anjali’s Endrum Enthunai Neeyaethan 23 final

       

           என்றும் என்துணை நீயேதான் 23

 

”மனையில மருமகளையும், மகனையும் அமர வைங்க. ஏத்தா லட்சுமி வா… வந்து மருமக கழுத்துல இந்த மஞ்ச சரடு போட்டுவிட்டு அந்த மஞ்சள் கயிறை அவிழ்த்துவிடு. முல்லை நீ வாம்மா.. ஏன் ஓரத்துல நிக்குற.. இந்த தாலிசங்கிலியில குண்டு, காசு, பவளத்தை கோர்த்துவிடு. எம்மா, ஜோதி பொண்ணோட அம்மா நீதான ஏன் அங்கயே இருக்கீங்க வாங்க உங்க பொண்ணு பக்கத்துல உட்கார்ந்து உன் அண்ணிக்கு உதவி பண்ணு.” கோடியம்ம ஒவ்வொரையும் வேலை வாங்க. ஷாலுவும், கர்ணனும் அதை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.

 

ஷாலினி, நகுலன் அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். சோனை முத்து, வீரபத்திரன், பாண்டியன் அவர்கள் வந்திருந்த பெரியவர்களை வரவேற்று வெளியில் இருந்த இருக்கையில் அமர வைத்து பேசிகொண்டிருந்தனர். இது பெண்கள் சடங்கு ஆகையால் ஆண்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை.

 

“கோர்த்த மாங்கல்யத்தை என் பேரன் கையில கொடு முல்லை. ஐயா ராசா.. அதை உன் பொண்டாட்டி கழுத்துல போட்டுவிடு.” முல்லையிடம் இருந்து வாங்கிய மாங்கல்யத்தை ஷாலுவை பார்த்துகொண்டு அவன் போட்டுவிட்டான். அவளும் கர்ணனை தான் வைத்த கண் மாறாமல் பார்த்துகொண்டிருந்தாள்.

 

“மருமகளே.. வந்திருக்கிற சுமங்கலி பொண்ணுக்கு எல்லாம் உன் கையில இந்த பொருள் எல்லாம் எடுத்துகொடு.” என ஒரளவு பெரிய தட்டில் ஜாக்கெட் துணி, மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம், அதனுடன் மீனாட்சி அட்டைபடம், நான்கு வளையல் மிட்டாய் என அனைத்தும் அடங்கிய பையை ஒவ்வொன்றாக அவள் கொடுக்க வேண்டும் என கோடியம்மாள் கூறினார்.

 

“பொண்ணோட தங்கச்சி தானம்மா நீ.. வா வந்து உன் அக்காவுக்கு எடுத்துகொடு..” ஷாலினியையும் அவர் விடமால் அழைத்து ஷாலுவின் பக்கத்தில் அமர வைத்தார்.

 

ஊர் மக்கள் அந்த சடங்கிர்க்கு வந்தால் ஒவ்வொருவரும் ஷாலுவுக்கும் கர்ணனுக்கு ஆசீர்வாதம் செய்து அவளிடம் இருந்த அந்த பையை வாங்கிகொண்டனர்.. ஷாலினி, ஷாலுவிற்க்கு ஒவ்வொரு பையை எடுத்துகொடுத்தாள்.

 

“இந்தா நீங்கெல்லாம் என் மருமககூட வேலை செய்யிற பிள்ளைகள் தானே. வாங்க நீங்க ஏன் அங்கயே இருக்கீங்க..” வந்தனா, ஷிவானி, மோனி, ப்ரீத்தா நால் வரையும் அந்த விஷேசத்திர்க்கு ஷாலு அழைத்திருந்தாள்.

 

“முதல அந்த புது பொண்ணுக்கு கொடும்மா..” என கோடியம்மா மோனியை குறிப்பிட்டு சொல்ல. அவளும் ஷாலுவிற்க்கு பூ, அரிசி போட்டு வாழ்த்தி அவளிடம் இருந்து பையை பெற்றுகொண்டாள்.

 

“இவங்க மூனு பேருக்கும் சீக்கிரம் கல்யாணம் நடக்கனும் சொல்லி கொடும்மா மருமகளே.” என அடுத்தடுத்து வந்த வந்தனா, ஷிவானி, ப்ரீத்தாவை சொல்ல, அவர்களோ

 

“பாட்டி உங்க பேரன் மாதிரி எங்கெளுக்கெல்லாம் அமையனும் சொல்லி கொடுக்க சொல்லுங்க பாட்டி.” என வந்தனா சொல்ல.

 

“ஆத்தா என் பேரனைவிட பேரழகனா உனக்கு கிடைப்பான்.” என அவரும் சொல்ல அங்கு சந்தோஷம் பொங்கியது.

 

அனைத்தும் முடிந்து வந்திருந்தவர்களுக்கு பந்தி நடக்க. ஷாலுவும், அவளின் தோழிகளும் அவளுடையே இருந்தனர். கர்ணன் பெரியவர்களிடம் பேசிகொண்டிருந்தான்.

 

“என்ன மோனி, அண்ணாவ கூப்பிட்டு வரலையா?” என ஷாலு கேட்க.

 

“அவர்க்கு மீட்டிங் டி அதான் வர முடியலை…”

 

“மோனி எதாவது நல்ல விசேஷமா? சோர்ந்து தெரியுற?” என ஷாலு கேட்க.

 

“அப்படியா தெரியுது.. ஆனா எதுவும் இலையே டி.” மோனி சொல்லும் போது,

 

“அண்ணி சாப்பிட வரசொன்னாங்க.” என நகுலன் சொல்லிவிட்டு சென்றான்.

 

“சரி வாங்க போகலாம்..” தோழிகளை அழைத்துகொண்டு சென்றாள்.

 

அப்போது ஷாலினி தண்ணீர் குடம் எடுத்து வந்ததை பார்த்த ஷாலு, ‘அறிவில்லை உனக்கு நீ அதிகமா வெயிட் தூக்க கூடாதுனு நான் சொல்லிருக்கேன்ல. இங்க நீ விருந்தாளியா வந்திருக்க எதுக்கு இப்போ வேலை செய்துட்டு இருக்க.’ தங்கை வேலை செய்வது பொருக்காமல் கேட்க, அதுவுமில்லாமல் ஷாலினி அதிகமாக வெயிட் தூக்கினால் அவளுக்கு வயிறு வலிக்கும் அதனால் தான் ஷாலு கோவப்பட. அதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

 

“ஏம்மா, மருமகளே இப்படியே தண்ணீர் தூக்காம இருந்தா போறவன் வீட்டுல உன் தங்கச்சி எப்படி வேலை செய்வா.” கோடியம்மாள் ஷாலுவுக்கு எதிராக பேச.

 

“அவ எதுக்கு வேலை செய்யனும்… என் தங்கச்சி பிறந்த வீட்டுலையும், சரி புகுந்த வீட்டுலையும் சரி எந்த வேலையும் செய்ய கூடாது.”

 

“அது சரி அப்போ உன் புகுந்த வீட்டுல இன்னொரு பையனுக்கு கட்டிகொடுத்து பக்கத்துல வச்சுக்கோ. அப்போ வேலை செய்ய வேண்டாமே.” என கோடியம்மாள் எடுத்துகொடுக்க, அது தெரியாமல் ஷாலுவும் வாய்விட்டாள்.

 

“ஆமா, என் கொழுந்தன் நகுலனுக்கு தான் என் தங்கச்சியை கட்டிகொடுப்பேன்.” சொல்லிவிட, அனைவரும் கொஞ்சம் அதிர்ச்சியும், அதிக சந்தோஷமும் பட்டனர்.

 

”ஷாலு… சாரி..” என அக்காவை கட்டிகொண்டு அழுதாள் ஷாலினி.

 

“ஏய்.. என்ன டி இது.. கண்ணை தொடை.. உன்மேல கோவம் இருந்தாலும் நீ என் தங்கச்சி இல்லைனு ஆகிரும்மா.” ஷாலினியை அவளும் கட்டியணைத்து பேச ஆரம்பித்தாள்.

 

“பேராண்டி, நீ சொன்ன மாதிரி செய்துட்டேன், அதே மாதிரி நீயும் நடந்துகனு. சொன்ன பேச்சும், கொடுத்த வாக்கும் மாறக்கூடாது.” கர்ணனிடம் பேசிகொண்டிருந்தார் கோடியம்மாள்.

 

“கண்டிப்பா பாட்டி, கொடுத்த வாக்கை நான் மறக்கவும் மாட்டேன், மீறவும் மாட்டேன்.” அவனும் சேர்ந்துகொண்டு பேசுவதை பார்த்த ஷாலு, “இன்னைக்கு நைட் இருக்கு அவருக்கு.” மனதில் சொல்லிகொண்டு தங்கையை அழைத்துகொண்டு சென்றாள்.

 

“ஓகே ஷாலு பாய்… காலேஜ்ல மீட் பண்ணலாம்.”

 

“பார்த்து போங்க.. போயிட்டு கால் பண்ணுங்க..” தோழிகளுக்கு விடைகொடுத்தாள்.

 

வந்திருந்த ஒவ்வொரும் விடைபெற்று செல்ல, இறுதியில் ஷாலுவின் குடும்பம் விடைபெற காத்திருந்தது.

 

“அப்போ நாங்க கிளம்புறோம் சம்மந்தி.. வரோம் ஷாலு.” ஜெகன், ஜோதி விடைபெற.

 

“நல்லபடியா போயிட்டு வாங்க சம்மந்தி..”

 

”சரிங்கப்பா.. ம்மா.. பார்த்துக்கோங்க..” ஷாலுவும் விடைகொடுத்தாள்.

 

“அடிக்கடி வீட்டுக்கு வா ஷாலு.. நீ இல்லாம நல்லாவே இல்லை.” ஷாலினி அழுதுகொண்டே சொல்ல.

 

“சரி வரேன்.. நீயும் உடம்ப பார்த்துகோ.. அதிகமா வேலை செய்யாத.” தங்கைக்கு அறிவுரை சொல்லிவிட்டாள்.

 

“சம்மந்தி.. என் இரண்டாவது மகன் முதல வேலையில உட்காரட்டும் அடுத்து உங்க பொண்ணை, பொண்ணு கேட்க முறையா வரோம்.” வீரபத்திரன் அவர்கள் மனதில் இருக்கும் சங்கடத்தை அறிந்துகொண்டு, வெளிப்படையாக பேசினார்.

 

“ரொம்ப சந்தோஷம் சம்மந்தி.. அது ஒன்னு தான் இப்போ கவலையா இருந்துச்சு அதையும் போக்கிட்டேங்க.” மனதார அவர்கள் விடைபெற்ற சென்றனர்.

 

“அந்த கிழவியும், நீங்களும் என்ன பேசுனீங்கனு இப்போ சொல்லுங்க.. அப்படி நீங்க சொல்லைல நமக்குள்ள ”ஒன்னும் நடக்காது”. கர்ணனின் கழுத்தில் கத்தி வைத்து ஷாலு மிரட்ட.

 

“விசலா ரொம்ப தப்புமா.. நான் உன் கணவன்.. இன்னைக்கு தான் மாங்கல்யம் மாத்தி உனக்கு போட்டுவிட்டுருக்கேன். உயிருக்கு சேதராம் ஆச்சு உன்மேல பழி வந்திரும்.”

 

“பரவாயில்லை.. என்ன பேசுனீங்க அதை சொல்லுங்க.”

 

“அது… உன்னையும், ஷாலினியை சேர்த்து வைக்க நானும், என் பாட்டியும் போட்ட ப்ளான்.” என கர்ணன் விளக்கமாக சொன்னான்.

 

“நீங்க பிளான் பண்ணலைனாலும் ஷாலினிக்கிட்ட நான் இன்னைக்கு பேசிருப்பேன்.”

 

“எப்படி விசலா?”

 

“நகுலன் உங்களுக்கு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லி என்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.  அவரால தான் ஷாலினி என்கிட்ட கோவமா பேசுனதும், அதுக்கு நான் பேசாம இருந்த போது அவளோட கோவம் நகுலன் மீது வந்ததும்னு எல்லாமே சொன்னாரு. சரி அவருக்காக பேசலாம்னு நான் நினைச்சேன் அதுக்குள்ள நீங்க பிளான் பண்ணி நடத்திட்டீங்க.”

 

”ஓ..ஓ..”

 

“எல்லாம் முடிஞ்ச பின்னாடியும், கிழவி உங்க காதுல என்ன சொல்லுச்சு.”

 

“அது.. அது..”

 

“இந்த வெட்கம் எல்லாம் அப்புறம் பட்டுகோங்க.. விசயத்தை சொல்லுங்க.”

 

“பிளான் பண்ணது நல்லபடியா நடந்தா, நாமா எண்ணி பத்து மாசத்துல கொல்லு பேரனோ, பேத்திய பெத்துகொடுக்குறேனு வாக்கு கொடுத்திருக்கேன் விசலா.”

 

“எவ்வளவு தைரியம் உங்களூக்கு.. என்னை கேட்காமா.. வாக்கு கொடுப்பீங்க.”

 

“அய்யோ தெரியாம கொடுத்திட்டேனே..விசலா.”

 

“அதெப்படி பத்து மாசம்.. எண்ணி இரண்டே மாசத்துல உங்களை அப்பாவாக்குறேன்.” அவனின் அலறலுக்கு இவள் அதிர்ச்சி வைத்தாள்.

 

வாழ்க்கையில் தனியாக போரட கற்றுகொள்ள வேண்டும் என பெண்ணின் மனம் நினைத்தாலும் அவளின் பாதுகாப்பிர்க்கு ஒரு ஆணின் துணை வேண்டும் என கடவுள் நிர்ணயிப்பாராம். அதுபோல விருஷாலியிக்கு “என்றும் துணையாக” கர்ணன் இருப்பான் என எவ்வித மாற்றமும் இல்லை.

 

கர்ணனுக்கு “என்றும் அவனின்துணை அவள் தான்” என மாற்று கருத்தும் இல்லை. வைஷாலியின் ஆசை கொண்ட மனம் இடையில் வந்தாலும், கர்ணனின் ஆசை கொண்ட காதல் மனம் விருஷாலி தான்.

 

கர்ணன், விருஷாலிக்கு முன் தங்கள் காதலை வளர்த்துகொண்டாலும். பிரிதலில் கூட அவன் துணையில்லாமல் உலகில் வாழ்ந்துவிட முடியுமா? என்ற நிலையில் தான் ஷாலினியின் மனம் தவித்தது. தங்கையின் தவிப்பை, போக்க விருஷாலியின் செயல் பிடிக்காத திருமணமாக இருந்தாலும் ஷாலினிக்காக ஏற்ற அவன் மனம் உருகதான் செய்தது கர்ணனுக்கு.

 

இன்று மட்டுமில்லாமல் ”என்றுமே அவளின் துணை” கர்ணன் தான்”.. காதலில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதுமே கர்ணன் தான் விருஷாலிக்கு துணையாக இருப்பான் என்பதில் மாற்றம் இல்லை.

 

                      சுபம்…………