anjali’s Endrum Enthunai Neeyaethan 21

        என்றும் என்துணை நீயேதான் 21

 

கர்ணனும், விருஷாலியும், பாண்டியன், முல்லை வீட்டிற்க்கு விருந்துக்கு வந்திருந்தனர். முல்லை வைஷாலியை போலவே விருஷாலியை மகளாக பாவித்தார் அவர் மட்டும் இல்லை பாண்டியனுமே வைஷாலியின் இடத்தை விருஷாலி நிரப்பியது போல் உணர்ந்தார். கர்ணன் , விருஷாலிக்கு பார்த்து பார்த்து உணவுகளில் இருந்து அவர்களுக்கு தேவையானவற்றை எல்லாம் செய்துகொடுத்தார் முல்லை. சோழந்தவன் போலவே சோலையூரும், அவளுக்கு பிடித்துவிட்டது. அங்கு இருக்கும் மக்களே விருஷாலியை புதுமுகமாக பார்த்தாலும், ”கர்ணனோட பொஞ்சாதியா தாயி நீயி” கேட்டுவிட்டு செல்லும் கிராம மக்களை அதிசயமாக பார்த்தாள்.

 

அவர்களுடனே பொழுதுகள் கழிந்தது முதல் இரண்டு நாட்கள். ஆனால் விருஷாலிக்கு தான் ட்ரீட்மெண்ட் ட்யூட்டி போட்டிருந்ததால் அவள் கிளம்ப வேண்டும் என கூறினாள். கர்ணனும் அவளை அழைத்துகொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

 

“இங்க இருங்க நான் வேலைய முடிச்சிட்டு வரேன்.” அவனை அவளுக்கென ஒதுக்கிய அறையில் இருக்க சொல்லிவிட்டு அந்த குழந்தையை காண சென்றாள்.

 

“குழந்தை கொஞ்சமாச்சும் நல்லா பேசுறாளா? உங்களை பார்த்து பயப்படலையே.” தாய், தந்தையிடம் குழந்தையின் உடல் நிலையை விசாரிக்க.

 

“எங்களை பார்த்தா இப்போ பயப்படலை மேடம். ஆனா வெளிய அழைச்சிட்டு போனா, வேற யாராயும் பார்த்தா அழுக ஆரம்பிக்குறா.” குழந்தையின் தந்தை நடந்ததை சொல்ல.

 

“சரி, நான் குழந்தையை செக்கப் செய்துட்டு வரேன் நீங்க இங்க இருங்க.” குழந்தையை அழைத்துகொண்டு உள் அறைக்கு சென்றாள்.

 

அரைமணி நேரம் அந்த குழந்தையுடன் பேச்சு வார்த்தை நடத்தினாள். குழந்தை முதலில் அழுக, பின் அவளின் சமாதான பேச்சில் அழுகையை நிறுத்தியது. அந்த சிறுமியைஅ போல பாதிக்க பட்ட குழந்தையின் படங்களையும், அவர்கள் வாழ்க்கையையும் விளக்கி கூறியவள் அவர்கள் இன்றூ எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதையும் அந்த சிறுமிக்கு புரியும்படியாக பேசினாள். சிறுமியும் முதலில் பார்ப்பதை பார்த்து முகத்தை மூடிக்கொள்ள, அதன் பின் அந்த படங்களின் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுவதை கேட்டு முகத்தில் இருந்து கைகளை விளக்கி அந்த படத்தை பார்த்து கொண்டிருந்தது.

 

சிறுமியை வெளியில் அழைத்து வந்த விருஷாலி, சிறுமியின் முகம் கொஞ்சம் தெளிவானதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். “இரண்டு வாரம் கழிச்சி அழைச்சிட்டு வாங்க குழந்தையை. இனி மாத்திரை மருந்து கொடுக்க வேண்டாம். கரேத்தே க்ளாஸ், ட்ராயிங்க் கிளாஸ், எதாவது ஒன்னுல குழந்தையை சேர்த்துவிடுங்க மைண்ட் ரிலாக்‌ஷா இருக்கும். க்ளாஸ்க்கு குழந்தையை அழைச்சிட்டு போகும் போது யாராவது ஒருத்தர் கூட போங்க. அங்க டீச்சர்ஸ், ஸ்டூடண்ட் எப்படினு பார்த்து, உங்களுக்கு பாதுக்காப்பா இருக்கும்னு தோணினா சேர்த்துவிடுங்க.” சிறுமியின் பெற்றோர்களிடம் குழந்தையின் மனநிலையை மாற்ற விருஷாலி கூறினாள்.

 

“சரிங்க டாக்டர் நாங்க பாதுகாப்பா பார்த்து சேர்த்துவிடுறோம். அப்போ கிளம்புறோம் டாக்டர் நாங்க” . சிறுமியை அழைத்துகொண்டு வெளியேறினார்கள். அவர்களை அனுப்பிவிட்டு கர்ணனின் நியாபகம் வர வேகமாக அறைக்கு சென்றாள்.

 

கையில் பழைய மேகசினை வைத்து படித்துகொண்டிருந்தவனை பார்த்து உள்ளே வந்தாள். “ரொம்ப போர் அடிச்சிருச்சா, ட்ரீட்மெண்ட் முடிய தாமதமாகிருச்சு சாரி.” அவனின் மன்னிப்பை வேண்டிகொண்டு முன்னே அமர்ந்தாள்.

 

“ஆமா, அதான் பழைய புத்தகத்தை எடுத்து படிச்சிட்டு இருந்தேன். ட்ரீட்மெண்ட் முடிந்ததா.. நாம போகலாமா?” 

 

“ம்ம் போகலாம் என் சீனியர் டாக்டர் வருவாங்க ரிப்போர் பண்ணிட்டு போகலாம்.” விருஷாலி சொல்லும் போதே உள்ளே வந்தார் சீனியர் டாக்டர்.

 

“ஹாய் ஷாலு..” அவளை அழைத்துகொண்டே உள்ளே  நுழைந்தவர் கர்ணனை சினேகமான பார்வை பார்த்துவிட்டு விருஷாலியிடம் “யார் இவர்” என தெரியதது போல் கேட்டார்.

 

“என் கணவர் மேம்.. கர்ணன்.” சீனியர் மருத்துவரிடம் அறிமுகப்படுத்தினாள்.

 

“வணக்கங்க..” இருவரும் சின்ன புன்னகையுடன் அறிமுக செய்துகொண்டனர்.

 

“என்னாச்சு ட்ரீட்மெண்ட்.”

 

“பெட்டர் மேம்.. முன்னவிட இப்போ குழந்தை தெளிவாக இருக்கு. மருந்து எதுவும் எழுதி கொடுக்கலை, நெக்ஸ்ட் டைம் வரசொல்லிருக்கேன். அதுமட்டுமில்லா, மைண்ட் ரிலாக்‌ஷ்க்கு க்ளாஸ் அனுப்ப சொல்லிருக்கேன். இன்னும் மூனு கவுன்சிலிங்க் கொடுத்த பழசையே அந்த குழந்தை நினைக்காது.” விருஷாலி அந்த சிறுமியின் ரிப்போர்ட்டை சீனியர் மருத்துவரிடம் காட்டி பேசிவிட்டு அவர்கள் இருவரும் சீனியர் மருத்துவரிடம் இருந்து விடைபெற்றனர்.

 

வரும் வழியில் எல்லாம் கர்ணன் பலத்த சிந்தனையில் இருந்தான். அவன் எண்ணம் முழுவதும் விருஷாலியை பற்றி அந்த மருத்துவர் கூறியதில் இருந்தது. ஒரு இன்றூ வரையிலும் பழைய நினைவின் தாக்கத்திலே இருப்பாளா என்று அவனுக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தான்.

 

கர்ணனை அறையில் விட்டுவிட்டு ட்ரீட்மெண்ட் அறைக்கு விருஷாலி சென்றுவிட்டாள். அவள் அறையிலே இருந்தவன் மனம் பொழுது போகவில்லை என்றது மேஜையின் மீது இருந்த புத்தகத்தை படித்துகொண்டிருந்தான். அப்போது, “ஷாலு வந்துட்டியா..” என கேட்டப்படி சீனியர் மருத்தவர் வந்தார்.

 

“நீங்க ஷாலு ரூம்ல.. யார் நீங்க.”

 

“விருஷாலியோட கணவன்.” சாதாரணமாக சொல்ல, அவரோ, “சாரி, நான் உங்க திருமணத்து வரலை அதன் உங்களை தெரியலை.” மன்னிப்பு வேண்ட.

 

“பரவாயில்லைங்க.. இப்போ தான் விசலா வெளிய போனா.”

 

“ஓ.. அப்படியா.. அப்போ நான் உங்ககிட்ட நான் பேசலாம.”

 

”என்கிட்ட என்ன பேச..” அவன் தயக்கமாய் கேட்க.

 

”விருஷாலியோட மனநிலையை பற்றி  தான் கர்ணன்.”

 

”மனநிலை பற்றியா..?”

 

விருஷாலி படிக்கும் பள்ளியில் ஏழாவது படிக்கும் மாணவியை அந்த ஸ்கூல் டீச்சரே செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கான், அதை விருஷாலி பார்த்து பிரின்சிகிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்க வச்சிருக்கா. ஆனா அதோட மிகப்பெரிய தவறு அடுத்த இரண்டு நாளுல அந்த மாணவி இறந்து போயிட்டா. இதனால் விருஷாலி  குழம்பி போய் அந்த குடுப்பத்துல விசாரிக்க, தற்கொலை பண்ணி இறந்ததா சொல்லிருக்காங்க. ஆனா விருஷாலி உண்மையை இரண்டே நாளுல கண்டுபிடிச்சு அதை ஆதாரத்தோட போலீஸ்ல கொடுத்தால். ஆனால் போலீஸூம் பணம் படைத்தவர்களோட பேச்சுல அந்த மாணவி தற்கொலை செய்து தான் இறந்தானு பொய் சொல்லி கேஸ் மூடிட்டாங்க.

 

“எப்படி அந்த பொண்ணூ இறந்தா?”

 

“அந்த டீச்சர் அந்த பொண்ணை தப்பா, வீடியோ எடுத்திருக்கான். அதை வச்சு மிரட்டினான், அந்த பொண்ணூ யார்கிட்ட என்ன சொல்லுவா, அந்த டீச்சர் கொடுத்த ”டாச்சர்ல” அவள் இறந்துட்டா. மெடிக்கல் ரிப்போர்ட்ல தற்கொலை தானு இருக்கும். அதுனால் ஷாலு ரொம்பவே மன அழுத்ததுக்கு ஆளான. என்கிட்ட தான் ட்ரீட்மெண்ட்க்கு வந்தா, கொஞ்சம் நாள் சரியானதும். என்கிட்ட இதே மருத்துவ துறையில தான் படிப்பேன். என்ன போல மன அழுத்ததுல இருக்குறவங்க காப்பத்தனும் சொல்லி படிச்சா. ஆனா அதுவே அவளோட வாழ்க்கையில பெரிய பாதிப்பா இருக்கும் எனக்கு தெரியாம போச்சு.”

 

“என்ன பாதிப்பு..”

 

“தாம்பத்திய வாழ்க்கையை கண்டு பயப்படுறா.. எங்க அவளோட குழந்தையும் இந்த சமூகத்துல பாலியல் தொல்லைக்கு ஆளாகுமோனு பயம் அவளுக்குள்ள. இதெல்லாம் மாறனும், அவளோட வாழ்க்கைய நல்லப்டியா வாழனும். நீங்க தான் அவளோட மனசை மாத்தனும் கர்ணன். விருஷாலி எனக்கு ஒரு பொண்ணு மாதிரி தான், என் பொண்ணோட வாழ்க்கை வீணா போகுறதை ஒரு தாய் எப்படி பார்ப்பா. அதான் உங்ககிட்ட இன்னைக்கு நான் பேசனும் விதி இருக்கு.  இதெல்லாம் உங்களுக்கு தெரிந்துவிட்டதுனு அவகிட்ட காட்டிக்காதீங்க. இல்லனா உங்ககிட்ட இருந்த பிரிய கூட தயங்கமாட்டா விருஷாலி. எல்லாம் உங்க கையில தான் இருக்கு அவளும் எல்லாம் பொண்ணுங்க மாதிரி வாழ்க்கைய வாழனும்.” அவர் சொல்லி முடிக்க, விருஷாலி வரும் சத்தம் கேட்டதும் அவர் உடனே அறையை விடு வெளியேறினார், கர்ணனும் புத்தகத்தை படிப்பது போல நடந்துகொண்டான்.

 

”உன்கிட்ட எல்லாம் ஷாலு பேசுறா ஏன் என்கிட்ட பேசலை.” நகுலனிடம் புகார் வாசித்தாள் ஷாலினி.

 

“பேசுவாங்க.. இப்போவே பேசுனா உன்கிட்ட மறுபடியும் கோவமா பேசுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணு, பேசுவாங்க உன்கிட்ட பேசாம அண்ணி எங்க போயிட போறாங்க.”

 

“இப்படியே சொல்லி சொல்லி மாச கணக்கு தான் ஆகுது தவிர அவ என்கிட்ட பேசுறதை காணாம்.”

 

“அண்ணி மனசுல நம்ம மேல கோவம் அப்படி இருக்கு ஷாலினி. நீயும் அண்ணி மேல இப்படி கோவத்தை காட்டியிருக்க கூடாது.”

 

“ஆமா, நான் மட்டும் அவ மேல கோவத்தை காட்டலைனா இந்த நேரம் உனக்கு அண்ணி ஆகிருக்க மாட்டா என் அக்கா.”

 

“என்னடி சொல்லுற.”

 

“ஆமா, என் கோவம் தான் என் அக்காவ இந்த முடிவை எடுக்க வச்சிருக்கு என்மேல அவளுக்கு பாசம் அதிகம் அதுனால தான் திருமணம் நடந்திருக்கு. இல்லனா அவளோட இஷ்ட்டத்துக்கு தான் இருப்பா. நானும் உன்னை பிரிந்து எப்படி இருப்பேனு தோணுச்சு, அதான் என் அக்காமேல கோவத்தை காட்டி,  அவளை இந்த முடிவு எடுக்க வச்சேன்.”

 

“அதுவும் நல்லது தான் என் அண்ணாவ நல்லா பார்த்துகிறாங்க.”

 

“யாரு அவ மாமாவ நல்லா பார்த்துகிறாளா?  வெளிய நல்லவா மாதிரி நடிப்பா, அவங்க ரூம்ல என்ன நடக்குதுனு யாருக்கு தெரியும்.”

 

“அது வேறயோ..”

 

“சீக்கிரம் அக்கா என்கிட்ட பேசனும்..”

 

“என் அண்ணா அன்னைக்கு என்ன சொன்னாங்கனு நியாபகம் இருக்கா. அவங்களோட பிரச்சனையில எப்போவும் நம்ம காதலை விட்டுகொடுக்க கூடாதுனு சொன்னாங்கள. அதுக்காகவாது அண்ணி பேசுவாங்க. வா வெளிய போயிட்டு வரலாம்.” அவளை அழைத்துகொண்டு சென்றான்.

 

என்றும் இல்லாத நாளாய் முல்லை விருஷாலியின் தலை நிறைய பூ வைத்து கையில் பால் சொம்பை கொடுத்துவிட்டார். அவளோ எதற்க்கு இதெல்லாம் என்பது போல முல்லையை பார்க்க.

 

“பாலை மருமகன் குடிச்சதும், நீ மீதியை குடிக்கனும். வாழ்க்கையில எல்லாமே புருஷனுக்கு, பாதி மனைவிக்கு பாதியா தான் இருக்கனும். அதே மாதிரி தான் வாழ்க்கை முழுக்க நீயும், மருமகனும் விட்டுகொடுத்து, வாழ பழகனும்.” அவரின் பாசையில் சூசகமாக வாழ்க்கையை தொடங்க இன்று நல்ல நாள் என கூறினார். ஆனால் விருஷாலிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் சொல்லியதற்க்கு தலையை ஆட்டிகொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள்.

 

கையில் ரிமோட்டுடன் போராடியவன் கதவை திறந்துகொண்டு அவள் போட்டுயிருக்கும் சுடிதார்க்கும், தலையில் வைத்திருக்கும் பூவுக்கும் அவன் புரிந்துகொண்டான் அத்தையின் வேலை இது என்று. “இந்தாங்க பால், குடிச்சிட்டு எனக்கு கொடுங்க மிச்சத்தை.” அவனிடம் சொம்பை நீட்டியவளை சிரிப்புடன் பார்த்தவன்.

 

“பிடிங்க, நான் ட்ரெஸ் மாத்திட்டு வந்து பால் குடிச்சிருக்கிறேன்.” அவனிடம் கொடுத்துவிட்டு அவளது இரவு உடையை எடுத்துகொண்டு குளியல் அறைக்கு சென்றாள்.

 

”விசலா உனக்கு இன்னுமா புரியலை, அத்தை நம்ம வாழ்க்கையை இன்னைக்கு தொடங்கனும்னு மறைமுகமாக சொல்லிருக்காங்க. அது தெரியாம  நைட் ட்ரெஸ் மாத்த போயிருக்காளே இவள்.”  என கர்ணன் புலம்பினான்.

 

                                                தொடரும்………….