Idhayam – 45

Idhayam – 45

அத்தியாயம் – 45

அபூர்வா அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அலங்காரத்தை செய்தாள். அந்த நேரத்தில் சாருவைத்தேடி வந்த மேனகா, “ஏய் சாரு இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற?” என்று கேள்வியுடன் அங்கே வந்தார்.

அவரின் குரல்கேட்டு சட்டென்று திரும்பிய சாரு, “வாம்மா உன்னைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என்று சிரித்தாள் மகள்.

சொத்துகள் அனைத்தும் அனாதை ஆசரமத்திற்கு போன விஷயம் அறிததும் அவர் கல்யாணத்தை நிறுத்த வருவார் என்று ஏற்கனவே சாருவுக்கு தெரியும் என்பதால் புன்னகையுடன் தாயை வரவேற்றாள்.

“என் சொத்தை எல்லாம் பிளான் பண்ணி வருமான வரித்துறைகிட்ட மாட்டிவிட்டது இல்லாமல் இப்போ என் பொண்ணுங்க மனசை கலைச்சிட்டு யாரோ ஊர் பேர் தெரியாதவனுக்கு கட்டி வைக்கலாம்னு பார்க்கிறீயா?” என்று அபூர்வாவிடன் வாய்க்கு வந்தவற்றை பேசினாள் மேனகா.

அபூர்வா அதையெல்லாம் காதில் வாங்காமல் அமைதியாக நின்றிருக்க, “அம்மா உனக்குத்தான் பிளான்போட்டு மத்தவங்க வாழ்க்கையை கெடுக்க தெரியும். அண்ணிக்கு இதெல்லாம் சுட்டுப்போட்டா கூட வராது” என்று எகிறினாள் சிந்து.

“சிந்து நீ சின்னப்பெண் உனக்கு எதுவும் தெரியாது” என்று அவளை அடக்கினாள் மேனகா.

சாரு எழுந்து தாயின் அருகே வரவே “சாரு இவளை நம்பாதம்மா. உன் அண்ணனையும், உங்களையும் நிரந்தரமா பிரிக்கறதுக்கு இவ திட்டம்போட்டு இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்கிற?” பாசமாக இருப்பது போல நடித்தார்.

“என் அண்ணனா அது யாரும்மா?” என்று சந்தேகமாக கேட்ட சாருவை நினைத்து அபூர்வாவிற்கு கூட சிரிப்பு வந்தது.

“வேற யாரு ஆதியைத் தான் சொல்றேன். அவனை கல்யாணம் பண்ணிடோம் என்ற திமிரில் உங்க இருவரையும் என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிற” என்றவர் அபூர்வாவை முறைக்க ரேவதிக்கும், சிந்துவுக்கும் கோபம் வந்தது.

“உன் மகனா? யாரு ஆதியா? நீயம்மா அவரை சுமந்து பெத்தது?” என்று நக்கலாக கேட்டவளை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர் ரேவதியும், சிந்துவும்.

“அவன் உங்க அப்பாவுக்கு பொறந்தவன். அப்போ எனக்கும் மகன்தானே?” என்று கேட்டார்.

“அப்பாவுக்கு பிறந்ததால் உனக்கு மகனாகவும், எனக்கு அண்ணாகவும் உன் சொத்துகளை பாதுகாக்க நிரந்தர வேலைக்காரனாக மாற்ற நினைச்சுதானே இவங்க இருவரையும் திட்டம்போட்டு பிரிச்ச?” என்று சாரு கேட்கும்போதே மணவறையிலிருந்து பெண்ணை அழைத்து வரும்படி ஐயரின் குரல்கேட்டது.

“அப்படின்னு சொல்லித்தான் உங்க இருவரையும் அவபக்கம் இழுத்துக்கிட்டாளா?” என்று வாயில் அடித்துக் கொண்டாள்.

“அம்மா அவசப்படாமல் இரு. நான் முதலில் பேசி முடிச்சிட்டு மணவறைக்கு போகணும்” என்று தாயை விரல்நீட்டி எச்சரித்து அமைதியாக இருக்கும்படி சொன்னாள்.

மேனகா திகைப்புடன் நின்றிருக்க, “நீ சரியான சுயநலவாதின்னு எனக்கு நல்லாவே தெரியும். தாய் பாசத்துக்கு எங்கும் பிள்ளைகளுக்கு பணத்தை கட்டி படிக்க வெச்சிட்ட பாசம் வாருன்னு நினைச்சியா வெறுப்புதான் வரும்” என்று சொல்ல அவளை அழைத்துச் செல்ல மஞ்சுளா அறைக்குள் நுழைந்தார்.

“ஆரம்பத்தில் மஞ்சும்மா கிட்ட இருந்து புருஷனை பிரிச்ச அவங்க தாங்கிட்டாங்க. அதுக்குபிறகு அவங்க பெத்த மகனை உனக்கு கொத்தடிமையாக வெச்சுக்க நினைச்சு காதலிச்ச அபூர்வாவை அண்ணாகிட்ட இருந்து நிரந்தரமா பிரிக்க பிளான் பண்ணின. காதலி பிரிஞ்ச சோகத்தில் இருக்கிறவனிடம் பாசமாக இருக்கிற மாதிரி நடிச்சு அண்ணாவை கைக்குள் போட்டுக்க நினைச்சுதான் நீ எல்லாமே பண்ணுன” என்று சொல்ல,

“சாரு முகூர்த்த நேரம் போகுதும்மா. முதலில் மணமேடைக்கு வா வந்து அப்புறம் மத்ததை பேசிக்கலாம்” என்றார் மஞ்சுளா அவசரமாக.

“அம்மா பிளீஸ் நீங்க அமைதியா இருங்க. இன்னைக்கு அமைதியா போனால் என்னையும் முட்டாள்னு சொல்லி முத்திரை குத்துவாங்க.” என்று சொல்லிவிட்டு தாயின் எதிரே சென்று நின்றாள்.

“உன் கோடிக்கணக்கான சொத்தை பாதுகாக்க பணத்தாசை இல்லாத ஒருத்தன் வேணும். உன் மகள்களை பாதுக்காக்க நம்பிக்கையான ஆள் வேணுன்னு பிளான்போட்டு காய் நகரத்தின. நீ நினைச்ச மாதிரியே எல்லாமே நடந்துச்சு. அப்பா மாதிரி பணத்துக்காக வேறொரு பெண்ணை தேடி போகத்ததால் அண்ணியை கல்யாணம் பண்ணிகிட்டார் அண்ணா. அது உனக்கு சுத்தமா பிடிக்கல. எங்கள வெச்சு காய் நகர்த்த பார்த்தப்போ தான் நானும் தங்கச்சியும் கொஞ்சம் யோசிச்சோம்” என்று மேனகாவின் மறுப்பக்கத்தை புட்டுப்புட்டு வைத்தாள் மகள்.

அதுவரை சாரு பேசுவதை விளையாட்டாக நினைத்திருந்த அபூர்வா நடப்பது என்னவென்று புரியாமல் தாயையும், மகளையும் கேள்வியாக நோக்கினாள்.

“அனாதை மாதிரி கொல்கத்தாவில் நானும், தங்கச்சியும் தனியா தவிச்சப்போ பணத்தை அனுப்பிட்டு நீ இங்க நிம்மதியா இருந்த. ஆனால் அண்ணா எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தான். இதோ இவங்க புருஷனை நீ பங்குபோட்டுகிட்ட பிறகும் உண்மையான தாய் பாசத்துடன் எங்களை அரவணைச்சுகிட்டாங்க மஞ்சும்மா. அப்போதான் உண்மையான பாசம் எது? கானல் நீர் எதுன்னு தெரிஞ்சுது” என்று அவள் பேசிக்கொண்டே சென்றாள்.

மஞ்சுளா மருமகளின் அருகே வர, “என்னம்மா பொண்ணை கூட்டிட்டு வர சொல்லிட்டு இருக்காங்க நீங்க எல்லாம் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற கேள்வியுடன் அறைக்குள் நுழைந்த ஆதி மேனகாவைப் பார்த்தான்.

“சாரு நீ மணமேடைக்கு போ” என்று அவன் அதட்டிட, “முடியாது அண்ணா” என்றாள் முடிவாக.

அவளின் இந்த பிடிவாத பேச்சின் பின்னோடு இருக்கும் மர்மம் புரியாமல் சுற்றி இருந்த அனைவரையும் கேள்வியாக நோக்கினாள். மேனகா வேண்டுமென்றே குற்றம்சாட்டுவதாக நினைத்துதான் அவள் மெளனமாக இருந்தாள். ஆனால் இப்போது சாரு தொடர்ந்து பேசுவதை பார்க்கும்போது அவளின் மனதில் சந்தேகம் எழுந்தது.

மேனகா மகளை கேள்வியாக நோக்கிட, “அண்ணாவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சபிறகு அவன் என்கிட்ட வந்துதான் முதலில் சொன்னான். நீ எப்படி அண்ணியை வெச்சே அண்ணனின் காதலை பிரிச்சியோ அதே மாதிரி உன்கூடவே இருந்து உன்னை கவுக்க வலைவிரித்து காய் நகர்த்தினோம் நானும், சிந்துவும்! எந்த பணத்துக்காக நீ அவங்கள பிரிச்சியோ அதெல்லாம் இல்லாமல் பண்ணாமல் தான்  உனக்கு சப்போர்ட்டா இருக்கிற மாதிரி நடிச்சோம்” என்று அவள் ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தாள்.

அவள் உண்மையைப் போட்டு உடைக்க சட்டென்று திரும்பி கணவனைப் பார்த்தாள். மேனகாவின் சுயரூபம் முழுவதும் தெரிந்தபிறகு தன்னை தேடி வந்து கல்யாணம் செய்ததோடு நில்லாமல் இத்தனை காரியத்தையும் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருக்கும் கணவனை என்ன செய்வதென்று அவளுக்கே புரியவில்லை.

“நீ காலை சுத்தி பாம்பும்மா. யாரையும் கொல்லாமல் விடமாட்ட. ஆனா இன்னொரு பழமொழி தெரியுமா உனக்கு பாம்பின் கால் பாம்பறியும். அதுதான் நானே உனக்கு எதிரா திரும்பினேன். நம்ப உண்மையாக நம்பும் ஒருத்தர் நமக்கு துரோகம் பண்ணின எப்படி இருக்கும்னு உனக்கு இப்போ புரிஞ்சிருக்குமே” என்று கண்ணில் கனல் மின்னிட சொல்லி முடிக்க என்று அவள் நிறுத்தி நிதானமாக கேட்டதில் திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்தது மேனகாவிற்கு.

அபூர்வாவின் பக்கம் திரும்பி,“அண்ணி நான் ரெடி. வாங்க இப்போ மணமேடைக்கு போலாம்” என்றாள் சாரு. அவளின் பின்னோடு சென்ற சிந்துவின் கைப்பிடித்து தடுத்தாள் மேனகா.

“அவ கையை விடுங்க இல்ல நடக்கறதே வேற” என்றாள் ரேவதி.

“அவ என் பொண்ணு” என்றார் அதிகாரமாக.

“அதெல்லாம் நேத்தோட முடிஞ்சுபோச்சு. நீயா இப்போ விடல கன்னம் பழுத்துவிடும்” என்று எச்சரித்தாள் ரேவதி.

“நீ என்ன ரொம்ப ஒழுங்கா? என் மகனோட சுத்தினவதானே? நீ ரொம்ப நல்ல பொண்ணு நினைச்சு ஏமாந்துட்டேன். நீ என்ன அவளைவிட தரம்கெட்டவளா இருந்துட்டு பெரிய கற்புக்கரசி மாதிரி பேசற”என்று வார்த்தைகளை விட்டுவிட சேலையைத் தூக்கி சொருகிக்கொண்டு சிந்துவை நகர சொல்லி முன்னாடி வந்தாள்.

“ஆமா நான் ஆதி பின்னாடி சுத்தினது உண்மைதான். இல்லன்னு எல்லாம் உன்னை மாதிரி நடிச்சு நாடகம் போட மாட்டேன். அவனை மாதிரி நிறைய பசங்களோட சுத்தினேன். ஆனாலும் நான் கற்புக்கரசின்னு என் புருசனுக்கு தெரியும். எல்லா பசங்களோட நான் பழகினதுக்கு காரணம் யார் என் குணத்துக்கு சரி வருவாங்கன்னு தான். இருப்பது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமா மனசுக்கு பிடிச்சவங்களோட வாழணும்னு நினைச்சேன். இதுவா அதுவா என்ற தடுமாற்றத்தில் இருந்த நான் ஆதியோட காதல் தெரிஞ்சதும் எனக்கு கார்த்திதான் சரின்னு அவரை கல்யாணம் பண்ணிட்டேன். இதில் எனக்கு எதுவும் தப்பா தெரியல” என்று அவள் ஒரே போடாக போட்டுவிட சிந்துவினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மேனகா வாயடைத்துபோய் நின்றிருக்க, “ஏன் நான் ஆதியை லவ் பண்றதா அபூர்வாகிட்டயே ஒரு முறை சொன்னேன்” என்ற ரேவதி,

“என்னங்க நான் சொல்றது உண்மைதானே?” என்று கேட்க, அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

“ம்ம் அதுக்கு பிறகு ஆதியோட வாழ்க்கையில் நான் தலையிடல. அபூர்வாவின் உண்மையான நேசத்துக்கும் காத்திருப்புக்கும் பலன் கிடைச்ச மாதிரி அவனே அவங்களை தேடிபோய் கல்யாணம் பண்ணிகிட்டார். இத்தனை நடந்தும் அபூர்வா அமைதியா இருக்காங்கன்னா அது அவங்க குணம். அவங்க இடத்தில் நான் இருந்திருந்தா உன்னை உண்டு இல்லன்னு பண்ணிருப்பேன்” என்று மிரட்டிவிட்டு சிந்துவை அழைத்துச் சென்றாள்.

தன் இரண்டு மகள்களும் மணக்கோலத்தில் மணமேடை நோக்கி செல்வதை கவனித்த ஜெகனின் அருகே வந்த மேனகா, “நீங்களாவது எனக்கு துணையாக இருப்பீங்களா? இல்ல அந்த மஞ்சுளா பின்னாடி போகலாம்னு முடிவெடுத்து இருக்கீங்களா?” என்று அபூர்வா, ஆதி, மஞ்சுளாவை வைத்துக்கொண்டு கேட்டார்.

இதுவரை மனைவியின் பேச்சிற்கு மறுத்து பேசாதவர், “நான் இத்தனை நாளும் அமைதியாக இருக்க காரணம் என் பொண்ணுங்க வாழ்க்கைதான். இப்போ அவங்க இருவருக்கும் கல்யாணம் நடக்கபோகுது. என்மேல் கோபமா இருந்தாலும் ஆதி அவங்க இருவரையும் நல்ல பார்த்துக்குவான் என்ற நம்பிக்கை இருக்கு. இத்தனை வருஷம் மஞ்சுளாவை தனியா தவிக்க விட்டதால் இப்போ போய் என்னை மன்னிச்சு ஏத்துக்கோன்னு சொன்னா அவ அதுக்கு ஒத்துக்க மாட்டா” என்றவர் நிறுத்திவிட்டு மற்றவர்களை பார்த்தார்.

அவர்கள் அமைதியாக இருக்கவே, “அதே நேரத்தில் பணத்தாசை பிடிச்ச உங்கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே போதும்னு நினைக்கிறேன். எனக்கு நீயும் வேண்டாம், அவளும் வேண்டாம். நான் தனியாவே இருந்துக்கிறேன். அதுதான் நான் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு தண்டனை. இத்தனை நாளாக நினைச்சது எல்லாம் நடக்குதுன்னு நீயாடிய ஆட்டம் தான் உன்னை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கு” என்றார்.

அவர் பேசுவதை எல்லாம் கேட்ட மேனகா, “உனக்கு வேண்டான்னா போக வேண்டியதுதானே? என் சொத்தை எல்லாம் எனக்கே அனாதை ஆசரமத்துக்கு எழுதி வைக்க சொல்லி உயிலில் கையெழுத்து வாங்கினீங்க?” என்று மகளிடம் காட்டமுடியாத எரிச்சலை கணவனிடம் காட்டினாள்.

அப்போது அவர்களை அழைத்துச்செல்ல வந்த ரேவதி, “நீ செஞ்ச பாவத்துக்குதான்” என்று போட்டு உடைத்துவிட்டு மற்றவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றாள். மேனகா எதுவும் செய்ய முடியாமல் அந்த அறையைவிட்டு வெளியே வரவே ஆதி – அபூர்வா, ஜெகன் – மஞ்சுளா, கார்த்திக் – ரேவதி எல்லோரும் ஜோடியாக நின்றிருக்க சாருமதி, சிந்துவின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

அவர் கோபத்துடன் அங்கிருந்து செல்வதைக் கண்ட ஆதி, “சிந்து உங்கம்மா போறாங்க” என்றான் பதட்டத்துடன்.

“அவங்க போனால் போகட்டும். நீங்க அண்ணியை சைட் அடிக்கிற வேலையை ஒழுங்கா பண்ணுங்க” என்றாள் சிந்து சாதரணமாகவே.

“சாரு உங்க அம்மா எதாவது பண்ணிக்க போறாங்க” என்று சொல்ல,

“யாரு அவங்களா முடிஞ்சா நாலுபேரை உயிரோடு கொள்வாங்க. அவங்களாவது சாகரதாவது” என்றாள் சாரு வேண்டாவெறுப்பாக.

அவன் சிந்தனையோடு நின்றிருப்பதை பார்த்த தங்கைகள் இருவரும் அவனின் அருகே வந்து, “அண்ணா நீ நிஜமாவே பதறுவது எங்களுக்கு புரியுது. ஆனால் இத்தனை தப்பு செஞ்சபிறகு எதுவுமே நடக்காத மாதிரி நடிக்கிறாங்க அண்ணா” என்று சாரு கூறினாள்.

“அவங்க எந்த தப்பான முடிவுக்கும் போகமாட்டாங்க. வக்கீல் அண்ணாவிடம் பேசினேன். அவங்களுக்காக வாங்கிபோட்ட வீட்டுக்குப் போயிட்டு இருக்கான்னு தகவல் வந்துச்சு. சோ நீ எதைபத்தியும் யோசிக்காமல் அண்ணியோட நிம்மதியா இரு” என்றாள் சிந்து பெரிய மனுஷி போல.

தன் மனைவியின் அருகே வந்த சிவாவும், “அவ சொல்றது தான் ஆதி சரி. நல்லது நினைக்கிறது தப்பில்ல. ஆனால் அதை யாருக்கு நினைக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு” என்றான்.

தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “நீங்க எதுவும் சொல்லாமல் இருக்கீங்க” என்றாள் சாரு தன் கணவனிடம்.

“உன்னை நல்லா பார்த்துக்கணும் என்ற எண்ணம் தவிர வேற எதுவும் என் மனசில் இல்ல சிந்து. அவங்க லைப்ல உங்க அம்மா விளையாடிய மாதிரி நம்ம லைப்ல நடக்காது என்ற நிம்மதியில் வாயடைச்சுப் போய் நின்னுட்டு இருக்கேன்” என்றான் தமிழ்.

அவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் மகனின் அருகே வந்த ஜெகன், “உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ ஆதி. என் நண்பன் ஒருத்தன் ஊட்டியில் இருக்கிறான். நான் அங்கே போறேன். என்னை பார்க்கணும்னு தோணுச்சுன்னா எல்லோரும் கிளம்பி வாங்க” என்றவர் மனைவியின் அருகே வந்தார்.

மஞ்சுளா புன்னகையோடு நின்றிருக்க, “பொண்ணுன்னா அவ உன்னை மாதிரி இருக்கணும் மஞ்சு. தனியாவே நின்னு சாதிச்சிட்ட. உன்கூட வாழாமல் பணத்தின் பின்னாடி போனது எவ்வளவு தப்புன்னு இத்தனை வருஷம் கழிச்சு புரிஞ்சிகிட்டேன்” என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்.

மணமக்கள் சாப்பிட்டு முடித்து ஜோடியாக அவரவர் வீட்டிற்கு வழியனுப்பி வைத்த ஆதியின் அருகே வந்த அபூர்வா, “எனக்காக இவ்வளவும் பண்ணினியா ஆதி? அவ்வளவு நல்லவனா நீ?” என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டாள்.

சட்டென்று அவளின் காதருகே குனிந்தவன், “மத்தவங்களுக்கு நான் ரொம்ப நல்லவன். உனக்கு மட்டும் நான் ரொம்ப கெட்டவன்” என்று இருபொருள்பட கூற, “ச்சீ” என்று சொல்லி முகம் சிவந்தாள் அபூர்வா.

கடைசியாக கிளம்பிய ரேவதி அபூர்வாவின் அருகே வந்து, “நிஜமாவே உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தனக்கு துரோகம் செய்தவங்க குடும்பத்துக்கும் நலத்து நினைக்கிற உங்களுக்கு என்னைக்குமே நல்லது மட்டும் நடக்கும். ஆதியை நான் லவ் பண்றதா சும்மாதான் ஊர் முழுக்க சொல்லிட்டு இருந்தேன். அதனால் என்னை வெச்சு நீங்க இருவரும் சண்டை போடாதீங்க. எனக்கு கார்த்திக் மட்டும் தான் நிரந்தரம்” என்று சொல்லிவிட்டு விடை பெற்றாள்.

கல்யாணம் முடிந்த கையோடு அனைவரும் கிளம்பிச் சென்றுவிட அபூர்வாவின் குடும்பத்தினர் மட்டும் சிவரத்தினம் வீட்டில் தங்கினர். ஆதியும் – அபூர்வாவும் அன்றிரவு அவர்களோடு தங்கினர்.

Leave a Reply

error: Content is protected !!