ஆட்டம்-35

ஆட்டம்-35

ஆட்டம்-35

கடகடவென கீழே ஓடி வரும் உத்ராவை பார்த்த நறுமுகை அவளை கிண்டலாக பார்த்து புன்னகைக்க, நறுமுகையை முறைத்த உத்ரா, “என்னோட ரூம் எது?” என்று கேட்க, “மேல அபி மாமா ரூம் பக்கத்துல.. அம்மாவோட ரூம்” என்று கூறியவள், அங்கு அமர்ந்திருந்த கணவனை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்துவிட்டுச் செல்ல,

‘ஏன் அத அம்மா ரூம்னு சொன்னா பத்தாதா.. அவன் ரூமை வேற மென்ஷன் பண்ணனுமா?’ உள்ளுக்குள் நறுமுகையை கொட்டியவள் மேலே செல்லலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மேலே இருந்து அபிமன்யு படிகளில் இறங்கும் ஓசை, வஞ்சியவளின் செவியில் விழ, அவளின் செவியிலுள்ள விழிகளுக்குத் தெரியாதா ரோமங்கள் கூட கூசிச் சிலிர்த்து நின்றது.

வந்தவன் அவளை ஒட்டியபடி கடந்து சென்று வரவேற்பறையில் அமர்ந்து தன் அலைபேசியில் மூழ்கிவிட, ‘இவ்வளவு பெரிய அரண்மனைல உரசிட்டு தான் போக முடியுமா’ நினைத்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்த ரஞ்சனி,

“சாப்பிட்டியா?” என்று கேட்க அவரையும் சம்மந்தமின்றி முறைத்து தள்ளியவள், அபிமன்யுவின் எதிரில் அமர்ந்திருந்த சிம்மவர்ம பூபதியிடம் சென்று கோபமாய் அமர்ந்துகொள்ள, பேத்தி மேலே இருந்து சினத்துடனும் படபடப்புடனும் ஓடி வந்ததையும், அதனைத் தொடர்ந்து பேரன் வதனம் முழுதும் சில்மிஷம் கலந்த புன்னகையுடன் வந்ததையும் பார்த்தவருக்கு, அந்த வயதைக் கடந்து வந்தவராய் புரிந்து போனது பேரன் பேத்தியிடம் ஏதோ வேலையைக் காட்டியிருக்கிறான் என்று.

பேத்தியிடம், “உத்ராமா மெஹந்தி காஞ்சிருச்சா?” என்று கேட்க, “காஞ்சிருச்சு தாத்தா.. இன்னும் சிவக்க ஜூஸ் வச்சிருக்காங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் அருகே வந்த நீரஜா,

“பாவாடையை இப்படியே போட்டிருக்க.. மெஹந்தி ஆகிடப்போது பாரு” என்று மகளின் பாவாடையை மேலே தூக்க முயல, “ம்மா! ம்மா!” என்று நீரஜாவிற்கு மட்டும் கேட்கும் குட்டிக் குரலில் கத்தியவள்,

“காஞ்சிருச்சு.. வேணாம்” என்று மறுத்தவளின் விழிகள் அவளையும் மீறி, தன் எதிரில் அமர்ந்திருந்த தன்னவனின் மேல் அழுத்தமாக பதிய, மகளின் பார்வை சென்றதிலேயே அவளின் சங்கோஜம் புரிந்த நீரஜா, சிறு புன்னகையுடன் நிமிர்ந்துவிட்டார்.

இமையரசி தட்டில் எடுத்து வந்த டிபனை மகளிடம் நீட்ட, அவரின் மகளோ அவரின் மகளுக்கு ஊட்ட, வாயை திறந்தவளுக்கும் பசி எல்லையை மீறியிருந்தது தான். ஒரு பக்கம் ரஞ்சனி கொண்டு வந்து ஜூஸை வைத்துவிட்டு போக, அதை பார்த்துக் கொண்டே இருந்த நறுமுகையின் வதனம் விநாடிப் பொழுதில் மாறிப்போனது.

தன் வதனத்தை யாரும் கவனிக்கும் முன் அங்கிருந்து அகன்றவளை கவனிக்காது இருப்பானா அவளது மனம் கவர்ந்த மணாளன். நறுமுகையின் பின்னேயே சென்றவன், இருவருக்கும் என்று இருந்த அறைக்குள் சென்று தாளிட, அவனுக்கு முதுகு காட்டி கண்களை துடைத்துக் கொண்டிருந்த நறுமுகை கதவு அடைக்கும் சப்தத்தில் அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்ப,

மணையாளை பார்த்தபடியே கதவில் சாய்ந்து கைகளை கட்டி நின்ற விக்ரம், இரு கரங்களையும் நீட்டி அழைக்க, கணவனின் அழைப்பில், அவன் விழிகளில் பொதிந்திருந்த தூய்மையான அன்பில் கணவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டவளின் தலையை தன் நெஞ்சோடு மென்மையாக அழுத்திக் கொண்டவன், அவளின் தலையை வருட, “மாமா!!” என்றவளுக்கு தொண்டை அடைப்பது போலத் தோன்றியது.

“என்னடி?” என்றவனுக்கு காரணம் என்னவென்று தெரிந்தாலும், அவளே வாயால் கூறி தனது பாரத்தை இறக்கிக் கொள்ளட்டும் என்று நினைத்தான்.

“பொசசிவ்வா இருக்கு..” என்றவளுக்கு விசும்பல் வேதனையுடன் வெளிப்பட, தன்னவளின் உச்சந் தலையில் ஆதரவாய் முத்தமிட்டு, மேலும் இறுக தன்னுடன் சேர்த்து அணைத்து, பெண்ணவளின் மிளிரும் கன்னத்தை பிடித்து தன்னை நோக்கி உயர்த்தியவன், “ஏன்?” என்றான்.

பெண்ணவளின் விழியோரம் துளிர்த்த நீர்த் துளிகள் அவளின் கன்னங்களின் ஓரம் வழிந்தோட, அதைத் துடைத்துவிட்டவன், “அழாதடி..” என்று அதட்டி,

“என்னனு சொல்லு” என்றிட, அவனின் விழிகளை பார்க்க இயலாது தன் விழிகளைத் தாழ்த்தியவள், அவனின் சட்டையில் இருந்த முதல் பட்டனை பார்த்துக் கொண்டே,

“சின்ன வயசுல இருந்து நான் என்னோடது எதையுமே யாருக்கும் தர மாட்டேன்.. ஷேர் பண்ற ஹாப்பிட்ஸே எனக்கு இருந்தது இல்ல.. என்னோடது எப்பவுமே எனக்கு மட்டும்தான்னு ஒரு பிடிவாதம் இருக்கும்.. ஆனா இப்ப மொத்தமா அம்மாவை..” என்றவளின் மான்விழியில் தேங்கியிருந்த கண்ணீர் மீண்டும் வழிந்தோட, கணவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“பொசசிவ்வா இருக்கு ரொம்பவே.. பொறாமைன்னு கூட சொல்லலாம்” என்றிட, மனையாளையே பார்த்திருந்தவனின் இதழ்கள் மெலிதாய் புன்னகைக்க, குழந்தைக்கு கண்ணீரை துடைத்துவிடுவது போல இரு கைகளால் தன்னவளின் கண்ணீரை துடைத்து விட்டவன்,

“உனக்கு வர பொசசிவ்நஸ் தப்பு இல்லடி.. இந்த இடத்துல யாரா இருந்தாலும் வரத்தான் செய்யும்.. நீயா இருக்கனால உத்ராகிட்ட பேசற.. மத்தவங்க எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பாங்கனு தெரியாது இதே இடத்துல.. ஆனா, உத்ரா ரொம்பவும் இழந்துட்டா.. அத்தை அதைவிட நிறைய இழந்துட்டாங்க நறு.. உத்ராக்கு கம்மியா உன் மேல அத்தை பாசம் வச்சதே கிடையாது.. சொல்ல போனா உன்னை தத்தெடுத்த உணர்வு அவங்கிட்ட நான் பாத்ததே இல்ல.. உண்மையாவே ஒரு அம்மாவா திட்டியிருக்காங்க, மிரட்டி இருக்காங்க, அதைவிட ரொம்ப ரொம்ப பாசம் காட்டியிருக்காங்க.. உன்னை வளத்த அம்மாவா இருந்திருந்தா உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்திருப்பாங்கடி.. என்னை எப்படி ஹாஸ்பிடல்ல திட்டுனாங்க தெரியுமா?” என்றவனை அவள் ஏறிட்டுப் பார்க்க,

‘அப்ப நறுமுகை உன்னை விட்டு வந்தப்ப நான் அமைதியா இருந்ததுக்கு ஒரே ஒரு காரணம்.. நறு மட்டும் தான்.. எனக்கு அந்த கோபம் இல்லைன்னு நினைச்சிங்களா எல்லாரும்.. அவதான் உன்மேல கோபமா கிளம்பி வந்தாளே தவிர, நான் உன்னை ஏதாவது ஒண்ணு சொல்லியிருந்தா என்னை கூட தூக்கி போட்டிருப்பா.. தட் மச் ஷீ லவ்ஸ் யூ (That much she loves you)’ என்று அத்தை கூறியதை அப்படியே விக்ரம் மனையாளிடம் கூறி,

“அபிமன்யுவுக்கும் விழுந்துது. உங்க இரண்டு பேர் மேல இருக்க பாசத்துல தாண்டி நாங்க பல வருஷம் கழிச்சு அத்தைகிட்ட திட்டு வாங்குனோம்.. இன்பாக்ட் எனக்கு அப்படியே நாஸ்டல்ஜிக் (Nostalgic) மாதிரி இருந்துச்சு.. நாங்க சின்ன வயசுல இந்த மாதிரி சண்டை போட்டு அத்தைகிட்ட திட்டு வாங்குனோம்.. அப்ப எப்படி எதுவுமே பேசாம நின்னமோ அதே மாதிரி தான் இப்பவும் நின்னோம்.. நீங்க இரண்டு பேர்தான் அத்தையோட உலகமே” என்று ஒவ்வொன்றையும் நிதானமாக மனையாளுக்குத் தெளிவாக கூறியவன்,

“இன்னும் அழுகை வருதா?” என்று கேட்க, ‘இல்லை’ என்பது போல தலையாட்டியவள், கணவனை இறுக அணைத்துக் கொள்ள,

“எல்லாம் போயிடுச்சா?” என்று கேட்க, “ம்ம்” என்று தலையசைத்தவள் மேலும் கணவனுடன் ஒட்டிக்கொண்டு நின்று, கணவனின் மார்பில் நாடி வைத்து நிமிர்ந்து பார்க்க, தலையை தன் மாது கொடுத்த மயக்கத்தில் கிறுகிறுப்பது போல செய்து காட்டியவன்,

“இப்படி வந்து சாஞ்சு நிக்கிறதுக்கு எவ்வளவு வேணாலும் பேசலாம் போலியே” என்று தாபத்துடன் கூறி, “பஞ்சு மாதிரி இருக்கடி நீ” என்றவனின் பேச்சில் உள்ளிருந்த அர்த்தங்களை புரிந்து கொண்டவளுக்கு வதனம் முழுதும் செம்பவளமாய் சிவந்து போக, கணவனின் கழுத்தில் கரம் கோர்த்து அருகே இழுத்தவள், கணவனின் இதழை தன் இதழ்களால் சிறை பிடிக்க பேராசை கொண்டு, இரு இதழ்களையும் தனக்குள் வைத்து சுவைத்தவளின் காதலையும், மோகத்தையும் கணவனாய் புரிந்து கொண்ட விக்ரமின் இதழ்கள் இதழ் யுத்தத்திற்கு நடுவே புன்னகைக்க, விக்ரமின் கரங்களோ வெளியே அனைவரும் இருக்கிறார்கள் என்றும், நேரத்தை கண்டும் தயங்க, கணவனின் கரத்தை எடுத்து தாமாக தன் இடையில் வைத்தவள், கணவனிடம் இருந்து பிரிய,

“வர்ற வர்ற ரொம்ப டாமினேட் பண்றடி” என்று கிறக்கம் சுமந்த குரலில் கூறிய ஆடவனின் காமம் எட்டிப் பார்க்கத் துவங்க, தன்னவளின் கழுத்திற்கு சென்றவன், மணவாட்டியின் மணத்தோடு சேர்ந்து அவளின் சுவையையும் அறிந்து கொள்ள,

தன் கணவன் மேலே கொடியாக சாய்ந்தவளின் இடைகளை பிடித்த விக்ரம், அந்த பஞ்சு பொதியை மஞ்சத்தில் சாய்த்து, அவளின் கழுத்தில் துவங்கிய முத்தங்களை தனக்கு பிடித்த இடங்களுக்கு நகர்த்த, அடுத்து அங்கு நடந்து முடிந்த காதலும் ஆசையும் இணைந்த அழகான கூடலுக்கும், இருவரின் உச்சகட்ட உணர்வுகளுக்கும் அவர்களே சாட்சி.

தன்னவளின் கழுத்தில் நெற்றியில் வியர்வை வடிய இளைப்பாறிக் கொண்டிருந்த விக்ரம் நகர்ந்து படுக்க, ஏசி ரிமோட்டை உயிர்ப்பித்த நறுமுகை கணவனை வெட்கத்துடன் பார்த்துவிட்டு எழ முயல, தன்னை விட்டு நகரும் மனைவியை கரம் பிடித்து இழுத்தவன், “இங்கையே இரு” என்றான் அவளை தன் நெஞ்சத்தில் சாய்த்தபடி.

அதில் இதழ்கள் பிரிய கணவனை அதிர்ந்து பார்த்தவள், “மணி என்னனு பாத்தீங்களா? எய்ட் பார்ட்டி பைவ்.. இப்ப மட்டும் நம்ம போகல.. அந்த இரண்டு வாலுக இருக்காளுக இல்ல.. கிண்டல் பண்ணியே கொன்னுடுவாளுக” என்று கூற, அதில் கர்வமாய் சிரித்துக் கொண்டவனின் தோள் பட்டையில் இருந்த தன்னுடைய நெற்றி பொட்டை எடுத்து கணவனின் கன்னத்தில் வைத்தவள், ஒரு கரத்தாலேயே கணவனின் வதனத்தில் நெட்டி முறித்து,

“இப்படி ஒரு பையனை எப்படி தான் எங்க அத்தை பெத்தாங்களோ” என்று அழுத்தமாய் காளையவனின் நெஞ்சில் முத்தமிட்டவள், கணவன் அசந்த சமயம் குளியலறைக்குள் புகுந்துவிட்டாள்.

இருவரும் ஒன்பது மணிக்கு உண்ண வருவதை கண்ட திலோத்தமையும், மித்ராவும் ஏதோ குசுகுசுவென்று பேசி தங்களுக்குள் சிரித்துக் கொள்ள, விக்ரம் அருகே வந்தவுடன், “என்ன மாமா ரொம்பவே மாறிட்டீங்க..” மித்ரா கேட்க,

தலையை அழுந்தக் கோதிய விக்ரம், “ரொம்ப ஹான்ட்சமா இருக்கேன்ல?” என்று கேட்க, தலையை சரித்து விக்ரமை பார்த்த அந்த வீட்டின் கடைக்குட்டி,

“ரொம்பவே ஹான்ட்சம் தான் மாமா.. ஆனா, கன்னத்துல இருக்க அக்காவோட பொட்டுதான் நல்லா இல்ல” என்று சீரியஸான முக பாவனையுடன் சொல்லி, அருகில் இருந்த திலோவை பார்த்து பக்கென்று சிரிக்க, கன்னத்தில் ஒட்டியிருந்த பொட்டை சட்டென எடுத்த விக்ரம் வெட்கத்துடன் இருவரையும் கடந்துவிட, ரஞ்சனியுடன் பழைய கதைகள் பேசியபடி, மூத்த மகளுக்கும் மருமகளுக்கும் பரிமாறிய நீரஜா, வேலைகளை முடித்துவிட்டு மேலே உத்ராவைத் தேடிச் செல்ல, அறையை அவர் திறக்கும் முன் அபிமன்யு உள்ளிருந்து அறையை திறந்து கொண்டு வெளியே வர, நீரஜாதான் திகைத்துப் போனார்.

இருவரும் இரு விநாடிகள் இருவரையும் பார்த்துக் கொண்டே நிற்க, நீரஜாவை கண்டு களிப்புடன் கூடிய வேட்கையில் அபிமன்யு புன்னகைத்துக் கொண்டு அவரைக் கடந்து செல்ல, செல்லும் அபிமன்யுவையே தலையை மட்டும் திருப்பி வெறித்துப் பார்த்தவர், கோபத்தை அடக்கிக் கொண்டு உள்ளே செல்ல, உத்ரா அமைதியாக கட்டிலின் மேல் அமர்ந்து கோர்த்திருந்த தனது வெண் தந்தக் கரங்களை பார்த்தபடி அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

காலடிச் சப்தத்தில் அன்னையை நிமிர்ந்து பார்த்த உத்ரா முயன்று புன்னகைக்க, மகளின் அருகே அமர்ந்தவர் அவளின் கரம் மேல் கரம் வைக்க, அன்னையை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் ஏதோ ஒரு சொல்ல முடியாத தவிப்பு.

மகளின் பரிதவிப்பில் தானும் உள்ளுக்குள் துடித்த நீரஜா, அதை வெளியே காட்டாது, “உத்ரா! நாளைக்கு ஒரு நாள் காலைல மட்டும்தான் நீ மிஸ்.. அதுக்கு அடுத்த நாள் விடியறதுக்கு முன்னாடி நீ அபிமன்யுவோட வைஃப் ஆகியிருப்ப” என்று அழுத்தமாய் கூற, அன்னையின் விழியை சலாரென சந்தித்தவளின் விழிகள் சிறு அச்சத்திலும், இனி திருமதியா என்ற பதட்டத்திலும் கடகடவென அடிக்க,

“அபிமன்யுவை நினைச்சு பயமா இருக்கா?” என்று கேட்க, ‘இல்லை’ என்பது போல தலையாட்டியவள், பல்லை நொறுங்கும் அளவிற்கு நறநறவென்று கடித்து, “ஆத்திரமா இருக்கு” என்றாள்.

“அப்புறம் என்ன பயம்?” என்று நீரஜா கேட்டுக் கொண்டிருக்கும் போதே மகளைக் காண உள்ளே வந்த ரஞ்சனி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, “உள்ள வா ரஞ்சனி” என்று தோழியையும் அழைத்தார் நீரஜா.

ஒரு தாயாக ரஞ்சனியும் அறிந்து கொள்ள வேண்டும் தானே!

உத்ராவின் எதிரே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு எதிரே ரஞ்சனி அமர, நீரஜா மறுபடியும், “சொல்லு என்ன பயம் டா” என்று வினவியவர்,

“இல்ல அன்னைக்கு நடந்ததை நினைச்சு பயமா இருக்கா?” என்று கேட்க, ‘ஆம்’ என்பது போல தலையாட்டிய உத்ராவின் விழிகள் கலங்கி குளமாகிப் போனது.

நீரஜாவையும் ரஞ்சனியையும் பார்த்தவள், “என்னை கடத்திட்டு போறப்ப என்னை வச்சு மிரட்டப் போறாங்க.. இல்லை கொன்றுவானுக அப்படின்னு தான் நினைச்சேன்.. அப்.. அப்புறம் தான் ம்மா தெரிஞ்சுது..” என்றவளின் நீர் மணிகள் அவளின் இரு தாய்களின் கரத்தில் பட்டு சிதற, ரஞ்சனியின் கண்களும் கலங்கி கண்ணீர் வழியத் துவங்க,

“அவனை பாக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு ம்மா.. ரொம்ப வருசமா அதே இடத்துல இருக்க மாதிரி தோணுச்சு.. ரொம்ப பழைய வீடு.. என்னை கடத்திட்டு வந்தவங்களும் இருந்தாங்க.. ஏற்கனவே இவர்கிட்ட சண்டை போட்டுட்டு வந்ததுல கோபமா இருந்தனால எனக்கு அழக் கூட தோணலை.. இவரோ இல்ல விக்ரம் மாமாவோ வந்திடுவாங்களோன்னு நம்பிக்கை.. ஆனா, அவன்..” என்றவளின் உடல் தன்னால் குறுகத் துவங்க, அவளின் கரத்தை அழுத்திக் கொடுத்த நீரஜா,

“என் ட்ரெஸை அவன் கழட்டும் போது அவன்கிட்ட நான் எவ்வளவோ கெஞ்சுனேன் ம்மா.. ஆனா, அவன் நான் அழ அழ ஒவ்வொரு ட்ரெஸா.. அதுவும் ஆறேழு பேர் முன்னாடி” என்றவளின் குரல் நடுங்க, உடல் குறுக, உதடுகள் அழுகையில் துடிக்கக் கூறியவள், “அதுலதான் ம்மா எனக்கு சிய்சர்ஸ் வந்துச்சு..” என்று முகத்தைக் மூடிக் கொண்டு அழ, மகளின் வேதனையில் தங்களை உயிருடன் கொன்றது போல் துடித்துப் போன ஒரு தாயின் விழிகள் கண்ணீரை சிந்த, மற்றொரு தாயின் இதயம் இரும்பைப் போல இறுகிப் போனது.

தன் மகளை இப்படி அழ வைத்த மிருகத்தை வதைக்கும் உணர்வு உள்ளுக்குள் ஆங்காரமாய்க் கொதித்தாலும், கல்யாண வேளையில் அனைத்தையும் அடக்கியவர் மகளை முதுகைத் தேய்த்துவிட, இருவரையும் நிமிர்ந்து பார்த்த உத்ரா,

“நடந்த எல்லாத்துக்கும் என் மேல எந்த தப்பும் இல்ல.. நான் ஏன் இதை நினைச்சு வருத்தப்படணும்.. என்னை இப்படி பண்ணவன் தான் இதை நினைச்சு நினைச்சு அசிங்கப்படணும்னு நினைச்சாலும் முடியல ம்மா.. அதேதான் மனசுல வருது” என்று உடல் நடுக்கத்துடன் கூறிய மகளின் அருகே இருவருமே நெருங்கி அமர்ந்து கொள்ள, உத்ராவின் கரத்தை தட்டிக் கொடுத்த ரஞ்சனி,

“உத்ரா! இதுக்கு எதுக்கு பயபடணும்டா அம்மு” என்று ரஞ்சனி மகளின் கண்ணீரை துடைத்துவிட,

நீரஜா, “இதுக்கெல்லாம் என்ன காரணம்னு நினைக்கற உத்ரா.. காலங்காலமா மானமும் மரியாதையும் கௌரவமும் நம்ம கிட்டதான் இருக்குன்னு சொல்லி வளத்த ஒரே ஒரு காரணம் தான்.. ஏன்னா அவனை மாதிரி ஆளுக நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க.. சோஷியல் மீடியால தன்னோட முகத்தை காட்டாம வக்கிரத்தோட சுத்தீட்டு இருக்க நிறைய அசிங்கமான ஜீவராசிக இருக்கு.. மிருகத்துக்கு இருக்க ஐஞ்சு அறிவு கூட இருக்காது.. உன்னை கடத்திட்டு போனவனாலையும் இப்ப அபிமன்யு, விக்ரம் முன்னாடி வந்து நின்னுட முடியுமா? அவன் ஒரு கோழை.. அவனை மாதிரி இருக்கவங்களும் முகத்தை மறைச்சிட்டு பொண்ணுகளை தவறா சித்தரிச்சிட்டு இருக்கவனுக்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது..”

“ஆனா, என் பொண்ணு நீ புத்திசாலி, தைரியசாலி உத்ரா.. இதை அவன் பண்ணதுக்கு காரணமே நீ நிம்மதியா வாழக்கூடாதுன்னு தான்.. நம்ம யாருமே நல்லா இருக்கக் கூடாதுனு.. அவனை ஜெயிக்க விட போறியா இல்ல நீ ஜெயிக்க போறியான்னு நல்லா யோசி” என்று மகளின் தலையை வருடி நீரஜா கூற, அன்னையின் வார்த்தைகள் யாவும் மீண்டும் மீண்டும் செவிக்குள் ஒலிக்க, ஒருவாறு தெளிந்தவள் அன்னையை மீண்டும் பார்க்க,

“உன் அப்பா ஏன் உனக்கு உத்ரான்னு பேர் ஆசைப்பட்டாருன்னு இப்ப புரியுது உத்ரா.. அதே மாதிரி இரண்டு பொண்ணுக எதுக்கு வேணும்னு கேட்டாருன்னும் புரியுது” என்றவர் தன்னை ஏறிட்டு புருவங்கள் நெறிய பார்த்துக் கொண்டிருக்கும் மகளை கண்டு, புன்சிரிப்புடன் எழுந்தவர் தானும் விஜய்யும் இருந்த படத்தை மகளிடம் நீட்ட, அதிலிருந்த தந்தையை பார்த்த உத்ராவின் விரல்கள் தாமாக தந்தையை வருடிக் கொடுத்து,

“அப்பாவா மிஸ் பண்றீங்களா?” என்று நீரஜாவிடம் கேட்க, “அவர்தான் என்னோட உயிரே உத்ரா.. அவர் இல்லாம ஒரு தடவை உயிரை விட துணிஞ்சேன்” என்றவரை ரஞ்சனியும், உத்ராவும் தலையில் தணலை கொட்டிய அதிர்வுடன் நீரஜாவை பார்க்க, அதற்கு ஒரு புன்னகையையே பதிலாகக் கொடுத்தவர்,

“ஸ்லீப்பிங் டாப்லெட்ஸ் போட போனேன்.. ஆனா, உங்கப்பாக்கு பிடிக்காதுன்னு விட்டுட்டேன்” என்ற நீரஜாவை, உத்ராவும், ரஞ்சனியும் அணைத்துக் கொள்ள,

ரஞ்சனி, “பைத்தியமாடி நீ” என்று திட்டியவர், “ஸாரி” என்றிட, “முடிஞ்சு போனதை பேசி பயனில்லை ரஞ்சனி.. விடு” என்றார் இருவரையுமே தட்டிக் கொடுத்து.

“சரி நாங்க கிளம்பறோம்.. நீ தூங்கு” நீரஜா கூற, “இல்ல மதியம் நல்ல தூங்கிட்டேன்.. தூக்கம் வர லேட் ஆகும்.. இரண்டு பேரும் இருங்க பேசிட்டு இருக்கலாம்” என்று மகள் சொல்லும் பொழுது இருவராலும் மறுக்க முடியுமா?

error: Content is protected !!