ENV-8B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 8(2):

அவன் அவளைப் பார்க்க நன்றாகத் திரும்பி உட்கார்ந்துக்கொண்டான்.

இது ஒரு நேம் சேக் கல்யாணம்ன்னு உனக்குப் புரியாம போய்டுச்சே. உன்னால இந்த ரிலேஷன்ஷிப்ல சந்தோஷமா வாழ முடியம்ன்னு நினைக்கற?”

இரண்டு நாட்களாக ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியவளை எப்படிப் பேசவைக்க என அவன் நினைத்திருக்க, அவளாகப் பேசியதை நினைத்து ஆச்சர்யப்பட்டான்.

அவள் உட்கார்ந்திருந்த தோரணை, அணிந்திருந்த த்ரீ ஃபோர்த் பேண்ட் மற்றும் டி ஷர்ட். தூக்கி முடிந்தக் கூந்தல், சம்மணமிட்டுக் கட்டிலில் உட்கார்ந்திருக்க, அதைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

இது நடந்தா உன் வாழ்க்கைல சந்தோஷம் கிடைக்காதுன்னு நான் முன்னாடியே சொன்னேனே… நீ எப்படி நான் உன்கூட வாழுவேன்னு அவளோ ஈசியா நினைச்ச?”

அவன் பதில் சொல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு கவனித்தான்.

அவனின் செய்கைகள் அவளுக்குக் கடுப்பாக “கழுத்துல தாலி கட்டிட்டா புருஷன் தான் எல்லாம்ன்னு இருப்பேன்னு நினைச்சியா. புருஷனாவது மண்ணாவது… போடான்னு போயிட்டே இருப்பேன் என்றாள் அவனைப் பேச வைக்க…

இப்போது சிரித்தவன் “எப்படி… இந்தக் கல்யாணம் ஆன ஒரு வருஷத்துல டிவோர்ஸ் வாங்கிட்டு போற மாதிரியா பேபி?” நக்கலாகக் கேட்டான்.

அவனின் அலட்சியம் அவளுக்கு எரிச்சலைத் தர “டிவோர்ஸ்ஸா…? ஹாஹாஹா அந்த நினைப்பு வேற இருக்கா மிஸ்டர் அகிலன். நான் கேட்கவும் மாட்டேன். கொடுக்கவும் மாட்டேன் என நிறுத்தி…

கூடவே இருந்து உனக்கு எப்படில்லாம் டார்ச்சர் குடுக்கலாம் யோசிக்கறேன்… என் வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிட்டு, டிவோர்ஸ் வாங்கி… நீ சந்தோஷமா இருக்கலாம்னு நினைப்போ… இனி உன் லைஃப்ல சந்தோஷமே இல்ல

அவள் சொல்லிமுடித்த பின் அவள் மனமோ ‘என்னது சீரியல் டயலாக்லாம் பேசிட்டு இருக்கேன் என யோசிக்க… அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

அச்சோ ஸ்வீட்டி… உனக்கு இந்த வில்லி கெட் அப்’லாம் சத்தியமா செட் ஆகல. ரொம்ப ட்ரை பண்ணாத.” என அவள் மனதைப் படித்தது போல் அதையே சொல்ல…

ஏய். சும்மா ஸ்வீட்டி… பேபின்னு கூப்பிட்டு கடுப்பேத்தாத

ஹாஹா அப்போ ஹனின்னு கூப்படவா ஸ்வீட்டி…” என ரசனையாகச் சொல்லிப் புன்னகைத்து… “எனக்கு மட்டும் என்ன ஆசையா…? வேற ஒருத்தன லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு. ஹ்ம்ம்?”

அன்னைக்கு உன் ஸ்டோரி சொன்னப்ப எப்படியாச்சும் உன்னோட எக்ஸ் லவர் கூட உன்ன சேர்த்து வெச்சுடலாம் நினச்சேன்… ஆனா பாரேன்…” ஒரு நொடி அஜய் அவனுடன் பேசியது நினைவிற்கு வந்து அவன் பேசுவதை நிறுத்த…

எக்ஸ் லவரா?” ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

பின்னே…? இந்த நிமிஷம் அவன் உன்னோட எக்ஸ் லவர் தான். உஷ்ஷ்… நடுல பேசி டைவர்ட் பண்ணாத பேபி

உன் அப்பா உடம்பு சுத்தமா முடியாம, கை எடுத்து கும்பிட்டு என் பொண்ண ஏத்துப்பீங்களான்னு கேட்டப்ப, அத ஒத்துக்கலைனா நான் மனுஷனே இல்ல. அதுனால தான் இந்தக் கல்யாணமே

அவன் கூறுவதும் சரிதான். அப்பா கேட்டதற்குத் தானே சரியென்றான் என்றது அவள் மனம். இப்போது தான் அது அவளுக்கு உரைத்தது.

அப்பறம்… இப்போ அஜய் உன்னோட எக்ஸ் லவர் தான். பிகாஸ் யு ஆர் லீகலி மை வைஃப். அதுக்காக நான் தான் உனக்கு எல்லாமே… கல்லானாலும் கணவன்னெல்லாம் டயலாக் விடமாட்டேன்

அவன் பேசப் பேச “உஃப்ப் என்று பெருமூச்சு விட்டாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “உனக்கு அஜய் கூடத் தான் உன் லைஃப் அமச்சுக்கணும்ன்னு ஆசப்பட்டா, வெல் அன்ட் குட்… அத அப்ஜெக்ட் பண்ணமாட்டேன்…”

சோ இன்னும் மூணு… இல்ல ஆறு மாசம்… இல்ல எவளோ நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ… உனக்கு என்ன வேணும்ன்னு டிசைட் பண்ணு. டிவோர்ஸ் வேணுமா… வாங்கிக்கோ.”

அத விட்டுட்டு சும்மா வில்லி மாதிரிலாம் பேசாத. என் வாழ்க்கைய ஸ்பாயில் பண்றேன்னு சொல்லிட்டு உன் லைஃப் கெடுத்துக்காத பேபி… ஒகே என்றான் மிகவும் சாதாரணமாக.

திருமணம் முடிந்தது… அடுத்து ஏதாவது செய்ய நினைக்கப்போகிறானோ என நினைத்துத்தான் பேச்சை ஆரம்பித்தாள்…

ஆனால் அவளையே முடிவெடுக்கச்சொன்னதைக் கேட்ட கவிதா, அவனையே பார்க்க “என்ன சைட் அடிச்சது போதும் பேபி. அப்பறம் பை சான்ஸ்… என்ன பிடுச்சுப்போச்சுன்னா கூடச் சொல்லிடு… ஐ வில் பி வைட்டிங் …” முடிவாக முடித்தான் கண்ணடித்து.

அவன் கடைசியாகச் சொன்னது காதில் நன்றாக உரைக்க, தலையை உலுக்கிக்கொண்டு “ஓ… உன்ன? நான்? நெனப்பு தான். எனக்குத் தூங்கணும் என்றாள்.

இதெல்லாம் என்கிட்ட கேட்க வேணாம். உனக்குத் தூக்கம் வந்தா தூங்கு என்று மொபைலில் ஏதோ நோண்ட ஆரம்பிக்க, “ஹலோ என்னால கீழலாம் படுக்க முடியாது. ஏன் இங்க ஒரு சோஃபா கூட இல்ல?” என்றாள் அவனைப் பார்க்காமல்.

நான் உன்ன கீழ படுன்னு சொல்லவே இல்லையே. பெட்லயே படுத்துக்கோ… பெட் நல்லா பெருசா தான் இருக்கு. ஐ ஹவ் நோ ப்ரோப்லம் அன்ட் ஐ நோ மை லிமிட்ஸ் என்றான் தோள்களைக் குலுக்கிக்கொண்டு.

அது அதுவும் கேட்காமல் அலட்சியமாக “ப்ச் பட் ஐ ஹவ்… எனக்குக் கீழ படுத்தா உடம்பு வலிக்கும். சோ நான் மேல படுக்கணும்… நீ கீழ படுத்துக்கோ என அவள் சொல்ல…

வாட்… நானா???” என அதிர்ந்தான் அதைக்கேட்டு.

படுக்க முடியுமா? இல்ல நான் ஹால்ல போய்ச் சோபால படுக்கவா???” அவள் அசால்டாகக் கேட்க

க்ராப்…” பற்களைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தவன் “நம்ம அடிச்சுக்கறது வீட்ல எல்லாத்துக்கும் தெரியனுமா?” எனச் சிடுசிடுத்து… கட்டிலிலிருந்து தலையணை மற்றும் போர்வையை எடுக்கப்போனான்.

எனக்கு அந்த பில்லோவும் (pillow) கிடைக்குமா அவள் அவனிடம் கேட்க…

ஏய் என்ன லந்தா? கீழ படுக்கச் சொன்ன ஒகே… டென்ஷன் ஏத்தாம படுத்துரு என கடிந்துவிட்டு கீழே விரித்துக்கொண்டு படுத்துவிட்டான்.

அவளின் செயல்களை நினைக்கும்போது சிரிப்பே வந்தது அவனுக்கு. ‘இவள் இப்படி நடந்துகொள்ளவில்லை என்றால் தான் ஆச்சர்யமே என நினைத்தான்.

பிடிக்காத ஒன்றை முதுகில் கட்டிவைத்து, இனி இதைக் கட்டிக்கொண்டு தான் நீ வாழ்ந்தாகவேண்டும் என்று சாதாரணப் பெண்ணிடம் சொன்னால் சரி என்றிருப்பாள். ஆனால் இவள்…’ புன்னகைத்தான்… அவளை இதற்கு முன் பார்த்த தருணங்கள் நினைவிற்கு வந்தது.

அதே நினைப்புடன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போது, திடீரெனச் சத்தம் கேட்டு அதிர்ந்து எழுந்து உட்கார்ந்தான்… அவன் கண்கள் அனிச்சையாகத் திரும்பியது கவிதாவிடம்!!!

———இன்று———

அன்று நடந்தது இன்று நினைத்தாலும் கவிதாவின் முகம் புன்னகையை உதிர்த்தது.

அவள் நினைத்ததுபோல் இரு நாட்களும் வேகமானாக நகர்ந்தது.

அகிலனின் நிறுவனம், துபாயில் இருக்கும் கட்டுமான நிறுவனத்துடன் புதிய ப்ராஜெக்ட் ஒன்று கையொப்பமானதால் நடக்கும் சின்னப் பார்ட்டி.

அவன் நிறுவனத்திற்காக வேலை செய்யப்போகும் ஆட்கள் மற்றும் அங்குத் தெரிந்த நண்பர்களுடன் நடக்கவிருக்கும் அந்த பார்ட்டிக்கே கவிதா செல்லவிருந்தாள்.

அந்த ஹோட்டலின் மேல்மட்டத்தில் இருக்கும் அழகிய திறந்தவெளி பஃபே (Buffet) கலைக்கட்டியிருந்தது. ஆங்காங்கே சன்னமாக ஏற்றப்பட்ட மின் விளக்குகள் அதனுடைய வேலையைச் செய்ய, அந்த இடமே ரம்மியமாக இருந்தது.

அகிலனின் குழு ஒருபுறமிருந்தாலும், மற்ற வெளி ஆட்களும் இருந்தனர். அவன் அவளுக்காக முதன்முதலாக வாங்கித்தந்த புடவையைக் கட்டிக்கொண்டு கண்கள் நிறைய ஆசையுடன் அந்தத் தளத்திற்கு வந்தாள்.

மிதமான ஒப்பனை. அந்த மங்கிய ஒளியில் கூட அவள் முகத்தில் மந்தகாசம் தவழ்ந்தது.

பேரழகி என்று சொல்லுமளவிற்கு அழகி இல்லை என்றாலும்… சுண்டினால் சிவக்கும் அளவிற்கு நிறம் இல்லையென்றாலும், ஒருமுறை பார்த்தல் திரும்பிப் பார்க்கத் தூண்டும் ஏதோ ஒன்று அவளிடம் எப்போதுமே இருக்கும்.

அவளின் உடற்கட்டா? இல்லை நிமிர்வா? இல்லை அனுகுமுறையா? இல்லை எப்போதும் நேராக ஒருவரின் கண்ணைப் பார்த்து பேசும் குணமா? தெரியவில்லை.

அவள் அந்த இடத்திற்குள் செல்ல, அவள் கண்களில் முதலில் பட்டது, தூர நின்றுகொண்டிருந்த லயா.

அவளுடன் யாரோ பேசிக்கொண்டிருக்க, யோசனையுடன் அவளை நெருங்கும்போது, “கவிதா என்ற குரல் அவளை நிறுத்தியது. திரும்பினாள். அங்கே அஜய். புன்னகை தவழ்ந்த முகத்துடன்.

ஓ… லயா இவனப்பார்க்க வந்துருக்கா…’ என கவிதா நினைத்துக்கொள்ள…

அவள் அருகே அஜய் வர, “ஹே அஜய் என புன்னகைத்தாள்.

ஒருவேளை AJ என்பவன் அஜய் இல்லாமல் வேறு யாராவதாகக்கூட இருக்கலாம் என்ற யோசனையும் அவளுக்கு முன்பு வந்தது. ஆனால் இப்போது அஜய் தான் என நம்பினாள்… அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு லயா புறம் திரும்பினாள்.

அதே சமயம் லயாவும் அவளுடன் பேசிக்கொண்டிருந்தவனும் கவிதா புறம் திரும்ப…… அதைப் பார்த்த கவிதா, அதற்கு மேல் நடக்கமுடியாமல் அப்படியே நின்றுவிட்டாள். அங்கே லயாவும் அகிலனும்…

AJ” என்பது யார் எனப் புரிய… அதுவரை மிளிர்ந்த கவிதாவின் கண்கள், திடீரெனத் திரண்ட கண்ணீரால் மின்னியது.

லயாவும் அகிலனும் கவிதாவைப் பார்க்க, அகிலனின் கண்கள் அவளைப் பார்த்த அடுத்த நொடி, பக்கத்தில் இருந்த அஜயின் மீது நிலைத்தது!!!