இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 24.1

Screenshot_2021-06-21-17-30-01-1-5e1ce2c5

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 24.1

Epi24.1

தாரா அவள்‌ இல்லம்‌ சென்று இன்றோடு பத்து நாட்கள்‌ ஆகி விட்டிருந்தது.காய்ச்சல்‌ சுகமாகி நீண்ட நாட்களுக்கு பின்னர்‌ தொடர்ந்து நான்கைந்து நாட்கள்‌ வீட்டிலிருந்த படியால்‌ சற்று முகம்‌ மேலும்‌ பொலிவாகி உடல்‌ கொஞ்சம்‌ பார்ப்பதற்கு சதை பிடித்து இருந்தாள்‌.அத்தோடு விஜயின்‌ காதல்‌ பேச்சுக்கள்‌ அவளை இன்னும்‌ சிவக்க வைத்து உள்ளம்‌ மகிழ்ச்சியை மட்டுமே சுமந்திருக்க அது அவள்‌ முகத்திலும்‌ பட்டுத்‌தெறித்து

அழகாகி இருந்தாள்‌ இன்னுமே.

 

தருணின்‌ நிச்சயதார்த்தம்‌ முடிந்து வாரங்கள்‌ சில கடந்திருந்த வேளை தாரா ஒரு வார இறுதியில்‌ வீட்டுக்கு

வந்திருந்த சமயம்‌ மாலை தன்‌ தந்‌தை தோளில்‌ சாய்ந்தவாறு தன்‌ முன்னே அமர்ந்து அருணாவோடு தொலை பேசியில்‌ பேசிவிட்டு வைத்த தன்‌ அன்னையை பார்த்தவள்‌,

“ம்மா.. எனவும்‌,

“என்னடா குட்டி?” என்றார்‌.

 

அவள்‌ ஏதும்‌ சொல்லாது இருக்கவும்‌ அவளை பார்த்தவர்‌ திரும்ப, ” என்னடா குட்டி சொல்லு? ”  எனவும்‌.

“குட்டி குட்டின்ன நான்‌ சொல்ல மாட்டேன்‌. இப்போ எல்லாருமே உன்கூட சேர்ந்து என்னை குட்டிங்கிறாங்க.நான்‌ என்ன

சின்ன பொண்ணாம்மா?” எனவும்‌,

 

“அதானே நம்ம ஸ்ரீ இப்போ கல்யாணம்‌ பண்ற வயசுக்கு வந்துட்டா… நீ என்னன்னா குட்டிக்குங்குற அவளை.” என

தான்‌ தோளோடு அணைத்துக் கொண்ட குமார்‌ கூற,

“ப்பா…” என அவர்‌ முகம்‌ பாத்தவள்‌ முகம்‌ எப்போதும்‌ போலத்தான்‌ இருந்தது.

அப்பாத்தான்‌ பொண்ணு முகத்த வச்சே அவக்குள்ள இந்த கொஞ்ச நாள்‌ இருக்க மற்றத்தை உணர்த்திருந்தாரே.

“என்ன ஸ்ரீ அப்படி பார்க்குற? அம்மாகிட்ட எதுவும்‌ சொல்லனுமா என கேட்டார்‌.”

 

“ஹ்ம்ம்‌’ என்று அவரை

விட்டு சற்று விலகி அமர்ந்து,

‘அது வந்து…” என அவள்‌ ஆரம்பிக்க குமார்‌ மாதவியை பார்த்தவர்‌ அவரும்‌ இவர்களைத்தான்‌ பார்த்துக்கொண்டு இருந்தார்‌.

 

“இங்க வா என அவளை தன்‌ தோள்‌ வளைவிலேயே வைத்துக்கொண்டு

 

“இப்படியே இருந்து என்னன்னாலும்‌ எப்போவும்‌ போல உங்கம்மாகிட்ட சொல்லுடா.” என்றார்‌.

 

“என்ன ஸ்ரீ என்னாச்சு இவ்வளவு யோசிக்கிற ஏதும்‌ ப்ரோப்லமா? ” என மாதவி கேட்க,

“சேச்சே அப்டிலாம்‌ ஒன்னில்லம்மா.

 

“ஸ்ரீ நீ பண்ண எதாவது தப்புன்னு தோணுதா? நம்மகிட்ட சொல்ல இவ்வளவு சங்கடப்படறன்னா அது உனக்கு தப்புன்னு நினைக்குது அதானே’ எனவும்‌,

“ப்பா. இல்லப்பா தப்பெல்லாம்‌ பண்ணல… தப்புதான்‌… ஆனா …”

 

“என்ன ஸ்ரீ இது? என்னை டென்ஷன்‌ பண்ற நீ. எதுன்னாலும்‌ சொல்லு அப்றம்‌ பார்த்துக்கலாம்‌ என்னன்னு.” மாதவி சற்று டென்ஷனாகி சத்தமாக பேசிவிட,தாராவின்‌

கண்கள்‌ சட்டென கண்ணீரை உதிர்த்து விட்டது.

 

“மாது என்ன இது. “என அவளை அணைத்துக்கொண்டவர்‌

“சொல்லுடா என்னாச்சு? ” எனவும்‌,

 ” எனக்கு தரு அண்ணா பிரென்ட்‌ இருக்காங்களே… ‘

 

” நம்ம விஜயா?என குமார்‌ கேட்க,

 

“ஹ்ம்ம்‌ அவங்களை எனக்கு பிடிச்சிருக்கு. என்னை அவங்களுக்கே கட்டி குடுக்குறீங்களாம்மா? ” என

மாதவியை பார்த்துக்கேட்டாள்‌. கேட்டவள்‌ கண்களோ விடாது நீரை பொழிய,அச்சோ இதை சொல்லத்தான்‌ இவ்வளவு பயந்தியா நானும்‌ என்னவோன்னு பயந்துட்டேன்‌.” என மாதவி கூற .

 

“என்ன மாது இவ்வளவான்னு சொல்ற? எவ்வளவு பெரிய விஷயம்‌ சொல்லிருக்கா உன்‌ பொண்ணு. அப்போ வேலைக்கு போறான்னு இதைத்தான்‌ பண்றீங்க? எனக்குன்னா சுத்தமா இதெல்லாம்‌ பிடிக்கல மாதவி இனி உன்‌ பொண்ணை வீட்ல இருக்கச்சொல்லு.எவ்வளவு தைரியம்‌ இருந்தா வந்து சொல்லுவா?” என்றார்‌ குமார்‌.

 

“ப்பா? ” என அவரை பார்த்தவள்‌ சாரிப்பா. என எழுந்து அவளறைக்கு செல்ல பார்க்க, மாதவியும்‌ அவரை பார்த்து, ‘என்னங்க இதெல்லாம்‌? விளையாட்டு’ என அவரை முறைத்தார்‌.

 

நிவியின்‌ நிச்சயம்‌ முடியவுமே இவர்களுக்கு விஜயை தாராவுக்கு பேசினால்‌ என்ன என்ற நினைப்பு இருந்தது. மாதவிக்கும்‌ அருணாவோடு நல்ல நட்பு ஏற்பட்டு இருக்க

அவரும்‌ விரும்பினார்‌. அதனால்‌ தான்‌ விஜய்‌ வந்ததும்‌ திருமண நாள்‌ குறிக்கலாம்‌ என அன்று குமார்‌ கூறிவிட்டு வந்தார்‌.

 

“ஸ்ரீ இங்க வா என அவளை அழைத்த குமார்‌ அவள்‌ அருகே வரவும்‌,

“அப்பா இப்படியெல்லாம்‌ பேசுவேனா? இப்படி அப்பா கோவமா திட்டணும்னு நினைச்சியா? ” எனவும்‌

 

“இல்லப்பா… ‘ என தலையசைத்தாள்‌.

 

“எதுக்கு இவ்வளவு பயந்துகிட்டு சொல்ற. தப்பான பையனை பிடிச்ச்சிருக்குன்னு சொல்லிருந்தா தானே தப்பு. நாமதான்‌ உங்க இரண்டு பேருக்கும்‌ உங்க வாழ்க்கையை உங்க விருப்பப்படி அமைச்சுக் கோங்கன்னு சொல்லிருக்கனே. அப்றம்‌ என்ன? நம்மளால நம்ம பொண்ணுக்கு பையன்‌ பார்க்க முடியலைன்னு வருத்தமும்‌ இல்லை. ஏன்னா அம்மாக்கும்‌ எனக்கும்‌ விஜயை உனக்கு பேசலாமான்னு ஒரு நினைப்பு இருந்தது. அதனால..” அவர்‌ முடிக்கும்‌ முன்னமே இவள்‌…

 

“நா ரொம்ப பயந்துட்டேன்‌… ப்பா ” என்று அவரை அணைத்துக்கொண்டாள்‌.

“சும்மா அவளை பயமுறுத்திகிட்டு” என அவரை மாதவி சொல்ல..

“பொண்ணு பயப்படறாளான்னு பார்த்தேன்‌… “

அய்யே கோவமே பட தெரில உங்களுக்கு. இதுல திட்றாங்க… ” என அவர்‌ கூறிக்கொண்டு உள்ளே சென்று விட

“ஸ்ரீ பயபுடல நீ? “அவளை பார்த்து கேட்க…

“அப்பா ரொம்ப பயந்துட்டேன்.” என்றாள்‌ உண்மையாக பயந்தவளாக.

 

“சாரிடா.ஹாபிய இரு.” என அவள்‌ உச்சி முகர்ந்தார்‌.

 

இதையே இன்று விஜய்‌ வீட்டினரும்‌ அவன் வீடு வந்து சேர்ந்து ஒருவாரம் சென்றிட பேசிக்கொண்டனர்‌.

 

அருணா ராஜுடன்‌ பேசி வள்ளி பாட்டிக்குமே தாராவை ரொம்பவும்‌ பிடித்திருக்க, வீட்டில்‌ நிவியின்‌ அன்னை தந்தையிடமும்‌ கேட்க அவர்களுக்கும்‌ சந்தோஷமே.

 

“இங்க அவங்க பொண்ணு இருந்தா அவங்க பெண்ணை நினச்சு என்‌ பொண்ணு அங்க அவங்க வீட்ல நல்லா பார்த்துப்பாங்க.” என்றார்‌ மீனா.

 

“என்ன பேசுற மீனா. அவங்க பொண்ணு வரல்லன்னாலுமே உன்‌ பொண்ணு அங்க நல்லாத்தான்‌ இருப்பா. அவங்க பிள்ளைகளை வளர்த்து வச்சிருக்கதுலேயே தெரியல அவங்க எப்டியானவஙகன்னு.

வாய்‌ இருக்குதுனு பட்டுனு எதுவும்‌ பேசுரதை நிறுத்திக்கோ. பேரப்பிள்ளை பார்த்தாச்சு இன்னும்‌ உன்‌ வாய்‌ கொழுப்பு அடங்கல.” என வள்ளிப்‌ பாட்டி மீனாவை அதட்ட பெரியவர்கள்‌ மட்டுமே மேசையில்‌ சாப்பிட்டு விட்டு அப்படியே அமர்ந்திருந்தவாரு பேசிக் கொண்டிருக்க விஜய்‌, நிவி, ஹரி மற்றும்‌ அவனது மனைவி என இளயவர்கள்‌ முன்னறையில்‌ அமர்ந்து

பேசிக்கொண்டிருந்தனர்‌.

 

ரெண்டு பேருடைய கல்யாணத்தையும்‌ ஒன்னாவே பண்ணினா நல்லா இருக்குமில்ல. அவங்க கூட பேசிட்டு முடிவு பண்ணலாம்‌ ராஜ்‌.

 

” அருணா நீ தருண்‌ அம்மாவிடம்‌ பேசி எப்போ வரலாம்னு கேட்டு சொல்லு.நாம போய்ட்டு வரலாம்‌ “என்றார்‌ பாட்டி.

 

“சரிங்கத்த காலையில பேசிட்டு

சொல்றேன்‌ என்றார்‌.

 

“ம்மா நாம அங்க தாராவை பார்க்க வரோம்னு அவகிட்ட சொல்ல வேணாம்னு சொல்லுங்க. அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்‌ ” என்றான்‌.

“சரிடா சொல்றேன்‌.” என்றிருந்தார் அருணா.

 

நிவி விஜய்‌ வந்து விட்டான்‌ என அவள்‌ வீடு வந்ததுமே பாட்டி கூற அவள்‌ அவனறைக்கு ஓடிச் சென்றவள்‌ எப்போதும்‌ போலவே

 

“அத்து எப்டி இருக்க? ஏன்‌ வந்ததுமே எனக்கு கால் பண்ணல?’ என அவன்‌ கழுத்தில்‌ கையிட்டு தொங்கியவாறே கேட்க. அவன்‌ பதில்‌ கூறாது அவளை

பார்த்தான்‌. பார்த்ததுமே அவள்‌ அப்போதுதான்‌, தான்‌ இருக்கும்‌ நிலை பார்த்து,

‘சாரி அத்து நான்‌ ஏதோ பழைய நினைவுல சாரி.” என அவன்‌ கழுத்தில்‌ இருந்து கைகளை எடுத்தவாறு கூறினாள்‌. அவள்‌ கண்கள்‌ கலங்கி நீர்‌ வழிய காத்திருக்க…

“உண்மையா பாசமாத்தான்‌ அத்து… வேறேதும்‌ இல்லை, ப்ரோமிஸ்‌. அதோட யாரும்‌ மனசு கஷ்டபடுறது போல பேசிருவனோன்னு முன்னப்போல நான்‌ ரொம்ப பேசுறதெல்லாம்‌ இல்ல அத்து. சாரி என்னாலதான்‌ உனக்கு கெட்ட பெயர்‌. நான்‌ தருண்‌ வாயை திறக்கவைக்கலாம்னு செய்ய போன காரியம்‌ ரொம்ப தப்பு.  இன்னக்கி வரைக்கும்‌ என்னாலேயே நம்ப முடியல. அன்னைக்கு எனக்கு எதுவும்‌ ஆகி இருந்ததுன்னா உனக்கு அப்றம்‌ தருணுக்கு கடைசி வரைக்கும்‌ எவ்வளவு கஷ்டம்‌. “

எனக்கூறினாள்‌.அவளை அப்படியே தோளோடு அணைத்துக்கொண்டவன்‌

“எப்பயுமே நீ எனக்கு நிவி குட்டிதான்‌. நீ என்னை சின்னதுல இருந்தே உன்‌ தேவைக்காகவே பூஸ்‌ பண்ணிக்கிட்ட. இதுலயும்‌ அதையே செஞ்சிட்ட. அதான்‌ உனக்கு அதனுடைய பாரதூரம்‌ தெரியல. விளையாட்டு எப்போவும்‌ என்னவும்‌ ஆகலாம். இனி உன்‌ லைஃப்‌ நல்ல படி அம்மஞ்சி நீ சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்‌. அதுக்காக தான்‌ என்னுடைய இந்த ஜேர்மன்‌ ட்ரிப்‌ ஓகே. “என அவளோடு பேசி அனுப்பியவன் நாளைய தின எதிர்பார்ப்புகளோடு உறங்கச் சென்றான்.

 

நாளை மாலை விஜய்‌ வீட்டினர்‌ தாரா வீடு வருவதாக கூறியிருக்க தாராவிடம்‌ கூறவேண்டாம்‌ என விஜய்‌ கூறியதாக கூறவும்‌.சரி அருணா சும்மா பார்க்க வரதா

சொல்லிர்றேன்‌ என்றார்‌. ஸ்ரீ நாளைக்கு நம்ம நிவி வீட்ல இருந்து வர்ராங்களாம்‌

டா. கல்யாணதுக்கு நாள்‌ குறிக்கணுமே. அதோட விஜய்‌ அப்பாம்மா, பாட்டி எல்லாருமா வர்ராங்க போல. ஈவினிங்‌

தான்‌ வர்ராங்களாம்‌.எப்படியும்‌ நைட்‌ டின்னெர்‌ ரெடி பண்ணலாம்னு அப்பா சொல்ராங்க.” என புன்யாவும்‌

அவளும்‌ வீட்டின் தோட்ட ஊஞ்சலில்‌ அமர்ந்து ஆடியவாறு அரட்டையில்‌ இருக்க கூறினார்‌.

 

தாரா தொடராக பத்து நாட்கள்‌ விடுமுறையில்‌ இருக்க

அவளை பார்க்கவென வெள்ளி மாலையான நேற்று புன்யா அவள்‌ வீடு செல்லாது இவர்களது வீட்டுக்கு

வந்திருந்தாள்‌.

 

“ஹை நாளைக்கு அப்போ பெரிய விருந்து வைக்கப்போறாங்களா. நல்லதா போச்சு நான்‌ வந்தது. ஆன்ட்டி குறைஞ்சது ஒரு மூனு வெரைட்டியாவது இருக்கணும்‌. நாம மாப்ள வீட்டாளுங்கன்னு கட்டணுமில்ல…”

 

“ஹ்ம்ம்‌ பண்ணலாம்‌ டா கண்டிப்பா.’ என்றவர்‌.’ஸ்ரீ அவங்க வர்றப்ப சேலை உடுத்துறியா? “

 

“அச்சோம்மா எனக்கு பிடிக்காதுன்னு தெரியுமில்ல. அதோட அதை உடுத்திகிட்டு எப்டி வேலை பாக்குறது. என்னால

முடியாது.” என்றாள்‌.

 

மனதில்‌ கூறிக்கொண்ட காரணமோ வேறு.இதுவரை சேலையே அணிந்திருக்க வில்லை அவள்‌. காலேஜ்‌ நிகழ்வு ஒன்றின்‌ போதும்‌ ஏதோ காரணம்‌ கூறி தவிர்த்திருந்தாள்‌. மாலதியும்‌ அவள்‌ விரும்பும்‌ நேரம்‌ அணியட்டும்‌ என வற்புறுத்துவதில்லை .

 

“பார்க்கலாமே கல்யாணத்துக்கு அப்றம்‌ மாமியார்‌ கட்டிக்க சொன்னா கட்டத் தானே வேணும்‌.” என்றவர்‌ உள்ளே சென்றுவிட,

“அப்போ நாளைக்கு ஹீரோ சாரும்‌ வருவாங்களே” என்றாள்‌ புன்யா.

 

“ஆமால்ல…”

‘ஹ்ம்ம்‌ நைட்‌ பேசுறப்ப கேட்கணும்‌.’ என்று நினைத்துக் கொண்டாள்‌.

 

இங்கு விஜய்‌ அவன்‌ அன்னை மற்றும்‌ பாட்டியை ஷாப்பிங்‌ அழைத்து வந்திருந்தான்‌. அவர்களை அலையவிடாது ஓரிடத்தில்‌ அமர வைத்தவன்‌ அவர்கள்‌ அருகே அனைத்தும்‌ வரும்‌ படி பார்த்துக் கொண்டான்‌. அதோடு அவன்‌ காதல்‌ கொண்டவளுக்கு அவனே அனைத்தும்‌ தெரிவு செய்தான்‌. முதலில்‌ நீல வண்ண பாட்டொன்று தெரிவு செய்திருக்க

 

“டேய்‌ முதல்‌ முதலில்‌ மங்களகரமான நிறத்துல தான்‌ எடுக்கணும்‌. சிவப்பு கண்ணுக்கு நிரஞ்சா மாதரி தெரிற சேலையா எடு” என்றார்‌ பாட்டி.

 

“ஓகே பாட்டிம்மா.” என்றவன்‌ அழகிய மென் பட்டு சேலை ஒன்றினை சிவப்பும்‌ நீளமும்‌ கலந்து வாங்கியிருந்தான்‌. நகை வாங்க சென்றவர்கள்‌ அவன்‌ அவளுக்காக மெல்லிய சங்கிலி ஒன்றில்‌ நீலக்கல்‌ நடுவிலிருக்க சிறிய கற்கள்‌ அதை சூழ வட்ட பெரிய பேண்டன்ட்‌ ஒன்றுடன்‌ எடுத்திருந்தான்.

 

“என்னடா இது? என அருணா கேட்க,

“அவளுக்கு நகைன்னா அவ்வளவா இஷ்டமில்லை மா.”

 

“அதுக்காக இப்படித்தான்‌ வாங்குவாங்களா தள்ளு.” என்றவர்‌ அழகிய மிக பெரிதும்‌ அல்லாத மாலையும்‌ தோடும் வாங்கியவர்‌ வலையல்கள்‌ கை நிறைய போடுவதற்காக 

வாங்கியிருந்தார்‌.” நீ வாங்கினதை நீயே தனியா அவளை பாக்குறப்ப குடுத்துக்கோ. இதை நாளைக்கு சாரிக்கு போட்டுக்க எடுப்போம்‌” என்றார்‌.

“ஓகே ம்மா.”  என்று விட்டு இருவருக்குமான நிட்சயதார்த்த மோதிரமும்‌ நீலக்கல்‌

பதித்ததாகவே வாங்கினான்‌. ஏனைய மற்றைய பொருட்களையும்‌ வாங்கியோர்‌ வீடு வரவே மாலை யாகிவிட்டது. வந்ததும்‌ நிவியிடம்‌ காட்டியவன்‌ அவளுக்காக வாங்கிய சாரியையும்‌ கொடுக்க,

அத்து நாளைக்கு என்னை வரவேணாமாம்‌. ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க பாட்டி’ என்றாள்‌.

” ஆமா நிவி நாளைக்கு நீ வந்தன்னா மருமகளை தான்‌ கூடுதலா கவனிப்பாங்க அதோட என்‌ பிரெண்டும்‌ என்ன கண்டுக்க மாட்டான்‌. அதுனால நீ வீட்ல இருக்கது தான்‌ எல்லோருக்கும்‌ நலம்‌. ” என்றான்‌. “அத்து “

என நிவி சிணுங்க,

 

” நிவி நிட்ச்சயமாகிட்டு இல்ல.சோ முறையா அங்க போனாதான்‌ நல்லா இருக்கும்டா. உனக்கும்‌ எக்சைட்டீங்கா இருக்கும்‌. “

 

“ஹ்ம்ம்‌ ஓகே…” என்றவள்‌ நாளைய தேவைகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்‌.

இரவு விஜய்க்கு கால் செய்த தாரா “ஸ்ரீ நீங்களும்‌ வரீங்களா? எனவும்‌

“நான்‌ எதுக்கு டா? அவங்க தருண்‌ வீட்டுக்கு வராங்க. தாரா வீட்டுக்கு வராங்கன்னா நான்‌ வரலாம்‌. அதோட நாளைக்கு நான்‌ முக்கியமான விஷயமா சென்னை போறேன்டா. வர நைட்‌ ஆகிரும்‌. நீ என்ன பண்ற என்னுடைய பங்கெல்லாம்‌ பேக்‌ பண்ணி அம்மாகிட்ட அனுப்பு” எனவும்‌,

 

“இங்க உங்களுக்கு பார்சல்‌ பண்ணி அனுப்புற அளவுக்கு ஒன்னும்‌ பண்ணல.” என்றாள்‌.

 

“ஓஹ்‌ அப்டியா. உண்மையா வர முடியல ஸ்ரீ இல்லன்னா நான்‌ வராம இருப்பேனா?”

 

பரவால்ல நீங்க வருவீங்களோன்னுதான்‌ கேட்டேன்‌. அம்மா வேற சாரி கட்டுன்னு சொல்றங்க அதான்‌.”

 

“நீதான் கட்டமாட்டியே. திட்டுனாங்களா அத்தை?’ என்றவன்,’முதல்‌ முதலா நான்‌ வாங்கி கொடுக்குறதைத்தான்‌ கட்டுவன்ன. எனக்கும்‌ அதை நான்‌ தான்‌ முதல்‌ ஆலா பார்க்கணும்னு தோணுது. பட்‌ அதுக்கான சான்ஸ்‌ கம்மிதான்‌ இல்ல?” இப்படியே இருவரும்‌ பேசிவிட்டு உறங்க சென்றவர்கள்‌, அவளோ அவன்‌ வரமாட்டான்‌ என்று விட்டு தூங்க இவனோ நாளை அவளுக்கான சர்ப்ரைஸை சுமந்தவாறே உறங்கி எழுந்திட காலை நேரம்‌ பரப்பரப்பாக கழிய மாலை நேரமும்‌ வந்திருந்தது. தருணோ அங்கும்‌ இங்கும்‌ ஓடிக்கொண்டு வேலைகள்‌ செய்துகொண்டு இருக்க, வாசலில்‌ புன்யாவுடன்‌ அமர்த்திருந்தவாறு அவனை கேலி செய்துக் கொண்டு இருந்தாள்‌ தாரா.

 

“அச்சோ மாமியார்‌ வீட்டுக்கு இப்போவே இப்படி பூ பூவா தூவி வரவேட்கிறான்‌. நீ பூ விக்கிறவன்னு நல்லாவே புரியுதுண்ணா. “

 

“ஹேய்‌ சும்மா இருக்கமாட்ட அவனை கிண்டல்‌ பண்ணிக்கிட்டு. கொஞ்சமாச்சும்‌ ஹெல்ப்‌ பண்றாளா பாரு.” என மாதவி கூறவும்‌.

 

“ஹலோ நாங்களும்‌ பார்க்கத் தானே போறோம்‌ உங்க மாமியார்‌ வீட்டாக்கள்‌ வர்றப்ப உங்க ரியாக்ஷன்‌…”

 

“அய்யே… டேய்‌ அண்ணா நீ மாப்பிள்ளை டா அந்த கெத்து வேணாம்‌… பொண்டாட்டிக்கு பயந்து இப்போவே வேளை பார்க்க ஆரம்பிச்சிட்ட “என அவனை சீண்ட,அவள்‌ தலையில்‌ குட்டினான்‌.

 

 ‘ம்மா பாரும்மா உன்‌ பையனை இன்னும்‌ கொஞ்ச நாளைல நம்ம வீட்லயே இருந்துகிட்டு நீங்கெல்லாம்‌ யாருன்னு கேட்கப்போறான்‌.”

” சும்மா அவனை சீண்டாம போய்‌ கிளம்பு பக்கத்துல வந்துட்டதா

கால் பண்ணிட்டாங்க.”

 

” நான்‌ எதுக்கு ரெடியாகணும்‌.?”

‘என்னைத்தான்‌ பார்க்க வரலைன்னு சொல்லிட்டாங்களே. நான்‌ இப்படியே தான்‌ இருக்க போறேன்‌.’ என பிற்பாதியை முணுமுணுக்க.

 

“யாரு சொன்னா?” என அவள்‌ அருகே வந்து புன்யா கேட்க. “யாருமில்லை.” என ஏற்கனவே கடுப்பில்‌ இருந்தவள்‌ அவளை முறைத்து விட்டு

 

“மாப்பிள்ளை சார்தான்‌ காலையிலேயே ரெடி ஆகிட்டு வெய்ட்‌ பண்றாரு.ஆனா அண்ணா அண்ணிதான்‌ வரமாட்டாங்களே.நீ எதுக்கு இவ்வளவு மெனக்கெட்ர.”

 

“ம்மா இவளை கொஞ்சம்‌ சும்மா இருக்க சொல்லேன்‌.”

 

“என்னடி அவன்‌ கூட கோபம்‌ உனக்கு? “மாதவி தருணுக்காக பேச. அவளோ மனதுக்குள்‌,

“அவங்களையும்‌ வர சொல்லி கம்பெல்‌ பண்ணியிருந்தா கண்டிப்பா வந்திருப்பாங்க. இவன்‌ கூப்பிட்டிருக்க மாட்டான்‌.’ என்றே இவ்வளவு அவனை சீண்டக் காரணம்‌.

 

“ஸ்ரீ பெட்ல ட்ரெஸ்‌ வெச்சிருக்கேன்‌ போய்‌ ரெடியாகு.” எனவும்‌ அவள்‌ சென்று கிளம்பி முடிய விஜய்‌ வீட்டினர்‌ வந்திறங்கினர்‌.

 

Leave a Reply

error: Content is protected !!