Kadhalil nan kathaadi aanen
Kadhalil nan kathaadi aanen
KNkA – 5
பிரபாகர், பத்மினி, நரேன் மற்றும் சாருமதி ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். சித் , பிரபாவிடம் மட்டுமே நெருங்கி பழகுவான். அவர்கள் குழுவில் தான் பல நேரம் இருப்பான்,நன்றாக பேசுவான், பழகுவான், ஆனாலும் மற்றவர்களால் ஒரு அளவுக்கு மேல் அவனிடம் நெருங்க முடியாது.
பிரபாவும் சித்தும் ரூம் மேட்ஸ்ஸும். அவர்கள் இருவரும் பழகுவதைப் பார்த்தாலே அவர்கள் நட்பு புரியும்.
“நீங்க வேற லெவல் அண்டர்ஸ்டாண்டிங் டா!” என்று நரேன் கூட சொல்வான்.
ஸ்வாதி, ஆவலாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டியிருந்தாள். புது தோழிகள் கிடைக்க போகிறார்கள் என்று… ஸ்வாதிக்கு பள்ளியிலும் தோழிகள் அதிகம். அவளால் பேசாமல் இருக்கவே முடியாது!!! அவள் அமைதியாக இருக்கிறாள் என்றால், “தூங்குறாள்” என்று உறுதி செய்து கொள்ளலாம்.
மெஸ்க்கு சென்ற ஸ்வாதி, “ச்சே! இந்த கொஞ்ச தூரம் , நைட் எபெக்ட்ல என்னை ஒரு வழி பண்ணிடுச்சே, சோ சேட் டியர்!” என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்!
அதை பத்தி நினைக்கும் போது அவனும் நினைவுக்கு வந்தான்!
“அவர் யாருனே தெரியலை, ஆனா நல்ல ஸ்மார்ட் இருந்தார்! ஆமா இருட்டுல ஆளே தெரியலை உனக்கு, இதுல அழகை வேற அனாலிசிஸ் பண்றீங்களாக்கும் !!! என்று அவளே அவளை துப்பிக் கொண்டாள்.”
“எப்படியும் இந்த கேம்பஸ்ல இருக்கிறவங்களா தான் இருக்கும், என்னைக்காவது பார்க்க சான்ஸ் கிடைக்கும், ஆனா என்ன பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவார்?” என்று யோசித்தப்படி கல்லூரியை அடைந்தாள்.
தந்தையுடன் ஏற்கனவே வந்ததால், இடம் எல்லாம் தெரிந்து இருந்தது. ஏதேதோ யோசித்தபடியே சென்றவள், மாடிக்கு ஏறும் திருப்பத்தில் யார் மீதோ முட்டி நின்றாள்!!
என்ன ரியாக்ட் பண்ணுவார் என்று நினைத்தாய் அல்லவா, இதோ பார் , நீயே பார் குழந்தாய் என்று அருளினார் கடவுள்!!!
“ஏ! அறிவே இல்லையா உனக்கு?? யாரையாவது இடித்து தள்ளலைனா உனக்கு பொழுது போகாதா?” இடித்தவளை பார்த்ததும் கத்தினான் சித்…!
சித்தை, காலையிலே முதல்வர் வரச் சொல்லி , அவன் வெளி நாட்டில் சென்று மேற்படிப்பு படிப்பதற்க்கான வேலைகளில் சில முக்கியமான விஷயங்கள் கொடுத்து இருந்தார். அதை செய்ய மாடி க்கும் கீழேயும் அலைந்து கொண்டு இருந்தவன் மீது தான் மோதி நின்றாள் ஸ்வாதி!!
அவன் திட்டுவது கூட உரைக்காமல், “சார்!!!! என்று கண்ணும் முகமும் மலர அவனை பார்த்து, இப்ப தான் ஜஸ்ட் உங்களை நினைச்சேன் சார், நீங்களும் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் தானா? சொல்லவே இல்ல….!”
“ஏன்ன்ன் …. சார் இப்படி எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகிறீங்க, தெரியாம தான இடிச்சேன்!” என்றவளை என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றான் சித்.
ஸ்வாதிக்கு, இப்போதைக்கு இந்த கல்லூரியில் அவன் தான் தெரிந்த முகம் என்ற அளவில் தான் ஆர்வமாக பேசினாள்.
ஆனால் சித்துக்கோ, இவள் என்ன இப்படி லொட லொடனு யாரு என்ன , இடம் எதுவும் பார்க்காமல் இஷ்டத்துக்கு பேசுறா என்றே தோன்றியது!
விட்டால் பேசிக் கொண்டே இருப்பாள் போல……
“ஷ்.. ஷ்…. இங்க பாரு , நேத்து நடந்த எதையும் யாருக்கிட்டேயும் முக்கியமா என்னை பத்தி எதுவும் சொல்லக்கூடாது. மோரோவர் , இங்க என்னை தெரிஞ்ச மாதிரி என் கிட்ட பேசுறது எல்லாம் கூடாது… ஓக்கே.. காட் இட்…. எனவும்…!”
நா நினைச்ச மாதிரி ஸ்மார்டா இருக்கார் ,ஆனா பயங்கர சிடுமூஞ்சியா இருக்கார்!!! .. ஆனா ஏன் இப்படி சொல்றார்? என்று யோசித்தவள். …. அய்யோ !! அப்படி இருக்குமோ?
“ஓ!!! சார் , நீங்க லெக்சரரா ..என்று கொஞ்சம் பயமாகவும் சந்தேகமாகவும் கேட்டாள்!… அதனால் தான் யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதா!!!”
“ஏய்!!!! என்னவா இருந்தா உனக்கு என்ன? நானே டென்ஷன்ல இருக்கேன். காலையிலே என் உயிரை வாங்காத , சொன்னதை மட்டும் செய்,என்ன? செய்வ தான?? என்றான்.”
சரி என்கிற மாதிரி தலையசைக்கும் அவளையும், முறைக்கும் அவனையும் பார்த்துக்கொண்டே வந்த பத்மினி, என்ன சித்? எனி ப்ரோப்ளேம் ?எனவும்,
“நோ நோ பத்மினி, பர்ஸ்ட் இயர் ஸ்டுடெண்டாம், யூ பீளிஸ் கைட் ஹர் ! எனக்கு வேலை இருக்கு” என்றவாறே ஸ்வாதியை திரும்பிக்கூட பார்க்காமல் விரைந்து சென்றான்.
“ஹாய், கம் வித் மீ ! நான் பத்மினி, தேர்ட் இயர்!”
“ஓ! ஹாய் சீனியர்! என்றவள் , ரொம்ப அழகா இருக்கீங்க சீனியர்!!
“ஒய்! என்ன ஐஸ் வைக்கிறியா? என்று புன்னகைத்தாள்.”
“அய்யோ! இல்ல. நிஜமாவே என்னால மனசில பட்டத்தை சொல்லாம ரொம்ப நேரம் இருக்க முடியாது! எப்படியும் இது உண்மை தானே , அதான் சொல்லிட்டேன். உண்மையிலேயே நீங்க அழகான குட்டி பொம்மை மாதிரி தான் இருக்கீங்க.”
அதென்ன குட்டி பொம்மை என்று கேட்டவள், முகம் வேறொருத்தனின் நினைவில் சிவந்தது. பிரபாவும் அவளை “ஷார்ட்டி” என்பான் யாரும் இல்லாதபோது.
“உங்க முகம் அவ்ளோ அழகா இருக்கு, ஆனா ஹைட் கம்மி! அதான்” என்று புன்னகை புரிந்தவளை மிகவும் பிடித்தது பத்மினிக்கு.
“நல்ல பொண்ணா தான் இருக்கா!” என்று நினைத்துக்கொண்டவள், பொழைச்சுக்குவ … ம்ம்… ஆனா சைக்கிள் கேப்ல என்னை குட்டைனு சொல்லிட்ட ……ம்ம்ம்..”
“அச்சோ! கோச்சுகிட்டாங்களோ என்றவள் பத்மினியின் சிரிப்பை பார்த்து ஆசுவாசமானாள். ஏற்கனவே ஓரு ஆள் கடுப்படிக்கிறது போதும் பா!!!! “
ஸ்வாதிக்கு எப்போதும் அவளிடம் பழகும் யாரும் சரியா பேசவில்லை என்றால், ஒரு மாதிரி ஆகி விடும்… ஏதாவது அவங்களை ஹர்ட் பண்ணிட்டோமோ , அவங்களுக்கு நம்மை ஏன் பிடிக்கலை என்று குழம்பி கொள்வாள்…
அவர்களை தன்னிடம் சரியாக பேச வைத்து விட முடிந்தவரை முயற்சி செய்வாள். அது எல்லா நேரமும் , எல்லாரிடமும் ஒத்து வராது என்பதை போக போக தெரிந்து கொள்வாள்…!