Eedilla Istangal – 16
Eedilla Istangal – 16
தன் முன் வந்து நின்றவனை, கீதா ஆச்சிரியமாகப் பார்த்தார்.
“என்ன தம்பி?”
“நீங்க அரசம்பாளையம்தான?” என்று சட்டெனக் கேட்டான்.
“ம்ம்ம், ஆமா. ஏன் கேட்கிறீங்க?”
“நானும் அந்த ஊர்தான்”
“ஓ!”
“நான், அதிபன் ஐயாவோட ஃபாலோயர்”
“ஓகோ! ஆனா அவருக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு. ஸோ அவரைப் பத்தி எதுவும் பேச வேண்டாம்”
“எனக்குத் தெரியும்… பட், இது வேற!”
கீதா, அவனைப் பார்த்துக் கொண்டே நின்றார்.
“இது… இது அவரைப் பத்திய விஷயம் இல்லை. என்னைப் பத்தி… எனக்காக…” என்று தொடராமல் நிறுத்தானான்.
தயங்கினான்! திணறினான்!! _எல்லாம் தன் காதலுக்காக! தெளிவாய் யோசிப்பவனையும், வளமாய் யாசிக்க வைத்தது.
“முதல நீங்க யாரு?” என்று கீதா அசட்டையாகக் கேட்டார்.
“நான் தேவா… பாலிசி அனலிஸ்ட் அன்ட் ஆக்டிவிஸ்ட்”
திக்கென்றது கீதாவிற்கு! ஜெகன் சொல்லிய தாராவின் காதலன் இவனே! தாராவிடம் காதலை மறுத்தவன், என் முன் எதற்காக வந்து நிற்கிறான்? கீதாவிற்குப் புரியவில்லை.
“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”
“உங்களுக்கு நான் என்ன ஹெல்ப் பண்ண முடியும்??”
“அது…” என்றவனுக்கு மீண்டும் தயக்கம்!
“எனக்கு லேட்டாகுது, கொஞ்சம் சீக்கிரமா சொல்றீங்களா?”
“ஓகே. இந்த மாதிரி ஒரு விஷயத்துக்காக… ஒருத்தர்…” என்று மீண்டும் நிறுத்தினான்.
“ப்ச், சொல்லுங்க”
“ஐயா சாகிறப்போ நான்தான் கூட இருந்தேன்… “
“மறுபடியும் அவர் பேச்சு… ” என்று எரிச்சலடைந்தார்.
“முழுசா கேளுங்கப் புரியும்”
“சரி சொல்லுங்க”
“அப்போ அவர்… அவர் பொண்ணைப் பத்திச் சொன்னாரு”
தாராவைப் பற்றி இவனிடம் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று, கீதாவிற்கு அதிபன் மேல் கோபம் வந்தது.
“அமுதா-க்கு என் மேல… என்னைய அமுதா பிடிக்கும்னு ஐயாகிட்ட சொல்லியிருக்கா”
‘அமுதாவா??’ என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டதால்… அவனுக்குப் பதில் செல்லாமல், கீதா நின்றார்.
“ஆன்ட்டி”
“என்ன பேசறீங்க? அவர் சாகிறப்போ அவளுக்குப் பதினைஞ்சு வயசு…” என்று சிடுசிடுத்தார்.
அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப் போயிற்று! ஒரு பெண்ணின் மீதான விருப்பத்தை, அவள் அன்னையிடம் கூறிக் கொண்டிருப்பது கூச்சத்தைத் தந்தது.
எனினும், “ப்ளீஸ் ப்ளீஸ் ஆன்ட்டி. இது நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது” என்று புரிய வைக்கப் பார்த்தான்.
“வேறென்ன?”
“அமுதா என்னைய… என்னோட தாட்ஸ்ஸ சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்லியிருக்கா”
இவனுக்குத் தாராதான் அமுதா என்று தெரியவில்லை என்று கீதாவிற்குத் தெரிந்தது.
“இது வேற… இது வேற” என்றவன் குரல் குறிலில் ஒலித்தது.
அமுதாவை விரும்பிக் கொண்டு இருப்பதால்தான், தாராவின் விருப்பத்தை நிராகரித்திருக்கிறான் என்று கீதாவிற்குப் புரிந்தது.
“நீங்க அமுதா கான்டேக்ட் டீடெயில்ஸ் கொடுக்க முடியுமா? நான் அவகிட்ட பேசிப் பார்க்கிறேன்”
“அதெப்படி முடியும்? அந்த வயசுல ஒரு வேகத்தில சொல்லியிருப்பா”
“அதிபன் ஐயா பொண்ணு அப்படிச் சொல்ல மாட்டா”
“எப்போ அதிபனை டிவோர்ஸ் பண்ணேனோ, அப்போ இருந்து அவ என் பொண்ணு”
இதற்கு என்ன அர்த்தம்?? என்று தேவாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதேபோல், அவனை அப்படியே விட்டுவிடக் கீதாவால் முடியவில்லை. அவன் அமுதாவைத் தேடுகிறான் என்று புரிந்தது.
எனவே, “நீங்க வேணா உங்க கான்டேக்ட் டீடெயில்ஸ் கொடுங்க. நான்… நான் பேசிப் பார்க்கிறேன்” என்றார்.
“தேங்க்ஸ்” என்று தன் அலைபேசி இலக்கங்களை கொடுத்தான்.
மேலும், “ம்ம்ம், நீங்க சென்னைலதான் இருக்கீங்களா?” என்று கேட்டான்.
அழுத்தமான மௌனம், கீதாவிடம்!
அதற்கு மேல், அவன் துளைத்துக் கேள்விகள் கேட்கவில்லை. அவனுக்குத் தெரியும் இதுவே அதிகப்படி என்று!
“சரி, நான் வர்றேன்” என்று கீதா கிளம்பிவிட்டார்.
மேலும், போகும் போதே தாராவை அலைபேசியில் அழைத்து… வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டார்.
தேவா நடக்கும் திசையில்,
மிகுந்த சந்தோசத்துடன், பாபி சொன்ன நகைக்கடை நோக்கி வந்து கொண்டிருந்ததான்.
அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தான்.
அழைத்தவரது பேச்சு!
“நீங்க, நாளைக்கு ஆஃபிஸ்ல வந்து நோட்புக்ஸ் கொடுத்திடுங்க”
மறுமுனை பேச்சு!!
“இட்ஸ் ஓகே. 500 நீங்க கொடுங்க. ரிமைனிங் நோட்புக்ஸ், என் சைட்ல இருந்து கொடுத்துக்கிறேன்”
மேலும் இரண்டு மூன்று வாக்கியங்கள் பேசப்பட்டு, அலைபேசி அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
இரண்டு நிமிடத்திற்குப் பின் நகைக்கடை வந்தடைந்திருந்தான்.
வெளியே தாரா அமர்ந்திருந்ததைப் பார்த்தான். அவளும் பார்த்தாள்.
லேசாக எழுந்து கொள்ளுவது போல் உடல்மொழி தந்தாள். ஆனால், அதைக் கண்டு கொள்ளாமல், அவன் உள்ளே சென்றுவிட்டான்.
நகைக்கடை உள்ளே…
ஒரு இடத்தில் அமர்ந்து, சாரு நகைகளைத் தேர்வு செய்து கொண்டிருந்தாள்.
பாபி, மற்றொரு இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
தேவா, பாபி அருகில் சென்றான்.
“அப்பவே ஃபோன் பண்ண, இப்பதான் வர்ற?” – பாபி.
“ஒரு ஃபோன் கால் வந்தது”
“ஓ!”
“ரெஜிஸ்டர்ல ஆஃபீஸ்லதான மேரேஜ், அப்புறம் என்ன ஜுவல்லரி ஷாப்?”
“ரிங் எக்ஸ்சேஞ் பண்ணலாம்னு ரெண்டு பேரோட விஷ்… ஸோ…”
“ஓ! பட் சாருகூட இருக்காம, நீ ஏன் இங்க நிக்கிற?”
“அங்க ஏசி சில்நெஸ் அதிகமா இருக்கு. மாலிக்கு நல்லதில்லை. அதான்”
“தாரா இருக்காங்களே… அவங்ககிட்ட கொடுத்திருக்கலாமே?”
“அவங்களுக்குப் பீவர்”
அக்கணம், தேவாவைப் பார்த்து சாரு கையசைத்தாள். தேவாவும் ஒரு சிறு புன்னகை மற்றும் கையசைப்பு செய்தான்.
“நீ, எவ்வளவு நேரம் இங்க இருப்ப?” – பாபி.
“நீங்க ரெண்டு பேரும் பர்சேஸ் பண்ணி முடிக்கிற வரைக்கும்”
“வேலை இல்லையா?”
“பார்த்துக்கலாம்! மாலியைக் கொடு. நான் வெளியில போய் வச்சிருக்கேன்” என்றவன், பாபியிடமிருந்து மாலியை வாங்கிக் கொண்டான்.
மேலும், “சாரு தனியா பர்சேஸ் பண்ணா நல்லா இருக்காது பாபி. மாலி அழுதா, உங்களைக் கூப்பிடறேன்”
“ம்ம்ம் சரி” என்று சொல்லி, பாபி சாருவை நோக்கிச் சென்றான்.
தேவா, மாலியைத் தூக்கிக் கொண்டு வருகையில் மோதிரங்கள் அடுக்கி வைக்கப்பட்ட மாதிரிகளைப் பார்த்தான்.
அதில் ஒரே ஒரு மோதிரம், அவனைக் கவர்ந்தது.
மிகச் சிறிய சிவப்பு கற்களால், தமிழ் எழுத்து ‘அ’ பொறிக்கப்பட்ட மோதிரம் அது!
பார்த்ததும் அமுதா நியாபகம் வந்தது. வாங்கிவிட்டான்!!
வெளியே வந்தான்.
மீண்டும் தாராவிடம் பார்வை சென்றது.
அவளும் பார்த்தாள். ஆனால் இம்முறை, அவள் பார்க்க மட்டும் செய்யவில்லை.
“தேவா” என்று அழைத்து, ‘இங்க உட்காருங்க’ என்று சைகையால் அவளது அருகிலிருந்த இருக்கையைக் காட்டினாள்.
அவனும் வந்து அமர்ந்தான்.
ஒரு காலைத் தூக்கி, மற்றொரு கால் மீது போட்டுக் கொண்டு, மாலியை நன்றாக மடியில் படுக்க வைத்துக் கொண்டான்.
அதுவரை அமைதியாக, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், தாரா.
“ஸாரி” என்றாள்.
“எதுக்கு டாக்டர்?”
அவளது முகம் ஒருவித பிடித்தமின்மையைக் காட்டியது.
“இதுக்கும் டிஸ்டர்ப்பானா, என்னால ஒன்னும் பண்ண முடியாது”
ஓர் மௌனம் தாராவிடம்!
“என்னோட ஸாரியை அக்ஸப்ட் பண்ணிக்கிட்டா, பேர் சொல்லிக் கூப்பிடறேன்” என்றான்.
“நீங்க எதுக்கு ஸாரி கேட்கணும்? தப்பு என் மேலதான?”
“புரியலை? என்ன தப்பு?”
“ம்ம்ம், லவ் கன்ஃபார்ம் பண்ணாம, கிரான்ட் ப்ரோபோசல்! ஹவ் வியர்ட் இஸ் தேட்?”
“…. “
“ஆக்வேர்டு சிச்சுவேஷன்ல உங்களை நிறுத்தி வச்சதுக்கு, ஸாரி”
“பட், ப்ரோபோசல்-னா ‘வில் யூ மேரி மீ?’-ன்னு கேட்கிறதுதான. ஸோ யூ ஆர் நாட் டோட்டலி ராங்”
“ஓ!”
“ஆக்ச்சுவலி தாரா, எனக்கு அந்த அரேஞ்ச்மென்ட்ஸ் பிடிச்சது” என்று தான் ரசித்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
“ரியலீ… ” என்றாள் ஆச்சரியத்துடன்!
“ம்ம்ம், அந்த சீரியல் லைட்ஸ்… “
தாராவின் இரு விழிகளில் ஓர் ஒளி!
“அந்த பலூன்ஸ்… “
தாராவின் பாரமான இதயம் பறந்தது.
“தென் வொயிட் டேபிள் செட்… அன்ட் தேட் ரெட் ரோஸ்”
ரோஜா இதழ்கள் விரிந்தது போன்ற ஒரு புன்னகை, தாராவிடம்!
“இதெல்லாம் பிடிச்சிருந்தது” என்று முடித்துவிட்டான்.
தான் ரசித்தவற்றை அவனும் ரசித்திருக்கிறான் என்று எண்ணமே போதுமானதாக இருந்தது, தாராவிற்கு!
“நீங்க என்கிட்ட இவ்ளோ பேசுவீங்கன்னு நினைக்கலை தேவா”
“இஃப் ஐ அம் நாட் ராங், ஃபர்ஸ்ட் டே உங்ககிட்ட எந்த ஹெஸிட்டேஷனும் இல்லாமதான் பேசினேன்”
“அப்புறம் என்னாச்சு?”
“உங்க இன்ட்ரெஸ்ட் புரிஞ்சது. ஸோ…” என்று தன் விலகலின் காரணம் கூறினான்.
“இப்போ??”
“என்னோட இன்ட்ரெஸ்ட் என்னன்னு உங்களுக்குத் தெரியும்ல. ஸோ… “
“எத்திக்??”
“ய்யா! ய்யா!! ஐ நோ வாட் இஸ் எத்திக்!! அன்ட் வாட் இஸ் நாட் எத்திக் “
தான் பேசிய வசனத்தையே அவன் பேசியதும், அவள் உதடுகளைக் கோணலாக்கித் தன் கண்டனத்தைத் பதிவு செய்தாள்.
அதைக் கண்டவன், “எனக்கும் நேத்து இப்படித்தான் இருந்தது” என்றான் தன் மென்னைகையை மெனக்கெடல் எடுத்து மறைத்துபடியே!
அவளும் மெல்லச் சிரித்தாள்!
“எனிவே, அந்தக் கிரான்ட் ப்ரோபோசல் செட்-அப் பிடிச்சது. ஸோ ஸாரியெல்லாம் வேண்டாம்” என்றான்.
“பட், அன்னைக்கு அனாயிங்ன்னு சொன்னீங்களே??”
“அது அந்த சாங் தாரா! நாட் ஃபார் தே செட்டிங்ஸ்”
“ஓ!”
மௌனமான நேரச் செலவிடல்கள்!
“தேவா, நீங்க அந்த சாங் ஃபுல்லா கேட்டிருக்கீங்களா?”
“இல்லையே தாரா”
“ம்ம்ம், ஃபுல்லா கேட்டா… இப்படிச் சொல்ல மாட்டிங்க”
“ஓ!”
“இப்போ கேட்க்கிறீங்களா?” என்றாள் ஆசையாக!
“இப்பவா?”
“ம்ம்ம், கேளுங்க” என்றவள், தன் டோட் பேக்கிலிருந்து செல்பேசி, செவிப்பேசி இரண்டையும் எடுத்தாள்.
செவிப்பேசியின் ஒரு முனையை, அவனிடம் தந்தாள்.
இன்னொரு முனையைத் தன் காதில் வைக்கப் போகும் முன், யோசித்தாள்.
பின் அவனிடம், “தேவா, டூ யூ மைன்ட்?” என்று அதைக் காட்டிக் கேட்டாள்.
தேவா யோசித்தான்.
“வேண்டாம்னா விட்ருங்க. நோ இஸ்யூஸ்”
“நெவர் மைன்ட் தாரா” என்றான்.
“மெனி(many) தேங்க்ஸ்” என்றவள், புன்னகையுடன் செவிப்பேசியின் மற்றொரு முனையைத் தன் செவிக்குள் சொருகினாள்.
“தேவா ரெடியா??”
“ம்ம்ம்”
“ஒன்… டூ… த்ரீ” என்று விரல்களால் எண்ணியபடியே எண்ணிக்கைச் சொல்லி, பாடலை ஓட விட்டாள்.
இருவரும், ‘த்ரீ லிட்டில் வேர்ட்ஸ்’ பாடலை, ஒரே இடத்தில்…. ஒரே நேரத்தில்…. ஒரே அலைபேசியில்…. _வெவ்வேறு அலைவரிசையில் இயங்கும் ஓர் காதலுக்காகக் கேட்டனர்.
இச்சமயத்தில் இரண்டு விடயங்கள் நடந்தன.
ஒன்று…
தற்செயலாக, மாலின் அதே தளத்திற்கு வந்த மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர் தம்பதியினர், இந்தக் காட்சியைப் பார்த்தனர்.
அவர்கள் பேசியது,
“பாஸ்கர்… அங்க பாருங்க! அது தேவாதான??”
“ஆமா! பட், கூட யாரோ ஒரு பொண்ணு இருக்கிறா??
“அது டாக்டர் தாரா பாஸ்கர்”
“ஓ!”
“அவாய்ட் பண்றேன்னு சொன்னான். பட், இட் ஷீம்ஸ் லைக் தே ஆர் பிக்கமிங் ஃபிரண்ட்ஸ். இல்லையா பாஸ்கர்??”
“யெஸ்… யூ ஆர் கரெக்ட்” என்றார்.
மேலும் பேசியபடியே, அவர்களின் தேவைகளை வாங்கச் சென்றனர்.
இரண்டாவது…
நகைக்கடையிலிருந்து வெளி வந்த சாருவும் பாபியும்… இதைப் பார்த்தனர்.
“ஐயோ! என்ன நடக்குது இங்க?” என்று அதிர்ச்சியில், சாரு சத்தம் போட்டாள்.
பாபி, சாருவின் கைப்பற்றி இழுத்து வந்தான்.
காதலர்களிடமிருந்து சற்று தூரமாகக் கூட்டி வந்த பிறகே சாருவின் கையை விட்டான்.
“என்ன பாபி இதெல்லாம்?? நேத்துதான அவ்ளோ அட்வைஸ் பண்ணேன்” என்று சாரு குதித்தாள்!
“உனக்கு ஒன்னு தெரியுமா? நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தாராகிட்ட சொன்னேன்”
‘ம்ம், அப்படியா?’ என்ற கேள்வியுடன் விழிகளை விரித்தாள்.
‘அப்படித்தான்’ என்று பதில் சொல்லி, தலையாட்டினான்.
“நான் போயி…” என்று மீண்டும் போகப் போனவளை, கைப் பிடித்து பாபி நிறுத்தினான்.
“விடு பாபி” என்று மீண்டும் போகப் போனவளிடம், “சாரு நில்லு” என்று பாபி அழுத்திச் சொன்னான்.
அவளும் நின்றாள்.
“தேவா வேற ஒரு பொண்ண, லவ் பண்ற விஷயம் தாராவுக்குத் தெரியாதா??” என்று கேட்டான்.
“தெரியும்”
“தாரா யாரை லவ் பண்றாங்கன்னு தேவாவுக்குத் தெரியாதா??”
“தெரியும்”
“அப்புறமும் ஏன் ரெண்டு பேரும் இப்படி?”
“தெரியலையே பாபி! உனக்குத் தெரியுமா??” என்று கேட்டாள்.
“எனக்கென்னமோ, அவங்களுக்கே தெரியலைன்னு நினைக்கிறேன்”
“புரியற மாதிரி பேசு”
“எனக்குப் புரிஞ்சது ஒன்னுதான்”
“என்னது?”
“இனிமே இதுல நாம தலையிடக் கூடாது… சரியா?”
சரியென்று சொல்லாமல், “தேவா இன்னொரு தடவை தாராவை அழ வச்சாங்கன்னா, நல்லா கேள்வி கேட்பேன்” என்றாள்.
“கேட்கனும்னா ரெண்டு பேரையும் கேளு. அதுதான் நியாயம்”
“லாயர்னு ஃப்ருவ் பண்ற”
“ஆமா” என்றவன், “இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி? வா ஷாப்பிங் பண்ணலாம்” என்று சாருவை அழைத்துச் சென்றான்.
*****
மறுபடியும் பாடல் அலைவரிசைக்கு…
இந்த இரண்டு விடயங்களும் தெரியாமல், காதலர்கள் தங்கள் காதல் உண்டியலை நிரப்பும் வேலையில் இருந்தனர்.
பாடல் முடிந்ததும், செவிப்பேசியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கி வைத்துக் கொண்டே, “இப்போ சொல்லுங்க எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“இப்பவும் சொல்றேன், அனாயிங்தான்! எனக்குப் பிடிக்கவே இல்லை” என்றான் உண்மையாக!
“ஓ ஹோஷ்! நீங்க உங்க லவ்வரை நினைச்சிக்கிட்டே கேட்டுப் பாருங்க!! கண்டிப்பா பிடிக்கும்” என்றாள் உரிமையுடன்!
“எப்படித் தாரா? இந்த சாங் கேட்டா, உங்க நியாபகம்தான் வரும்”
“தேட்ஸ் ட்ரு. தென் டு ஒன்திங்க்! உங்க லவ்வர்கிட்ட கேட்டு, ஒரு சாங் செலக்ட் பண்ணிக்கோங்க” என்றாள் சிரித்துக் கொண்டே!
“சூன்”
“இட் மீன்ஸ்?”
“டு த்ரீ டேய்ஸ்ல, அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிடும்” என்றவன் குரலில் ஓர் நிம்மதி!
“ஒன் சைடு லவ்வா தேவா??!” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டாள்.
“ச்சே அப்படியெல்லாம் இருக்காது. அவளுக்குக் கண்டிப்பா என்னைய பிடிக்கும்” என்றான் எதிர்பார்ப்புடன்!
“ம்ம்ம்!” என்றவளின் தொண்டைக்குள் வலித்தது. “அவங்க ரொம்ப லக்கி இல்லையா?” என்றாள் ஏக்கமாக!
“இல்லை. நான்தான் லக்கி”
“ஐ நோ அபௌட் யூ. ஸோ, தேட் கேர்ள் இஸ் லக்கி” என்றாள் விடாமல்!
“அவளைப் பத்தி எனக்குத் தெரியும். ஸோ ஐ அம் லக்கி” என்றான் விட்டுக் கொடுக்காமல்!!
“ஓகே, மை ஹார்ட்டி விஷ்ஷஸ்”
“எதுக்கு?”
“லவ் சக்சஸ் ஆக”
“ஸடன்னா ஏன்?”
“ஏன்னா, ஐ நோ தி பெயின் ஆஃப் பெயிலியர் தேவா” என்றாள் கழுத்து நரம்புகள் புடைக்க!
சாதரணமாக இருந்தாள். சட்டென்று சரிகின்றாள். இல்லை! அவன் காதலியைப் பற்றிய பேச்சுக்கள், அவளைச் சரியச் செய்தது.
இது, தேவாவிற்குப் புரிந்தது!
ஒரு சிறு நேர மௌனம்!!
“தாரா”
“ஐ அம் ஆல்ரைட்” என்றாள், கிடைத்த மௌன நிலையில் தன்னைச் சமநிலைப் படுத்திக் கொண்டு!
“தாரா… நான் அவாய்ட் பண்ணது தெரியவே இல்லையா?”
“ஏன் தெரியலை? நல்லாவே தெரிஞ்சது”
“அப்புறம் ஏன்?”
“பிளைன்ட் ஹோப்”
“எல்லா விஷயத்திலயும், எவ்ளோ இன்டெலிஜென்ட்டா இருக்கீங்க…”
கண்களைச் சுருக்கிக் கொண்டு, அவனைப் பார்த்தாள்.
“என்கிட்ட மட்டும் ஏன் இப்படி?”
“ஏன்னா, உங்ககிட்ட மனசிலிருந்து பேசுவேன். ஸோ தேட்”
“அப்போ என்கிட்ட பேசறப்ப பிரைன் யூஸ் பண்ண மாட்டிங்களா?” என்று சிரித்துக் கேட்டான்.
“நாட் ஸோ! நீங்க டவுனா பீல் பண்ணா, கன்சோல் பண்ண… நீங்க ஆர்க்யூ பண்ணா, நானும் ஆர்க்யூ பண்ண… இப்படி யூஸ் பண்ணுவேன். அன்ட்… “
“அன்ட்??” என்று சிலாகித்துப் போய் கேட்டான்.
“திஸ் இஸ் மை பெர்சனல் லைஃப்… ப்ரோபோஷனல் லைஃப் கிடையாது” என்றாள் அழகான புன்னகையுடன்!
“ஓ!”
“ஏன் தேவா? நீங்களும் அப்படித்தான? என்கிட்ட பேசுற மாதிரி, உங்க வொர்க் ப்ளேஸ்ல… “
நிறுத்தி விட்டாள்! அப்படியே நிறுத்தி விட்டாள்!! புன்னகையைத் துடைத்துவிட்டு, அவனைப் பார்த்தாள்.
“ஸாரி ஸாரி… ஸாரி தேவா”
“பரவால்ல விடுங்க”
“புரிஞ்சிடுச்சா??”
“ம்ம்ம்! நானும் உங்களை லவ் பண்ற மாதிரி இமாஜின் பண்ணிப் பேசுறீங்க”
“ரியலி ஸாரி” என்றவளுக்கு, அதற்கு மேல் அவனைப் பார்க்க இயலவில்லை. வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
விழிகளில் உப்பு நீர்க் கரைசல் கசியப் பார்த்தது. உடனே அதை உள்ளத்துக்குள் இழுத்துக் கொண்டாள்!
அவளையே பார்த்தபடி இருந்தவன், “என்னைய மறக்க முடியாதா தாரா??” என்று உள்ளத்திலிருந்து கேட்டான்.
அவன் விழி நோக்காமல், ‘முடியாது” என்று ஆழமான ஓர் தலையசைப்பு!
ஒழுங்காய் பேசும் அவளது உதடுகளின் பேச்சை மட்டும் கேட்டவனால், ஓலமிடும் அவள் உள்ளத்தின் ஓசையைக் கேட்க முடிந்தது!
ஓரிரு மௌன நொடிகள்!
போதுமானதாக இருந்தது, தாரா தன்னைச் சரி செய்து கொண்டு, தேவாவைப் பார்ப்பதற்கு!
அவனும் பார்த்தான்!
மீண்டும் அந்த நனைந்த இமைகள்!
ஆனால் இம்முறை அவைகள், அவளின் இஷ்டத்தை நோக்கி, அவன் இதயத்தை ஈர்ப்பது போல் தெரிந்தது.
சட்டென தன் முகத்தை, வேறு பக்கம் திருப்பிவிட்டான்.
அவளும்தான்!
எல்லை மீறிச் செல்ல நினைக்கும் தன் ஒரு தலைக் காதலை எண்ணி, குற்ற உணர்வு வந்தது, தாராவிற்கு!
ஏற்கனவே ஒரு காதல் இருக்கையில், இது என்ன ஈர்ப்பு? என்ற குற்ற உணர்வு, தேவாவிற்கு!
அந்த நேரம், மாலி லேசாகச் சிணுங்கினாள்.
உடனே தாரா தன்னை மீட்டுக் கொண்டு வந்து, மாலியைத் தட்டிக் கொடுத்தாள்.
தேவாவும் சுதாரித்துக் கொண்டு, மாலியைப் பார்த்தான்.
மேலும், தட்டிக் கொடுக்கும் தாராவின் கையிலிருந்த மோதிரத்தைப் பார்த்தான்.
தாராவைச் சமாதானப்படுத்த வேண்டி, சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தான்.
“இதென்ன ரிங் தாரா… ரொம்ப ஓல்டு டிசைனா இருக்கு”
“ம்ம்ம் ஓல்டு! பட் இதுக்குள்ளே இருக்கிற விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுதான் என்னோட இஷ்டம்”
“ஓ!” என்றவன், “நான்கூட, இப்போ ஒரு ரிங் வாங்கினேன்! பார்க்கிறீங்களா? டிஃப்பரென்ட் டிசைன்” என்று கேட்டான்.