ஆட்டம்-42
ஆட்டம்-42
ஆட்டம்-42
சுற்றியும் இருந்த எழில் கொஞ்சும் இயற்கை சூழலுக்கு நடுவே, ஜொலிக்கும் தங்கத் தடாகமாய்இதழ்களில் புன்னகை மினுமினுக்க, தன் தந்தை சிம்மவர்ம பூபதியின் கரங்களை பிடித்துக் கொண்டு வந்த நீரஜாவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விஜய்யிற்கு விழிகளில் நீர் கோர்த்தது.
தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு வந்த நீரஜாவின் விழிகளில் சற்று தூரத்தில் அனைவருடனும் பட்டு வேஷ்டி சட்டை உடுத்தி, தனக்காக காத்திருக்கும் தன்னவனை கண்ட நீரஜாவின் சந்துஷ்டி, உள்ளுக்குள் விஜய் மேல் கொண்ட காதலின் உவகையில் மிதமிஞ்சி பொங்க, கன்னங்கள் இரண்டும் மிளிர, ஹனி ப்ரவுன் விழிகள்இரண்டும் தேன் போன்று பளபளக்க, மனம் முழுக்க காதலுடன் தங்களது குல தெய்வம் கோவிலுக்குள்நுழைந்தார் நீரஜா.
ஆம்! இருவருக்கும் இன்று திருமணம்!
( Youtube video : நீரஜா! சந்திரஞ்சா)
( link : https://youtube.com/shorts/de8ze3zkTwY?feature=share )
இந்த ஒரு திரு நாளுக்காக எத்தனை வருடங்கள் இருவரும் காத்திருந்தனர். காத்திருப்புக்கானபலனும், இடையே இருவரும் தாங்கிக் கொண்ட வேதனைகளும் அவர்கள் அழகான காதலுக்கு விலைமதிக்க முடியாத மதிப்பு தான்.
நீரஜா பல வருடங்களுக்கு முன் தன் திருமணத்திற்கு எடுத்திருந்த அதே வாடாமல்லி, தங்கம், ஆரஞ்சு இணைந்த ட்ரை கலர் பட்டு புடவையை கட்டியிருக்க, கழுத்தில் சன்னமாக ஒரு வைர நெக்லஸும் அதற்கு மேட்ச்சான வைரத்தோடும் அணிந்திருந்தார். அனைவரும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதிற்காக மிகவும் இலேசாகஒப்பனை செய்திருந்தார்.
செந்தாமரை மலர்க்கண் கொண்டு தன்னை பார்த்ததில் இருந்து, தன்னவனின் வதனத்தில்தெரியும் ஒவ்வொரு உணர்வுகளையும் தன் உள்ளத்தில் சேமித்துக் கொண்டிருந்தவர், அவரின் அருகே வந்து மறுபக்கம் இருந்த கரத்தை அவர் கரத்தோடு பிடித்துக்கொள்ள, பொதுவாக மகள்களின் திருமணத்தில் அன்னையின் விழிகளில்கண்ணீர் வரும்.
இங்கு நீரஜா வந்து இறங்கியதில் இருந்து அன்னையையும், தந்தையையும் மாறி மாறிபார்த்துக் கொண்டிருந்த நறுமுகைக்கும், உத்ராவிற்கும் இருவரின் தேவ காதலையும், விவரணத்துக்கு அப்பாற்பட்ட காத்திருப்பையும்நினைத்து விழிகள் கலங்கிப் போனது.
அன்று கோவிலில் யாருக்கும் வர அனுமதி தராதுவிக்ரம் பார்த்துக்கொள்ள, அபிமன்யு தான் அனைத்து ஏற்பாடுகளையும் நடத்தியது. இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, அவர்களின் குல தெய்வத்தை அனைவரும் கை கொண்டு வணங்க, என்றும் இதிலெல்லாம்அவ்வளவு நம்பிக்கை இல்லாத அபிமன்யுவும், விக்ரமுமே கடவுளை விழி மூடி வணங்கி நின்றனர்.
இவர்களே இப்படி என்றால் மற்றவர்களை பற்றி சொல்ல தேவையில்லை!
அரிமா பூபதி, அதியரன் பூபதி இருவரின் விழிகளும்சிவந்து கலங்கிவிட, விஜயவர்தனும், ரஞ்சனியும்உணர்ச்சி பிழம்புகளில் தத்தளித்துக் கொண்டு நின்றிருக்க, சிம்மவர்ம பூபதி, இமையரசிதம்பதியினர் மகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்த திருப்தியில் மனதார நிம்மதியுடன்நின்றிருந்தார்கள்.
இத்தனை நாட்களை இழந்துவிட்டார்களே என்று யாரும் வருத்தப்படவில்லை. இத்தனை இன்னல்களையும் கடந்து வந்து, இருவரும் வீம்புடன் விதியை வென்று கை பிடிக்கப் போவதை, ‘நினைத்ததை சாதித்துவிட்டார்கள்’ என்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் நின்றிருந்தனர்.
கடவுளை வணங்கிய பின், சிம்மவர்ம பூபதி தன் கரத்தால் தாலியை எடுத்து விஜய்யிடம் கொடுக்க, தன் கரத்தால் திருமாங்கல்யத்தை வாங்கியவர்நீரஜாவை பார்க்க, அவரோ விஜய்யைபுன்னகையுடன் பார்த்திருக்க, அனைவரும் அட்சதையோடு காத்திருக்க, அடுத்த கணம் அவர் தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட, சுற்றியிருந்தோரின் ஆசிகளோடு, முப்பத்துமுக்கோடி தேவர்களின் ஆசிகளையும் மனமாரபெற்றிருந்தனர் அந்த காதலை சுமந்திருந்த இரு நெஞ்சங்களும்.
அடுத்து ஐயர் நீரஜாவின் நெற்றியில் திலகமிடகுங்குமத்தை நீட்ட, நீரஜாவின் அருகே நெருங்கி நின்றவர், கரத்தை பின் கொண்டு சென்று தன்னவளின் நெற்றி வகிட்டில் செங்குங்குமத்தைஅழுத்தமாய் வைக்க, பூரிப்புடன் விழிகளை மூடியநீரஜாவின் தாமரை வதனத்தில் இரு சொட்டு நீர்கள்அவரறியாமல் விழுந்தது.
இன்னும் சொல்லப்போனால் அவர் அழுதது அவருக்கே தெரியவில்லை. மிகுந்த ஆனந்தத்தில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு அவரை அறியாது வந்த ஆனந்த விழிநீர் அது.
திலகமிட்டு விலகிய விஜய் நீரஜாவின் நாசியின்நுனியில் பூவாய் சிதறியிருந்த குங்குமத்தைதுடைத்துவிட, நீரஜாவிற்கோ தங்களைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் யாருமற்ற உணர்வாகிப்போனது.
யாதுமாகிய காதல்!
திருமண முடிந்து அங்கேயே பொங்கல் வைத்து, மதியம் உணவும் அங்கேயே முடித்துக் கொண்டு கிளம்பலாம் என்று சிம்மவர்ம பூபதி கூறியிருக்க, இமையரசியுடன் அனைத்து பெண்களும் பொங்கல் வைக்க தயாராக, நீரஜா அவ்வப்போது கணவரைபார்ப்பதும் புன்னகைப்பதும், அன்னையுடன்வேலையில் இறங்குவதுமாகவே பளீரென்று வலம் வர,
விஜய்யும் ஆண்களுடன் பேசியபடியே அவ்வப்போது நீரஜாவின் புன்னகைக்கு யாருமறியாது பதில் புன்னகையை கொடுக்க, அதை கவனித்தவிஜயவர்தனும் ரஞ்சனியும் அர்த்தமாய்மென்னகையை பரிமாறிக் கொண்டனர்.
அனைவரும் வேலையில் மூழ்கியிருக்க, நெற்றியில் வியர்வை பூக்க பொங்கல் வைக்கும் இடத்திற்கு அருகே நின்றிருந்த மனையாளின் அருகே இளநீரைஎடுத்து வந்து விக்ரம் தந்துவிட்டு நகர, அவனை மறித்துக் கொண்டு நின்றனர் திலோவும், மித்ராவும்.
‘ஐயோ இதுகளா?’ என்று உள்ளுக்குள் நினைத்தவன், “என்ன?” என்றான் தனது கெத்தைவிடாமல்.
“பாத்தியா திலோ… இங்க யாருமே வேலை செய்யலையாம்… இவரு பொண்டாட்டி மட்டும்தான் வேலை செஞ்சாங்களாம்… நாம எல்லாம் கை கால் நீட்டி போட்டு சன் பாத் எடுக்கிற மாதிரி… என்னனுவேற கேக்கறாரு” என்று மித்ரா திலோவிடம் கூற,
“அதானே?” என்ற திலோத்தமை அன்னைகளிடம்,
“நீங்க எல்லாம் ஒழுங்கா மாமியாரா நடந்துக்கிட்டாஇதெல்லாம் நடக்குமா?” என்று அவர்களை வேறு திட்டிவிட்டு இமையரசியிடம், “இதெல்லாம் சரியில்ல பாட்டி” என்று கிளப்பிவிட,
தங்கையின் தலையில் நங்கென்று கொட்டிய விக்ரம், அங்கிருந்த பெண்களிடம் திரும்பி, “பேசாமஇதுகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைங்க… அப்புறம் இதுக பாடு அவன் பாடு… நாம நிம்மதியாஇருக்கலாம்” என்றிட,
நறுமுகையும், “ஆமா ஆமா இவங்களுக்கு தயவு செஞ்சு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க… இவங்க இரண்டு பேரும்…” என்று தன் வளைவானபுருவத்தை உயர்த்தி எதையோ சொல்ல முனைய, இருவரும் சேர்ந்து நறுமுகையின் வாயை அடைத்துவிட்டார்கள்.
“என்ன? நறு ஏதோ சொல்றா?” ரஞ்சனியும்மகளிடம் வினவ,
“ம்மா போம்மா…” என்று அன்னையிடம் சிம்பியசின்ன சிட்டு, திலோத்தமையிடம் எதையோ கண்களை உருட்டி காட்ட, அவளும் சரியென்பதுபோல விழிகளை திறந்து மூடியவள், சாமர்த்தியமாக அண்ணியின் செவியில் ஏதோ கூறி, முத்தமும் இட, திலோவை நிமிர்ந்து பார்த்த நறுமுகை,
“பிழைச்சு போ” என்றிட, அனைவரும் மூவரின்கூட்டணியை கண்டு சிரிக்க, அப்போது தான் நீரஜாகவனித்தார் உத்ரா அங்கில்லை என்பதை.
சுற்றியும் முற்றியும் தேடியவர், “மித்து! உத்ராஎங்க?” என்று வினவ, “அவளா…” என்றிழுத்தவள், “அதோ அங்க போறா பாருங்க பெரியம்மா” என்று கை காட்ட, உத்ரா தோப்பிற்குள் சென்று கொண்டிருக்க, நீரஜாவின் புருவங்கள் சுருங்கியது.
“அங்க எங்க போறா? கூப்பிடு அவளை” ரஞ்சனி மித்ராவிடம் பணிக்க, மித்ரா எழுவதற்குள் இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்ததை அங்கு விஜய்யுடன் பேசிக் கொண்டே அபிமன்யுகேட்டிருக்க, எழ எத்தனித்த மித்ராவைகையசைவிலேயே அமர பணித்தவன், தானும்தோப்பிற்குள் செல்ல, அதற்கு மேல் யாரால் என்ன பேசிட முடியும்?
யாரும் எதுவும் பேசாது தலையை தாழ்த்தி அவரவர் வேலையை பார்க்கத் துவங்க, இமையரசிஉடைத்துக் கொடுத்த தேங்காயை, பற்களுக்குஇடையே கடித்தபடி வைத்திருந்த விக்ரம், நறுமுகை தன்னை பார்க்கவும், புருவத்தை உயர்த்தி தோட்டத்தின் பக்கம் விழிகளை மோகமாய் காட்ட, கணவனை பொய்யாய் முறைத்தவள், “திலோ! மித்து! அவரு ஏதோ சொல்றாரு என்னனுகேளுங்க” என்று இரு வாயடிகளிடமும் மாட்டிவிட்டுவேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
இவர்களோ விக்ரமை என்ன என்ன என்று நச்சரிக்க, “ஊருக்கு போனவுடனே உங்களை சர்ப்ரைஸாவெளிய கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்” என்று வாயில் வந்ததை கூறி தப்பித்திருந்தான். சொல்லப்போனால் மாட்டியிருந்தான்.
கால் போன போக்கில் நடந்து கொண்டே சென்ற உத்ரா, வேடிக்கை பார்த்தபடியே சென்று கொண்டிருக்க, தனியாய் இருப்பது போன்றுஉணர்ந்தவள், ஓர் இடம் வரவும் அங்கே உயிர் இருந்தும் சிலையாகி அப்படியே நின்றுவிட்டாள். மெல்ல மெல்ல பழையது எல்லாம் நினைவில் வந்தது.
சிறு வயதில் தான் இங்கு வந்தது. அவளவன்அவளது ஜடையை பிடித்து இழுத்தது. இவள் அழுதது. அவன் மிரட்டியது. இவள் போடா என்று கத்தியது. அடுத்து தான் பெரிய பெண் ஆனது என்று அனைத்தும் காரிகையவளின் மனதை ஆக்கிரமிக்க, அங்கிருந்த மரத்தின் மேல் சாய்ந்து நின்றவள் தென்னையை வருடிக் கொடுத்து தலை சாய்த்து நின்றாள்.
அவளின் பின்னேயே வந்தவனுக்கு அவள் எதை நினைக்கிறாள், என்ன யோசிக்கிறாள் என்று புரிய, மெல்ல பெண்ணவளின் பின்னே சென்றவன், அவளின் கரம் பற்ற, ஏற்கனவே காலடிச் சத்தத்தைவைத்து வந்திருப்பது யாரென்று உணர்ந்தவள், அவனின் கரத்தை தட்டிவிட்டு செல்ல முயல, தன்னவளின் கரத்தை இறுக பற்றியிருந்தான்அபிமன்யு.
இறுக்கம் என்றால் இரும்பான இறுக்கம்.
அவன் பற்றியது அவளுக்கு வலியை கொடுத்தாலும் அதை வாய் திறந்து கூட அவள் கூற விரும்பவில்லை.
அவனை திரும்பி உணர்ச்சியில்லாதுபார்த்தவளிடம், அபிமன்யு, “சிலதை நீ மறக்கனும்… மறந்து தான் ஆகனும் உத்ரா… இங்க இப்ப எல்லாரோட லைஃபும் நல்லா ஆகிடுச்சு… நம்மளதவிர” என்றவனின் குரலில் கடுமையும், கண்டிப்பும்கலந்து தெறிக்க, அவனிடம் இருந்து கரத்தைவெடுக்கென்று உருவியவள் பதிலளிக்காது முன்னே நடந்தாள்.
“உத்ரா!” என்ற அபிமன்யுவின் ஒருவரை அடக்கி ஒடுக்கும் ஆளுமையும், அடுத்த ஓர் அடி எடுத்து வைக்கக் கூட யோசிக்கும் அதிகாரமும் இணைந்த குரலில், உத்ராவின் இதயம் படபடவென்று அதிர, மேனி அச்சத்தில் அலர, அபிமன்யுவை மருட்சியும்கோபமுமாய் திரும்பிப் பார்த்தாள்.
விழிகளில் பனித்துளிகள் போன்று கண்ணீர் முனுக்கென்று எட்டிப் பார்க்க, “எல்லார்வாழ்க்கையும் இப்ப நல்லா இருக்குன்னா… அவங்கஎல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்காங்க… ஒருத்தரை ஒருத்தர் நல்ல அன்டர்ஸ்டான்ட்டிங்லஇருக்காங்க… எதுவும் ஏமாத்தல… எதுவும் நடிக்கல… தப்பு பண்ணிட்டு ஸாரி கூட சொல்லாமதன்னோட விருப்பத்துக்கு மட்டும் எதுவும் செஞ்சிட்டு இருக்கல” என்று அவளின் மனதில் இருந்த அனைத்தும் கணவனிடம் அக்னியாய்கொட்டினாள்.
அபிமன்யு அதையும் கையை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
தனக்கும் அவனுக்கும் இடையே இருந்த இடைவெளியை சுட்டிக்காட்டி “நானா இதெல்லாம் கேட்டேன்?” என்று கத்திவிட்டு அவள் நகர எத்தனிக்க காலை வைக்கவும், அவளின் காலிற்குமுன் ஆறடி நாகம் கடந்து செல்லவும் என்றிருக்க, பாம்பை பார்த்தவுடன் உடல் தூக்கிவாரிப் போட, விழியில் மருட்சி பரவ, விதிர்விதிர்துப் போய் மூச்சை இழுத்துக் கொண்டு பின்னே விழ வந்தவளை சட்டென தாங்கிய அபிமன்யுவின்கரங்கள், அடுத்த நொடி வெண் மேகம் போன்றுதன்னவளை தூக்கிக் கொண்டது.
அபிமன்யுவின் ஒரு கரம் அவளின் முதுகுப்புறம்சுற்றி அவளின் இடையை இறுக்கிப் பிடித்திருக்க, மற்றொரு கரம் அவளின் மேல் கால்களை சுற்றி பிடித்திருந்தது.
சர்பத்தை பார்த்த விநாடியில் இருந்து உத்ராவின்இதயம் ஏவுகணை வேகத்தில் பன்மடங்காகத்துடித்துக் கொண்டிருக்க, அவளோ அபிமன்யுதன்னை தூக்கியது கூட உணராது, மூச்சுக்களைபலமாக இழுத்து பிடித்தபடி கண்களை இறுக மூடியிருக்க, அவள் அரண்டு போனதில், அதுதான் வேகமாக ஊர்ந்து மறைந்தது.
உத்ராவின் வதனத்தையே பார்த்திருந்த அபிமன்யு, “உத்ரா!” என்று இதழுக்கிடையில் புன்னகையைஅடக்கியபடி அழைக்க, விழிகளை திறந்தவள், தான் இருக்கும் நிலை உணர்ந்து, இறங்க முயல விடாக்கண்டன் அவளை விடவில்லை.
“விடுங்க” என்று திமிறியவளை மேலும் இறுக பிடித்தவன்,
“ஸாரி கேட்டு பழக்கம் இல்ல உத்ரா… அந்த வார்த்தையை உச்சரிச்சும் எனக்கு பழக்கம் இல்ல… அன்னைக்கு நான் எதுவும் பேசாம இருந்ததுக்குகாரணம்… அந்த அஞ்சு நாள்ல நீயும் நானும் பிரிஞ்சு இருந்த நேரம் பத்து மணி நேரம் கூட வராது… உனக்கு என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா?” என்று அவளின் விழிகளை ஊடுருவிகேட்டவனை, நாசி விடைக்க பார்த்து வைத்தாள் அவனின் அருமை மணவாட்டி.
“உங்க மேல எந்தளவுக்கு நம்பிக்கையாஇருந்தேன்னு உங்களுக்கே தெரியும்… சொல்லனும்னு அவசியம் இல்ல… என்னையேஇழக்கிற அளவுக்கு கான்சியஸ் இல்லாம தான் இருந்தேன்” என்றவள் அபிமன்யுவின் கரங்களில்இருந்து பிடிவாதமாய் இறங்க, தன்னவள் எதை சொல்கிறாள் என்று அபிமன்யுவுக்கு புரிந்தது.
‘ஏன் இவளுக்கு மட்டும் தான் கற்பு, ஒழுக்கம் என்று உண்டா? எங்களுக்கு எல்லாம் இல்லையா?’
விழிகள் கூர்மையடைய உத்ராவையேபார்த்திருந்தவன், “உன்னோட பிரச்சனைக்குஉன்கிட்டயே கேள்வியும் இருக்கு… பதிலும்இருக்கு உத்ரா… தி டெசிஷன் இஸ் யோர்ஸ் (The desicion is yours)” என்றவன் அவளைக் கடந்து செல்ல, அவன் முதுகையே வெறித்துக்கொண்டிருந்த பெண்ணவளுக்கு மேலும் கோபம் தான் வந்தது.
அபிமன்யு ஒவ்வொரு முறையும் அவளின் விலகலின்போது உண்டாகும் ஆத்திரத்தை கட்டுக்குள் வைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறான். காரணம் அவனுக்கும் இவளுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம்.
அந்த வித்தியாசம் தான் அவனுக்கு பிடித்தது! அதே வித்தியாசம் தான் அவனை அவளிடம் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபஉணர்ச்சிகளை இப்போது காட்டவிடாது செய்து கொண்டிருந்தது!
என்னதான் அவள் அவனின் மனம் கவர்ந்தவளாகிஇப்போது அவனின் வாழ்க்கை பயணத்தில்சரிபாதியாகி இருந்தாலும், சில தருணங்களில்அவள் பேசும் போதும், புரிந்து கொள்ளாது நடந்து கொள்ளும் பொழுதும், அவன் கண்களுக்கு சிறு பெண் போலவே தோன்றியிருக்கிறாள்.
ஆனால், அவனின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உத்ரா அறிய வரும் நேரமும் காலத்தை வைத்து காத்து இருந்தது.
தோப்பிற்குள் இருந்து இறுக்கமான முகத்துடன் வந்த அபிமன்யுவையும், அதைவிட இறுக்கமான முகத்துடன் சிடுசிடுவென வரும் உத்ராவையும்கண்ட சிம்மவர்ம பூபதியின் விழிகளும், இமையரசியின் விழிகளும் சந்தித்து மீள, ஒரு முடிவை எடுத்தவராக நின்றிருந்தார்.
அவரால் பேரனிடம் எதுவும் பேசவோ கேட்கவோமுடியாது. அவன் விஷயத்தில் மூக்கை நுழைத்தால்அறுபட்டு தான் வெளியே வர முடியும் என்று அவர் நன்கு அறிந்ததே. அதனால் பேத்தியிடம் பேச நினைத்தவர், அன்றிரவு பேத்தியை தனது அறைக்கு அழைத்திருந்தார்.
வந்தவளிடம், “உட்காரு டா” அவர் மென் குரலில் கூற, இமையரசி பேத்திக்கு பாலை ஆற்றி கொண்டு வந்தார்.
டம்ளரை பேத்தியிடம் அவர் நீட்ட, சிம்மவர்ம பூபதி, “என்னடாமா உனக்கும் அபிக்கும் பிரச்சனை?” என்று கேட்க, உள்ளுக்குள் சற்று அதிர்ச்சியானாலும் முகத்தில் எதுவும் காட்டாதுவைத்தவள்,
“ஒண்ணுமில்ல தாத்தா” என்றாள் தலையை தாழ்த்தி கரத்தில் இருந்த பாலை பார்த்துக் கொண்டே.
“உன்னோட வயசை தாண்டி… எங்களோட பசங்கவரைக்கும் பாத்துட்டோம்… பொய் சொல்லாததங்கம்” என்றார் இமையரசி.
உத்ரா எதுவும் பேசாது அமைதியாக அமர்ந்திருக்க, “உன்னை அபிமன்யு அஞ்சு நாள் கூட்டிட்டுபோனப்ப… உங்களுக்குள்ள என்ன பிரச்சனை ஆச்சு?” சிம்மவர்ம பூபதி அமைதியாக கேட்டாலும், ஒரு கர்ஜனையான தோரணை அவரின் குரலில் எட்டிப் பார்க்கவே செய்தது.
உத்ரா வாயே திறக்காமல் அமர்ந்திருக்க, பேத்தியின் கன்னங்களை பற்றி நிமிர்த்தியஇமையரசி, “உத்ரா! அபி உன்னை மனசு அளவுலமட்டும் தான் முடிஞ்சா கஷ்டப்படுத்தி இருப்பான்… மத்தபடி எதுவும் பண்ணியிருக்க மாட்டான்னுஎங்களுக்கு நல்லாவே தெரியும்… ஏன்னா அபியும்சரி, விக்ரமும் சரி உன் அம்மாவோட வளர்ப்பு… ஆனா, நீ இப்படி இருந்தா உங்க அம்மா ரொம்ப உடஞ்சிருவா தங்கம்” என்றவர் அவளின் தலையை வருட, பாட்டியின் வயிற்றை கட்டிக் கொண்டவள், மென்மையாய் முகம் புதைத்தாள்.
ஒரு பெருமூச்சுடன் இமையரசி பேத்தியின்தலையை கோத, “பாட்டி!” என்று அவரை அண்ணாந்து பார்த்தவள்,
“என்னை அவரு நாலு நாள் எதுவுமே பண்ணலதான்… ஆனா, பத்திரத்துல கையெழுத்து வாங்கும்போது ரொம்பவே அர்ரோகன்டா (arrogant) நடந்துக்கிட்டாரு… இப்ப வரைக்கும் அவருசொல்றது தான் நடக்கனும்னு எவ்வளவு பிடிவாதமாஇருக்காரு… ரொம்ப ஸ்டபார்ன் கேரக்டர்… ரொம்ப ரொம்ப டாமினேட்டிங் பர்ஸ்னாலிட்டி” என்று சினத்தில் முகம் மிளகாயாய் சிவக்க, இருவருமே பார்த்து சிரிக்க, இருவரையுமே முறைத்தாள்நீரஜாவின் மகள்.
“உங்களுக்கு சிரிப்பா இருக்கா? நீங்க இரண்டு பேரும் அவருகிட்ட கேக்க முடியாதுன்னு தான் என்னை கூப்பிட்டு கேக்கறீங்க… ஞாபகம் இருக்கட்டும்” என்றவளின் பதிலில் இமையரசியின்வாய் மீண்டும் ஒட்டிக்கொள்ள, சிம்மவர்ம பூபதியோபேத்தியின் பேச்சுக்களை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இங்க பாரு உத்ரா, என்ன நடந்துச்சுனு நீ சொல்ல வேணாம். ஆனா, இப்படியே இருக்க போறீயா… அப்புறம் திரும்பி பாத்தா இதெல்லாம் தேவை இல்லையோனு தோணும். என்ன பேசணுமோஅபிகிட்ட பேசு. கோபமா இருந்தாலும் காமி… ஆனா இப்படி அமைதியா இருக்காத தங்கம்… இந்த குடும்பத்துல ஆம்பிளைகளுக்கு பொறுமை ரொம்ப கம்மி” கணவரை ஓர விழியால் இமையரசிகுத்திக்காட்டி பேச,
தாத்தவை பார்த்த உத்ரா, “உங்களை தான் தாத்தா சொல்றாங்க” என்றாள்.
“என்ன பண்றது உத்ராமா… வயசு ஆகிடுச்சுஅவளுக்கு… அதனால அவ பேசறதுக்கு எல்லாம் அமைதியா இருக்கேன்” என்று மீசையைமுறுக்கியவரின் பேச்சில், அவரின் மீசையை பிடித்து தானும் முறுக்கி விட்டவள், சிறிது நேரம் பேசிவிட்டுதன்னுடைய அறைக்கு கிளம்பினாள்.
அன்றிரவும் அவள் அபிமன்யுவோடு பேசவில்லை. அவனும் பேசவில்லை. இருவரும் இருவருக்கும்முதுகு காட்டி படுத்திருந்தனர். அபிமன்யுவிற்கும்அவனது ஈகோ டச் ஆகியிருக்க, அவன் உத்ராவைநிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
அடுத்த நாள் காலை இமையரசி சமையல் ஆட்களிடம் எதையோ பணித்துக் கொண்டிருக்க, “அம்மா!” என்றழைத்த மகளின் குரலில் திரும்பியவர், மகளின் வதனத்தில் இருந்த பளிச்சையும், பூரிப்பையும் கண்டு அகமகிழ்ந்து தான் போனார்.
மகளின் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தவர், “முதல் வேலையா சுத்தி போடணும்” என்று காலை வேலைகளில் பரபரப்பாய் ஈடுபட்டவர், மகளிடம் மருமகனுக்கு தேநீரை கொடுத்து அனுப்பினார்.
அனைவரும் காலை கிளம்பித் தயாராக, பெரிய பூசணிக்காயை எடுத்து வந்த இமையரசி, அங்கிருக்கும் அவருக்கு நெருக்கமான பெண்மணியிடம் கொடுத்துவிட்டு கணவரின்அருகே நிற்க, மொத்த குடும்பத்திற்கும் அவர் சுற்றி முடித்து உடைக்க, மொத்த திருஷ்டிகளும் சிதறித்தெறிக்க, அனைவரும் அவரவர் ஜோடிகளுடன்காரில் புறப்பட்டனர்.
திலோவும், மித்துவும் தாத்தா, பாட்டியோடு!
***
இன்றுடன் அபிமன்யு-உத்ரா திருமணம் முடிந்து நான்கு வாரங்கள் கடந்திருக்க, நறுமுகைக்குபிறந்தநாள் இன்னும் இரண்டு தினங்களில்வரவிருக்க, அபிமன்யு சென்னை வந்த தினமேஉத்ராவிடம் எங்கும் செல்ல வேண்டாம் என்று அழுத்திக் கூறியும், உத்ரா அன்று காலை நீரஜாவோடு மருத்துவமனை சென்றவள், நறுமுகைக்கு பரிசு வாங்க, பிரபல மாலிற்குகிளம்பிவிட்டாள்.
தன் சொந்த பணத்தில் வாங்க வேண்டும் என்று எண்ணியவள், ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருக்க, அதிலிருந்த க்ளாஸ்பெயின்ட்டிங்கில் கிருஷ்ணரும் ராதையும் இருந்த படத்தை பார்த்தாள்.
இரவில் கசிந்து கொண்டிருந்த நிலவொளியில், மரத்தின் அடியே கண்ணன் தன் குழலை இசைத்துக்கொண்டிருக்க, மதி மயங்கிய அவரின் காதலி ராதை மரத்தினில் சாய்ந்து அமர்ந்து ஒற்றை காலை அமர்ந்திருந்த கிளையில் வைத்து, மற்றொரு காலை தரையில் வைத்திருந்த எழில் மிகுந்த காட்சியை தத்ரூபமாக ஓவியர் வரைந்திருக்க, அதை எடுக்கச் சென்றவளின் செவியின் அருகே, “உத்ரா!” என்ற அழைப்பு கேட்ட விநாடி, அந்த குரலின் சொந்தக்காரன் யாரென்றுஉணர்ந்தவளின், அச்சமும், அதிர்ச்சியும் இணைய, உள்ளம் உறைந்தது.
வரைபடத்தை நடுக்கத்தில் தவறவிட்டவளின்கரத்தில் இருந்து முழுதாக கீழே நழுவ, அது சிதறப்போகும் சப்தத்தில் உத்ரா தன் இரு செவிகளையும் அடைத்துப் பொத்த, அது தரையைதொடும் முன் அதை சாமர்த்தியமாக பிடித்தவன், உத்ராவை மேல் கண்களால் பார்த்தபடி நிமிர, செவிகளில் இருந்த கரங்களை எடுத்தபடி உத்ராஅவனையே பார்க்க, “அப்புறம் உத்ரா? ரொம்ப ஹாப்பியா இருக்க போல உன் புருஷன் கூட” என்று தன் விஷ புன்னகையை இதழ்களில் படரவிட்டான்.