EUTV 9

EUTV 9

9

மின்சாரம் தடைப்பட்ட சில நொடிகளிலே யு.பி.எஸ் சின் உதவியால் மீண்டும் அவர்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் வந்துவிட்டது.

ஜோசப் பிரதர்ஸ் ஐவரும் ஆகாஷீம் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த இரண்டு சாப்பாத்தியுடன் போர் புரிந்தவள் ஒரு வாய்கூட எடுத்து வைக்கவில்லை. அவர்கள் அனைவரும் அகன்ற பின்னர் நைசாக நழுவி தனது தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவை குப்பை தொட்டியில் கொட்டி விட்டு திரும்ப, அங்கு சமயலறையின் நுழைவுவாயிலில் கைகளை கட்டியவாறு சுவற்றில் சாய்ந்து மலர்விழியையே பார்த்தவாறு நின்றிருந்தான் கணிதன்.

சாப்பாட்டை கொட்டியதை பார்த்துவிட்டானா இல்லையா என்று தெரியாமல் திருட்டு முழியுடன் கணிதனை பார்த்தவாறு நின்றாள் மலர்விழி.

“வேஸ்ட் போட்டேன்…”

“நான் உங்கிட்ட கேட்கவே இல்லையே…”

“நானா தான் வாயை கொடுத்துட்டேனா? சமாளிப்போம்” என்று முனுமுனுத்தவள்,

“இது உங்க வீடு இல்லையா? அதனால சொன்னேன். தள்ளிக்கோங்க…” என்றவள் அவனை தாண்டி வரவேற்பறைக்கு சென்றாள்.

அங்கு சென்றதும் இன்னொரு குழப்பம் வந்தது. இப்பொழுது இவர்களுடன் அமர்ந்து பேச வேண்டுமா? இல்லை தனது அறைக்கு செல்ல வேண்டுமா என்று யோசித்தவாறு ஜோசப் பிரதர்ஸ் மற்றும் ஆகாஷை நோக்கி சென்றாள்.

எதோ பால்ய நினைவுகள் போலும் அனைவரும் முகம் விகஷிக்க பேசிக்கொண்டிருந்தனர்.

பேச்சு சுவாரசியத்தில் மலர்விழி வந்து நிற்பதை யாரும் கவனிக்கவில்லை ஆகாஷ் உட்பட.

 அடுத்தவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் போது எப்படி ஒரு குட்நைட் கூட சொல்லாமல் மகாராணி மாதிரி அறைக்கு  செல்வது? நன்றாக இருக்காதே என்பதால் “ம்ம்ம்ம்க்க்க்ம்…” என்று தனது தொண்டையை செரும அவளை நோக்கி திரும்பினான் ஆகாஷ்.

“ஹே வா பிளார்…” என்றவாறு எழுந்த ஆகாஷ் அவளது தோள்களை சுற்றி கரங்களை போட்டவன் மலர்விழியை அழைத்துக்கொண்டு வீட்டின் முன் வராண்டா வழியே தோட்டத்திற்கு போட்டிருந்த டெண்ட் அருகில் கூட்டிசென்றான்.

மழை இன்னும் அடித்து ஊத்திக்கொண்டிருந்தது. மழைதுளி மேலே படாத இடத்தில் நின்றான். மலர்விழியின் தோளில் படர்ந்திருந்த தனது கரத்தை  விலக்கியவன், அவளது இரு கரங்களையும் சேர்த்து பற்றிக்கொண்டான்.

தனியாக அழைத்து வந்ததிலே தெரிந்து போயிற்று. எதுவோ முக்கியமான விசயம் தன்னுடன் பேசப் போகிறான் என்பது. எனவே ஆகாஷை ‘இப்ப என்ன குண்டு வைச்சிருக்க சொல்லு ராசா…இதுக்கு மேல இந்த பாடி தாங்காது பா… தாங்கவே தாங்காது’ என்ற செய்தியை கண்களில் தேக்கியவாறு அவனை பாவமாக பார்த்து வைத்தாள் மலர்விழி.

“மலர் ரொம்ப மழை பெய்யுது. நம்மளால இப்ப வெளியே போகவே முடியாது. சைக்லோன் ரொம்ப பலமாகியிருக்குறாதா நியூஸ்ல பார்த்தேன். லாஸ்ட் டைம் மாதிரி நிலச்சரிவு கூட வரதுக்கு வாய்ப்பு இருக்காம். அண்ட் வெளியே சுத்தமா கரண்ட் கூட இல்லை.”

“……”

“ஐ ஆம் ரியலி சாரி மலர். என்னோட லவ்வுக்காக உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன். உனக்கும் இங்கே இருக்குறவங்களுக்கும் எதோ பிராப்ளம்ன்னு எனக்கு புரியுது. அது என்னன்னு எனக்கு தெரிய வேணாம்.பட் ப்ளீஸ் ஒன் வீக் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மலர் போதும். நமக்கு அதைவிட்டா வேற வழியும் இல்லை தானே. இப்ப உன்னால டி.என் கூட போகமுடியாது.”

“….”

“இதை விட பாதுக்காப்பான இடம் வெளிய தேடினாலும் நமக்கு கிடைக்காது. எக்ஸ் சி.எம் இருக்க இடத்துல எவன் நுழைய முடியும் சொல்லு? என் அப்பானால இந்த இடத்தை கண்டே பிடிக்க முடியாது. அதை மீறியும் கண்டுபிடிச்சாலும் ஒன்னு பிடுங்க முடியாது. சாரி பார்பிடால்…” என்றவன் அவளை தோளோடு அணைத்துக்கொள்ள மலர்விழிக்கு என்ன சொல்வதேன்றே புரியவில்லை.

“ம்ம்… பராவாயில்லை ஆகாஷ். இதெல்லாம் நான் என்னைக்காச்சும் ஒரு நாள் பேஸ் பண்ணிதான் ஆகனும். பட் என்னால இங்கே இயல்பா இருக்க முடியலை. எனக்கு அழுகையா வருது யூ நோ… ஐ மிஸ் சமுத்திரகனி. ஐ மிஸ் மை ஹோம்…” என்று திடீரென்று மலர்விழி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட ஆகாஷிற்கு என்னவோ போன்று ஆகிவிட்டது.

தன்னுடைய காதல் என்னும் சுயநலத்திற்காக எத்தனை பேரை கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்க அவனுக்கும் கண்கள் கலங்கியது.

தோளோடு அணைத்திருந்தவன் மொத்தமாக மலர்விழியை அணைத்தான். ஜோசப் பிரதர்ஸ்ஸுடன் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

சில நிமிடங்களில் தன் அழுகையை நிறுத்தியவள் அவனிடமிருந்து விலகி தன் கண்களை துடைத்துக்கொண்டு சிரிப்பை பூசிக்கொண்டாள்.

“திருநெல்வேலில இருந்து நூறு ரவுடி பசங்க அண்ட் உன் அப்பன் நாச்சிமுத்து இவங்க எல்லாம் சமாளிச்சு உன்னை கேரளாக்கு பார்சல் பண்ணிட்டு வந்து இருக்கேன். பிஸ்கோத் பசங்க இந்த ஜோசப் பிரதர்ஸ் இவனுங்களை சமாளிக்கமாட்டேனா?”

       “தட்ஸ் மை கேர்ள்…” என்று சிரித்தவாறு அவளது மூக்கை பிடித்து ஆட்டினான் ஆகாஷ்.

“கையை எடு டா… எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு நான் போய் தூங்குறேன்…”என்று மலர்விழி கூற ஆகாஷ் முழித்தான்.

“என்ன டா? உன் முழியே சரியில்லை. என்ன மேட்டர்?”

“இல்லை ப்ளார். கரண்ட் இல்லை இன்வேட்டர்ல தான் இப்ப எல்லாம் வொர்க் ஆகிட்டு இருக்கு. எப்ப மழை நின்னு எப்ப ஈபில வந்து சரி பண்ணுவாங்கன்னு தெரில. அது வரைக்கும் தாக்கு பிடிக்கனும்னா நாம கம்மியா யூஸ் பண்ணனும்… சோ…”

“சோ?”

“சோ நாம எல்லாரும் ஹால்ல தான் நைட் ஸ்லீப் பண்ணப் போறோம்.”

“ஏதே???? வாய்ப்பே இல்லை. நான் இப்பயே கிளம்புறேன். நடந்தே நான் சமுத்திரகனிக்கிட்ட போறேன். நீ எக்கேடு கெட்டும் நாசமா போ. பாவமேன்னு அந்த அரைலூசு அரைவேக்காடு அருக்காணிக்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்த பாவத்துக்கு இந்த பீம் பாய்ஸ்க்கிட்ட என்னை மாட்டி விட்டுட்ட நீ? இதுல இவனுங்க கூட சவகாசமா? நெவர் இன் மை லைப்…”என்று மலர்விழி படப்படப்பாக பேச ஆரம்பிக்க அவளது கையை பிடித்து அமைதிப்படுத்திய ஆகாஷ்,

“என் டார்லிங்க்… மை peach… ப்ளீஸ் டா. உன்னை தனியா எப்படி விட முடியும் சொல்லு. அவ்ளோ தான் உன் பிரண்ட் என்னை கொலையே பண்ணிருவா? ப்ளீஸ்…” என்றவன் உக்கி போட ஆரம்பித்தான்.

அவன் ஐம்பது உக்கி போடும் வரை அமைதியாக கைகளை கட்டியவாறு அவனை வெறித்தாள்.

“ஓகே… போதும் நிற்பாட்டு… வா உள்ளே போலாம். நான் ரூம்ல போய் வீட்டுக்கு பேசிட்டு, லைட்டா குளிச்சிட்டு டிரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரேன்.” என்று அவனை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றாள்.

அவ்வளவு நேரம் அங்கு நடந்தது அனைத்தையும் ஊமை படம் பார்ப்பதை போன்று சமையலறை பின்வாசலில் நின்று பார்த்திருந்த கணிதனை வலி,கோவம், இயலாமை, குரோதம் என்ற உணர்வுகள் தன்னை முழுவதாக விழுங்குவதை ஒரு கையலாகாத தனத்துடன் உணர்ந்தான்.

தன்னை அடக்க முடியாமல் அழுகை வேறு வந்தது. தனது கட்டுப்பாட்டை மீறி இருதுளி கண்ணீர் கன்னங்களில் இறங்கிவிட்டது. அவள் ஊர்கூடிய சபையில் மணமகனாய்  நடுநாயகமாக நின்றிருந்த தன்னை விட்டுவிட்டு சென்ற பொழுதுகூட கலங்காத கண்கள் இப்பொழுது உடைந்தது.

‘மலர்விழி’ என்ற பெண்ணுக்காக இந்த பெயருக்காக தன் மனம் ஏன் இந்தளவு துடிக்கிறது என்பது இன்னும் அவனுக்கே புரியாத புதிராக  இருந்தது.

மலர்விழியை பார்த்த பொழுது சிறிது தடுமாறினான் தான். ஆனால் பிறகு அவள் தன்னுடைய மாணவி என்பதில் அனைத்தும் அடிப்பட்டு போக சிறு பெண்ணாக தான் அவளை நடத்த ஆரம்பித்தான். அங்கிருந்து வேறு இடம் பணிமாற்றம் ஆனப்பிறகு அவளை மறந்தே போயிருந்தான்.

மீண்டும் அவளின் ஹெச்.ஒ.டி வந்து அவனை எக்ஸ்டர்னலாக அழைத்த பொழுதுகூட சத்தியமாக அவளது ஞாபகம் எதுவும் வரவில்லை. நேரில் பார்த்த பொழுது தான் ஹே மலர்விழி தெரிந்த சுட்டிப்பெண் என்பதைப்போல் அவளை பார்த்து சிரிக்க முற்ப்பட்ட பொழுது அவள்  இவன் முகத்தைகூட பார்க்கவில்லை.

சரி பெரிய பெண் ஆகிவிட்டாள். தன் மீதிருந்த கிரஷ் இல்லை என்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டான். அடுத்து அவள் பிட் அடிப்பதை பார்த்துவிட்டான். அதனால் தான் அழைத்து அருகில் அமரவைத்து செய்ய வைத்தான். விடை வரவில்லை என்றவுடன் தான் செய்துபார்த்து தனக்கும் வரவில்லை என்றவுடனே எப்பொழுதும் அனைவரிடமும் எப்படி கேள்வி கேட்பானோ அப்படி தான் கேட்டான். அவள் பதில் தெரியாமல் அழவும் எப்பொழுதும் நிறைந்த சிரிப்புடன் இருக்கும் சுட்டிப்பெண் அழுகிறாளே என்றவுடன் மனம் பிசைய அவளை அனுப்பி வைத்தான்.

இருந்தும் மனம் கேட்காமல் அவளை சமாதானபடுத்த சென்றபொழுது பாரதியிடம் அவள் அப்படி கூறவும் நிஜமாகவே கோவம் வந்தது. அடுத்து அதையும் மறந்துபோனான் என்று தான் சொல்லவேண்டும்.

அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து வந்த பொழுது மீண்டும் அவள் அதே மாதிரி செய்ய கோவப்பட்டுவிட்டான் அவ்வளவு தான். அதுவரைக்குமே அவள் மேல் எந்தவிதமான தனிப்பட்ட அன்பும் கணிதனுக்கு இல்லை தான். கணிதனைப் பொறுத்தவரை ஒரு பக்கத்துவீட்டு சேட்டைக்கார பெண் என்று தான் நினைத்திருந்தான்.

ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து மதுரை மீனாட்சியம்மன்  கோவிலில் வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த காட்டன் புடவையில் பேரழகியாக பெரியபெண்ணாக பார்த்தபொழுது, உணர்ந்த பொழுது இதயம் தாறுமாறாக அடித்து இவள் தான் உன் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் ஆரம்பபுள்ளியும் முற்றுப்புள்ளியும் என்று தெரிந்த பொழுது இன்பமாக அதிர்ந்தவன் அவளை தன் மனைவியாக்க ஆசைப்பட்டு அனைத்தையும் செய்தான்.

அவள் தன்னை வேண்டாம் என்று சொன்னபொழுது நிஜமாகவே எதுவோ விளையாடுகிறாள் என்று தான் நினைத்திருந்தான். இப்பொழுது யோசித்துபார்த்தால் தன் மனது அவள் இல்லாத வாழ்க்கையை யோசிக்க கடினப்பட்டு தானாக ஒரு கற்பிதம் செய்திருக்கிறது என்பது புரிந்தது.

திருமணம் நின்றப்பின் அவள் மீதிருந்த அனைத்து உணர்வுகளையும் கோவமாக்கி தன்னுள்ளே அடைத்துக்கொண்டான். அதிலிருந்து வெளியே வர எவ்வளவோ முயன்றான் முடியவில்லை. இப்பொழுது தான் அவனது தாய் உன் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு சென்றால் நான் உன்னுடன் பேசுகிறேன் என்று கூறினார். இவனுமே மலர்விழி என்ற பெண்ணின் மீதான அனைத்து உணர்வுகளையும் தூக்கி கிடாசிவிட்டு புதிய மனிதனாக மாறுவோம் என்று இன்று காலையில் தான் நினைத்திருந்தான்.

ஆனால் அதற்குள் ‘அவ்வளவு சீக்கிரம் உன்னை மறக்க விடுவேனா?’ என்பதைப்போன்று அவளே  நேரில் வந்து நிற்கிறாள்.

‘என்ன கொடுமை சரவணா இது…’

அதுவும் அவள் இங்கு வந்ததிலிருந்து தண்ணீர் கூட குடிக்கவில்லை என்பது வருத்தத்தையும் அந்த ஆகாஷின் மீது கோவத்தையும் வரவைத்தது. உடன் வந்தபெண் ஒரு வாய் தண்ணீர்கூட குடிக்கவில்லை என்பதை உணராமல் திரிகிறானே என்று…

ஆகாஷிற்கும் அவளுக்கும் வேறுவிதமான உறவு இருக்கும் என்று கணிதன் நினைக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுது தோன்றியது. அது மனதை வாள் கொண்டு அறுத்தது.

அடிவயிற்றில் இருந்து கிளம்பிய ஒரு வலி அவனை முழுதாக ஆக்கிரமித்துக்கொண்டது. அவனது மனமே தானாக பல கற்பனைகள் செய்ய ஆரம்பித்திருந்தது.

இந்த வீடு அவனது மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். இன்பமோ துன்பமோ இங்கே வந்தால் மனம் சமன்பட்டுவிடும். திருமணம் முடிந்து ஹனிமுனுக்கு இங்கு தான் வரவேண்டும் என்று நினைத்திருந்தான். அந்த தோட்டத்து பெஞ்சில் தன் மீது அவளை சாய்த்துக்கொண்டு கதைப்பேச வேண்டும் என்று கனா கண்டிருந்தான். ஆனால் இன்று தன்னவள் தன்னுடைய வீட்டில் ஆனால் வேறோருவனுடைய நெஞ்சில் தலைசாய்ந்து ஆறுதல் தேடிக்கொண்டிருக்கிறாள்.

அவனை அறியாமல் ஒரு விரக்திபுன்னகை உருவாகியது. அடுத்த நொடியே அவள் மீது அடங்கா கோபம் வந்து அவனை ஆக்கிரமித்தது. அந்த கோவத்தை கையாலா தெரியாமல் சுவற்றில் ஒங்கி குத்தினான். கை வலிக்க ஆரம்பித்தது. எதுவோ மனம் அமைதியாவது போன்று இருந்தது. மீண்டும் மீண்டும் குத்தினான்.

“கணி…”என்ற அதட்டல் குரலில் சட்டென்று திரும்பி பார்த்தான். ஆதித்யன் நின்றுக்கொண்டிருந்தான்.

என்ன முயன்றும் முடியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது; ஒரு எட்டில் கணிதனை நெருங்கிய ஆதித்யன் அவனை அணைத்துக்கொண்டான்.

“கணி… நோ மேன்…”

“என்னால முடியல டா… ரொம்ப பெயின்னா இருக்கு…”

“புரியுது கணி…”

“அவ எனக்கு வேணாம் ஆதி… எனக்கு வேணாம். இத்தனை நாளா அவ மேல இருக்குறது வெறும் கோவம் மட்டும் தான் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனால் அப்படி இல்லை. அவளை நேரில பார்க்கும் போது அவளை நெருங்கவும் முடியாம விலக்கவும் முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு. ஷீ இஸ் எ விட்ச். அவளோட நினைப்பு என்னை கொஞ்சம் கொஞ்சமா கொண்ணுட்டு இருக்கு. இப்ப என் வீட்ல வேற ஒருத்தன் கூட என் முன்னாடியே கட்டிபிடிச்சிட்டு நிற்குறா… ஐ ஹேட் திஸ் ஃபீலிங்க்ஸ் டூவர்ட்ஸ் ஹேர். ஆல் ஐ நீட் இஸ் ஃப்ரீடம்…ஃப்ரீடம் ஃப்ரம் ஹேர் டாம்ன் தாட்ஸ் மேன்.”

“ம்ம் கணி…” என்றவாறு சிறுகுழந்தைப்போல் தன் தோள் சாய்ந்து கலங்கும் தமயனின் முதுகை வருடி அவனை அமைதிப்படுத்தினான் ஆதித்யன் ஜோசப்.

சிறிதுநேரத்தில் தன்னிலை அடைந்தவன் ஆதித்யனை பார்த்தான்.

“கணி… ஒரு பொருள் மேல இருக்கிற பிரமிப்பு குறையனும்னா அது பக்கத்துல போனாலே போதும். அதே தான் இங்கேயும். நீ அவளை இதுவரைக்கும் நெருங்குனதே இல்லை. தூரமா இருந்து தான் பார்த்து இருக்க. அது தான் இன்னும் உனக்கு அவ மேல இருக்க பிரமிப்பை அதிகப்படுத்தி அவளை பத்தி நினைக்க வைச்சிக்கிட்டே இருக்கு. அவளை பார்த்தாலே முறைச்சிக்கிட்டு அவளை காயப்படுத்திக்கிட்டு நீயும் காயப்பட்டுக்கிட்டு இருக்குறது பதிலா அவளை நெருங்கு ஒரு நண்பனா… அவளை பத்தி தெரிஞ்சுக்கோ ஏன் உன்னை வேணாம்னு சொன்னா?ஏன் கல்யாணத்தப்ப ஒடிப்போனா? அப்படின்னு கேட்டு தெரி… அவளுடைய விருப்பம் ஏதுன்னு உணரு… அப்புறம் உன்னால காயப்படுத்த முடியாது. அவக்கிட்ட இருந்து கிடைக்குற பிரிவும் உனக்கும் மனசுக்கும் எங்களுக்கும் நல்லதை கொடுக்கும்.  u want a proper closure from her…”

“சரியான காரணம் தெரியாத பிரிவு தான் நம்மளை பாதிக்கும். அது விட்ட இடத்துல இருந்து தொடர முடியாம பின்னாடியே இழுக்கும். தெரி…உணர்…விலகு… இது தான் உன்னை அமைதிப்படுத்தும்.”

“நாங்க மூணு பேரும் இங்கே வந்ததுக்கு காரணம் உன்னை இதுல இருந்து வெளியே கொண்டு வந்து ஒரு புது வாழ்க்கைகுள்ள புகுத்த தான். அந்த புதுவாழ்க்கை நீயே கூட அமைச்சுக்கலாம். இல்லை அதை அம்மா கைலயும் கொடுக்கலாம். ஆனால் உன்னை இதே இடத்துல தனியா விட முடியாது கணி. உன் காதல் தோல்வியை கொண்டாட எடுத்துக்கொண்ட காலம் முடிஞ்சுச்சுன்னு சொல்ல தான் வந்தோம். இங்கே பார்த்தா அவளே இங்கே இருக்கா… இது இன்னும் நல்லது நீ காணாம போன இடத்துல இருந்து வெளியே வர. ஜஸ்ட் டாக் டூ ஹேர் மேன்.” என்று கூறிய ஆதித்யனை பார்த்து அவனது மனம் கேலியாக சிரித்தது. (ஹா ஹா ஹா…இவன் இப்படி பிதற்றிக்கொண்டு ஷக்தியிடம் சென்றதற்க்கான பரிசு தான் இன்னும் இரு மாதத்தில் அவனது கையில் தவழ இருக்கிறது.)

அண்ணனுக்கு தப்பாத தம்பி என்பதை நிரூபிக்கும் விதமாக ஆதித்யன் சொன்ன அனைத்தையும் காற்றில் விட்டவன் மலர்விழியுடன் நெருங்கி பழக வேண்டும் என்பதை மட்டும் மனதில் ஏற்றிகொண்டு அவளிடம் சென்றான் கணிதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!