💋இதழ் சிறையில் உறைந்தேனடி (டா) 16💋

💋இதழ் சிறையில் உறைந்தேனடி (டா) 16💋
அத்தியாயம் 16
பியானா தன் கைபிடியில் இருந்த ரஞ்சனாவை முன்னே இழுத்து சுவற்றில் சாற்றியவாறு நிறுத்தினாள். “அடிப்பாவி எங்க ஓடப்பார்க்குற நீயெல்லாம் ஒரு பொண்ணா, லக்ஷு அக்கா உனக்கு என்ன டீ பாவம் பண்ணாங்க. இவ்ளோ கீழ்தரமான காரியத்த பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று நான்கைந்து அறைகளை அறைந்தாள்.
“என்னைய அடிக்கிறாங்க. என்ன அத்தை பார்த்துட்டு இருக்கீங்க” என்று செல்வத்தின் சிந்தனையை திருப்பபார்த்தாள். செல்வமோ பதிலின்றி தனது அண்ணன் மகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடிய விதத்தையும், இப்போது தன் மகளுக்கு நடந்த விபரீதத்தையும் எண்ணி திகைத்துபோய் நின்றிருந்தார்.
வைத்தியர் கூறியதை கேட்டு லக்ஷதாவின் மனம் விசனத்தில் விழ தனது தந்தை தோள்லில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். ஒரு தகப்பனாய் புகழ்முரசன் லக்ஷதாவின் அழுகையை சாமளித்துக்கொண்டிருந்தார்.
“சண்டால சிறுக்கி நீ நாசமா… போவ… நல்லவே… இருக்கமாட்ட, மண்ணோட அழிஞ்சி போவ… என் பேத்தி கனவெல்லாம் இப்படி சிதைச்சிட்டியே டீ, யாருக்குமே கெடுதல் நினைக்க மாட்டாளே என் பேத்தி, அவளுக்கு போய் இப்படி எல்லாம் செய்ய உனக்கு எப்படி மனசு வத்துச்சு. நீ எல்லாம் ஒரு பொண்ணா, கூறுக்கெட்டவ இவள துண்டு துண்டா வெட்டி போட்டாலும் என் ஆத்தரம் தீராது” என ஒப்பாரியை ஆரம்பித்த பாட்டி அவரகளது பங்கிற்கு திட்டியது மட்டும் அல்லாமல் ஓரிரண்டு அடிகளும் அறைகளையும் கொடுத்தார் ரஞ்சனாவிற்கு.
“என்னம்மா வாய மூடிக்கிட்டு இருக்கீங்க. இப்போ பேசுங்க அம்மா. அண்ணன் மகள் அண்ணன் மகனு தூக்கி வச்சி ஆடுனீங்க இப்போ பேசுங்கம்மா” என்று தாயை பார்த்து கூறியவன்.
மறுபுறம் திரும்பி ரஞ்சனாவை வசை பாட ஆரம்பித்தான். “நீ நரிய விட ரொம்ப தந்திரமானவ. அஞ்சு வருஷமா எங்க வீட்லயே இருந்து எப்படி எல்லாம் துரோகம் பண்ணிருக்க துரோகி…, காசுக்காக உடம்ப விக்கிறவ கூட குடுக்குற காசுக்கு உண்மையா இருப்பா.
நீ அவங்களவிட தரங்கெட்ட கீழ்தரமான பொண்ணு ச்சே உன்னை அடிக்க கூட கை வரல நினைக்கும் போதே அசிங்கமா அறுவெறுப்பா இருக்கு காரிதுப்பணும் போல இருக்கு, கூடவே இருந்து குழி பறிச்சிட்டு இருந்து இருக்கியே நீ எல்லாம் ஒரு பொம்பளயா?” தமக்கைக்கு செய்த சதியை எண்ணி அவன் மனம் கொதித்தது.
லக்ஷதாவின் கணவன் வீட்டில் அவளை மலடி என்று துரத்திய போது அவளுக்கும் ஒரு நாள் குழந்தை பிறக்கும் அவ்வேளை குழந்தையை கொஞ்ச இடமளிக்கமாட்டேன். என்று புறஞ்சேயன் செய்த சபதத்தின் நினைவுகள் எல்லாம் அவனை ஊசலாட வைத்தது.
“இப்போ பேசு செல்வோம். ஏன் பேசாம கல்லு மாதிரி இருக்க. உன் அண்ணன் மக பண்ண காரியதுக்கு நீயும் உடந்தையா?” என்று பாட்டி செல்வத்தை குலுக்கி கேட்டார்.
“எறும்பு கடிச்சா கூட அதை கொல்லமாட்டா என் அக்கா. அவளுக்கு போய் இப்படி ஒரு நிலமையானு நினைக்கும் போது அதுக்கு காரணம் நீனு நினைக்கும் போது அப்படியே பத்திக்கிட்டு வருது. உன்ன….” என்று அவளை அடிக்க கையை ஆவேசமாக ஓங்கியவன் அடிக்கவில்லை விரல்களை முறுக்கிக்கொண்டான்.
“தூ…” என்று ஓரமாக துப்பினான் அவன்.
“பொண்ணுனு கூட உன்ன சொல்லமுடியாது. பேய்னும் சொல்லமுடியாது. ஏன்னா பேயிக்கும் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும். உனக்கு ஒரு துளியாவது மனசாட்சி இருக்கானு தெரியல, கருவறுக்குறது கேள்வி பட்டிருக்கேன். ஆனா கருதரிக்காமலே கருவறுக்குறத இன்னைக்குதான் முதல் முறை நேர்ல பார்க்குறேன்” பியானாவின் மனதில் லக்ஷதாவை எண்ணி ஒரு சில கண்ணீர் பரிதாபத்தோடு வெளி வந்தன.
“இந்த கூறுக்கெட்டவ இந்த காரியத்தை பண்ணாம இருந்தா என் பேத்தி இந்நேரம் ரெண்டு புள்ளைக்கு தாயாகிருப்பாளே”
‘என்னைய ஆள் ஆளா அடிக்கிறாங்க ச்சே. எனக்கு பண்ணது தப்பா தெரியல. இது மட்டும் தப்பா தெரியுதா?’ இத்தனை அடிகளை வாங்கியும் சிறுதளவும் குற்றவுணர்வு இல்லாமல் கற்சிலை போல் நின்றுக்கொண்டிருந்தாள் ரஞ்சனா.
நடந்தவற்றை எல்லாம் கட்டிலில் படுத்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் வேர்லின்.
கோபத்தின் உச்சக்கட்டத்தில் செல்வம், ஆக்ரோசமாய் அவள் முன்னே நின்று ரஞ்சனாவின் கன்னத்தில் பளார் பளார் என்று பதினைந்து அறைகளை அறைந்தார். “ஏன்டீ என் பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகத்த செஞ்ச, என் பொண்ணு உனக்கு என்னடீ பாவம் பண்ணா, நான் பெத்த பொண்ணாதானே உன்னையும் பார்த்தேன். அண்ணன் பொண்ணுனு எப்பயாவது நினைச்சிருப்பேனா, எங்க வீட்ல யாரும் உன்ன திட்டும் போது கூட திட்ட விட்டுருப்பேனா, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டியே டீ,
உன்கூட பொறந்தவன் பொண்டாட்டிக்கு நீ பண்ண காரியத்துக்கு உன்ன தூக்கி போட்டு மிதிச்சாலும் என் ஆத்திரம் அடங்காது. ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த பாவம் உன்ன சும்மாவே விடாது. உன்ன மலை போல நம்புனேன் என்னைய இப்படி மால்லாக்க போட்டிட்டியே!” ஆத்திரம் தாங்கமல் அழுதுகொண்டே குரல் நடுங்க கத்தியவர் மீண்டும் ரஞ்சனாவை அடித்தார். அவர் அடியில் அத்தனை பலம் தெரிந்தது.
“என் பேத்தி விடுற ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நீ அணு அணுவா அனுபவிப்ப இது நான் உனக்கு விடுற சாபம் டீ ” பேத்தியின் நிலையை வயதான மூதாட்டியால் தாங்க இயலவில்லை.
அழுதுகொண்டிருந்த லக்ஷதா, “ஏன் ரஞ்சனா இப்படி பண்ண சொல்லு, நான் தாயாகுறது ஏன் உனக்கு பிடிக்கல. அதுல உனக்கு என்ன பிரச்சனை? கல்யாணம் பண்ண நாள்ல இருந்து எல்லா பொண்ணுங்களுக்கும் இது ஒரு கனவு. எனக்கும் அதோ மாதிரிதானே, எனக்கு குழந்த பெத்துக்கிற ஆசை எல்லாம் இல்லனு நினைச்சிட்டியா? நீ எனக்கு மட்டும் துரோகம் பண்ணல. உன் கூட பொறந்த அண்ணாக்கும் சேர்த்துதான் துரோகம் பண்ணிட்ட? உங்க குடும்பத்துக்கு இனி வாரிசே வராது. ஏன்னு சொல்லு ரஞ்சனா சொல்லு?” என்று கெஞ்சி கெஞ்சி அழுது கதறினாள்.
“நீ அழாதம்மா, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இது பழமொழி டா. தெய்வம் அன்னைக்கே கொல்லும், இது புது மொழிமா நீ வேணும்னா பாரு இவ உன் கண் முன்னாடி சீரழிவா” என்று தனது மகளை சமாதனப்படுத்தினார்.
“ஐயோ கடவுளே! இதுக்கு அப்புறம் எனக்கு குழந்தயே பொறக்காதா, என்னை அம்மானு கூப்பிட ஒரு வாரிசு வராதா, என் புருசன் கிட்ட எப்படி சொல்லுவேன். இனி நமக்கு குழந்தையே பொறக்காதுன்னு. நான் எப்போ அழுதாலும் அவர்தான் எனக்கு ஆறுதல் சொல்லுவாரு இப்போ அவருக்கு யார் ஆறுதல் சொல்லுவா, ஐயோ அம்மா இதுக்கு மேல நான் எதுக்கு உயிர் வாழணும்…
எத்தன பேர் மலடினு என்னைய சொல்லிருப்பாங்க. என் புருசன ஆம்பளயானு கூட கேட்டுருக்காங்க. என் புருசன ஆம்பிளனு நிரூபிக்கிறதுக்கு கூட கடவுள் ஒரு குழந்தய குடுக்கலயே. தங்கச்சி தங்கச்சினு உன் மேல உயிரையே வச்சிருந்தாரே அவருக்கு நீ செய்ற நன்றிகடன் இதுதானா” என்று கணவனிடம் இதற்கு மேல் தங்களுக்கு குழந்தையே பிறக்காது என்றும் அதற்கு காரணம் ரஞ்சனா என்பதையும் எப்படி கூற முடியும்.
“நம்ம விசாரிச்சா விஷயம் வெளிய வராது மாம்ஸ் போலீஸூக்கு போன் போடுங்க. அவங்க விசாரிக்கிற விதத்துல விசாரிக்கட்டும்” என்றாள் வேர்லின்.
செல்வத்தின் ஆத்திரம் ரஞ்சனாவை விடுவதாக இல்லை. “சொல்லு டீ ஏன் டீ இப்படி பண்ண சொல்லு டீ, உங்க அம்மா என்பொண்ண துரத்தியும் நீ வந்து எங்க வீட்டு வாசல்ல நிக்கும் போது நான் உன்ன துரத்தினேனா, சொல்லு?” என்று அவளது முடியை பிடித்து ஆட்டிக்கேட்டார் செல்வம்.
இவ்வளவு நேரம் அத்தனை அடிகளை வாங்கி பொறுமையாய் இருந்தவள். இப்போது பொறுமையை இழந்து ரஞ்சனா பொரிய ஆரம்பித்தாள்.
“நீங்கதான் இதுக்கெல்லாம் காரணம் அத்தை. உங்க சின்ன பையன கட்டி வக்கிறேனு சின்ன வயசுல இருந்து சொல்லி வளர்த்தீங்க. ஆனால், அதுவும் முடியல. சரி மூத்த பையன கட்டி வக்கிறேனு சொன்னீங்க அதுவும் நடக்கல. ரெண்டு தடவை ஏமாத்திட்டீங்க. நீங்கதானே ஆசைய காட்டுனீங்க. நானும் ஆசைப்பட்டுடேன் ஆனால், ஆசைப்பட்டது எனக்கு கிடைக்கல அதுனாலதான் இப்படி பண்ணேன்.
யுவா மாமாக்கும் என்னைய புடிக்கலனு வேற கல்யாணம் பண்ணிட்டாரு. புறா மாமாக்கும் என்னை புடிக்கல. என்னைய கல்யாணம் பண்ண மாட்டேனு சொல்லிட்டாரு. நானும் அழகாக தானே இருக்கேன். அப்போ ஏன் ரெண்டு மாமாக்கு என்னை மட்டும் புடிக்கல. அதனாலதான் இப்படி பண்ணேன்.
உங்களுக்கே தெரியாம நான்தான் மாத்திரைய கலந்தேன். அண்ணா அண்ணிக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமாவே குழந்த இல்ல. அதுனால எங்க அம்மா என்ன சொன்னாலும் அத்தை தலை ஆட்டுவாங்க. இதுக்கு அப்புறமும் குழந்த பொறக்காட்டி இதையே சாக்கா வச்சி என்னைய உங்க வீட்டு மருமகள் ஆக்குவீங்கனுதான் அப்படி பண்னேன். போதுமா இதுக்கு தான் பண்ணேன்” என்றாள் துளியளவும் குற்ற உணர்ச்சி இன்றி எகத்தாளமாய் சொன்னாள் ரஞ்சனா. அவள் கூறியதை கேட்டு அனைவரும் பிரம்மித்தனர்.
“அதுக்காக உருவாகாத உயிரையே கொன்னுட்டியே! ரெண்டு மூனு நாள் கருவா இருந்தா கூட நீ குடுத்த மித்திரைக்கு அது அழிஞ்சி இருக்குமே. உனக்கு பாவமா தோனலயா? காதல் ஒன்னும் கடைல விக்கிற பொம்ம இல்ல உன் இஷ்டத்துக்கு வாங்குறதுக்கு. அழகாக இருந்தா கல்யாணம் பண்ணிக்கனுமா, அதுக்கு நல்ல மனசு வேணும் அது உங்கிட்ட இல்ல” என்று தமக்கையை எண்ணி பணிந்தவன் ரஞ்சனாவிடம் எகிறினான்.
“யாரவது போலீஸுக்கு ஃபோன் பண்ணுங்க…” என்றுதியாக கூறினாள் வேர்லின்.
“எதுக்கு வேர்லின், அவள போலீஸ் புடிச்சிட்டு போய் என்ன ஆகாப்போகுது. அவளுக்கு தண்டனை கிடைக்கும் ஆனா எனக்கு… குழந்த பொறக்காதே! அவளுக்கு ஜெயில்ல கிடைக்கிறத விட பெரிய தண்டனைய கடவுளே குடுப்பாரு, எனக்கு ஒரே ஒரு கவலை என் புருசனுக்கு இவள மாதிரி ஒரு தங்கச்சி கிடைச்சதுக்கு உன்ன மாதிரி ஒரு தங்கச்சிக்கு கிடைச்சிருக்கலாம் வேர்லின்” என்று மனதார கூறியவள். குழந்தை பிறக்கும் என்ற எண்ணமெல்லாம் மனதைவிட்டு பறந்திருக்க மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“பார்த்தியா… என் அக்கா என்ன சொல்லுறானு பார்த்தியா, உன்ன தண்டிக்க கூட விரும்பல. அவளுக்கு போய் ச்சே” தமக்கையின் மென்மை குணத்தை விசனத்தோடு மெச்சினான்.
ரஞ்சனாவை இதற்கு மேல் அவ்விடத்தில் இருக்க கூடாது என்று செல்வமும் பாட்டியும் சேர்ந்து ஒருவர் கழுத்தை பற்ற ஒருவர் முடியை பற்றி வெளியே தள்ள, செல்வம் ரஞ்சனாவை காலால் எட்டி உதைத்தார். “தொலைஞ்சி போ சனியனே! நாங்க இருக்க பக்கம் வந்துறாத” ஆதங்கம் அடங்காமல் செப்பினார் செல்வம்.
புறஞ்சேயன் துரையசனுக்கு விடயத்தை கூறாமல் அவசரமாக வருமாறு கூற, துரையரசன் வேலை பளுவினாள். நாளை வருவதாகக் கூறிவிட்டான்.
****
இருள் சேர்ந்த வானை அகற்ற அனலி(சூரியன்) வந்திருக்க வீட்டிற்கு துரையரசனும் வந்து சேர்ந்தான். லக்ஷாவின் அறைக்கு செல்ல, லக்ஷதா ஓடி வந்து துரையரசனை கட்டி தழுவி அழ ஆரம்பித்தாள்.
கணவனுக்கு புரியவில்லை மனைவி எதற்கு அழுகிறாள் என்று, “ஏன் டா அழுற? அதான் வந்துட்டேன்ல” என்றவன் பண்பாய் விளம்பினான்.
“நமக்கு… நமக்கு இனி குழந்த பொறக்காதுன்னு சொல்லிட்டாங்க…இனி நான் அம்மா ஆக முடியாதுங்க… உங்கள அப்பானு கூப்பிட வாரிசு வரபோறதில்ல…” என்று முழுவதுமாய் கூறாமல் கதறி அழுதாள்.
லக்ஷதாவின் கதறல் சத்தம் கேட்டு அனைவரும் அவர்களின் அறையில் ஒன்று திரண்டனர்.
லக்ஷதா கூறிய வார்த்தை துரையரசனுக்கு பீதியை கிளப்ப, மனைவி குழந்தை இல்லாத ஏக்கத்தில் தான் புலம்புகிறாள் என்று அவளை இதப்படுத்திக்கொண்டிருந்தான்.
“யாரவது எதுவும் கேட்டாங்களா?” என்று துரையரசன் வினவினான்.
“அது வந்து மாமா…” என்று தயங்கினான் புறஞ்சேயன்.
“குழந்த இல்லனு தெரிஞ்சும் ஏன், லக்ஷு கிட்ட அதை பத்தி கேட்கனும் ச்சே” என்று சலித்தவன் குழந்தையை பற்றி யாரோ ஒருவர் லக்ஷதாவிடம் வினவியதால்தான் அழுகிறாள் நினைத்துக்கொண்டான்.
தயங்கிய புறஞ்சேயன் விசனத்தோடு நடந்த விடயத்தை முழுதாக கூறினான். இப்போது துரைக்கு லக்ஷதாவின் கண்ணீரின் காரணம் புரிய அவன் கண்களிலிருந்து நீரை சிந்தவிடாமல் இறுக்கிக்கொண்டான்.
“அவள ஏன் சும்மாவிட்டீங்க. போலீஸுக்கு புடிச்சு கொடுக்க வேண்டியதானே!” என்று ஆத்திரத்தோடு சொன்னான் துரை.
“உங்க தங்கச்சிங்குறனால தான் சும்மாவிட்டேன். அதுமட்டுமில்ல அவளுக்கு தண்டன கிடைச்சிட்டா மட்டும் நமக்கு குழந்த பொறக்கவா போகுது” என்று அவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.
“அவள என்ன பண்றேனு பாரு, பணத்துக்காகத்தான் உங்க வீட்டுக்கு மருமகளா வர ஆசைப்பட்டா, பணத்துக்காகத்தான் இவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கா, கூட பொறந்தவனு சொல்ல கூச்சமா இருக்கு. அவ பேர்ல எந்த சொத்தாவது எழுதி வச்சாதானே, பிச்சக்காரி மாதிரி தெருவுல திரியட்டும் அப்போதான் புத்தி வரும்” அவர்களை தாய் தந்தை என்று குழந்தை கூப்பிடும் கனவெல்லாம் குடிமூழ்கியது ரஞ்சனாவினால் என்ற ஆவேசத்தில் அப்படி கூறினான் துரையரசன்.
துரை கூறிய வார்த்தைகளில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஏதோ ஒரு வகையில் ரஞ்சனா துன்பப்பட்டால் போதும் என்று நினைத்தனர்.
“நம்மல அம்மா அப்பானு… கூப்பிட ஒரு குழந்த வேணுங்க..” என்று அவள் ஒரே ஓர் ஆசை நிறைவேறாது என்று அவன் தோள் மீது சாய்ந்து அழுதவாறு ஏங்கினாள்.
“உனக்கு நான் இருக்கேன் டா மா. உனக்கு நான் குழந்த எனக்கு நீ குழந்த இது போதும் டா. வேற குழந்த நமக்கு வேணாம் டா” என்று அவளை சமாதானப்படுத்தியவன் கண்கள் கலங்கி கண்ணீர் வெளி வராமல் நிற்க. ஏனையோர் அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு அவர்களது அறையை நோக்கி சென்றனர்.
கண்ணாடி முன் நின்று
கருவறையில் கரு நிற்க
மேடிட்ட வயிருடனே நான்
கண்ட சொப்பனமே
உடல் எங்கும் நடுங்கிடவே
வலியின் உணர்வு கூடிடவே
அம்மா என்று அலறிடவே
நானும் ஒரு தாயானேன்
நிறைவேறா நினைவுகளும்
நெஞ்சமதை நெருடி விட
இருலறையில் தாளிடவே
நானும் ஒரு மலடி ஆனேன்.
***
தம்பதியர் அறையில், “ஏன் பியூ, குழந்த பெத்துக்காம வாழவே முடியாதா?” என்று சலனத்தோடு வினவினான் புறஞ்சேயன்.
“வாழலாம் சார், அதுக்கு ஏத்தமாதிரி அவங்க ஹஸ்பன்ட் இருந்தா ஓகே, லக்ஷூ அக்காவ நினைச்சி எதுவும் ஃபீல் பண்ணாதீங்க சார். காலப்போக்குல எல்லாம் சரி ஆகிரும்” தன்னவனுக்கு ஆறுதல் அளித்தாள்.
“ரொம்ப ஆசையா இருந்தேன். அக்காவுக்கு குழந்த பொறந்தா எம்மடில வச்சி மொட்டை அடிச்சு காது குத்தணும்னு எல்லாம் பகல் கனவாகிருச்சு” என்று தன் வருத்ததை தெரிவித்தான் புறஞ்சேயன்.
“சார் நம்மலும் இப்படியே கவல பட்டுட்டு இருந்தா எதுவும் மாறாது சார். அவங்களுக்கு குழந்த இல்லங்குற ஃபீலே வராத அளவுக்கு நம்ம பார்த்துப்போம் சார்”
“ம்ம்ம்” என்று அவன் கூறிமுடிக்க, கைபேசியில் ஒரு அழைப்பு வர வேறு புறம் சென்றான். வினயுடன் ஐந்து நிமிடம் பேசிவிட்டு வந்தவன்.
அவசரமாக, “பியூ சிக்கிரம் ரெடி ஆகு ஒரு இடத்துக்கு போறோம்”
“எங்க… சார், அதும் இந்நேரத்துல. மணி எட்டு” என்று சலிப்புடன் கூறினாள்.
“வினைக்கு தெரிஞ்ச ஒரு இடம், அங்க ஊர் பேர் தெரியாதவங்க நிறைய பேர் இருக்கிறாங்கலாம். அங்க போய் அப்பா இருக்காறானு பார்த்துட்டு வரலாம்” என்று தமக்கையை நினைத்து சோகத்தில் இருந்தாலும் தந்தையை தேடும் பணி முக்கியமாய் தோன்றியது.
“இப்போ போக வேணாம். லக்ஷு அக்கா இந்த நிலைல இருக்கும் போது இந்நேரத்துல நம்ம அப்பாவ தேடி போகவேணாம்” லக்ஷாதவின் மனநிலையின் எண்ணும் போது ஒரு விதமான சலனம் பியானாவிற்கு.
“அதுக்கில்ல பியூ, ஒரு வேளை அப்பா அங்க இருந்தா?” கிடைக்கும் சிறு துரும்பையும் தவறவிட விரும்பபவில்லை புறஞ்சேயன்.
“டாடியாவே இருக்கட்டும் சார் நாளைக்கு மார்னிங்க் பார்த்துக்கிலாம்” என்று வேறு எதுவும் கூறாமல் துயிலாழ்ந்தனர்.
புத்தம்புதிய நாளை செங்கதிரோன் செம்மைபடுத்த வினய் கூறிய இடத்திற்கு இருவரும் பயணித்தனர்.
***