EVA12

ELS_Cover3-8b394ca7

EVA12

12

பெரியவர்கள் சாப்பிட்டு முடித்துவிட அடுத்து இளையவர்கள் அமர்ந்தனர்.

சஹானா தருண் அழைத்ததும் பொத்தென்று அவனருகில் அமர்ந்தாள்.

உற்சாகமான தருண் பார்கவின் முன்னே நல்லவனாகக் காட்டிக்கொள்ள, அவளுக்கு வேண்டியதைப் பரிமாறிக் கொஞ்சம் அதிகப்படியாகவே இளித்துக்கொண்டிருந்தான்.

ஆதன் “ஹாய் ஒரு குட்டி வாக் போனேன்” பொதுவாகச் சொன்னபடி சஹானாவிற்கு எதிரில் அமர்ந்தான்.

கண்களைச் சுருக்கி அவனை முறைத்தவள், ‘சென்னைல ஆள்போதாம காஞ்சிபுரத்துல தேடுறியோ! என்ன சொன்ன கேர்ள் பிரெண்ட்ஸ்…ஸ்? அப்போ நிறையே பேர்! என்ன புண்ணாக்குக்கு எனக்கு மெசேஜ் அனுப்பின கல்யாணம் தாலின்னு!” இட்லியைக் குத்தி குதறினாள்.

“இன்னும் சாம்பார் வேணுமா” தருண் குழைய,

“கொட்டித்தொலை!” எரிந்து விழுந்தாள்.

சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் எதையோ கீழே தள்ளிப் பார்கவ் மேஜைக்கடியில் சென்றுவிட ஆதனுக்கு புரைக்கேறியது.

தருண் சுத்தமாக உறைந்திருந்தான்,’இது சஹானா தானா, அப்போ ஃபோபியா…ஐயோ சரியா போச்சா? வாய்ப்பில்லையே!’ தட்டை வெறிதான்.

‘ட்ரீட்மெண்ட் எடுத்தா குடும்ப மானம் போகும்னு கிளப்பிவிட்டோமே? ச்சே இவளோட பயத்தை துருப்புச்சீட்டா வச்சுதானே வாழ்க்கை தரேன்னு ஸீன்போட்டு, காய் நகர்த்திச் சம்மதிக்க வச்சேன்’

வேகமாக மூச்சுவிட்டுக்கொண்டு இருந்த தருணை பார்க்கையில் ஆதனுக்கு திருப்தியாகத்தான் இருந்தது. இருந்தாலும் இதென்ன சஹானாவின் புது முகம்?

அவள் முகத்தில் கடுகு வெடிப்பது, பார்கவிற்கும்  குழப்பமளித்தது.

தோட்டத்திலிருந்த நடைபாதையில் ஆதனும் பார்கவும் நடந்துகொண்டிருந்தனர்.

ஆதன் “நீ பாத்திருக்கணுமே! அது நம்ம சஹாவே இல்ல! தருணை விளாசினா பாரு நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு வந்துநிக்குறன்னு” வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருவரும் சிரிக்க,

“டைனிங் லேபிள்ள, அவ கொட்டித்தொலைன்னு சொன்னாப்ப அவன் முகம் அஷ்ட கோணலானதைப் பாத்தியா?”

“நீ டைவ் அடிச்சதையும் பார்த்தேன். இப்படி ரெண்டு நாள் பண்ணா துண்டைக்காணும் துணியை காணும்னு அவனே ஓடி போயிடுவான். நாம மெனக்கெடவே வேண்டாம்”

சிரிப்பு ஓய சில நொடிகளானது, பார்கவ் “எனக்கென்னமோ காலைல தூக்ககலகத்துல கோவம் வந்துருக்குமோன்னு தோணுது” என்றான் சீரியஸாக,

“தூங்க விடாட்டி அவ்ளோ கோவம் வருமா?” ஆதன் ஆச்சரியப்பட,

“ஆமா ஒருவாட்டி நான் எழுப்பிட்டு ஓடிட்டேன், பின்னாடி வந்த எங்கம்மா காலுமேல விட்டா பாரு ஒரு உதை! அம்மா ரெண்டு நாள் படுத்துட்டாங்க. ஆள் எவளோ சாதுவோ அவளோ உக்கிரமா இருப்பா சில சமயம் அதுவும் இப்படி தூக்கத்துல எழுப்பினோம் தொலைஞ்சோம்” என்ற பார்கவ் முகம் இருகி,

“பயத்தை ஓவர்டேக் பண்றமாதிரி ஏதாவது நடந்திருக்குமா? ராத்திரி தூங்கி தொலைச்சுட்டேன். ஒருவேளை அவன் அவகிட்ட ஏதாவது…”

“நோ நோ! ராத்திரி ஈவாவை காவலுக்கு நிக்க வச்சேன். நானும் காரிடார்ல அப்பப்ப நடந்தேன். பிரெஷ் ஆக போனப்பதான் நீ அவ ரூம்ல தருண் வரப்போறானு சொன்னதை ஈவா எனக்கு சொல்லவும் உடனே நான் ஓடிப்போனேன். பதட்டமா போச்சு!”

ஆதனை வியப்பாகப் பார்த்தவன், “கேக்கறேன்னு தப்பா எடுத்துக்க மாட்டேல?”

“ச்சேசே கேளு”

“நீ சஹானாவை விரும்பறியா?”

“யு மீன் லவ்?” ஆதன் எதிர்பார்க்கவில்லை, கேட்ட பார்கவுமே.

அவனையே இமைக்காமல் பார்த்தவன், “ம்ஹும்…அந்த மாதிரி எதுவும் இதுவரை தோணினது இல்ல. ஆனா எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். ரொம்ப…ரொம்பவே! ஆமா ஏன் கேக்கறே?”

ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ள வேண்டாமென்று பார்கவ் நடந்தபடி, “என் கண்டீஷனுக்கு ஓத்துக்கிட்டு நீ இந்த காரியத்துல இறங்கி இருக்குறது ஒருபக்கம் ஓடிக்கிட்டேயிருக்கு. நான் கூட தூங்கி இருக்கேன் நீ தூங்காம காவல் காத்துகிட்டு… காதல் இல்லைனா ஏன்?”

பதில் தர ஆதன் துவங்கும்முன்னே,

“டேய்!” சஹானாவின் குரலில். ஆதன் மூச்சை பிடித்துக்கொண்டான் காலை வாங்கிய டோஸ் அப்படி.

சுதாரித்துக்கொண்ட பார்கவ் “என்னடி?”

அவனை முறைத்தவள், “நான் உன்ன கூப்பிடல!” என்று ஆதனை பார்க்க,

“டேய்? அந்த டேய் நானா? ஓ காட்! ” ஆதன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டான், “என்னப்பா பார்கவா சென்னைல என்னை ஆதன், சார்ன்னு எல்லாம் கூப்டுகிட்டு இருந்த பெண்ணை இப்படி ஒரே நாள்ல டேய் போட வச்சுட்ட?” போலியாகப் புலம்ப,

காதில் வாங்காதவள், “ஏதாவது சொல்லிட போறேன். நீ என்ன பெரிய லவ்வாலஜிஸ்டா? அவனுக்கு டிப்ஸ் தர?”

“லவ்வாலஜிஸ்ட்? அப்படியொரு ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்களா?” ஆதன் சீரியஸாக கேட்க,

“பிடிச்சவனுக்கு அழகா தெரியனுமா? மண்ணாங்கட்டி! வேண்டியவன் கண்ணுக்கு பெண்ணா தெரியுறேனானே தெரியல இதுல அழகு தான் ஒரு குறை! உங்க இத்துப்போன கேர்ள் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லுங்க சஹானா அப்படி இல்ல, அவ வேறன்னு!

அப்புறம்…அப்புறம் என்ன சொன்னீங்க நான் காட்டேறியா? ஜொள்ளுவிட்டு தூங்குவேனா? நீங்க பாத்தீங்களா? நான் என்ன சினிமால வர ஹீரோயினா மேக்கப்போட எழுந்துக்க?” கத்தியவள் மூச்சுவாங்க கூட்ஸ் வண்டியைப் போல் புகைய,

ஆதன் சிரிப்புடன், “அடடே! இதான் சங்கதியா? காட்டேறினு சொன்னதுக்கா கார்தாலேந்து எல்லாரையும் வறுத்தெடுக்கிற? நாங்க என்னமோ ஏதோனு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம் இல்ல?” பார்கவை பார்க்க,

“அதானே”

“என்ன நொதானே?”

அவளை தன்புறம் திருப்பிய ஆதன், “ஹே சஹா என்ன இது? நான் அவனை ரூம்குள்ள வரவிடக்கூடாதுன்னு சொன்னேன். உன்னைப்போய் காட்டேறினு சொல்லுவேனா? காட்டேறி கோச்சுக்காது?”

அவன் கையைத் தோளிலிருந்து தட்டிவிட்டவள், “அப்போ நான் அதைவிட மோசமா இருக்கேன்ல? சரிதான் உங்க கேர்ள் பிரெண்ட்ஸ் மாதிரி நான் ஒன்னும் அழகெல்லாம் இல்ல வெள்ளைத் தோலும் இல்ல. எதோ இப்படி பொறந்துட்டேன் அதுக்கு யார் கிட்டலாம் மூக்கறு படவேண்டி இருக்கு!” கண்களில் நீர் கோர்க்க,

“ஹே சீ என்ன நீ? நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்றே?” ஆதன் அவள் கண்ணைத் துடைக்கப் போக, ஆவேசமாகத் தட்டிவிட்டவள்,

“இனிமே பெரிய இவ….உங்க ஆலோசனை ஏதாவது அவன்கிட்ட சொன்னீங்கனா என்ன செய்வேன்னு தெரியாது!” எச்சரித்துவிட்டு புயலெனத் திரும்பினாள்.

“ச்சே கூட பொறந்தது தான் பைத்தியம்னா வந்ததும் லூசு!” உரக்கவே முணுமுணுத்துக்கொண்டு செல்பவளைப் புரிந்துகொள்ள முடியாமல் ஆதன் புன்னகைக்க, பார்கவ் புரிந்துகொண்டான்!

இப்பொழுது தான் ஆதன் காதலில்லை என்றான். ஆனால் தங்கையின் பேச்சும் பார்வையும் செயலும் காதலை அல்லவா காட்டுகிறது?

“என்ன பார்கவ் இதுக்கா இவளோ ரியேட் பண்ணுறா? நான் தப்பா… ஒன்னுமே சொல்லல… அவனை எப்படியாவது…”

“விடு விடு அவ எதோ குழப்பத்துல இருக்கா நான் பேசிக்கிறேன். இப்போ சமாதானம் செய்ய வேண்டாம் இந்த கோவம் தருண் மேல பாயும் நமக்கு உதவியா இருக்கும்” பார்கவ் மனதில் பாரம் கூடியது.

“இல்ல பா அதுக்காக அவளை இப்படி… “

“விடு ஆதன் பாத்துக்கலாம். அங்க பார் அவ பின்னாடி அவன் போறான். வா”

பார்கவின் பார்வை சென்ற திசையில் ஆதனும் திரும்ப, தொலைவில் காலைத் தரையில்உதைத்து என்னவோ கத்துகிறாள் சஹானா, கீழிருந்து என்னவோ எடுக்கிறாள்.

“ஐயோ கல்லு” பார்கவ் பதற,

“சஹா நோ நோ” ஆதன் ஓடத்துவங்கி இருந்தான்.

“ஒருவாட்டி சொன்னா புரியாதா எனக்கு எங்கயும் வர பிடிக்கல!” சஹானா ஆவேசமாகக் கத்த, தருண் கோவமாக எதுவோ சொல்ல வந்தான் ஆனால் ஆதனின்,

“சஹா என்ன இது?” மூச்சுவாங்க நின்று, “உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவர் கிட்ட இப்படித்தான் மரியாதை இல்லாம நடந்துபியா?” என்ற மிரட்டலில் தருண் கோவத்தை டக்கென்று மறைத்துக்கொண்டான்.

அவனை நம்பமுடியாத பார்வை பார்த்தவள், ‘நான் இவனை? உனக்குச் சம்மதமா?’ அதுவரை இருந்த மொத்த கோவமும் சோகமாய் மாறப் பயம் வந்து கவ்விக்கொண்டது. கண்கள் பணிக்க, கல்லைக் தவறவிட்டவள் கேவியபடி வீட்டுக்குள் ஓட, தருண் குரூரமாக உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

‘அதானே மாறிடமுடியாதே!’

ஆதன் சஹானாவின் கண்ணீரைப் பார்த்ததால் வந்த கோவத்தை மென்று விழுங்கி “தருண் பாவம் எதோ சின்ன பொண்ணு”

“இட்ஸ் ஓகே! சும்மா சினிமாக்கு தான் கூப்பிட்டேன். அதுக்கு கல்லெடுக்குறா. பயம் தான் ஒரே பிரச்சனைன்னு நினைச்சேன் ஆனா பார்த்தா மனோவியாதி இருக்கும் போல இரு…” பார்கவ் வந்துவிடப் பேச்சை நிறுத்தி,

“சும்மா சினிமாக்கு கேட்டேன் கோவிச்சுகிட்டா அண்ணா” என்று பம்மினான்.

“அதெல்லாம் சரி வராதுடா. உனக்கு தெரியாது?” பார்கவ் குரலில் கோவம்

“தெரியும்…” தருண் தாடை இறுகியது.

ஆதன், “கல்யாணம் செஞ்சுக்க போறவனோட சினிமாக்கு போறது தப்பில்லை…இப்போ என்ன அவ கூட சினிமா பார்க்கணும் அவ்ளோதான?” பார்கவை பார்த்துக் கண்ணடிக்க,

“சரி முயற்சி பண்றேன்” என்றான் கோவமாகவே. அவள் சென்ற திசையைப் பார்த்திருந்த தருண் இதைக் கவனிக்கவில்லை.

ஹாலில் எதோ கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் சந்திரன்.

“அப்பா” பார்கவ் அழைக்க, பார்வையால் வினவினார்.

“தருண்…சினிமா போகணும்னு…”

“போயிட்டு வாங்க” என்றவர் புத்தகத்தில் எதையோ குறித்துக்கொண்டார்.

ஆதனும் தருணும் அமைதியாக இருக்க, அவர்களை ஒருமுறை பார்த்த பார்கவ், “அது சஹானா கூடத் தருணுக்கு சினிமா…”

“என்னது?” கோவமாகப் புத்தகத்தை மூட இளையவர்கள் மூவருமே சற்று அதிர்ந்தனர்.

“என்ன தருண் இது?” அவர் பார்வையால் அவனைத் துளைக்க,

“அது மாமா சும்மா பேசி…”அவன் திணற

“அதெல்லாம் இங்க நடக்காது தருண்! கல்யாணம் ஆகுறவரை இந்த ஊரசுத்துறதெல்லாம் அனுமதிக்க முடியாது. எங்க உங்கப்பனை கூப்பிடு இதான் பிள்ளையை வளர்ந்திருக்க லட்சணமா?” அவர் ஆவேசமாகத் தொலைப்பேசியை எடுக்க,

“ஐயோ மாமா” தருண் ஓடிச்சென்று அவர் காலடியில் அமர்ந்தான், “தப்பா எந்த எண்ணமும் இல்ல சும்மா ஆசை. நீங்க வேண்டாம்ன்னா வேண்டாம் மாமா”

‘அட வெக்கம் கெட்டவனே! இவளோதானா நீ?’ ஆதனுக்கு சப்பென்றாகி விட, அவன் அறியவில்லை தருண் நேராக எதிரியைச் சந்திக்கத் தைரியமின்றி வஞ்சம் வைத்து முதுகுக்குப் பின்னால் பழிதீர்க்கும் ரகமென்று.

பார்கவ் கையைத் தொட்டு ஆதன் எதோ ஜாடை செய்ய, அவன்,

“அப்பா பாவம். வேணும்னா நானும் துணைக்கு போறேன். ஹே ஆதன் நீயும் வாயேன்” என்று அழைக்க, தருண் மறுக்கும் முன்னே,

“அப்போ சரி. ஆனா பொழுதோட வீடு திரும்பணும்”

“நீங்களும் வாங்களேன் அங்கிள்” ஆதன் அழைக்க,

அவனை வினோதமாகப் பார்த்தவர், “எனக்கு அதெல்லாம் பிடிக்காது. வேணும்னா இவங்க அம்மாவை கூட்டிட்டு போங்க”

“தாத்தா பாட்டிகூட வந்தா கூட்டிட்டு போலாமா?” பார்கவ் கேட்க, “வந்தா கூட்டிட்டு போங்க” என்றவர் நோட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிட, பார்கவ் ஆதன் இருவரும் தருணிடம்,

“என்னடா சந்தோஷமா?”

“ஆமா தருண் உங்க ஆசைப்படியே சஹானா கூட சினிமா பார்க்கலாம்” என்றனர்.

ஏமாற்றத்தில் பொருமிக்கொண்டிருந்த தருண் வேண்டா வெறுப்பாகப் புன்னகைத்து, “தேங்க்ஸ்” என்றான்.

‘ஆடுங்க ஆடுங்க. எல்லாமே சஹானா என் மனைவி ஆகிறவரைத் தான் அப்புறம் இந்தக் குடும்பத்தை என்ன பண்றேன் பாருங்க’ சந்திரனைக் குறிப்பாக நிந்தித்துக்கொண்டான்.

தனிமையில் திரையரங்கின் இருளில் சஹானாவை இம்சிக்க நினைத்துத் திட்டம் போட்டவனுக்கு இந்தத் திருவிழா கூட்ட ஏற்பாடு எரிச்சலாக இருந்தது.

போதாத குறைக்குப் பாட்டி தாத்தா நடுவே சஹானா சந்தோஷமாகப் பாப்கார்னுடன் அமர்ந்துகொள்ள, தருணுக்கு இருபுறமும் காவலர்கள்போல ஆதனும் பார்க்கவும். ஒருநொடி கூடத் திரைப்படத்தை ரசிக்க முடியாமல் போனது.

வீட்டிற்குத் திரும்பியதும், தருண் தனிமையில், “அம்மா அதெல்லாம் சரிவராது. நிச்சயதார்த்தமாவது மண்ணாவது! நேரா கல்யாணத்துக்கு இந்த மாசமே தேதி பாருங்க! நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது அப்பாகிட்ட சொல்லி இங்க வரச் சொல்லு.

உன் பொறுமையைக் கொளுத்து! பொறுமையா இருந்தா அவளோதான் நீ ஆசைப்பட்ட கடையும் பணமும் நக்கிட்டு தான் போகணும் பரவா இல்லையா?

எனக்கு இந்தக் காசு பணம் வேணாம், எனக்கு அவ வேணும்…முடியாது வா அவளோதான். இன்னிக்கே என் கைவரிசையை காட்டினா தான் அவ அடங்குவா!” தாயை மிரட்டிக்கொண்டிருந்ததை,

லேப்டாப் திரையில் முகம் இறுகப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதன்.

ஒன்றிற்கு இரண்டாகப் பீ’க்கள் மூலம் தருணை கண்காணிப்பதும் சஹானாவைப் பாதுகாப்பதையும் ஈவாவின் பொறுப்பில் விட்டிருந்தான் ஆதன். இரண்டும் லைவாக அனுப்பும் வீடியோவைப் பார்த்திருந்தவன் கண்கள் ரத்தமாகச் சிவந்து முகத்தில் நரம்புகள் புடைத்தன.

இரவு அனைவரும் உறங்கிவிட்டதாக எண்ணி சஹானாவின் அரை கதவைத் தட்டினான் தருண்.

தூக்கக் கலக்கத்துடன் கண்களைக் கசக்கிக்கொண்டு கதவைத் திறந்தவள் மூச்சை பிடித்துகொண்டாள்.

“த…நீ எங்க “ துணைக்காக ஆதன் தங்கியிருந்த அறைக்கதவை பார்த்தாள்.

“என்ன உன் பாடிகார்ட உதவிக்குக் கூப்பிட பாக்கறியா? ஐயோ வேணாம்! “ நடித்தவன், குரூரமாக முறைத்தபடி அவளை நோக்கி நடக்க, பின்னோக்கி நடந்தவள்,

“நீ பண்றதை பார்த்தா உன்னை அவன் உயிரோடவே விடமாட்டான்! வாழணும்னா போயிடு! என்னை நீ தப்பா பாக்குறது தெரிஞ்சாலே உன்னை தொலைச்சுகட்டிடுவான்”

“ஆஹான்! ஹீரோ சாருக்கு உன்மேல அவளோ லவ்வா? பார்க்கலாமே” அவளை இன்னும் நெருங்கி அவள் கையைப் பற்ற, “விடுடா…” வியர்வை அரும்பி நொடியில் மயங்கிவிட்டாள்.

அவளைக் கைதாங்கலாகப் பிடித்துக் கட்டிலில் கிடத்தினான்.

“சஹா! பயப்படாத. நான் வந்துகிட்டு இருக்கேன்!” காதோரம் ஆதன் குரல் கேட்க, முழுவதும் நினைவை இழந்தாள்.

ஏளனமாகச் சிரித்துக்கொண்ட தருணோ ‘இவளோ சுலபமா ஆக்கிட்டே’ கதவைத் தாளிட்டு திரும்பியவன் தன் சட்டை பட்டனை தொட,

தடதட வெனக் கதவை உடைப்பதைப் போல் யாரோ தட்ட, பதறியவன் முகம் வியர்வையால் குப்பென்று நனைந்தது.

இதயம் தொண்டைக்கு ஏற, வேறு வழியின்றி திறந்தான்.

யாரென்று தருண் பார்க்கும் முன்னே பார்கவ் அவனைத் தள்ளிவிட்டு அறைக்குள்ளே நுழைந்தான். 

பின்னே வந்த  ஆதன் அவனை எரித்து விடுவதை போல் முறைத்தபடி உள்ளே சென்றான்.

தங்கையைக் கட்டிலில் பார்த்தவன், “என்னடா இது?” அவனை நெருங்கும் முன்னே,  தருண் சட்டையைக் கொத்தாகப் பிடித்துச் சுவரோடு சுவராக அழுத்தியிருந்தான் ஆதன்!

“ப்ளாடி ராஸ்கல்!” பல்லைக் கடித்தபடி அவனை நெறுக்கியவன், “இவனை என்ன பண்ணுறது பார்கவ். தலையை திருகி எறிஞ்சுடவா! இல்லை அப்படியே புதைச்ச்சிடவா!” கர்ஜிக்க,

“ஹே விடு விடுடா நான் ஏதும் தப்பு செய்யல அவ மயங்கினா உதவ தா…”

அவன் வயிற்றில் ஆதன் முட்டியால் ஒரு எத்து ஏத்த, “ஐயோ” வலியில் துடித்தவன், பலகீனமாக “டேய் விடுடா…நான் தப்பா எதுவும் பண்ணல. நல்ல எண்ணத்துல…” முடிக்கும் முன்பே பார்கவ் அறைந்து தள்ளினான்!

“டேய் அடிக்காதீங்கடா” தருண் முட்டியைக் கட்டிக்கொண்டு உதடு ஓரத்தில் ரத்தம் வர, “நான் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு தானே தொட்டா என்ன?”

ஆதன் ஆக்ரோஷமாக அவனைப் பக்கவாட்டில் உதைத்துத்தள்ளி, “அதுக்காக தொடுவியா? அதும் மயக்கமா இருக்க பொண்ண? நாயே” என்று கால்பந்தை உதைப்பதைப் போல் எட்டி எட்டி உதைக்க, அலறிச் சுருண்டான் தருண்.

“டேய் டேய்” சந்திரன் ஓடிவர, ஆதன் தருணை பிடித்து உயர்த்தினான்.

“என்னடா இது எவனோ வீட்டு மாப்பிள்ளையை அடிக்கிறான் பாத்துகிட்டு நிக்குற தடிமாடு” அவர் பார்கவை கடந்து ஆதனை அடிக்க நெருங்க, அவர் கையைப் பிடித்துத் தடுத்தான் பார்கவ்.

“நம்ம சஹானாவை கெடுக்க வந்து நிக்கிறான் என்ன பண்ண சொல்றே? கண்டும் காணாமலும் போகவா? சொல்லு பா போகவா?”

கையை அழுத்திப்பிடித்துக் கத்தும் மகனின் ஆவேசம் அவரை நிலைகுலையச் செய்யத் தள்ளாடி மகனையே ஆதரவாகப் பற்றிக்கொண்டு, மகளைப் பார்க்க அவளோ எதையும் அறையாமல் மயங்கி இருந்தாள்.

“அவளை பயமுறுத்தி மயங்கவச்சு, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அத்துமீற வந்தான்! அதான் அடிச்சேன்! சஹாவை தொட வந்தா இன்னும் மிதிப்பேன், ஏன் கொன்னே போடுவேன்! வீட்டு பெண்ணைத் தொட்டவனை என்ன பண்ணபோறீங்க?” ஆதன் ஆவேசமாகச் சந்திரனைப் பார்க்க,

அவர் பார்வை தருண் மீது பதிந்தது, கூனி நின்றவனால் அவர் தீப்பார்வையை தாங்க திராணியின்றி தரையை வெறித்து, “பொ…பொய் நான் சகுவுக்கு உதவி செய்யத்தான் வ…வந்தேன்” திக்கினான்.

“யோக்கியன்னுக்கு என்னடா பூட்டின ரூம்ல மயக்கமான பொண்ணோட வேலை?” பார்கவ் கையை ஒங்க,

“பார்க்வா பொறுடா” சந்திரன் தடுத்து, தருணிடம் “உதவத்தான் வந்தேனா எதுக்கு தாள் போட்ட? எங்களை தானே கூப்பிட்டு இருக்கணும்? நீ ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே நீ அவகிட்ட பேசக் கூடாது தனியா சந்திக்க கூடாதுன்னு சொன்னேன்ல?” அதட்ட,

மெல்லிய நடுக்கத்திருந்த தருண், “அது…நாங்க ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம் மாமா தனியா பேசக்கூட இங்க ப்ரைவஸி இல்லன்னு அவதான் என்னை தனியா ராத்திரி வர சொன்…ஐயோ!” ஆதன் உதைத்திருந்தான்!

“ஹே நில்லுப்பா” சந்திரன் அதிர்ச்சியிலிருந்தார், நடப்பதை கிரகிக்கவே அவருக்கு அவகாசமின்றி இங்கே நடக்கும் அடிதடி அவரை உலுக்கி இருந்தது என்றால், எதையுமே அறியாமல் சுயநினைவின்றி இருந்த பெண்ணின் நிலை அவரை அழுத்தியது.

“விடுபா விடு” ஆதனை தடுத்தவர், “நான் பேசிக்கிறேன். டேய் தருண் வாடா” என்று தள்ளாடி நிற்க, அவனைத் தூசியென உதறிய ஆதன், மறுநொடியே சஹானாவைச் சரியாகப் படுக்க வைத்துப் போர்த்திவிட்டான்.

கோவத்தில் அவன் நெஞ்சு விம்மிப்புடைக்க, “இவளைத் தப்பா பார்க்க உனக்கு அசிங்கமா இல்ல? குழந்தை மாதிரி நடுங்குற பொண்ணை இப்படி கோழைமாதிரி நெருங்குற நீயெல்லாம் என்ன பிறப்புடா!” சுட்டுவிடுதை போல் முறைத்தவன்,

“உனக்கெல்லாம் எங்க திமிர் இருக்குன்னு தெரியும். அதை பிச்சு எறிஞ்சுட்டா சரியாயிடும் இப்படி பாக்குற பொண்ணு மேல எல்லாம் பாய முடியாது!” மீண்டும் அவனை ஒரு உதைவிட்டவன்,

அதற்குமேல் அங்கே இருந்தால் ஆத்திரத்தில் தருணை ஏதாவது செய்துவிடுவோம் என்று தோன்ற,
சந்திரனிடம், “மன்னிச்சிடுங்க அங்கிள்”என்றவன் அறையைவிட்டு வேகமாக வெளியேறினான்.

தோய்ந்திருந்த தருணை பார்கவ் இழுத்துச் செல்ல, மகளை ஒருநொடி இமைக்காமல் பார்த்தவர் மனம் பாரமானது. அறைக்கதவைச் சாத்திவிட்டு மகனைத் தொடர்ந்து சென்றார்.

ஆதன் தன் அறையில் ஈவாவிடம் “தருண் என்ன பன்றான்?” கோவமாக அமர்ந்திருந்தான், இன்னும் படபடப்பு அடங்கவில்லை.

“பாருங்க”

லேபட்டப்பில் தருண் தெரிந்தான் தலைகுனிந்து நின்றிருந்தவன் முன்னே கோவமாகச் சந்திரனும் பார்க்கவும்.

“அப்பா இன்னுமா இவனுக்கு நம்ம பொண்ணை தர நினைக்கறீங்க?” பார்கவ் முகத்தில் அடிபட்ட வலி,

“இனி யாருக்கு கொடுக்க முடியும்?” பொறுமிய சந்திரன், “நாளைக்கு உங்கப்பன் இங்க இருக்கனும் இல்லை உங்க குடும்பத்தயே ஒழிச்சு கட்டிடுவேன்!”எச்சரிக்க, ஆதன் அதை நிறுத்தினான்.

‘இப்போவும் எப்படி இவரால இப்படி யோசிக்க முடியுது? ச்சே’ தலையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டவன்,

சற்றுமுன்பு திரையில் தருணை கண்காணித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் தருண் சஹானா உரையாடலைக் கேட்டான், பார்கவை உடனே உஷார் படுத்தினான்.

அவனை எதிர்த்துப் பேசவே அவள் எவ்வளவு சிரமப் பட்டிருப்பாள் என்பதை ஆதன் நன்கு அறிவான். ‘என்னை நீ தப்பா பாக்குறது தெரிஞ்சாலே உன்னை தொலைச்சுகட்டிடுவான்’ என்றாளே!

‘என்மேல எவளோ நம்பிக்கை வச்சுருக்கே!’ மனம் பிசைந்தது. அதனால் தானே தருண் கதவைத் தாளிடும் நேரம் பீயை அவள் காதருகில் அனுப்பி, ‘பயப்படாதே நான் வந்துகிட்டு இருக்கேன்!’ என்றான்.

கண்களை மூடி சில நிமிடங்கள் தன்னை ஆஸ்வாச படுத்திக்கொள்ள முயன்றான். அறையில் அமைதியின்றி உலவினான். முகத்தில் தண்ணீரை வேகமாக அடித்துக்கொண்டான். 

மனம் அமைதி பெறவில்லை. 

கட்டிலில் சாய்ந்துகொண்டு கண்களை மூடினான். இன்னும் மோசமானது! 

மனம் சஹானாவை நாட, “ஈவா சஹா பாக்கணும்” என்றான்,

“பாருங்க பாஸ்” திரையில் சஹானாவின் அறை தெரிந்தது.

சோர்வாகச் சாய்ந்திருந்தவள் மொபைலை கையிலெடுத்தாள்.

“ஈவா அவ மொபைல் ஸ்க்ரீன் கிட்ட போக சொல்லு”

அங்கே சஹானாவின் அறையில் பீ அவள் அறியாமல்  அவள் பின்னாலிருந்து மொபைல் திரையைப் படம் பிடித்தது,

வாட்சப்பில் ஆதனின் விண்டோ திறந்திருக்க, அவனுக்கு மெசேஜ் அனுப்ப எதையோ எழுதி எழுதி அழித்துக்கொண்டிருந்தாள்.

“ஆதன் எனக்கு உங்களை பார்க்கணும்…”

“எனக்கும்” முணுமுணுத்துக் கொண்டான்.

அதை அழித்தவள், “ஆதன் தூங்கிட்டிங்களா?”

“இனி எப்படி வரும்?” சொல்லிக்கொண்டான்.

அழித்தாள். “பயமா இருக்கு”

ஆதன் கண்களை மூடித் திறந்தான் இமைகள் பாரமானது.

அழித்தாள். “ஆதன்…” அவள் அமைதியாகப் பார்த்திருக்க, ஆதனும் காத்திருந்தான். நொடிகள் நிமிடங்களாக நீண்டன, அவள் எதுவும் டைப் செய்யவில்லை,

“பாஸ் நான் என்னனு கேட்கவா?” ஈவா கேட்க, “வேண்டாம்” என்றவன் பார்வை திரையிலேயே இருந்தது.

“என்னை கூட்டிட்டு போயிடுங்களேன், இங்க இருக்க பயமா இருக்கு. எங்கயானா ஆஸ்ரமத்துல சேர்த்துவிடுங்க, யார் கண்ணுலயும் படாம எங்கயான கண்காணாம என்னை…” மேலே டைப் செய்யாமல் நிற்க,

“அழறா பாஸ்” என்று ஈவா அவனைப் பார்க்க, அவன் கண்ணிலிருந்தும் கண்ணீர் வெளியேறியது.

“கண்டிப்பா உன்னை இங்க விட்டுட்டு போகவே மாட்டேன். என் கூட வந்துடு” திரையில் அவள் தலையை வருடி, கண்களைத் துடைத்துக் கொண்டவன்,

“பீ யை அவ ரூம்லேந்து வெளில வர சொல்லு” என்றான் உணர்வின்றி,

பீ யை திரும்ப வரும்படி ஈவா கட்டளையிட, அதுவோ வெளியேற வழியின்றி முழிக்க,

“பாஸ் பீ சஹானா ரூம்ல மாட்டிக்கிச்சு வழி இல்லை. ஏசி ஓடுது எல்லா கதவும் சாத்தி இருக்கு”

“இதுவேறயா! உள்ள எப்படி அனுப்பின?”

“அவ பின்னாடியே நம்ம ஆளு போனான். பாஸ் இப்போ எப்படி வர சொல்றது? நீங்க போறீங்களா?”

“இல்ல ரிஸ்க்” அவள் அறைக்குச் செல்வது சாத்தியமில்லை.

ஆழமாகச் சுவாசித்தவன், “பீ ய அங்க இருக்க…அலமாரி மேல உட்காந்து ஆஃப் ஆக சொல்லு” என்றான்

“எதுக்கு அணைக்கணும் பாஸ்? கண்காணிக்கணுமே” ஈவா தருண் பின்னாடி சென்றிருக்கும் பீயை பார்க்கத் துவங்கியது.

“இல்ல ஈவா பொண்ணுங்க ரூம்குள்ள பீ அனுப்பினதே தப்பு. இன்னிக்கி வேற வழி இல்லை அதான் இப்படி செஞ்சோம் “

“என்ன தப்பு பாஸ்?”

“அதெல்லாம் மனுஷங்க உணர்வு சம்மந்தப்பட்டது, உனக்கு புரியாது”

“எனக்கு அப்போ உணர்ச்சி குடுங்க பாஸ்” ஈவா ஆர்வமாக.

சிரித்தவன், “இதென்ன சினிமாவா உனக்கு உணர்வுகள் தர? நீ தான் ஏற்கனவே உணர்வு இருக்குற மாதிரியே முடிஞ்ச அளவுக்கு பிரதிபலிக்கிற. இது போதும் சிலதெல்லாம் இயந்திரங்கள் கிட்ட இல்லாம இருக்கிறதுதான் பூமிக்கு நல்லது ஈவா”

“நான் தப்பா பயன் படுத்துவேன்னு சொல்றீங்களா பாஸ்” குறைபட்டுக்கொண்டது.

“பாத்தியா? வருத்தப்படற மாதிரி உன்னால நடிக்க முடியுது. இதுவே போதும். உன் மெமரிலேந்து இந்த உணர்வு நீ பிரதி பலிக்கிற மாதிரி மனுஷங்க நாங்க மனசு மூளைன்னு உணர்ச்சிகளால லோல் படறோம். ஈவா நீயாவது நிம்மதியா இரு”

“நீங்க நிம்மதியா இல்லையா பாஸ்?”

“இல்ல ஈவா”

“ஏன் பாஸ்?”

அமைதியாக மொபைலை எடுத்துவைத்து ஜன்னல் அருகே சென்ற சஹானாவைப் பார்த்தான்.

“இவளை என்ன செய்ய ஈவா? விட்டு போகமுடியாது. கூட்டிகிட்டு போகலாம் ஆனா பார்கவ் கல்யாணம் செஞ்சுகிறதா இருந்தா அனுப்பிவைக்கிறேன்னு சொல்றான். காதல் இல்லாம எப்படி கல்யாணம் செஞ்சுப்பேன்? அவளுக்கு நிறைய அன்பு வேணும் ஈவா. அவ குணமாக அன்பு வேணும். அவ சாதானரமான வாழ்க்கை வாழ அன்பு வேணும்”

பணம் இருந்தால் சந்தோஷமென்று உலகம் ஓடிக்கொண்டிருக்க, இவளிடத்தில் கொட்டி கிடக்கிறது ஆனால் அவள் மனதில் சாதாரண பெண்ணின் மனதில் இருக்கும் எந்த சந்தோஷங்களும் இல்லை. வைரங்கள் பதித்த தங்கக் கூண்டில் இருக்கிறாள்.

அவன் முகத்தை ஆராய்ந்த ஈவா, “பாஸ் யூ ஆர் இன் லவ்!” என்றது.

சஹானாவை வெறித்திருந்தவன் ஈவாவின் பேச்சைக் கவனிக்க வில்லை, “ஆமா லைவ் தான்”

“பாஸ் லைவ் இல்ல, லவ்” கட்டில் விளிம்பின்மேல் தாவி அவன் காதில், “நீங்க சஹானாவை காதலிக்கிறீங்க!” என்றது.

அதிர்ந்து திரும்பியவன், “நான்சென்ஸ் !” என்றான்

“நோ இட் மேக்ஸ் சென்ஸ்! உங்க ரீடிங்ஸ் பாருங்க! உங்க கண்ணு டைலேட் ஆகி இருக்கு, கொஞ்சம் ரத்தம் கொடுங்க பாஸ் டெஸ்ட் பண்ணிடுவோம்”

“ஹே சீ! ஆர்வக்கோளாறு. ரத்தத்துல அளவு சரியா காட்டாது, அதுக்கு செரிப்ரோ ஸ்பைனல்…விடு” சிரித்துக்கொண்டவன், “உனக்கென்ன என் காதல் மேல இத்தனை ஆர்வம்? பார்வை சஹானா மீதே இருக்க,

அவனிடம் வந்த ஈவா, “மனுஷன் உணர்வுகளைப் புரிஞ்சுக்க எனக்கு இது முக்கியம் பாஸ்.”

“சில உணர்வுகளை நீ இப்படி சைன்ஸ் கண்கொண்டு பார்க்கக் கூடாது, இதெல்லாம் அழகான உணர்வு” சாய்ந்து கொண்டான்.

“அப்போ காதல்னு ஒத்துக்கறீங்களா?”

“நோ! எனக்கு காதல் வராது” என்றான் தீர்மானமாக,

“சொல்லிக்கோங்க! இப்போகூட உங்க இதயத் துடிப்பு உங்க முகம் எல்லாம் நீங்க பொய் சொல்றீங்கனு சொல்லுது” ஈவா கிண்டலாகச் சொல்ல, “ஏய்! “ மிரட்டியவன் முகத்தில் மென்மையான புன்னகை.

“சரி பீயை தூங்க சொல்லவா?”

“ம்ம் சொல்லு” என்றான் மனமேயின்றி. திரையில் மறைந்த சஹானா அவன் மனதிற்குள் குடிபெயர்ந்ததை உணர மறுத்துப் பிடிவாதமாய் உறங்கினான்.
***

Leave a Reply

error: Content is protected !!