⛪️லேவியின் நவி அவள்🛕

⛪️லேவியின் நவி அவள்🛕
லேவியின் நவி 9
என்னை பெற்றவரிடம் இதுவரை எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று அடம் பிடித்ததில்லை…
ஆனால் உன் விஷயத்தில் வளர்ந்த பின்பும் அடம் பிடிக்கும் மழலையாய் மாறிப்போனேன் நான்…
வெண்ணரையூரை நெருங்க இன்னும் ஒரு கிலோ மீட்டரே இருந்த நிலையில் ஒரு இடத்தில் பேருந்து பள்ளத்தில் மாட்டிக்கொண்டது.
சற்று நின்றிருந்த மழை வேறு வலுக்க தொடங்கிருந்தது. வண்டி நன்றாக சேற்றில் மாட்டிக் கொண்டதால் அதை எடுக்க முடியவில்லை. எனவே, பயணிகள் அனைவரையும் அந்த பேருந்திலிருந்து இறக்கினர்.
வேறு ஏதாவது வண்டி வந்தால் அதில் இவர்களை ஏற்றி விடலாம் என்று நினைத்திருந்த நேரம். ஒரு பேருந்து கூட வரவில்லை.
என்னதான் ஆனது என்று அந்தக் கூட்டத்திலிருந்தவர்கள் ஒருவருக்குள் ஒருவர் பேசிக் கொண்டிருக்க,
அப்போதுதான் அந்த செய்தி சொல்லப்பட்டது. அதாவது மழை மீண்டும் வலுக்கத் தொடங்கி இருக்கிறது இரண்டு மூன்று நாளைக்கு இதே நிலை தொடரும். அதுமட்டுமில்லாமல் அந்த மாவட்டத்தின் ஒரு முக்கியமான ஏரி அதன் கொள்ளளவை எட்டி இருந்ததால் அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது அது வேறு வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கவே பேருந்து சேவை மறுபடியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து புறப்பட்ட பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் அந்தந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணங்களும் ரத்து செய்யப்பட்டது.
இப்பொழுது என்ன செய்வது என அனைவரும் குழம்பித் தவிக்க, இதைக் கேட்ட ஜான் ஒரு முடிவு எடுத்தவனாக, “ உனக்கு இப்ப கால் வலி பரவால்ல தானே?”
“ம்…பரவால்ல”, என்றாள் உண்மையை மறைத்து. ஓரளவுக்கு தான் அந்த காயம் குணமாக இருந்தது நேற்று நீரில் இறக்கி நடந்தது, இவ்வளவு நேரம் பேருந்தில் நின்று கொண்டே வந்தது என காலை அசைக்க முடியவில்லை அவளால்.
“இங்க இருந்து ஒரு கிலோ மீட்டர் இருக்குமா உங்க ஊரு”, என அவன் வினவ,
“ம்…இருக்கும் நடந்து போலாம் யோசிக்கிறீங்களா”, என அவன் மனதில் இருப்பதைக் கேட்க,
“ஆமா ஆனா உன்னால முடியுமான்னு தான் யோசனையா இருக்கு”, என்றான் அவளின் அடிபட்ட கால்கள் இன்னும் அந்த அளவுக்கு பலம் பொருந்தி இருக்கவில்லை என்பது தெரிந்ததால்.
“முடியும் கண்டிப்பா ட்ரை பண்ணுவோம் வேற வழி இல்லயே”, என இருவரும் மெதுவாக நடக்க துவங்கினர்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவளுடைய லக்கேஜ் அனைத்தையும் இவனே எடுத்துக் கொண்டான். ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்பார்கள். அதற்குள் அவள் கால்கள் ஏதோ பாறை கட்டியது போல மிகவும் பாரமாக இருக்க ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“என்னாச்சு நவி ரொம்ப வலிக்குதா”, என அவன் முகத்தில் கவலையை தேக்கி வினவ,
“ஆமா ரொம்ப வலிக்குது என்னால முடியல”, என்றாள் அந்த வலி நிறைந்த கால்களை பிடித்துக் கொண்டே,
அவளுக்கு இப்போது ஒய்வு தேவை என்பது புரிந்ததனால் மேற்கொண்டு நடப்பது பற்றி யோசிக்காமல் அவள் அருகிலேயே அவனும் அமர்ந்து கொண்டான்.
அவள் கால்களை பிடித்து விடப் போனான் இவன். அவள் சட்டென்று கால்களை நகர்த்தி “என்ன பண்றீங்க நீங்க போய்”, என அவள் கூற,
“இதுல என்ன இருக்கு. முடியாத போது இப்படியெல்லாம் சேவகம் பண்ணா தப்பில்ல”, என அவன் கூற,
இருவரின் வாக்குவாதமும் அங்கே வந்த அந்த ஆட்டோவை பார்த்தவுடன் நின்றது. அப்பாடா என அந்த ஆட்டோவை அழைத்து, அவர் கேட்ட அதிகப்படியான பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டு வைஷ்ணவியின் வீடு நோக்கி புறப்பட்டார்கள்.
***
ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் காமாட்சி.
வைஷ்ணவியின் காலில் இருந்த கட்டு பேண்ட்டில் மறைந்து இருந்ததால், வெளியில் கையில் இருக்கும் கட்டு மட்டுமே காமாட்சியின் கண்ணில் பட்டது.
“அம்மு என்ன ஆச்சு?”, என பதறினார் அவர்.
“ஒன்னும் இல்லம்மா சின்ன அடி தான் நீங்க வாங்க”, என அன்னைக்கு பதில் சொன்னவள் தன் அருகே இருக்கும் ஜானை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“அம்மா இது ஜான் நான் சொல்லி இருக்கேன் இல்ல”, என தன் அன்னையிடம் ஜானை அறிமுகப்படுத்தினாள்.
“நீங்க தானா அது உள்ள வாங்க தம்பி. உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கா நீங்க தான் முதன்முதலில் அவளுக்கு கேப் கண்டுபிடிக்க, அப்புறம் அவளோட பிளாக் கண்டுபிடிக்க எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணிக்கலாமே. அடிக்கடி அவளுக்கு புடிச்ச மாதிரி சமைச்சு கூட எடுத்துட்டு வந்து இருக்கீங்கன்னு சொல்லி இருக்கா”, என அவர் அடக்கி கொண்டே போக ஜான் ஆச்சரியமாக வைஷ்ணவியை பார்த்தான்.
‘என்ன’ என அவள் புருவம் உயர்த்தி காட்டிய அழகில் மயங்கியவன் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து, தன்னை அடக்கி ‘ஒன்றுமில்லை’ என்று தலையை ஆட்டிக் கொண்டான்.
இருவரும் மழையில் நன்றாக நனைந்து வந்திருக்க இருவருக்கும் டவல் எடுத்து வந்து, உடைமாற்றி வரச் சொன்னார்.
“இல்ல ஆண்ட்டி இருக்கட்டும் ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்ன ஜான் தயக்கத்துடன் கூற,
“என்ன வேணாம் எவ்வளவு நேரம் இதே துணியோட இருக்கிறதா நினைப்பு. அப்புறம் உடம்பு சரி இல்லாம போகும்”, என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வைஷ்ணவி இடையே புகுந்து,
“ஆமாம்மா நேத்து எல்லாம் அவருக்கு செம ஜுரம்”, என்றாள் கவலையாய்.
“அப்டியா என்ன தம்பி நேத்துதான் உடம்பு சரி இல்லாம போயிருக்கு அதுக்குள்ள இப்படி மழையில நனைஞ்சு…போங்க மேல ஒரு ரூம் இருக்கு அங்க போய் ரெப்ரெஷ் ஆயிடுவாங்க”, என விடாப்பிடியாய் அவன் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் அனுப்பி வைத்தார் காமாட்சி.
இருவரும் தலை துவட்டி உடைமாற்றி, ஹாலிற்கு வர அவர்களுக்காக குடிக்க சூடான காபியை எடுத்துக் கொண்டு வந்தார் காமாட்சி.
இவ்வளவு நேரம் மழையில் நனைந்தது குளிராக இருக்க, அந்த சூடான பானம் உள்ளே இறங்கி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.
அதைக் குடித்து முடிக்கவும் கிளம்புகிறேன் என்று ஜான் கூற,
“எப்படி போவீங்க அதான் பஸ் எல்லாமே திரும்பவும் ஸ்டாப் பண்ணிட்டாங்களே”, என வைஷ்ணவி வினவ,
“ஏதாச்சும் பண்ணலாம் ஏதாச்சு பண்ணி போயிடுறேன் எப்படியாவது”, என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே காமாட்சி வந்தார்.
“பக்கத்துல ஏரி ஃபுல்லா ரொம்பி தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. கண்டிப்பா இப்ப எந்த வண்டியும் போக முடியாது தம்பி. இன்னும் ஒரு ரெண்டு மூணு நாளாச்சு ஆகும்”, என அவர் கூறவும் ஜானிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“அம்மு சொன்னாப்பா அன்னைக்கு ஆபீஸ்ல வெள்ளம் வந்தப்ப நீங்க பண்ண எல்லா உதவியும் .இவ்ளோ பண்ண உங்களுக்கு ஒரு சின்ன உதவி பண்ண சான்ஸ் கிடைச்சிருக்கு தான் நினைச்சிக்கிறேன்”, என அவர் பீடிகை போட, அவர் என்ன கூற வருகிறார் என ஜான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரெண்டு மூணு நாள் இங்கேயே தங்கப்பா. எல்லாம் சரியாகி பஸ் விட்ட உடனே நீ ஊருக்கு போ”, என அவர் கூறவும் இவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
வைஷ்ணவிக்கு குதூகலம் தாங்க முடியவில்லை. அவளும் மனதில் இதேதான் நினைத்துக் கொண்டிருந்தாள். இருந்தாலும் தன் அன்னையை கேட்காமல் அவ்வாறு கூற முடியாது என்று அமைதி காத்துக் கொண்டிருந்தவள். அவர் வாயாலேயே இப்படி ஒரு வார்த்தைகள் வரவும் எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தாள்.
ஆனால் ஜானோ, “ இல்ல ஆண்ட்டி, அது சரிப்பட்டு வராது இருக்கட்டும் நான் எப்படியாவது போறதுக்கு ட்ரை பண்றேன்”, என்றான்.
பெண்கள் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் தான் அங்கு தங்குவதனால் ஏற்படும் பிரச்சனைகளை யோசித்தே அவன் இவ்வாறு கூறினான்.
அவன் ஏன் அவ்வாறு கூறுகிறான் என்பதை புரிந்து கொண்ட காமாட்சிக்கு அவன் மீது மதிப்பு அதிகமானது.
“எனக்கு புரியுது தம்பி நீங்க எதுக்கு சொல்றீங்கன்னு ஆனா ஒன்னும் பிரச்சனை கிடையாது யாரும் இதுவரைக்கும் நம்ம குடும்பத்தை தப்பா பார்த்தது கிடையாது. அதனால எத பத்தியும் யோசிக்காம இங்கேயே தங்கிக்கோங்க தம்பி”, என காமாட்சி அவனை வற்புறுத்த,
திலகவதி பாட்டிக்கு முதலில் அது பிடிக்காமல் இருந்தாலும் தன் பேத்தியை அவன் தான் காப்பாற்றினான் என்பது தெரிந்தவுடன் அவன் மேல் ஒரு பாசம் வந்திருந்தது.
ஜான் எழுப்பவும் அவன் அருகே வந்து அவன் கையைப் பிடித்து, “என் பேத்தியை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி ராசா”, எனக்கு கூறியவருக்கு அப்போது தான் தெரிந்தது அவனின் காய்ச்சல்.
நேற்று உடம்பு அந்த அளவுக்கு குணமாகாத நிலையில் அவளை ஹாஸ்டலில் விட தண்ணீரில் இறங்கி சென்றது, இதோ இன்று மீண்டும் மழையில் நனைந்தது என்று அவனுக்கு சிறிது விட்டிருந்த காய்ச்சல் மீண்டும் வந்து அவனிடமே சேர்ந்திருந்தது.
“ஐயோ, என்னப்பா நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா”, எனக் காமாட்சி கேட்டுவிட்டு அவனுக்கு இரண்டு இட்லிகள் வைத்து கொடுத்து சாப்பிட வைத்து, மாத்திரை போட்டு மேலே சென்று தூங்க சொன்னார்.
இதற்கு மேல் மறுப்பதற்காக அவனுக்கு காரணமும் இல்லை உடலில் தெம்பும் இல்லை.
வைஷ்ணவி தான் அவனை அழைத்துக் கொண்டு மேலே சென்று படுக்க வைத்து விட்டு வருகிறேன் என்று போக, ஜானிற்க்கு தயக்கமாக இருந்தது. எங்கே அவள் அம்மா தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று.
ஆனால் அவரோ, “பாத்து கூட்டிட்டு போ அம்மு”, என கூற,
ஜானிற்கு அவரை பார்த்தவுடன் ஏற்பட்ட மதிப்பு இப்பொழுது அதிகமாகிருந்தது.
வைஷ்ணவி ஜானை மேலே விட்டுவிட்டு உடனேயே கீழே வந்தாள். வந்தவள் தன் அன்னையிடம் சென்று சிறிது பேச வேண்டும் என்றாள்.
அவரும் என்ன என்று கேட்க இங்கே வேண்டாம் கோயிலுக்கு செல்வோம் என்றாள்.
சிறு வயதிலிருந்து ஏதாவது மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே இவ்வாறு கோவிலுக்கு சென்று பேசலாம் என்பாள்.
இன்று வர சொல்லவும் அவருக்கு மகள் என்ன சொல்ல காத்திருக்கிறாள் என்று ஒரு சிறு கணிப்பு இருந்தது.
‘அது உண்மையா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தன் மகளின் வாய் மூலமே தெரியவரும்’, இவ்வாறு தனக்குள் யோசித்துக் கொண்டவர் செல்லலாம் என்றார் அவளிடம்.
கோவிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றிவிட்டு, அவர்கள் வழக்கமாக அமரும் பிள்ளையார் சன்னதி ஆண்டே அமர்ந்து கொண்டார்கள்.
பிள்ளையாரைப் பார்த்து ஏதோ முணுமுணுவென வேண்டிக் கொண்டிருந்த மகளிடம் என்ன பேச வேண்டுமென விசாரிக்க,
இவளுக்கோ தயக்கம் மேலோங்கிருந்தது. அப்போது அவள் மனதில் ஜான் சொன்ன இந்த வரிகள் ஓடியது, “முயற்சி பண்ணி பார்த்தா தானே தெரியும் முயற்சியே பண்ணலேன்னா எப்படி”
பின்னர் முடிவுக்கு வந்தவளாக தன் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு, “அம்மா என்ன மன்னிச்சிடுங்க. நீங்க எவ்வளவோ சொன்னீங்க காதல் கீதல்னு வந்து நிக்க கூடாதுன்னு. நானும் எவ்வளவு முயற்சி பண்ணேன் மா… ஆனா அது எல்லாம்…”, என்ன அவள் வாக்கியத்தை முடிப்பதற்குள்.
காமாட்சி இடைமறித்து, “ஜான பார்த்த உடனே அதெல்லாம் தரமாட்டம் ஆயிடுச்சா?”, என வினவ,
அவரை நிமிர்ந்து பார்த்து ‘ஆம்’ என்று மெதுவாக தலையாட்டினாள்.
தன் பெண்ணொன்று டீன் ஏஜ் பெண் இல்லை. அப்படி தடுமாறி போகின்ற வயதிலேயே தனக்கு வந்த பிரபோசல்களை அவள் சாமர்த்தியமாக கையாண்டது அவருக்கு தெரியுமே.
அப்படி இருக்க இப்பொழுது அவள் கூறுவதை கேட்க அது வெறும் ஈர்ப்பு என்று ஒதுக்க அவரால் முடியவில்லை.
சற்று நேர அமைதிக்கு பின் வைஷ்ணவியே தொடர்ந்தாள். முதல் முதலில் ஜானை பார்த்தது முதல் அனைத்தையும் தன் அன்னையிடம் ஒப்பித்தாள்.
அனைத்தையும் கேட்க, காமாட்சிக்கு இருவரும் தங்கள் காதலை பக்குவமாக கையாண்டதாகவே தோன்றியது.
என்னதான் பெண்ணை காதல் கீதல் என்று வரக்கூடாது என்று கூறியிருந்தாலும். அவள் மனதுக்குப் பிடித்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.
ஆனால் அந்த எண்ணத்திற்கு தடையாய் இருந்தது இவர்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள். இது சம்பந்தமாய் பெண்ணிடம் பேசுவதை விட, ஜானிடம்தான் பேச வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தார் காமாட்சி.
அதன் பின் எதுவும் பேசாமல் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை. தன் அன்னை தன்னிடம் இதை பற்றி எதுவுமே பேசவில்லையே அவருக்கு அது சம்பந்தமா? இல்லையா? என்பது கூட இவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது. தன் மகள் அவனின் மேல் காட்டும் அக்கறையும் பாசமும் இவருக்கு புரியாமல் இல்லை.
அதைப்போல் அவனும் மிகவும் மரியாதையாகவும் பாசமாகவும் நடந்து கொள்வதை பார்த்து காமாட்சிக்கு ஜானை பிடித்திருந்தாலும் அவரால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
இப்படி இருக்க அவன் அங்கு வந்த மூன்றாவது நாள் மாலை பேருந்து சேவை தொடரப்பட்டது என்ற செய்தி வந்திருந்தது. எனவே அப்பொழுதே கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான்.
காமாட்சி மற்றும் வைஷ்ணவியின் கவனிப்பாள் அவன் நன்றாகவே உடல்நிலை தேறியிருந்தான்.
அவன் கிளம்ப அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து காமாட்சி அவனிடம் ஏதோ பேச வேண்டும் என்றார்.
இவனுக்கு என்னவோ ஏதோ என்று மனம் தித்திக்கின்று அடித்துக் கொண்டது. இருவரும் மாடியில் நின்று கொண்டிருக்க, காமாட்சி தான் ஆரம்பித்தார்.
“வைஷ்ணவி எல்லாம் சொன்னா”, என ஆரம்பித்து அடுத்தடுத்து அவர் பேசிய விஷயங்கள் அவன் முகம் மாறுதலுக்கு காரணமானது.
அப்படி அவர் என்ன கூறினார்? காமாட்சி ஜான் வைஷ்ணவி காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா? அல்லது சிவப்பு கொடி காட்டி ஜானை அவள் முகத்தில் முழிக்காதவாறு செய்து விடுவாரா?
***
ஜான் அவன் வீடு வந்து சேர்ந்து இரண்டு நாள் ஆகி இருந்தது. வந்து சேர்ந்த அன்று வைஷ்ணவிக்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன் என்று மெசேஜ் அனுப்பியதோடு சரி.
மற்றபடி எவ்விதமான பேச்சு வார்த்தையோ மெசேஜோ வைத்துக் கொள்ளவில்லை.
காமாட்சி அன்று அவனிடம் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவன் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது அப்புறம் எப்படி வைஷ்ணவியை தொடர்பு கொள்வான்.
அங்கு வைஷ்ணவியோ தன் அன்னையின் முடிவு தெரியாமல். ஜானின் இந்த இரண்டு நாள் மாற்றத்திற்கான காரணம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
லேவியின் நவி காதல் தொடரும்…