நெருப்பின் நிழல் அவன்! 11
நெருப்பின் நிழல் அவன்! 11
அத்தியாயம்: 11
மாலை நேரத்து தென்றல் காற்று தேகம் தீண்டி செல்ல.., வான் மகள் மழையை தூரலாக பொழிந்து வாசல் தெளித்து கொண்டிருக்க… பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சக்தீஸ்வரனின் கார் அவன் வீட்டின் முன் வந்து நின்றது.
மண்ணின் மணம் மனதில் இதம் சேர்க்க, ஈஸ்வரனோ தாடை இறுக கோர்ட் சூட்டில் கிரேக்க சிலை என தன் கம்பீரம் குறையாமல் காரிலிருந்து இறங்க, அவன் பின்னால் ரோஜாப்பூ நிற, தங்க ஜரிகையில் நெய்த பட்டு புடவையில் வான் தேவதை வாசல் வந்தது போல் ஈஸ்வரனுக்கு சற்றும் குறைவில்லாத அழகுடன் சாந்தவியும் இறங்கி பாந்தமாக அவன் அருகில் பொருந்தி நின்றாள். அவர்களை தொடர்ந்து மிதுனும் சாரதாவும் இறங்கி அவர்களின் அருகில் நின்றனர்.
ஈஸ்வரன் திருமணம் முடிந்த சந்தோசத்தில் அவனின் ரிசப்ஷனை உமையாளே..! எதிர் பார்க்காத அளவு கிரண்டாக ஏற்பாடு செய்திருந்தார் ரத்தினம். மண்டப அலங்காரத்தில் இருந்து சமையல் வரை அத்தனையிலும் புதிதாக சேர்க்க முடிந்த அனைத்துயையும் சேர்த்து அசத்தி இருந்தார். வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் சக்தீஸ்வரன், சாந்தவி இருவரின் திருமணத்தை பற்றி பேச நேரமே இல்லாத அளவு ரிசப்ஷன் கோலாகலமாக நடந்தது.
கையில் ஆரத்தி தட்டுடன் வந்த உமையாள் இரு ஜோடிகளுக்கும் ஒன்றாக ஆரத்தி எடுத்தவர் சாந்தவியிடம் “வலது காலை எடுத்து வச்சி உள்ள போமா…” என்று கூறி ஆரத்தி எடுத்ததை கொட்ட சென்றார். அதுவரை பொறுமையாக நின்ற ஈஸ்வரன் உமையாள் வழி விட்டதும் சாந்தவியை திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்று விட, போகும் அவன் முதுகை வெறித்த சாந்தவியும் ஒரு பெருமூச்சுடன் அவனை தொடர்ந்து சென்றாள்.
நேற்று வரை பார்க்கும் நேரம் எல்லாம் அவளை திட்டி காயப்படுத்தியவன்.. நேற்றைய பேச்சிற்கு பிறகு அவளை பார்ப்பதையே தவிர்த்தான். அவனின் சொற்கள் தந்த வலியை விட அவன் பாராமுகம் அதிக வலியை தந்த போதும்.., சாந்தவியின் பிள்ளை மனம் மன்னவனின் ஒற்றை பார்வைக்கு ஏங்கி நின்றது.
அவர்களை தொடர்ந்து மிதுனும் சாரதாவும் உள்ளே சென்றனர். ரத்தினத்தின் வீட்டிற்குள் சென்ற சாரதாவின் தேகம் சிலிர்க்க… குறு முடிகள் அனைத்தும் வான் நோக்கி நிற்க, சொல்ல முடியா உணர்வு மனதை தாக்க அருகில் நின்ற மிதுனின் கையை அழுத்த பற்றி கொண்டாள். சாந்தவியை கண்டுகொள்ளாமல் தன் பாட்டிற்கு சென்ற ஈஸ்வரனின் மேல் மிதுனுக்கு கோபம் வர ‘ஈஸ்வரனிடம் இதை பற்றி பேச வேண்டும்’ என நினைத்து கொண்டே வந்தவன் சாரதாவின் அழுத்தமான பிடியில் திரும்பி அவளை பார்த்தான்.
முகம் வியர்க சற்று படபடப்புடன் நின்ற மனைவியின் நிலையை நொடியில் புரிந்து கொண்டவன், அவள் கையை தட்டி கொடுத்து “என்னடா ஆச்சு..!?” என்று கேட்க, “ஏதோ.. ஒரு மாதிரி..! இல்லை! மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு… என்னனு சரியா சொல்ல தெரியலை..” என கூறி அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
மிதுனும் அவளை தோளோடு அணைத்து கொண்டவன் “ரிலக்ஸ் டா… பஸ்ட் டைம் இங்க வந்துருக்க இல்லை.. அதான் அப்படி ஃபீல் பண்ற..! கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும். வா போலாம்..” என்று சமாதானம் கூறி உள்ளே அழைத்து வந்தவனுக்கு மலர் பற்றிய உண்மையை அதிக நாள் மறைக்க முடியாது என்றே தோன்றியது.
வீட்டிற்கு வந்ததற்கே இப்படி என்றால் இனிமேல் உமையாள், ரத்தினம், ஈஸ்வரன் மூவரும் அவளிடம் காட்டும் அன்பு அவர்களின் செய்கை என பல சந்தேகங்களை சாரதாவிற்கு கொடுக்கும். எல்லாவற்றிற்கும் பொய்யை சொல்லி சமாதானம் கூற முடியாது என்று தோன்றியது. சாந்தவி ஈஸ்வரன் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல சொன்னதற்கே… இரவில் அவளை சமாதானம் செய்ய போன போது ஈஸ்வரனை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவன் குணம், அடிதடி வேலை பற்றி தெரிந்து இவனிடம் சண்டையிட்டவளை ‘இனிமேல் சக்தி அடிதடிக்கு போக மாட்டான்’ என பலமுறை கூறிதான் சமாதானம் செய்து வைத்திருந்தான்.
ஆர்த்தியை கொட்டி விட்டு வந்த உமையாள் சாந்தவியை அழைத்து விளக்கு ஏற்ற சொன்னவர், அடுத்து மணமக்களுக்கு பால், பழம் கொடுத்து என அனைத்து சம்பர்தாயத்தையும் செய்தார். ஈஸ்வரனை உமையாளின் முகத்தில் இருந்த மனம் நிறைந்த புன்னகை மட்டுமே உடன்பட வைத்தது என்றாள் மிகை இல்லை.
இரவு கவிழ்ந்து வான் தேவதையான நிலா.. மேக பல்லாக்கில் பவனி வர, உமையாளின் அறையில் சாந்தவி, சாரதா இருவரும் கையை பிசைந்து கொண்டு அமர்ந்து இருந்தனர். முதலிரவிற்கு தயாராகும் படி சொல்லி சென்ற உமையாளின் பேச்சில் சாரதா கிலி பிடித்து போய் அமர்ந்து இருந்தாள். மிதுனுக்கும்.., சாரதாவிற்கும் சேர்த்தே முதலிரவு ஏற்ப்பாடு செய்திருந்தனர் உமையாள்.
சாரதா உமையாளிடம் தங்களுக்கு இப்போது இரவு சடங்கு வேண்டாம் என்று கெஞ்சியும் அவர் மறுத்து விட, மிதுனிடம் சென்று இப்போது வேண்டாம் என்று கூற சொல்ல, அவனோ… “கட்டாய தாலி கட்டுன அவனே பக்கோடா சாப்பிடுறப்போ..! காதலித்து திருமணம் செய்த நான் பட்டினியாக படுப்பதா..!” என கூறி சாரதாவின் கோரிக்கையை நிராகரித்து இருந்தான்.
உமையாள் வந்தவர் அக்கா, தங்கை இருவரும் கிளம்பாமல் இருப்பதை பார்த்து “இன்னும் கிளம்பலையா ரெண்டு பேரும்..!, நான் சொல்லிட்டு போய் எவ்வளவு நேரம் ஆச்சு..! சீக்கிரம் ரெடி ஆகுங்க, நல்ல நேரம் வர போகுது…” என இருவரையும் அதட்டி உருட்டி, அவரும் சிறு சிறு உதவி செய்து என இருவரையும் ரெடியாக செய்தவர், சாந்தவிக்கு பூ வைத்து விட்டு, சாரதாவிற்கு பூ வைக்க “ஆண்டி நாங்க ஊர்ல போய்…” என சாரதா தொடங்கவும், “மூச்…” என வாயில் விரல் வைத்து அதட்டியவர் “பேச கூடாது.., நான் காலையிலேயே சொல்லிட்டேன். நீ எனக்கு பொண்ணு மாதிரின்னு…! உன் தங்கச்சிக்கு முன்னாடியே உனக்கு கல்யாணம் ஆகிட்டு நியாபகம் வச்சிக்கோ..!” என அதட்டியவர் இருவர் கையிலும் பால் சொம்பை குடுத்து இருவர் அறையையும் கூறி அனுப்பி வைத்தார்.
சாரதா அளவிற்கு சாந்தவிக்கு பதட்டம் இல்லை பயம் மட்டுமே. நேற்றில் இருந்து முகத்தை கூட பார்க்காதவன் இப்போது மட்டும் பேசி விட போகிறானா..! ஆனால் சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திக்க போகும் பயமும், அவனுடனான தனிமைகள் அனைத்துமே காயத்தை மட்டுமே கொடுத்ததால்.., இந்த தனிமை என்ன காயத்தை கொடுக்க போகிறதோ என்ன எண்ணம் மட்டுமே!.
சாரதாவுடன் இணைந்து நடந்த சாந்தவிக்கு அவள் இயல்பு தலை தூக்க “சாரு இந்த பால் சொம்பை ஏன் தந்து விடுறாங்கனு இப்போ புரிஞ்சிட்டு டி..!” என்றாள் ஒற்றை கண் அடித்து.
படபடபபில் இருந்த சாரதாவும் சற்று இலகுவாக “ஏன்டி..?” என்று கேட்க, “பயத்துல நடுங்குற கையை பால் சொம்பை பிடிச்சி மறச்சிக்க தான்…, இங்க பாரு..” என்று தன் ஒரு கையை நீட்டி காட்ட, சாந்தவியின் விரல்கள் ஐந்தும் மத்தளம் வாசிப்பவர்கள் விரல் போல் நடனம் ஆட, சாரதாவும் தன் கையை நீட்டி பார்க்க…, அவள் விரல்களும் நடனம் ஆட.., இருவரும் படபடப்பு மறந்து சிறு புன்னகையுடன் அவர்கள் அறைக்கு சென்றனர்.
ஈஸ்வரனின் அறை வாசலில் வந்து நின்ற சாந்தவி முதலில் கதவை திறக்க போனவள் பின்பு வேண்டாம் என முடிவு செய்து கதவை தட்டினாள். ஈஸ்வரனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக மீண்டும் தட்ட “எஸ்.. கம் இன்..” என்ற அவனின் கனிர் குரலில் சாந்தவி உடல் அதிர்ந்து அடங்க, மெதுவாக கதவை திறந்து உள்ளே சென்றவள்.. இடுப்பில் டவலுடன் தலையை துவட்டியபடி பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ஈஸ்வரனை பார்த்து அதிர்ந்தவள், காது மடல்கள் சிவக்க திரும்பி நின்று கொண்டாள்.
அவள் செய்கையை அலச்சியமாக கடந்து சென்று உடை மாற்றிய ஈஸ்வரன்.. வெளியே செல்ல கிளம்ப தயக்கத்துடனே சென்று பாலை சொம்பை அவன் முன்பு இருந்த டேபிளில் வைத்த சாந்தவி “பால்… அத்தை உங்களுக்கு குடுத்து விட்டாங்க..” என்றாள் திணறலுடன்.
சாந்தவியின் முத்தத்தில் இருந்த பயமும், அவள் செய்கையும் ஈஸ்வரனுக்கு கோபத்தை கொடுக்க, முகம் இறுக அவளை உறுத்து விழித்தவன் “அப்படியே.. ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத டி. உன்னை அடிச்சி நொறுக்க வெறி வருது.., நான் நேத்து சொன்னது தான் இன்னைக்கும். சாரதாவுக்காக மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணது. மத்தபடி உனக்கும் எனக்கும் நடுல எதுவும் இல்லை. போய் படுத்து நல்ல தூங்கு.. நான் உன்னை கடிச்சி குதறிட மாட்டேன்…!” என்று எரிச்சலாக மொழிந்தவன் சாந்தவி தடுக்கும் முன் அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
ஈஸ்வரன் திட்டுவான் என்று எதிர்பார்த்தே வந்ததால் அவன் கோபம் சாந்தவிக்கு அதிகம் வலிக்கவில்லை. ஆனால் அவன் அறையை விட்டு வெளியேறுவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பயத்துடன், படபடப்பும் சேந்து கொள்ள, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவள் அறை கதவை திறந்து பார்க்க வீடே இருளில் மூழ்கி இருந்தது.
‘எங்கே சென்றான்..!? எப்போது வருவான்..!?’ என்று தெரியாமல் அறையை அளந்தாள். காலையில் இருந்து ரிசப்ஷனில் நின்றதும் உடல் சோர்வை கொடுக்க.., கட்டிலில் தலை சாய்த்து தரையில் அமர்ந்து கொண்டாள். நேரம் நல்லிரவை தாண்டி செல்ல சாந்தவியின் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, இமைகளை தட்டி முழித்து ஈஸ்வரனின் வரவை எதிர்பார்த்து அறை வாசலையே பார்த்து கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி இருந்தாள்.
சாந்தவியின் மேல் இருந்த கோபத்திலும் அவளுடன் ஓரே அறையில் இருக்க பிடிக்காமல் மனம் போன போக்கில் வெளியே சுற்றி விட்டு நள்ளிரவை தாண்டி வீட்டிற்கு வந்தவன், அறைக்கு சென்று பார்த்த போது… முதலில் கண்ணில் பட்டது அவன் மனைவி தான்.
அவள் கட்டிலில் தலைசாய்த்து தூங்கிய கோலம் தன்னை தேடி இருக்கிறாள் என்று புரிய.., ஒரு நிமிடம் அவளை இமை அசைக்காமல் பார்த்தவன் அவள் முழித்துவிடாமல் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவனும் அருகில் படுத்து கொண்டான்.
நல்ல தூக்கத்தில் இருந்த சாந்தவிக்கு யாரோ தன்னையே பார்ப்பது போல் இதயம் உந்த, ஈஸ்வரன் வெளியே சென்றதும் நினைவில் வந்து அலைக்கழிக்க.. தூக்கம் கலைந்து முழித்து பார்த்தவள் இதயம் தொண்டையில் வந்து துடித்தது அவள் அருகில் நெருங்கி படுத்து அவளையே கண் எடுக்காமல் பார்த்திருந்த ஈஸ்வரனை பார்த்து.
அவன் பார்வையில் பயந்து கண்களை இறுக்கி மூடி கொண்டாள். கண்களை மூடி இருந்தாலும் ஈஸ்வரனின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்த சாந்தவி “ஏன்.. இப்படி பாக்குறாங்க?, ஒரு நிமிஷம் இதயமே நின்று போச்சி! திரும்பி படுத்துப்போமா..” என நினைத்து, தூக்கத்திலேயே திரும்புவது போல் திரும்பி படுக்க போக, ஒரு இன்ச் கூட நகரவிடாமல் ஈஸ்வரின் கைகள் அவளை ஆக்டோபஸ் என சுற்றி கொண்டது.
ஈஸ்வரனின் நெருக்கத்தில் கண்களில் சிறிதாக ஒட்டி இருந்த தூக்கமும் தூரம் சென்று விட, இதயம் லயம் மாறி தூடித்தது. “கடிச்சா குதறிடுவேனு வீராப்பா போனார்..! இப்போ ஏன் இப்படி பண்றார்…!” என நினைத்து கொண்டே கண் திறந்து இமை உயர்த்தி அவனை பார்க்க, ஈஸ்வரனின் புருவங்கள் இரண்டும் மேல் ஏறி “என்ன..” என்று கேள்வி எழுப்ப, “இல்லை..” என்று மறுப்பாக தலையசைத்த பாவையின் விழிகள் இரண்டும் காளையின் விழிகளோடு உறவாடியது.
சாந்தியின் பார்வையில் அவளை இன்னும் வளைத்து தன்னுடன் இறுக்கி கொண்ட ஈஸ்வரன் அவள் கழுத்தில் முகம் புதைத்து.. பாவையின் வாசத்தை நாசியில் நிரப்ப, ஈஸ்வரனின் எண்ணம் புரிந்த சாந்தவி அவன் பிடியில் இருந்து விலகினாள்.
அவள் விலகலில் “நான் சொன்னேன் தானடி..! ‘இனிமேல் சேலை கட்டாத.. மீறி கட்டுனா.., சேலையோட சேர்த்து உனக்கும் ஆபத்துனு…’ அப்பறம் ஏன்டி கட்டுன..!” என கோபமா..! தாபம்..! என பிரித்தறிய முடியா குரலில் கேட்க,
“இதுதான் இவங்க பிரச்சனையா..?!!” என நினைத்த சாந்தவி “இனிமேல் கட்ட மாட்டேன். இதோ.. இப்பவே டிரஸ் மாத்திட்டு வரேன்..” என்று எழுத்து கொள்ள, “அதை அப்பறமா பண்ணு..! இப்போ பண்ண தப்புக்கு பனிஷ்மென்ட் வாங்கிட்டு போ..” என்று அவளை சுண்டி இழுத்து தன் மேல் போட்டு கொண்டவன் அவளை முற்றிலும் தன்னுடன் இணைத்து கொண்டான்.
ஈஸ்வரனின் அணைப்பில் கூச்சத்தில் நெளிந்த சாந்தவி, நேத்து இருந்து திரும்பிக்கூட பார்க்கலை..! இப்போ இப்படி பண்றாங்க.. கோபம் போய்டுச்சா..! என்று நினைத்தவள் “உங்களுக்கு என்னை பிடிக்காது தானே..! அப்பறம் ஏன்…” என்ற அவளின் கேள்வி அவன் இதழுக்குள் அடங்கி போனது. அதன் பிறகு சாந்தவிக்கு பேச வாய்ப்பே தராமல் ஈஸ்வரன் முழுதாக ஆக்கிரமித்து கொண்டான். அவர்களின் கூடலில் வெட்கம் கொண்டு வான் நிலவும் மேகம் போர்வையை போர்த்தி தன்னை மறைத்து கொள்ள.. அங்கே முத்த சத்தம் மட்டுமே முழு நேரம் ஆட்சி செய்தது.
நெற்றி முத்தத்தில் தொடங்கிய கூடலும்.. அதை தொடர்ந்து ஈஸ்வரனின் மென்மையான அணுகு முறையையும்.. பாவையை முழு நேர வியப்பில் ஆழ்த்தியது. கூடல் முடிந்ததும் அவளை மார்போடு அணைத்து கொண்டு தூங்கியவனின் மார்பு சூட்டில் கொழி குஞ்சு என தலைசாய்த்து கொண்ட சாந்தவியை வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் நித்திரா தேவியும் சுகமாக தழுவி கொண்டாள்.
ஈஸ்வரன் மனம் மாறி விட்டது என நினைத்து தன்னை ஓப்பு கொடுத்த சாந்தவிக்கு இது விட்ட சவாலின் விளைவு என தெரிந்தால்…!!!
அதிகாலை நேரம் இறைதேடி செல்லும் பறவைகளின் சத்தத்தில் கண் விழித்த சாந்தவி நேரம் விடிய போவதை உணர்ந்து எழுந்து கொள்ள போக ஈஸ்வரனின் கைகள் அவள் இடையில் பதிந்து அவளை வளைத்திருந்தது. அவன் தழுவலை தொடர்ந்து இரவின் கூடல் நினைவில் வர முகம் சிவந்த சாந்தவி அவள் காதில் மோதிய ஈஸ்வரனின் சீரான மூச்சி காற்றில் அவன் உறக்கம் கலையாமல் மெதுவாக திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
ஆழ்ந்த தூக்கத்திலும் அடம் பிடிக்கும் குழந்தை போல் முகத்தை “உர்..” என வைத்திருந்தவனை காதலுடன் பார்த்தவள் “மூஞ்சை பாரேன்.., அப்படியே உர்ன்னு.. தூக்கத்துலையும் இந்த முறைப்பு போகுதா பாரேன்..!!” என்று செல்லமாக அவனை கடிந்து கொண்டவள் மென்மையாக அவன் சிகை வருடி விட்டாள்.
அவளின் வருடலிலும் ஈஸ்வரன் முகச்சுழிப்புடன் அவளை நெருங்கி படுக்க “சுகமா.. வருடி விட்டா கூட முகத்தை சுழிக்க தான் வருமாடா ரௌடி..” என்று அழுத்து கொண்டவள் அவன் மார்பிலும், கழுத்திலும் ஒட்டி இருந்த அவளின் நெற்றி குங்குமம் பார்த்து முகம் சிவந்தவள்.. அவன் தூக்கம் கலையாமல் எழுந்து குளிக்க சென்றாள்.
இரவின் நினைவுகளுடன் முகம் கழுவி பல் துலக்கிவிட்டு குளிப்பதற்கு தண்ணீர் திறந்து விட்ட சாந்தவிக்கு அப்போது தான் மாற்று உடை எடுத்து வராததும்.., அவள் உடைகள் உமையாள் அறையில் இருப்பதும் நினைவு வர.. என்ன செய்வது என்று புரியாமல் நிற்கும் போதே.., அறையில் லைட் எரிந்து ஈஸ்வரனின் நடமாட்டம் தெரிய “ஐயோ இவங்க வேற எழுந்துட்டாங்களா..! இப்போ என்ன பண்ண..!” என்று புரியாமல் குழம்பி நின்றாள்.
சாந்தவியின் விலகளில் ஈஸ்வரனுக்கு கை பொருள் விலகிய உணர்வு தூக்கத்தை கலைத்தது. பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தத்தில் சாந்தவி குளிப்பதை உணர்ந்தவன் உடல் சோர்வை போக்க.., எழுந்து லைட்டை ஆன் செய்து விட்டு கை கால்களை அசைத்து சோம்பல் நீங்கினான்.
தண்ணீர் விழும் சத்தம் நின்றும் சாந்தவி வெளியே வராமல் இருக்க “இன்னும் என்ன பண்றா…?!” என்று நினைத்த ஈஸ்வரன் குளியலறை கதைவை தட்ட, சாந்தவி தயக்கத்துடனே கதைவை திறந்து வெளியே வந்தாள். குளிக்காமல் இரவு கட்டி இருந்த புடவையுடனே இருந்தவளை புருவன் சுருக்கி பார்த்தவன் எதுவும் கேட்காமல் குளிக்க சென்று விட்டான்.
ஈஸ்வரன் குளித்து வெளியே வரும் போதும் சாந்தவி நகத்தை கடித்து கொண்டு அப்படியே அமர்ந்து இருப்பதையும்.., அவள் முகத்தில் இருந்த பதட்டத்தையும் பார்த்தவன் “என்ன பிரச்சினை..! குளிக்கலையா..!?” என்றான் சற்று அழுத்தமாகவே.
காலையிலேயே அவன் கடுமையை எதிர்பார்க்காதவள் சற்று திகைத்து “டிரஸ் இல்லை. சாரதாகிட்ட இருக்கு..” என்று சாந்தவி கூறவும், கபோர்டை திறந்து ஒரு இளம் மஞ்சள் நிற டிசைனர் புடவையை எடுத்து அவள் முன் போட்டவன் வேறு எதுவும் கூறாமல் அவனுக்கு உடை தேர்வு செய்தான்.
உடை இல்லாமல் குளிக்காமல் எப்படி வெளியே செல்வது என யோசனையுடன் அமர்ந்து இருந்த சாந்தவி தன் முன்னால் விழுந்த புடவையில் முகத்தில் சந்தோசத்துடன் நிமிர்ந்து ஈஸ்வரனை பார்த்தவள் “தேங்க்ஸ்…” என்று விட்டு உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள். குளித்து வெளியே வந்து கண்ணாடி முன் நின்று சேலையை சரி செய்தவள் அந்த சேலை அவளுக்கு அழகாக இருக்கவும் கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.
அவள் முகத்தில் இருந்த சந்தோசத்தையும் வெட்க சிவப்பையும் நக்கலாக பார்த்த ஈஸ்வரன் “அவளுக்கு எடுத்த சேலை.. அவ கட்டி இருந்தா தேவதை மாதிரி இருந்து இருப்பா..!, நாட் பேட் உனக்கும் எடுப்பாதான் இருக்கு…” என்று கூறி விட்டு வெளியே சென்று விட, சாந்தவியின் புன்னகை நொடியில் துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்து இருந்தது.
நிழல் தொடரும்….