அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 4

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 4
An Kn-4
இன்றைய விடியல் ஐராவிற்கும் கெளதமிற்கும் ஏன் அகிலுக்கு கூட புதிதாய் இருந்தது.
கெளதமை பள்ளிக்குச் செல்ல தயார் செய்தவள் தானும் சென்று தயாராகி வர,
கெளதமோடு அமர்ந்து அகில் பல செல்பிகளை எடுத்தவண்ணம் இருந்தான்.
“அகி,பத்து மணிக்கு மீட்டிங். திரும்ப கால் பண்ணி ஞாபகப் படுத்த மாட்டேன். அங்க போனமா, இவனை விட்டமா வந்தோமான்னு இருக்கணும்.”
“பார்த்தியா உங்கம்மாக்கு பயம். நேத்திக்கே சொன்னேன்ல.”
வாய் பொத்தி கெளதம் சிரிக்க, “என்ன கெளதம்? “
“ம்மி வர்றப்ப எப்டி வருவேன்?”
“எப்போவும் போலதான் கெளதம். இன்னிக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா?”
“மீட்டிங் முடிஞ்சதும் பிக் பண்ணிக்கலாமே ஐரா.”
“உன்னை கேட்டானா? என்கிட்ட தானே பேசிட்டு இருக்கான், எதுக்கு மூக்க நுழைக்குற? “
கெளதமை பாவமாய் அகில் பார்க்க, சின்னவனும் அப்படியே பார்த்துச் சிரித்தான்.
“கெளதம், மீட்டிங் இன்னிக்கு எத்தனை மணிக்கு முடியும்னு தெரியல.அது முடிய இன்னும் வேலையிருக்கு எனக்கு.அம்மா நாளைல இருந்து உன்கூடவே இருக்கணும்னா இன்னிக்கு ஒருநாள் எனக்கு கொடுக்கக் கூடாதா?”
“ஓகே ம்மி, அப்போ நான் வீட்டுக்கு வந்ததும் மலர் ஆன்ட்டிக்கிட்ட சொல்லி கால் பண்றேன். “
“ஓகே கெளதம், டைமாச்சு கிளம்புங்க. அவன் நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பினாள். அகிலும் அவளிடம் கூறிக்கொண்டு கிளம்ப, இவளும் இவளது வண்டியில் அலுவலகம் கிளம்பினாள்.
எப்படியும் ரகுராமின் பேச்சுக்கள் மனம் நோகச் செய்யும் என்பது இவள் அறிந்ததே. அவள் அகிலோடு இணைந்து வேலை பார்ப்பது பிடிக்காத போதும் அவளைப்போல சீராய் கல்லூரி நடவடிக்கைகளை கையால்வதற்கும் அவரிடம் வேறு யாரும் இருக்கவில்லை.
அதை விட இமாலயா கல்லூரியினால் இவர்களுக்கான மதிப்பு அளவில் அடங்காதது. அதனாலோ என்னவோ அவளை இப்போது வரை விட்டு வைத்திருக்கிறார். புகழுக்கு வாழ்ந்து பழகிவிட்டவர்கள். அதனை தக்க வைக்க இப்படியாய்.
எப்போதும் அலுவலகப் பேச்சுக்கள் தவிர்த்து அவளோடு அவர் பேச வழி ஏற்படுத்திக்கொள்வதே இல்லை ஐரா.
இனி வரும் ஆறு மாதங்கள் என்னவெல்லாம் இவள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு சேர்க்கும?
விதி வழிவிட அதன் வழி தன் பயணம் தொடர்ந்தாள் ஐரா நந்தன்.
அலுவலகம் வந்திறங்கவுமே மற்றைய நாட்களை விட பரபரப்பாக இருப்பதை உணர்ந்துக் கொண்டாள்.
‘இப்படியில்லாமல் இருந்தால் தான் புதினம்.’
எண்ணிக்கொண்டே எப்போதும் போலச் சென்றாள். நீண்ட கால்கள் அடி வைக்க அதற்கேற்ப இடை வளைக்க, வலிக்குமோ அந்த சிற்றிடைக்கும் அஞ்ச, அகன்ற கரு நீலவண்ண கரை வைத்த அடர் மஞ்சள்நிறை காட்டன் சேலை அவளை அழகாய் அடக்கிக் கொண்டது.
இடக்கை அலைபேசியோடும் வலது கைவிரல்கள் சேலை தலைப்பின் நுனி பிடித்து வயிற்றோடு சேர்த்திருக்க உயர்த்தி கட்டிய போனிடேயில் முதுகில் அசைந்தாடிக்கொண்டு வந்தது.
அவள் லேப்டாப் பை மற்றும் சில பைல்களை அலுவலக உதவியாளர், அவள் வண்டி விட்டிறங்கவுமே எடுத்துக்கொண்டு அவள் பின்னோடே வந்தார்.
இவர்களுக்கான மின்தூக்கியில் நுழைய, அது ஆறாவது மாடியில் அவள் அலுவலக அறை முன்னே நின்றது.
“மூர்த்தி மீட்டிங் ரூம் அரேஞ் பண்ணிருக்குல்ல. இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு.”
தன் இருக்கையில் அமர்ந்தவள் அவரிடம் கேட்டாள்.
“அதெல்லாம் ரெடியாதான் இருக்கு, ஒருதடவை எல்லாம் சரி பார்த்துர்றேன் மா.” கூறிவிட்டு அவர் வெளியேறினார்.
மீட்டிங்கில் பேசவேண்டியவை குறிப்பாய் எடுத்திருந்தவள் சரிபார்த்துக் கொண்டாள்.
இவளின் அறைக்கதவை தட்டி அனுமதி வாங்கி உள்ளே வந்தான் ப்ரேம். அகிலின் பர்சனல் செகட்டரி.
“குட் மார்னிங் மேம். ஹோப் யூ டுய்ங் குட்.”
“பீலிங் குட் ப்ரேம்.” புன்னகைத்து பதில் கூறினாள்.
‘என்னடா அதிசயமா இருக்கு.’
தலையசைப்பாய் பதில் எதிர் பார்க்க வாய் அசைகிறது. அவளை வியப்பாகப்பார்க்க,
“ராம் சார் வந்துட்டாங்களா?”
“ஹான்? ஆமா மேம். நம்ம ரங்கநாதன் சார் கூட பேசிட்டிருக்கார்.”
“ஓஹ்…”
“உங்களைப் பார்க்கணும்னு கேட்டுட்டு இருந்தார்.”
“மீட்டிங் முடிஞ்சு பேசிக்கலாம் ப்ரேம். அதுவரைக்கும் யாரையும் உள்ள அல்லோ பண்ணவேணாம்.”
“உங்க சார் வந்துட்டாங்களா?”
இப்போதான் பேசினார். இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துர்றேன் சொன்னார்.”
“ஓகே ப்ரேம் உங்க ஒர்க் பாருங்க.”
ப்ரேமை இவளே தேர்வு செய்து அகிலின் பர்சனல் செகட்ரியாக நியமித்திருந்தாள். அத்தனை நம்பிக்கையானவன். அகிலோடு நட்பாகி உற்ற துணையாய், பலமாய் இருந்து வருகின்றான்.
“ஐரா, பர்சனல் செகட்ரி லேடீஸ் தான் நல்லா இருக்கும்.”
“எதுக்கு?”
“இல்ல, உனக்கும் ஹெல்ப்பா இருக்கணுமே.”
அவனை நம்பாது பார்த்தவள், “உனக்கு ஹெல்ப்க்கு தான் ஆள். என் வேலை எனக்கு பார்த்துக்க தெரியும்.” என்று இவனை தெரிவு செய்திருந்தாள்.
பிரேம் வெளியேறவுமே அகில் வந்து விட்டான்.
“சாப்பிடாம தான் மீட்டிங் போவாங்களா? பாதி மீட்டிங்ல நீ விழ,மீட்டிங் கேன்சல் ஆக, மொத்தம் எந்தலைல ஏத்திக்கவா?”
அவன் கொண்டு வந்திருந்த இட்டலியை ஸ்பூனால் வெட்டி சட்னியில் தொட்டு அவள் வாயில் திணித்தான்.
அமைதியாக சாப்பிட்டாள். முன்பென்றால் தினசரி அவன் வேலை இதுதான். இப்போதெல்லாம் எப்போதாவது நடப்பது தான்.
ரெண்டு இட்டலியை ஊட்டி விட்டவன் போதும் என்று மீதத்தை அவன் உண்டான்.
“இன்னும் ரெண்டு வாய் சாப்பிட இடமிருக்கு அகி.”
“ஒரு வாய் சாப்பிட இடம் வச்சுதான் எப்போவும் சாப்பிடணும் ஐரா.”
“சோ இன்னும் ஒன்னுதான்.” அவளுக்கு ஊட்டினான்.
அடுத்தடுத்த அறைகள் கண்ணாடித் தடுப்புகளால் ஆனவை. அடுத்த அறையிலிருந்து ராம் இவர்களைப் பார்க்க,
“அகி உங்கப்பா நம்மள சைட் அடிக்கிறார்.”
“அப்டியா?” அவள் இதழ் ஓரம் ஒட்டாத உணவை இருப்பதாய் துடைத்து விட்டான்.
“நாராயணா, இருக்க ரணத்துல உனக்கு குதூகலமா?”
“அட ,அவனை எதுக்கு கூப்பிடற? மனுஷனுக்கு பிரஷர் ஜாஸ்தி ஆகிட்டா மீட்டிங்ல ரொம்ப பேச மாட்டார்.”
“அட, இது இன்னும் நல்லா இருக்கே.” கூறியவள், அவன் கன்னம் கிள்ளி அவ் விரல்களை இதழில் ஒற்றிக்கொண்டு,
“சோ ஸ்வீட் அகி.”
“எனக்கு திட்டு வாங்கி தரணும்னு எவ்ளோ ஆச. ஹ்ம்ம்… மீட்டிங் டைமாச்சு, நா கிளம்புறேன் பின்னாடியே வா.” கூறியவள் மீட்டிங் ஹாலுக்குச் சென்றாள்.
அவள் அங்கு செல்ல முன்னமே அலுவலக அறையில் ரகுராம், அலுவலக முக்கிய உறுப்பினர்கள், மற்றும் கல்லூரி தலைவர் அவரோடு கல்லூரி முக்கிய ஆசிரியர்கள் இருவர் என்று அமர்ந்திருந்தனர்.
நீள்வட்ட மேசையில் ரகுராம் நடுநாயகமாய் அமர்ந்திருக்க இடது பக்கத்தில் இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தன.
ரங்கநாதன் தீவிரமாய் எதுவோ கூற, ரகுராம் தலையசைத்து கேட்டுக்கொண்டிருந்தார்.
ஹாலில் கதவுகள் திறந்துக் கொள்ள உள் நுழைந்தாள் ஐரா நந்தன்.
அவள் உள் நுழையவுமே பேச்சை நிறுத்தினார் ரங்கநாதன். பேசிக்கொண்டே இருந்தவர், பேச்சை முடிக்காது இடையில் நிறுத்த என்னவென்பதாய் பார்த்தார் ரகுராம்.
“இல்ல சார், நாம அப்றமா பேசலாம்.”
‘அட இத்தனை பயமா? இவளுக்குப் போய் பயப்படுறார்’ உள்ளுக்குள் நினைத்தார். அவள் இவர்களை நோக்கி நேராக வந்தவள்,
“குட் மார்னிங் ஜெண்ட்ல்மென்.” கூறி ரகுராமிற்கு ஒரு இருக்கை தள்ளி அமர்ந்தாள்.
ரகுராமிற்க்கு வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ரங்கநாதன் சிநேகமாய் ஐராவோடு புன்னகைக்க, இவளும் அதே புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.
இதை ரகுராம் கவனித்தாலும் நேரம் செல்வதாக கடிகாரத்தை பார்த்துக்கொண்டார்.
‘அவர் மகந்தான் வர வேண்டும்.நம்மகிட்ட நேரத்தை காமிச்சா சரியா’ உள்ளுக்குள் ஐரா நினைத்தாள்.
நினைக்கும் நொடியே ப்ரேம் லேப்டாப் தூக்கிக்கொண்டு வர அவனிடம் எதுவோ பேசிக்கொண்டே வந்தான் அகில். வந்தவன் தந்தைக்கு அருகே அமர்ந்தான்.
இத்தனை தூரம் ரகுராம் வந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. இப்படியான மீட்டிங்ஸ் அவர் அட்டென்ட் செய்வதும் இல்லை. எப்போதாவது முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பார். அவரைக் காண்பது ஏதேர்ச்சியான நிகழ்வாகவே பலருக்கும் இருக்கும்.
இரண்டு நாள் முன்னதாக ரங்கநாதன் அழைப்பில் கோபம் கொண்டவர் கிளம்பி வந்திருந்தார்.
ஆக, இப்போது மீட்டிங் இல் பேசமுன்,
‘உன்னாலதான் இந்த மீட்டிங் வரவேண்டிய நிலை ஆனது’ என்பதாய் ஐராவை திரும்பிப் பார்த்தார்.
ஐராவும் அவர் பார்க்கும் வரை காத்திருந்தவள் போல, அவர் பேச ஆரம்பிக்க முன்னமே அதை அவளுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டாள்.
அவரோடு சிநேகமாய் ஒரு புன்னகையை உதிர்த்தவள்,
மீண்டும் அவர்களுக்கு காலை வணக்கக்தை தெரிவித்து அவளே பேச ஆரம்பித்தாள்.
“இரண்டு நாளைக்கு முன் ஏற்பட்ட நெட்ஒர்க் ப்ரோப்லம் அன்றைய முழுநாளையும் மந்தப்படுத்தியதை எண்ணி வருத்தம் தான்.
மந்தப்படுத்தியது அப்டின்னு ஏன் மென்ஷன் பண்றேன்னா,அப்படியே அந்த நாள் பிளாக் ஆகி ஓரிடத்துல நிற்கல,இட் மூவ்ஸ் ரைட்.”
“நைட் மூடி வச்ச புத்தகத்தை காலைல திறந்து பார்க்கும் போது அட்டை மட்டும் இருக்கு உள்ள இருக்க தாள் மொத்தமும் காணோம். எப்படி இருந்திருக்கும்? அதற்கு வாய்ப்பில்லை தான், ஆனால் இதானே நடந்தது. அன்னைக்கு?”
“என்ன ரங்கநாதன் சார். நான் சொல்றது கரெக்ட் தானே? “
“அப்படித்தான் மா.”
“ஹ்ம் புத்தகத்தோட அமைப்பு இங்க வேற. ஆனாலும் அதே புத்தகமா கையாண்டிருக்கலாம். முன்ன போல இப்போ இல்லை. ஆனாலும் அன்னைக்கு ஒரு நாள் சமாளிச்சிருக்கலாம்.
முடியலன்னு கைகட்டி கேள்வி கேட்டுட்டு அங்க இருந்தவங்க அங்க என்ன படிச்சிட்டு வந்து டீச் பண்றாங்கன்னே புரியல.
அட்லீஸ்ட் என்ன ப்ரோப்லம்னு பார்க்க ட்ரை பண்ணிருக்கலாம்.”
ரங்காநனுக்கு,’அப்படி செய்திருக்க வேண்டுமோ?’ இப்போது தான் அந்த எண்ணமே தோன்றியது.
“கண்டிப்பா பெரிய லாஸ்ட் தான், நான் ஏத்துக்குறேன். இது எல்லா இடத்துலயும் நடக்குறது தான். காலேஜ் மட்டும் இல்லை டெக்னாலஜி எங்கெல்லாம் யூஸ் பண்றாங்களோ அங்கெல்லாம் வரத்தான் செய்யும். ஆனால் இங்க இப்படியான சூழ்நிலை வர முன்னமே நாம சரிபண்ணி இருக்கணும். இதுக்கப்றம் வர முன்ன எச்சரிக்கையா இருந்துக்கலாம்.
ஆனால் எந்த டேட்டாவும் லாஸ் ஆகல அதைச் சொல்லிக்க விரும்புறேன்.
இந்த சின்ன சிக்கலினாலும் நமக்கு ஒரு லாபம்.”
என்ன சொல்வாள் என்பதை தெரிந்தவன், அவள் பேசுவதை மட்டுமே பார்த்திருந்தான்.ரகுராம் அதென்ன என்பதாய் பார்த்துக்கொண்டிருந்தார்.
“காலேஜ்ல நடந்த பிரச்சினையை சோல்வ் பண்ணுனது நம்ம காலேஜ் பசங்க ரெண்டு பேர்தான். அதுவும் பர்ஸ்ட் இயர் பசங்க. சோ இனி அவங்க எனக்கு கீழ ஒர்க் பண்ணுவாங்க. இது அவங்களுக்கே தெரியாது. நான் டிசைட் பண்ணுனது தான்.
“ஓஹ் கிரேட். தட் வாஸ் அ குட் டிசிஷன். இப்படியான பசங்கள ஊக்கப் படுத்தினால் தான் இன்னும் வளர்வாங்க.”
இத்தனை நேரம் ஐரா பேசுவதைக் கேட்டுகொண்டிருந்த ரகுராம் கூறினார். அவருக்கு லாபம் அவ்வளவு தான்.
அவரை பார்த்து நன்றி கூறும் விதமாய் புன்னகைத்தவள்,
“ஆல்சோ,முக்கியமாக இன்னிக்கு நான் சொல்ல வேணும்னு இருந்தது, இன்னைல இருந்து கொஞ்ச நாளைக்கு அம் ஒன் லீவ். பட் என் வேலை எப்போவும் போல நடந்துகொண்டுதான் இருக்கும். சோ அதை பற்றி வொரி பண்ணிக்க வேண்டாம்.
எப்போவும் யாருக்காகவும் என் வேலையை விட்டுக்கொடுக்கவோ என் இடத்தைக் கொடுக்கவோ மாட்டேன். பட் நொவ் ஐ நீட் சம் ஸ்பேஸ். ஹோப் யூ ஆல் அண்டர்ஸ்டாண்ட் மை செல்ப். தேங்க்ஸ் யூ.”
அவள் அமரவும் அவளையே பார்த்திருந்தார் ரகுராம்.
“வேறேதாவது யாருக்கும் பேசவேண்டி இருக்கா? ” இது அகில்.
‘மதிக்குறானா பாரு.’ உள்ளுக்குள் திட்டினார் ரங்கநாதன்.
அனைவரும் விடைப் பெற்றுக்கொள்ள,
“மிஸ்டர் ரங்கநாதன்.”
“சொல்லுங்க சார்.”
“அன்னைக்கு இருந்த டென்ஷன்ல பேசிட்டேன். என்ன இருந்தாலும் உங்க வயசுக்கு மரியாதை தந்திருக்கணும். அம் சாரி.”
அன்றைய பேச்சுக்காய் மன்னிப்பு வேண்டினான் அகில் ரகுராம்.
யாரையும் ஒரு பொருட்டாய் மதிக்க மாட்டான். ஆனால் எப்போதும் அவன் வேலையில் குறை என்று யாரும் சொல்லி விட முடியாது. அதனாலேயே இவன் இப்படித்தான் என்று பலரும் கடந்து விடுவார்கள். இதில் அச்சாய் அவன் தந்தையின் குணம் என்று சொல்வது தான் பொருந்தும்.
மன்னிப்பையும் வீராப்போடு கேட்கிறான். அவனை இன்முகத்தோடு ஐரா பார்த்திருக்க, ரகு ராமோ மகன் கீழிறங்குவது விரும்பாது முறைக்க முடியாது தோற்றுப்போனார்.
“ரங்கநாதன் சார், நான் இப்போ காலேஜ் வரணும், அந்த பசங்களை எல்லோருக்கும் இன்றோ கொடுக்கணும். மீட்டிங் அரேன்ஞ் பண்ணுங்க, நா வரேன்.” ஐரா கூறிட அவரும் ஏற்பாடு செய்வதாய் கூறி விடைப்பெற்றார்.
இப்போது மீட்டிங் ஹாலில் இவர்கள் மூவரும் மட்டும்.
“கண்டிப்பா நீ இத்தனை பெரிய டிசிஷன் எடுக்க முன்ன என்னை கேட்டிருக்கணுமா இல்லையா?
“நீ இல்லன்னா கேர்லெஸ்ஸா இருப்பாங்க.”
“நான் எப்போவும் அப்டி ஆக விடமாட்டேன்.”
“நீ இருந்தே ரெண்டு நாள் முன்ன இஷு ஆகியிருக்கு.”
“அம் நொட் வெல், இல்லன்னா எப்போவும் இப்படி ஆகியிருக்காது.”
“திரும்ப இப்டி ஆக்கிட்டா? “
“ஐ க்நொ மை செல்ப். உங்களுக்கு எந்தவிதமான புகாரும் இனி வராது. டிரஸ்ட் மீ.”
உன் வேலை விஷயத்துல மட்டும் அது ஒன்னு இருக்கதுனால மட்டுமே, இப்டி பேசிட்டு இருக்கேன்.”
இருவரும் பேசிக்கொண்டு போக எங்கே வந்து நிற்பார்கள் என்பதை தெரிந்துகொண்டவன் எழுந்து தனதறைக்குச் சென்று விட்டான்.
ஐராவும் கிளம்ப எத்தணிக்க,
“திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிச்சிருக்கீங்க ரெண்டு பேரும். ரெண்டு பேர் வாழ்க்கையை இப்படியே கொண்டு போகலாம்னு இருக்கீங்களா?’
‘உனக்கு எதுவுமே பிரச்சினை இல்லாம இருக்கலாம். கேட்கத்தான் யாருமில்லையே. ஐ டூ டோன்ட் கேர் அபௌட் தெட். ஆனால் அகில்? அவன் மரியாதை? அவனால என் மரியாதை என்னாகுறது? என்ங்கிட்டயும் தானே கேள்வி கேட்பாங்க? “
“அப்போ உங்க பிரச்சினை நான் இல்லை ரைட். உங்க பையன் இப்படி இருக்கது தானே உங்க பிரச்சினை. சோ நீங்க அவனைத்தான் கேட்கணும். என்னை இப்டி நிற்க வச்சு கேள்வி கேட்குறதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது.”
‘அம் அலோன். திஸ் இஸ் மை லைப், மை ரூல்ஸ்.ஐ க்நொவ் ஹூ ஐ அம் சோ…”
கூறியவள் அறையை விட்டு வெளியேறினாள். தன் அறைக்குள் வந்து அமர்ந்தவளுக்கு உள்ளுக்குள் வலிகள் குத்திக் கிளிக்காமல் இல்லை. யாருமில்லாதவள் இல்லை, இருந்த மொத்த பேரையும் மொத்தமாய் இழந்தவள் தானே. இல்லாததை விட எல்லாம் அனுபவித்து இழந்தவளுக்கு வலி மிகைதான் இல்லையா?
அழுகை என்றாலே ‘என்னது?’என்பவள். கவலை என்றாலே அனுபவித்திராதவள். மொத்தத்தையும் ஒன்றாய் பெற்ற போது தாங்கும் வலிமை எங்கிருந்து பெற்றாலோ அவள் மட்டுமே அறிவாள்.
ரகுராம், இதையும் விட பேசுபவர்தான். அவரை நன்கு தெரிந்து வைத்திருந்தாள். எத்தனை வருட பலக்கம். அவர் பேச்சுக்களை எதிர்பார்த்தே இருந்தவளுக்கு இது என்னவோ மிகக் குறைவுதான்.
அகில் அவனறையில் இருக்க, ரகுராம் உள்ளே வந்தார்.
தந்தை என்ன பேசுவார் என்பதை தெரிந்தவன், “சிக்ஸ் மந்த் டைம் கொடுத்திருக்கேன் டாட்.”
“ஆப்டர்? “
“வி வில் டிசைட் வாட் நெக்ஸ்ட்.”
“சின்ன பையனா நீ? உங்க ரெண்டு பேராள எத்தனை பேருக்கு பிரச்சினை?”
“நாம ஒன்னுமே பண்ணல டாட், அவங்களா அதை பிரச்சினை ஆக்கிக் கிட்டா நாம ஒன்னும் பண்ண முடியாது.”
“அகில், அந்த மனுஷனுக்கு என்னால பதில் சொல்ல முடில.”
“டாட் நான் எல்லோருக்கும் பதில் சொல்லியாச்சு. எனக்கு ஐரா தான் பஸ்ட். அதுக்கப்புறம் தான் எல்லாமே.”
“யாரும் அதை வேணாம்னு சொல்லலையே. அதுக்குன்னு ஒரு முறை இருக்கு, நம்மல சுத்தி ஒரு சொசைட்டி இருக்கு, நம்மளையே பார்த்துட்டு.”
“டாட், உங்களுக்கு என்னை நல்லாவே தெரியும், நான் எப்போவும் என்னை பார்க்குறவங்களுக்காக வாழுறவன் கிடையாது. எனக்காக வாழுறவன்.”
“டேய் பையன்னு பார்க்க மாட்டேன் விட்டேன்னா பாரு. என்னத்த வாழுற? நீ சிரிச்சு சந்தோஷமா பேசி எத்தனை வருஷமாச்சு.
எதாவது ஒன்னு அனுபவிச்சிட்டு இருந்தா சரி, எதுக்குன்னே தெரியாம லைப் ஓடிட்டு இருக்கு. நீங்களும் அதுகூடவே போய்ட்டிருக்கீங்க.”
“டாட் நான் ஹாப்பியா தான் இருக்கேன். இனியும்.”
“ஜஸ்ட் ஷட் அகில்.”
“ஓகே டாட், ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ், ஆப்டர் ஐ வில்.”
அதுக்கப்பறம் நீ ஒழுங்கான ஒரு முடிவெடுக்கலைன்னா, நான் எடுக்குற எந்த முடிவுக்கும் நீ சரி காணணும். தட்ஸ் ஆல்.”
தந்தையை பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தில் என்ன கண்டாரோ,
“ரெண்டு நாள் வீட்டுக்கு வந்துட்டு போ. அம்மா கேட்டுட்டே இருக்கா.”
கூறிவிட்டு விடு விடுவென சென்றுவிட்டார்.
ஐரா தன்னை சமன் செய்துக்கொண்டு கல்லூரிக்கு செல்ல எழுந்தவள் அகிலின் வாட்டமான முகத்தையும், ரகுராம் வெளியேறுவதையும் கவனித்தாள்.
அவனும் இவளையே பார்க்க, ‘என்னாச்சு?’ எனும் விதமாய் கைகளால் கேட்டாள்.
‘நதிங்’ என தந்தை செல்வதைக் காட்டிச் சிரித்தான். இவளும் சரி எனக் கூறிக்கொண்டு கிளம்பினாள்.
ஆறு மாதங்கள் செல்ல ஐராவின் முடிவு என்னதாக இருக்கும்?
சரியான முடிவு வராத போது தந்தையின் முடிவு எப்படியாக இருக்கும்?
அது தனக்கு பிடிக்காத போது என்னாகும், இப்போதே அவனுக்கு அன்றைய நாள் கண்முன்னே வர சில நொடிகள் தான் மனம் தடுமாறினான். அடுத்த நொடிகளில் தன்னை சமன் செய்துக்கொண்டு அலுவலக வேலைகளை பார்க்க மனம் அதன் வழி பயணப்பட்டது.