நினைவு தூங்கிடாது 17

நினைவு தூங்கிடாது 17

நிஜம் 17 

உன்னிடம் மட்டும்…

என் வசம் இழக்கும்…

என் உணர்வுகளை

என்னவென்று நான் சொல்ல…

நான்கு நீண்ட வருடங்கள் கடந்தும், அந்த ஒருநாளில் ஏற்பட்ட கொடூர நினைவின் தாக்கம், அம்முவின் மனம், மூளை என அனைத்தையும் ஆக்கிரமித்து, அவளது மொத்த தூக்கத்தையும் பறித்திருந்தது.

நினைவில் தூங்கிடாது, அவளை வதைத்து அவளது தூக்கத்தை பறித்த, அந்த அரக்கனுக்கு தண்டனை வழங்கிய பிறகே, கொதித்துக் கொண்டிருந்த அவளது மனமும் மூளையும் அமைதி அடைந்தது.

இப்போது ருத்ராவின் அணைப்பு, ‘தன்னவனிடம் சரணடைந்த’ நிம்மதியை அளித்தது. அதனால் ருத்ரேஸ்வரனின் மார்பிலேயே முகம் புதைத்து, சில வருடங்களுக்குப் பிறகு, நிம்மதியாக தூக்கத்தை தழுவியிருந்தாள், அந்த அப்பாவி பெண் மான். 

அதைப் பார்த்த ரிஷி, புன்னகையுடன் வேறொரு இருக்கைக்கு மாறிக்கொண்டான். இதை உணரும் நிலையில் ருத்ரா இல்லை.

இத்தனை ஆண்டுகள் தன்னவளை பிரிந்திருந்த ஏக்கம் தீர, ருத்ராவும் அவளை அணைத்தபடி, கார் கண்ணாடியில் தலை சாய்த்து உறங்கியிருந்தான். 

கார்த்திக்கும் கிரிதரனும் காரை ஓட்ட வசதியாக, முன் இருக்கையில் அமர்ந்தும், ரிஷி காதலர்களுக்கு தனிமை வழங்க, நடு இருக்கையில் படுத்தும். ருத்ராவும் அம்முவும் மனநிறைவுடன் தங்களை மறந்த நிலையில், பின் இருக்கையில் கட்டிக்கொண்டும், அவர்களின் பயணம் பசுஞ்சோலை கிராமத்தை நோக்கி இனிதே தொடங்கியது.

சிறிது நேரம் நிம்மதியாக உறங்கியிருந்த பெண்ணின் தூக்கம் கலைந்தது. உடலை அசைக்க முடியாமல் நெளிந்தவள், ‘என்ன இது அசைய முடியல? யார் என்னை கட்டிப்பிடிச்சிருக்கா? வரு வா? ஆனா வரு இப்படி செய்ய மாட்டானே? ஒருவேளை நான் ரொம்ப டிஸ்டர்பா இருக்குறேன்னு ஆறுதலா புடிச்சிருப்பான்’ என குழப்பத்துடன், தனக்குத்தானே சமாதானம் கூறி, மெல்ல அவனின் தூக்கம் கலையாதவாறு, விலக முயன்றாள். அவள் அசைவில் தூக்கம் தடைப்பட்ட ருத்ரா, அவளை விலக விடாமல் மேலும் தன்னுள் இறுக்கினான். 

அணைப்பு இறுகிய பிறகே ‘தன்னை அணைத்திருப்பது நிச்சயம் வரு இல்லை. அப்ப இது யார்?’ என்ற கேள்விக்கு, அந்த அணைப்பு உரைத்த பதில்,’கட்டவண்டி’. அதில் திகைத்தவள் அந்த அணைப்பிலிருந்து விலக முடியாமல், முகத்தை மட்டும் நிமிர்த்தி, அவனது முகத்தை கண்டாள். அதே நேரம் உறக்கம் கலைந்த ருத்ராவும் அவளது முகம் பார்த்தான். அப்பறம் என்ன?

கண்ணும் கண்ணும் நோக்கியா தான்.

விழியோடு விழி கலந்தது. அவர்களின் உலகம் ஸ்தம்பித்தது.

ஜன்னல் வழியே நுழைந்த, குளுமையான காற்று தேகத்தை சில்லிட்டது. இதமான அணைப்பு, மிதமான வெப்பத்தை உடலில் செலுத்தியது. தன் துணையின் அருகாமையை தேகம் ரசித்தது. அவன் கண்கள், கோட்டோவியமாக தெரிந்த அவள் வதனத்தை படமெடுத்தது. அவன் விரல்கள், அந்த ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியது.

அவனது சுட்டு விரல், அவள் நெற்றியில் தொடங்கி, கண்களில் பயணித்து, கன்னங்களில் தேங்கி, இதழ்களில் இளைப்பாறியது. அங்கு காதல் மட்டுமே ஆட்சி புரிந்தது.

அவனின் தீண்டல், அவளின் கடந்த கால கசப்புகளை மறக்க வைத்தது. அவள் தன்னை மறந்தாள், தான் எடுத்திருக்கும் முடிவை மறந்தாள், தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் மறந்தாள். இந்த நிமிடம் அவள் நினைவில் இருந்ததெல்லாம் ‘அவளும் அவளது கட்டவண்டியும்’ மட்டுமே.

அவனின் விரல் செய்த மாயம், அன்று போல் (திருவிழாவுக்கு முன் ஆற்றில் சந்தித்தது) இன்றும் அவளை மாயலோகத்திற்கு இழுத்துச் சென்றது. தானாக அவளது விழிகள் மூடிக்கொண்டது. மூடிய இமைகளில் விழுந்தது முதல் அச்சாரம்.

பெண்ணின் தன் மீதான மயக்கம் புரிந்தது ஆண் அவனுக்கு. தன் அண்மையில் மட்டும் மயங்கும் பெண்மையில், ஆண்மை கர்வம் கொண்டது.

ஆம்! இந்த பெண்மை அவனிடம் மட்டுமே மயங்கும். ரிஷியுடன் நெருக்கமாக நடித்தாலும் அதில் துளி மயக்கமிருந்ததில்லை. இதை எப்போது உணர்ந்து கொள்ள போகிறாளோ?

அவளின் மயக்கம் அவனையும் மயக்கியது. அதே மயக்கத்துடன், அவளது முகத்தை நிமர்த்தி, விரல்களுக்கு வழங்கிய அதிகாரத்தை பறித்து இதழ்களுக்கு வழங்கினான். இப்போது இதழ்கள் கோட்டோவியத்திற்கு வர்ணம் தீட்டியது. அந்த ஓவியமும் வானவில் வர்ணம் கொண்டது.

சுற்றி இருந்த இருள் போர்வை போர்த்த, அருகில் யாரும் இல்லாத தனிமை, மேலும் முன்னேற தூண்டியது. அவளை அப்படியே காரின் இருக்கையில் சரித்து, அவனும் அவளின் மீது கவிழ்ந்து, வாகாக அவளது இதழ்களை சிறையிட்டிருந்தான். அவளது அனைத்து காயங்களுக்கும் மருந்தானது அந்த முத்தம். நான்கு வருட கவலைகளை மறக்கடித்தது ஒற்றை முத்தம். இத்தனை வருட பிரிவின் தவிப்பை காட்டியது அந்த இதழ் அணைப்பு.

ஆம்! இந்த இதழ் அணைப்பு மோகத்தை தூண்டவில்லை. அவனது காதலையும் பிரிவின் தவிப்பையும் மட்டுமே காட்டியது. அங்கு உணர்ச்சிகளுக்கு இடமில்லை, உணர்வுகள் மட்டுமே பேசி கொண்டது. ‘தன்னவள் தன்னிடம் திரும்பிவிட்டாள்’ என்ற நிம்மதி மட்டுமே நிறைந்திருந்தது. அவனின் கரங்களும் இதழும் அவளின் முகம் தாண்டி, எங்கும் பயணிக்கவில்லை. 

‘அவள் உயிரோடு இருக்கிறாள்’ என்பதை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. விருது வழங்கும் விழாவில், அவளை சந்தித்ததிலிருந்து ‘அவள் பிம்பம் கனவாக களைந்துவிடுமோ?’ என்ற பயம், அவன் மனம் எங்கும் வியாபித்திருந்தது. அவளது பிம்பம் ‘கனவல்ல நிஜம்’ என அவன் ஸ்பரிசத்தத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறான்.

வருடங்கள் கடந்து கிடைத்த, தன்னவளின் ஸ்பரிசத்தை அவ்வளவு எளிதில் விட்டு விடுவானா? அவளின் கட்டவண்டி. அந்த இதழனைப்பு முடிவின்றி, நீண்டு கொண்டே சென்றது. 

மூச்சுக்காற்றுக்கு அவள் தவித்த பின்பே, அவளது இதழ்களுக்கு விடுதலை கிடைத்தது. இப்போது பெண்ணின் மூளை வேலை செய்யத் தொடங்கி, நிதர்சனத்தை உரைத்தது. ‘எப்போதும் அவன் கரங்களில் உருகி, குழையும்’ தன் தேகத்தை நினைத்து, தன்மீதே கோபம் எழுந்தது. அந்தக் கோபத்தை அவன் மீது வார்த்தைகளாய் இறக்கினாள்.

“உன்னோட ஆசை தீர்ந்துடுச்சா? இனிமேலாவது என்னை நிம்மதியா விடுறியா?” என சத்தமின்றி சீறினாள். பாவம் அவளுக்குத் தெரியவில்லை, அவன் காட்டியது காதலை மட்டுமே என்று. அவனின் ஆசையை காட்டியிருந்தால், பெண்ணால் தாங்கியிருக்க முடியாது.

அவளின் குற்றச்சாட்டை கண்டு கொள்ளாத ருத்ரா, இன்னும் நன்றாக அவள் மீது படுத்துக் கொண்டு,”உன்மேல் எனக்கிருக்கும் ஆசை, இந்த ஜென்மத்தில் தீராது. உன்னை எப்பவும் விடுற ஐடியா எனக்கு இல்லை. பொம்மு செல்லம்” என, அவள் காதில் மீசை உரச கிறக்கமாக கூறினான்.

அவனின் நெருக்கத்தில் மீண்டும் உருக தொடங்கிய தேகத்தை  நிதானப்படுத்தி,”ஆனா எனக்கு உன் மேல் எந்த விருப்பமும் இல்லை” என்றாள் திடமில்லாத குரலில், திடமாக. 

அவளிடமிருந்து விலகியவன், அவளையும் எழுப்பினான். ஜன்னல் வழியே வெளியே தெரிந்த இருட்டை, வெறித்திருந்த அவளது முகத்தை திருப்பி, தன் முன் முகம் காண வைத்து,”உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைனாலும், எனக்கு பொண்டாட்டினா அது நீ மட்டும் தான். உன் கழுத்தில் தாலின்னு ஒன்னு ஏறுச்சுன்னா, அது என் கையால் மட்டும் தான். அதை ஞாபகம் வச்சுக்கோ” இப்போது அவன் குரல் கர்ஜித்தது.

“விளையாடாத ருத்ரா. உன் மேல பிந்து எவ்வளவு ஆசை வச்சிருக்கானு தெரியுமா? அவளை கல்யாணம் பண்ணிக்கோ, நீ சந்தோஷமா இருப்ப.” என்றாள் சகோதரிக்காக.

“அறஞ்சனா பல்லெல்லாம் கொட்டிடும். அவ கூட இதுவரைக்கும் நான் ஒரு வார்த்தை பேசினதில்லை. நிச்சயதார்த்தம் நடந்த அன்னைக்கு தான் அவள பார்த்தேன். அவளுக்கும் அப்படிதான். அப்பறம் எப்படி அவ என்னை ஆசைப்படுறான்னு சொல்ற?”

“உனக்குத் தெரியாது? நீ இன்னும் அவளை பார்க்கல. எப்போ உன் பேரை போன்ல கேட்டாலோ, அப்ப இருந்து அவகிட்ட மாற்றம் தெரியுது. அப்ப அவ உன்னை விரும்புறானு தான அர்த்தம்.” என அவள் பக்க நியாயத்தை கூறினாள்.

‘இவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது?’ என புரியாமல் தலையில் அடித்துக் கொண்டவன்,”இப்ப உன் கிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அவளுக்கு சரியாகட்டும். அவள் கிட்டயே பேசிக்கிறேன்.” என முகத்தை திருப்பி அமர்ந்து கொண்டான். அவளும் இயலாமையுடன் அவனை  பார்த்துவிட்டு, திரும்பிக் கொண்டாள்.

அவர்களின் நினைவு அன்று ருத்ரா, அம்முவை கடத்தி உண்மையை அறிந்த தினத்திற்கு சென்றது.

†††††

நிழலின் நிஜம்(15) தொடர்ச்சி

“உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவன நான் சும்மா விடமாட்டேன்” கோபத்தில் கர்ஜித்தான் ருத்ரேஷ்வரன்.

“இஸ் இட்?” என்றாள் கோணல் சிரிப்புடன்.

ருத்ரேஸ்வரனின் கண்கள் இடுங்கியது.

“இட்ஸ் டூ லேட் ருத்ரா? ஆல்ரெடி அவனை நாங்க மார்க் பண்ணியாச்சு.” என்றாள் கர்ஜனையோடு. 

“மார்க் பண்ணியாச்சுன்னா?” இடுங்கிய கண்கள் மேலும் இடுங்கியது.

“அவன் பண்ணுன அத்தனை தப்புகளுக்கான எவிடன்ஸும், எங்க கிட்ட இருக்கு? அத…”

“அத வச்சு என்ன யூஸ்?” என்றான் அவளை முடிக்க விடாமல்.

அதில் கடுப்பானவள்,”பேசிட்டு இருக்கேன்ல. பாதியில டிஸ்டர்ப் பண்ணா, சொல்ல மாட்டேன். நான் கிளம்பறேன்.” என முறுக்கினாள், ‘தான் அவன் கட்டுப்பாட்டில் இருக்கிறோம்’ என்பதை மறந்துபோய்.

பழைய அம்முவை கண்ட மகிழ்ச்சியில்,”ஓகே சொல்லி முடி”

சூரஜை பற்றிய எவிடன்ஸை, எப்படி சேகரித்தாள் என்பதை விளக்கியவள்,”அந்த எவிடென்ஸை போலீஸ்ல குடுத்து, அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க போறேன்.”

“ஹாஹா ஹாயோ அம்மு, அம்மு. இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கையே ஹாஹா” என நகைச்சுவையை கேட்டது போல், பெருங்குரலில் சிரித்தான் ருத்ரேஸ்வரன்.

“நான் என்ன ஜோக்கா சொன்னேன்? இப்படி சிரிக்கிற” என்றாள் எரிச்சலில்.

“அப்ப நீ சொன்னது ஜோக் இல்லையா?” அவள் முறைத்தாள்.”நீ சொன்னதை கேட்கும் போது, காமெடியா தான் இருக்கு. ‘ஆப்ரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்’ அது மாதிரி தான் இருக்கு உன்னோட தண்டனை.”

“என்ன உளறல் இது?” கேட்டாள் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு. 

“இது உளறல் இல்லமா, உன்மை. நீ பண்ண பிளானிங்ல, அவனை பற்றிய எவிடன்ஸை எடுத்த வரை பக்கா(சக்சஸ்), ஆனா முடிவு அதாவது போலீஸ்ல குடுப்பேன்றது, தப்பு(டெட்).”

“ஏன்?”

விளையாட்டை கைவிட்டவன், “ஒரு பொண்ணை கடத்துறது அவ்வளவு ஈசின்னு நினைச்சியா? அதுவும் நீ சொல்றத வச்சு பாக்கும்போது, எல்லா பொண்ணுங்களும் சொசைட்டில நல்ல அந்தஸ்தோடு இருந்தவங்க. இல்ல அவங்க வீட்டு வாரிசு”

“ம்ம்” 

“அப்படிப்பட்ட பொண்ணுங்களை கடத்தி விளையாடுறவன், அவ்வளவு அசால்டா இருப்பானா? போலீசை கைக்குள்ள போடாமயா இருப்பான்?”

இப்போதுதான் அது அவளின் மண்டையில் உரைத்தது. இருந்தாலும் கெத்து குறையாமல்,”அட்லீஸ்ட் அவன் பண்ண தப்புகள், எல்லாம் பேப்பர்ல வந்து மக்களுக்கு தெரியும்ல.”

“உன் மண்டையில மூளை இருக்கா? இல்லையா? போலீசையே வாங்குகிறவனுக்கு பத்திரிகை காரன் எம்மாத்திரம்”

“ஆமால! அப்ப அவனுக்கு தண்டனை வாங்கி தர முடியாதா? காலம் முழுக்க பெண்கள நாசம் பண்ணிக்கிட்டு தான் இருப்பானா? என்னால ஒன்னும் செய்ய முடியாதா?” மனம் சோர்ந்தாள். 

அவளின் வலது கரத்தை பற்றி, தன்னிரு கைக்குள் பொத்திக்கொண்டு,”நான் அவனுக்கு தண்டனை குடுக்கறேன். நீ என்னை நம்புறயா?” 

அவன் கண்களை ஊன்றி பார்த்தாள், அதில் ‘என்னை நம்பு’ என்ற மன்றாடல். அவனை நம்பினால். சுதந்திரமாக இருந்த மற்றொரு கையை எடுத்து, அவன் கை மீது வைத்து, ஒரு மென் புன்னகையை சிந்தினாள்,’நான் உன்னை நம்புகிறேன்’ என வார்த்தைகளின்றி செயலில் உணர்த்தினாள்.

அவள் நம்பிக்கையில் அவன் மகிழ்ந்தான். பற்றியிருந்த கரத்தில் மென் முத்தம் பதித்தான். அவனிடமிருந்த தன் கரத்தை வெடுக்கென உருவி கொண்டவள்,”ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத.”

“சரி இனி அவாய்ட் பண்ண முயற்சி பண்றேன். இப்ப சொல்லு? உன்னோட சிஸ்டர் எங்க இருக்கா? அவளுக்கு என்ன ஆச்சு?”

ஒரு பெருமூச்சுடன்,”அவளை பற்றி கூறியவள். நாளைக்கு காலையில கூட்டிட்டு போறேன். இப்ப என்னைக் காணாமல் என்னோட வரு தவிச்சு போயிருப்பான். நான் போகணும்.”

‘இவ்வளவு நேரம் நல்லா தான போச்சு? இப்ப மறுபடியும் வரு புராணத்தை ஆரம்பிக்கிறாளே, இவளை எப்படி வழிக்கு கொண்டு வரப்போறேனோ? ஆண்டவா’ என மனதில் புலம்ப மட்டுமே முடிந்தது.

அதை சொல்ல முடியாமல் தலையசைத்து, அவளை அழைத்துக் கொண்டு அவள் இல்லம் சென்றான். 

†††††

அங்கு வீட்டிலோ! இவள் எதிர்பார்த்ததுக்கு மாறாக அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. எந்த பரபரப்புமின்றி ரேகா சமையல் செய்ய, அவளுக்கு உதவியாக பிங்கி. ஆண்கள் மூவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட அம்முவின் காதில் புகை வராத குறை.

“ஒரு சின்ன பிள்ளையை காணமே, அவளைத் தேடுவோம்ன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? ஜாலியா இருக்கீங்க?” என இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்து நின்றாள்.

“யாருமா அது, காணாம போன சின்ன புள்ள? இங்க இருக்கிற சின்ன புள்ள பிங்கி தான். அவள் தான் எங்க கண்ணு முன்னாடியே நிக்கிறாளே. அப்புறம் நாங்க யாரை தேடுறது.” என்ற ரிஷியை, வெட்டவா இல்ல குத்தவா என பார்த்தாள், அவனின் மிரு பேபி.

“வரு உனக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு?” என சிணுங்கினாள்.

அவளை மேலும் கீழும் அளந்தவன்,”நல்ல திம்ஸ் கட்ட மாதிரி இருக்க.” ரிஷியின் பார்வையிலும் வார்த்தையிலும் ருத்ராவின் கைமுஸ்டிகள் இறுகியது.

ருத்ராவின் கோபத்தை கண்ட ரிஷியின் மனதில் குதூகலம் உண்டாகியது. மற்றவர்கள் நமட்டு சிரிப்புடன் நின்றார்கள். 

“வேண்டாம் வரு. என்னோட இன்னொரு முகத்த காட்ட வச்சிடாத.” என ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்.

‘நான்கு வருடங்களுக்கு முன்னிருந்த அம்முவை கண்ட,’ கார்த்திக்கும் ரேகாவும் மகிழ்ந்தனர். இந்த மாதிரி உரிமையான விளையாட்டு பேச்சை, ரிஷியும் கிரியும் ஏற்கனவே சில சமயம் கண்டிருக்கிறார்கள், ஆனால் அப்போது இல்லாத உயிர்ப்பு, இப்போது இருப்பதை கண்டு இனம் புரியாத இதம் கொண்டனர். சில நாட்களாக மட்டும் அவளை பார்க்கும், சின்னவள் பிங்கிக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

ஆம்! நான்கு வருடங்களுக்கு முன்பிருந்த அம்மு மீண்டிருக்கிறாள். எப்போதும் ஒட்ட வைத்த புன்னகையுடன், இறுக்கமாக இருக்கும் மித்ராலினி, இந்த கிராமத்திற்கு வந்ததிலிருந்து சற்று இளகி இருந்தாள். பிந்து சீக்கிரம் சரியாகிவிடுவாள் என்ற நம்பிக்கையிலும், மனதை அழுத்திய பாரத்தை ருத்ராவிடம் இறக்கி வைத்ததால், மனதில் உண்டான தெளிவிலும் முகம் பிரகாசித்தது.

அவளின் தெளிந்த முகத்தை கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. அந்தத் தெளிவும், மகிழ்ச்சியும் யாரிடமிருந்து வந்தது என உணர்ந்து கொண்டார்கள். ரிஷி மானசிகமாக ருத்ராவிற்கு நன்றி தெரிவித்தான். ‘அவளின் அனைத்து சந்தோஷத்தையும் அவளுக்கு திருப்பி தர வேண்டும்’ என மனதில் உறுதி எடுத்தான் ரிஷி வர்மா.

“அந்த முகமாவது உன்னை மாதிரி இல்லாம, அழகா இருக்குமா மிரு பேபி.” மீண்டும் சீண்டினான்.

“எங்க அம்முவை பார்த்தா அழகா இல்லன்னு சொல்றீங்க? அவள் அழகுக்கு கோவிலே கட்டலாம்” என அம்முவிற்கு ஆதரவாக களம் இறங்கினாள் பிங்கி.

‘கோவில் என்ன, விட்டா ஒருத்தன் தாஜ்மஹாலே கட்டுவான்’ என முனகினான் ரிஷி.

“அப்படி சொல்லுடி என் செல்லாக்குட்டி” என பிங்கியை கொஞ்சிய அம்மு,”உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என, ரிஷியை மிரட்டியவளின் பார்வை கார்த்திக், ரேகாவின் பக்கம் திரும்பியது.

“அய்யய்யோ நாங்க இல்ல” என அலறியவர்கள்,”அம்மு! உன் பக்கத்துல இருக்கிற நல்லவரு, எப்படியும் உன்கிட்ட விஷயத்த வாங்காம விட மாட்டாரு. அது தெரிஞ்சுதான் அவருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம்” என கார்த்திக்கும் ரேகாவும் ருத்ரேஷ்வரை கை காட்டினர். 

“யூ டூ வரு? என்னைக் காணாமல் தவச்சு போயிருப்பன்னு நினைச்சா? நீயும் அவங்க கூட சேர்ந்து…” என முடிக்க முடியாமல் கண்கலங்கினாள். ருத்ராவிடம் பகிர்ந்த தன் கடந்த காலம், அவளை பலவீனமாக்கிருந்தது.

இவ்வளவு நேரம் விளையாட்டாக பேசிய பெண், இப்போது கண்கலங்கவும் பதறிய ரிஷி,”மிரு பேபி” என கையை விரித்து, கண்களால் அழைப்பு விடுத்தான். ‘பசுவை கண்ட கன்றாக’ விரித்த அவன் கரங்களில் அடைக்கலம் புகுந்தாள், வருவின் மிரு பேபி.

தன் மனதிலிருந்த அனைத்தையும் ருத்ராவிடம், இறக்கி வைத்திருந்தாலும், ஏனோ அவனிடம் அடைக்கலம் தேட மனம் முரண்டியது. 

“உன்னை நான் அவ்வளவு ஈஸியா விட்டுடுவேனா மிரு குட்டி? எதுக்கு இப்படி கண்கலங்கற. நீ என் மேல வச்ச நம்பிக்கை அவ்ளோதானா?”

வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் கடுப்பிலிருந்த ருத்ரா, இப்போது அவள் பதில் சொல்லும் முன், அவளை நெருங்கி, தன் அணைப்பிற்கு கொண்டுவந்தான். ரிஷி! அம்முக்கு செய்த உதவி பெரியது, இல்லையென்று சொல்வதற்கில்லை, அதற்காக நன்றி சொல்லலாம், அம்முவை விட்டு கொடுக்க முடியுமா? அவன் பொறாமையை கண்டு ரிஷியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

“நான் கூட தான் நாலு வருஷமா நீ இல்லாமல் தவிச்சி போயிட்டேன். என்னை நீ கண்டுக்கவே மாட்டேங்குற.” என சரசம் பேசி, ரிஷியின் மேலிருந்த அவளது கவனத்தை தன் புரம் திருப்பினான்.

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த பெண், தன்னை அவனிடமிருந்து விடுவிக்க முயன்று கொண்டே,”அதுதான் இவ்வளவு சீக்கிரம் என்னை தேடி வந்தியா?” என்றாள் அலட்சியமாக.

அவளை தன்னிடமிருந்து விலக்கி,”எல்லாம் இந்த கார்த்திக் பண்ண வேலை. நீ உயிரோட இல்லைன்னு சொல்லி, என்னை திசை திருப்பிட்டான். எனக்கு சினிமா பாக்கிற பழக்கம் இல்லை. அதுதான் உன்னை கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு.” என கார்த்திகை முறைத்தான்.

“ஆமாம் நான் தான் சொன்னேன். அவள் உயிரோட இருக்கறது தெரிஞ்சா, கண்டிப்பா நீ அவளை தேடி போயிருப்ப. ரிஷி அப்பதான் கஷ்டப்பட்டு நடந்த சம்பவத்திலிருந்து, கொஞ்சம் கொஞ்சமா அவளை வெளிய கொண்டு வந்திட்டிருந்தான். அப்ப நீ அவள் முன்னாடி போயிருந்தால், அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் மொத்தமா போயிருக்கும். அதுதான் உன்கிட்ட அவ உயிரோட இல்லன்னு பொய் சொன்னேன். ஆனா எங்களுக்கே அவ ‘படத்துல நடிக்க போறேன்’ சொல்லவும் செம ஷாக். எங்க உன் கண்ணுல மாட்டிடுவாளோன்னு பயந்தேன். ஆனா அவளின் நல்ல நேரம் உனக்கு படம் என்ற வார்த்தையே பிடிக்காது.”

ருத்ரா தன் முறைப்பை மாற்றாமல்,”அப்பாவுக்கு உடம்பு சிரியில்லை, அவருக்கு பதிலா நான், அந்த அவார்ட் பங்ஷனுக்கு போனேன். இல்லைனா என் அம்மு உயிரோடு இருக்கிறது எனக்கு தெரியாமலே போயிருக்கும். எல்லாம் உன்னால்” என கார்த்திகை குற்றம் சாட்டினான்.

“அதான் இப்ப தெரிஞ்சிருச்சுல. போ போய் உன் வேலையை பார்”

“நீ வீட்டுக்கு வருவல அப்ப கவனிச்சுக்கிறேன்.” என கார்த்திகை பார்த்து கூறிய ருத்ரா, மற்றவர்களை பார்த்து,”நான் உங்க எல்லார் கூடவும் பேசணும்.” என்றான்.

“எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட்டு அப்புறம் பேசலாம்.” என்ற அம்முவின் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?

உணவு முடிந்ததும், பிங்கி அவளது வீட்டிற்கு சென்ற பின், “சூரஜை நான் தண்டிக்கிறேன்” என்ற ருத்ராவின் சொல்லை, கார்த்திகை தவிர அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ‘ருத்ராவின் தண்டனை எப்படி இருக்கும்?’ என்று தெரிந்த கார்த்திக் அதை மறுத்தான்.

“ஏன் கார்த்திக்? ருத்ரா தண்டிக்க கூடாது?” என்ற கிரிதரனின் கேள்விக்கு.

“கேக்குறாங்கள? சொல்லு ருத்ரா. உன்னோட தண்டனை என்ன என்று”

“மரணம்” ருத்ராவின் ஒரே வார்த்தையில் அனைவரும் ஸ்தம்பித்தனர்.

ஒரு உயிரை பறிப்பது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. அம்மு ஏற்கனவே ஒருவனை கொன்றிருந்தாலும், அது உணர்ச்சி வசத்தால் நடந்த சம்பவம். அதுவே அவளை மிகவும் பாதித்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை திட்டமிட்டு செய்யப்படும் கொலை.

அனைவரின் கண்களிலும் பயத்தை கண்ட ருத்ரா, அவர்களுக்கு விளக்கத் தொடங்கினான்.

“நீங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாலும், அதை அவங்க கண்டுக்க மாட்டாங்க. அப்படியே அவனை அரெஸ்ட் பண்ணாலும், அடுத்த ஒரு மணி நேரத்தில வெளிய வந்துடுவான். வெளிய வர அவன் சும்மா இருப்பானா? மாட்டான். அவனுடைய நிலைமைக்கு காரணமான மித்ராலினியை தான் முதல குறி வைப்பான். என்னதான் அவளுக்கு நம்ம பாதுகாப்பு கொடுக்கிறோம்னு சொன்னாலும், அவளோட சுதந்திரம் பறிபோகும்”

அனைவரின் முகத்திலிருக்கும் குழப்பத்தை கண்டு,”அவனை தண்டிச்சு தான் ஆகணும்னா, மரணம் மட்டும் தான் அவனுக்கான சரியான தண்டனை. மிச்சம் மீதி இல்லாமல் அழிக்கனும்”

ருத்ராவின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்தனர். “இதில் எனக்கு சம்மதம்” முதல் சம்மதம் வந்தது அம்முவிடம். பிறகு என்ன? திட்டம் தீட்டப்பட்டது. அடுத்த ஒரு வாரத்தில் சூரஜுக்கு மரண தண்டனை வழங்கி, பசுஞ்சோலை திரும்பி விட்டனர் நம் நாயகர்கள்.

Leave a Reply

error: Content is protected !!