ஆட்டம்-39

ஆட்டம்-39

ஆட்டம்-39

பஞ்சுப் பொதியை தூக்குவது போன்று அரை விநாடியில் ஏந்திழையாளை ஏந்திய அபிமன்யுவின் வலுவான கரங்கள், அவளை தூக்கிக் கொண்டு நடக்க, சுள்ளென்று பிடித்திருந்த கால் வலியுடன் தன்னை ஏந்தியிருப்பவனின் வதனத்தை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கண்ணீரின் ரேகை.

ஆனால், எந்த வலியினால் உருவாகிய கண்ணீர் என்றுதான் அவனவளுக்கு தெரியவில்லை.

தன்னுள் இருக்கும் காதல் எனும் மென் உணர்வுகளை உணர வைத்து, தன் உள்ளத்தை கொள்ளை கொண்டவனின் மனதில், தன் பெற்றோரின் மேல் கொண்ட தவறான எண்ணத்தாலா அல்லது தன்னையும் இப்போது அன்னை, தந்தை செய்ததிற்கு சமநிலை தவறி நியாயம் சொல்வதாக பழி கூறுகிறானே அதற்காகவா என்று அவளுக்கே தன் கண்ணீருக்கான காரணம் தெரியவில்லை.

அத்தோடு சேர்த்து இந்த கால் வலி கண்ணீரை ஒரு காரணமாக எட்டிப் பார்க்க வைத்துவிட்டது.

இறுக்கமான வதனத்துடன் தன்னை தூக்கிச் செல்பவனின் வதனம் நோக்கியவள், ‘அப்படி என்ன இவருக்கு இவரோட அத்தை முக்கியம்?’ என்று தோன்றியது.

நடந்த உண்மை தெரியாத போது, யார் மேலும் யாராலும் தவறு கூற முடியாதே. தன் பெற்றோர் தவறு செய்திருக்க வாய்ப்பு குறைவு, ஏதோ நடந்திருக்கிறது என்று நிச்சயமாக நினைத்தவளுக்கு நீரஜாவின் மீதே சற்று கோபம் எட்டிப் பார்க்கத் தான் செய்தது. அதுவும் அபிமன்யுவின் வீம்பினால் விளைந்த செயலால் தான்.

அவள் யோசனையில் இருக்கும் போதே படுக்கையில் கிடத்தியவன், அவளின் வெண் தண்டு காலை தூக்கிப் பார்க்க, அதில் உத்ரா அணிந்திருந்த சட்டை சற்று மேலே ஏற, பதறிப் போய் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, வெட்கத்தில் வதனம் கன்ற கோழி முட்டை கண்களை உருட்டியவள் அபிமன்யுவை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனோ அவளின் செய்கைகள் தெரிந்தாலும், அவனின் விழிகள் வேறெங்கும் பயணிக்கவில்லை. உத்ராவின் கால்களை ஆராய்ந்து கொண்டிருந்தது.

அவளின் கால்களை பிடித்துப் பார்த்தவன், “ஜஸ்ட் ஸ்பெரியின் (Sprain – சுளுக்கு) தான்” என்றவன் அங்கிருந்த தனது ட்ராவை திறக்க, அபிமன்யுவின் அகன்ற முதுகையே பார்த்திருந்தவளுக்கு, ‘இவரு நல்லவரா? கெட்டவரா?’ என்றே தோன்ற, தன் சிந்தனையை நினைத்தவளுக்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.

சட்டென இரு கரங்களாலும் வாயை பொத்தியவள், அமைதியாய் அமர்ந்து கொள்ள, அவள் காலுக்கு சுற்ற எலாஸ்டிக் பாண்டை (elastic band) எடுத்து வந்தவன், அவளின் பாதங்களை தன் மடியில் எடுத்து வைத்து,

“கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்க.. இரண்டு நாளுக்கு காலுக்கு வொர்க் தர்றாத.. சரியாகிடும்” என்றவன், அவளின் மென் பாதங்களை தன் மனதை இரும்பாக்கிக் கொண்டே கை வைத்தான்.

“ஆ! அம்மா! ஸ்ஸ்!” என்று அபிமன்யு எலாஸ்டிக் பேன்டை அணிவதற்குள் தன் வலிகளை வெளியிட்டு அவனின் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டவளுக்கு, இரு சொட்டு கண்ணீர் அவளையும் மீறி விழுந்து படுக்கையை நனைத்தது.

யுவதியவளின் புஷ்ப வதனத்தை பார்த்தபடியே அவளின் கால்களை தன் மடியில் இருந்து இறக்கியவன், அவளை நன்றாக படுக்கையில் தூக்கி தலையணையை முதுகிற்கு வைக்க, அப்போது தான் அபிமன்யுவின் அறையில் இருப்பது உத்ராவின் புத்திக்கு உறைத்தது.

சட்டென அபிமன்யுவின் கரத்தை பற்றியவள், “நான் என் ரூம்ல இருக்கனே?” என்று செம்பருத்தி உதடுகள் துடிக்கக் கேட்க, அதற்கு அபிமன்யு கொடுத்த அதட்டலும் அதிகாரமும் கலந்த ஆளுமை நிறைந்த பார்வையில், வாயில் பூட்டை போட்டுக் கொண்டாள் விஜய்யின் மகள்.

அப்போது தான் அந்த விபரீதமான சம்பவம் நடந்தது. அபிமன்யு கட்டிலில் அவளை வசதியாக தூக்கி வைத்ததில், அபிமன்யுவிற்கு வசதி செய்து கொடுத்தது நங்கையவள் அணிந்திருந்த அவனின் சட்டை.

சட்டை மேல் தொடையை அடைந்திருக்க, அபிமன்யுவின் கூர் விழிகள் பெண்ணவளின் பளபளப்பான புஷ்ப சோலையை மேய, அதுவும் வெண்ணை கட்டிகள் போன்று மின்னும் அபாரமான அழகை பற்றி என்ன தான் கூறிவிட முடியும்?

மெருகேறியிருந்த மென் தோல் ஆடவனின் உள்ளத்தை அடியோடு இழுத்து சித்தம் கலங்க செய்ய, அபிமன்யு பார்க்கும்.. இல்லை இல்லை வெறிக்கும் இடத்தை உணர்ந்த பாவையவளின் இதயத்தில், தேவலோகத்தில் இந்திரன் வருகையின் போது சுற்றியும் கொட்டும் மத்தளங்களின் பேரோசை போன்றதொரு துடிப்பு கிளம்ப, பட்டென்று அருகில் இருந்த தலையணையை எடுத்து தன் வளிப்பு மிகுந்த மலர் தோப்பை மறைத்தாள்.

தன் விழிகள் சென்ற இடத்தை கவனித்து உத்ராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்ததையும், மேனி படபடப்பில் நடுங்கியதையும், இதழ்கள் வெட்கத்தில் துடித்ததையும், பட்டென அவள் தன் அழகுகளை மறைத்ததையும் என பார்த்தவனின் இதழ்கள் மெலிதாய் புன்னகைக்க, தன் இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை வருடியவன், தன் மென்னகையை மறைத்தபடியே வெளியே சென்று விட்டான்.

‘ச்சே விடாம எப்படி பாக்கறாங்க’ என்று உள்ளுக்குள் முணுமுணுத்தவளுக்கு மீண்டும் அக்காட்சி வந்து மனதுக்குள் தீயை மூட்ட, அருகில் இருந்த போர்வையை எடுத்து இடைவரை ஏற்றி தன்னை மறைத்தவள், அங்கிருந்த ரிமோட்டை எடுத்து டிவியை உயிர்ப்பித்தாள்.

ஆனால், அதில் சில சேனல்களே வந்தது.

அதுவும் அதிக போர் அடிக்க, ‘ப்ச்’ என்று சலித்தவள், ஒரு ஆங்கில திரைப்படத்தை போட்டு உர்ரென்று அமர்ந்துவிட்டாள். இப்படியே இரண்டு நாட்கள் எப்படி அமர்வது என்று நினைத்தவளுக்கு நினைக்கவே கடுப்பாக இருந்தது.

நீண்ட நேரமாக ஓடிக் கொண்டிருந்த படமும் முடிவிற்கு வர, அங்கு மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். அனைத்து நாட்டின் கடிகாரங்களும் ஒன்றே அமைந்த அழகிய கடிகாரம் அது.

தங்க நிறமும் வெள்ளி நிறங்களில் முட்களும் கொண்ட பகட்டான கடிகாரத்தை பார்த்தவள், ‘ரசனைல மட்டும் நம்ம ஆளுக்கு குறையே இல்ல’ என்று உள்ளுக்குள் முணுமுணுத்தவளுக்கு நீண்ட நேரத்திற்கு முன் அபிமன்யு தன் மேல் கால்களை பார்த்தது நினைவு வர, பெண்ணின் மேனியெங்கும் சிலிர்ப்பு விரவி பரவியது.

‘ச்ச என்ன இது?’ என்று உள்ளுக்குள் நாணத்தில் சுருண்டு தன்னைத் தானே கடிந்தவளுக்கு, அப்போது தான் அபிமன்யுவின் முதல் காதல் நினைவு வந்தது.

அதை நினைத்த மாத்திரத்தில் மானினியின் வதனம் வெளிறிப் போக, நெஞ்சம் படபடவென்று அடிக்க, ஏதோ அவளின் உள்ளத்தை சோர்வடைய செய்ய, ‘அவங்க என்ன ஆனாங்க? இது அப்பவே அவங்களை கிஸ் பண்ணிட்டு இருந்துச்சு தானே?’ என்று கோபத்தில் ஒருமையில் மாறியவளுக்கு, அனைத்தும் அவளின் புத்தியில் மின்சாரம் போன்று விநாடிக்குள் ஓட, இதயம் பனிக்கட்டியாய் உறைந்து போனது.

இதயத்தில் இருந்து வெண் முகிலாய் பொங்கிக் கொண்டிருந்த மகிழ்ச்சியும், ஆர்ப்பரிப்பும் மொத்தமாய் இறங்க, அறைக்குள் நுழைந்த அபிமன்யு வெளியே தங்களுக்கான உணவை, ஃபுட் சர்விங் ட்ராலியில் (Food serving trolly) தள்ளிக் கொண்டு வந்தவரிடம், கையுயரத்தி தடுத்து தானே ட்ராலியை உள்ளே இழுத்துக் கொண்டான்.

கதவை அடைத்தவன், அங்கிருந்த உயர்ரக ஷோபாவின் பின்னிருந்த ஒரு பட்டனை அழுத்த, அதுவோ சாப்பிடுவதற்கு ஏதுவாக மாறியது. இருவருக்கும் நடுவே டேபிளை இழுத்துப் போட்டுவிட்டு, உத்ராவின் எதிரே அமர்ந்தவன், “ஷல் வீ?” என்று கேட்க, “ம்ம்” என்றவளின் முகம் உம்மென்று இருப்பதை கவனித்தவன், எதுவும் கேட்கவில்லை.

இருவரும் தங்களுக்கு தேவையானதை எடுத்து போட்டு உண்ணத் துவங்கினர். உத்ராவும் காலையில் அவள் பாதியில் எழுந்து வந்து விழுந்ததில அவனும் சாப்பிடவில்லை என்று அறிவாள். அதனாலேயே இப்போது பேச வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டாள்.

முதலில் சாப்பிட்டு முடித்தவன், கைகளை கழுவிவிட்டு வந்து உத்ராவின் மறுபக்கம் டிவியை உயிர்ப்பித்து, படுக்கையில் தலைக்கு கை கொடுத்து செய்திகளை பார்த்துக் கொண்டிருக்க, ‘அய்யய்யப்பா! இவரோட கஷ்டம் போலையே’ என்று உள்ளுக்குள் தலையில் அடித்துக் கொண்டவள் விரைவாக சாப்பிட்டு முடிக்க,

“பவுல்ல (Bowl) தண்ணி இருக்கு பாரு.. அதுலையே ஹான்ட் வாஷ் பண்ணிக்க” என்றான் அவளை கீழே இறங்க விடாது பொருட்டு.

கைகளை கழுவியவள் அவனுடனே செய்தியை பார்க்க, அவளுக்கோ புரியாத படம் பார்ப்பது போன்று இருந்தது. அதுவும் உள்ளூர் செய்தியே பார்க்காதவளுக்கு உலக செய்தி எப்படி புரியும்?

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட ஃபுட் சர்விங் ட்ராலியை வெளியே இழுத்து வைத்துவிட்டு வந்து உத்ராவின் வெகு அருகே அமர்ந்தவன், சாய்ந்து கொண்டே மீண்டும் செய்தியில் மூழ்க, பெண்ணவளுக்கோ எப்படி கேட்பது என்று தெரியவில்லை.

கேட்டால் கோபித்துக் கொள்வானோ என்று தயக்கமும் அச்சமும்.

அவள் தயக்கத்துடன் அவனை அவ்வப்போது பார்ப்பதும், மீண்டும் டிவியில் கவனத்தை செலுத்த முயல்வது போன்று நடிப்பதுமாக இருக்க, அனைத்தும் அவளருகே இருந்த அந்த அகிலத்தையே கைக்குள் வைத்து தனக்கென்ற முதல் இடத்தை யாருக்கும் கொடுக்காது, வேங்கையாய் சீறிப் பாய்ந்து கொண்டு இருப்பவனுக்கு, புரிந்தாலும் அமைதியாக சாய்ந்து அமர்ந்திருந்தான்.

இப்படியே நீண்ட நேரம் கழிய, அவள் அவனிடம் தலையை திருப்பும் முன் அவளை பார்த்தவனின் சுழற்றியடிக்கும் பார்வையில் பெண்ணவளின் பட்டு இதயம் அவளின் தொண்டைக் குழியை அடைய, திருதிருவென்று விழித்தவளின் விழியோடு விழி கலந்தவன், ‘என்ன?’ என்று இரு புருவங்களையும் உயர்த்திய நளினத்தில், அவனின் கலாரசிகை ஆகிப் போனாள், பிரம்மன் அபிமன்யுவிக்கென்று படைத்த அவனின் உத்ரா.

தலை கவிழ்ந்தவள், சிறு தயக்கத்துடன், “நீங்க ஒரு பொண்ண லவ் பண்ணீங்களே? என்ன ஆச்சு இப்ப?” என்று கேட்டவள் அபிமன்யுவை நிமிர்ந்து பார்க்கும் சக்தியின்றி அமர்ந்திருக்க, தலை குனிந்து மடியில் இரு கரங்களையும் மெல்ல நெட்டிக் கொண்டே கேட்டவளின் குழந்தைத்தனமும், அப்பாவித்தனமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட,

உத்ராவின் கரங்களை பிரித்தெடுத்தவன், “உத்ரா! என்னை பாரு” என்று கட்டளை குரலில் கூறினான்.

தன்னவனின் அதட்டலான குரலில் நிமிர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் ரேகை உருவாகியிருக்க, “இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை இருக்கு” என்று புன்னகைத்தவனையே உற்றுப் பார்த்தவள்,

“அப்ப அதுனால தான் இத்தனை நாள் கல்யாணம் பண்ணாம இருந்தீங்களா?” என்று பாவமான வதனத்துடன் வினவ, இந்த குறுகிய காலத்தில் தன் மேல் அவளுக்கு வந்த உரிமையையும், பொசசிவ்நஸையும் உணர்ந்து இதுவரை அடைந்திடாத கர்வத்தை தலைக்கு மேல் கொண்டவன், அவளையே விழிகளில் புன்னகையுடன் பார்த்திருக்க,

“அவங்கள கிஸ் கூட பண்ணியிருக்கீங்க” என்றாள் உதடுகள் பிதுங்க, விழிகளில் சிறு கோபமும், ஆதங்கமும் மிஞ்ச…

உத்ராவின் கூற்றில் திடுக்கிடலுடன் உத்ராவை கண்ட அபிமன்யு, “நான் எப்ப கிஸ் பண்ணேன்?” என்று வினவ, வெடுக்கென்று நிமிர்ந்தவள், “பொய் சொல்லாதீங்க.. நானே பாத்தனே.. அப்ப தான நீங்க என்னோட ஜடையை பிடிச்சு இழுத்து.. அப்புறம்..” என்றவளுக்கு அடுத்து சொல்ல முடியாது போனது.

நாணம் செந்தாமரை வதனத்தில் சூழ்ந்து மீண்டும் தலை கவிழ முயன்றவளை, வேண்டுமென்றே சற்று குனிந்து அவளின் வதனத்தைக் கண்ட அபிமன்யுவின் பார்வையை சந்திக்க இயலாது தன் விழிகளை இறுக மூடிக் கொண்டாள் அவனின் வஞ்சினி.

“அப்புறம்..?” என்று விடாக்கண்டனாய் வினவியவனிடம் இருந்து அவளால் நகரக் கூட இயலவில்லை.

அருகாமை குறுகுறுத்தது!

அவன் மேல் வந்த வாசம் பரபரத்தது!

தன் மேல் பட்ட அவன் மூச்சுக்காற்று இம்சித்தது!

அதுவும் பார்வை அவளை கொள்ளாமல் கொன்றது!

கொத்தித் தின்றது!

“அப்புறம் தான் உங்களுக்கே தெரியுமே” என்று கூறியவளின் இதழ்கள் அனைத்தும் கலந்த உணர்வுகளில் துடிதுடிக்க, அவளின் கீழ் அதரங்களை தன் பெரு விரலால் வருடிய அபிமன்யுவின் ஸ்பரிசத்தில் பெண்ணவளுக்கு அடி வயிற்றில் தீப்பிளம்புகள் பீறிட, அவனைத் தடுக்கவும் முடியாது, அனுமதிக்கவும் முடியாது தவித்துப் போனாள் அவள்.

“நான் மேக்னாவை லவ் பண்ணல.. பட் நாங்க டேட் பண்ணோம்.. டேட்டிங் மீன்ஸ் ஒருத்தரை ஒருத்தர் அன்டர்ஸ்டான்ட் பண்ண ட்ரை பண்ணோம்.. பட் எனக்கு மேட்ச் ஆகல.. ஸோ அன்னிக்கு தான் நான் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னேன்.. அப்பதான் கால் தட்டி அவ என் மேல விழ வந்தா.. அப்ப நீ வந்த.. எல்லாம் தப்பா தெரிஞ்சிடுச்சு” என்று கூறியவனை பார்த்து மலங்க மலங்க முழித்தவள்,

“நிஜமா?” என்று வினவ,

“ம்ம்” என்று தன்னவளின் முழுமதி வதனத்தையே பார்த்திருந்தவன், “உத்ரா!” என்றழைக்க, அவனின் குரலில் தெரிந்த கிறக்கத்திலேயே மயங்கிப் போனவள், “ம்ம்” என்றாள்.

“ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ (I feel like kissing you)” என்றவனின் முகம் பார்த்தவளின் இதயம் பெரு வேகத்தில் அடித்துக் கொண்டு ஓட, அபிமன்யுவின் விழிகளில் விரசம் ஏகத்துக்கும் பரவியது.

“ஷல் ஐ? (Shall I?)” என்று வினவ, பெண்ணவளின் தயக்கம் கெஞ்ச, ஆசை மிஞ்ச, அபிமன்யு அவளின் அருகே நூலளவேயான இடைவெளியில் நெருங்கியமர, பெண்ணவளின் நெஞ்சுக் கூடு முதல்முறையாக ஆடவனின் நெருக்கத்தில் பனியில் விழுந்த நீராய் உறைந்து போக, அபிமன்யுவின் வதனம் அருகே வந்தது மட்டும் தான் அவளுக்கு நினைவில் இருந்தது.

அடுத்த விநாடி அவள் படுக்கையில் சாய்ந்திருந்தாள். அவள் மேல் அவளவன் சரிந்திருந்தான்.

அபிமன்யுவின் தாபங்களும், மோகங்களும் குமுறி கொண்டு வெடிக்க, தன்னவளின் அதரங்களை சகல விதத்திலும், அனைத்து நாட்டு முறையிலும் முதல் முறையிலேயே கள்வனாய் மாறி தேனை உறிந்து கொண்டிருந்தான்.

நீண்ட நேரமாக தொடர்ந்த முத்தத்தில், அபிமன்யுவின் விரல்கள் பெண்ணவளின் மிருதுவான கார் குழலை கோதிக் கொண்டிருக்க, உத்ராவின் கரங்கள் ஆடவனின் கழுத்தைச் சுற்றியிருந்தது.

சிறிது நேரம் அவள் இளைப்பாற அவகாசம் கொடுப்பவன், மீண்டும் அவள் மொட்டு உதடுகளை நாடினான். பிரம்மனின் கை வண்ணமாய் இருந்த பெண்ணவளின் வரைந்து வைத்த இதழ்களை ஆடவன் கவிஞனாய் தீண்டி தூண்டிக் கொண்டிருக்க, அவனுக்குக் கீழ் இருந்தவளோ கசிந்து உருகிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாதவள், அவனின் நெஞ்சில் கரம் வைத்து தள்ள முயல, தன்னவளின் தவிப்பை புரிந்து கொண்டவன், அவளிடம் இருந்து விலகி அவளருகே படுக்க, உத்ராவின் விழிகள் மேலே இருந்த கூரையைத் தவிர வேறெங்கும் தப்பித் தவறிக் கூட பார்க்கவில்லை.

உலகின் தொழில் வட்டாரத்தில், போட்டிகளில், உழைப்பில், அறிவில் என அபிமன்யு சந்தித்திருந்த வெற்றிகள் பல. கணக்கில்லாத வெற்றிகளும், எண்ணிலடங்கா பாராட்டுக்களும், புகழ்களும் என பிசினஸ் டைகூனாய், தன் எதிரிகளுக்கு மான்ஸ்டராய் வலம் வந்து கொண்டிருந்தவனை விநாடிப் பொழுதில் கண்டம் விட்டு கண்டம் வந்து ஒரே பார்வையில் அவனின் இரும்பு மனதை தகர்த்து எறிந்திருந்தாள்.

தனக்கு பக்கவாட்டாக படுத்திருந்த உத்ராவை பார்த்த அபிமன்யுவின் உணர்வுகள் மேலும் மேலும் சுனாமியாய் எழ, முயன்று தன்னை அடக்கியவன், “உத்ரா!” என்றழைக்க, அவளோ நாணத்தில் அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள்.

அவளின் பின்னே சென்று அணைத்தவன், அவளின் குழலை காதோரம் ஒதுக்க, இலேசாக கூச்சத்தில் நெளிந்தவள், விழிகளை இறுக மூடிக் கொண்டாள். சிறிது நேரத்தில் அபிமன்யுவின் விலகலை உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க, விஷமம் வழிந்தோடும் பார்வையோடு தன்னவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “விட்டுப் புடிச்சா தான் உன்கிட்ட வேலை ஆகும் போல” இரு பொருள்பட கூற, “ச்ச போங்க” என்று வெட்கத்துடன் சிணுங்கினாள்.

“விக்ரம் மட்டும் உனக்கு மாமா.. நான் யாரு?” என்று கேட்க, “மாமா தான்” என்றாள் முகத்தில் செம்மை பரவ.

விக்ரமை அழைக்கும் போது உறவால் வரும் உரிமை, அபிமன்யுவை அழைக்கும் போது நாணிக் கோணியது. அது வேறு இது வேறு என்று ஆழ்மனம் நன்கு அறிந்திருக்க, அபிமன்யுவின் மேலான காதல் தேன் துளி போன்று சுவையை கேட்டுக் கொண்டே இருந்தது.

“கிஸ் பண்ணும் போது எப்படி ஃபீல் பண்ண?” அபிமன்யு நேரிடையாகவே கேட்டுவிட, “ம்கூம்” சொல்ல வெட்கப் பட்டுக்கொண்டு இல்லை என்று தலையாட்டினாள்.

சிறிது நேரத்தில் அபிமன்யு மேலும் விலகி, செய்தியில் மூழ்கிவிட்டான். வேண்டுமென்றே!

ஒற்றை விரலால் அவனின் கரம் தொட்டு கூப்பிட்டவள், “ஏன் போயிட்டீங்க?’ என்று வினவ அவனிடம் பதிலில்லை.

“பேசுங்க” என்று மீண்டும் கெஞ்சலுடன் குயில் குரலில் கேட்டவளை அவன் பொருட்டே செய்யாது இருக்க, தயக்கத்தை விடுத்து ஒரே உருளில் அவன் அருகே நகர்ந்தவள், அவனின் புஜத்தை பிடித்து உலுக்கி, “பேசுங்க” என்று கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் தலையை டிவியில் பதிக்க, “நீங்க கிஸ் பண்ணும் போது.. ஐ வாஸ் இன் க்ளௌட் நைன் (Cloud nine) போதுமா.. இந்த உலகத்துலயே நானும் நீங்களும் மட்டும் இருக்க மாதிரி தான் ஃபீல் ஆச்சு.. பர்ஸ்ட் கிஸ் பெஸ்ட் கிஸ் அப்படி ஃபீல் பண்ண வச்சீங்க.. எப்படி விதவிதமா கிஸ் பண்ணனும் நெட் ப்ளிக்ஸ்ல படமா பாத்ததை எல்லாம் கத்துத் தந்துட்டீங்க போதுமா… மாமா!!!” என்று இறுதியில் சப்தமாய் கத்தி முடித்தவளுக்கு மூச்சு வாங்க, பெண்ணவளின் படபடப்பை கண்டவன், அவளின் ஏறி இறங்கும் இரட்டை தனங்களை விழிகளால் கொய்ய, தன் பஞ்சு கரம் வைத்து நாணத்துடன் அபிமன்யுவின் விழிகளை பொத்தினாள் பெண்ணவள்.

அவளின் கரத்தை இறுக பற்றி கீழே இறக்கியவன், “நான் மொதல்ல பாத்த சின்ன பொண்ணு இப்ப இல்ல நீ.. அதே பயம், தயக்கம், படபடப்பு எல்லாம் இருக்கு.. ஆனா, மத்தது எல்லாம் மாறிடுச்சு” என்றவன் எதை கூறுகிறான் என்பதை உணர்ந்தவள்,

“ரொம்ப டபுள் மீனிங்கா பேசறீங்க” என்று சிணுங்கலுடன் பெட்ஷீட்டை விரலில் சுற்றியபடி கூற, அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான் அபிமன்யு.

“டபுள் மீனிங் இல்ல.. சிங்கிள் மீனிங்லையே சொல்றேன்.. யூ ஆர் ஹாட்.. அதாவது செம ஷேப் உனக்கு” என்றவனின் பேச்சில் செவிகளை பொத்தியவள், “போதும் போதும்” என்றாள்.

அவளின் தாடையை விட்டவன், “எப்படி மெயின்டெயின் பண்ற?” என்று வினவ, “மெயின்டெயின் எல்லாம் எதுவும் இல்ல.. நான் டான்ஸ் பண்ணிட்டே இருப்பேன்” என்றவளின் இடையை சுற்றிப் பிடித்து அருகே இழுத்தவன்,

“அதுதான் இங்க எக்ஸ்ட்ராவா எதுவும் இல்லையா?” என்று இடையை மேலும் இறுக்கி அழுத்திவிட்டு வினவ, “என்னை இவ்வளவு நோட்டீஸ் பண்ணியிருக்கீங்களா?” என்று கேட்டேவிட்டாள்.

“ம்ம் ரொம்ப!!!” என்று அழுத்தமாக கூறியவன், “ஆனா இதெல்லாம் இப்பதான் கவனிக்க ஆரம்பிச்சேன்” என்றானே பார்க்கலாம்.

அதாவது உன்னை முதலில் இருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இப்போது தான் இதையெல்லாம் கவனிக்கிறேன் என்று கூறியவனின் வார்த்தைகளை பெண்ணவள் கவனிக்கவில்லை.

காதல் சூழ்ந்திருந்த உள்ளம் மதிக்கு வேலை கொடுக்க மறந்தது! காதல் கண்ணை மட்டும் இல்லை அனைத்தையும் மறைக்கும்! மறக்கும்!

“அவ்வளவு பிடிக்குமா?” விழிகளில் ஆர்வமும், ஆசையும், காதலும் போட்டி போட கேட்டவளிடம் விழிகளை சிமிட்டியவன், “கிஸ் பண்ணதுலையே புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்” என்று மேலும் அவளை சிவக்க வைத்தவனின், தோளில் நாணத்தில் புதைந்து போனாள் அவள்.

நாணத்தில் துடிக்க வைத்துக் கொண்டிருந்தான் அவளை!

அன்றிரவும் உணவு முடித்தவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, உத்ராவிற்கோ இயற்கை அழைத்தது. சிறிது நேரம் நெளிந்து கொண்டே இருந்தவள், “எனக்கு பாத்ரூம் போகணும்” என்றவளை அபிமன்யு தூக்க வர,

“இல்ல புடிச்சீங்கனா போதும்” என்றிட, மனதுக்குள் மூண்ட கோபத்தை அவளுக்காக கட்டுப்படுத்தியவன், அவளை கைத்தாங்கலாக பிடிக்க, வஞ்சியவளின் ஒரு பக்கம் மொத்தமும் ஆடவனின் மேல் சாய்ந்து உரச, அவளுக்கோ சங்கடம் கலந்த கூச்சம்.

அவளின் நெளிவில் அபிமன்யுவின் இதழுக்கிடையில் புன்னகை தவழ, நடப்பதை நிறுத்தி அபிமன்யுவை பாவமாக அண்ணார்ந்து பார்த்தவள், “தூக்கிட்டே போங்களேன்” என்றாள்.

“இல்ல இதுதான் எனக்கு கம்பர்டபிளா இருக்கு” விஷமம் வழிந்தோடும் குரலில் கூறியவனின் பேச்சில், தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், “தப்பு தான் மாமா!!” என்றாள் அழுத்தமாக.

அவன் சீண்டும் போதெல்லாம் ‘மாமா’ என்று அழைக்கத் தோன்றியது அவளுக்கு. அப்படி கேட்டால் செய்துவிடுவான் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

சட்டென உத்ராவை தூக்கியவன் அவளை குளியலறைக்குள் விட்டு வந்து வெளியே நிற்க, சிறிது நேரத்தில் உள்ளே இருந்து நொண்டி நொண்டி வெளியே வந்தவளை பார்வையாலேயே எரித்தவன், “கூப்பிட்டா வர மாட்டேன்னா?” என்று அதட்ட, இரு கைகளையும், ‘என்னை தூக்கு’ என்பது போல தூக்கியவள்,

“ஸாரி மாமா” என்று கூறி கீழுதடு கடித்து வசீகரமாய் புன்னகைக்க, கடுப்புடன் தன்னவளை ஏந்தியவன் படுக்கையில் அவளை கிட்டத்தட்ட தொப்பென்று கோபத்தில் போட்டான்.

“ஆஹ்” வலியில் சிறு முனகலை வெளியிட்டவள், “ரொம்ப தான்” என்று முணுமுணுக்க, மறுபக்கம் வந்து படுத்த அபிமன்யு அவளின் பேச்சு செவியில் விழுந்ததில் அவளை முறைக்க, தனக்கே உண்டான குறும்புத்தனம் எட்டிப் பார்க்க,

“சும்மா சும்மா முறைக்காதீங்க.. கல்யாணம் ஆனாலும் இப்படி இருந்தா..” என்றவள் அப்போது தான் பேச்சு செல்லும் திசை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவனை நாணத்தோடு பார்த்தவள், “கல்யாணம் பண்ணிப்பீங்க தானே? மாட்டேன்னு சொன்னாலும் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சிம்மவர்ம பூபதியை வச்சு காரியத்தை சாதிப்பேன்” என்று கெத்தாக பேசியவளின் கீழுதட்டை பிடித்து இழுத்தவனின் திண்ணிய மார்பின் மேல் விழுந்தவள், சட்டை விலகியிருந்த இடத்தில் அவனின் வாசம் பிடித்து அங்கேயே முகத்தை புதைக்க, ஒளி சிந்தும் ராத்திரியில் கடலுக்கு நடுவே இருந்தவர்களின் சீற்றம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது.

அப்படியே அவளோடு படுக்கையில் சரிந்தவன், அவளைத் தன் நெஞ்சின் மேல் கிடத்திக் கொண்டு அருகில் இருந்த ரிமோட்டின் மூலம் விளக்கை அணைத்துவிட்டு, அறை முழுதும் மூடியிருந்த திரையை விலக்க, நிலவொளி கடலில் விழுந்து வெண்ணை பந்தாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.

“வாவ்!” என்றவள் அவனின் நெஞ்சின் மீது தலை சாய்த்தபடியே கடலை ரசித்தபடி, “அம்மா என்னை இண்டியா அனுப்பவே மாட்டேன்னு சொன்னாங்க.. நான் தான் அடம் பண்ணி வந்தேன்.. உங்க வீட்டுக்கு அவ்வளவா வரவே கூடாதுன்னும் சொல்லியிருந்தாங்க.. எதுக்காகனு புரியல.. உங்களுக்கு என்னை பிடிக்காதுல அதுனாலதான்னு நினைக்கறேன்.. எனக்கும் உங்களை அவ்வளவா அப்ப பிடிக்காது” என்றவளின் கூந்தலுக்குள் கை நுழைந்து சிகை கோதியவனின் செயலில் சுகம் கண்டு மேலும் அவன் மார்பில் புதைந்தவள்,

“எனக்கும உங்களை அவ்வளவா பிடிக்காது.. ஏன்னா முதல்ல பயம்.. நீங்க நான் பர்ஸ்ட் டைம் இண்டியா வந்தப்பவே சரியா பேசல.. அப்புறம் அழ வச்சீங்க.. அதனாலேயே எனக்கு உங்களை பிடிக்கல.. அப்புறம் மித்து கூட மட்டும் பேசுவீங்க.. அவ என் தங்கச்சி தானே.. அவகிட்ட மட்டும் எப்படி பேசறீங்கன்னு ஒரு கோபம்” என்று அபிமன்யுவை சுற்றி கை போட்டவளின் அழுத்தமும், தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் உரிமையும், சொல்லாமல் சொல்லியது இப்போது அபிமன்யுவிற்கு அவளுக்கு மேல் கொண்ட காதலையும், நம்பிக்கையையும்.

“ஆனா, என்னை மட்டும் பிடிக்கும்.. என் அம்மா அப்பாவை..” என்று ஆதங்கத்துடன் கூறியவளின் குரலில் கரகரப்பு ஏறியிருக்க, தன்னவனின் நெஞ்சில் நாடி குற்றி அவனையே பார்த்தவள், “நீங்க இப்படி பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு” என்றாள் மெய்யான வேதனையுடன்.

உத்ராவின் கன்னம் பற்றியவன், தன் பெருவிரலால் அவளின் கன்னத்தை மெல்லத் தீண்டி, “உத்ரா! ப்ரான்க்கா சொல்லனும்னா.. அவங்க கூட என்னை குட் டேர்ம்ஸ்ல (Good terms) எதிர்பாக்காத.. நீதான் ஹர்ட் (hurt) ஆகி நிப்ப.. எனக்கு அவங்களை பிடிக்க போறது கிடையாது.. அவங்களை பாத்தாலே எனக்கு வெறி தான் வருது.. என் வாழ்க்கைல நான் வெறுக்கிறான் இரண்டு பேர் அவங்க.. உன்னோட அவங்களை நிறுத்திக்கோ.. என்கிட்ட கொண்டு வர்றாத, ஈவன் ஆப்டர் அவர் மேரேஜ் (even after our marriage).. அது நம்ம லைஃபுக்கு நல்லது இல்ல” என்றவன் இறுதியாக இதை கூறுகிறேன் என்று எச்சரிக்கையும், இலேசான கனிவும் கலந்து கூறியிருக்க, மீண்டும் அவனின் மார்பில் அமைதியாக தலை சாய்த்துக் கொண்டவளின் விழியில் இருந்து கண்ணீர் துளிர்த்தது.

அவள் அழத் தயாராவது புரிய, “சில விஷயத்தை நீ அக்ஸெப்ட் பண்ணிதான் ஆகணும் உத்ரா.. அதுதான் எல்லாருக்கும் நல்லது” என்று கூறியவனின் பிடிவாதக் குரலில் தலையை மட்டும் அசைத்து கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவளுக்கு தெரியவில்லை அவன் எதை கூறுகிறான் என்று.

இவனும் வேண்டும் அவர்களும் வேண்டும்.

யாருக்காகவும் யாரையும் அவளால் விட்டுக் கொடுக்க இயலாதே!

அவளை மெல்ல தட்டிக் கொடுத்தவனிடம் மீண்டும், “அவங்கிட்ட என்னை பேச வேண்டாம்னு எல்லா சொல்ல மாட்டீங்கள்ள?” என்று ஏக்கமும், அப்படி மட்டும் வேண்டாம் என்பது பெண்ணவளின் குரலிலேயே தெரிய, நீண்ட நேரம் யோசித்து அவளை தவிக்க விட்டவன், “உன்னோட விருப்பத்துல தலையிட மாட்டேன்.. ஆனா, அதுக்கு பதிலா நீ எனக்கு ஒண்ணு பண்ணனும்” என்றவுடன் முன் பாதியை மட்டும் கேட்டவள், பின் பாதியை கேட்டும் தூசைப் போன்று அதை தட்டிவிட்டு, அபிமன்யுவை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவனின் மார்பில் முத்தமிட்டவள், “தாங்க்யூ அன்ட் கண்டிப்பா” என்று அவனை இறுக அணைத்தபடியே உறங்கிப் போனாள் அந்த பேதை.

error: Content is protected !!