ராகம் 3

ராகம் 3

ராகம் 3

“குட் மார்னிங் மேம்” என்ற வாழ்த்து தன் காதில் விழுகவும், தான் பார்த்து கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்த அந்த ஐம்பது வயதைக் கடந்த பெண்மணி, தன் எதிரில் நின்றவர்களை நிமிர்ந்து பார்த்தார்.

அங்கு அழகான வேலைப்பாடு கொண்ட ஸ்கை ப்ளூ கலர் டாப்ஸும் பாவாடையும் அணிந்து, அதற்கு பொருத்தமான அணிகலன்களுடன், எளிமையான ஆனால் எலிகன்ட் லுக்கில், சிரித்த முகத்துடன் மித்ராலினியும், அவளின் அருகே வெள்ளை டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஜீன்ஸில், பெண்களை மயக்கும் தோற்றத்தில் மாய கண்ணனாக ரிஷிவர்மாவும் நின்றிருந்தார்கள்.

மித்ராவுடன் ரிஷியை தன் அறையில் கண்டதும், முதலில் அவர் முகத்தில் ஆச்சரியம் தோன்றி, மெல்ல புன்னகைக்கு மாறியது. “குட் மார்னிங் மித்ரா. யூ ஆர் மோஸ்ட் வெல்கம். ஹவ் ஆர் யூ? டேக் யுவர் சீட்.”

“ஐ அம் குட் மேம். இவர் ஆக்டர் ரிஷிவர்மா. என்னோட பிரண்ட்.” என அவர் கேள்விக்கு பதிலளித்து, ரிஷியை முறையாக அறிமுகப்படுத்தினாள்.

“அவரை எப்படி எனக்கு தெரியாம இருக்கும்? அதுவும் உன் கூட பார்த்திருக்கேன். வாங்க மிஸ்டர் ரிஷி. ஏன் இன்னும் நிக்கிறீங்க உட்காருங்க?” என கல்லூரி முதல்வராக அவர்களை வரவேற்று உபசரித்தார்.

“தேங்க்யூ மேம்” என்ற ரிஷியும், மித்ராவும் அவருக்கு எதிரே அமர்ந்தனர்.

“கங்கிராஜுலேசன் மித்ரா.” என்றார் பெண்ணிடம்.

“தேங்க்யூ மேம்” என வெட்க புன்னகை சிந்தினாள் பெண்.

“வெட்கப்படும்போது ரொம்ப அழகா இருக்க மித்ரா.”

“போங்க மேம். எப்ப பார் என்னை கிண்டலடிக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சு.” என சிணுங்கினாள்.

“அழகா இருந்தா, அழகா இருக்கன்னு தான சொல்லணும்.”

“மேம்”

“ஓகே ஓகே நீ அழகா இல்லை நான் ஒத்துக்கறேன். இந்த உலகத்துலயே நீ தான் அசிங்கமான பொண்ணு. போதுமா?” விடாமல் வம்பு வளர்த்தார்.

“ஏன் மேம் ஏன்? இன்னைக்கு நான் தான் உங்களுக்கு கிடைச்சேனா?”

“எப்படி மித்ரா இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்ச?”

“மேம் வேண்டாம்.” என பல்லை கடித்தாள்.

“என்ன வேண்டாம் மித்ரா? நான் உனக்கு ஒண்ணுமே தரல்லையே.”

“மேம் என்னை விட்டுடுங்க. மீ பாவம்”

மீண்டும் அவர் ஏதோ பேச முயல, “மேம் ப்ளீஸ்” என பலமாக கும்பிடுபோட்டாள்.

அதை கண்டவர் வாய்விட்டு சிரித்துவிட்டார். ரிஷியாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை, அவனும் சிரித்துவிட்டான்.

இப்போது மித்ராவின் பார்வை, ‘யூ டூ வரு?’ என முறைத்தது. அவன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளை காண, அவளது முறைப்பு நீண்டது. வேறு வழியில்லாமல் காதை பிடித்துக்கொண்டு, ‘சாரி’ உதடசைத்தான். ‘அஃது. அந்த பயம் இருக்கட்டும்.’ ஒரு எச்சரிக்கை பார்வையுடன் முதல்வர் பக்கம் திரும்பினாள். அவன் தன் நெஞ்சில் கைவைத்து, ‘கிரேட் எஸ்கேப்’ என்றான் நிம்மதி பெருமூச்சுச்சுடன். முதல்வரோ கன்னத்தில் கைவைத்து சுவாரஸ்யமாக அவர்களை ரசித்திருந்தார். 

அதை கண்ட ரிஷி ஜெர்க்காகி, “மேம் நாங்க வந்த விஷயத்துக்கு வருவோம்.”

“ஓகே கைஸ் ஜோக்ஸ் அப்பார்ட். என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க?” என தன் விளையாட்டை மூட்டை கட்டி வைத்தவர், நிமிடத்தில் கல்லூரி முதல்வராக கம்பீரமாக கேள்வி எழுப்பினார்.

எப்போதும் போல், இப்போதும் அவரது கம்பீரத்தை ரசித்த பெண், “மேம் சோட்டு, பிங்கியோட ஹாஸ்டலை காலி பண்ணி, டேஸ்காலரா கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்.”

அவள் ‘யாரை சொல்கிறாள்?’ என புரியாமல் முழித்த முதல்வரை பார்க்கவும், ரிஷிக்கு விஷயம் புரிந்தது. அவன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, ‘ஐயோ மிரு பேபி! நான் சொன்னா மட்டும் உனக்கு கோபம் வருது. நீ இன்னும் வளரனும்.’ என மனதில் செல்லமாக கடிந்தவன் முதல்வரிடம், “மேம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற ராம்குமார் அண்ட் கயல்விழியை சொல்றாங்க.” தன் தவறு புரிய, மித்ராவின் முகத்தில் அசட்டு சிரிப்பு வந்தது.

“ஓ அவங்களா! மித்ரா, நீ அவங்களுக்கு லோக்கல் கார்டியன்னு நினைக்கிறேன்.”

‘ஆம்’ பெண்ணின் தலை அசைந்தது.

“அவங்களை கூட்டிட்டு போக அவங்க பேரன்ட்ஸ் பர்மிஷன் வேணும்.”

அவர் சொன்னதை கேட்டவுடன் தன் தலையில் அடித்து கொண்டு, “சாரி மேம். இதைத்தான் உங்ககிட்ட முதல்ல கொடுத்து இருக்கணும்.” என ஒரு கடிதத்தை நீட்டினாள். அதில் அம்முவுடன், இருவரும் தங்குவதற்கு சம்மதம் தெரிவித்த, அவர்களது பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் இருந்தது.

அதை படித்த முதல்வர், “ஓகே மித்ரா! இரண்டு பேரோட ஹாஸ்டல் வார்டன் கிட்டயும் இந்த கடிதத்தை குடுத்து அவங்கள காலி பண்ணிக்க.” என அவரும் அந்த கடிதத்தில் கல்லூரி முத்திரையுடன் கையெழுத்துட்டு வழங்கினார். 

“தேங்க்ஸ் மேம்.” என விடை பெற முயன்ற பெண்ணை தடுத்து, “வயசு பிள்ளைகளை உன்னால் ஜாக்கரதையா பார்த்துக்க முடியுமா?” சந்தேகமாக வினவினார்.

“முடியும் மேம்.” உறுதியாக வார்த்தை வந்தது பெண்ணிடம்.

“ரெண்டு பேரை பார்த்துக்கிறது அவ்வளவு சுலபமில்லை. அதிலும் பெண் பிள்ளையை. அசம்பாவிதம் நடந்தால் நீ தான் பொறுப்பாவ.”

“ரெண்டு பேர் இல்ல மேம். நாலு பேர். இன்னும் ரெண்டு பேர் இன்ஜினியரிங் காலேஜ் படிக்கிறாங்க. அவங்களையும் கூட்டிட்டு போக போறேன்.”

“நாலு பேரா? உன்னால் முடியுமா மித்ரா?” கவலை கொண்டார்.

“அவங்க பிறந்ததிலிருந்து என்கூட வளர்ந்தவங்க. ரொம்ப நல்ல பசங்க. அவங்களால் எந்த பிரச்சனையும் வராது. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நான் பார்த்துக்கிறேன் மேம்.”

அவளது உறுதியை பார்த்தவர், “இதில் இவ்வளவு தெளிவா இருக்க பொண்ணு, உன் திருமண வாழ்க்கையில் மட்டும் ஏன் அடம்பிடிக்கற?” அதில் அவரது உண்மையான அக்கறை மட்டுமே தெரிந்தது.

“எங்க ரெண்டு பேத்தோட உறவை அதாவது நட்பை உலகமே தப்பா சொல்லலாம். அதை பத்தி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் எங்கள் வாழ்க்கை துணைக்கு எங்கள் மேல் நம்பிக்கை வேண்டாமா? அந்த நம்பிக்கையை கொண்டுவர இது ஒரு சின்ன போராட்டம். சீக்கிரம் சரியாயிடும். நாங்க வரோம் மேம்.” என ரிஷியை அழைத்துக் கொண்டு வெளியேறினாள் மித்ராலினி. உறுதியோடு செல்லும் அவளை கண்டு அசந்து நின்றார் அந்த கல்லூரியின் முதல்வர்.

★★★

முதலில் சோட்டுவையும் பிங்கியையும் அழைத்து கொண்டு, அடுத்த கல்லூரியை நோக்கி வாகனம் சென்றது.

“அம்மு எதுக்கு ஹாஸ்டல்ல காலி பண்ணி கூட்டிட்டு வர?” புரியாமல் கேட்டான் சோட்டு.

மர்ம புன்னகையோடு அமர்ந்திருந்தாள் மித்ராலினி. அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, அவர்களை அழைத்துச் செல்லும் காரணத்தை இன்னும் சொல்லவில்லை.

“ஏன் அம்மு எங்கள் படிப்பை நிறுத்தச் சொல்லி வீட்ல சொல்லிட்டாங்களா? மாப்பிள்ளை ஏதும் பாத்துட்டாங்களா? எனக்கு படிக்கணும் அம்மு. நீ அம்மா, அப்பா கிட்ட பேசி எனக்கு பர்மிஷன் வாங்கி தா.” என்ற சின்னவள், தன் தாடையை தட்டி சிறிது நேரம் சிந்தித்து விட்டு, “அப்படின்னாலும் என்னை கூட்டிட்டு போற ஓகே. எதுக்கு சோட்டுவையும் காலி பண்றாங்க?” என பயத்தில் பிங்கி, வரிசையாக கேள்வி எழுப்பினாள்.

அவளின் கேள்விகள் அனைத்தும், மித்ராவின் மனதின் மூலையில் மறைந்திருந்த பழைய நினைவுகளை, தட்டி எழுப்பியது. பேச்சு வர மறுத்தது. அவள் சிலையாக சமைந்து போனாள். 

‘சிறு பெண்ணுக்கு திருமணமா?’ ரிஷியின் மனம் நொந்தது. தன்னவளும் அதை கடந்து வந்தவள் என நினைத்தவனின் மனம் ரணமாக எரிந்தது.

மித்ராவின் ஸ்தம்பித்த நிலையை கண்டவன், பிங்கியிடம் திரும்பி, “ஹே ஸ்வீட்டி. என்ன பேசுற? உனக்கு மாப்பிள்ளை பார்க்க விட்டுடுவேனா? என்னோட லிட்டில் சிஸ்டருக்கு எப்போ கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும். நீ எதை பத்தியும் கவலைப்படாம படி.” என அவளுக்கு, அம்மு தர வேண்டிய ஆறுதலை, ரிஷி தன் வார்த்தைகள் மூலம் தந்தான்.

அவனது வார்த்தைகளில் நிம்மதி அடைந்த பிங்கி தன் கலகல சுபாவத்திற்கு திரும்பினாள். ஆனால் மித்ராவின் மனம் அமைதியடைய மறுத்தது.

பதினெட்டு வயது முடியவும், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள், இன்னும் நம் நாட்டில் ஏராளமாக உள்ளனர்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பிற்போக்கு குணமா? இல்லை பெண்களை சுமையாக நினைத்து, கடமையை முடிக்க நினைக்கும் பெற்றோர்களின் அறியாமையா? இல்லை இந்த காலத்தில் பெண்களை பாதுகாக்க முடியாத அவல நிலையா? ஏதோ ஒன்று. ஆனால் இன்னமும் பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை, பதினெட்டு வயது பூர்த்தியடையவும், திருமண பந்தத்தில் தள்ளி விடவே விரும்புகிறார்கள். அவர்களுக்கும் ஆசை, பாசம், லட்சியம் என பல கனவுகள் இருக்கும் என்பதை சிந்திக்க தவருகிறார்கள்.

ஏழு வருடங்களுக்கு முன், தன் சகோதரியும் இதே நிலையில் நின்றிருந்தாள் என்றும், அவளை கரம் பற்ற இருந்த மணாலன் தன்னவன் என்பது தெரியாமல், மகிழ்ச்சி அடைந்த தன்னை நினைத்தும் அம்முவின் மனம் கலங்கியது.

தன்னருகில் அமர்ந்திருந்த அவளது மணவாட்டத்தை, முகவாட்டத்தில் கண்டு கொண்ட ரிஷி, ஆதரவாக அவளது கரம் பற்றினான். அவனது தொடுதலில் பெண்ணின் பார்வை அவன் புறம் திரும்பியது. தங்களை சுற்றி இருந்தவர்களை கண்களால் காட்டி, கைகளால் தன் உதட்டை இழுத்து ‘சிரி’ என்பது போல் சைகை காட்டினான்.

அவன் சொல்வதை புரிந்த பெண்ணும் தன் வருத்தத்தை மறைத்து புன்னகை சிந்தினாள். அவளது புன்னகையை காணவும் ரிஷியின் மனம் சற்று அமைதியடைந்தது.

அடுத்து நேராக சென்று பப்புவையும் கிட்டுவையும் அழைத்துக் கொண்டு ரிஷியின் இல்லம் நுழைந்தனர்.

“ஹே மை டியர் சுட்டீஸ். இனி நீங்க இங்கதான் தங்க போறீங்க. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்க போறோம். சந்தோஷமா?” என்று தன் புருவமேற்றி கேட்டாள் மித்ராலினி.

“ஹே அம்மு நிஜமாதான் சொல்றியா?” கோரசாக கத்தினார்கள்.

இதுவரை ஒன்றும் புரியாமல் வந்த நால்வருக்கும், இனி அம்முவுடன் தங்கப் போவதில் பெரும் குஷியாகி போனது.

“உங்க அம்மு, உங்ககிட்ட பொய் சொல்வாளா?” 

“எங்க அம்முக்கு வாய தொறந்தா பொய் மட்டும் தான் வரும்.” என்றான் கிட்டு நக்கலாக.

“டேய் கிட்டப்பா….” என பல்லை கடித்தாள்.

“என்ன?” கெத்தாக கேட்டான்.

“அப்ப நான் பொய்யாடா சொல்றேன்.” தன் இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

அதில் கொஞ்சம் உஷாரானவன், “எங்க அம்மு எங்ககிட்ட பொய் சொல்ல மாட்டா. இருந்தாலு…. சந்தேகமா…. இருக்கே….” என முடிக்காமல் ராகம் இழுத்தான்.

“அவ்வளவு சந்தேகத்தோட நீ இங்கே இருக்க வேண்டாம். வா உன்ன கொண்டு போய் ஹாஸ்டல்ல விடுறேன்.” முறுக்கிக் கொண்டாள்.

“ஏய் இரு, இரு இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ கோவிச்சுக்கிற?” எங்கு தன்னை மட்டும் விடுதியில் விட்டு விடுவாளோ என்ற பீதி அவனுக்கு.

“நீ என்னை நம்பலைல.”

“அப்போ உண்மையா தான் சொல்றியா?”

“..…”

“அம்மா அப்பா எல்லாம் சம்மதம் சொல்லிட்டாங்களா?”

“அவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்கியாச்சு.” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.

சந்தேகம் தெளிந்தவர்கள், “ஹே ஜாலி.” என அவளை கட்டிக் கொண்டனர்.

அவளை விட்டு விலகியவுடன் பிங்கி, “அம்மு நிஜமா உன் கூடவே இருக்க போறோமா?”

“ஆமாண்டி பட்டு. என் கூடயே இருக்க போற.” என அவளது கன்னத்தைப் பற்றி கொஞ்சியவள், முன்னெற்றியில் இதழ் பதித்தாள்.

“நம்பவே முடியல. ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என தாவி அவளை மீண்டும் அணைத்து கொண்டாள்.

★★★

இன்னும் நம்ப முடியாத மகிழ்ச்சியில் திளைத்தனர் நண்பர்கள். முதலில் சுதாரித்த சோட்டு, “எங்களுக்காக எங்க வீட்டில் பேசி இங்க தங்க சம்மதம் வாங்கினியா? நீ அவ்வளவு நல்லவ இல்லையே. எங்கேயோ இடிக்குதே?” என்றான் சந்தேகமாக.

‘எங்கேயும் இடிக்கல. இப்ப நான் தான் உன்னை அடிக்கப் போறேன்.’ மித்ரா மனதில் நினைத்தாள்.

“எனக்கும் இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதுடா சோட்டு?” என அவனுடன் கைகோர்த்தான் கிட்டு.

‘உள்குத்து இல்லடா வெளி குத்தே தரேன்.’ மித்ரா கடும் கோபத்தில் நின்றாள்.

“யார வேணாலும் நம்பலாம். இந்த அம்முவை மட்டும் நம்பவே கூடாது.” என்றான் பப்பு நமட்டு சிரிப்புடன்.

“என்னடா சொன்ன?” என காளி அவதாரம் எடுத்தால் அம்மு.

“உண்மையச் சொன்னேன்.” 

“ஆமா இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோட பேரன். உண்மையை சொல்ல. இந்தா வரேன் உன்னை மொத்த.” என அவர்களை விரட்ட தொடங்கினாள். 

“அவங்களை விடாத அம்மு.” என பிங்கி அவர்களுடன் இணைந்தாள்.

“முடிஞ்சா எங்களை பிடி.” என அவளுக்கு போக்கு காட்டினார்கள்.

அவர்கள் ஓட, இவள் துரத்த, என அந்த வீடெங்கும் சிரிப்பொலி நிறைந்தது. சில மாதங்களாக அருங்காட்சியகமாக காட்சியளித்த வீடு இன்று புது பொலிவு பெற்றது.

மித்ரா ஓடுவது ரிஷிக்கு பயமாக இருந்தது, இருந்தாலும் அவளை தடுக்க மனமில்லாமல் அவர்களை ரசித்திருந்தான். தன் மிரு பேபியின் மகிழ்ச்சி அவளிடம் திரும்பி வந்த சந்தோஷம் அவனிடம். இதே போல் அவளது பிரச்சனைகளை கலைந்து, அவளின் உண்மையான சந்தோஷத்தை அவள் கரங்களில் கொடுக்க, எந்த எல்லைக்கும் செல்லலாம் என முடிவு செய்தான்.

இங்கு இவர்களது மகிழ்ச்சி மீண்டிருக்க, பசுஞ்சோலை கிராமத்தில் பிருந்தா கண்ணீரில் கரைந்தாள்.

ராகம் இசைக்கும்

error: Content is protected !!