தேன் பாண்டி தென்றல் _ 19
தேன் பாண்டி தென்றல் _ 19
- Posted on
- Nanthlala Ramalakshmi
- September 15, 2021
- 0 comments
19
சில வாரங்ளுக்குப் பின் அன்று வழக்கம் போல தென்றலின் உடல்நிலை மனநிலை குறித்து கேட்க மருத்துவர் எதிரில் அமர்ந்து இருந்தான் பூதப்பாண்டியன்.
இத்தனை நாட்களில் அவருக்கு தென்றலின் பிரச்சனை புரிந்த அளவு இவன் பிரச்சனையும் புரிந்துதான் இருந்தது.
“ஃபர்ஸ்ட் கங்கிராஜூலேஷன்ஸ் உங்களுக்கு. உங்க ஒய்ஃப் இப்ப நார்மலா இருக்காங்க. நாங்க குடுக்கற மெடிசின்ஸ் இன்னும் கொஞ்ச நாள் நீங்க ஃபாலோ பண்ணனும்.” என்றவர் அவனுக்கு சில அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு பின்பும் குழப்பமான அவன் முகத்தைப் பார்த்து விட்டு
“எனி பிராப்ளம்?” என்றார்.
“அவ என்னை முன்ன மாதிரி பாக்கலையே?” என்றான் ஏக்கமாக.
“அதை நீங்க அவங்ககிட்டதான் கேக்கனும். எங்க யாராலும் யார் மனசுக்குள்ளயும் புகுந்து வர முடியாது. அவங்க மனசுக்கு ஏற்படற பாதிப்புகளை குணப்படுத்தத்தான் முடியும். ஒரு சில மெத்தட்ஸ் இருக்குதான் . ஆனா அதுக்கு நீங்க எதுக்கு?
அவங்க என்ன நினைக்கிறாங்கனு உங்களுக்குத்தான் தெரியனும். அஃப்கோர்ஸ் நீங்க அவங்ககிட்ட மனசுவிட்டுப் பேசலை இதுவரை அப்படீங்கிறது என் யூகம்.
அவங்ககிட்டப் பேசுங்க. அவங்க உங்களை வெறுக்கலை. எல்லாத்துக்கும் உங்களைத்தான் தேடறாங்க. அதுவே ஒரு ப்ளஸ் பாய்னட்தான் உங்களுக்கு இப்ப. ஆல் த பெஸ்ட்” என்று சொல்லி இவன் கையைக் குலுக்கினார்.
அவர் சொன்ன மாதிரி அவள் என்ன நினைக்கிறாள் எனபதை இன்னொருவர் சொல்லி அவன் அறிவதா?
அவனுக்கும் அது பிடித்தமில்லாமல் இருந்தாலும் அவள் உடல்நிலை மற்றும் மனநிலையை உத்தேசித்துதான் அப்படிக் கேட்டு இருந்தான்.
மருத்துவர் சொன்னதும் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பார்த்தான்.
இங்கே ஒரு வங்கிக்கு மாற்றல் வாங்கி வந்திருந்த பூதப்பாண்டியன் – தென்றல் மருத்துவமனையில் இருந்தவரை ஒரு மேன்சனில் தங்கி இருந்தான்.
அதன்பின் அவர்களுக்கு ஒரு வீடும் பார்க்க ஆரம்பிக்க –
தேன்மொழியின் பிடிவாதத்தால் இங்கேயே தங்கும்படி ஆனது.
அழகிய வீர பாண்டியனின் புது வீட்டில்தான் தற்போது இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். வாடகைக்குதான்.
“யாருக்கு வேனும் தனிக்குடித்தனம் ?” என்று தேன்மொழி குதிக்கவும் பல்லைக் காட்டிக் கொண்டு இந்த வீட்டை பூதப்பாண்டியனுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டிருந்தான்.
தேன்மொழிக்கு கல்யாண யோகம் இன்னும் வரவில்லை என்று ஆறு மாதங்கள் அழகிய வீர பாண்டியன் – தேன்மொழி திருமணத்தை தள்ளிப் போட்டிருந்தனர் பெரியவர்கள்.
நிச்சதார்த்தம் மட்டுமாவது முடிக்க வேண்டும் என்று வீர பாண்டியன் போராடியதில் போன வாரம் தான் அவர்கள் இருவரின் நிச்சயம் முடிந்திருந்தது.
அப்போதைய பேச்சுவார்த்தையில்;தான் தேன்மொழி தனிக்குடித்தனம் நடத்த முடியாது என மறுத்தது.
வீர பாண்டியன் அகமகிழ்ந்து போனான்.
பூதப்பாண்டியனுக்கு இந்த வீட்டைக் கொடுக்க வேண்டும் என்றுதான் தேன்மொழி அப்படிச் சொன்னாள்; என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தது.
மற்றபடி தனிக்குடித்தனம் என்றால் என்ன? கூட்டு குடித்தனம் என்றால் என்ன? வீர பாண்டியன் இருக்கும் இடம் ஒன்றே அவளுக்குப் போதுமே?
பூதப்பாண்டியன் தென்றலும் இங்கே வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. வீரபாண்டியன் நிச்சயம் முடிந்த கையோடு வந்தது. அன்றுதான் அவளை ஆஸ்பத்திரியில் இருந்தும் அழைத்து வந்திருந்தான்.
“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா தென்றல்?” என்று மென்மையாகக் கேட்டான் பூதப்பாண்டியன்.
ஜன்னல் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற தென்றல் தன் முகத்தில் விழுந்த முடிக் கற்றைகளை ஒதுக்கி காதோரங்களில் சொருகினாள்.
அதுவே அவள் அவன் பேச்சை கேட்டதற்கும் அவன் பேச்சைக் கேட்கச் சம்மதம் என்று அவனுக்கு அனுமதி அளித்ததற்கும் அடையாளம் என்பது அவனுக்குப் புரியாதா என்ன?
“ என்னை தெரியுதா?” என்றான் குரல் அடைக்க.
அவன் கைகளுக்குள் இருந்த அழகிய பூங்கொத்து தள்ளிப் போய் நிற்ப்பதை தடுக்க முடியாமல் – தவிர்க்க முடியாமல் – தவித்தது அவன் நெஞ்சம்.
தென்றல் எதுவும் பேசவில்லை.
அவளுக்கு அவள் தாய் செய்த அநியாயத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தை நீக்கி விட்டான்.
ஆனால் இப்போது இவனுக்கு இவள்; பேசாமல் இருந்து தரும் அழுத்தம்
“ வாயத் திறந்து பேசுடி. எதுக்கு இப்டி பேசாம இருந்து என்னைக் கொல்ற?
நான் என்ன தப்பு செஞ்சேன்? சொல்லு. நீ சொன்னா தானே எனக்குத் தெரியும்?”
என்றவன் அவள் சட்டென அவனை விழி உயர்த்திப் பார்த்ததும் உறைந்து நின்றான்.
அவள் சொல்லாமலே அவள் என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்த காலம் ஒன்று உண்டு!
“ நீ…நீ” என்றவன், “ செல்லம்மா” என்று ஒரே தாவாகத் தாவி அவளை அணைத்துக் கொண்டான்.
“ முன்னாடியே ஏன் வரலைன்னு கேக்கறியாடா? முடியல. ஆக்சிடென்ட் ஆகிருச்சு. அதான் உனக்குத் தெரியுமே? வேற..நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குப் புரியுது.
ஆனா.. இல்ல..இல்ல. நீயே கேளுடி. என் சட்டையப் பிடிச்சுக் கேளு. என் சங்கை நெரிச்சுக் கேளு. இப்படி அமைதியா இருந்து என்னை சித்ரவதை செய்யாதே”
பேசப் பேச அவன் மனம் அமைதி அடைந்திருந்தது. அவளை அணைத்தது அவனுக்கு அவ்வளவு ஆறுதலாக இருந்தது
இவன் தொட்டதற்கு அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விருப்பம் இருக்கிறதா என்றால்….இல்லை… அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. அவளுக்கு அவனை பிடிக்காமல் போகவே போகாது.
தனக்குத் தானே மனதைத் தேற்றிக் கொண்டான்.
இன்னும் அவள் அமைதியாக நிற்க “ பிளீஸ் சொல்லும்மா. என்ன நினைக்கிற? என்ன குழப்பம்? எதுனாலும் சொல்லிடு?” என்று பலவாறாக பேசித் தவித்தான்.
அவள் இன்னும் அமைதியாக இருந்து அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
“ இரக்கமே இல்லடி உனக்கு. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க?” என்று கோபமாக அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
‘ ம்க்கும். தள்ளி இருக்கும் போதே பைத்தியம் பிடிக்க வச்சவ இவ. இப்போ இன்னும் சுத்தம்’ என்று தனக்குள் முனகிக் கொண்டான்.
வேறு என்னதான் செய்ய முடியும் அவனால்?
வேறு ஏதாவது செய்யலாம் என்று அவன் ஒரு முடிவுக்கு வருவதற்குள் வாசலில் பாக்கியத்தின் குரல் கேட்டது.
“ வேலம்மா…”
இப்போது தென்றல் அந்தப் பெயரைக் கேட்டு பயப்படுவதில்லை.
சட்டென குதித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடினாள் தென்றல்.
அதைப் பார்த்து மனம் நிறைந்த சிரிப்புடன் தானும் பாக்கியத்தை வரவேற்க்கச் சென்றான் பூதப் பாண்டியன்.
கையில் செண்பகப்பூச்சரத்துடன் வந்த பாக்கியம் “ உனக்கு ரொம்ப பிடிக்கும்னு நேத்து பூக்காரப்பொண்ணுகிட்ட சொல்லி வச்சிருந்தேன்.
தேன்மொழி குடுக்கறேன்னு வாங்கினவ ஏதோ கம்யூட்டர் ட்ரைனிங் இருக்குனு போய்ட்டா. பக்கத்து ப்ரவுசிங் சென்டர்ல அப்பப்போ இவளை ட்ரைனிங் குடுக்கச் சொல்லுவாங்க இல்ல? அதான் இப்ப கேக்கவும் தட்ட முடியலை அவளுக்கு. கிளம்பிப் போய்ட்டா. நம்ம வீடு மாப்பிள்ளை வீட்டுக்குப் பக்கம் இல்ல? அதனால இங்க வர கொஞ்சம் தயங்குவா. அதான் பூ வாடறதுக்குள்ள உன்கிட்ட குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.” என்றவர் பூவை சாமிப்படத்தின் முன் வைத்தார்.
பூதப்பாண்டியனையும் பார்த்து நட்பாகப் புன்னகைத்தவர் –
“ எடுத்து வச்சிக்கடா” என்று சாதாரணமாகச் சொன்னவரைப் பார்த்து முறைத்தாள் தென்றல்.
“ நீங்க எடுத்து வச்சு விடுங்க. இல்ல எனக்குப் பூவே வேண்டாம்” என்றாள்.
“ உளராதேடா. நான் அதுலாம் செய்யக் கூடாது”
“ என்ன செய்யக் கூடாது? என்னை பாத்ரூம் போகவச்சு குளிப்பாட்டி துணி மாத்தி சாப்பாடு ஊட்டி அத்தனையும் செய்ய முடியும். இது மட்டும் முடியாதோ?” என்றாள் கண்டனத்துடன்.
“ புரிஞ்சிக்காம பேசாதேடா. “ என்று அவளை சமாதானப்படுத்த இவர் நினைக்க அதற்கு மசிபவளா அவள்?
“ தேனு அக்காக்கு மட்டும் பூ வச்சு கன்னத்தை வழிச்சு முத்தம் குடுக்கறீங்க?”
“ அது நான் செய்யாம யாருடா செய்வா? கல்யாணத்துக்கு அப்புறம் அவ பாடு. அவ புருசன் பாடு. வீட்ல இருக்றவரை ஆத்த மாட்டாம அவ தலையில பூ வச்சு விடுவேன். நான் வச்சு விட்டாத்தான் அவ பூ வச்சுப்பா.”என்று சொல்லும் போதே மகளை நினைத்து அவர் முகம் மலர்ந்தது.
“ இப்படி நீங்க சாஸ்திரம் பாக்கவும்தான் தேனு அக்கா உங்களை வச்சு விடச் சொல்றாங்க. அவங்களுக்கு மட்டும் வச்சு விடுவீங்க? எனக்கு கிடையாதா?” என்று முகத்தை ஏழு முழத்திற்குத் தூக்கினாள்.
“அட போ புள்ள. பூ வச்சு விடனும்னா உன் புருசன்கிட்ட கேளு” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிட்டார்.
தென்றல் பாக்கியத்தை விட்டுவிட்டு இவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஏய்! நான் என்ன பண்ணேன்? அவங்க இப்படி சொல்லுவாங்கனு எனக்கு எபபடித் தெரியும்?” என்ற போது அவனுக்கே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
முன்பைப் போல சும்மா வெறித்து வெறித்துப் பார்க்காமல் ஒருவழியாக முறைத்துப் பார்க்கவாவது செய்தாளே?
அவள் ஒன்றும் சொல்லாமல் புவை எடுத்து தலையில் வைக்கப் போக அதை கைப்பற்றினான் இவன்.
அந்தப் பூச்சரத்தை முகர்ந்து பார்த்து முத்தமிட்டு அவள் கூந்தலில் கொத்தாக வைத்துவிட்டான்.
“பூவுக்கு முத்தமா?” மெல்ல வாயசைத்தாள் அவள்.
“பூவைக்கும் வேணுமா? “ என்று சிரித்தான்.
“கன்னத்தை வழிச்சு முத்தம் குடுக்கவா?” என்றான் ஆசையாக.
அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறுபடி தள்ளிப் போய்விட்டாள். பூதப்பாண்டியனுக்கு மனதே உடைந்து போனது. எப்படிப் பேசினாலும் ஒத்துக் கொள்வதில்லை. ஒத்துவருவதும் இல்லை.
இவளைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே ஹாலுக்குப் போனவனுக்கு கவனக் குறைவு காரணமாக டீப்பாய் காலில் தட்டிவிட்டது.
“ஸ்” மெல்ல முனகியவன் சோபாவில் உட்கார்ந்து விட்டான்.
அந்தச் சத்தத்திற்கே தென்றல் ஓடி வந்துவிட்டாள்.
“என்னாச்சு?” என்று பதறினாள்.
‘வாடி வா. உன்னைக் கதற விடுறேன்’ என்று கறுவிக் கொண்டான்.
“ஒன்னுமில்ல . ஏற்கனவே ப்ளேட் வச்சத் தச்சிருக்கு. இப்ப வேற இடிச்சிட்டேன். அதான் கொஞ்சம் பெயினா இருக்கு. கடவுளே! என்ன வந்து காப்பாத்த மாட்டியா?” (இது தெற்கத்திக் கள்ளன் படத்துல ராதிகா மேம் சொல்ற டயலாக். அவ்ளோ காமெடியா இருக்கும்) என்று முகத்தைக் கசக்கினான்.
தென்றல் துடித்துவிட்டாள். “அய்யோ என்னாச்சு பாண்டி? வலிக்குதா? ஹாஸ்பிட்டல் போவுமா? இதுக்க ஆயின்மெனட் ஏதாச்சம் ஸ்டாகட் வச்சிருக்கீங்களா? வெந்நீர் வைக்கவா?”
‘அடடா! என்னா துடிப்பு? இருக்கட்டும் இருக்கட்டும். இன்னும் கொஞ்சம் மெயின்டைன் பண்ணுவோம்’
“அதுல்லாம் ஒன்னும் வேண்டாம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தாப் போதும். காலை எங்க நீட்டி வைக்கிறது?” என்ற பார்வையைச் சுழற்றினான்.
“இருங்க. என் மடியில வைங்க” என்று அவன் பக்கத்தில் அமர்ந்து கால்களைத் தன் மடியில் போட்டுக் கொண்டாள்.
‘சொர்க்கம்டாப்பா’ எவ்வளவு முயன்றும் அவனையும் மீறி புன்னகைத்தான்.
ஒருவழியாக சுதாரித்த தென்றல் அவன் கால்களை விலக்கப் பார்க்க இவன் அசைந்தால்தானே?
“இனி நான் நினைச்சாத்தான் அசைய முடியும் உன்னால. இப்ப சொல்லலாமே? எதுக்கு இங்க என்னைக் கண்டுக்காம சுத்தினேன்னு?” என்று கொக்கி போட்டான்.
அவள் ‘திருதிரு’ என்று விழித்தாள்.
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசில
திங்கள் வந்து காயும் போது
என்ன எண்ணமோ நினைப்புல
எங்கோ பாடல் ஒலிக்க இவன் சிரித்தான்.
சொல்லிவிட்டால் தீர்ந்துவிடும்
சொல்லிவிட்டால் தீர்ந்திடுமோ?