EUTV 16

EUTV 16

                                                16

“அம்மாஆஆஆ…” என்ற அலறலில் மலர்விழியை பார்த்தவனுக்கு தனது தவறு புரிய, தனது தலையெழுத்தை நொந்தவாறு நெற்றியில் அறைந்த கணிதன் அவளை தூக்க குனிந்தான்.

“யோவ் பைத்தியம்… என்னை ஏன் டா தள்ளி விட்டு தொலைச்ச? ஐய்யோ இடுப்பு எலும்பு உடைச்சிடுச்சுன்னு நினைக்குறேன்… வலி உயிர் போகுதே… சனியனே என்னத்த இப்படி பார்த்துட்டு இருக்க? தூக்கி விட்டு தொலை…” என்று மலர்விழி கத்த கணிதனுக்கு எவ்வளவு முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

கவுத்த போட்ட கரப்பான் பூச்சியை போன்று எழ முடியாமல் கதறிக்கொண்டிருந்தாள் மலர்விழி…

“ஹா ஹா ஹா… ஐ ஆம் சாரி… ஹா ஹா ஹா… சோ பன்னி…” என்றவாறு சிரித்துக்கொண்டே அவளது வலக்கரத்தை பிடித்து தூக்கி நிறுத்தினான்.

இவனை எண்ணெயில் போட்டு சிக்கன் 65 மாதிரி பொறித்து எடுக்கலாமா? இல்லை இட்லி குண்டானுக்குள் வைத்து இட்லி மாதிரி வேக வைத்து எடுக்கலாமா என்பதைப்போன்று மலர்விழி கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன பார்வை வா…” என்று கைதாங்கலாக அழைத்துச்சென்றவன் கட்டிலில் அமரவைத்தான். அவளோ அமர முடியாமல் படுத்துக்கொண்டாள்.

“ஹே என்ன செய்யுது? என்ன செய்தாலும் உன் ரூம்க்கு கிளம்பு…” என்று விரட்டினான்.

மலர்விழிக்கோ பொல்லாத கோவம் வந்தது. இவன் தன்னை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான். இவனாக என் சம்மதமில்லாமல் முத்தமிட்டான். பிறகு எதற்கென்று தெரியாமலே ரெமோவில் இருந்து அன்னியனாக மாறி கீழே தள்ளிவிட்டு இடுப்பையும் உடைத்துவிட்டு, நல்லகுடி நாணயம் மாதிரி அம்பி மோடுக்கு வந்து கூட்டி வந்து இங்கே உட்காரவைத்துவிட்டு கிளம்பு என்கிறான். ஆம் ஐ ஜோக் டூ யூ கணிதன்?

“என் இரண்டு கேள்விக்கு விடை தெரிஞ்சா தான் நான் இந்த ரூம்ல இருந்து கிளம்புவேன்?”

“ஹா ஹா ஹா… என்னோட பல கேள்விகளை உங்கிட்ட கேட்கவே எனக்கு உரிமையில்லாத போது உன்னோட இரண்டே இரண்டு கேள்விக்கு பதில் சொல்லனும்ன்ற அவசியம் எனக்கு கிடையாது… வெட்டி பேச்சு பேசாம முதல் என் ரூம்ல இருந்து வெளிய போ… என் பிரதர்ஸ் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே மூக்கு வேர்த்ததைப் போன்று, இவளை மட்டும் கண்டுப்பிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருந்த ஆகாஷ், விஜய், ரிஷி மூவரும் அறைக்குள் நுழைந்திருந்தனர்.

கட்டிலில் படுத்திருந்த மலர்விழியையும் அவளூடன் கோவமாக பேசிக்கொண்டிருந்த கணிதனையும் மூவரும் ஒரு மாதிரியாக பார்த்தனர்.

கணிதனுக்கோ ஐய்யோ என்றிருந்தது. ஆனால் மலர்விழிக்கு அப்படி ஒன்றும் இல்லை போன்று.

“உங்களை யாரு கேள்வி கேட்க வேண்டாம்ன்னு சொன்னா? உங்க மனசாட்சிக்கே தெரியும் எங்கிட்ட கேட்குறதுக்கு உங்ககிட்ட ஒன்னுமே இல்லைன்னு…”

“மலர்விழி அமைதியாயிரு…” ஆகாஷ்

“நான் ஏன் அமைதியா இருக்கனும். உனக்கு ஒண்ணும் தெரியாது ஆகாஷ். இந்த கல்யாணத்தை நிற்பாட்டிருங்கன்னு எத்தனை தடவை கெஞ்சியிருப்பேன் தெரியுமா? ஒரு தடவை கூட காதுக் கொடுத்து கேட்கலை, கார்னர் பண்ணி எனக்கு வேற வழியே இல்லாம என்னை ஒட வைச்சது இவன் தானே… இவங்களுக்கு மட்டுமா அசிங்கம். எங்களுக்கும் தானே…”

“ஷட் ஆப் இடியட்…” என்று கணிதன் கோவத்தை அடக்கிக்கொண்டு வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அந்த அறையிலிருந்த மூவருக்கும் மிகவும் பயமாக இருந்தது. என்னவாக போகிறதோ என்று. விஜய் ரிஷிக்கு கண்ணை காட்ட அவன் போய் ஆதியை அழைக்கச் சென்றிருந்தான்.

விஜய் கணிதனை அமைதிப்படுத்துவதற்காக அவனை நெருங்கி நின்று வலக்கரத்தை பிடித்துக்கொண்டான். விஜயிற்கு தெரியும் இப்பொழுது எதாவது அமைதிப்படுத்துவதை போன்று பேசினால் அவ்வளவு தான். சலங்கை கட்டிவிட்டதைப்போன்று ஆகிவிடும் ஆடி தீர்த்துவிடுவான். அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“யாரு நான் இடியட்டா? நீ தான் பெரிய இடியட். உன்னோட எல்லாம் எனக்கு தெரியும்ன்ற லார்ஜர் சைஸ் மேல் ஈகோவால தான் இவ்வளவும்ம்…” என்று மலர்விழி கத்த கணிதனுக்கு பொத்து கொண்டு வந்தது.

“ஹாஹாஹா… கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்ல வந்தவ தான் அப்படியே ஆளை முழுங்குற மாதிரி பார்ப்பாங்களா? எனக்கு தெரியாதே?”

“அழகா இருந்தா பார்க்க தான் செய்வாங்க. உன்னை ஏன் டா அப்படி பார்த்தேன்னு நான் பீல் பண்ணாத நாளே இல்லை. இவ்வளவு வயசு ஆகியும் வெறும் சைட் ஏது? லவ் ஏது? ன்னு உன்னால கண்டுபிடிக்க தெரியல பார்த்தியா?” என்று மலர்விழி நக்கலாக கூறியிருக்க கணிதன் மலையேறிருந்தான்.

“oh my god! யூ ஆர் ஜஸ்ட் அ வேஸ்ட் ட்ராஷ் இன் மை ப்ளடி லைப்…” என்று மூச்சு வாங்க ஆத்திரத்தில் கத்தினான் கணிதன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கணிதனுக்கு தன் மீதே கோவம் கோவமாக வந்தது. தன்னுடனான திருமணத்தன்று வேண்டாம் என்று ஒடியவளுடன் இப்படி ஒரு ஆசை, காதல், காமம் இன்னும் தேவையா என்று… தன் உடலும் மனதும் ஏன் இவ்வாறு தறிக்கெட்டு அலைகிறது என்பது அவனுக்கே புரியாத ஒன்றாக இருந்தது.

கணிதனுடைய வார்த்தைகளில் மலர்விழிக்கு சொல்லில் விளக்க முடியாத கோவம் வந்தது.இவ்வளவு நேரம் இடுப்பு வலியால் கட்டிலில் சாய்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தவள் தற்போது எழுந்து நின்றிருந்தாள். கிஸ்ஸடிக்கும் போது தெரியவில்லையா என்பதைப் போன்று எந்த எண்ணத்தில் இப்படி செய்திருப்பான்?

“ஓஹ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் பர்மிஸன் இல்லாம என்னை கிஸ்ஸடிச்ச அப்ப தெரியலையா நான் ஒரு வேஸ்ட் ட்ராஷ்ன்னு யூ ப்ளடி இடியட்…” என்று மலர்விழி கத்தவும், அறைக்குள் ரிஷி, ஆதி, வீர் நுழையவும் சரியாக இருந்தது.

ஐவருக்கும் இது புது தகவல். என்னடா நடக்குது? என்பதைப்போன்று இருந்தது. பிடிக்கலை பிடிக்கலைன்னு  சண்டை போடுறானுக. கிஸ்ஸூம் அடிச்சுக்கிறாங்க… 

“ஏதே என்னமோ உன்னை நான் அப்யூஸ் பண்ண மாதிரி பேசுற.. யூ என்ஜாய்டு தட் பி…” என்று அவளை அசிங்கமாக சொல்ல வந்தவன் மலர்விழியின் அதிர்ந்த முகத்தினை பார்த்து  தனக்குள்ளேயே நிறுத்திக்கொண்டான்.

ஆதித்யாவிற்கு என்னவோ போன்று ஆகிவிட்டது. தங்களுடன் இத்தனை நாள் இருந்த பெண்ணை போய்…

“கணி… வெளியே போ…”

ஓரு நொடி மலர்விழிக்கு  உலகமே நின்று சுற்றுவதைப்போன்று தோன்றியது. என்ன வார்த்தை சொல்ல வந்துவிட்டான். அந்த வார்த்தை அவளுக்கு பிரச்சினையில்லை. அதை சொல்ல வந்தவன் தான் பிரச்சினையாகி போனது. கணிதன் அவளின் இரகசிய காதலன். முதல் மற்றும் கடைசி கிரஷ். அவனைப்போன்று இதுவரை யாருமே அவளை கவர்ந்தது இல்லை என்று தான் கூற வேண்டும்.

இங்கு எது பிரச்சினையென்றால் கணிதனை மலர்விழி தன்னுடைய கிரஷ் மட்டும் என்றே நம்பிக்கொண்டிருந்தது தான் .

“என்ன சொல்ல வந்த சொல்லு? பி### நான்…” என்று கூறியவள் அவனது வலநெஞ்சில் சட்டென்று இருகரங்களால் வலிக்க ஒரு அடி அடித்தவள் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆகாஷீடன் அந்த வீட்டை விட்டும் வெளியேறிருந்தாள்.

யாராலும் அவளை நிற்பாட்டவே முடியவில்லை. இத்தனைக்கும் காரணமான கணிதன் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. யாருக்கு வந்த விருந்தோ என்று தனது அறையிலே அடைந்துக்கொண்டான். ஒவ்வொரு முறையும் அவளிடம் மிகவும் கேவலமாக தோற்றுக் கொண்டிருப்பதை போன்று தோன்றியது.

இவ்வளவுக்கு மேலும் இவள் தான் வேண்டும் என்று காலத்தைக் கடத்தினால் தன்னை போன்று ஒரு பைத்தியக்காரன் உலகத்தில் இல்லை என்று நினைத்தவன், அடுத்து ஒரு பைத்தியகார தனத்தை செய்து முடித்தான்.

#########

கணிதன் ஜோசப் WEDS ரேஷ்மா என்ற பெயர்பலகையை வெறித்து பார்த்தவளாக நின்றிருந்தாள் மலர்விழி. அவளது மூளை ஒரு வாரத்துக்கு முன்பு நடந்ததை நினைவு மீட்பு செய்ய ஆரம்பித்திருந்தது.

         தன் வாட்ஸாப்பில் வந்து விழுந்த புகைப்படத்தையே ஏன்னவென்று சொல்லில் வடிக்க இயலா ஒரு உணர்வுகுவியலில் பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்விழி.

அது ஒரு அழைப்பிதழ். ரிஷிபன் ஜோசப்பிடம் இருந்து அவளுக்கு வந்திருந்தது. அன்று சண்டை போட்டு கோவித்துக்கொண்டு வந்ததற்கு இரண்டு நாள் கழித்து மலர்விழியை நேரில் சந்தித்து தன் அண்ணனிற்கு பதிலாக மன்னிப்பைக் கேட்டு மீண்டும் அவளுக்கும் தனக்குமான நட்பை புதிப்பித்திருந்தான் ரிஷிபன்.

இந்த இடைப்பட்ட நான்கு மாதங்களில் அவர்கள் இருவரின் நட்பு இன்னும் இறுகியிருந்தது. அதனால் தான் தன் அண்ணன் கணிதனின் திருமண அழைப்பிதழை இவளுக்கு அனுப்பிருந்தான். அதில் குறிப்பிட்டதன் படி திருமணம் நடக்க இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது.

அதை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நெஞ்சை அழுத்தும் உணர்வு ஏற்ப்பட்டது. கண்களூம் தொண்டையும் காரணமே இல்லாமல் எரிந்தன. தொண்டையில் சுரீரென்று ஒரு வலிக்கூட தோன்றியது.

தனக்கு சிறிதும் இதற்கு முன்பு அறிந்திராத கேள்விப்பட்டிராத ஒரு இடத்தில் இருக்கும் போது தனது கைப்பேசியும், பணமும் தொலைந்ததைப் போன்று மனது பதட்டத்தில் படபடத்துக் கொண்டிருந்தது.

இதற்க்கெல்லாம் என்ன காரணமென்று தனக்குள்ளே யோசிக்க ஆரம்பித்தாள் மலர்விழி.

முதன்முதலாக கணிதனை சந்தித்தலிருந்து அனைத்தும் அவளது மண்டைக்குள் படமாக ஒட ஆரம்பித்தது.

அவனை ரசித்தது. அவனை தன்னை பார்க்க வைக்க வேண்டுமென்று தனது லூசுதனமான கொள்கையெல்லாம் விட்டுவிட்டு பாடியது, அவன் கல்லூரியை விட்டு சென்றபின்பு அவள் ஹெச்ஒடியை வந்து பாடச்சொல்லியும் பாடவே முடியாது என்று சாதித்தது, அவனை சிரிக்க வைக்க வேண்டுமென்றே அனைத்து குறும்புகளும் செய்தது, அவன் கல்லூரியை விட்டு சென்ற பின்பு எதையோ இழந்ததைப் போன்று உணர்ந்தது, வெகுநாட்களுக்குப் பின்பு எக்ஸ்டர்னாலாக வருகிறான் என்று அறிந்தவுடன் மனதில் ஏற்ப்பட்ட குதுகலம், அவன் திட்டிய பொழுது ஏற்ப்பட்ட மனதின் வலி, அதைவிட தன்னை பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் மனக்கண்ணில் தோன்றிய கணிதனின் முகம், மாப்பிள்ளையாக பார்த்ததும் எழுந்து நின்றது அதிர்ச்சியாலா மகிழ்ச்சியாலா என்று இப்பொழுது யோசித்துப்பார்த்தால் சில்லென்ற மனம் அதை மகிழ்ச்சி என்றே எடுத்துக்கூறியது.

திருமணத்திலிருந்து ஒடி ஒளிந்திருந்த போதும் சினிமாவில் போன்று தான் இல்லாததால் தனது இடத்தில் தனது உடன்பிறவா தங்கையை அமர்த்தி விடுவார்களோ என்று பயத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்த பொழுது திருமணமே என்று நடக்கவில்லை தான் அடைந்த சந்தோஷம் , ஒரு வருடத்திற்கு பின்பு அவனை கேரளாவில் சந்தித்தது. அவன் இடத்தில் இருந்த அந்த நாட்கள் முத்தாய்ப்பாக அவன் கொடுத்த இதழ் முத்தம் அதில் தான் கரைந்து காணாமல் போனது என்று அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்து அவள் கண்டுக்கொண்ட விடை கணிதன் மீது தனது தீராத காதல் என்பதை தான்… காலம் கடந்த காதல்!

எப்பொழுதும் லூசுதனமாகவே செய்பவள் என்பதால் உடனே கணிதனுக்கு அழைப்பெடுத்திருந்தாள். ரிங்க் போய்க்கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு முறை அழைத்தாள். அப்பொழுதும் எடுக்கவில்லை. இருமுறை அழைத்தும் எடுக்கவில்லையே எதாவது வேலையில் இருப்பானோ என்று நினைத்து விட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்தாள்.

பத்து அழைப்புகளுக்கு பிறகு பதினோறாவது அழைப்பில் எடுத்திருந்தான்.

“என்ன வேணும் உனக்கு?”

“சார்ர்ர்… நான்…”

“ஹேய் போதும் நிற்பாட்டு. உனக்கு அறிவு இல்லையா? ஒரு தடவை போன் எடுக்காட்டி உன்கூட பேச பிடிக்காமல் தான் அவாய்ட் பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிற தெரியாதா? திருப்பி திருப்பி கூப்பிட்டுக்கிட்டே இருக்க…” என்று கணிதன் இவளிடம் காய்ந்துக் கொண்டிருக்கும் போதே, பின்னிலிருந்து  “கணி…” என்ற இனிமையான பெண்குரல் கேட்க,

“வந்துட்டேன் பேப்… ஒன் மினிட் ” என்றவன் அதன்பிறகு எதுவும் கூறாமலே அழைப்பை துண்டித்தான்.

Leave a Reply

error: Content is protected !!