ஆட்டம்-45(2)

ஆட்டம்-45(2)

ஆட்டம்-45(2)

கணவனை தலையிலிருந்த சிகை துவங்கி, அறைக்குள் தனியே உபயோகப்படுத்த என்று அவன் அணிந்திருந்த க்ராக்ஸ் வரை அங்குலம் அங்குலமாக விழிகளை அலைபாய விட்ட கோதையவளின் இதயம், கணவனை இதுவரை காணாத நிலையில் கண்டதில் சுக்குநாறாக வெடித்து தெறிக்க, “மா...மா…” என்றவள் அபிமன்யுவின் கரத்தை மெதுவாக உலுக்கினாள்.

தன்னை அழைத்தவளை விழி திறந்து பார்த்தவனின் விழிகளில் படர்ந்திருந்த செம்மையை கண்ட உத்ரா, உள்ளுக்குள் வாய்விட்டு கதற, தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு, “எதுக்கு இப்படி ட்ரின்க் பண்றீங்க?” என்று வினவும் பொழுதே குரல் கரகரத்து போனது.

நெஞ்சில் பாரம் ஏறி இருக்கையில், குரலிலும் அது வெளிப்பட்டு விட்டது!

தன்னவளின் கேள்வியில் தனது மறு கரத்தில் இருந்த கண்ணாடிக் குவளையை விரல்களால் சுற்றி சுற்றி வெறித்தவன், மீதியிருந்த மதுவை ஒரே வாயில் உள்ளே தள்ள, உத்ராவின் விழிகள் ஈரமாகி கண்ணீர் வழியத் தொடங்கியது.

தலை கவிந்தபடி மனம் நோக விசும்பியவளை பார்த்த அபிமன்யு, “நீ எதுக்கு உத்ரா அழுகற?” என்று இகழ்ச்சி இதழ்களில் அப்பட்டமாய் தெரிய நெளிய கேட்டவன்,

உனக்கு என்ன கஷ்டம் வந்திடுச்சு இப்ப… நீ வாயே திறக்காம உன்னை புரிஞ்சுகிட்டு தள்ளி நிக்கற புருஷன்… ஒண்ணுக்கு இரண்டு அப்பா, அம்மா… கசின்ஸ், மாமனார் மாமியார் வரை சப்போர்ட் பண்றலைஃப்… இதுக்கு எதுக்கு உனக்கு அழுகை வருது?” என்று குவளையை பார்த்தபடி கூறியவன்,

நான் நல்லவன் இல்லை தான்… எனக்கு போட்டியா, எதிரியா யாரும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கறவன் தான்… இதுவரை எதிரியா கூட எவனையும் எனக்கு சரி சமமா நிக்க வச்சது இல்லை… அந்தளவுக்கு என் லெவலுக்கும், பர்சனாலிட்டிக்கும், ஆட்டிட்யூடுக்கும் எவனும் இருக்க விடமாட்டேன்… ஐ வில் வின் ஓவர்அதர்ஸ்… (AI will win over others)” என்றபடியே பாட்டிலை எடுத்து குவளையில் கவிழ்த்தவன்,

மேலும், “என் குடும்பமும் என்னை மாதிரி நல்லா இருக்கணும்னு நினைச்சேன்… உன் அம்மா பட்ட கஷ்டத்தை நேர்ல பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும் உனக்கு… அதெல்லாம் எவ்வளவு பெரிய வலியை எனக்கு அந்த வயசுலையே உண்டு பண்ணுச்சுனுஅதனால மொத்த பேரும் எப்படி சஃபர் (suffer) ஆனாங்க தெரியுமா…

எல்லாரும் நல்லா இருக்கனும்னு தான் நான் நினைச்சேன்… அத்தை லைஃபை சரி பண்ண முடியாதுனு தெரியும்… அதுதான் நறு லைஃபை பாத்து பாத்து விக்ரமை வச்சு மூவ் பண்ணேன்… அதை யூஸ் பண்ணிதான் உன்னை கூட்டிட்டு போனேன்… சைன்காக இல்ல… உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தோணுச்சு… டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணுச்சு

யா அஃப் கோர்ஸ் ( Ya of course) நம்ம கொஞ்ச ரொமான்டிக்கா இருந்தோம்… பட் உனக்காக மட்டும் உன்னை யோசிச்சு மட்டும் தான் அன்னைக்கு நான் உன்னை விட்டு விலகி நின்னது… நான் நினைச்சிருந்தா அன்னைக்கு என்னால உன்னை சம்மதிக்க வச்சிருக்க முடியும்… உனக்கும் அது தெரியும்… இருந்த ஞ்சு நாள்ல ஃபோர் டேஸ் என்னை பத்தி நல்லா புரிஞ்சிருந்தா, நீ என்கிட்டஅட்லீஸ்ட் என்ன நடந்துச்சுனு கேட்டிருப்ப… உனக்கு நம்பிக்கை இல்லாதனால தான் விக்ரமுக்கு உடனே கால் போட்டிருக்கஅம் ஐ ரைட்? (Am I right?)

உனை தூக்கிட்டு வரும்போது என் உயிர் என்கிட்ட இல்லடி… உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா கண்டிப்பா வாழ்க்கை ஃபுல்லா தனியாவே இருந்திருப்பேன்… நீ ஐசியூல இருந்த ஒவ்வொரு செகண்டும் செத்திட்டு இருந்தேன்டி

நீ ரஞ்சனியோட பொண்ணா இருந்தப்பவே உனைவிட முடியலநீரஜாவோட பொண்ணுன்னு தெரிஞ்சும் எப்படி விடுவேன்… ஆமாடி உன் ட்ரெஸை கிழிச்சேன்… நீ வெளிய சொல்றதுனாலும் சொல்லிக்கஆனா, எல்லாருக்கும் தெரியும் என் பார்வை உன் கழுத்துக்கு கீழ அந்த சமயத்துல போயிருக்காதுனு

நான் இந்த பாரை வீட்டுல செட் பண்ணி எய்ட் இயர்ஸ் ஆச்சு… ஆனா, இப்ப வரைக்கும் எட்டு தடவை கூட வந்தது கிடையாது… இப்படி குடிச்சதும் கிடையாது… இன்னைக்கு தான் இப்படி குடிச்சிருக்கேன்யூ மேட் ஹேட்டீங் மை செல்ப்உத்ரா (You made hating myself Uthra)” என்று கர்ஜனையுடன் கூறியவனை பார்க்கப் பார்க்கஉத்ராவின் காதலை சுமந்திருந்த உள்ளம் ரணமாய் வலித்தது.

நான் பாத்து பாத்து எல்லாரோட லைஃபையும் சரி பண்ணி… என் லைஃப்ல எதுவும் பண்ண முடியாம நிக்கறேன்” என்ற ஆத்திரமும், தன்னவள் தன்னை நம்பவில்லையே என்ற ஆதங்கமும் போட்டிபோட குவளையை அபிமன்யு அழுத்திப் பிடிக்க, அதுவோபெரும் சப்தத்தோடு உடைந்து, உள்ளே இருந்த மது அபிமன்யுவின் கரங்களை நனைத்தது.

ஐயோ ப்ளட்” என்று அபிமன்யுவின் கரத்தைப் பற்றி பதறிய உத்ராவின், கரத்தில் இருந்து தன் கரத்தைஉருவிய அவளின் உயிர்க் கணவன், கரத்தைஉதறிக் கொண்டு எழுந்து சென்று கைகளை கழுவிவிட்டு வர, அங்கிருந்த பர்ஸ்ட் எய்ட் கிட்டை எடுத்துக் கொண்டு வந்தாள் உத்ரா.

மருந்திட வந்தவளின் கரங்களை தடுத்தவன் தானே காயத்தை சுத்தம் செய்து மருந்தை பூசிவிட்டு, கைக்கு பேன்டெய்டை போட்டவன், மீண்டும் வேறொரு க்ளாஸை எடுக்க, அதில் வெகுண்டு எழுந்து அழுகை வரப் பார்க்க அபிமன்யுவின் அருகே விரைந்தவள், அபிமன்யுவின் கால்களின் மேல் ஏறி நின்று, அபிமன்யுவின் முரட்டு அதரங்களில் தன் செவ்வரளி இதழ்களைஅழுத்தமாய் பதித்தாள்.

பெண்ணவளின் வெண் தந்தக் கரங்கள் ஆடவனின் கழுத்தைச் சுற்றி பிடித்து தன் இதழ்களை நோக்கி இழுத்திருக்க, தன்னவனின் இதழ்களை சுவைத்தவள், அவனின் மேனியோடு மேனி அழுந்த மேலும் நின்று, தன்னவனின் சுவாத்தை தன் சுவாசமாய் இழுத்துக் கொண்டிருக்க, அதுவரை அடக்கப்பட்டிருந்த ஆடவனின் தாபங்கள் பெண்ணவளின் இதழ் ரேகைகள் தூண்டிய உணர்வுகளில், உத்ராவின் இடையை இரும்பென பிடித்தது.

அவனை திசை திருப்ப உத்ரா கொடுத்த இதழ் முத்தம், இருவரையும் யுத்தத்திற்கு தயாராக வைத்துக் கொண்டிருந்தது.

இரு நாவின் நுனிகள் இரு மேனியெங்கும் மின்சாரத்தை தாக்கி மாய உணர்வை கொடுக்க, அபிமன்யுவின் இதழை விட்டால் இன்றே முடித்துவிடுவேன் எனும் அளவிற்கு சுவைத்த உத்ராவின் வேட்கை, அபிமன்யுவை தாபங்களின் வலையில் வீழ்த்த, உத்ராவின் பெரு மூச்சுக்களும் ஏறித் ணிந்த மார்புகளும், பெண்ணவளுக்கு மூச்சு முட்டுவதை உணர்த்த, விழிகளால் அபிமன்யு கண்டது அவனை மூச்சடைக்க வைத்து, மோகத்தை இரு மடங்காக்கியது.

உத்ராவை சுவற்றில் சாத்திய அபிமன்யுவின் முரட்டுக் கரங்கள், பெண்ணவளின் கழுத்தை கிளர்ச்சியாய் வருடி அங்கு முகம் புதைக்க, உத்ரா தவித்துத்தான் போனாள்.

அபிமன்யுவிடம் இருந்து வந்த மதுவாடை பெண்ணவளின் மனதை சிதைக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கு உமட்டலை கொடுத்தது தான் உண்மை. அவளுக்கும் தன்னவனை திசை திருப்ப வேறு வழி தெரியவில்லை.

விடாத உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனின் உடும்பு பிடியில் இரும்பென சிக்கியிருந்த உத்ராவின் உள்ளம் பாதி வேண்டும், பாதி இப்படி வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்க, அவளை சிந்திக்கக் கூட விடவில்லை, அவளின் காமதேவன்.

ஆடவன் மன்மதனாகி தன்னவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க, தன்னவளின் கழுத்தில் கிடந்த தாலி அவனின் இதழில் உரசியபோது தான் நடந்து கொண்டிருந்த அரங்கேற்றம் அபிமன்யுவின் புத்தியில் சென்று அடிக்க, சலாரென தன்னவளிடம் இருந்து விலகியவன், உத்ராவினை பார்க்க, அவனவளோ இறுக்கி மூடியிருந்த விழிகளை திறக்கவில்லை.

அவன் கொடுத்த உணர்வுகளின் பரவசத்தில் இருந்தவள் இன்னும் மீளாமல் நின்றிருக்க, தலையை அழுந்தக் கோதியவனுக்கு தான் அளவிற்கு அதிகமாய் குடித்திருப்பது புரிந்தது.

உத்ரா அதற்குள் மயக்கம் குறைந்து விழிகளை திறக்க, அவன் முன் தலையைக் கோதி கொண்டு நின்றிருப்பது புரிய, சங்கடமும் சங்கோஜமுமாகஇலேசாக தலை தாழ்த்தி புன்னகைத்தவள், ஏதோ கூற வர, “கெட் அவுட்” என்று பனிப்பாறை போன்றதொரு இறுக்கத்தில் கோபத்தில் வெடித்து, அபிமன்யுவின் அறையே இடிந்து தரைமட்டும் ஆகும் அளவிற்கு ஆங்காரமாய் கத்த, உத்ரா உறைந்து போன சிலையாய் நின்றுவிட்டாள்.

எதற்கு இவ்வளவு கோபம்?

அபிமன்யுவின் முன் சென்று ஆவேசமாய் நின்றவள், “நான் எதுக்கு வெளிய போகணும்?” என்று அவளும் கத்த, அவளின் தோள் கன்றும் அளவிற்கு அழுந்த பற்றியவன்,

போடி வெளிய” என்று தள்ள, அவளோ அபிமன்யு அணிந்திருந்த சட்டையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நகராது நின்றிருந்தாள்.

போக மாட்டேன்…” என்றவள், அங்கிருந்த பாட்டிலின் அருகே சென்று அமர்ந்து, ஒரு கண்ணாடிக் குவளையை எடுத்து தனக்கும் மதுவை ஊற்றி வாயின் அருகே கொண்டு சென்றாள்.

தன்னவளின் செய்கைகளில் உள்ளிருந்த உணர்வுகள் கொடுத்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்துபோன அபிமன்யு, தன் தூரிகையிடம் ஒரே எட்டில் அடைந்தவன், அடங்காத சீற்றத்துடனும், கோபத்தில் மேலும் சிவப்பேறிய விழிகளுடனும், “என்னடி பண்ற?” என்று சீறிப் பாய்ந்து உறும,

இனி நீங்க இது மேல கை வச்சா… நானும் குடிப்பேன்” என்றவள் குவளையை மீண்டும் வாயில் வைக்கப் போக,

உன்னால தான் குடிச்சேன்டோன்ட் ட்ரீட் மீலைக்ஆல்கஹாலிக் (Don’t treat me like aalcoholic) என்று அவளின் கரத்தில் இருந்த குவளையை பிடுங்கி எறி, அபிமன்யு பிடித்திருந்த ஆக்டோபஸ் பிடியில் பெண்ணவளின் மணிக்கட்டு சிவந்து போனது.

இப்ப ஏன் நிறுத்துனீங்க? என்னை பிடிக்கலையா?” என்று கண்ணீர் ரேகை உருவாக கேட்டவளின், இரு பக்க கன்னத்தையும் ஒற்றை கரத்தால் முரட்டுத்தனமாக பிடித்தவன்,

நீட் யூ உத்ராஆனா இப்படி இல்ல… நீ வேணும்னு நினைச்சிருந்தா உன்னை எப்ப வேணாலும் என்னால எடுத்திருக்க முடியும்… பட் ஐம் நாட் தட் டைப் (But am not that type)” என்று பெண்ணவளின் கன்னத்தை விட்டவன்,

குடிச்சிட்டு உன் பக்கத்துல வர்ற அளவுக்கு நான் ஒண்ணும் பெர்வர்ட் இல்ல” என்று உணர்வுகள் வார்த்தைகளாய் உருமாறி தீயாய் கொந்தளித்து வெளியே வர, உத்ராவின் கன்னத்தில் இருந்த அபிமன்யுவின் கரத்தின் அழுத்தம் கூடிக் கொண்டே போனது.

சட்டென பெண்ணவளின் விழிகள் கலங்குவதை உணர்ந்தவன், அங்கிருந்த பார் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, “வெளிய போ” என்றான் அமைதியாக.

உத்ரா வெளியே செல்லாது தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்த அபிமன்யு, “ஐ வில் நாட்ட்ரின்க் (I will not drink – நான் குடிக்க மாட்டேன்)” பொறுமையாக கூறியவன், “கெட் அவுட் சூன்” என்றான்.

ஏனெனில் காளையவனின் உணர்வுகள் தன்னவளின் அழகையும், வனப்புகளையும் பார்க்கப் பார்க்க அவனை மீறி எகிறிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், இன்னும் சற்று நேரம் அவள் இங்கு இருந்தால் தான் வன்மையாக நடந்து கொள்வோமோ என்று தோன்றியது.

ஏற்கனவே மிருதுவானவள் அவள்!

வலி தாங்க மாட்டாதவள்!

தன் முரட்டுத்தனத்தை ஏற்கனவே சில முறை சந்தித்து இருந்தவளின் வதனம், சில நேரங்களில் வலியில் சுணங்குவதை கண்டிருந்தவனுக்கு, இப்போது கூடினால் அவள் அலறித் துடித்துவிடுவாள் என்று நன்றாகவே தெரியும்.

அதனாலேயே விலகி இருந்தான்! அதுவுமின்றி அவனின் மனதில் ஏதோ ஒன்று குடி கொண்டுவிட்டது அல்லவா! அதனால் இன்று அவளுடன் இணைய அவனுக்கு விருப்பமில்லை!

அபிமன்யுவை பார்த்துக் கொண்டிருந்த உத்ராகோபமாக அறையை விட்டு வெளியேற, நக்கலாக மனையாளை பார்த்து உடலை மட்டும் திருப்பியவன், “மறக்காம ரூமை லாக் பண்ணிக்க” என்று கூற,கோபமும் இயலாமையுமாக மனம் குமுற கணவனை முறைத்தவள், அறையை இடியாய் அடித்துச் சாத்திவிட்டு வெளியேறி இருந்தாள்.

error: Content is protected !!