alai oosai 19

alai oosai 19

கன்றோல் ரூமில் சந்திரா ஆதியின் மொபைலை ட்ராக் செய்தபடி இருந்தாள். இரண்டு நொடிக்கு மட்டுமே வந்து போன சிக்னல் அவனது இருப்பிடத்தை உணர்த்தி இருந்தது. “மேடம் வி காட் தி லொகேஷன்” இருப்பிடத்தை அறிந்த சந்திரா ருத்ரா திகைத்து போகினர். அது அவர்களது பழைய வீட்டின் முகவரி! எதேதோ நினைவுகள் அந்த வீட்டோடு சூழ்ந்து இருக்க அந்த காரணத்தை காட்டியே அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியில் வந்து இருந்தனர்!

விஷ்ணுவின் நம்பரை ஹேக் செய்த மூலம் அவருக்கு டிசி என்ற குறிப்போடு பல கோட் வேர்ட்ஸ் கொண்ட மெசேஜஸ் கடந்த நான்கு மாதமாக வந்து இருப்பதையும் சந்திரா அறிந்து கொண்டாள் . “டிசி” குறிப்பை கண்ட சந்திராவின் கண்களும் கலங்கியதோ? ருத்ரா வாய்விட்டே சொல்லி இருந்தான் “டிசினு போட்டு இருக்குடா, அப்போ நம்ம தர்மா உயிரோட தான் இருக்காண்டா. அப்போ அவன் நம்ம வீட்டுக்கு வந்து பாப்பாவை தூங்க வச்சது எல்லாம் கனவு இல்ல எல்லாமே நிஜம் தாண்டா” உணர்ச்சி வெள்ளத்தில் இருவரும் இருந்தனரோ?

“ஆமா ருத்ரா அப்போ நான் தனாவோட ஆடியது எல்லாமே நிஜம் தான். எல்லா இடத்துலயும் அவன் தெரிகிற மாதிரி பிரமைனு நினைச்சது தப்புடா” எல்லாவற்றையும் திறன்பட செய்யும் சந்திராவின் இந்த குழப்ப நிலைக்கு காரணமும் இருந்தது. தர்மா இறந்து விட்டான் என்ற செய்தி வந்த பிறகு சந்திரா “என் தனா அங்க இருக்கான்.. இதோ என் கைய புடிச்சுட்டு இருக்கான்..” போன்ற பிரமையில் ஆழ்ந்து இருந்தாள்!

வெளியுலக வாழ்வில் அதிகம் நாட்டம் கொண்டவள் சந்திரா. காலைநேர பனியில் நனையும் ரோஜா, பகல் நேர கடல் அலைகள் , மாலை நேர பூங்கா வாசம், இரவு நேர மொட்டைமாடி நிலவு, இவளது அன்றாட பழக்கத்தில் ஓர் அங்கமாகும் , கூடவே அவளின் தனா. அது  அவளது சொர்க்கமாகும் .

கடவுள் கண் எதிரே தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும், என் பழக்கத்தை என்றும் மாற்றாது, இதே வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்று தான் கேட்டு இருப்பாள். அப்படி இருந்த சந்திரா தான் தர்மா என்ற ஒருவனின் மறைவில் கூண்டில் அடைந்த கிளியாக மாறிப்போய் இருந்தாள்.

உணவு அருந்த கூட அவள் வெளியே வரதயங்கினாள் எங்கே வெளியே வந்தாள் தன் தர்மா இல்லை என்று யாரேனும் சொல்ல கேட்டு அவர்களை தான் ஏதும் ஆத்திரத்தில் செய்துவிடுவோமோ என்ற பயம் தான்.

விவரம் தெரிந்த நாள் முதல் தர்மாவின் கையை மட்டுமே இறுக்கமாக பிடித்து நடந்த சந்திராவிற்கு, அவன் இனி இல்லை என்றதும் நிழல் இழந்த உடம்பாய் தவிதவித்து போனாள். என்றேனும் ஒரு நாள் மீண்டும் அவள் வருவான் அவன் இறக்கவில்லை என்ற நம்பிக்கையை மனதளவில் மலையாக செதுக்கி இருந்தாள் .

உடல் அளவில் பார்கவி வேதனைப்பட்டார் என்றால், சந்திரா மனதளவில் நொறுங்கி போனாள். பிறந்த குழந்தைக்கு பசியாற்ற கூட, டாக்டர்கள் அவளோடு போராடவேண்டி இருந்தது. அந்த அளவிற்கு  தனாவின் தாக்கம் அவளை பாதித்து இருந்தது. தோழியின் நிலைகண்டு ருத்ர தன்னை மீட்டு கொண்டான். அவனும் ஓய்ந்து போனால், அன்று பிறந்த குழந்தையும் மனதளவில் குழந்தையாக மாறிய சந்திராவையும் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்று அவன் உணர்ந்து இருந்தான் 

மித்ரா.. தர்மா சந்திராவின் பெண்குழந்தை. பொக்கைவாய் சிரிப்பும் சின்னஞ்சிறு விரல்கள் கொடுக்கும் அழுத்தமும் தான் சந்திராவை மீட்டெடுத்தது என்றும் நாம் சொல்ல வேண்டுமோ? தர்மாவை போலவே இருந்த மித்ராவின் முகஜாடையும் தர்மாவின் நிழலாய் சந்திராவிற்கு தெரிந்ததோ? மெல்ல மெல்ல மித்ராவில் தன் தனாவை பார்க்க ஆரம்பித்து இருந்தாள் .

பிரமை எனும் கடல் அலைகள்,  நிஜம் என்னும் அலைஓசையில் அடங்கியதோ? கண்ணை மூடினால் அலைகள் தெரியாமல் போனாலும், அலைஓசை என்றும் காதில் ஒலித்த வண்ணம் இருப்பது போல, சந்திராவின் தர்மா மீதான காதல் நினைவுகள், மித்ராவின் சேட்டைகள் முன் கொஞ்சம் அடங்கிதே என்று சொல்லலாம்.

சந்திரா, ருத்ரா இருவரின் ஆனந்தமும் சுற்றி இருந்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியதோ ? அனைவரின் புதிரான பார்வையையும் அலட்சியம் செய்து இருந்தனர்! துளியும் தாமதிக்காமல் இருவரும் நேரே ஆதி இருந்த அவர்களின் பழைய இல்லத்திற்கு செல்ல, நன்றி மறவாத நாய்களும் சந்திராவை கண்டதும் ஓடி வந்தனர். “பிரௌனி… ப்ளாக்கி…” பழைய நினைவுகள் அவளை சூழ்ந்து இருந்ததோ?

வந்த வேலையை மறந்து சந்திரா நாய்களை கொஞ்சி கொண்டு இருந்தாள். அவளின் நிலையை ருத்ரா அறிந்து கொண்டு ஆதியை தேடி சென்று இருந்தான். தர்ம சந்திராவின் அறையில் ஆதி இருப்பதை கண்டு கொண்டு, அங்கே அவன் செல்ல, “என்ன நடக்குது இங்க ருத்ரா ப்ரோ? தர்மா தான் சந்திராவோட ஹஸ்பண்டா? ” கேள்விகளை அவன் எழுப்ப, “அப்போ தர்மாவை நீ நேர்ல பாத்தியா?” கேள்விக்கு பதிலாக கேள்வியையே ருத்ராவும் எழுப்ப,

“ஆமா ஏன்? அவன் தான் கமிஷனரோட பையன்னு சொன்னான். அப்போ நீயும் சந்திராவும் லவெர்ஸ் இல்ல… ஆ ஆ ஆ ஆ ” கேள்வியை முடித்து இருக்கவில்லை ஆதி, ருத்ரா ஆதியை ஓங்கி அடித்து இருந்தான். பின்னே தவறை உணர்ந்தவன் , “தர்மவ எங்க எப்போ பார்த்த அத மட்டும் சொல்லு!”கட்டளையாக பதில் வந்தது. “என்னடா கிடைச்சவன் எல்லாம் என்னை அடிக்கறீங்க. கடைசியா கமிஷனரோட கோடௌன்ல பாத்தேன் அப்பறம் எங்க போனான்னு தெர்ல” கடுப்பில் அவன் பதில் கூறினாலும், கேட்டு கொண்டே வந்த சந்திராவிற்கு ஆனந்த கண்ணீர் வந்தது!

நீ வருவாயென
நான் ஏங்கி நின்றேன்
ராமனிற்காக ஏங்கி
நின்ற சபரியை போல
வெகுநாள் நீ
என்னை காக்க
வைக்கவில்லை தான்
என்றாலும் ஒரு ஒரு
நாளும் ஒரு ஒரு யுகமாய்
எனக்கு தோன்றியதே!
விதியின் விளையாட்டில்
சிக்கினோம் நாம்!
வேறென்ன சொல்ல?
வேறுயாரை பழி சொல்ல?

# # # # #

ஆதி மூலம் தர்மா தான் எல்லாம் செய்தான் என்று அறிந்த ருத்ராவும் சந்திராவும் சிறிதும் தாமதிக்காமல் கமிஷனர் அலுவலகம் வந்து இருந்தனர், உணர்ச்சி கடலில் முத்து குளித்த ஆகுவேன் என்ற பிடிவாததோடு!

“என்… தனா … எங்க… இருக்கான்… மா…மா?” மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சந்திரா வார்த்தைகளை தேடியபடி பேச, “என் தர்மா எங்க ஜித்துபா? அவன் எங்க இருக்கான்? எனக்கு உடனே அவனை பாக்கணும் ஜித்துபா? சீக்கிரம் சொல்லுங்கப்பா? என்ன எங்களையே பாத்துட்டு இருக்கீங்க? சொல்லுங்க ஜித்துபா… இத்தனை நாள் அவன் எங்க இருந்தான்? எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சி இருந்தும் ஏன் எங்களுக்கு சொல்லாம இருந்தீங்க?” படபட பட்டாசாக ருத்ரா படபடக்க,

இரண்டு வருடத்திற்கு முன் நடந்தவை, நேற்று நடந்தது போல் பசுமையாய் விஷ்ணுவின் மனதில் வந்து போனது. “எனக்கு அம்மா அப்பா இல்லங்கிற குறை தெரியாம அத்தை மாமா என்ன பாத்துக்கறாங்க. ஆனா, அவங்களை அம்மா அப்பானு கூப்பிடவே என்னால முடில. என்னிக்காச்சும் எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கும்னு நான் வெயிட் பண்ணிட்டே இருக்கேன்னு என் தனா கிட்ட சொன்னேன் மாமா. என் ஆசை எல்லாம் அவன் எப்போதும் நான் சொல்லாமலே தீத்துவச்சிடுவான்ல. அதான் இந்த ஆசையும் தீத்துக்க, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கான். கண்டிப்பா, ஒரு நாள் என் தனா வருவான் மாமா. அது வரை, நான் தான் உங்க பொண்ண வீட்ல இருக்க போறேன். அப்பான்னு உங்கள கூப்பிட எனக்கு அனுமதி தாங்க மாமா” சந்திரா தர்மாவின் விளைவுகளில் மட்டுமே உணர்ச்சிவசப்படுவாள் என்று நன்கு அறிந்த விஷ்ணுவும், அவளை அன்று தன்னை “அப்பா”என்றே அழைக்க அனுமதி கொடுத்து இருந்தார். ருத்ரா என்ன நினைத்தானோ அவனும் விஷ்ணுவை தன் பிரத்யேக “ஜித்துபா” அழைப்பை கைவிட்டு இருந்தான்.

நீண்ட பெரிய வருடங்கள் சென்ற பிறகு இருவரின் “ஜித்துபா” , “மாமா” என்ற விளிப்பில், விஷ்ணு பேச்சிழந்து தான் போனார் என்றே சொல்ல வேண்டுமோ?! “எல்லாமே தம்பியோட பிளான் தான் சின்னா ” என்று ருத்ராவிற்கு விடையளித்த விஷ்ணு, ” சதுக்குட்டி உங்கிட்ட கூட சொல்லாததுக்கும் அவன் தான் கண்ணு காரணம்”, சமாதானமாக சந்திராவிடம் கூற,

“இத்தனை பெரிய போராட்டம் எல்லாமே என் ஒருத்தனுக்கு தான அங்கிள்”, ஆழ்ந்த குரலில் அத்தனை உணர்ச்சிகளையும் அடக்க முடியுமோ? செய்து கொண்டு இருக்கிறானே நம் நெடியவன்! “ராஜ் அண்ணா” “டேய்ய் ராஜா” “ராஜேஸ்வரா, வந்துட்டியாபா?” ராஜேஸ்வரன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவனுக்கு தேவை எல்லாம் , அவன் நண்பன் எங்கே இருக்கிறான் என்ற தகவல் மட்டுமே.

“என் சேனா எங்க இருக்கான் அங்கிள்?” எல்லாரும் எதிர்பார்க்கும் பதில் தான். ஆனால் அதை கூற தான் விஷ்ணு தயாராகயில்லையே! தர்மாவின் மனைவியான சந்திராவையும் அவனின் நண்பர்களான ருத்ரா என்ற சின்னாவையும் ராஜேஸ்வரையும் பொரட்டிப்போட்டது என்றே சொல்லலாம்.

காதல் பிரிவின் சோகத்தில் ஒருத்தியும் நண்பனின் பிரிவின் ஒருத்தனும் குற்ற உணர்ச்சி மேலோங்க ஒருத்தனும் என உணர்ச்சிகள் அங்கே சங்கமம் ஆகியபடி இருக்க, இவர்களின் உணர்வுகளின் நாயகனோ தன் தாயின் காலடியில் இருந்தான்.

பார்கவி… தூய்மையான மனம் கொண்டவர் . பெற்ற பையன் மீது அலாதி அன்பு கொண்ட சராசரி தாய் தான். முகத்தை பார்த்தாலே, அப்படி ஒரு திருப்தி, நம்மை அறியாமலே மனதில் குடியேறும். அந்த முகம், இரண்டு வருடங்களாக இருண்டு இருந்தது. ‘தான் பெற்ற பையன் இறந்து விட்டான்’ என்ற செய்தி கூட தாங்கமுடியாத அளவிற்கு மகனின் மீது பாசம் வைத்தவர்.விளைவு , படுத்தப்படுக்கையாகி இருந்தார்… வலிப்பு வந்து இருந்தது! மருந்தின் மயக்கத்தில் தூங்கும் தாயின் ஆசிர்வாதத்தை வேண்டி கண்ணீர் விட்டபடி இருந்தான், தர்மத்தின் சேனா !

என் காற்றிலே
சுமைதான் கூடுதே….
என் தோளிலே
தனிமை காயமே…..

தொலைந்த நாட்கள் திரும்புதே…..
உதிர்ந்த நேசம் மலர்ந்ததே….
கசையும் இறகாய் இளகுதே……
திசையும் திறந்து அழைக்குதே…..

தீராதே உன் உறவே….
தீ மூட்டும் உள் உணர்வே
நீலம் இல்லாத வானம்…..
எந்நாளும் இல்லை உயிரே…

உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை

நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே ஹே உசுராலியே….ஹே…..

காற்றோடு கலந்து வந்த யாரோ போனின் ரிங்க்டோன், அந்த சூழ்நிலைக்கு பொருந்தி போனதோ? மேல் இருந்து விதியும் சிரித்தது, யாரின் பாவ கணக்கு முடிய போகுதோ? யாரின் புண்ணிய கணக்கு சேர போகுதோ? யாரின் வாழ்க்கையில் இருள் சூழ போகுதோ? யாரின் வாழ்க்கையில் ஒளிவீச போகுதோ? என்ற எண்ணத்தில்!

# # # # #

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # # 

Leave a Reply

error: Content is protected !!