மனதோடு மனதாக – 11
மனதோடு மனதாக – 11
11
வெண்ணிலாவிற்காக ஆர்டர் செய்திருந்த கேக் வரவும், ‘இது செம ஸ்பெஷல் டே மை பேபி.. உன்னை சப்ரைஸ் பண்ண இதோ உன் மாமா வரேன்..’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், வாயில் கதவை தாழிடவும், கதவின் ஓசைக் கேட்டு சேகர் எட்டிப் பார்த்தான்.
“என்னடா?” சேகரின் கேள்விக்கு, கேக்கை காட்டி கண் சிமிட்டி,
“என் பர்த்டே பேபிக்கு..” என்றவன், சேகர் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கவும், புன்னகையுடன் ப்ரிட்ஜில் வைத்திருந்த ஃபலூடாவையும் எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்..
அறையின் உள்ளே சென்றவனுக்கு அந்த அறையில் எந்த அசைவுமின்றி இருக்கவும், “என்னடா இது? ஆளையே காணும்.. அப்படியே எகிறி குதிச்சு ஓடிப் போயிட்டாளோ?” என்றபடி அவன் பார்வையை சுழல விட, சுவரோடு சுவராக, அவனது டேபிளின் அருகே பதட்டத்துடன் நின்றுக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு ‘ஹோ..’ என்று இருந்தது..
படுக்கை விரிப்பை மாற்றி, அதில் ரோஜா இதழ்கள் தூவி விடப்பட்டு, தலையணையில் மல்லிகைச் சரம் வேறு இருக்க, அதைப் பார்த்த ஆர்யன், ‘அம்மா..’ என்று பல்லைக் கடித்தான்.
அவன் வந்தது தெரிந்தும், தனது முகத்தை அவனுக்கு காட்டாமல், தலையைக் குனிந்தபடி அவள் நின்றுக் கொண்டிருக்க, ‘ஆல் இஸ் வெல்.. ஆல் இஸ் வெல்.. நீ கலக்கு ஆர்யா.’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன், மெல்ல அவளருகே சென்று, புன்னகை முகமாக, “ஹாப்பி பர்த்டே மை பொண்டாட்டி.. விஷ் யூ எ வெரி ஹாப்பி பர்த்டே.. காட் ப்ளஸ் யூ..” என்று வாழ்த்தவும், வெண்ணிலா பட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..
அவளது கண்கள் சாசர் போல விரிந்திருக்க, “என்ன அப்படியே ஷாக்கா பார்க்கற? உனக்காக கேக் எல்லாம் வாங்கி இருக்கேன் பாரு.. என்னோட வெண்ணிலாவுக்கு பிடிச்ச ப்ளாக் கரண்ட் ப்ளேவர் வேற வாங்கி இருக்கேன்.. சீக்கிரம் வந்து கேக் வெட்டும்மா.. நான் இந்த ப்ளேவர் கேக்கை சாப்பிட்டதே இல்ல.. ஐம் வெயிட்டிங்..” என்றபடி டேபிளில் கேக்கை வைக்கவும், வெண்ணிலா பேச்சிழந்து அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளது முகத்தைப் பார்த்தவன், “என்ன?” என்று புன்னகையுடன் கேட்க,
“மாமா.. இன்னைக்கு என்னோட பர்த்டேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவும் கேக் எல்லாம் வாங்கி இருக்கீங்க? எப்படி?” ஆச்சரியமாக கேட்டவளின் முன்பு, இரண்டு ஃபலூடாக்களையும் வைத்தவன்,
“அதெல்லாம் சஸ்பென்ஸ்.. லெட் யுவர் பர்த்டே செலிபரேஷன் பிகின்.. வா.. வந்து கேக் கட் பண்ணு..” என்றவன், கேக்கைச் சுற்றி இருபது மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவும், பதட்டம் தணிந்து, அவனை புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்தாள்.
அவளைத் தனதருகே இழுத்தவன், அவளது கையில் கத்தியை கொடுத்து, “கேக் வெட்டு.. அதுக்கு முன்னால ஏதாவது மனசுல விஷ் பண்ணிக்கிட்டு கேண்டிலை ஊது..” எனவும், அவன் சொன்னபடியே செய்தவள்,
“இப்போ வெட்டவா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்க,
“வெட்டு வெண்ணிலா.. அதுக்கு முன்னால நான் போட்டோ எடுக்கறேன்.. நம்ம கல்யாணம் ஆன அப்பறம் வர உன்னோட முதல் பிறந்தநாள்.. அதுவும் நம்ம கல்யாண நாள்லயே வந்திருக்கு.. அதை தவற விடலாமா?” என்று கேட்டவன், அவளை கேக்குடன் புகைப்படம் எடுத்து, ‘கட் பண்ணு’ என்று சைகைக் காட்ட, வெண்ணிலா கேக்கை வெட்டத் துவங்கினாள்..
“ஹாப்பி பர்த்டே டூ யூ..” என்று பாடிக் கொண்டே அனைத்தையும் அவன் படம் பிடிக்க, கேக்கை கட் செய்தவள், ஒரு பீசை எடுத்து தனது வாயில் திணித்துக் கொள்ள,
“அடிப்பாவி.. இங்க ஒருத்தன் உன் பக்கத்துல இந்த கேக் பீஸ்க்காக ஆசையா நின்னுட்டு இருக்கேன்.. எனக்குத் தராம உன் வாயில போட்டுக்கற? போ.. மீ சேட்..” அழுவது போல செய்தவனின் முகத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, ஒரு பீஸ் கேக்கை எடுத்து அவனுக்கு நீட்டவும், அதை வாங்கி,
“முதல்ல பர்த்டே பேபிக்கு.. ஆ காட்டு வெண்ணிலா..” என்றபடி அவளது வாயின் அருகே எடுத்துச் செல்ல,
“தேங்க் யூ மாமா..” என்றவள், தனது செப்பு வாயைத் திறந்து வாங்கிக் கொள்ளவும், அதையும் தனது மொபைலில் செஃல்பி எடுத்துக் கொண்டவன்,
“பர்த்டே பேபிக்கு கொடுத்தாச்சு.. இப்போ எனக்குக் கொடு..” சொல்லிக் கொண்டே அவன் வாயைத் திறக்கவும், மறுக்கத் தோன்றாமல், நாணத்துடன் எம்பி அவனது வாயின் அருகே கேக்கை எடுத்துச் செல்ல, அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே, அவளது கையைப் பிடித்து வாயில் வாங்கிக் கொண்டவன்,
சுவைத்துக் கொண்டே, “செம டேஸ்ட்டா இருக்கு.. அதுவும் என் பொண்டாட்டி ஊட்டி சாப்பிடறது எவ்வளவு ருசியா இருக்குத் தெரியுமா?” கண் சிமிட்டி சிரிக்க, அவனது முகத்தைப் பார்த்தவள், நாணத்துடன் தலைக்கவிழ்ந்தாள்..
அவளது நாடியைப் பிடித்து, முகத்தை நிமிர்த்தியவன், “வா. இப்போ நாம அடுத்து ஃபலூடா சாப்பிடலாம்.. உனக்கு கேக் போதுமா? மீதம் எல்லாம் நான் ப்ரிட்ஜ்ல கொண்டு வச்சிடவா?” என்று கேட்கவும்,
“நான் இன்னொரு பீஸ் எடுத்துக்கறேன் மாமா.. செம டேஸ்டியா இருக்கு..” என்று எடுத்துக் கொள்ளவும், மீதி கேக்கை பிரிட்ஜில் வைத்து விட்டு வந்தான்..
தனது செல்லைப் பார்த்துக் கொண்டே, கேக்கையும் ஃபலூடாவையும் மாற்றி மாற்றி சாப்பிட, அவளது அருகே வந்து அமர்ந்தவனைப் பார்த்து புன்னகைத்தவள்,
“தேங்க்ஸ் மாமா. காலையில இருந்து இருந்த டென்ஷன்ல நானே இன்னைக்கு என் பர்த்டேங்கறதை மறந்துட்டேன்.. எங்க அம்மாவும் மறந்துட்டாங்க.. பாவம் அவங்களும்..” என்று வருந்தியவள்,
“ஆனா.. உங்களுக்கு எப்படித் தெரியும்? என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் விஷ் போட்டு இருக்காங்க.. இப்போ தான் நானும் பார்க்கறேன்.. கேக் சூப்பரா இருக்கு மாமா..” தனது மகிழ்ச்சியை அவள் பகிரவும்,
“வித் ப்ளெஷர் மை பொண்டாட்டி.. எனக்கு திலீபன் தான் உன் பர்த்டேன்னு மெசேஜ் பண்ணி இருந்தான்.. அது தான் சாப்பாடு ஆர்டர் பண்ணும்போது கேக் ஆர்டர் பண்ணிட்டேன்.. எப்படி என் சப்ரைஸ்?” காலரை தூக்கிவிட்டு அவன் கேட்கவும்,
“சூப்பர் மாமா.. செம சப்ரைஸ்.. நான் ரொம்ப ஹாப்பி.. அப்படியே நீங்க எனக்கு போட்டோ எல்லாம் அனுப்புங்க.. நான் அம்மாவுக்கு அனுப்பறேன்.. அவங்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க..” என்ற வெண்ணிலா,
“என்னோட நம்பர் உங்கக்கிட்ட இருக்கா? நீங்க சொல்லுங்க நான் மிஸ்ட் கால் தரேன்..” என்று சொல்லவும், நம்பரை தந்து, அவளது நம்பரையும் குறித்துக் கொண்டவன், “ஃப்ரெண்ட்ஸ்” என்று தனது கையை நீட்டவும், வெண்ணிலா தயக்கத்துடன் அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
இருவரும் அமைதியாக ஃபலூடாவை உண்ணத் துவங்க, “நீ எவ்வளவு நாளைக்கு காலேஜ்க்கு லீவ் போட்டு இருக்க?” ஸ்பூனை வாயில் திணித்துக் கொண்டே அவளது முகத்தைப் பார்க்க,
“நான் செவ்வாய்க்கிழமை காலேஜ்க்கு போகலாம்ன்னு இருந்தேன் மாமா.. இப்போ நான் என்ன செய்யட்டும்? எவ்வளவு நாள் லீவ் போடணும்?” குழப்பத்துடன் அவள் பதில் கேள்வி கேட்க,
“ஒரு ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா லீவ் போட முடியுமா? உனக்கு காலேஜ்ல வேற எதுவும் முக்கியமான கிளாஸ் இல்லையே.. அப்படி இல்லன்னா வெள்ளிக்கிழமைல இருந்து நாம ட்யூட்டி ஜாயின் பண்ணிக்கலாம்.. அம்மா நம்மளை ஊருக்கு வரச் சொல்றாங்க.. ஒரு நாள் போயிட்டு வந்துடலாமா? வந்துட்டு உங்க வீட்டுக்கு போய் உன் புக்ஸ், உனக்கு தேவையானது எல்லாம் எடுத்துட்டு வந்து, நாம வீட்டுல செட் பண்ணிட்டா, வெள்ளிக்கிழமை காலேஜ் போகலாம்..
தினமும் நான் வீட்டுல இருக்கற நாளுல உன்னை காலையில டிராப் பண்ணிடறேன்.. மத்த நாள் தான் என்ன ஏதுன்னு பார்க்கணும்.. ஈவினிங் தினமும் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்.. ரொம்ப வர்ஸ்ட் கேஸ்ல அந்த டைம்ல கால் இருந்தா பிக்கப் பண்றது கஷ்டம்.. அப்போ தான் என்ன செய்யலாம்ன்னு பார்க்கனும்.. மச்சான் கிட்ட உதவி கேட்க வேண்டியது தான்..” ஆர்யன் தனது திட்டத்தைக் கடகடவென்று சொல்லிக் கொண்டே வர, வெண்ணிலா திருதிருவென்று விழித்தாள்..
அவளது முகத்தைப் பார்த்தவன் என்னவென்றுக் கேட்க, “மாமா.. நான் இன்னும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கல்யாணம் ஆனதை சொல்லல.. சொன்னா கிண்டல் செய்வாங்க மாமா.. நான் எப்பவுமே அண்ணா கூட தான் காலேஜ்க்கு போவேன்.. இப்போ புதுசா நீங்க வந்தா உங்களை யாருன்னு கேட்பாங்களே? நான் என்னன்னு சொல்லட்டும்?” என்று கேட்க, ஆர்யன் யோசனையுடன் அவளைப் பார்க்க,
“ஆனா.. எப்படியும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நான் சொல்லித்தானே ஆகணும்.. அவங்க பக்கத்துல இருக்கும்போது என் கழுத்துல தாலியைப் பார்த்து, அவங்களே கேட்டா எங்க மூணு பேருக்குமே தர்ம சங்கடம் தானே.. அவங்கக்கிட்ட நான் விஷயத்தை மறைக்கிறேன்னு நினைப்பாங்க தானே.. அது எங்க ப்ரெண்ட்ஷிப்க்கு துரோகம் செய்யறது போலத் தானே ஆகும்..” என்று தயங்கியபடி அவனிடம் ஆலோசனைக் கேட்க, தனது மனைவியின் நேர்மையையும், தனது நட்புக்கு அவள் கொடுக்கும் மரியாதையையும் எண்ணி மகிழ்ந்தவன், அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்..
சிறிது நேரம் அவனது பார்வையைத் தாங்கியவள், தலையைக் குனிந்துக் கொண்டு, “ஏதாவது சொல்லுங்க மாமா.. ஏன் இப்படி என்னையே பார்த்துட்டு இருக்கீங்க..” உள்ளே சென்றுவிட்ட குரலில் அவள் கேட்க,
“சொல்லித் தான் ஆகணும்? ஆனா.. என்னன்னு சொல்லப் போற?” அவன் கூர்மையுடன் கேட்க, அவள் யோசிக்கத் துவங்கினாள்.
“வேற என்ன சொல்றது? அக்கா இது போல பண்ணிட்டதுனால..” அவள் துவங்கவுமே,
“வெண்ணிலா..” ஆர்யன் அவளை அடக்கினான்.. அவனது குரலைக் கேட்டவள், பயத்துடன் அவனது முகத்தைப் பார்க்க, தனது கோபத்தை அடக்கிக் கொண்டான்.
“நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? இல்ல காலையில நடந்த உங்க காயத்தை நியாபகப்படுத்திட்டேனா?” குழப்பமாக அவள் கேட்க, ஆர்யன் ஒரு பெருமூச்சுடன் அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்..
அவளைத் தன் பக்கம் திருப்பியவன், “இங்கப் பாரு வெண்ணிலா.. நான் உன்கிட்ட இதைப் பத்தி முதலும் கடைசியுமா பேசி முடிச்சிடறேன்.. இது தான் நாம ஜீவிதாவைப் பத்தி பேசறது கடைசியா இருக்கணும்.. கொஞ்சம் கவனமா கேளு..” என்றவன், அவள் தலையசைக்கவும், அவளது கையை எடுத்து தனது கைக்குள் பொத்திக் கொண்டு,
“இன்னொரு தடவ உன் வாயில இருந்து அக்காவுக்கு பதிலா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வரக் கூடாது.. நீ உங்க அக்காவுக்கு மாற்று கிடையாது.. புரியுதா? நீ அப்படி சொல்றது எனக்குப் பிடிக்கல..” அவன் சொல்லவுமே, வெண்ணிலா திகைப்புடன் பார்க்க, ஆர்யன் தன்னை நிதானித்துக் கொண்டான்.
“வெண்ணிலா.. நானும் இந்த கல்யாணத்துல டைலமால தான் இருந்தேன்.. எனக்கு அந்த கல்யாணம் சரியா வரும்ன்னு தோணல.. நேத்திக்கு எல்லாம் கூட கல்யாணத்துல இஷ்டமில்லாம தான் சுத்திட்டு இருந்தேன்.. மண்டபத்துக்கும் அப்படித் தான் கிளம்பி வந்தேன்.. ஏன் நான் உங்க அக்கா கூட பேசினது கூட கிடையாது.. அது தெரியுமா?” அவன் சொல்லவுமே, ஹான் என்று பார்த்துக் கொண்டிருந்தவள்,
“தெரியுமே..” என்று துவங்கி நாக்கை கடித்துக் கொள்ள,
“என்ன தெரியும்?” குழப்பமாக கேட்டு அவள் முகம் பார்த்தான்.
“இல்ல.. நீங்க அக்காகிட்ட பேசவே இல்லை எனக்குத் தெரியும்ன்னு சொல்ல வந்தேன்.. நான் சில சமயம் கிண்டலா அவகிட்ட உங்களைப் பத்தி கேட்பேனா.. அப்போ எரிஞ்சு எரிஞ்சு விழுவா.. அவரு ஆஸ்திரேலியால இருக்கறதுனால பேச லைன் கிடைக்கல.. போ.. போய் படிக்கிற வேலையைப் பாருன்னு சொல்லுவா.. எனக்கு அப்பப்போ அவளுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையோன்னு தோணும்.. ஆனா.. நான் தான் லூசுத் தனமா நினைக்கிறேன்னு என்னை நானே திட்டிப்பேன்.. கடைசி நிமிஷத்துல இப்படி பண்ணுவான்னு நானும் எதிர்பார்க்கல மாமா.” வெண்ணிலாவின் பதிலில் அவனது இதழ்களில் புன்னகை விரிந்தது.
“உங்க அக்கா என்கிட்டே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு ஒரே ஒரு மெசேஜ் போட்டு இருந்தாலே போதும், நானே சந்தோஷமா இந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்.. கடைசி நிமிஷத்துல அவங்க வெளிய போய் உங்க பெரியப்பா பெரியம்மாவுக்கு எல்லாம் ரொம்ப தரமசங்கடமான நிலைமை.. பாவம் அவங்க..” என்றவன் வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்து,
“நான் சொல்றதை நல்லா கவனி.. இதே இன்னைக்கு காலையில அந்த களேபரத்துல உன்னைத் தவிர யாரையாவது காட்டி பொண்ணுன்னு சொல்லி இருந்தாலும், இன்னைக்கு இந்த கல்யாணம் நடந்திருக்காது.. நீங்கறதுனால தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்..” எனவும், வெண்ணிலா அவனை விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“மாமா.. என்ன மாமா சொல்றீங்க? இல்ல.. எனக்குப் புரியல..” வெண்ணிலா கேட்க,
“எல்லாம் நான் சொன்னதை மறுபடியும் யோசிச்சு பாரு நல்லா புரியும்.. இனிமே அக்காவுக்கு பதிலா.. அது இதுன்னு பேசாதே.. அதை இதோட விடு.. இனிமே அந்த பேச்சை எடுத்த எனக்கு கெட்ட கோபம் வரும்.. நீ என்னோட வைஃப். அதுல ஒரு சதவிகிதம் கூட டைலமா இல்லாம உன்னை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிருக்கேன்.. புரியுதா?” ஆர்யன் சொல்லவும், வெண்ணிலா அவனை அதிர்ந்துப் பார்த்தாள்..
“எனக்கு தூக்கம் வருது.. தூங்கலாமா? ரொம்ப டயர்டா இருக்கு..” என்றவன், கட்டிலின் அடியில் இருந்த இழுப்பறையில் இருந்து ஒரு போர்வையை எடுத்து அவளுக்குக் கொடுத்து,
“புடவைல கஷ்டமா இருந்தா ப்ரீயா ஏதாவது மாத்திக்கோ..” என்றவன், ஃபலூடா கப்புகளை குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு படுத்துக் கொள்ள, வெண்ணிலா உடை மாற்றி வந்தாள்..
அவளது மனது ஆர்யன் பேசியவைகளிலேயே உழன்றுக் கொண்டிருக்க, மனம் என்னும் குரங்கு, அவன் தனது கழுத்தில் மாங்கல்யம் சூட்டியது முதல் அசைப் போடத் துவங்கியது..
குங்குமம் வைத்த பொழுது தனது நடுக்கம் புரிந்து, தனது தோளில் கை வைத்து அழுத்தியது அவளது நினைவில் வரவும், மனதிற்குள் ஒரு வித இதம்.. சொல்லி வைத்தார் போல ரிசப்ஷனுக்கு இருவருமே ஒரே நிற உடையில் மேடை ஏறியதையும், அதற்குப்பிறகு போட்டோவிற்கு போஸ் கொடுக்க அவனது மார்பில் கை வைத்து நின்று அவனது கண்ணோடு கண் கலந்து நின்றதையும் யோசித்துப் பார்த்தவளுக்கு இதழில் புன்னகை அரும்பியது..
வரிசையாக நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அவளது மனது அசைப்போட, வரவேற்பில் அவன் தனது பெயரைச் சொல்லி தனது நண்பர்களிடம் அறிமுகப்படுத்தியது நினைவு வரவும்,
‘மாமா எப்படியும் ஆபீஸ்ல எல்லாம் பத்திரிக்கை தந்திருப்பாங்க தானே.. அதுல அவ பேர் தானே இருந்திருக்கும்? எப்படி இவரு என் பேர் சொன்ன பொழுது அவங்க எல்லாம் குழம்பாம, ஷாக் ஆகாம போனாங்க? ஒருவேளை வெண்ணிலாவை செல்லப் பேருன்னு நினைச்சிட்டாங்களோ?’ என்று நினைத்துக் கொண்டவள், வேகமாக அவனிடம் கேட்டே தீரவேண்டும் என்ற ஆவலில், பெட்டில் சென்று படுத்துக் கொண்டாள்..
“மாமா.. தூங்கிட்டீங்களா?” வெண்ணிலாவின் குரலில், கண்களை மூடிக் கொண்டிருந்தவன், திரும்பி அவளது முகத்தைப் பார்த்தவன்,
“சொல்லும்மா..” எனவும்,
“என் மேல கோபமா இருக்கீங்களா?” அவள் கேட்கவும்,
“உன் மேல கோபமா? இல்லயேடா.. ஏன் என்னாச்சு?” அவனது பதிலில் புன்னகைத்தவள்,
“மாமா.. எனக்கு ஒரு டவுட்டு.. நம்ம ரிசப்ஷன்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்னை வெண்ணிலான்னு தானே சொன்னீங்க? ஆனா.. அவங்களுக்கு எல்லாம் கொடுத்த பத்திரிக்கையில என்னோட பேர் இருந்திருக்காதே.. அப்போ நீங்க என் பேர் சொன்ன பொழுது, என்னடா இவன் வேற பேரு சொல்றான்னு கொஞ்சம் கூட அவங்க கன்ப்யூஸ் ஆகவே இல்லையே. எப்படி?” தனது சந்தேகத்தை அவள் கேட்கவும், அவள் பக்கம் திரும்பிப் படுத்தவன்,
“நம்ம கல்யாணத்துக்கு அவங்க விஷ் பண்ணி காலையில மெசேஜ் போட்டு இருந்தாங்க.. ரிசப்ஷன்க்கு ரெடி ஆகிட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த கேப்ல, மாமா எடுத்திருந்த நம்ம கல்யாண போட்டோவை அவங்களுக்கு ஷேர் செய்து, ‘மை க்யூட் வைஃப் வெண்ணிலா’ன்னு உன்னை அவங்களுக்கு இன்ட்ரோ பண்ணிட்டேன்.. அதுலயே அவங்களுக்கு புரிஞ்சி இருக்கும்.. சிம்பிள்..” எனவும், வெண்ணிலா அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அவளது கன்னத்தைத் தட்டியவனைப் பார்த்தவள்,
“ஏன் என்னன்னு அவங்க ரீசன் கேட்கலையா?” ஆவலாக கேட்டவளைப் பார்த்தவன்,
“நான் இன்விடேஷன் தந்ததே அந்த பத்து பேருக்கு தான்.. அவங்களுக்கு நான் டைலமால இருக்கறது தெரியும்.. அதனால நான் ஹாப்பியா அந்த போட்டோவைப் போட்டு சொல்லவுமே அவங்களுக்கு புரிஞ்சிருக்கும். வெள்ளிக்கிழமை நான் ஆபிஸ் ஜாயின் பண்ணினா அன்னைக்கு இருக்கு எனக்கு.” என்றவன் சிரித்துக் கொண்டு,
“குட் நைட் வெண்ணி.. தூங்கு..” என்றவன், கண்களை மூடிக்கொள்ள,
“மாமா.. மாமா.” வெண்ணிலா அவசரமாக அழைத்தாள்..
“என்னடாம்மா?” கண்களைத் திறந்த ஆர்யன் கேட்கவும்,
“எனக்கு போட்டோஸ் எல்லாம் அனுப்புங்க மாமா.. பர்த்டே போட்டோ, நம்ம கல்யாண போட்டோ எல்லாம்..” என்று கேட்கவும், தனது மொபைலை எடுத்து அவளிடம் தந்து,
“நம்பர் லாக் போட்டு இருக்கேன்.. **** இது தான் நம்பர்.. அதுல மாமா அனுப்பின எல்லா போட்டோவும் இருக்கும்..” என்றவன், அவசரமாக,
“இரு.. இரு.. நான் முதல்ல ரெண்டு போட்டோ அனுப்பறேன்.. அப்பறம் எது வேணுமோ அதை எடுத்துக்கோ..” என்றவன், அவளது பிறந்தநாள் புகைப்படத்தையும், அவன் அவளது கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டிய புகைப்படத்தையும், ரிசப்ஷனில் அவளை அணைத்தது போல இருந்த புகைப்படத்தையும் அனுப்பிவிட்டு,
“இந்தா மீதியை எது வேணுமோ அதை எடுத்துக்கோ..” என்றவன், அவளது கையில் தனது மொபைலைக் கொடுத்துவிட்டு,
“ஸ்வீட் ட்ரீம்ஸ் வெண்ணி..” என்று சொல்லிவிட்டு, அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே கண்களை மூட, அவனிடம் இருந்த மொத்த புகைப்படத்தையும் எடுத்துக் கொண்ட வெண்ணிலா, நன்றாக உறங்கும் அவனையே பார்த்துக் கொண்டு கண்களை மூடினாள்..