யாகம் 25 03
யாகம் 25 03
யாகம் இருபத்து ஐந்து 03
அகரவரிசைப்படி அடுக்கிவைக்கப்பட்டிருந்த, புத்தக அலமாரியின் ஒரு கோடிமூலையில், கால்களைக் கட்டிக் கொண்டு விக்கி, விக்கி அழுது கொண்டிருந்தாள் மேகவி.
அவளுக்கு எதிரேயிருந்த மற்றுமொரு மூலையில் மார்புக்கு குறுக்காக, கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே கண்ணெடுக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான் இந்தர்.
கைகள் இப்போதே சென்று அவளை அணைத்து உன் நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக்கொள் என துருத்த, அதனை அடக்கிவைக்கவே கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
இசைபிரபா கண்டிப்பாக ஹஸ்வந்திடம் சண்டை போட்டிருப்பாள் என இந்தர் யூகித்திருந்தான். ஆனால் அது அவர்களின் திருமண வாழ்வு தொடர்பாகவே இருக்கும் என்பதைக் கூட நுன்மையாக அனுமானித்திருந்தான்.
இந்தர், அவதானித்த வரைக்கும் இசைபிரபா, கோபக்காரியாக இருப்பினும் அவளிடமும் அந்த நிமிர்வும், சுயமாக சிந்தித்து முடிவுக்கு வரும் சுதந்திரமும் அவளிடம் விரவிகாணப்பட்ட குணங்கள். ஆதலால் அவளின் தந்தை பற்றிய உண்மையை அறிந்தவுடனே,
அமரா செய்தது தவறு என வாதிடவில்லை. ஆனால் நிச்சயமாக இவர்களின் பலிவாங்கும் திட்டம் சரியென முடிவெடுத்து, இறுதி முடிவை அவளின் அண்ணன், அண்ணியிடம் விட்டுவிட்டிருந்தாள்.
இது இந்தரின் அனுமானங்கள் மட்டுமல்ல, உண்மையில் இசையின் முடிவுகளும் அவையே. இப்போது ஹஸ்வந்திடம், வெளியில் அமர்ந்தவாரு அதைத்தான் பேசிக் கொண்டிருந்தாள்.
ஐந்து நிமிடங்களாக, இந்தர் தனது பொழியும் மேகத்தை பார்த்திருக்க, சற்று அழுகை மட்டுப்பட்ட கவி, யாரோ தன்னைத் துளைத்தெடுப்பது போல உற்றுநோக்குவதாக, உணர்ந்தவள், சட்டென தலையை நிமிர்த்தி பார்க்க, அங்கு அவளின் கணவன் நின்றிருந்தான்.
அதுவும், இறுகிய தாடையிலும் அவனின் ஒருபக்க கண்ணகுழி தெளிவாக காட்சியளிக்க, தன் முழு உடலையும் புத்தக அலுமாரியில் சாய்த்தல்வா நின்று கொண்டிருந்தான்.
சட்டென எழுந்த மேகவி, நேரே சென்று, அவனின் சட்டைக் காலரை எம்பி பிடித்திழுக்க, அவனும் சற்று வளைந்து கொடுத்தான். உடனே அவளோ, ஓங்கி ஒரு அரை அரைந்திருந்தாள்.
இந்தர் இதைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போல சற்று மலர்ந்து இதழை விரித்து, அவள் அடித்த கன்னத்தினை மென்மையாக நீவிக் கொண்டான்.
மேகவியோ மீண்டும் கண்ணீர் முட்டிக் கொண்டு வர, தான் இருந்த இடத்தை நோக்கி நடக்கவும் அவளின் துப்பட்டாவின், நுனியைப் பிடித்து இழுத்தான் இந்தர்.
“விடு” என்று அவன் புறம் திரும்பி கவி கத்த, அவனோ இரு கைகளையும் சிறகு போல விரித்து ‘வா’ வென தலையை அசைத்தான். கண்ணீர் ததும்ப நின்ற நயனத்தோடு அவனின் முகத்தை ஏறிட்ட கவி,
அடுத்த நிமிடமே வேகமாக சென்று அவனின் மார்பில் தலையை மோத, இந்தர் சற்று தடுமாறி புத்தக அலமாரி மீது உடலைச் சாய்க்க, இரண்டு மூன்று புத்தகங்கள் கீழே தடார் என விழுந்தது.
நொடியில் சுதாரித்தவனாக, அவன் காலை ஊன்றி நின்று, அவளின் தலையை வலது கையால் தன் நெஞ்சை நோக்கி நகர்த்தியவன், இடது கையால் அவளின் இடையைப் பிடித்து, பறந்து செல்லத்துடிக்கும் குஞ்சுப் பறவையை தாய் அடைக்கி வைப்பது போல் தழுவிக் கொண்டான்.
ஒரு மோனநிலை இருவருக்கிடையிலும் தொடர்ந்து கொண்டிருக்க, இந்தர் அவனின் சட்டையில் ஈரத்தை உணர்ந்தவனாக, அவளின் தலையிலிருந்த கரத்தை, அவளின் தாடையின் பக்கமாக கொண்டு சென்று முகவாயைப் பிடித்து நிமிர்த்திப் பார்க்க,
மேகத்தின் விழிகள் கார்காலமாக தூரிக்கொண்டிருக்க, “ப்ச் அழாத மேகம்” என்றவன், முதல் முறையாக அவளின் கருங்கூந்தல் மறைத்திருந்த உச்சியில் முத்தம்மொன்றைப் பதித்தான். அம்முத்ததில் காமம் கலக்காத, தாயின் ஸ்பரிசம் மட்டுமே. பின், அவளினை அணைப்புக்குள் வைத்தவாரே,
மஞ்சத்தினருகில் கொண்டு வந்தவன், அவளுடன் அவனும் அமர்ந்து கொண்டு, தன் கட்டை விரலால் கண்ணீரைத் துடைத்தவன், “குடி மேகம்” என தண்ணீரை எடுத்து நீட்டினான்.
மேகவியும் தொண்டை வறண்டு போயிருந்ததால், அதனை வாங்கிப் பருகியவள், மீண்டும் அமைதியைச் சூடிக்கொண்டாள்.
“மேகம்” என மீண்டும் அவன் அழைக்கவும், “வில் யூ பிளீஸ் ஸ்டாப் இட்” என கத்தினாள். “மேகம்” விடமாட்டாமல் அவன் அழைக்க,
“என்னடா வேணும் உனக்கு, ஹான் என்ன வேணும்? நீயும் என்னை ஏமாத்திட்ட, எல்லாேரும் என்னை ஏமாத்திடாங்க. நான் யாருகிட்ட போய் நிப்பேன். அப்பா அப்பானு அவரு என்னத்தை சொன்னாலும் தலையாட்டினேன். கடைசில அம்மாவையே கொலை பண்ணியிருக்கார்.
ச்..சின்ன வயசுல அம்மா எங்கனு கேட்டு அழுதா, அம்மா நல்லவடா அதான் சாமிட்ட சீக்கிரம் போய்டானு சொல்லுவாரு. சில நேரம் அழக்கூட செஞ்சிருக்காரு. ஆனா எல்லாம் நடிப்பு.
நீ அம்மா இல்லாத பொண்ணு என சொல்லி சொல்லி என்னை, அடங்கி ஒடுங்கி, சத்தம் போட்டு பேசக்கூட திவனியில்லாத ஒருத்தியா வளத்து வைச்சிருக்காரு. ஒருவேளை அம்மா மாதிரி நானும் சத்தம் போட்டு சண்டை போடக்கூடாதுனு எண்ணியிருப்பார் போல.
நானும் பாசம்னு ஒரு வேசத்தை நம்பி வாழ்ந்திருக்கேன். எனக்கு என்னை நினைச்சாலே வெறுப்பா இருக்கு. நீ சொல்லுவியே, தைரியமா இருக்கனும்னு அதை ஏன் அவரு அப்ப சொல்லை.
சொல்லு சொல்லு, ஏன் எல்லாரும் ஏமாத்தினிங்க?” என கத்தியவள் இந்தரின் மார்பில் குத்தி குத்தி அழுது வெடித்தாள்.
“மேகம் ரிலாக்ஸ்டா. சில், சில் அவுட்” அவளின் முதுகை நீவி விட்டவனாக கவியை ஆசுவாசப்படுத்த, சற்று அடங்கியவளை, அவனின் மடியில் அவளை சாய்த்து, தட்டிக் கொடுத்தவாரே பேச ஆரம்பித்தான் இந்தர்.
“மேகம், ஏமாற்றம் என்கிறது, ஒருத்தர் நம்பிக்கையை உடைக்கிறது. எல்லோரோட நம்பிக்கையும் அவங்க மனசு சார்ந்தது தான். ஒருத்தருக்கு இருக்குற நம்பிக்கை இன்னொருத்தருக்கு இல்லாம போகும். சிலருக்கு அதே நம்பிக்கை இருக்கவும் செய்யலாம். ஆனா அதை உடைக்கும் போது நம்பிய நம்ம ஏன் துவண்டு போய்,
ஐயோனு அழனும். ஒவ்வொரு தோல்விளையும் வெற்றி மேல வைக்கும் நம்பிக்கை உடைஞ்சு தான் போகுது. அதுக்காக முயற்சியே செய்யாம இருக்க முடியுமா சொல்லு. திரும்ப திரும்ப அடிக்க அடிக்க ஓடிட்டே இருந்தா தான் நம்ம இலக்கை அடையமுடியும். அந்த இலக்குத் தான் ஏமாற்றம் இல்லாத உண்மையான நம்பிக்கை” அவன் பேசி முடிக்கவும்.
“ஹம், நல்லா பேசறிங்க, ஆனா அப்பா பண்ணினது தப்புத்தானே என்னால தாங்கிக்கவே முடியல. என் அம்மாவ, அமரா அக்காவோட பெத்தவங்கலனு கொலை பண்ணியிருக்காரே. அம்மாவைப் போயி…” கண்களில் நீர் கோர்கவும்,
“அமராவுக்கு அவ பெத்தவங்க பத்திய உண்மை தெரியவரும் போது அவளுக்கு உன்னை விட சின்னவயசுடா, அந்த வயசுலயே பலிவாங்கனும்னு வந்து நின்னா தைரியமா. நான் உன்னை அவ கூட கம்பெயார் பண்ணல மேகம். ஆனா யூ சுட் டோலரேட் இட்” என்றான் அவன்.
“எப்படி? ஆனா எனக்கு இனி அப்பானு யாரும் கிடையாது. நான் முடிவு பண்ணிட்டேன். இனிமே எனக்கு எந்த சொந்தமும் கிடையாது” என்றாள், உடைந்த குரலில் “இனி எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லியா” குழந்தையாக இதழ் வளைக்கவும்.
“பிரசாத், உன் அத்தை இருக்காங்க ஏன் என்னேட, அம்மா அப்பா இல்லியா? அப்போ நான் யாருடா?” அவன் கேட்கவும், அவனின் மடியில் படுத்தவாரு அவன் முகத்தை பார்த்தவள்.
“நீங்க தான் அமரா அக்கா, சொன்னா என்னை விட்டுட்டு போயிடுவிங்க இல்ல? அவங்க சொல்லித் தானே என்னை கல்யாணம் பண்ணிங்க?” உதட்டை பிதுக்கினாள் அவள்.
“ஹா, ஹா. அமரா சொன்னா இந்தர் எதுவும் செய்வான் ஆனா அவனுக்கு விருப்பமில்லாத எதையுமே அமரா செய்ய சொல்ல மாட்டா” என்றவனை, விளங்காத பார்வை பார்த்தாள் கவி.
“என்னோட முழு சம்மதத்தோடத் தான் இந்தக் கல்யாணம் நடந்திச்சுடா, எனக்கு சம்மதமில்லைனா பிரசாத் மற்றும் அமரா கல்யாணத்தை மட்டும் தான் நடக்க வைக்குறதா இருந்திச்சு” குழியழகன் சிரித்தான்.
“எப்படி, நான் பட்டிக்காடு. இங்லிஷ் தெரியாத என்கூட வாழ முடியாது. நான் உங்களுக்கு தகுதியில்லனு சொன்னிங்க. பட் டூ யூ நோவ் சம்திங் ஐ ஹேவ் கூட் நாலேட்ஜ் இன் இங்லிஷ்” முகத்தை சுருக்க.
“ஐ நோவ். நீ எனக்கு தகுதியில்லனு சொன்னா, அதுக்கு எதிரானது என்ன? நானும் உனக்கு தகுதியில்லை தானே. இங்க மேட் ஃபோர் இச் அதர்னு ஒன்னுமே கிடையாது. லிவ் ஃபார் இச் அதர் தான் உண்மையும் கூட,
உனக்கு இங்லிஷ் தெரியாது சொன்ன எனக்கு, தமிழ் பேச தெரிந்த அளவு எழுத, வாசிக்க வராது. உனக்கு பரதம் தெரியும் எனக்கு அது சுத்தம், வரவே வராது. உனக்கு இது, எனக்கு இதுனு ஆயிரம் குறைகள் இருந்தாலும் அந்த குறைகள எல்லாமே நிறைகளாக மாத்துறது நேசம் மட்டும் தான்.
உண்மையான நேசத்துக்கு முன்ன வாய்வார்த்தை எல்லாமே தூசுங்க தான். என்னப் பொருத்தவரை சொல்லிப் புரிய வைக்காத காதல் தான் பேரழகு. எண்ட் உனக்கு இங்லிஷ் என்ன ஃபிரான்ஸ் கூட நல்லா வரும்னு எனக்கு தெரியுமே” கண்ணைச் சிமிட்டினான் இந்தர்.
“எப்..எப்படி? என் சர்டிஃபிகேட் எதையும் எடுத்து பார்த்திங்களா?” அதிபுத்திசாலித்தனமாக கேட்டாள் கவி.
“உன் சர்டிஃபிகட்ல, என்ன கலர் ட்ரெஸ் போட்டுட்டு கிளாஸ்கு போனனு எதும் எழுதியிருக்கா பால் டப்பி?” கேட்டவன் தொடர்ந்து, “உன்னோட போன பேர்த்டே அப்பாே, ஈவினிங் டைம்ல கோச்சிங் செண்டர் முன்னாடி நின்னுட்டு குல்ஃபி சாப்டு இருந்தியே ஞாபகம் இருக்கா?
பேபி ஆரேன்ஜ் கலர் டாப், ஸ்கை ப்லூ லாங் ஸ்கேர்ட், இரண்டையும் காம்போ பண்ணினதா துப்பட்டா, முடிய கூட விரிச்சி விட்டுட்டு, நெத்தில குட்டியா குங்குமம் வெச்சிட்டு, குல்ஃபி சாப்பிட்டு நின்ன.
உன் ஃபிரண்டு உன்னை மேகவினு கூப்பிடவும் நீ திரும்பும் போது உன் ஜிமிக்கில இருந்த முத்துக்கள் எல்லாம் உன் கழுத்துல கோலம் போட்டுச்சு. அப்போ பார்த்து எனக்குள்ள ஒன்னு தோனிச்சு பாரு…” தன் நெற்றி முடியை கோதினான் இந்தர்.
ஆச்சரியத்தில் கண்களை அகலவிரித்த கவி, “என்ன தோனிச்சு?” அவனை ஏறிட்டாள் அவள். கையிரெண்டையும் சாமி கும்பிடுவது போல் கூப்பியன் பின் பத்து விரல்களையும் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
“கடந்து போன மேகங்கள் வேணாம், நிலையானதா எனக்கான ஒரு மேகம், என் தலைக்கு மேல மட்டும் குடையாக, துணையாக வரனும்னு தோனிச்சு. உன் மஞ்சல் பூசின அந்த முகத்தை நான் கண்ணு மூடுற வரை என் கண்ணுக்குல வைத்து பூஜிக்கனும்னு தோனிச்சு” குனிந்து மடியில் கிடங்தவளின் நெற்றியில் முட்டிக் கொள்ளும் போது அவன் மேகம் வெட்கத்தில் மிதந்தது. பின்,
“அப்போ ஏன் பட்டிக..” அவளை முடிக்க விடாமல், “என்னோட தேவதேவியைக்கு நான் செல்லமா வைச்ச பேருதான் இதுலாம். கண்ணுக்கு குளிர்ச்சியா பட்டிக்காடு தானே இருக்கும் சோ யூர் ஆர் மை க்ரினெரி. கைக்குள்ள வைக்குற மாதிரி குட்டியா இருக்க அதனால பால்டப்பி, உனக்கு நான் வைச்ச ஒவ்வொரு பெயர்லயும் அர்த்தமிருக்கு” என்றவன் தொடர்ந்து,
“உன்னை அழவைச்சி ரசிக்க எனக்கோ இல்லை அமராக்கோ அவ்வளவு விருப்பமில்லைடா. ஒரு குள்ள நரிக்கு வைச்ச பொறில உன்னை இரையா மாட்ட வைச்சோம். ஆனா அந்த நரியை வேட்டையாடும் போது இரைக்கு வைச்ச உன்னையும் மீட்டு எடுக்கனும்னு நாங்க ஆசைப்பட்டோம்.
உன்னைத் திட்டும் போது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா வேற எந்த வழியும் எனக்குத் தெரியல. எப்போவும் உன் அப்பா நம்மலைப் பார்க்கும் போது தான் திட்டவே செய்வேன். சில நேரம் நீ தனியா இருக்கும் போது ஏதாச்சும் பேசி வம்பு பண்ணத்தான் தோனும்.
லூக்காவ கூட, உனக்கு பிடிக்கும்னு தான் உன் கைல பாக்ஸ்ஸ ஓபன் பண்ண சென்னேன். சத்தியமா உனக்கு பூனைனா பயம்னு தெரியாது. அதுக்கு பிறகு தான் உன் பேர்த்டேய்கு, உனக்கு பிடிக்கும்னு லட்டு எல்லாம் வாங்கி வந்தேன். நீ வேற முந்தனநாள் விரதம்னு சாப்பிடாம இருந்தியா? பசிக்கும், எண்ட் ஃபேவரிட்னு மொத்தமா சாப்பிட சொன்னேன். பட் ஓவர் பிலோ ஒப் கண்சிஸ்டன்சில ஸ்வீட் அதிகம் சாப்பிட முடியாதுனு நான் பீல் பண்ணலடா” அவன் முடிக்க அவனை வெறித்துப் பார்த்தாள் கவி.
“இன்னும் ஏதும்” என்றவளிடம், “இன்னும் ஒன்னு இருக்கு. எனக்கு உன்னைப் பார்க்கும் போது எல்லாம் ஒரு கில்டி பீல் இருக்கும். சில நேரத்துல ஐயோ ஏன் இவ இப்படி இனசென்டா இருக்காளோனு தோனும், இன்னும் சில நேரத்துல இவளை இப்படியே விடக்கூடாது,
அவ கூட்டில இருந்து வெளிய வர வைக்கனும்னு தோணிட்டே இருக்கும். அதனால தான் எப்போவும். போல்ட்டா இருனு திட்டுவேன். உனக்கே தெரியாம உன்னை மாத்தியும் இருக்கேன். புரியலியா? ஆரம்பத்துல பேசக் கூட தயங்குவ, கொஞ்சம் கொஞ்சமா பேசின, உனக்கு என்ன சரி தப்புனு யோசிக்க ஆரம்பிச்ச, இப்போ சத்தம் போட்டு உன் உணர்வுகள கத்தக் கூட செய்ற.
இதே பழைய மேகமா இருந்தா, அழுது இருப்பியே தவிற பேசியிருக்க மாட்ட. ஆனா என்னையே அறையுற அளவுக்கு முன்னேறிட்ட.
இதுல என்னோட சுயநலமும் கொஞ்சேமே கொஞ்சம் இருக்கு. உன்னை அழ வைச்ச நான் உன் கையாலேயே அதுக்கு தன்டணை வழங்கிக்கனும்னு நினைச்சேன். இப்போ நான் ஜெயிச்சிட்டதா பீல் பண்ணுறேன். இந்த வெற்றி உன்னால எனக்கு கிடைச்ச வெற்றி.
எண்ட் நான் பலி வாங்க வந்திருந்து உன்னை எதுவும் காயப்படுத்தி இருந்தா ஐம் சாரி. பட் எங்க பலிவாங்கும் படலம் தப்பும் கிடையாது. அதுக்காக நாங்க யாருகிட்டையும் மன்னிப்பும் கேட்க வேண்டிய அவசியமில்லை.” மொத்தமாக கூறி முடிக்கவும்,
கவியின் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் அவளின் கன்னத்திலிருந்து வழிந்து, அவனின் மடியில் வீழ்ந்தது. “எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுறதுனு தெரியல. ஆ..ஆனா உங்களை மாதிரி யாரையும்…நான் என் வாழ்கையில பார்த்ததும் இல்ல. இனி வேறு யாரும் உங்களைத் தாண்டி வரப்போறதும் இல்லை.
கதையிலேயும் காவியத்துலேயும் தலைவன்களைப் பற்றி வாசிக்கும் போது இப்படி ஒருத்தன் நம்ம வாழ்கையில வேணும்னு தோனும். ஆனா அது எல்லாம் பொய்னு இப்போ தோனுது. வீரமாக, காதலாக, கலவியாக, வார்த்தையாக கூட காதலை உணர்த்தலாம். அனா தனக்கு பிடிச்ச பொண்ணுக்கு, அவளையே தான் யார்னு உணர்த்தியிருக்கிங்க.
மன்னிப்பு, சரி, பிழை எல்லாத்தையும் தாண்டி, என்னை எனக்காக வாழவைத்த உங்க கூடவே நான் வாழ்ந்தா போதும்” பேச பேச அவளின் கண்ணில் நீர் வடிய, அவளை அணைப்பதற்கு பதிலாக அவளின் கண்ணீருக்கு விரலால் அணைகட்டினான் இந்தர். ஏதோ சிந்தித்தவளாக,
“ஆனா அமரா அக்கா என்னை எதும்…” புரிந்தவனாக இந்தர், “அவளுக்கு உன் மேல எந்த கோபமும் இல்லைடா. சொல்லப் போன நம்ம கல்யாணம் நடந்த அடுத்த நாள் காலையிலேயே உன்னைத்தான் விசாரிச்சா. அவ உன் கிட்ட ஹார்ஸ்ஸா நடந்துக்கிட்டதா வருத்தம்தான் பட்டா. அவ சரியான குணத்தையோ முகத்தையோ நீங்க யாருமே பார்த்தது கிடையாது. அமைரா என் முதல் பொண்ணுனா அமரா எனக்கு இரண்டாவது அம்மா மாதிரிடா.
வெளிய எத்தனையோ பேருக்கு, அத்தை மகன் மாமா மகள்னா முறைவைச்சி பேசுவாங்க, ஆனா அதையும் தாண்டிய தாய்மை போலத் தான், எங்க இரண்டு பேருக்கும் நடுவுல இருக்குறது தூய்மையான ஒரு உறவு முறைடா. அதுக்கு எந்த பெயரும் தேவையே கிடையாது” அமரா பற்றி பேசும் போது மட்டும் வழக்கமாக விரவிக் கிடக்கும், சாந்தமான பெறுமை அவனின் முகத்தில் குடியேற,
“கொஞ்சநேரம் தூங்குடா” என்று தட்டிக் கொடுத்தவனின் நயனங்களை நயத்துடன் தனக்குள் பொத்திக் கொண்டு இமை மூடினாள் இந்தரின் மேகம்.
பொன்நிறக் கதிரோன் அந்தரத்தில் ஆட, ரம்மியமான காலைக் கீர்தனங்கள் செவிகளுக்கு புலனாக, இருபக்க தடுப்புக்கு மத்தியில் நீண்டு கிடந்த செம்மண் ஓடுபாதையில் தன்னந்தனியே சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது இருகால் இரும்புக் குதிரை.
கவாசகி நின்ஜா ரகத்தை சார்ந்த, கருப்பும் இலைபச்சை நிறத்திலும் குளித்த, இருசக்கரவண்டி, ‘ரேஸ் கிளப்’ எனப்படும் இடத்தின் ஓடுபாதை திடலில் வேகமெடுத்து ஓடிக் கொண்டிருக்க, அதோ இலக்கையும் அடையக் கடந்து கொண்டிருக்கையில்,
டுகாட்டி பெணிகேல் இனத்தை சார்ந்த, வெண்மதியின் நிறத்தையொத்த, இருசக்கரவண்டியொன்று, அசுரனாக பாய்ந்து முதலில் இலக்கை கடந்தது, அவ் வண்டியை ஓட்டியனோ,
அவ் இலக்கின் கோடியில் நிற்கும் மரத்தின் கீழ் வண்டியை நிறுத்திவிட்டு, நிஞ்ஜா வண்டியில் வந்தவளினை நோக்கி, தனது இடது கையினால், ஆட்காட்டி விரலை நிலத்தை நோக்கி காட்டி ‘லூசர்’ என சைகையிட்டான்.
முழு முகக்கவசம் அணிந்த, பின்னால் வந்த வண்டியை ஓட்டியவள், வண்டியை ஒடித்து திருப்பி, அருகில் நின்றிருந்த கொன்றை மரத்தின் கீழ் வண்டியைக் கொண்டு விட்டவள் தனது முகக் கவசத்தை கழற்ற, அதே நேரம் அவ் ஆடவனும் அவளினருகில் வந்து முகக்கவசத்தை கழற்றினான்.
முதுகில் பரப்பப்பட்ட முடிகளில், ஒன்றிரெண்டு முகத்தில் கோலமிட அவளும், அவளின் கண்களுக்குள் அவன் விம்பத்தைப் பார்த்ததாக அவனும் ஒருவரை ஒருவர் ஏறிட, சற்று அசைந்த மாருதத்தினால் மரத்திலிருந்து சில மலர்கள் இருவரின் சிரசிலும் விழுந்து அலங்கரித்தது.
“எப்படியிருக்க அமரா” என்றவன் வேறு யாருமில்லை, பிரசாதே. “பார்த்தா எப்படி தெரியுது” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டவள், மரத்தின் மீது சாய்ந்து கொண்டு, தனது கபில நிறக் கூந்தளை அள்ளி உச்சிக் கொண்டையிட,
“பார்த்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு தெரியுது” என்றவனின் குரலில் சிறிய கிசுகிசுப்பே. “இஸ் இட்” என்ற அமரா இதழை வளைத்தவள். “சோ மிஸ்டர் தேவ்…பிரசாத்துக்கு என்ன வேணுமாம். பிகாஸ் அப்பாயிண்மென்ட் இல்லாம அமராவை மீட்பண்ணுறது, இம்பாசிபில்” என்றாள்.
“அது என்ன பிரசாத் புதுசா, ஒன்னு தேவானு கூப்பிடு இல்லைனா மாமானு கூப்பிடு. நான் உனக்கு மாமா தானே” மாமா என்ற சொல்லை அழுத்தி உச்சரித்தவன்.
“அப்பாயிண்மெண்ட் இல்லாம அமராவை பார்க்க முடியாது தான். ஆனா மிஸஸ் அமரா தேவ் பிரசாத்தை பார்க்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” உதட்டை வாய்குள்ளே சுழற்றி அவன் சிரிக்க, பார்வையை வேறுபக்கமாக திருப்பிக்கொணடாள் அமரா.
“டீவேஸ் வேணும்னா கொடுத்துடுறேன்” என்றவளின் வார்த்தையில் கோபம் உச்சத்துக்கு ஏற, அவளின் தாடையைப் பற்றி தன் பக்கமாக திருப்பியவன்,
“சோ அந்த ஐடியா வேறு இருந்திச்சா, மிஸஸ் டூ மிஸ் வைட்டினு பேர மாத்தலாம்னு யோசனை போல” கண்களை அவளின் கண்களில் கலக்கவிட, அந்த விழிகளில் ‘ஏன்’ என்ற கேள்வி ஏகத்துக்கும் பரவியிருக்க, கேட்டான் பிரசாத்.
“ச்ச்” கண்டுபிடித்து விட்டான் என்று மனது மகிழ, மூளையோ இது வேண்டாம் அமரா, உனக்கு இந்த காதல் வேண்டவே வேண்டாம் என்று பேயாட்டம் ஆட, அவனின் வன்கரத்தின் அழுத்தம் வலிக்கவும் சற்று முனங்கினாள்.
“ப்ச், சாரி சாரி வலிக்குதா?” என்றவனாக அவன் கையை எடுக்க, “வலிக்குது இங்க இல்லை இங்க” தனது இதயத்தை சுட்டிக் காட்டினாள் மாது.
“உனக்கு மட்டுமில்லையே” என்றவன் அவளை மேலும் நெருங்க, அவளோ மரத்துடன் முதுகை ஒட்டிக் கொண்டு தலையைக் குனிந்தவள்.
“எப்படி எப்படி கண்டுபிடிச்ச” என கேட்கவும், “வேற யாரு உன் நொண்ணனும், ரப்பர் பேண்ட் மச்சானும் தான்” என்றான் பிரசாத்.
“ஹாஹா, ஐ ஹேவ் ஆன் எ கொஸ்டின்” என்றாள், “கோ ஹேட்” என்றவனிடம், “உன் இஷ்ட தெய்வம் என்ன?” என்றாள்.
“இல்லை உனக்கு தெரியாத என்ன? என் டீடைல்ஸ் எல்லாம் உன் ஃபிங்கர் பிரிண்டலனு, எனக்கு தெரியும்” கூறிவனிடம்,
“எஸ். வெல் அந்த முருகனே வந்து சொன்னாலும் கூட என் சின்னுவும், குட்டாவும் மூச்சுக் கூட விட்டு, என்னோட காதல் கதையை உன் கிட்ட சொல்லியிருக்க மாட்டாங்க. இப்பவும் சொல்றேன், நான் ஒருவேளை உன் கூட வாழ்ந்தாளும் இல்லைனாலும், அது என் விருப்பம்னு விடுவாங்களே தவிர.
உன் கிட்ட வந்து என் வாழ்கைகாக எதுவும் பேசியிருக்க மாட்டாங்க. ஏன்னா அமராவின் முடிவுகள்ல அவங்களுக்கு அத்தனை நம்பிக்கை. அமாரவின் ரகசியங்கல பகிரங்கபடுத்த விரும்பவே மாட்டாங்க. அந்த துரோகிங்க பத்திய தகவல கூட என் கிட்ட கேட்டுதான் உங்க கிட்ட சொன்னாங்க.
எனக்கு, எங்க பாண்டிங்க பத்தி, உனக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லைனு தோனுது தே..சாரி பிரசாத். உன்னால இதையாவது புரிஞ்சிக்க முடியும்னு நினைக்கிறேன்” நீளமாக அவள் பேசி முடிக்க,
“கரெக்ட் அமரா, ஒரு வேளை முன்ன இருந்த நடிகர் பிரசாத்க்கு இந்த விளக்கம் தேவைப்படலாம், ஆனா இப்போ உள்ளுக்குள்ள நிழல், நிஜம்னு ஒரே பெண்ணை இரண்டு முறை காதலிச்சு தோத்து போன தேவ்க்கு எந்த விளக்கமும் தேவையில்லை.
அதுக்கும் மேல இசைபிரியாவோட தம்பி தேவனுக்கு, எதுவுமே வேணாம். அவன், இப்போ தான் தன் சுற்றதையே உணர்ந்திருக்கான். இந்த பத்து நாளும் கண்ணுக்கு முன்ன இருக்குற உன்னை கையால தொட முடியாம நான் தவிச்சது பத்தாதா அமரா.
என் அக்கா மரணத்துக்கு உன் அளவுக்கு நியாயம் செய்யலனாலும் என்னால முடிஞ்சத செய்திருக்கேன் அமரா. ஒரு வேளை இத்தனை நாள் குருட்டு நம்பிக்கையில வாழ்ந்ததால உனக்கு உன் தேவாவ பிடிக்காம போயிடுச்சா?” அவன் விடாமல் பேசினான்.
ஆம், இன்றுடன் வேலு, நடராஜனைப் பற்றிய உண்மை வெளிவந்து பத்து நாட்களாகின்றது. அவர்கள் கண்முழித்து விட்டார்கள் என்று அறிந்த பிரசாத் கொதித்தெழ, இசைபிரபா மற்றும் மேகவியிடம் அவர்களின் முடிவைக் கேட்க,
அவர்களோ, ‘உன் இஷ்டம்’ என விட்டுவிட, அங்கு வந்து சேர்ந்தார் சிவகாமி, அதற்கு முதல் நாள் இவர்கள் மாடியில் நீள்விருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, பிரசாத்தை பார்க்க மேலே வந்த சிவகாமி மொத்தமாக அத்தனையும் கேட்டு விட்டார்.
“பிரசாத்து கண்ணா! நான் நேத்தே எல்லாத்தையும் கேட்டுட்டேன். நீங்க இசை, கவி புள்ளக்கிட்ட பேசினதுல எல்லா உண்மையும் எனக்கு தெரிஞ்சிட்டுபா. அந்த மிருகங்கல சும்மா விட்டுடாத சாமி. எம் பொண்ணு இசை… அந்த தாயிக்கு எப்படியெல்லாம் வலிச்சியிருக்கும். தலப்புள்ளையா பெத்து மாருள போட்டு தாலாட்டி வளத்தத, நான் செஞ்ச பாயசத்திலையே விசத்தை வைச்சி கொண்ணுப்புட்டானுவ பாவிபயளுக” அவர் அழுது வடிய அவரை சமாதானப் படுத்தவே, போதும் என ஆகிவிட்டது.
இசைபிரபா, மேகவி, சிவகாமி மூவருக்குள்ளும் இப்போது வெறுப்பு மாத்திரமே. பாசம் எதையும் செய்ய வைக்கும், உலகின் எல்லை வரை தோண்டி துளாவி தன் அன்பர்களுக்காக அமுதை வார்க்கும். ஆனால் அதில் துளி வெருப்பு வந்தாலே, மனது தலைகீழாய் செயற்படவைக்கும். இங்கும் அப்படியே, நம்பிக்கை உடைக்கப்பட வெறுப்பு தலை தூக்கியது.
பிரசாத் இந்தரிடமும் ஹஸ்வந்திடமும் தான் பங்குக்கு, தனது அக்காவின் மரணத்துக்கு நியாயம் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ள, அவர்களும் அமராவிடம் சொல்ல, அவள் விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள்.
மனநோயின் உச்ச கட்டத்தில் இருவரும் இருப்பதினால், மனநோய் வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டும் என வைத்தியர் பரிந்துரைக்க, பிரசாத் அவர்களை,
பாழடைந்த நிலக்கீழ் அறையொன்றை கொண்ட, அரசு பயன்பாட்டுக்கு உதவாது என ஒதுக்கிய மனநோய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விட்டிருந்தான். நடராஜனுக்கு தலையில் அடிபட்டது, அதிக ஆழமில்லை என கூறப்பட்டிருக்க, அவனுக்கு இது வாய்பாக அமைந்தது.
நிலக்கீழ் அரையானது, மிகவும் ஒடுங்கி குறுகியதாகவும், படுக்கைக்கு கூட வசதியில்லாமலிருந்து. மேலும் அப்பிரதேசமே, அமானுஸ்யத்துக்கு பெயர் போன பகுதியாகவிருக்க,
ஒரு நாளைக்கு தேவையான உணவை மட்டும் கொடுத்துவிட்டு அவர்களை அடைத்து வைத்துவிட்டு வந்திருந்தான்.
நடராஜனுக்கே வீழ்ந்ததில் அதிக அடி, உடம்பு முழுக்க கட்டு, அதற்கு மேலும் வேலு தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற, வெறி. வேலுவுக்கோ இசைபிரியாவை கொலை செய்ய முடியவில்லை என்ற ஆத்திரம், அதற்கு காரணம் அன்று நடராஜன் அவளைக் காப்பாற்றியது என்ற ஆதங்கம். மேலும் செலுத்தப்பட்ட மருந்தின் தாக்கத்தினால்,
உடல் முழுவதும் ஒருவகையான அரிப்பு பரவ, இன்னும் அமைராவை இசைபிரியா என்ற மாயையில் உளன்றவர்கள், தங்கள் மேனியையே தங்கள் நகங்களால் பிய்த்து இரத்தத்தை வரவைத்துக் கொண்டிருக்க,
பசி பிடுங்கித் திண்ணவும், பிரசாத் சொற்பமே என கொடுத்திருந்த கடைசி பாண் துண்டை எடுக்கும் போது இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. ஒரு துண்டு பாண்னை இருவரும் பிக்க, அது யார் கையிலும் சிக்காமல் தூளாக, ஆளுக்காள் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் கடித்து இழுத்து, விசர்பிடித்த நாயாக சண்டையிட்டனர்.
முடிவு, நடராஜனை வேலு கொலை செய்தது. பின் எத்தனை நேரம் தான் கடித்து குதரப்பட்ட உடம்புடன் அவனால் வாழமுடியும். வேலுவோ, “இசை உன்னை விடமாட்டேன்டீ” என்று கத்திகத்தி, கதவைத் தலையால் அடித்து திறக்க முயற்சித்தவனின் உடல் குருதியால் தொப்பயாக நனைய, ஈனமரணம் எய்த்தினான். மரணத்தின் போதும் பலி வெறி அடங்கா நெஞ்சன் வேலுவின் கடைசி நாளும் முடிந்தது.
சிவகாமி அம்மாவோ, சென்னை வீட்டிற்கு சென்றவர் அமராவிடம் தனது புடவையின் முந்தானையை விரித்து, “என் மகதேன் இல்லாம போயிட்டா, எம் போத்தி அமைராவையாச்சும் என்கூட அனுப்பி வைச்சிரு தாயி. உன்னை என்கூட வானு கூப்பிடுதே உரிமை எனக்கு இல்ல தாயி. ஏன்னா இப்போ அது உம்ம வீடு” என அமராவிடம் அழ,
என்னசெய்வதாம் அவள், ஒரே ஒரு நொடி சிந்தித்தவள், சரி என தன் அக்காவையும் தூக்கிகொடுத்தாள். இதுவும் ஒருவகை வேள்விதான், அற்ப்பணிப்பு எனும் பெயர் கொண்ட வேள்வி. ஆனால் அமரா பிரசாத்தின் வீட்டில் சென்று தங்கிக் கொள்ளவில்லை.
அமைராவை பார்பதற்காக மட்டுமே சென்று வந்தவள். இசை, கவியுடன் கூட ஒட்டுதலாக பேசியவள், பிரசாத்தின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. நேற்று எல்லாம் முடிந்து ஒன்பதாவது நாள் பிரசாத்தின் வீட்டுக்கு சென்றாள் அவள். சின்னு, குட்டா மற்றும் வீட்டின் அனைவர் முன்னிலையிலும்,
தான் மீண்டும் டெல்லிக்கு போகபோவதாகவும், திருப்பி வரமாட்டேன் எனவும் கூறியவள், அமைராவை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூற, இந்தர், ஹஸ்வந் எதுவும் கூறவில்லை. ‘எப்போதும் போல அவள் விருப்பமே, அவர்களின் விருப்பம்’ என விட்டுவிட,
பெண்கள் எடுத்துக் கூறியும் கேட்டுக்கொள்ளாமல்,
“அமைராக்குட்டி, அம்முமாட தங்கப் பட்டு. அம்முமா ஊருக்குப் போறேனாம். பாப்பா சமத்தா இருக்கனுமாம்” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டவள், விடுவிடு வென வெளியேற, பிரசாத் அவளையே வெறித்துக் கொண்டிருக்க, இந்தரும், ஹஸ்வந்தும் அவனின் தோளில் தட்டிக் கொடுத்தனர்.
இன்றோ, சூறாவளியாய் வண்டியை ஓட்டியவன் தென்றலாக, அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.
“எங்க அம்மாவுக்கு பிடிச்ச தேவன எனக்கும் பிடிக்கும். ஆனா எனக்கு பிடிச்ச தேவா நீ கிடையாதே. நான் காதலிச்சது நடிகன் தேவ் பிரசாத்தை. என் மாமா தேவனைக் கிடையாது” விரக்தியாக அவள் சிரிக்க,
“அமரா பிளீஸ்” கெஞ்சலாக அவன் பேசவர, “நான் காதலிச்ச தேவா, என்ன கையில வைச்சி தாங்குவான். நான் பார்க்காத தொட்டு உணராத, என் அப்பா அம்மாவ அவனுல உணருவன்னு நினைச்சேன். பட்” மூச்சை இழுத்து விட்டவள்.
“நமக்குள்ள குட்டியா ஒரு கணக்கு இருக்கு ஃபர்ஸ்ட் அதை முடிச்சிட்டு நெக்ஸ்ட் பேசலாம். பிகாஸ் அமராக்கு எப்போவும் பெண்டிங்ல கணக்குகள மெயின்டெயின் பண்ணினா பிடிக்காது” முடித்தவள்,
“வன், டூ, த்ரீ” என எண்ணிக் கொண்டு, பிரசாத் அடித்த அடிகளைத் திரும்பிக் காெடுத்தவள், “இது நான் காண்சியஸ் இல்லாம இருக்கும் போது அடிச்சது. யாருக்கிட்ட அமராடா” என கடைசி அடியையும் அடித்து முடிக்க,
மென்மையான பெண்மை அடித்தாலும் வலிக்கும் என்பதை அறிந்து கொண்ட பிரசாத், தனது வலது கன்னத்தை தடவியவாரு, “பேக் டூ ஃபார்ம் போல, ஆனா நீ அடிச்சாலும் வலிக்குது, நீ சிரிச்சாலும் வலிக்குது” என்றவன் இதயத்தையும் நீவி விட்டான்.
“என்னோட லவ் ஸ்டோரில ஹீரோ நீ தான். ஆனா இந்த கதை எல்லாம் நான் சின்னு குட்டாக்கிட்ட சொன்னது கிடையாது. ஆனா அவங்களுக்கு தெரிஞ்சும் என் கிட்ட கேட்டதும் கிடையாது. அவங்களுக்கு இது தெரியும்னு எனக்கும் தெரியும். ஆனா நானும் காட்டிக் கிட்டது கிடையாது.
ஏன்னா, இட் இஸ் மேர்சி. இந்த கதையில சைட் ரோல் இரண்டு பேருதான். சோ உன் ஃபிரண்ட் ருத்ரேஷ் அபியுக்தாவ மீட் பண்ணியிருக்கான். சரிதானே?” மிகத்துள்ளியமாக கணித்தவள், அதை அப்படியே கேட்டும் இருந்தாள்.
“எப்படி! இதுதான் பிஸ்னஸ் வுமன் அமராவோட மைண்ட்ல, பட் நான்” அவன் ஏதோ கூற வர, “என்னைப் போயி கேமராவுக்கு முன்னுக்கு நடிக்க சொன்னா அது என்னால சுத்தமா முடியாது. நம்மல நாமே கம்பயார் பண்ணி எந்த யூஸ்ஸும் கிடையாதுல, நீ வேற நான் வேற தான். ஆனா நீயும் நானும் ஒன்னா இருக்கனும்னு ஆசைப்பட்டேன்” கூறி முடித்தாள் அமரா.
“என்ன சொன்னாலும், நீ என் கண்ணுக்கு வித்தியாசாம புதுசு புதுசா தெரியுற” சிரிக்கவும், “ஐ ஸ்பெசலிஸ்ட் டாக்டர் யாருட்டயும் காட்டுங்க நடிகரே!” அவள் சத்தமாக சிரித்தாள்.
“இரண்டு நாளுக்கு முதல், ருத்ரேஷ் கால் பண்ணியிருந்தான். புராஜெக்ட் விசயமா, ஃபாரிங் டூர் போயிருந்தானாம். அபியுத்தா இருக்குற ஏரியா சைட் ஏதோ மாலுக்கு சாப்பிங் போகும் போது அவள மீட் பண்ணியிருக்கான். அந்த தேட்டர்ல யாருக்காக மொத்த டிக்கட்டையும் வாங்கினனு கேட்கவும். அவளும் அதுதான் உங்க ஃபிரண்ட் என் ஃபிரண்டையே கல்யாணம் பண்ணிட்டாரேனு சொல்லிடுட்டு அது பாட்டுக்கு போயிடிச்சாம்னு சொன்னான்” என்றான் பிரசாத்.
“சோ, அதனால தான் பிடிக்காத பொண்டாட்டி இன்னைக்கு பிடிச்ச காதலியாகி போயிட்டா போல” என்றவள், ஐந்தரை வருடத்துக்கு முன்னான தன் கல்லூரி நாட்களை மீட்டிப்பார்த்தாள்.
ஐந்தரை வருடங்களுக்கு முன், குதியுயர்ந்த பாதணியும், தன் பிரத்தியேக உடையான ஷாட்ஸ் மற்றும் டீசெர்டுடன், உச்சியில் கருகரு முடிகளை சுருட்டி பந்து போல் கொண்டையிட்டு கொண்டு மும்பை திரையரங்கில் அமர்ந்திருந்த, அமராவின் அருகில் சோளப்பொறியை உண்டு கொண்டிருந்தாள் அவளின் நண்பி அபியுக்தா.
அபியுக்தா மற்றும் அமரா இருவரும் டெல்லியில் ஐஐபிஎம்மில் கற்றுக் கொண்டிருந்தனர். அபி தமிழ்நாட்டின் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். அதிக வசதி வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்தாலும் படிப்பை மட்டும் நோக்காக கொண்டு ஊர் விட்டு வந்தவளை, அமராவுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இருவரும் உற்ற தோழிகளாக மாற, இப்போது செயற்திட்டம் ஒன்றுக்காக இரண்டு மாதத்திற்கு மும்பை வந்திருந்தனர். கல்லூரியில் எப்போதாவது திரைப்படம் பற்றி ஏதாவது கூறினால், அவள் ஆங்கிலம், ஹிந்தி ஏன் சீனா மொழி படங்களைக் கூட பார்த்திருப்பதாக கூறிய அமரா தமிழ் படங்களைப் பற்றி பேசினால் அவளின் அறிவு பூஜ்ஜியமே.
மும்பை வந்ததும் வாராததுமாக, “அமரா அடியேய்! இன்னைக்கு என் கிரஷ் தேவ் பிரசாத் மூவி ரிலீஸ்டீ. நாளைக்கு பிராஜக்ட பார்த்துக்கலாம். வா வா ஃபர்ட்ஸ்டே ஃபர்ஸ்ட் சோவுக்கு போகலாம்” என அபியுக்தா வழுக்கட்டாயமா அமராவை அழைத்துச் செல்ல,
தேவ் பிரசாத் அந்த காலகட்டத்தில் தான் சற்று மக்கள் மத்தியில் பிரசித்தி பெற ஆரம்பித்திருந்தான். சற்று சனநெரிசலில் அரங்கில் நுழைந்து, ஆசனத்தில் அமர்ந்தவுடனே, அபியுக்தா சோளப் பொறிகளை உண்டு கொண்டிருந்தாள்.
“ஏய் என்னடீ உன் கிரஷ்ஷ காணோம்” என அமரா கேட்ட அடுத்த நொடி திரைப்படம் ஆரம்பித்திருந்தது. “என் மூஞ்சிலயாடீ ஸ்கிரீன் இருக்கு அங்க பாரு” என அபியுக்தா கூற, திரும்பிய அமராவின் இதயம் அவளிடமில்லை.
வெளிர் நீல நிற சட்டையில் உடற்கட்டுக்கள், வரிவரியாக தெரிய நான்கு பேரைத் துரத்தி ஒடிக் கொண்டிருந்த பிரசாத்தை பார்த்தவள் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்து, படம் முடிந்த பின்பும் மனதுக்குள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாளே, ‘நான் அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்’ என பிடிவாதமாய் நிற்க, “உனக்கு அவன் பொருத்தமும் கிடையாது. நீ அவனுக்கு பொருத்தமும் கிடையாது. வேணாம். உங்களுக்கு தோற்றத்தில பொருத்தம் இருக்கலாம், ஆனா வாழ்கை முறை பொறுந்தாதுடீ” என அபியுக்தா எடுத்துக் கூறியும் எதுவும் அவள் காதில் ஏறவில்லை.
காதல் சாத்தான் அமராவை ஆட்டிவைக்க, அவளது பலத்தை பயன்படுத்தி, அவனது முகவரியைக் கண்டுபிடித்தாள். அவன் எங்கு செல்கிறான், அவனின் நாளந்த நடவடிக்கைகள் ஒன்று விடமாமல் கண்கானித்தாள்.
அபியுக்தாவிடம் பிடிவாதம் பிடித்து, அவளிடமும் தனது காதலுக்கு ஒருவகையாக உதவிகளைப் பெறத் தொடங்கியவள், படப்பிடிப்பிற்காக மும்பையில் பிரசாத் தங்கியிருப்பதை அறிந்து, தினமும் காலையில் வெள்ளை நிர ரோஜா மலர் செண்டுகளை வாங்கி, அதில் ‘மிஸ் வைட்டி’ என எழுதி அவனது முகவரிக்கு அனுப்பி வைக்க தொடங்கியவள்,
ஒரு நாள் பிரசாத்தை நேரில் சந்திக்க போகிறேன் என அபியுக்தாவிடம் வந்து நின்றாள். “சரிடீ அவன் இன்னைக்கு அந்த மாலுக்கு வருவான் ஒகே. பட் நீ இப்படி டீஷட், ஷட்ஸ் போட்டுடா போய் நிப்ப. அவரு சொந்த ஊரு கிரமாத்துப் பக்கம்டீ. என்னதான் பசங்களுக்கு மாடன் ட்ரெஸ் போட்ட பெண்ணுங்கள பிடிச்சாலும், தாவணி கட்டின பொண்ணைத் தான் அதிகமா ரசிப்பாங்க. வா இன்னைக்காவது, வாழ்கையில முதல் தடவ சுடிதார் போட்டுக்கோ” என்றவள்,
அமராவிற்கு, அனார்கலி வகையைச் சார்ந்த சுடிதாரை அணிவித்து அவளின் நீண்ட கருங்கூந்தளை பின்னலாக கட்டியவள், லட்சனமான தமிழ் பெண்ணாக மாற்றியிருந்தாள்.
ஆனால், பிரசாத்தை தூரத்திலிருந்து பார்த்தவள், தனது வானவில் நிற துப்பட்டாவாள் முகத்தை மூடிவிட்டு, அவன் அமர்திருந்த மேசையில், ரோஜா பூங்கொத்தை வைத்தவள், அவன் அவளை முழுமையாக பார்க்கும் முன்னமே, மறுபுறமிருந்த படிக்கட்டின் வழியே இறங்கி ஓடிவிட்டாள்.
பின் மற்றுமொறு நாள், படப்பிடிப்பிற்காக இருசக்கர வாகன வேகவோட்டப் பயிற்சியிலிருக்கும் போது, அவனை விட வேகமாக வண்டியை ஓட்டி தடையைத் தாண்டியவள், முகக்கவசத்தை கழட்டாமல், “லூசர்” என சைகையிட்டு சென்றிருந்தாள்.
நாட்கள் நகர்ந்து இரண்டு மாதங்களை அடைந்து, மும்பையை விட்டு செல்ல வேண்டிய நாளன்று, பிரசாத்தின் படத்திற்கான முழு அரங்கின் நுழைவுச் சீட்டையும் வாங்கி, தனியாக அமர்ந்து படம் பார்த்திருக்க, அங்கு பிரசாத்தின் நண்பன் ருத்ரேஷ், அப்போது மும்பையில் தான் அவனும் வேலைபார்த்துக் கொண்டு பிரசாத்துடன் தான் தங்கியிருந்தான்.
அவனும் படத்துக்கான நுழைவுச்சீட்டு வாங்க வந்திருக்க, முழுச் சீட்டும் ஒரு பெண் வாங்கி விட்டாள் என உரிமையாளர் கூறிச் சென்றிருந்தார். உடனே தினமும் ரோஜா பூக்களை அனுப்பும் பெண்ணை தானும் பார்க்க வேண்டும் என பிரசாத் கூறியிருந்தது, நினைவில் வந்ததும்.
அவன் சென்று விசாரிக்க, உரிமையாளரோ அபியுக்தாவின் உருவத்தை தான் கண்காணிப்புக் காமிரா பதிவில் காட்டினான். ருத்ரேஷ் அவளைத் தேடி அலைய அவள் அவன் கைகளில் சிக்கவேயில்லை. அதே நேரம் பிரசாத்திடம் அவன் அபியுக்தாவின் புகைப்படத்தை காட்ட, பிரசாத்தோ,
நிச்சயமாக இது அவள் கிடையாது. அவளின் உயரம் எனது உயரத்துக்கு சமமாகவிருக்கும் என கூறி மறுத்தும் விட்டான். அதன் பின்னும் டெல்லிக்குச் சென்ற அமரா, ஏதாவது பரிசுகளை வாங்கி மும்பாயில் அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அனுப்புவாள். ஒரு நாள், தன் கணக்கிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இலட்சங்களை எடுத்து டுக்காட்டி இருசக்கர வண்டியையே அவனுக்கு வாங்கி பரிசாக அனுப்பி வைத்திருந்தாள்.
நாட்கள் அவ்வாறு நகரவும் தான், அவளது தாத்தா இறந்ததும், பின் தேவ் பிரசாத் அதாவது தான் காதலித்த தேவாவின் குடும்பம் தான் தன் பெற்றோறை கொலை செய்தவர்கள் என அறிந்துகொண்டதும் நிகழ்ந்தது.
“உப், இதுதான் இந்த அமராவோட அமரகாவியம். எப்படியிருக்கு” என்று பிரசாத்தின் விழியைப் பார்க்க, அவன் கண் சிவந்து போய்க்கிடந்தது.
“ஆக எதுக்குமே தன் சுயத்தை இழக்காத அமரா, தான் சுயம்புவாக வாழக்காரணாகவிருந்த தன்னோட பெத்தவங்களுக்காக காதலை இழந்திருக்கா ரைட்” கரகரத்த குரலில் அவன் கேட்க,
“காதல்னாலே சுயத்தை இழக்குறது தான் தேவா. அபி சொல்லுவா, உன் ஸ்டேடஸ்கு நடிகர் எல்லாம் சரி வராதுடீனு. பட் எனக்கு அந்த நடிகரை ரொம்ப பிடிச்சி இருந்திச்சு..என்ன பண்ணட்டும் நான்?” அவள் நிறுத்த,
“எனக்கு மட்டும் என்னவாம். முகமே தெரியாத ஒரு பெண்னை ஐந்து வருஷமா தேடினேன். எங்க சூட்டிங் போனாலும் யாரைப் பார்த்தாலும் அதுல உன்னைத் தேடியிருக்கேன். ருத்ரேஷ் எத்தனையோ வாட்டி செல்லியிருக்கான் வேணாம் வேணாம்னு..ம்ஹூம் கேட்கலயே.
முதல்ல நீ ரோஸ் அனுப்பும் போது சாதாரணமாக கடக்கத்தான் தோனிச்சு, ஆனா நாள் ஆக ஆக, ‘மிஸ் வைட்டி’னு உன் பேரை படிக்கவே காலையில சீக்கிரம் எழுந்திருச்சி வாசலயே பாத்திருப்பேன்.” அவன் இதழ் மகிழ்ந்தான்.
“இருபது வயசுல ஒருத்தன பார்த்து, அவனுக்கு பின்னால நாய்குட்டி மாதிரி திரிவேன்னு நான் எதிர்பார்த்ததே கிடையாது. பட் நடந்திச்சு, எனக்கு எப்போ உண்மை தெரிஞ்சிச்சோ அப்போ போய், வேணும்னே பைக்க விட்டு மோதி ஏக்சிடன்ட் பண்ணினேன். அப்புறம் வாழ்வா சாவா இல்லை பழியா மன்னிபானு ஒரே குழப்பம். கடைசியா பழிதான்னு என் காதலை மூடி மறைக்க ஆசைப்பட்டேன்.” என்றாள் அமரா.
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், அமரா எனும் உன்னோட நிஜத்துல என்னோட வைட்டியை அடிக்கடி தேடினேன். உன் உயரத்தை பார்த்து சந்தேகம் வந்திச்சு. ஆனா நீ ரூடா நடக்கவும் நீயும் அவளும் வேறுனு தோனிச்சு. உன்னோட பிரௌன் ஹெயார், இந்த புருவத்துல இருக்குற தழும்புனு ஆயிரம் குழப்பம்.
அந்த அமைரா டாட்டு கூட உன் கையில புதுசா இருந்திச்சு. நீ மால்ல பொக்கே வைத்துட்டு ஓடும் போது உன் கையில அந்த டேட்டோ கிடையாது. அப்புறம் பைக்கே பிடிக்காதுனு வேறு சொன்ன.” பிரசாத் வருத்தமாக முகத்தை சுருக்கினான்.
“இந்த தழும்பு, அந்த எக்சிடென்க்கு பின்னாடி தான் வந்திச்சு, அதே நேரம் முடியை ஃபுல்லா மொட்டை போட்டுத் தான் ரீட்மெண்ட் பண்ணாங்க. சோ முடி குட்டையா மாறிச்சு. நானும் சேன்ஜ் ஆக இருக்கட்டும்னு, கலர் பண்ணிட்டேன். பைக் பிடிக்காதுனு சொல்லலபா, எனக்கு பைக்ல யாரு கூடவும் போக பிடிக்காதுனு உண்மையைத்தான் சொன்னேன்.டேட்டோ, உன்னை மீட் பண்ணினதுக்கு அப்பறம் தான் போட்டுக்கிட்டேன் தேவா.
உன் பேரைக் கூட டேட்டோ போட்டிருக்கேன். நம்ம கல்யாணத்துக்கு பிறகு, எனக்குள்ளவே ஒரு பயம். உன்னை பக்கத்துல பார்த்தா கண்டிப்பா நான் அமராவா இருக்க மாட்டேன், உன்னோட வைட்டியா மாறிடுவேன்னு பயம். அதனால தான் நீ நெருங்கினா நான் ஓடி விலகிப் போனேன்.” அமராவின் முகத்தில் காதல் ரசம் சொட்டிக்கொள்ள ஆரம்பித்தது.
“உன்ன நெருங்கும் போது எல்லாம் நீ தான் என்னோட வைட்டினு மனசு கிடந்து துடிக்கும். அப்போலாம் என்னோட கட்டுப்பாட்டையும் மீறி உன்னை ரசிச்சு பார்த்திருக்கேன். டாட்டுவா என்னோட நேம்மையா? நான் பார்த்தது கிடையாதே காட்டு காட்டு” ஆர்வத்தில் அவளது மேணியில் அவன் பார்வையை மேயவிட்டான்.
அமராவோ “அதுலாம் காட்ட முடியாது நடிகரே” என்றவள், தனது இடது மார்பின் மீது கையை வைத்துக் கொள்ள, பிரசாத்தின் பார்வை லஜ்ஜையாக மாறியது.
“அப்படி பார்க்காத தேவா” என அவள் சிரிக்க, “இது படத்துட டயலாக்மா” என்று அவனும் சிரிப்பினில் இணைந்து கொண்டான். பின் உணர்ந்தவனாக, “ஐம் சாரி அமரா. உன்னை அதிகமா ஹேர்ட் பண்ணி பேசியிருக்கேன்ல. தப்பு மனிச்சிருனு சொல்லக் கூட தகுதியில்லாதவன்ல நான்” என வருத்தமாக கேட்கவும்,
“இங்க சரி தப்புனு எதுவுமே இல்லை தேவா. உனக்கு சரினா அது இன்னொருத்தனுக்கு தப்பு. அடுத்தவங்களுக்கா ஏன் நம்ம சிந்தனைங்கல மாத்திக்கனும். என்னோடது ஒரு வேள்வினா, அதுல சில வஸ்துக்கல போட்டு எரிக்க வேண்டியிருந்திச்சு. அதனால அவங்களை பழி தீத்துட்டேன். இன்னைக்கு அவங்க உயிரோட இல்லை, எதுக்கு பழசு எல்லாம்.
உனக்கு எந்த கில்டிநெஸ்ஸும் தேவையே இல்லை தேவா. மே பீ இந்த உண்மை எனக்கு முன்னாடி உனக்கு தெரிஞ்சி இருந்தா, நீயும் உன் அக்காவுடைய மரணத்துக்கு பழி தீர்த்து தான் இருப்பாய்” அவள் பேச, குறுக்கிட்டவனாக,
“இன்னும் கொஞ்சநாள் உயிரோட வைச்சி தன்டணை கொடுக்கனும்னு ஆசைப்பட்டேன்” என்றான் பிரசாத்.
“ப்ச், ஒரு மெடிசின் சேல்ஸ்க்கு போக மினிமம், இஃப் எமர்ஜன்சினா ஒரு வருஷமாச்சும் எடுக்கும். ஆனா அவங்களுக்கு கொடுத்தது. பிரடியூஸ் பண்ணி டெஸ்டிங் கூட பார்க்காத மருந்து. நைண்டி பேர்சன்ட் சக்சஸ் ரேட் இருக்கும் போல. நான் இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாள் எக்ஸ்ட்ரா எதிர்பார்த்தேன்” உதட்டை பிதுக்கினாள் அவள்.
“பிஸ்னஸ் லேடிதான்னு அடிக்கடி புரூப் பண்றிங்க மேடம்” என்க, “ஆமா இந்த பைக், இது நான் வாங்கி கொடுத்தது தானே? உன் வீட்டுக்கு முதல் முதலா வரும் போது இதைத் தேடினேன்” என்றாள்.
“வீட்டுல வைக்கலடா, உன் நியாபகமா வேறு ஒரு பிலேஸ்ல வைச்சிருந்தேன். மெயின்டையினிங் பர்பஸ் இருக்குதே” என்றான் அவன்.
“தென்?” அவள் கேட்க, “ஏதும் கேட்கனுமா?” என்றவனிடம், “நான் தான் உன் வைட்டினு தெரிஞ்சதால தான் வந்து பேசரியா தேவோ?” ஏக்கமாக அமரா ஏறிட்டாள்.
“அன்னைக்கு உண்மையை சொல்லும் போது நீ லூசர்னு சொன்னியே அப்போவே எனக்கு, என்னோட வைட்டி நீதான்னு தெரியும். பட் உன்கிட்ட வந்து பேச தயக்கமா இருந்திச்சு. நேத்து நீ ஊருக்கு போறேன்னு வந்து நின்னப்போ சுருக் என்ற வலி நெஞ்சில பாரம் ஏறினது போல,
எனக்கு சரியா தெரியல, எனக்கு நிஜமான நீயும் வேணும் நிழலான என் வைட்டியும் வேணும் ஆக மொத்தம் எனக்கு மிஸ்ஸஸ் அமரா தேவ் பிரசாத் கூட நான் கடைசி வர வாழனும். கடைசியா அவ முகத்தைப் பார்த்துட்டே சாகனும், வேள்வியை அர்பணிப்புனு சொல்லுவியே! அந்த காதல் வேள்விக்குள்ள நானா வீழ்ந்துடுறேன். என்னையும் என்காதலையும், உன் வேள்வியில் எரிச்சி நம்ம காதல்னு மொத்தமா ஒன்னை உருவாக்கலாம். காந்தர்வமாக வாழ்ந்து எரிபுறம் கூட போகலாம்”,
துளிக் கண்ணீர், துளிக்காதல் இரண்டையும் ஒன்றாய் குழைத்து, வார்தையாய் வடித்தவன், கைகளை நீட்ட அவனின் விரலின் நுணியை இருக்கப் பிடித்துக் கொண்ட அமரா, அவளின் யுத்த வேள்வியில் கயவரை வீழ்த்தி, காதல் வேள்வியில் தானும் வீழ்ந்து, தீயியாயினும் ஜோதியாய் ஜொலிக்கிறாள்.
நான்கு மாதங்களுக்கு பிறகு,
மாலைச் சூரியன் போர்வையிழுத்து தன்னை மூடிக்கொள்ள, சந்திரன் வானத்தில் தனிமையில் காய்ந்து கொண்டிருந்தான்.
டெல்லியின் இரவுக் காலநிலை குளிர்மையில் குளிர்ந்திருக்க, அமராவின் வீட்டுத் தோட்டத்தில், மரக் குச்சிகளை ஒன்றாக அடுக்கி நெருப்பு மூட்டியிருக்க, அதனை சுற்றி விரிக்கப்பட்டிருந்த கம்பளி விரிப்பில்,
ஹஸ்வந்தும் இசையும் அணைத்தபடி அமர்ந்திருக்க, மேகவியும், இந்தரும் மற்றைய பக்கம் எதையோ தீவிரமாக படித்துக் கொண்டிருந்தனர். அமரா கால்களை குறுக்காக மடித்துக் கட்டிக் கொண்டு சத்தமாக சிரித்தாள்.
“குட்டா வட் டிட் யூ ரீட்? மேகம் உன் கண்ணுக்கு மோகம்னு தெரியுதா? கவி விடாத அவனை நல்லா தமிழ் படிக்க கத்துக் கொடுடா. அவன் சரியா வாசிக்கும் வரைக்கும் விடாத” என்று சிரித்தவள்,
“சின்னு… க்கூம்… மிஸ்டர் சின்னு கோட்ல கேஸ் எப்படி போகுதாம்” என்று இசையையும், ஹஸ்வந்தையும் வம்புக்கு இழுத்தாள்.
கடந்த நான்கு மாதங்களில், எல்லோரும் டெல்லிக்கு குடி பெயர்ந்து விட்டனர். பழையதை மறக்க புதிய இடம் நாடியிருக்க, அமைராவினாலும் சென்னையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இங்கே அமரா, இந்தர் தனது வழக்கமான நிறுவன பணியைத் தொடர, இசைக்கு வசுந்தராதேவி வேலைபார்க்கும் வைத்தியசாலையில் வேளையும் கிடைக்க, தன் மேற்படிப்பையும் ஒரு கல்லூரியில் தொடர்கிறாள்.
மேகவியும் அவ்வாரே இங்கேயே படிப்பைத் தொடர, அவளை நடனபள்ளியொன்றில் பகுதி நேர ஆசிரியையாகா சேர்த்து விட்டிருந்தனர். ஹஸ்வந்தும் மிக குறுகிய காலத்தில் தனது கட்சிக்காரன் குற்றமற்றவன் என நிரூபித்து வழக்கில் வெற்றி பெற்றவன், தற்போது டெல்லி உயர் நீதி மன்றத்திலே தன் பணியைத் தொடர்கிறான்.
தேவ் பிரசாத்துக்கும் இப்போது டெல்லி வாசமே. வரலாற்று படம் என்பதால் டெல்லியில் தான் படப்படிப்புத் தளம் அமைந்துள்ளதால் அவனுக்கும் வசதியாய் போய்விட்டது. மேலும் இப்படத்திற்கு முதலீடு அமராதான் போடுகிறாள் எனத் தெரிந்ததும் மீண்டும் நன்றிப் படலமொன்று உதயமானது. அதை அமரா அடக்கும் விதமாக அடக்கினாள்.
இன்று ஏதோ, எல்லோரும் கூடி விருந்து வைக்குறோம் என்ற பேர்வழியில், கோழியினை நெருப்பில் பொசுக்கி, வகைவகையான துணை உணவுகளை சமைத்து பெரியவர்களுடன் உண்டு முடிக்க, அவர்கள் அனைவரும் தூங்க செல்ல, இளந்தாரிகள் கதையடித்துக் கொண்டிருந்தனர்.
பிரசாத்துடன் இப்போது அமைரா நன்றாக ஒட்டிக் கொண்டாள், “மாமா; மாமா” என அவனைக் கொஞ்சுவதும் விளையாடுவதும் என்றிருக்க, அவனும் பாசத்தை பிழிந்து கொண்டிருக்கிறான். அதே நேரம் ஆண்கள் மூவரும் ‘மச்சான்’ என தோளில் கைபோடும் அளவு உறவாகிவிட,
அமரா, இசை, கவியும் கூட நன்கு நட்ப்பாகி விட்டனர். அதிலும் அமரா அவர்களிருவரையும் கவனித்துக் கொள்ளும் விதம், மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். கடைகளுக்குச் சென்று தனக்காக எதுவும் வாங்கிக் கொள்ளாவிட்டாளும் இருவருக்கும் ஏதும் பொருளை வாங்கிக் கொடுத்துவிடுவாள், வாரவிடுமுறைகளில் இசை, கவியை அழைத்துக் கொண்டு ஊரையும் சுற்றிவர ஆரம்பித்திருந்தாள்.
அதே நேரம், அமரா, இந்தர், ஹஸ்வந்துக்கு இடையிலான உறவில் யாருமே மூக்கை நுழைப்பதில்லை. மொத்தமாக பின்னிப் பினைந்த கொடியாக அவர்களின் வாழ்வு சென்று கொண்டிருக்கிறது. இப்போது அமைராவைத் தூங்க வைத்துவிட்டு வந்த, பிரசாத்,
நேரே சென்று அமராவின் தோளைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டு அமர்ந்து, “உன் ரப்பர் பேண்ட் அத்தை மகன், எப்போ தமிழ் வாசிச்சு எப்போ பாட்டுப்படிச்சி..” சலித்தவன், “வேணும்னா நான் பாடவா” என அவளிடம் கேட்க,
“என்னபாட்டாம்” என்று புருவத்தை மேலே உயர்த்த,
அவளின் காதின் அருகில் சென்று இரகசிய குரலில், “அடிக்குது குளிரு….” என ராகம் மீட்ட, அவனின் கைகளில் செல்லமாக அடித்தாள் அமரா.
“இந்துமா குளிருதுடா” என்ற ஹஸ்வந்தை எல்லோரும் கேள்வியாக பார்க்க, “எனக்கு இல்லை என் பாப்பாக்கு” என்று இசையின் வயிற்றில் கைவைக்க, “இப்போவே இப்படியா? குழந்தை பிறந்தா என்ன அளும்பு பண்ண போறானா?” என்று இசை தன் தலையில் சின்னதாக தட்டிக் கொண்டாள்.
“இன்னைக்கு தழில் பாட்டுத்தான்” என்ற இந்தர் பாட ஆரம்பித்தான்,
“பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி”
என பாடிய இந்தர் மேகவியை நோக்கி ஒற்றை புருவத்தை உயர்த்தி, கண்சிமிட்டி சிரிக்கவும்,
“இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே”
என்று கவி பாடலை முடிக்க, “ஓஹ்ஹோ…” என மற்றவர் அனைவரும் கைதட்டி சிரிக்க,
அம் மூன்று ஜோடிகளுக்கும் முன்னால் சுடர்விட்ட நெருப்பும் தனக்குள்ளே சிலிர்த்துக் கொண்டது. காதலில் கனிந்த நெஞ்சங்களை ரசித்து, மதிமுகத்தான் மதி மயங்கி விசும்பினில் உலாவினான்.
இனி எந்நாளும், இந்தரின் மேகம்; சிந்திச், சிவந்து, வெட்கி, மருகி, துணிந்து துளித்து அவனுடன் நடக்கும். தேவனின் தேவியோ; நிமிர்ந்து, எழுந்து, அழுத்தி, குழைந்து காவியாகும். ஹஸ்வந்தின் இசையோ; ராகமாக, ஸ்வரமாக, பல்லவியாக, அவனுக்குள்ளே சரணமாகும்.
தீயின்றிப் புகையின்றி,
ஓர் வேள்வி அவனைத் தகிக்க;
அவள் கைகள் கோர்த்து,
காதலெனும் எரிப்புறம் வீழ்ந்தான் அவன்….
அவளிடம் அவனையே வீழ்திவிட்டாள்….
சுபம்…