உனக்காக ஏதும் செய்வேன் – 19.1

1646183255757-d1541661

உனக்காக ஏதும் செய்வேன் – 19.1

அத்தியாயம் – 19.1

 

தயானந்தன் – சீதாலட்சுமி தம்பதியரின் பிள்ளைகள் முறையே அகத்தியன் மற்றும் மகா லட்சுமி. அகதியனுக்கும் மகாவிற்கும் வயது வித்தியாசம் ஏழு.

 

சிறு வயதில் துறுதுறுவென பேசி திரிந்தவன்தான் அகத்தியன். அப்பாவை விட அவனுக்கு அம்மாவிடம் அதிக ஒட்டுதல் இருந்தது.

 

அவனுக்கு சாப்பிட, விளையாட, பள்ளி விட்டு திரும்பிய பின் என்ன நடந்தது எனக்கூற, தூங்க என அனைத்திற்கும் அம்மா வேண்டும். குழந்தையாக இருக்கும்போது நடப்பது தானே! எப்போதும் அன்னை பின்னே வால் போல் சுற்றி கொண்டிருப்பான்.

 

தயானந்தன் ஒரு தனியார் அலுவக்கத்தில் பொறுப்பான பதவியில் பணி புரிந்து வந்தார்.

 

சீதாலாட்சுமியை பற்றி கூறவேண்டுமானால் மிகவும் அன்பான பெண்மணி. கணவன், குழந்தையே உலகம் என வாழ்பவர்.

 

திருமணத்திற்கு பன்னிரண்டு வருடங்கள் பின் இரண்டாவது முறை கருத்தருத்திருந்ததால் அவருடைய உடல்நிலை மனதில் வைத்து தயானந்தன் மிகவும் தயங்க, அவரை தேற்றியவர் உடல்நிலை சற்று பின் தங்கினாலும் கர்ப்பவதியாக உள்ளம் பூரிக்க வலம் வந்தார்.

 

மகனிடம், “உன் கூட விளையாட தம்பிபாப்பா வர போகுது” எனக் கூற, அதைக்கேட்டு குஷியானவன்,

அடிக்கடி அவர் வயிற்றை தொட்டு பார்ப்பது, பாப்பாவிடம் பேசுகிறேன் என,

“என் கூட விளையாடனும்”

“நான் சொல்ற பேச்சை கேக்கணும்”

என சொல்லிக்கொண்டு அவனுமே உடன் பிறப்பின் வரவிற்கு ஆவலாக காத்திருந்தான். ஆனால் அவரின் உடல் நிலை தான் கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது.

 

அகத்தியனே அவர்களுக்கு திருமணம் ஆன பின் ஐந்து வருடங்கள் கழித்து வேண்டாத தெய்வங்கள் எல்லாம் வேண்டி பிறந்தவன் தான்.

 

எனவே இப்போது அவர் கர்ப்பமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்த போதும், வருடங்கள் கழித்து கர்ப்பம் என்பதால் ஒரு கணவனாக தன்னவளின் உடல்நிலையை எண்ணி அவருக்கு மனதுக்குள் கலக்கமாகவே இருந்தது.

 

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அவர் பிள்ளை பெரும் நாளும் வந்தது.

 

குழந்தையை பத்திரமாக பெற்றெடுத்தவர், பயம் சரியே என்பது போல இறைவனடி சேர்ந்தார்.

 

தயானந்தன் உடைந்து போனார். மனைவியின் இழப்பை அவரால் தாங்க இயலவில்லை. ஆயினும் இரு குழந்தைகளை பார்க்கும் பொறுப்பு உள்ளதால் தன்னையே தேற்றியவர் அவர்களை கவனித்துக் கொண்டார். பிறந்த குழந்தையாதலால் நெறய விடயம் அவருக்கு எப்படி கவனிக்க என தெரியவில்லை.

 

ஊரிலிருக்கும் சீதாலட்சுமியின் அன்னையே குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொருட்டு மருமகனின் வேண்டும்கோலுக்கு ஏற்ப அங்கு வந்து சேர்ந்தார்.

 

அதன் பின் அவர் வாழ்க்கை சற்று இலகுவானது. ஆனால் மனதின் பாரம், வலி இருந்து கொண்டே தான் இருந்தது. வேலையில் மூழ்கி அனைத்து வலிகளையும் மறக்க… மறைக்க முயன்றார்.

 

அகத்தியனுக்கு… அவ்வயதில் ஒன்றும் புரியவில்லை.

‘உன்னுடன் விளையாட தம்பிபாப்பா வர போகுது’ எனக்கூறிய அன்னை இனி தனக்கு இல்லை. தன்னிடம் வரமாட்டார் என்பதே அவனுக்கு முதலில் சரியாக புரியவில்லை. அதன்பின்னே அவர் நம்மிடம் வரமாட்டார் என கொஞ்சமாக புரிய அழுது கரைந்தான்.

 

அவன் அத்தனை நாள் பேசிய பேச்சுக்கள், அவனின் துறுதுறுப்பு என அனைத்தும் அவருடனே எடுத்து சென்று விட்டார் போலும். அந்த இழப்பு அவனை மிகவும் அமைதியாக்கியது; இறுக்கமானவனாக்கியது.

 

(இப்டிலாம் ஒரு குட்டி பையன் மாறுவனா… அப்படினு கேட்ட.. எனக்கு தெரில…

ஒன்னு ஷேர் பண்றேன்…

விஜய்.. சார் இருக்கார்ல.. அவர் அம்மா பேட்டி ஒரு டைம் பார்த்தேன். அதுல சொன்னாங்க..

அவர் சின்ன வயசுல நல்லா பேசுவாராம். பட் அவருக்கு தங்கை பிறந்து இறந்துட்டாங்க… அதுக்கப்புறம் அவர் ரொம்ப silent ஆகிட்டாருனு சொன்னாங்க.

அது போல தான்… சிலர் இழப்பு… சிலர மாத்திரும்…)

 

எங்கு தன் உணர்வுகளை அதிகம் கொட்ட ஆரம்பித்தால் அவர்கள் தன்னை விட்டு சென்று விடுவாரோ என்றெல்லாம் அவனுக்குத் தோன்றியது. அதனை அவன் யாரிடமும் கூறவும் இல்லை. அது தவறு என கூறும் அளவு அவனிடம் யாரும் உட்கார்ந்து பேசவும் இல்லை.

 

அவன் தந்தையோ சோகத்தை மறக்க வேலை என மூழ்க ஆரம்பித்தவர், பின் குழந்தைகளின் எதிர்காலம் நினைத்து வேலையில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

 

மகனையும் மகளையும் காணதான் அவர்கள் பாட்டி உள்ளாரே என நினைத்தார். அவர் மனதில் பாசம் இருந்த போதும் அவர் சோகமே அவருக்கு அப்போதைக்கு பெரிதாக இருந்தது. எனவே மகன் மனநிலையை கவனிக்க மறந்தார்.

 

வெளியூர்… வெளிமாநிலம் கூட சென்று வேலை செய்ய வாய்ப்பு கிட்ட அனைத்தையும் பயன்படுத்தி தன் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைக்க பொருளாதாரம் முக்கியம் என கடுமையாக உழைத்தார்.

 

மேலும் அவர் மாமியாரின் மறுமணம் பற்றிய பேச்சை அறவே மறுத்தவர், அது பற்றி பேச பிடிக்காமல் கூட வேலையில் அதிக கவனம் செலுத்தினார்.

 

பாட்டியோ… மிகவும் கண்டிப்பான பெண்மணி. நிறைய பழங்கருந்ததுக்களை நம்புபவர்.

 

வளர வளர அகத்தியனிடம், “தங்கையை கண்டித்து பார்த்து கொள்ள வேண்டும். அவள் பெண் பிள்ளை. அப்போது தான் ஒழுங்காக வளருவாள். அதிகம் செல்லம் கூடாது. இது எல்லாம் அவள் நன்மைக்கே” எனக்கூற அவனுக்கு அது மனதில் பதிந்து போனது.

 

பாட்டியோடு சேர்ந்து தங்கையை பார்த்துக் கொள்பவன், முன்போல பேசாவிடினும் மனதுக்குள் அத்தனை அன்பு வைத்திருந்தான்.

 

மாதங்கள் உருண்டோட… வருடங்கள் தாண்டியது.

 

அகத்தியனும் மனதுக்குள் உள்ள எண்ணம் மாற்றும் படி எதுவும் நடக்க வில்லை. அவன் எண்ணமே சரி என்பது போல நடந்து கொண்டான். மேலும் பாட்டியின் அறிவுரையையும் கடைபிடித்தான்.

 

மகா அவனிடம், “அண்ணா அண்ணா” என்று சுற்றி வர, அவனோ அவளை கொஞ்சிக் கொண்டு எல்லாம் சுற்ற மாட்டான். ஆனால் பாசம் அதிகம் உண்டு.

 

ஒரு கட்டத்தில் அதை வெளிப்படுத்த அவன் நினைக்கவில்லை. அது அவனுக்கு சிலமுறை தெரியவும் இல்லை!

 

சிறு வயதில் அவள் வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்யாமல் விட்டால் கூட திட்டி விடுவான். அவளோ அழுது கொண்டே அண்ணனின் கண்டிப்பில் பயந்து அனைத்தையும் சரியாக செய்தாள்.

 

பள்ளி முதல் கல்லூரி வரை உடன் படித்த பிரசாத் மட்டுமே அவன் நன்றாக பேசும் ஒரு நபராகி போனான்.

 

அதன் பின் வேலை என வரும் சமயம் பேசுபவன், இயல்பாக எல்லாருடனும் பேசுவதெல்லாம் அரிது!

 

ஆனால் மகா… அவள் மனநிலை…

பிறந்த போதே அன்னையை இழந்த குழந்தை. அதன் பின் தந்தையும் வேலை என சோகம் மறக்க சென்றுவிட, அவரிடமும் அதிகம் ஒட்டுதல் இல்லை. அண்ணனோ மனம் முழுக்க பாசம் இருந்தும் காட்டவில்லை. கண்டிப்பே அவள் அதிகமாகக் கண்டது. எதற்க்கெடுத்தாலும் அட்வைஸ் செய்யும் பாட்டி; அமைதியாக இருக்க சொல்லும் பாட்டி; அவளுக்கு என்னவோ தன் குடும்பத்தில் யாருக்கும் தன் மீது பாசம் உள்ளது போலவே தோன்றாது.

 

என்னதான் அண்ணன் கண்டிப்பானவன் என்றாலும் அவளுக்கு அவனை மிக பிடிக்கும். அவனிடம் வெளிப்படையான பாசத்தை எதிர்பார்த்தாள்.

 

அவள் தோழி மற்றும் அவள் சகோதரன் வம்பாக பேசி சண்டை செய்வது, சமாதானம் ஆவது இதுவெல்லாம் பார்க்கும்போது அவளுக்கு ஏக்கமாக இருக்கும்.

 

‘இதுபோல தன் அண்ணனும் தன்னிடம் இருக்கமாட்டானா?’ என நினைப்பாள். ஆனால் அது நடக்கவே இல்லை.

 

ஒரு கட்டத்தில் சோர்ந்தவள் பாசம் இல்லை போல என முடிவு செய்து கொண்டாள். ஆனாலும் எதிர்பார்ப்பு என்றுமே இருந்தது.

 

வெளிப்படையாக பேசுவதும் பாசம் காட்டுவதும் மட்டுமே உண்மையான பாசம் என நினைத்தாள்.

 

வீட்டிற்குள் அமைதியாக வலம் வருபவள், வெளியே சென்றாள் ஒரே வாய் தான். அவளை சுற்றி உள்ள அனைவரையும் வம்பிழுப்பது, சிரிப்பது என மகிழ்ச்சியாக இருப்பாள்.

 

எனவே தான் அவள் எதிர்பார்த்த அன்பு கிட்டிய அவளின் யாதுமாகி போனவனிடம் இருந்து பிரிக்க நினைக்கும் சமயம், எதுவும் வேண்டாம் அவனே போதும் என கூறி சென்றுவிட்டாள் போலும்!

Leave a Reply

error: Content is protected !!