Kadhalil nan kathaadi aanen

kNKA – 15

மறுநாள் சித் தனியாக கேன்டீனில் இருந்து ஹாஸ்டல்க்கு செல்லும் ஸ்வாதியை பார்த்தவன், வேகமாக அருகில் போய்,

 

“ஹாய் ஸ்வாதி!”

 

தூக்கிவாரிபோட்டது அவளுக்கு!

 

“ஹே ஹே ரிலாக்ஸ் நான் தான் !!!!”

 

மளுக்கென்று கண்ணில் நீர் நிறைந்தது…இந்த “நான் தான்” என்ற வார்த்தை அவளை பல நாள் தொல்லை செய்து இருக்கிறது.. அவன் முதன் முதலில் “நான் தான்” என்று சொல்லும் போது அவன் மேல் எந்த உணர்வும் இல்லை, ஆனால் அவளறியாமல் ஏதோ நம்பிக்கை இருந்தது போல அதனால் தான் அமைதியானாள்.

 

இப்போது ஏதோதோ உணர்வுகள் வருகிறது .கோவம், தவிப்பு, ஆற்றாமை என அவனும் அவளை ஆட்டி படைக்கிறான்….

 

அவள் கண் கலங்குவது பக்கவாட்டில் அவனுக்கு தெரியவில்லை”எனக்கு திரும்ப ஹாய் சொல்ல மாட்டியா என்றான் சிரிப்புடன்.”

 

இருந்த கடுப்பில்,

 

” நீங்க யாரு, நாம இதுக்கு முன்னாடி பேசி இருக்கோமா?” என்றாள்.

 

“ஹாஹா ரொம்ப கோவமா? “என்றான் நேரிடையாக,

 

“உங்களை தெரியாதுனு சொல்றேன்! கோவமானு கேக்குறீங்க…போங்க சார்… போய் வேலையை பாருங்க!!” என்றவள்…

 

இவ்ளோ நாள் இவர் கண்டுக்க கூட மாட்டாராம், இப்ப வந்து ஹாய்னா, நாங்க உடனே சொல்லுங்க எஜமான்னு ஓடனுமா! அவன் போயிருப்பான் என்று முணுமுணுத்தாள்….

 

பின்னால் இருந்து சே!!சே!! எஜமான் எல்லாம் வேண்டாம், “சொல்லுங்க சார்!” மட்டும் போதும் என்றவனை, திரும்பி முறைத்தாள்…

 

அப்போது தான் அவள் கலங்கிய கண்களை பார்த்தவன்! என்ன, என்ன ஆச்சு? ஏன் இப்போ அழற?! என்றான் வேகமாக

 

ஒன்றும் சொல்லாமல் திரும்பி கொண்டாள்…

 

வேகமாக அவளுக்கு முன்னால் வந்து நின்றவன், “சொல்லிட்டு போ எனவும்!” ரொம்ப கோவம் வந்தது அவளுக்கு,

 

“நீங்க எனக்கு சீனியர் மட்டும் தான் சார்!!! ஏதாவது காலேஜ் விஷயம்னா சொல்லுங்க இல்லனா நா போகணும் என்றாள்!”

 

“செம டைமிங் செல்லம்!” என்று மெச்சிக் கொண்டான். ஆனால் விடமுடியாதே!! அதோடு அவன் வேறு மாதிரி நினைத்திருந்தாலும், அவளிடம் சொன்ன வார்த்தை சொன்னது தானே!!!

 

அவள் எவ்ளோ வருத்தப்பட்டு இருப்பா என்று தோன்ற உடனே  ஸாரி! ஸாரி! ஸ்வாதி, உன்னை ஹர்ட் பண்ணனும்னு உன்னை அவாய்ட் பண்ணலை…..நமக்குள்ளே பிரச்சனை எதுவும் வளர வேண்டாம்னு தான்……

 

“நான் ஏதாவது உங்கிட்ட வந்து பிரச்சனை பண்ணினேனா சார்???”

 

உண்மை தானே!! அவள் எதுவுமே பண்ணவில்லையே!!! இல்லை என்னும் விதமாக தலையசைத்தான்….

 

“அப்புறம் ஏன் ஸார், அவ்ளோ ஹார்ஷா பிகேவ் பண்ணினீங்க என்கிட்ட என்று கேட்டவளுக்கு அத்தனை நாள் மனபாரம் எல்லாம் கண்ணீராக வழிந்தது!!! ஒரு ஸ்மைல் கூட பண்ணாத அளவுக்கு,என்ன தப்பு சார் பண்ணினேன் நான்??”

 

“அச்சோ!!! ப்ளீஸ், நீ அழாத மா… என்னால நீ அழுறது எனக்கு ரொம்ப கில்ட்டி யா இருக்கு… ப்ளீஸ் நிஜமா நீ எந்த தப்பும் பண்ணலை மா… நாந்தான் எல்லாம் தப்பும் பண்ணினேன். நா ஒன்னு நினைச்சு செஞ்சா, அது வேற மாதிரி ஆய்டிச்சு….பட் ப்ராமிஸ், நா உன்ன ஹர்ட் பண்ணனும் எதுவும் பண்ணலை…!”

 

“சிச்சுவேஷன் தான் அப்படி பீல் பண்ண வைச்சுடிச்சு என்றான் உண்மையான வருத்தத்துடன்….”

 

“சோ, நீங்களா நினைப்பீங்க,அப்புறம் நீங்க நினைச்சுது தப்புனு தெரிஞ்சு  மாறுவீங்க, நான் எல்லாத்துக்கும் சரினு ஈஸியா எடுத்துக்கணும், இல்லையா!!!! என்றாள்

 

அவள் கேட்டதில் இருந்த உண்மை மனதை சுட…..ரொம்ப ஹர்ட் ஆய்ட்டா போலையே!!! என்று வருந்தினான் சித்..

 

உண்மையில் அவள் அழுததும் தான்,அவள் எவ்ளோ மனவருத்தத்தில்   இருந்திருக்கிறாள் என்று உணர்ந்தான் சித். அதுவரைக்கும் கூட அது அவளை பாதிக்கக்கூடிய அளவு ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே என்று தான் நினைத்தான்.

 

நான் என்ன தப்பு பண்ணினேன் சார்? என்று கேட்ட போது தான், அவனுடைய நிலை, முடிவு என்று பாரபட்சமாக இருந்து விட்டது புரிந்தது…

 

அவள் மன வருத்தம் கொஞ்சமாவது குறைவது போல் என்ன சொல்வது, செய்வது என்று புரியாமல், “ரியலி நா எதுவும் பிளான் பண்ணி உன்னை ஹர்ட் பண்ணலை, என்னை நம்பணும் மா நீ!!!”

 

பதிலேதும் கூறாமல் வேகமாக சென்றாள் ஸ்வாதி!!

அன்று மாலை ஷங்கரும் சூர்யாவும் பிரபாவிடம் வந்து சப்னா செய்வது எல்லாம் சொன்னார்கள்.

 

கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது பிரபாவிற்கு,

 

“உங்க பிரண்ட்ஸ் யாரும் உங்க கிட்ட இதை பத்தி கேட்டு இருக்காங்களா? ஏன்னா நீங்க ரெண்டு பேரும் எங்க கூட க்ளோஸ்னு எல்லார்க்கும் தெரியும் தான….”

 

“யாரும் கேட்டதில்லை ப்ரோ, அவளை யாருமே மதிக்க மாட்டாங்க, ஆனாலும் ஒரு சீனியரை தைரியமா தன்னோடு சேர்த்து சொல்றாளே, உண்மை யா இருக்குமோனு எல்லார்க்கும் ஒரு தாட் இருக்கு ப்ரோ என்றான்”

 

“என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்னு தான் அந்த பொண்ணு இருக்கும் நினைக்கிறேன்! இல்லனா இப்படி பண்ணமுடியாது! நம்மளும் நல்லா யோசித்து தான் இதை எப்படி ஹான்டில் பண்றதுன்னு முடிவு பண்ணனும்….ஓக்கே”

 

“நான் சித் கிட்ட சொல்றேன், நீங்க எதுவும் பேசிடாதீங்க அந்த பொண்ணுக் கிட்ட… யூ கைஸ் ஸ்டே அவே பிரம் திஸ்.. ஓக்கே!  உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஆய்டக் கூடாது… என்றவனின் அன்பு அவர்களை நெகிழ்த்தியது….சித்தும் இவன் மாதிரி தான், அப்படி பட்டவனின் பேரை கெடுக்கிறாள் என்று கொலை வெறி வந்தது சப்னா மேல்!!!

 

அறையில், “மச்சான்!!சப்னானு சூர்யா கிளாஸ்ல இருக்கே ஒரு பொண்ணு என்று இழுத்தான்….. பிரபா

 

“ஆமா டா, நான் சொல்ல மறந்துட்டேன் உன்கிட்ட, என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணினா டா!! நாட் இன்டெர்ஸ்டேட் னு சொல்லிட்டேன்

 டா…..”

 

“அந்த பெண்ணை ரொம்ப லைட்டா எடுத்துக்காத சித், ஷி சீம்ஸ் டு பி லிட்டில் டேஞ்சரஸ் என்றவன், நீயும் அவளும் சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்க மாதிரி நியூஸ் ஸ்பிரட் பண்ணி விட்டிருக்களாம்….”

 

“வாட்!!! ரிடிக்குலஸ்!!! என்று நம்ப முடியாத அதிர்ச்சி அடைந்தான.எவ்ளோ தைரியம் டா!!! அந்த பொண்ணு என்ன நினைச்சுக்கிட்டு இதையெல்லாம் பண்ணுது??” என்றவனுக்கு கண் மண் தெரியாத கோவம் வந்தது….

 

“டேய் டேய்!! ரொம்ப டென்ஷன் ஆகாத, அவ தெளிவா ப்ளான் பண்ணி தான் இப்படி பண்றா,சோ கோவத்தில் யோசிக்காம நாம ரியாக்ட் பண்ணி அவளுக்கு எதையும் சாதகமா பண்ண கூடாது….என்ன பண்ணலாம்னு யோசிச்சு  பண்ணனும் டா…”

 

“ம்ம்…ம்ம். மச்சி, “என்ன திமிர் இருக்கணும் டா! சம்பந்தமே இல்லாத என்னை அவ கூட சேர்த்து பொய்யான விஷயங்கள் பரப்பரதுக்கு!”

 

“அவ என் கிட்ட ஏதேதோ ட்ரை பண்ண டா…. நா ஒன்னும் பெருசா கண்டுகலை .ஆனா இப்படி பண்ணி  என்ன எதிர்பார்க்கிறா?”

 

“உன் பேர் கெட்டு போறதை நீ விரும்புவியா? சோ ஏதோ ஒரு வகையிலே உன்னை பிரச்சினையில் மாட்டி விட யோசிச்சிருக்கலாம்!!!”

 

சப்னா  மும்பையில் வளர்ந்ததால் அவளுக்கு ஆண் பெண் உறவுகள் எல்லாம் பள்ளியிலேயே அத்துப்படி. எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, அவள் பிளாட்டில் இருக்கும் பத்தாம் வகுப்பு மாணவனுடன் முத்தம், அத்து மீறிய தொடுகைகள் என்று ஆரம்பித்தவள்….முக்கால்வாசி பெற்றோர்கள்  இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்ததால், இவர்கள் பண்ணுவதெல்லாம்  தெரிய வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது…..

 

அது மட்டும் இல்லாமல், தப்பு பண்ணனும்னு முடிவு செய்தவர்கள் எப்படியாவது அதை செய்து விடுவார்கள்… சப்னாவிற்கு  பணப்புழக்கம் மற்றும் ஆண்கள் பழக்கம் தான்… அதற்கு மேல் செல்லும்படியான ஆட்களின் பழக்கங்கள் ஏற்படவில்லை, அதனால் கிரிமினல் ஆகாமல் இருக்கிறாள்….

 

கல்லூரியில் லவ் விஷயத்தில் எல்லாம் பெரிதாக தலையிட மாட்டார்கள்  சித்தும்,அவன் பெயர் பிரச்சனையில் மாட்டும் படி விட மாட்டான்.விஷயம் தெரிந்து தன்னிடம் தான் வருவான் என்ற நம்பிக்கையில் தான் செய்கிறாள்…. அவன் அப்படி வரும் போது சில விஷயம் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருக்கிறாள்….

 

“சித், நமக்கு எக்ஸாம்ஸ் வேற வருது சோ இப்போ அந்த பொண்ணுகிட்ட எதுவும் பெருசா ரியாக்ட் பண்ணாத….”

 

“பட் நம்ம அவ என்ன பண்றானு அவளை வாட்ச் பண்ணிட்டே இருப்போம்…. எக்ஸாம்ஸ் முடிஞ்சு என்ன செய்யலாமோ செய்யலாம்” என்றான் பிரபா.

 

“பெருசா என்ன ஆகும்? இன்னும் என் பேரு தான் டேமேஜ் ஆகும்….”

 

“உனக்கு கஷ்டமாக தான் இருக்கும். நா சொல்றது இஷ்டம் இல்லாட்டி பரவாயில்லை டா, நீ இம்மீடியேட்டா எதுவும் செய்யணும்னு நினைக்கிறனா சொல்லு, செய்வோம்….”

 

“இல்ல இல்ல டா, பர்ஸ்ட் எக்ஸாம்ஸ் முடிச்சுருவோம்!”