EUTV 14

‘எவ்வளவு ஆழமான கட்டுக்கோப்புகளுடன் இருப்பவனாகயிருந்தாலும் காதல் என்கின்ற பகுதியில் அற்பமாகிதான் போகிறான் அல்லவா! இந்த காதலுக்கு தான் எத்தனை வல்லமை.’

மேரே ஹாத் மெய்ன் தெரா ஹாத் ஹோ சாரே ஜன்னத்தென் மேரே               சாத் ஹோ

த்து ஜோ பாஸ் ஹோ பிர் க்யா யே ஜஹான் தெரே ப்யார் மெய்ன் ஹோ ஜாஉன் ஃபனா

மேரே ஹாத் மெய்ன் தெரா ஹாத் ஹோ சாரே ஜன்னத்தென் மேரே               சாத் ஹோ

த்து ஜோ பாஸ் ஹோ பிர் க்யா யே ஜஹான் தெரே ப்யார் மெய்ன் ஹோ ஜாஉன் ஃபனா

மேரே ஹாத் மெய்ன் தெரா ஹாத் ஹோ சாரே ஜன்னத்தென் மேரே               சாத் ஹோ

ஜித்னே பாஸ் பாஸ் காவொன் கே நசர்

உத்னி பாஸ் த்து ரெஹனா ஹம்ஷபர்

த்து ஜோ பாஸ் ஹோ பிர் க்யா யே ஜஹான் தெரே ப்யார் மெய்ன் ஹோ ஜாஉன் ஃபனா

      ஹென்ட் கிரிக்கெட்டில் தோற்றதால் ரிஷிபனின் ஆணைக்கிணங்க அமீர் மற்றும் கஜோல் காதலில் உருகிய பாடலில் வரும் பெண்வரிகளை பாடிக்கொண்டிருந்த மலர்விழியை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கணிதன்.

அந்த நாள் முழுவதுமே விளையாட்டு சாப்பாடு என்றே கழிந்து விட்டிருந்தது. குலுக்கு சீட்டு என்னும் அந்த விளையாட்டை விளையாடியே வீரேந்திரன் கணிதனை தவிர அனைவரையும் தன் வலையில் விழ வைத்திருந்தாள் மலர்விழி.

ரிஷிபனும் விஜயும் மலர்விழியுடனே ஐக்கியமாகி விட்டிருந்தனர். எதற்கெடுத்தாலும் ‘ஏய் கிளி…’தான் அவர்களுக்கு. இருவரும் சேர்ந்து மலர்விழிக்கு வைத்த பட்டப்பெயர் தான் கிளி. பெயர்காரணம் என்னவென்றால் அவளது கிச் கிச் குரல் மற்றும் கூர்மையான மூக்கு தானாம்.

“ஹான் முடிஞ்சு…” என்று மலர்விழி கூறவும் விஜய்,ரிஷி,ஆகாஷ் மூவரும் கைதட்டியே ஒய்ந்து விட்டனர்.

“கணி ப்ரோ சொன்னப்ப கூட நாங்க நம்பல கிளி. டிவில பார்க்கும் போதும் கூட ரிக்கார்ட் பண்ணினதுக்கு வாய் அசைச்சு சீன் போடுறீயோன்னு நினைச்சேன். பட் நேர்ல இந்த கிளைமேட்ல உன் குரல் ஜஸ்ட் வாவ் பேப்… யுவர் வாய்ஸ் இஸ் கிப்ட்டடு (your voice is gifted) கோ கேர்ள்… இந்த இந்தியன் இண்டஸ்டீரில நீங்காத இடம் இருக்கு உனக்கு…” என்று ரிஷிபன் மனம்திறந்து பாராட்ட அனைவருக்குமே ரிஷிபனின்  வார்த்தைகள் தான் தோன்றியது. அப்படியான குரல் அவளுக்கு.

பிரபஞ்சம் என்னும் அண்டவெளியில் போக்கிடம் இல்லாது அலைந்துக் கொண்டிருக்கும் உயிர்களை நானிருக்கிறேன் என்னிடம் இளைப்பாறு என்று அழைத்து உருகவைத்து காணாமல் கரைந்து போகச்செய்யும் குரல் மலர்விழியுடையது.

கணிதன் அசையாது அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனம் முழுவதும் இந்த மலர்விழி என்ற பெண்ணிற்கு ஏன் தன்னை பிடிக்கவில்லை என்ற எண்ணம் தான் ஒடிக்கொண்டிருந்தது.

இந்த எண்ணங்கள் சீக்கிரம் தன்னை வேட்டையாட போகிறது என்பது அவனுக்கே புரிந்து தான் இருந்தது. அவளிடம் இருந்து அவனுக்கு தேவை விடுதலை மட்டுமே. அது கிடைக்குமா அல்லது அவளுடனே பிணைய போகிறானா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்…

தன்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த கணிதனை ஒரு பார்வை பார்த்தவள் ரிஷிபன் மற்றும் விஜயிற்கு நன்றி கூறிவிட்டு எப்பொழுதும்  போன்று பேச ஆரம்பித்துவிட்டாள்.

இப்படியே ஒரிரு நாட்கள் சென்றிருக்க மழை ஆரம்பித்த நாளைப்போன்றே சிறிதளவு கூட குறையாமல் இன்னுமே பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. வீட்டில் இருந்த உணவு பொருட்கள் அதிகளவு தீர்ந்துப் போயிருந்தன. இத்தனைக்கும் கணிதன் செய்திகளில் புயல் வரப்போகிறது என்றவுடனே அனைத்தையும் வாங்கி சேமித்திருந்தான். ஆனால் அவன் வாங்கியதோ இருவருக்கு தேவைக்கு அதிகமான பொருட்கள் ஆனால் இங்கு இருப்பதோ ஏழு நபர்கள் என்னவென்று தாக்குபிடிக்கும். என்ன என்னமோ அட்ஜஸ்ட் செய்து ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.

அன்று காலைஉணவாக உப்புமா செய்திருக்க அங்கிருந்த அனைவரையும் மனதிலே வறுத்தெடுத்தவாறு பெயருக்கு சிறிது சாப்பிட்டு முடித்தாள் மலர்விழி.

தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று தந்தையுடன் பேசலாம் என்று நினைத்தவாறு மேலே சென்றவளுக்கு படிகளில் ஏறும் போது அங்கிருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்த மிகப்பெரிய புகைப்படம் கண்களை கவர்ந்தது.

எப்பொழுதுமே கண்டும் காணாமல் தான் செல்வாள். ஏனோ இப்பொழுது  இவர்களுடன் நெருக்கமாகிவிட்டதால் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த புகைப்படம் ஜோசப் சகோதரர்களின் புகைப்படம். இப்படம் எடுத்து எப்படியும் குறைந்தது பதினைந்து வருடங்களாவது இருக்கும்.  ஐவரில் இளையவனான ரிஷிபனை கணிதன் மற்றும் வீரேந்திரன் ஒரு புறம் கைகளை பிடித்தும் ஆதித்யன் மற்றும் விஜயேந்திரன் ஒரு புறம் கால்களை பிடித்தும் அவனை அந்த மிகப்பெரிய நீலக்கடலில் தூக்கி ஏறிய ஆயத்தம் ஆன அந்தநொடியை அந்த புகைப்படகருவி பிடித்து இப்படி ஒரு பிரமாண்ட புகைப்படமாக்கி இருந்தது.

மிக எதார்த்தமாகவும் அழகாகவும் இருந்தது அந்த புகைப்படம். உதட்டில் உறைந்த புன்னகையுடன் அந்த புகைப்படத்தை நோக்கி கொண்டிருந்தாள் மலர்விழி.

புகைப்படத்தை மிகுந்த சுவாரசியத்துடன் கவனித்துக்கொண்டிருந்த காரணத்தால் மலர்விழிக்கு தனக்கு மிக அருகில் வந்து நின்றிருந்த கணிதனை கவனிக்க தவறிவிட்டிருந்தாள்.

“ம்ஹ்ம்…” என்ற கணிதனின் செருமலில் அரண்டு விட்டாள் மலர்விழி.

அடியாத்தி என்று பதறியவாறு தான் நின்றிருந்த படியிலிருந்து கால் நழுவி கீழேவிழப்போக ஆண்டாண்டு காலமாக பார்த்து படித்து நமது மூளையிலே இன்பில்ட்டாக ஸ்டோர் ஆகிப்போயிருந்த ரிப்ளக்ஸ் ஆக்சனான, அவளது கையை பிடித்து உதவாமல் அவளது இடையை சுற்றி பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்தணைத்து மலர்விழியை நிலை நிறுத்தினான் கணிதன்.

மலர்விழி தனது முட்டைகண்களை இன்னும் பெரிதாக விரித்து தன்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றிய கணிதனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

மலர்விழியின் மீதிருந்த கரங்களை விலக்காமல் என்னவென்பதைப்போன்று கணிதன் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

“இப்படி தான் திடீர்ன்னு வந்து பயமுறுத்துறதா?”

“நான் என்ன மந்திரம் போட்டா திடுதிப்புன்னு வந்தேன். என் ரூம்ல இருந்து ஒவ்வொரு படியா இறங்கி வந்துட்டு இருந்தேன். நீ தான் சுற்றுப்புறத்தை கவனிக்காமல் அந்த போட்டோக்குள்ளயே போய் உன் ஃபிரண்டை எங்க கையில இருந்து காப்பாத்த போற மாதிரி பார்த்துக்கிட்டு இருந்த?”

“ஹான். நான் அதெல்லாம் நினைச்சு பார்க்கலை. நீங்க எப்படி இவ்ளோ மொக்கையா இருந்து இப்ப இப்படி ஆகிருக்கன்னு பார்த்துட்டு இருந்தேன்.” இதுவும் உண்மை தான். அந்த புகைப்படத்தில் சிகப்பு நிற டீசர்ட் அணிந்து நெடுநெடுவென்று மிகவும் ஒல்லியாக எதோ உடைந்து விடுபவனைப்போன்று இருந்த கணிதன் எப்படி ஜக் வகையாறாவில் இருந்து ஜில் வகையாறாவிற்கு வந்தான் என்பதை தான் நினைத்தவாறு நின்றிருந்தாள்.

எப்பொழுதும் போன்று மூளைக்கும் வாய்க்கும் இடையில் உள்ள வடிக்கட்டி சரியாக வேலை செய்யாததால் உளறியிருந்தாள் மலர்விழி.

அவளது பதிலில் ஏனோ கணிதனுக்கு உல்லாசமாக இருந்தது. இவன் கல்லூரியில் பணிப்புரிந்தபோது இப்படியெல்லாம் இவள் பேச  கேட்டிருக்கிறான். அதற்கு பிறகு இப்பொழுது தான் பேசுகிறாள் அல்லவா. கணிதனுக்கு குளுகுளுவென்று இருந்தது.

லேசான உதடு வளைந்த சிரிப்பை உதிர்த்தவன் தனது கரங்களில் இருந்து அவளது மெல்லிடையை இன்னும் அழுத்தி தன்னோடு இழுத்தவாறு “எல்லாரும் உன்னை மாதிரியே அட்டு பிகராவே இருக்க முடியுமா? சொல்லு” என்று கணிதன் சிரிப்புடன் வினவினான்.

முதலில் அவனது அழுந்திய பிடிப்பில் எதுவோ உள்ளுக்குள் உடைவதை போன்று உணர்ந்தவளுக்கு அவனது வார்த்தைகள் கோவத்தை உருவாக்க கணிதனை அப்படியொரு முறை முறைத்தாள்.

“இவ்ளோ பெரிய கண்ணை வைச்சு உருட்டி உருட்டி முறைச்சா நாங்க பயந்துருவோமா?”

“அப்ப பயப்படலைன்னு சொல்றீங்களா? இல்லை உங்களை பயமுறுத்தவே முடியாதுன்னு சொல்றீங்களா?” மலர்விழிக்கும் இத்தனை வருடங்களில் காணாத இந்த இலகுவான கணிதனை பிடிக்க அவளும் அவனுடன் வாயாடினாள்.

தன் கரங்களில் இருந்தவளை தன்னுடன் ஒரு சுழற்று சுழற்றி புகைப்படமிருந்த சுவறில் சாற்றி நிறுத்தினான். கரங்கள் இன்னும் மலர்விழியின் இடையிலிருந்து அகலவில்லை.

அவளது கண்களுக்குள்ளே சென்று விடுபவனைப்போன்று கூர்மையாக பார்த்தவன் “இப்ப பயப்படலைன்னு தான் சொன்னேன் மலர்விழி. எப்பயுமே இல்லை. யூர் தி வொர்ஸ்ட் நைட்மேர் இன் மை லைப். தட் டே… ஒவ்வொரு நாள் கனவுலயும் வருது…”

அவனது பதிலில் என்ன சொல்வது என்று தெரியாமல் கணிதனை திகைத்து மலர்விழி பார்த்தாள். அவளுக்கு இதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்றே தெரியவில்லை. கணிதனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளை என்றால் குறிப்பாக அவளது பிளந்த வாயை தான் பார்த்துக்கொண்டிருந்தான். எண்ணங்கள் எங்கேங்கோ சிறகடித்து சென்று கொண்டிருந்தது. கற்பனைகளின் சிறகுகள் அவனுக்குள் நீண்டு விரிந்தன. மனம் ஊமத்தம் கொள்ள ஆரம்பித்தது. மோகம் என்னும் வலையில் விழுந்தான் கணிதன்.

கணிதன் மலர்விழியை நோக்கி குனிந்தான். சில மில்லிமீட்டர் இடைவேளை தான் மலர்விழியின் இதழுக்கு… நெருங்க போகிறான். இதோ கொள்ளையிட போகிறான்.

“கணி…!” என்ற அதிர்ந்த குரலில் சுயநினைவுக்கு வந்தவன் குரல் வந்த திசையை நோக்கினான். இவர்கள் இருவரும் நின்ற படிகளுக்கு நான்கு படிகளுக்கு கீழ் வீரேந்திரனும் ஆகாஷீம் நின்றிருந்தனர்.

தன்னை சமாளித்துக்கொண்டவன் என்னவென்று தலையசைத்துக்கேட்க வீரேந்திரன் கண்களாலே கணிதன் கரம் இருந்த இடத்தை சுட்டிக்காட்டினான்.

வீரேந்திரன் சுட்டிகாட்டிய பிறகு தான் மலர்விழிக்கு தான் நிற்கும் நிலையே உறைத்தது. கணிதன் அவளை விட மலர்விழியும் அவனிடமிருந்து தள்ளி நின்றாள்.

வீரேந்திரனுக்கு அருகில் நின்றிருந்த ஆகாஷை பார்த்த கணிதனுக்கு சிரிப்பு வரும்போன்று இருந்தது.

‘என்னங்கடா நடக்குது இங்க? ஆம் ஐ ஜோக் டூ யூ?’ என்பதைப்போன்று அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஆகாஷ்.

ஆகாஷிற்கும் மலர்விழிக்கும் இடையில் நட்பை தாண்டி ஒன்றுமில்லை என்பதை ஆகாஷின் மூலம் நேற்று இரவு தான் சகோதரர்கள் ஐவரும் அறிந்திருந்தனர்.

ஆகாஷின் தந்தை நாச்சிமுத்து திருநெல்வேலியில் பரம்பரை பணக்காரர். அரசியல் செல்வாக்கு ஆள்பலம் பணபலம் என்று அனைத்துமே ஒருங்கே அமையப்பெற்றவர். ஆதித்யனின் கட்சிக்கு எதிர் கட்சி அவர்.

அவரது ஒரேஒரு மகன் தான் ஆகாஷ். ஆகாஷின் அத்தை பெண் தான் பாரதி. பாரதியின் மூலம் தான் மலர்விழி இவனுக்கு பழக்கம். பள்ளிப்படிப்பை முடித்தவுடனே கல்லூரி படிப்பிற்கு அமெரிக்கா சென்றவனுக்கு அங்கிருக்கும் வாழ்க்கை முறை பிடித்துபோய்விட அங்கேயே ஐக்கியமாகி விட்டான்.

கல்லூரி படிப்பு முடிந்தும் இந்தியா வரவில்லை. பெற்றோர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியா பக்கம் வராமல் அங்கேயே ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து சம்பாதித்து உல்லாச வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டான்.

அப்பொழுது அங்கு கல்லூரி தோழியாக அவனுக்கு பழக்கமானவள் தான் ரேச்சல் கீரின். மிகவும் அழகிய வெள்ளைக்கார பெண். மிகவும் வசதியான வீட்டு பெண்ணும் கூட.  ஒரே வகுப்பில் படித்த போது வராத ஈர்ப்பு கல்லூரி முடிந்து ஒரு நண்பர்களின் கெட் டூ கெதரில் வந்தது. காதலா என்றால் அப்படி அறுதியிட்டு சொல்லி விட முடியாது.

 இருவருக்கும் அடுத்தவரின் இருப்பு  பிடித்து போய்விட சில வருடங்களுக்கு முன்பிருந்து நோ ஸ்ட்ரிங்க்ஸ் அட்டாச்டூ முறையில்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு கட்டற்று சென்றுக்கொண்டிருந்த வாழ்க்கையில் தான் வேகதடைப்போன்று ஒரு செய்தி வந்தது.

 இரு வாரத்திற்கு முன்பு ஆகாஷின் தாயிற்கு உடல்நிலை சரியில்லை மிகவும் சீரியசாக இருக்கிறார் என்று பல்வேறு நாடகங்கள் போட்டு குடும்பமே சேர்ந்து நடித்து ஆகாஷை இங்கு வரவழைத்திருந்தனர்.

தாயை பார்க்க வந்தவனுக்கு திருமணம் என்று கூற ஒய்ந்து போனான். அவர்களிடம் என்னவெல்லாமோ சொல்லி பார்த்தும் அவர்கள் மனமிறங்காமல் ஒரு அக்மார்க் குடும்ப குத்துவிளக்கிடம் அதுவும் இப்பொழுது தான் அந்த பெண் கல்லூரி மூன்றாம் வருடமே படிக்கிறது அப்படிப்பட்ட பச்சிளம் குழந்தையிடம் அவனை மாட்டிவிட பார்த்தனர்.

அந்த பெண்ணிடம் தன்னுடைய வாழ்க்கை முறை பற்றிக்கூறினால் தெறித்து ஒடிவிடுவாள் என்று நினைத்து கொண்டு பேச சென்றால் அங்கு இவனின் நிலையை விட அந்தப்பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருந்து தொலைத்தது.

மணப்பெண் இவனை விட பாவமாய் எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை நிற்பாட்டுங்க நான் வேறு சமூகத்தை சேர்ந்தவனை காதலிப்பதால் உங்களுக்கு கட்டிவிட பார்க்கின்றனர் தயவுசெய்து திருமணத்தை நிறுத்துங்கள் என்று வீட்டு காவலில் இருக்கும் இவனிடம் கதற ஆகாஷ் நொந்தே போனான்.

பாரதி ஆகாஷீடன் மிகவும் நெருக்கம் என்பதால் அவர்கள் குடும்பம் போட்ட எந்த நாடகமும் அவளுக்கு தெரியாமலிருக்க அவளை ஒரு மாதம் குடும்ப தொழிலில் பிரச்சினை என்று சரியாக சிக்னல் கூட கிடைக்காத அவர்களது நிலக்கிரி எஸ்டேட்டுக்கு அவளது கணவன் இரண்டுவயது குழந்தையுடன் பார்சல் செய்து அனுப்பிருந்தனர்.

பாரதி வந்தப்பொழுது இன்னும் இரண்டுநாளில் ஆகாஷிற்கு திருமணம் என்ற செய்தி கூறப்பட அதிர்ந்தாள். அவளுக்கு தெரியும் ஆகாஷின் லீவ்விங் வாழ்க்கை எல்லாம். ஆகாஷிடன் பேச கூட அவளுக்கு அத்தனை தடை. அனைத்தையும் உடைத்து ஆகாஷிடன் பேச சென்றால் அவன் அனைத்தையும் கூற அதிர்ந்துவிட்டாள்.

வேறு நபர்களை விரும்பும் இருவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பதால் இவர்கள் என்னத்தை சாதித்து விடப்போகிறார்கள். அட லூசு பயலுகளா என்று வாய்விட்டு புலம்பியவள் தனது கணவனுக்கு கூட தெரியாமல் என்ன செய்ய முடியும் என்று யோசித்தாள்.

 அப்பொழுது அவளது சிந்தனையில் முதல் வந்தவள் தான் மலர்விழி. மலர்விழிக்கும் ஆகாஷ் நல்ல பழக்கம் என்பதால் அவளை அழைத்து உதவி கேட்டாள் பாரதி.

 தன்னை மாதிரி ஒரு ஜீவன் என்று ஆகாஷின் மீது அனுதாபப்பட்ட மலர்விழி அவனை கேரளாவிற்கு அழைத்துவர திட்டமிட்டு அவளது நண்பர்களுடன் உதவியுடன் ஆகாஷை இங்கு கூட்டி வந்தாள்.

அதற்கு பின்பு நடந்தது தான் அனைவருக்குமே தெரியுமே…

ஆகாஷின் கிளை கதையை கேட்டபின்பு ஏனென்றே தெரியாமல் ஜோசப் சகோதரர்கள் ஐவருக்குமே ஒரு விடுதலை உணர்வு எப்படி சொல்வது எதுவோ இத்தனை நாளாக அடைத்த உணர்வு விடுப்பட்டது போன்று இருந்தது.

அதன்பிறகு விஜயும் ரிஷியும் இன்னும் நெருங்கினர் மலர்விழியுடன்.