NSK EPILOGUE

NSK EPILOGUE

மூன்று வருடங்கள் கழித்து…

மண்டபமே நிறைந்திருந்தது மக்கள் கூட்டத்தால்… 

இத்தனை வருட காதலை அடையபோகும் சந்தோஷத்தில் மணமேடையில் அமர்ந்திருந்தான் வசீகரன்.

ஐயர் சொல்லும் மந்திரங்களுக்கு எல்லாம் அர்த்தம் கேட்டு கேட்டு ஒவ்வொன்றையும் செய்தான் வசீகரன்.

விபு அவனை கலாய்த்தபடியே பக்கத்தில் அபியின் ஒன்றரை வயது குழந்தையைத் தூக்கி வைத்திருந்தான்.

மொத்த குடும்பமும் அவனுக்காய் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்தனர்.

மணமகள் அறையில் பூங்குழலியும் மிளனியும் ஆதினியை தயார்ப்படுத்திய படியே கிண்டலடித்தனர்.

“உனக்கு தெரியுமா மிளா, நம்ம ஆதினி மேடம்க்கு வசி அண்ணான்னா சுத்தமா பிடிக்காது. ஆனா இன்னைக்கு பாரேன் அவரையே கல்யாணம் பண்ண மேடம் எவ்வளோ மேக்கப் போடுறாங்க” என பூங்குழலி ஓட்ட,

“ஓஹோ” என இழுத்தாள் மிளனி. இப்போது அவள் கழுத்தில் புதிதாய் விபுனன் கடிய தாலி மின்னியது.

“போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும். ஆப்போசிட் சைட்ஸ் ஆர் ஆல்வேஸ் அட்ராக்ட் ஈச் அதர் சரியா” எனப் புன்னகை மாறாமல் கிளம்பினாள் ஆதினி.

ஐயர் பொண்ணை அழைத்து வர சொல்ல, ஆதினி தேவலோக ரம்பையே தோற்கடிக்கும் விதமாக அத்தனை அழகையும் ஒத்திகைக்கு எடுத்து நண்பர்கள் கூட்டதின் நடுவே நாணத்தோடு வருகை தந்தாள்.

அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்து மணமேடையில் வசீகரனின் பக்கத்தில் அமர்ந்தாள்.

வசீகரன் அவளையே வசீகரிக்கும் பார்வையோடு பார்க்க, திடீரென ஆதினி அவனிடம் கர்ச்சீப்பை நீட்டினாள்.

தனது பார்வைக்கு வெட்கப்படுவாள் என்றிருந்தவனுக்கு அவளின் செயல் புரியாமல், “இது எதுக்கு” எனக் கேட்க,

“ஜொள்ளு ஊத்துது பாருங்க. அதை துடைச்சிக்கதான்” என அவனுக்கு பல்ப் கொடுத்தாள் பெண்.

அதனை கேட்டு சிறியவர்கள் எல்லாம் சிரிக்க, அவளை முறைக்க முடியாமல் சிரித்தே விட்டான்.

“எந்த கல்யாணத்துலயும் இப்படி ஒரு பல்ப் நிகழ்வு நடந்திருக்காது ஆது குட்டி” எனப் பல்லை கடித்து சொல்ல, அவளோ அழகாக புன்னகைத்து வசீகரனை புன்னகையால் மயக்கினாள்.

“ரெண்டு பேரும் பேசினது போதும் இப்போ கொஞ்சம் சடங்கை செய்ங்கோ” என ஐயர் சொல்ல, அதன்பின் இருவரும் சேர்ந்து அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தனர்.

நங்கையும் பாரியும் சேர்ந்து மைந்தனின் ஆசைக்கிணங்க தாலியை எடுத்து அவன் கையில் கொடுக்க, வசீகரன் காதலுடன் அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டி தன்னில் பாதியாக்கி கொண்டான். அவளின் கண்களிலும் காதல் அறும்பியது.

இருவரும் ஒரே நேரத்தில் ஒரே போல் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “ஐ லவ் யூ” என்றனர்.

இந்த நான்காண்டில் காதலித்தனர். திகட்ட திகட்ட இருவருமே காதலித்தனர் ஆனால் காதலை வார்த்தையால் சொன்னது இல்லை. அதனை செயலில் காட்டினர் நங்கை மற்றும் பாரியை போலவே.

மற்ற சடங்குகள் முடிந்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இரவு பொழுது நெருங்க நெருங்க அபியும் விபுவும் சேர்ந்து அவனுக்கு வகுப்பு எடுத்த பின்பே அவனின் அறைக்கு விடுவித்தனர்.

ஆதினி குளித்து முடித்து கிளம்பியவளை நங்கையும் சீதாவும் சேர்ந்து அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்று சாமி கும்பிட்டு விளக்கேற்ற சொல்ல, அவளும் சாமி கும்பிட்டு விளக்கேற்றினாள்.

“ப்யூட்டி இன்னைக்கு நான் அழகா இருக்கேனா?” எனக் கேட்க,

“என்னோட அம்முக்கு என்ன குறை, அவ இந்த வீட்டோட…” என வாக்கியத்தை நிறுத்தி விட,

“ப்யூட்டி வீட்டோட மகாலட்சுமின்னு சொல்லு” என மிரட்டினாள்.

“ஏய்! என்னடி பண்ற நீ? அவங்க இப்போ உனக்கு அத்தை. அவங்களுக்கு மரியாதை கொடு” என்று சீதா அவளுக்கு அறிவுரை வழங்க,

அவளோ, “அடுத்த டயலாக் என்ன, பொண்ணை எப்படி வளர்த்திருக்காங்க பாருன்னு எல்லாம் கேப்பாங்க அதானே” எனச் சிரித்தாள்.

“அந்த டையலாக்க எப்படி என்னோட மாமியாரால சொல்ல முடியும் சொல்லுங்க. வளர்த்ததே அவங்க தானே” என நங்கையை பார்த்து கண்ணடித்தாள்.

“சரி சரி பேசினது போதும் நீ இப்போ கிளம்பு” என அவளை இருவரும் சேர்ந்தே அவளது அறைக்கு அனுப்பி வைத்தனர்.

உள்ளே வந்தவளுக்கு இத்தனை நேரம் இல்லாத நாணம், பயம் எல்லாம் பெண்ணுக்கு வந்து விட, அவளின் அழகை அணு அணுவாய் இரசித்தான் கணவன்.

கணவனை கண்டதும் அவளுக்குள் தோன்றிய பயம், நாணம் எல்லாம் எங்கோ பறந்து சென்றது. அவனின் மீது அவள் வைத்திருந்த காதல் அத்தகையது.

இவர்கள் ஒரு புதுவிதமான தம்பதியாய் எல்லாரின் முன்னும் திகழ்வர்.

“என்னடி கொஞ்சம் வெட்கத்தோடும் பயத்தோடும் வருவேன்னு பார்த்தா சாதாரணமா வர” எனக் கேள்வி கேட்க,

“ஏனோ நீ இருக்கிற நம்பிக்கை. அது வந்த சுவடே தெரியாம பொய்டுச்சி. என்னவன் என்னுடன் இருக்கும் போது எனக்கென்ன பயம் கரண்” என்று அழகாய் சொன்னவள் காதலாய் நோக்கினாள்.

“செல்லமே” என அவளை செல்லம் கொஞ்சினான் காதல் கணவன்.

“சரி சரி இங்க வந்து உட்காருங்க. எனக்கு பதில் வேணும்” என்று மனைவி நேரங்காலம் தெரியாமல் பேச,

“ஏன்டி, உனக்கு இப்போதான்  பதில் வேணுமா என்ன?” என ஒரு மாதிரியாய் பார்த்து வைத்தான்.

“ஆமாம் ஆமாம்” என மண்டையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

“போச்சுடா” என்று கட்டிலில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.

“நீங்க  இப்போ சொன்னா நான் அந்த பனிஷ்மெண்டை செய்றேன்” குனிந்து அவன் முகம் பார்க்க, அதில் மெலிதாய் புன்னகை உருவெடுத்தது.

“சரி சொல்றேன்” என்று கட்டிலில் ஜம்பமாய் அவன் அமர்ந்துக் கொள்ள, அவள் அவனையே பார்த்து நின்றாள்.

“இப்படியே நின்னுட்டே இருக்க போறீயா நீ?”

“நீங்க இப்படி உட்கார்ந்திருந்தா நான் எப்படி உக்காரது”

“அதுவா இப்படிதான்” என்று அவள் வலக்கரத்தை பிடித்து தன் மடியில் அமர்த்தி கொண்டு லாவாக அவளை தன்னுள் சாய்த்துக் கொண்டான்.

“இப்போ கேளு…  நான் சொல்றேன்” என உல்லாசமாக சொல்ல,

“சரி உங்க காதல் கதையை சொல்லுங்க கொஞ்சம் கேட்போம்” என கிண்டலாக கேட்டாள்.

“அதுவா உன்ன எப்போ அந்த பஸ்ல பார்த்தேனோ அப்போ இந்த ஹீரோ விழுந்துட்டான்”

“உண்மையா?” என்று அவனின் முகத்தை பார்த்தாள்.

“உண்மைதான்  செல்லம்” என அவள் நெற்றியில் இதழ் பதித்து மேலும் தொடர்ந்தான்.

“என்னைய அப்பா ரொம்ப நல்லவனாதான் வளர்த்தாரு. அதுனால என்னைய யாருமே திட்டினது கூட இல்லை. அதேப்போலதான் என்னைய சுத்தி வந்த பெண்களையும் பேச முயற்சி பண்ண பெண்களையும்தான்  பார்த்திருக்கேன். ஆனா என்னையே அடிச்சு கேள்வி கேட்ட பாரேன். அதுல உன்னோட தைரியம் ரொம்பவே பிடித்தது தெரியுமா. தப்புன்னு தெரிஞ்சதும் நீ தட்டி கேட்ட பாரேன் அது எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா நீ தப்பான ஆளை தட்டிக்கேட்ட. கொஞ்சம் அவமானமா வேற இருந்ததா அதுனால அடுத்த இடத்திலேயே இறங்கிட்டேன்.

ஊருக்கு  வந்து பார்த்தா நீ என்னோட அம்மாவுக்காக சொந்த அப்பாவையே எதிர்த்து நின்னு பேசியிருக்க. அப்போ உன்னோட பாசம் ரொம்பவே பிடித்தது.

உன்னோட ஒவ்வொரு செயலுமே என்னை ஈர்க்கதான்  செய்தது. நீ என்னைய கஷ்டப்படுத்த நினைச்சாலும் அம்மாக்காக இருந்த ஒரே உறவு நீ மட்டும்தான் . அதுவே எனக்கு உன்னைய அதிகமா பிடிக்க காரணமானது.

என்னோட காதலை உணர்ந்த நொடி எது தெரியுமா, உன்னை காணோம்னு தெரிஞ்சதும் நான் தவிச்ச தவிப்பு இருக்கே. எனக்கே தெரியல எங்கிருந்து அப்படியொரு வேகம், விவேகம் வந்ததுன்னு. ஆனா வந்தது உன்னையும் கண்டு பிடிச்சேன். எனக்காக காத்திட்டு இருந்த பாரு அந்த நொடி என்னோட காதலை முழுதாக உணர்ந்தேன்” என அவன் சொல்ல இவளோ அவனின் கையில் கிள்ளி, “சேம் பிட்ச் கரண்”என்றாள்.

“அடியேய்! ஒழுங்கா கேளு இல்லைன்னா நான் எதுவும் சொல்ல மாட்டேன் பாத்துக்கோ” என முறுக்கி கொள்ள,

“சரி சரி கண்டின்யூ பண்ணு”

“நீயும் உன்னோட காதலை உடனே சொல்லிட்ட. ஏதோ வானத்துல பறந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு. ஆனா அதை அனுபவிக்க முடியாத நிலையில என்னோட நிலை இருந்தது. எப்படியும் நான் நங்கையின் மகனு தெரிஞ்சா யாரும் ஏத்துக்க மாட்டாங்கன்னுதான் தள்ளி தள்ளி போனேன். ஆனா அபி எப்போ உன்னோட வாழ்க்கையில வந்தானோ அவ்வளவு கோபம் வந்துச்சு அவன்மேல…

நிதர்சனம் இது தானு புரிஞ்சு நான் என்னோட பாதையை சரி வர தொடங்கினேன். ஆனா எதிர்ப்பார்க்காத விதமா நிச்சயித்து அன்னைக்கு நடந்தது என்னைய ரொம்பவே பாதிச்சது. அப்புறம் உண்மைய கேட்டு தெரிஞ்துக்கப்புறம் உன்னைய விட கூடாதுன்னு முடிவு பண்ணி, இதோ கல்யாணத்தையும் முடிச்சிட்டேன்” என்று முழுக்கதையும் சுருக்கமாக கூறி முடித்து அவள் முகத்தை பார்க்க, அவளோ அழகாக தூங்கி கொண்டு இருந்தாள்.

‘பார்க்கதான்  ஜான்சிராணி மாதிரி, பண்ணுறது எல்லாம் சின்ன பிள்ளைதனம்’ என நினைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து அவளோடு அவனும் உறங்கி போனான்.

நடு இரவில் யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து தூக்கம் கலைந்து எழுந்த வசியை, ஆதினி முறைத்தாள்.

“எதுக்குடி இப்படி தூங்குற மனுசனை எழுப்புற” என சிறு கோபத்துடன் கேட்க,

“இன்னைக்கு நமக்கு முதலிரவு. நீ என்னென்னா நல்லா தூங்கிட்டு இருக்கியே மச்சான்” என வெட்கத்துடன் சொல்ல,

இந்த நான்காண்டில் மச்சான் என்ற ஒற்றை அழைப்பிற்கே பனிஷ்மெண்ட் என கூறி, அழைக்க வைக்க முயன்றான்.

இன்றுதான்  அது நிறைவேறியுள்ளது. அவளின் மச்சான் என்ற அழைப்பே மழைச்சாரலாய் அவனுள் இறங்க, “ஒரே ஒருமுறை மச்சான்னு சொல்லேன்டி செல்லம்” எனக் கொஞ்சலுடன் கெஞ்ச,

“மச்சான்… மச்சான்… மச்சான் போதுமா”  என வெட்கப்பட்டாள் அவனின் ஆது குட்டி.

அதனை இரசித்தவன் அவளை அப்படியே தன்னுள் இழுத்து மச்சான் என்று அழைத்த இதழை சுவைக்க தொடங்கி அவளை சுவைக்க தொடங்கினான்.

சிறிது நேரத்திற்கு முன்பு வெட்கம் எதற்கு என்று கேட்டவளை வெட்கத்தாலே சிணுங்க வைத்து அவளை அணு அணுவாய் அந்த ஷணத்தை இரசிக்க செய்தான்.

இருளில் வெளிச்சத்திற்காக நின்ற மதி கூட இவர்களின் ஊடலில் கலந்த கூடலில் நாணம் கொண்டு தன்னை மேகங்களுக்கு நடுவில் மறைத்து கொண்டது.

அடுத்தநாள் காலையிலே ஜோடியாய் இருவரும் கோயிலுக்குச் சென்று வந்தனர்.

மாலை ஐந்து மணிப்போல் ரிசப்ஷன் வைத்திருக்க, அதற்காக மொத்த குடும்பமும் கிளம்பத் தொடங்கியது.

மாலை ஆறு மணிப்போல் நடன கச்சேரியோடு ஆரம்பமானது அந்த விழா.

விழாவின் நாயகனும் நாயகியும் கண்ணாலே காதலை பறைச்சாற்றி கொண்டு இருந்தனர்.

விருந்தினர்களை நங்கையும் பாரியும் பார்த்துக் கொண்டனர்.

எல்லா நிகழ்வும் முடிந்து வசீகரனின் ஆசைக்கிணங்க குடும்பமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியைப் பறைச்சாற்றினார்கள்.

அவனின் ஆசைப்படியே அவனின் திருமணத்தில் குடும்பமாய் இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை அடைந்தான். அக்குடும்பத்தின் மகிழ்ச்சி எப்போதும் இருக்கட்டும் என்று இறைவனிடம் வேண்டி விடைப்பெறுவோம்.

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென…

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.

 

***நிறைவுற்றது***

error: Content is protected !!