிக்கொண்டு ஓட அவன் பின்னே அனைவரும் ஓட விஜயை பார்த்த நிவியின் அன்னை,

 

“நீ வர வேணாம் ஸ்ரீ. அவளை பிடிக்கலன்னு தன்மையாக சொல்லி இருக்கலாம்.எல்லோர் முன்னாடியும் அவளை வேணாம்னு சொன்னது  பாரு இப்போ என் பொண்ணே எனக்கு கிடைப்பாளோ தெரியாது.”

 

“அத்தம்மா என்ன சொல்றீங்க நானும் அவளும்  அப்படி இல்ல.அவள் ஏதோ விளையாட்டா பேசினா…” என்று கூற,

” எதுடா விளையாட்டு? தற்கொலை பண்ணிக்க பார்த்திருக்கா விளையாட்டுன்ற, அவளுக்கு எதாவது ஆகட்டும் இருக்கு உனக்கு.’ என கத்திய ராஜும், 

 

‘வா முதல்ல ஹாஸ்பிடல் போகலாம்.” என அனைவரும் விரைந்தனர்.

“மா என அருணாவை பார்த்தவன் தாயினதும்  பார்வை தன்னையே குற்றவாளியாக பார்க்கவும் உடைந்துவிட்டான்.”

அப்படியே அமர்ந்தவனை பார்த்த தருண்,

 

“உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா உயிர விட துணிஞ்சிருப்பா? நீ என்னன்னா…”

 

விஜய் அவனை நிமிர்ந்து பார்க்கவும் அத்தோடு  நிறுத்தியவன் கீழே சென்று விட்டான்… 

 

என்னாச்சுன்னு யாரும் கேட்க இப்போது நிவி சுயநினைவில் இல்லையே. அவள் தற்கொலைக்கு முயன்றால் அவளிடம் தானே காரணம் கேட்க வேண்டும் இவர்களே காரணம் சொல்லிக்கொள்ள இவனையே குற்றவாளி ஆக்கினால் யார் பொறுப்பு. 

 

மனதளவில் மொத்தமாய் நொறுங்கிப் போனான்.’என்னுடன் குழந்தை முதல் வளர்ந்தவள், தோளிலே தூக்கி திரிந்தவளை, சகோதரனாகவும், நண்பனாகவும், பழகியவளை  எவ்வாறு மனைவியாக?’

 

 அவ்வாறான எண்ணம் இருவரிடமும்  இருந்திருந்தால் இவ்வாறு விஜய்  விளையாட்டுக்கேனும் சொல்லி இருக்க மாட்டான்.வீட்டில் திருமணம் பேசும் வரை  இருந்திருக்கவும் மாட்டான். நேரடியாக வீட்டில் சொல்லிருப்பான். அவர்கள் அவ்வாறு பலகவில்லையே.அது அவர்கள் இருவருக்கும்  மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் நிவி அவ்வாறு திருமணத்திற்க்கு ஒத்துக்கொண்டதும் அவள் மனதில் என்ன இருக்கின்றது என்றே புரியாது குழம்பிப்போனான். இவ்வளவு நாளும்  சிறிதேனும் அவளுடன் கோபமாக கதைத்திராதவன் அவளை அவளது மனதை கூறட்டும் என்றே பேசினான். இப்படி விளையாடுவாள என நினைக்க வில்லை

 

(ஆம் அவனறிந்தான். அவளைப்பற்றி நன்கு  அறிந்தவன்,அவள் குணம் அறிந்தவன்,அவள் விளையாடவே விளையாட்டு வினையானது என நன்கு புரிந்தான்.) 

 

இப்படி வந்து முடியும் என நினைக்கவில்லை…

‘தருண் மீது அவள் பார்வை காதலாக பார்த்ததே. அதற்கு என்ன பதில்.தருண் மனதில் என்ன இருக்கிறது.அவனும் என் முடிவு பிழை போல் அல்லவா பேசிவிட்டு சென்றான்.நடுவில் நான் என்ன செய்தேன்?’

 

ஒன்றுமே புரியவில்லை விஜய்க்கு.எழுந்து கீழே  வர ஹாஸ்பிடல் நோக்கி அனைவருமே சென்றிருக்க ஹரியின் மனைவி வாசலில் பிள்ளையோடு அமர்ந்திருக்க,” விஜய் LC  ஹாஸ்பிடல் வரச்சொல்லி ஹரி சொல்லச்சொன்னாங்க என்றாள். “சரி” என தலை அசைத்தவன் ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றான்.

 

‘காதல்னு வந்துட்டா இப்படி சுயநலமாய்  இருப்பாங்களா? அல்லது நிவியின் குணமே இப்படி தான? தன் தேவைக்காக, வீட்ல அவ நினைச்சதை சாதிச்சிக்க என்னோட நட்பா இருந்தாளோ? என்னையே கல்யாணம் பண்ணிகிறேன் சொல்றா! தருணையும் காதலாகவே பார்க்கிறாள்.எது அவளுக்கு சாதகமா வருதோ அதுவே ஓகேன்னு இருக்காளா? கடவுளே! ஏன் இப்படி?’

 

பலதையும் யோசித்த வண்ணம் ஹாஸ்பிடலை  வந்தடைந்தான். விஜய் ஹாஸ்பிடல் உள் நுழைவதை கண்ட தருண் வேகமாக அவன் அருகே சென்றவன்,

“டாக்டர் உள்ளே பார்த்துட்டு இருக்காங்க.  இருபது செகண்ட்ஸ் நாலும் தொண்டைல நல்லா இருக்கிருச்சாம். இன்னும் வெளில டாக்டர் வரல்லடா ஒன்னும் இருக்காதுல்ல,’

‘ ஆமா…ஆமா… ஒன்னும் ஆகி இருக்காது.’ என  தனக்கு தானே சொல்லிக்கொண்டான் தருண்.

 

அவன் விஜயின் கையை இருக்க பிடித்திருப்பதிலேயே அவனது அவஸ்தையும்   தவிப்பையும் சேர்த்து அவனது மனதும் நன்கு புரிந்து போனது விஜய்க்கு. அவனை பார்த்தவன் அவனது குடும்பமே நிவியை அனுமதித்துள்ள  அறை முன் இருக்க இவர்கள் சற்று தூரமாக நின்றிருந்தனர். விஜய் அப்படியே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து விட அவனருகே அமர்ந்த தருண்,

 

“இப்படி பண்ணுவான்னு நா எதிர் பார்க்கல டா.உன் மேல இவ்வளவு லவ் வெச்சிருக்கவ…” என பேசியவனை பார்த்த விஜய்,

” என்னை இல்ல உன்னை, இவ்வளவும் பண்ணினது எனக்காக இல்லை உனக்காக. “

 

என சொல்ல, அவனை வியப்பாக பார்த்தவன் 

“என்ன சொல்ற நீ? ” எனவும்,

 

“இப்படி பண்ணினா நீ உன் லவ்வ சொல்றியான்னு பார்த்திருக்கா? சரிதான் அவ கணிச்சது.இப்போ தானே நீயும் சொல்ற. இவ்வளவு நாளும் ரெண்டு பேரும் என்னை நடுவுல வச்சு நல்லாவே ஏமாற்றி இருக்கீங்க.” 

 

“டேய் விஜய் அப்டில்லாம் இல்லடா. அவ கண்ணுல நா காதலை பார்த்தாலும் சொல்ல முடியாத நிலைடா. சில சமயம் அந்த பார்வை அவ நடந்துகொள்ளும் விதம் பொய்யோ, நா தப்பா நினச்சிட்டேனோன்னு நினைக்குற அளவுக்கு அவ பார்வை உன் மேல இருக்கும் டா.

 

நா அவகிட்ட பேசப்போய் அவ அப்டில்லாம் இல்லன்னுட்டான்னா,உன் பிரென்ஷிப்பும நா இழந்துருவேண்டா.இன்னக்கி வீட்லயும் பாரு  அவளுடைய தேவைக்காகத்தானே உன்னை கல்யாணம் பண்றேன்னு சொன்னாள். இப்படித்தான் ஒவ்வரு தடவையும் நான் சொல்லலாம்ணு நினைக்கிறப்ப அவ அதுக்கு மாற்றமா நடந்து கொள்கிறாள்.நானும் என்னப் பண்ணட்டும்.அதுக்கும் மேல உன் பிரென்ஷிப் தான் பெருசா தோணிச்சு. சாரிடா. இவ இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லை.”

 

மெலிதாக சிரித்தவன், “இவ்வளவு பேசுறவன்  முன்னாடியே இதை பற்றி என்கிட்ட பேசி இருக்கலாம்.”

 

“நா எப்படிடா உன்கிட்ட சொல்லமுடியும்? என அவனை பாவமாக பார்க்க விடு பார்த்துக்கலாம்.’என்றவன்,

 

‘கடைசில எல்லோர் கிட்டயும் என்னை  கெட்டவனா காட்டிட்டா.”

 

விஜயின் முகத்தினில் இருந்த ஒளிர்வு, மேகத்துள் மறைந்த சூரியன் என்றே பொழிவிழந்தது. 

 

Leave a Reply

error: Content is protected !!