ஆட்டம்-38
ஆட்டம்-38
ஆட்டம்-38
மெல்ல மெல்ல தன் குடை இமைகளைத் திறந்த உத்ராவுக்கு, தான் எங்கோ மிதப்பது போன்ற ஓர் உணர்வு. மலர் மேனி மேலேயும், கீழேயும் ஏறி இறங்குவதைப் போன்று உணர்ந்தவள் மெதுவாய் தலையை பிடித்துக் கொண்டு எழுந்தமர, அப்போதும் உடல் மிதப்பதைப் போலிருந்தது.
தலையை சிலுப்பியவளுக்கு ஒவ்வொன்றாய் நினைவில் வந்தது. அபிமன்யு வந்தது. அவன் பேசாமலேயே அவன் எதற்காக வந்திருப்பான் என்று அறிந்து அவனுடன் காரில் ஏறியது. அவன் காரில் ஏறியது மட்டும் தான் நினைவில் இருந்தது. இப்போது எங்கோ இருக்கிறாள். மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து பார்த்தவளுக்கு, அங்கே அபிமன்யு தான் தும்மிய போது, ஒரு டிஷ்யூவை கொடுத்தது மட்டும் தான் புத்தியில் இருந்தது.
ஆக தும்மிய போது அவன் கொடுத்த டிஷ்யூவை முகர்ந்து, மயக்கத்திற்குச் சென்றிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டாள். டாக்டராக இருந்து கொண்டு அதுகூட இல்லையெனில் எப்படி?
தள்ளாட்டத்துடனே எழுந்தவள், “எங்க இருக்கோம்னு தெரியலையே?” என்று முணுமுணுத்தபடியே அறையை சுற்றும் முற்றும் பார்க்க, அதுவோ ராஜ பகட்டின் உச்சானியை முழுதாக விழுங்கி இருந்தது.
அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு அது எதுவோ செவன் ஸ்டார் ஹோட்டலை போன்று தெரிய, தலையை சொரிந்தபடியே நடந்து சென்று அங்கு தெரிந்த படியில் ஏறி, மேல் தளத்தை அடைந்தவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
ஆக, மெய்யாலும் மிதப்பில் தான் இருந்தாள்!
நடு சமுத்திரம்!
யாருமற்ற நடு கடல்!
நடுக்கடலின் நடுவே அபிமன்யுவிற்கு சொந்தமான க்ரூய்ஸ் கப்பல் (Cruise ship) ராஜாதி ராஜாவாக மிதந்து கொண்டிருக்க, பெண்ணவளுக்கோ தனது இதயம் ஸ்தம்பித்து போன உணர்வு.
உள்ளத்தில் அதிர்ச்சி நிரம்பியது!
சுற்றியும் கடல் சூழ்ந்திருக்க, இமைகள் படபடப்பில் அடித்துக் கொள்ள, கீழ் அதரத்தை கடித்து நின்றிருந்தவளுக்கு மேனி மரத்துப் போக, விழிகளை சுழற்றி சுற்றியும் அபிமன்யுவை தேடிக் கொண்டிருந்தவள், கப்பலை சுற்றியும் ஓட, அந்த மிக நீளமான கப்பலின் முன் பகுதியை அடைந்தவள், அப்படியே கால்களை கட்டிப் போட்டது போன்று ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாள்.
அங்கிருந்த நாற்காலியில் கைகளை தலைக்குக் கொடுத்து கால்களை நீட்டி அமர்ந்திருந்த அபிமன்யுவுக்கு காரிகையவின் காலடி ஓசைகள் கேட்டதின் பிரதிபலிப்பாக அவனின் செவி மடல்கள் அசைந்தது. அவளின் மனம் ஆடவனின் சிற்ப நாசியை தீண்டியது.
இன்னும் சற்று நிமிடங்களில் கதிரவன் உதிக்கக் காத்திருக்க, பொன் கதிரனையே பார்த்திருந்த அபிமன்யுவின் மடித்திருந்த கரங்களையும், வலுவான புஜங்களையும் அதில் ஓடிய வரி வரியான நரம்புகளையும் கண்ட உத்ராவிற்கு வஜ்ரமாய் அமர்ந்திருப்பவனிடம் எப்படிச் சென்று பேசுவதென்ற தயக்கம் எட்டிப் பார்க்க, அவனுக்கு பின்னேயே சில நிமிடங்கள் நின்றிருந்தவள், ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அபிமன்யுவின் பக்கவாட்டில் சென்று நிற்க, கதிரவனும் எட்டி இருந்தது.
மெல்லிய கீற்றாக புன்னகைத்தவன் அருகே நின்றிருந்த உத்ராவை கேள்வியாக பார்க்க, பெண்ணவளோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அபிமன்யு வேண்டுமென்றே, “என்ன?” என்று இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டு வினவ,
“எங்க இருக்கோம்?” என்று மெல்லிய குரலில் வினவ, அவளை நிதானமாக மேலிருந்து அளவெடுக்கத் துவங்கிய அபிமன்யுவின் விழிகள் அவளை தன் விழிகளுக்குள் உருக்கி வார்த்தெடுக்குத் துவங்கியது.
அவளின் தலை சிகையில் துவங்கிய அவனின் விழி பயணம், அவளின் கழுத்தில் இறங்கி, அதற்கு கீழ் இருந்த மேடுகளிலும் பள்ளங்களிலும் அதில் இருந்த வாவண்யங்களிலும் வெகு சாதாரணமாக தாவி குதிக்க,
ஆடவனின் செயலிலும், உரிமையாக அவனின் விழிகள் தன் மேல் ஏறி இறங்கி துளைப்பதையும் உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் பகீரென்று இருக்க, உடலில் இருந்த ஒவ்வொரு அணுவிலும் அச்சமும், அதைத் தாண்டிய நாணமும் பரவ நின்றிருந்தாள் அந்த செம்மொட்டு.
அவனின் பார்வையை தவிர்த்தவள் சுற்றியும் கடலின் மீது விழிகளை படரவிட, ராயல் ப்ளூ நிற குர்தாவிலும், ஆன்க்கில் லென்த் வெண்மை நிற லெகின்ஸிலும் ஒப்பனைகள் அவ்வளவாக ஏதுமின்றி சிற்பமாய் நின்றவளை பார்க்க பார்க்க அபிமன்யுவை தடுமாறச் செய்ய, அருகில் இருந்த கூலிங் கிளாஸை எடுத்து தன் விழிகளை மறைத்தவன், அவளருகே எழுந்து நிற்க, ஓர் அடி பின்னால் நகர முயன்றவளின் பாதங்கள், அபிமன்யுவின் விழிகள் அவளின் நகரும் பாதங்களை பார்த்தவுடன் நின்று கொண்டது.
அபிமன்யுவை ஏறிட்டுப் பார்த்தவளிடம், “சொன்னாதான் இருப்பியா?” என்றவன் உள்ளே செல்ல அவனின் பின்னேயே சென்றவள், அதாவது ஓடியவள்,
“எப்ப போவோம்?” என்று கேட்க, சலாரெனத் திரும்பியவனின் மேல் மோதி நின்றவளை அவளின் இடையைச் சுற்றி இரும்பாக பற்றிவன்,
“ஏன் என்கூட இருக்க ஏதாவது ப்ராப்ளமா?” என்று முன்னே விழுந்திருந்த அவளின் முடியை பின்னே ஒதுக்கிவிட்டபடியே வினவ, அதில் உடலில் உள்ள பூக்கள் சிலிர்த்து எழ, கூச்சத்தில் அவன் விழிகளை பார்க்க இயலாது குடை விழிகளை தாழ்த்தியவள்,
“இல்ல எல்லாரும தேடுவாங்க..” உணர்ச்சிகளின் மிகுதியில் கூறியவளின் செவியருகே சென்றவன் தன் முரட்டு இதழ்கள் பட்டும் படாமலும், “நான் சொல்லிட்டேன்.. நீ அப்ளை பண்ணியிருந்த முக்கியமான கான்ப்ரண்ஸ் கிளம்பிட்டேன்னு.. ஸோ யாரும் தேட மாட்டாங்க” என்றவனின் சொல்லை அவளின் காதல் கொண்ட ஆழ்மனம் நம்ப, அதற்கு மேல் அவள் எதுவும் கேட்கவில்லை.
அவளை இடையை விட்டவன் முன்னே செல்ல, அவனின் பின்னேயே இடம்விட்டு சென்றவளை கிட்சனுக்கு அழைத்துச் சென்றவன், “டீ போட தெரியுமா?” என்று வினவ, “ம்ம்” என்று தலையாட்டியவளை சீண்டலுடன் பார்த்து வைத்தவன்,
“ஓஹோ இதெல்லாம் தெரியுமா?” கைகளை கட்டிக் கொண்டு மீண்டும் குரலில் கேலியை தேக்கி வைத்து வினவ,
“அதெல்லாம் தெரியும்” என்று விராப்புடன் கூறியவள், டீயை பத்து நிமிடத்தில் அபிமன்யுவிடம் தர, பார்வையாலேயே தன் முன் நின்றிருந்தவளை மெச்சியவன், அவளின் விரல்களை தீண்டியபடி கப்பை வாங்கினான்.
‘டீ போட்டு கொடுத்து இம்ப்ரஸ் பண்ணுவாருன்னு பாத்தா.. இவரு.. கடவுளே!’ உள்ளுக்குள் சலிப்பும் கோபமுமாக நினைத்தவள் தனது டீ கப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்த டைனிங் அறையில் அபிமன்யுவுக்கு எதிரே அமர்ந்தாள்.
மெல்ல மெல்ல தேனீரை பருகியவள் மெதுவே அவனைப் பார்க்க, ஏதோ மேக்கசினில் ஆழ்ந்திருந்தவன் பேதையவளின் பார்வையை உணர்ந்து, அவளை சட்டென விழியை மட்டும் உயர்த்தி கழுகு பார்வை பார்க்க, காளையவனின் கத்தி போன்ற பளபளப்பான கூர் விழியில் பெண்ணவளின் இதயம் தொண்டையில் வந்து சிக்கிக்கொள்ள படாரென விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
அவளின் செயலில், அவளின் தயக்கத்தில், அவளின் திருட்டுத் தனத்தில் புன்னகை தாமாக வந்து அந்த கல் நெஞ்சக்காரனுக்கு அமர்ந்து கொள்ள, மேக்கசினை மூடி வைத்தவன், “ஏதோ கேக்கணும்னு நினைக்கற ரைட்?” என்று வினவ, பெண்ணவளின் தலையோ சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அசைந்தது.
“கோ அகெட் (Go ahead)” என்றவனை ஏறிட்டுப் பார்த்தவள்,
“இங்க எதுக்காக வந்திருக்கோம்?” என்று கேட்க, குடித்துக் கொண்டிருந்த தேனீரை மேசையின் மேல் ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி வைத்தவன்,
“பரவாயில்ல.. ரொம்ப க்யூக்கா (Quick) கேட்டுட்ட” என்றவன், “எந்திரிச்சவுடனே ரொம்ப கத்தி அழுவேன்னு நினைச்சேன்” என்றான் தான் நினைத்ததை மறைக்காது.
“எதுக்கு அழுகனும்? நீங்க என்னை என்ன பண்ணிட போறீங்க?” என்று கேட்டவளின் அடி மனதில் இருந்து அவன் மேலான காதலும், நம்பிக்கையும் வேராய் விரவியிருக்க, அதை அவளின் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தவனின் உள்ளம் உணர்ந்தாலும், அதில் அவனின் ஆண்மை தடம் புரண்டாலும் மேலும் அவளிடம் கேள்விகளை கேட்கவே விளைந்தது ஆணின் மனம்.
“அவ்வளவு நம்பிக்கையா என் மேல?” என்று கேட்டவனுக்கு நொடி நொடிக்கு அவளின் மேலான ஆர்வம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
“உங்களை பத்தி என் காது பர்ன் (Burn) ஆகற அளவுக்கு சொல்லியிருக்காங்க” அவனை பார்க்க தைரியமின்றி தலையை குனிந்து கொண்டு ஏந்திழையவள் கூற, அதில் கர்வம் கலந்த மென்னகை புரிந்தவன், தேனீரை குடித்து முடித்துவிட்டு எழ, அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளுடன் தன் விழிகளை உரசியவன்,
“போய் ப்ரெஷ் ஆகிக்க” என்று கூறிவிட்டு நகர எத்தனிக்க, “எனக்கு ட்ரெஸ்..?” என்றபடி எழ, அப்படியே நின்றவனுக்கு அப்போது தான் அதையெல்லாம் அவன் எடுத்து வராதது நினைவு வந்தது.
அனைத்தையும் தயார் செய்து வைத்து எடுத்து வர, அவன் அந்த சாணக்கியன் விக்ரம் இல்லையே!
‘எங்கும் அதிரடி! எதிலும் அதிரடி!’ என்று பழகியிருந்தவன் ஆயிற்றே.
வெகு சாதாரணமாக உத்ராவை திரும்பிப் பார்த்தவன், “என்னோட சர்ட்ஸ் இல்ல டி சர்ட்ஸ் போட்டுக்க” என்று கூறிவிட்டு செல்ல, வாய் பிளந்து இதயம் அரண்டு போய் நின்றவள் அவனின் பின்னேயே ஓடினாள்.
அவனை என்ன கூறி அழைப்பது என்றும் புரியவில்லை.
அவனின் பின்னேயே ஓடியவள், மீண்டும் அவனின் மேலேயே இடித்து நிற்க, அடுத்து காலை வைத்தது என்னவோ அவனின் அறைக்குள். ‘பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று கூறுவார்களே அதுதான் உத்ராவின் புத்திக்கு ஞாபகம் வந்தது.
அத்தனை ராஜ பகட்டுடன் இருந்தது அவளவனின் அறை.
சுற்றியும் நின்று பார்த்துக் கொண்டே இருந்தவளின் முன்பு அபிமன்யு தன் சட்டைகளை நீட்ட, அதை வாங்கிக் கொண்டவள், “இது என்னோட தைஸ் (Thighs) வரைக்கும் தான் இருக்குமே” என்றாள் தன் தொடை வரை இருக்கும் அந்த உடைகளை அளந்தபடி.
“ஏன் நீ யூஎஸ்ல ஷார்ட்ஸ் எல்லாம் போட்டது இல்லியா?” என்று சர்வ சாதாரணமாக வினவ,
“போட்டிருக்கேன்..” என்றிழுத்தவள், “ஆனா இங்க..” என்று தடுமாற, அவளின் அருகே தன் உஷ்ணமான மூச்சுக்காற்று படும் அளவிற்கு நெருங்கி நின்றவன்,
“ஏன் நான் தானே?” என்று கேட்க, தலை கவிழ்ந்தவளுக்கு இலேசாக நாணமும், மோகனமும் இணைந்த மென்னகை இதழில் நெளிய, தலை கவிழ்ந்து நின்றிருந்தவளின் வியக்க வைக்கும் அழகும், இதழில் விரவியிருந்த புன்னகையும் ஆடவனின் நாடி நரம்பெல்லாம் காதலும், தாபமும் சுனாமியாய் பாய, சிம்மவர்ம பூபதியின் பேரன் அந்த பெண் வேங்கையிடம் வீழ்ந்தேவிட்டான்.
தலை கவிழ்ந்து நின்றிருந்தவளின் தோளை பிடித்தவன் அவளின் கழுத்தில் தன் விரலால் வருட, இதயத்தில் இருந்து இன்ப வேதனைகள் உடலெங்கும் ஓடத் துவங்க, கூச்சத்தில் கழுத்தை அசைத்து நடுக்கத்துடன் அபிமன்யுவை ஏறிட்டுப் பார்த்தவள், “நீங்க எ.. என்னை?” என்று கேட்க வந்தவளுக்கு அதற்கு மேல் கேட்க வரவில்லை.
“ஹம்.. உன்னை?” என்றவனின் மற்றொரு கரம் அவளின் இடையில் கை வைக்க, கூச்சத்தில் நெளிந்தவள்,
“என்னை பிடிக்குமா?” என்று கேட்க, பெண்ணவளின் மென் பனித்துளி போன்ற மென்மையான இதழை வருடியவனின் செயலில் உத்ராவின் விழிகள் அழுத்தமாக மூடிக்கொண்டது.
தன்னவளின் மோகம் எழும் அபாரமான அழகை ரசித்தவன், அவளின் இதழில் தன் இதழை அழுத்தமாக ஒற்றியெடுக்க அடிவயிற்றில் இருந்து எழும்பிய நடுக்கம் வெளிப்படையாக வஞ்சியவளின் உடலை புல்லரிக்கச் செய்ய, அபிமன்யுவின் நெஞ்சில் கரம் வைத்து விழிகளை மேலும் இறுக மூடியவளை விட்டு விலகிய அவளவன், விழி மூடி நின்றிருக்கும் உத்ராவின் வதனம் கடலளவு காதல் கொண்டவனை ஏதேதோ செய்ய உந்த, தன்னை கட்டுக்குள் வைத்து அவளின் கன்னம் தட்டியவன், அவளை அனுப்பி வைத்துவிட்டு,
‘உப்ப்ப்ப்! கார்ஜியஸ் யூ ஆர்! (Gorgeous you are!)’ மனதுக்குள் தன்னவளை நினைத்து உதட்டை குவித்து உஷ்ணங்களை வெளியிட்டவன் குளிக்கச் சென்றுவிட்டான்.
இங்கே குளிக்க வந்தவளுக்கு தான் என்ன உடை அணிவது என்று தெரியவில்லை. எதை போட்டாலும் அவளின் முட்டிக்கு மேலும் தொடைக்கு கீழும் தான் இருக்குப் போகிறது. நீண்ட நேரத்து யோசனைக்குப் பிறகு பாரஸ்ட் க்ரீன் (Forest Green) டி சர்ட்டை எடுத்தவள், குளியலறைக்குள் புகுந்தாள்.
குளியலறைக்குள்ளேயே மியூஸிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்க, மியூஸிக் சிஸ்டத்தை உயிர்ப்பித்தவள் தனது உடைகளை கலையத் துவங்கினாள்.
ஏதோ கர்நாடக சங்கீதம் மிதந்து வந்து மிதமாய் இசைக்க, இயல்பாய் அபிநயம் பிடித்து பெண்ணவள் உள்ளுக்குள் அசைந்தபடியே, ஹாட் ஷவரின் அடியே தனது மெல்லிய பாதங்களை நகர்த்திக் கொண்டு வந்து நிற்க, பெண்ணவளின் உடலில் விழுந்த நீர்த் துளிகள் வளைந்து நெளிந்து மேடு பள்ளங்களில் சுகமாய் இறங்க, கழுத்தை ஆட்டி ஆட்டி இசையில் நனைந்தவள் குளித்து முடித்துவிட்டு டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்து, அபிமன்யுவின் பாரஸ்ட் க்ரீன் டி சர்ட்டை அணிய, அவளின் மென்னுடல் சிலிர்த்தது.
அபிமன்யுவின் நறுமணம் பேதையவளின் மொட்டு நாசியை சீண்டித் தூண்ட, இரு கரங்களாலும் சட்டையை எடுத்து நாசிக்கு அருகே சென்று தன்னவனின் வாசத்தை பிடித்து இழுத்தவள், “நம்ம ஆளு செம ஹாட் அன்ட் டாமினன்ட்” என்று முணுமுணுத்துவிட்டு, ஈர சிகையை உலர்த்தியபடியே வெளியே வர, பொதுவான அறையில் அமர்ந்திருந்த அபிமன்யுவின் செவி மடல்கள் அசைந்தது. தன்னவளின் பாத ஒலியை உணர்ந்ததில்!
அவனின் முன் செல்ல சங்கடப்பட்டவள், அப்படியே நகர்ந்து சென்று கிட்சனுக்குள் பூனை போன்று நுழைந்து கொள்ள, அவளின் பஞ்சணை பாதங்களின் ஓசை ஒவ்வொன்றையும் அழுத்தமாக உணர்ந்தவன் அவளைத் தொடர்ந்து மோகன சிரிப்புடன் கிட்சனிற்குள் நுழைய, சமையலறையின் ஸ்லாப்பை பிடித்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு உள்ளே வந்த ஆண்மகனின் அழுத்தமான காலடி ஓசையில் உள்ளுக்குள் நடுக்கம் பரவியது.
சொல்லாத உணர்வுகளால் நில்லாது இதயம் துடிக்க, கைகள் இரண்டையும் இறுக்கமாக வைத்துக் கொண்டு எச்சிலை விழுங்கிக் கொண்டு நின்றிருந்தவளின் பின்னே வந்து நின்ற அபிமன்யு, அவளின் கூச்சத்தையும் தயக்கத்தையும் ஒவ்வொரு துளியாக ரசித்தவனாக, “ஷல் வீ ஈட்? (Shall we eat?)” என்று கேட்க, அப்பொழுது தான் பாவையவளுக்கு மூச்சே சரியாக வந்தது.
‘சரி’ என்பது போல தலையாட்டியவளுக்கு அந்த விநாடிகள் மெய்யாகவே நிகழ்கிறதா அல்லது கனவா என்று தான் தோன்றியது.
மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் ரஞ்சனி மகளை கண்டிப்பிலேயே வைத்திருந்தார். அங்கெல்லாம் இரவு நேரங்களில் நண்பர்களுடன் சுற்றுவது என்பது இயல்பு. ஆனால், மகள்களை அதற்கெல்லாம் அவர் அனுமதித்ததே இல்லை. ஒருமுறை அக்காளும் தங்கையும் சேர்ந்து இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்ததிற்கே இருவரையும் பார்வையாலேயே உப்புக் கண்டம் ஆக்கியிருந்தார் அவர்.
அப்படியிருக்க நடு சமுத்திரத்திற்கு மத்தியில் அவள் ஒரு ஆண்மகனுடன், அதுவும் தன் இதயத்திற்குள் காலடி எடுத்து வைத்தவனுடன் தனிமையில் இருப்பதை நினைக்கும் பொழுதே வயிற்றில் ஜிவ்வென்று ஓர் உணர்வு எழுந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் அச்சமும் என்பது வேறு கதை!
தன் சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தவளை, “சாப்பிட வரல?” என்ற அவளின் ரட்சகனின் குரல் நடப்பிற்கு இழுத்து வர, “ம்ம்” என்றவளிடம்,
“இப்படி திரும்பி நின்னு தலை ஆட்டிக்கிட்டே சாப்பிட போறியா?” என்று வினவியவனிடம், ‘இல்லை’ என்பது போல தலையாட்டிவளுக்கு இப்படி ஒரு உடையில் அவனை எதிர்கொள்ளவே தர்ம சங்கடமாக இருந்தது.
‘ஐயோ!’ என்று உள்ளம் நாணத்தில் செந்தணலாகி உருகி ஊற்ற, அவளின் செவியருகே வந்த அபிமன்யு, “உத்ரா!” என்று அவளின் பின்னெழில்களில் தன் முன் அங்கம் உரசியபடி அழைக்க, அதில் உடல் தூக்கிவாரிப் போட மருட்சியுடன் திரும்பிய மான் குட்டியின் ரத்தின உதடுகள் துடிக்க, தலை கவிழ்ந்து கொண்டாள்.
அவளின் செய்கையை ரசித்தவன், “தூக்கிட்டுப் போகணுமா?” சீரியஸான குரலுடன் கேட்க, சட்டென நிமிர்ந்தவள்,
“நீங்க எப்படி இவ்வளவு கூலா இருக்கீங்க?” என்றபடியே தன்னெதிரில் நின்று தன்னை விழுங்கிக் கொண்டிருந்தவனின் தேக பலத்தை அளந்தபடியே கேட்டவளுக்கு அதரங்களின் மேல் வியர்வை பூத்தது.
“என்னால முடியல..” என்றாள் தன் கமல வதனம் சிவந்து போக!
தன்னவளின் நாணத்தில், அதுவும் தன்னருகே நிற்க முடியாது தடுமாறுபவளின் தோற்றத்தில் சித்தம் கலங்கியவன், அவளின் கரம் பற்ற, காரிகையவளின் மென் விரல்கள் நடுங்கியது.
“சாப்பிடலாமா?” என்று வினவினான்.
“ஹம்” என்றவளிடம், “எல்லாம் ரெடியா இருக்கு..” என்றவன் அவனவளின் கரம் பிடித்து அழைத்துச் செல்ல, “உங்களுக்கு சமைக்க தெரியுமா?” என்று அவனின் பின் சென்றபடியே வினவ,
“நோ..” என்றவன், “கீழ ஆள் இருக்காங்க..” என்றான்.
“ஓஹ்” என்றபடி கழுத்தை மெதுவாக அபிநயத்துடன் அசைத்தவள், “நான் யாரையுமே பாக்கல.. நீங்கதான் குக் பண்ணீங்களோனு கேட்டேன்” என்று முட்டை கண்களை உருட்டியபடி முன்னே செல்பவனின் உருவத்தை பார்த்தபடியே அவள் குழப்பத்துடன் வினவ,
அத்தை மகளின் கரத்தை இறுகப் பற்றியவன், “யாரும் என் பெர்மிஷன் இல்லாம இங்க வரமாட்டாங்க.. பிகாஸ் ஐ நீட் ப்ரைவசி.. அதாவது தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்” என்றிட, கீழுதட்டை கடித்து தொண்டைக் குழி ஏறி இறங்குவதை கட்டுப்படுத்தினாள் அந்த அபிமன்யுவின் உத்ரா.
ஏதேதோ பேசுகிறான். அவளுக்கோ உள்ளுக்குள் கோடி பட்டாம்பூச்சிகள் பறந்தது.
இருவரும் மேலே வர, இருவருக்குமான உணவுகள் அடங்கிய மேசையில் அபிமன்யு கூறிய உணவுகள் அடுக்கப்பட்டிருந்தது.
ஒருவர் வந்து இருவருக்கும் பரிமாறிவிட்டு நகர, அவரை அழைத்த அபிமன்யு, இனி அவரை வரவேண்டாம் என்றும் மதிய உணவு கொண்டு வந்து நேரத்திற்கு வைத்துவிட்டு சென்றால் போதும் என்றும் கூறி அனுப்ப, பெண்ணவளுக்கோ காட்டுப் பசி.
எப்போதும் உண்பதை விட அதிகமாக உண்ணத் தோன்ற, அபிமன்யுவின் தட்டை பார்த்தாள். அவனுடைய உணவுகளாக ஏதேதோ வைக்கப்பட்டிருக்க, உத்ராவிற்காக மற்ற அனைத்தும் தயாராகிவிட்டு இருந்தது.
நான்கு வாய் உணவை உள்ளே விழுங்கியவள், “நீங்க பேசவே மாட்டிங்களா?” என்று வினவ, “உன் கூட பேசுனனே” என்றான் அவனோ இயல்பாக.
“அப்படி இல்ல.. நீங்க யார் கூடையும் சிரிச்சு பேசி நான் பாத்தது இல்ல.. இன்பாக்ட் உங்களுக்கு முதல்ல என்னை கூட பிடிக்காது தானே?” என்று எவ்வளவு சரியாக, அதே சமயம் அமைதியாக சொல்ல வேண்டுமோ அவ்வளவு சரியாக வார்த்தைகளை கையாண்டு கூறினாள்.
முள்ளுக் கரண்டியால் உண்டு கொண்டிருந்தவனின் கரம் ஒரு விநாடி நின்று, உத்ராவை புருவ முடிச்சுடன் அழுத்தமாக பார்க்க, உத்ராவிற்குள் அபாய எச்சரிக்கை போன்று எதுவோ அடிக்க, மீண்டும் தட்டில் இருந்த ப்ரக்கோலியை எடுத்து விழுங்கியவன், “ஆமா முதல்ல எனக்கு உன்னை பிடிக்காது.. பிகாஸ் உன் அம்மா, அப்பாவை சுத்தமா எனக்கு பிடிக்காது” என்றிட, உத்ராவின் முகம் சட்டென இறுகிப் போய்விட்டது.
தவறே செய்திருந்தாலும் பெற்றோரை வேறொருவரிடம் யார் விட்டுக் கொடுப்பார்கள்?
அதுவும் தந்தையிடம் தானே இதை நேரிடையாகவே கேட்டபோது அவரின் வதனத்தில் வந்தமர்ந்த வேதனையை பார்த்தவளுக்கு, எங்கோ ஏதோ தவறு நடந்திருப்பதாக தோன்றினாலும், யார் தான் அன்னை தந்தையை விட்டுக் கொடுப்பார்கள்?
“என் அம்மா, அப்பா ஒண்ணும் கெட்டவங்க இல்ல” வெடுக்கென்று கூறியவள் மீண்டும் கோபத்துடன் சாப்பிடத் துவங்க,
“உத்ரா! டோன்ட் பீ பையாஸ்ட் (Don’t be Biased)..” என்றவனின் ஆணைக் குரலில், அதிகாரம் பறந்த தொணியில் பெண்ணவளின் கோபம் உச்சிக்கு சென்றது.
“யாரு இப்ப பையாஸ்டா இருக்காங்க?” என்று பட்டென்று கேட்க,
நிதனமாய் அவளை கூர்ந்து பார்த்தவன், “அவங்க உன் பேரன்ட்ஸ் அப்படிங்கிறனால சப்போர்ட் பண்ணாத..” என்றான் கடுகடுவான குரலில்.
“நான் ஒண்ணும் அப்படி இல்ல.. எங்க அப்பா அம்மாவும் என்னை அப்படி வளக்கல.. நான் விஷயம் தெரிஞ்ச அன்னைக்கே அப்பாகிட்ட கேட்டேன்” என்று ரோஷத்துடன் கூறியவளை பார்த்து அப்படியா என்பது போல இகழ்ச்சியாக புன்னகைத்தவன்,
“பரவாயில்ல.. உன்னை அந்த விஷயத்துல சரியா வளத்திருக்காங்க.. அவங்கள மாதிரி நீ இல்லதான்..” என்று வஞ்சப்புகழ்ச்சி அணி பாடியவனின் எள்ளலில், டைனிங்கில் இருந்து பெரும் சினத்துடன் எழுந்து விட்டாள்.
கால்கள் கீழே அடித்து சத்தமாக ஒலிக்க, அதிலேயே அவளின் கோபம் புரிந்தவனுக்கு ஆத்திரம் உள்ளுக்குள் வெடித்துச் சிதற கடலை வெறிக்க, அதே கோபத்துடன் கீழே இறங்க படிகளில் காலை வைத்தவளின் மென் பாதங்கள் வழுக்க, “அம்மா!!!” என்று வீறிட்டு அலறியவள், அடுத்த விநாடி கீழே விழுந்திருந்தாள்.