Uyirodu Vilaiyadu – 12

(கும்பல்கள், மாஃபியாக்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குடும்பங்களில் படிநிலை/hierarchy உள்ளது.

பாஸ்/டான்/ பாய் – அமைப்பை உருவாக்கியவர், முக்கிய முடிவுகளை எடுப்பவர். இவருக்குத் தெரியாமல், குழுவில் மற்றவர் மூச்சு விடக் கூடக் கூடாது.

வயதாகி சாகும் தருவாயிலும், இந்தப் பதவியைப் பிடித்துக் கொண்டு விடாமல் இருக்கும் தலைவர்கள் அதிகம்.

எ.கா – மாபியா ஆப் இந்தியா குழுவில் – ஜோக்ராஜ் முதல் நிலை தலைவன்.

குழுவைக் கட்டுக்கோப்பாக நடத்தும் முதன் நிலை தலைவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால், ஜோக்ராஜ் போன்றவர்கள், அந்தத் தலைவன் என்ற பதவியினால் கிடைக்கும் லாபங்களை, சுகங்களை  மட்டுமே கருத்தில் கொண்டு, குழுவில் உள்ள மற்றவர்களை எல்லாம் அடிமையாக நடத்துபவர்கள்.

அண்டர்பாஸ் – தலைவரின் மகன். மாபியா குடும்பத்தில் ரெண்டாவது உயர்ந்த பதவி. வழக்கமாய் சிறு வயது முதல் தலைவரின் மகன் இதற்காகவே சீர்ப்படுத்தி வளர்க்கப்படுவார்.தலைமை பாஸ் ஏதாவது ஒரு காரணத்தால் இறக்கும்போது, குழு சிதறி போகாமல் தடுக்க, உடனடியாக அடுத்த தலைவராகப் பொறுப்பேற்க இருப்பவர்.   

அதிக நேரங்களில் முதல் நிலை தலைவனுக்கும், அண்டர்பாஸ் எனப்படும் ரெண்டாம் நிலை தலைவனுக்கும் கருத்து மோதல், ஒரு செயலில் ஈடுபடுவதா வேண்டாமா என்பதில் பிரச்சனை வரும்போது, குழு ரெண்டாக உடையவும் வாய்ப்புண்டு.     

ரெண்டாம் நிலையில் உள்ள அண்டர்பாஸ் சில சமயங்களில் டானை கொன்று விட்டு அந்தப் பதவிக்கு வரவும் தயங்க மாட்டார்கள்.    

எ.கா –  Dawood Ibrahim/ D-Company  முன்னாள் உறுப்பினரான சோட்டா ராஜன், 1993 ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பின் பின்னர் தாவூத்துடன் வகுப்புவாத அடிப்படையில் பிளவுபட்டார்.அபு சலீம், பாஹிம் மச்மாச் மற்றும் இன்னும் சிலர் தாவூத்துடன் பிரிந்து தங்கள் சொந்த மாபியா குழுக்களை  உருவாக்கினார்கள். 

‘மாபியா ஆப் இந்தியா’ குழுவில் ஜோக்ராஜின் மகன் சத்ருஜித், ரெண்டாம் நிலை தலைவன்/ அண்டர்பாஸ். ஜோக்ராஜ் மரணித்தால், மொத்த குழுவின் அதிகாரம் இவனிடம் வந்து சேரும்.    

consigliere/adviser-– தலைவருக்கு ஒரு ஆலோசகர். அவர் ஒரு நம்பகமான நண்பராகவோ,  மகனாகவோ இருக்கலாம். மாபியா குடும்பத்தில், 3 வது அதி சக்தி வாய்ந்த பதவி.

சில வருஷங்களாகப் பல்தேவ், இந்தக் குழுவில் consigliere/adviser/ஆலோசகர்/ associate  என்ற பதவியைத் தான் வகித்து வந்தார். இப்பொழுது இந்தப் பதவி ஜோக்ராஜால் பரணிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக கிளையின் தலைவனான பல்தேவிற்கு, விக்ரம் consigliere/adviser/ஆலோசகர்/associate  ஆக  இருக்கிறான். 

காபோ/capo– நான்காவது உயர்ந்த பதவி. இவரின் தலைமையில் சில நூறு அல்லது ஆயிரம் குழு மெம்பர்கள் இருப்பார்கள்.பரணி தமிழக கிளையின் நான்காவது கட்ட பதவியான கபோவாக இருந்து, இப்பொழுது ஆலோசகர் என்ற மூன்றாம் நிலைக்கு உயர்ந்து உள்ளான்.

சோல்ஜர் – குழுவின் அடிமட்ட உறுப்பினர். ‘Made man’ என்ற பதவி உயர்வு கிடைக்க,  ஒமர்டா/omerta என்று உறுதி மொழி, ரகசிய காப்பு பிரமாணம் எடுத்து, உயிரே போனாலும் குழுவின் ரகசியங்களை வெளியே சொல்லமாட்டோம் என்று இருப்பவர்கள். 

associate- குழுவின் உறுப்பினர். இவர் ஆலோசகராக இருப்பார். எந்த வித குற்றங்களிலும் ஈடுபட்டு இருக்க மாட்டார். ஆனால், குழுவின் பாதுகாப்பில் இருப்பவர்.குழுவின் சட்டம், நிதி பொறுப்புகளைக் கையாள்பவர். இவர் வக்கீல், மருத்துவர், ஹவாலா வர்த்தகர், காவல் துறையிலிருந்து கொண்டே, இந்தக் குழுவின் நண்பராய் இருப்பவர், தொழில்துறை நிறுவனர்கள்,   ஒற்று சொல்பவராக, குழுவிடம்  payroll/ ஊதியம், செய்த வேலைக்குப் பங்கு பெறுபவராக இருக்கலாம்.)

அத்தியாயம் 12

ஒரு முறை நீ ஏமாற்றப்பட்டால், உன்னை ஏமாற்றியவர் குற்றவாளி. ஒவ்வொரு முறையும் நீ ஏமாந்து கொண்டே இருந்தால், அது உன் முட்டாள்தனம்’  என்ற பழமொழி,  குடும்பம் என்று வரும்போது பொருந்துவதில்லை.

இங்கே உள்ளுணர்வு என்பதை பாசம், அன்பு, தனக்கு சொந்தம் என்ற உரிமையுணர்வு மழுங்கடித்து விடுகிறது.

‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்’ என்ற வார்த்தைக்கு ஏற்ப, குடும்பத்தில் ஒருவர் தவறு செய்வதாக உணரும்போது கூட, இந்தப் பாசம், அன்பு, ‘என் வீட்டினர், என் அப்பா, என் மகன் /மகள், என் கணவன்  இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள்’ என்று  தன் குடும்பத்தினரை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக,  ஐகானாக இவர்களைப் பார்க்கும் மனது, இவர்களிடம் உள்ள தவறுகளை, குற்றங்களைக் கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை.

அதே தான் மாலினி, சம்யுக்தா வாழ்வில் நடந்தது என்றே சொல்ல வேண்டுமோ!…

சம்யுக்தாவின் உள்ளுணர்வு, ‘ஏதோ ஒன்று சரியில்லை’ என்று கொடுத்துக் கொண்டு இருக்கும், எச்சரிக்கையின் விளைவே, மாலினி இறந்த பிறகும் சம்யுக்தா, பல்தேவுடன் வெளிநாட்டிற்கு செல்லாமல், இந்தியாவிலேயே தங்கி விட்டது.

அதே உள்ளுணர்வின் குரலே, இன்று தந்தைக்கு கூடத் தெரிவிக்காமல், ஈஸ்வருடன் தன் திருமணத்தை நடத்த ஆவண செய்து கொண்டிருந்தது.

‘தான் செய்வது சரி தானா?….’ லட்சம் முறையாவது தன்னிடமே வாதித்து விட்டாள் சம்யுக்தா. நேரம் ஆகஆக ஏதோ ஒரு இனம் புரியாத பயம், ஒரு அசவுகரியம் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மனம் அதன் போக்கில் எதை எதையோ நினைத்துக் கலங்கி கொண்டிருக்க, கைகள் தன்னிச்சையாக மொபைலில் இருந்த, போட்டோ கலரியில் இருந்த படங்களை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தது.

கள்ளம் கபடம்  இல்லாமல்  தன்னை அணைத்தவாறு சிரித்து கொண்டிருந்த ஈஸ்வரின் புகைப்படத்தைக் காதலுடன், புன்னகையுடனும், பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

அடுத்த சில புகைப்படங்கள் ஈஸ்வரின் அணைப்பில் சம்யுக்தா, ஹேமாவுடன் சம்யுக்தா, உடன் பணிபுரிபவர்கள், மற்ற பள்ளி, கல்லூரி  தோழமைகளுடன், மாலினியுடன் என்று புகைப்படங்கள் நகர்ந்து கொண்டே இருக்க, தன் தந்தை பல்தேவுடன் இருந்த புகைப்படம் வந்ததும், சம்யுவின் கரங்கள் தன் இயக்கத்தை அப்படியே நிறுத்தியது.

மீண்டும் கலக்கம் சூழ்ந்து கொள்ள, ‘தான் செய்வது சரி தானா?…’ என்ற கேள்வி சம்யுக்தாவை குடைய ஆரம்பித்தது.

‘தனக்கு இருக்கும் ஒரே சொந்தம் தன் அப்பா. அவரிடம் இந்தக் காதல், திருமணத்தைப் பற்றிச் சொல்லாமல் செய்வது சரி தானா?… சிறு வயது முதல் உடன் இல்லை. பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை என்று வாழ்பவர் தான். இந்நேரம் அவர் எந்த நாட்டில் என்ன செய்து கொண்டு இருக்கிறாரரோ!… யாருக்கு தெரியும். அவரை எதுக்கு தொந்தரவு செய்ய வேண்டும்?…’ என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாலும், எப்பொழுதும் தன் தந்தையை பார்க்கும் போதெல்லாம் தோன்றும் ஒரு அசவுகரியம், தவிப்பு, நடுக்கம், விலகல் தன்மை, ஏதோ அவரிடம் தவறாக இருப்பதாய் தோன்றும் எண்ணம், அவளே அறியாமல் அடியாழத்தில் பயப்பந்தினை உருளச் செய்து கொண்டிருந்தது.

‘பாசம் இருக்கிறதா, இல்லை அதை வெளியே காட்ட தெரியாதவராக இருந்தாலும், தனக்கு தன் தந்தை மேல் பாசம் இருக்கிறது தானே!… அப்படி என்ன மன்னிக்க முடியாத குற்றத்தினை தந்தை செய்து விட்டார் என்று அவரிடம் கூடச் சொல்லாமல் இந்தத் திருமணம்!…’ என்று பாசம் கொண்டு விட்ட பேதை  மருகிக்கொண்டிருந்தாள்.. 

நினைவு தெரிந்த நாளாய் தந்தைக்கும், மகளுக்கும் ஒட்டுதல் இல்லை.  மாலினி   என்ற   ஒற்றை   கயிறு   தான், தந்தையையும், மகளையும் இணைக்கும்   பாலமாய் இருந்தது.

அந்தக் கயிறு அறுந்து விட, தந்தையும், மகளும் தனித்தனி தீவாகி போனார்கள். பெரு மூச்சு ஒன்று சம்யுக்தாவே அறியாமல் அவளிடமிருந்து வெளிப்பட்டது.

அடுத்த புகைப்படத்தில் சம்யுக்தா, ஹேமாவிற்கு நடுவே நின்றவாறு, அவர்கள் இருவரையும் அணைத்தவாறு நின்றிருந்தவனை கண்டதும் சம்யுக்தாவின் உதட்டில் புன்முறுவல் தோன்றியது.

சம்யுவையும், ஹேமாவையும் அணைத்து கொண்டு நின்றிருந்தவன் விக்ரம்.

ஹேமாவிற்கு அடுத்தபடி சம்யுவின் நெருங்கிய தோழமை என்ற லிஸ்டில் இருப்பவன். ஹேமாவின் ஆண்பால் என்று கூடச் சொல்லலாம் நட்பு விஷயத்தில்.  

மாலினி பாலமாய் இருந்ததை போல், இப்பொழுது   விக்ரம், சம்யுக்தாவிற்கும், பல்தேவிற்கும் பாலமாய் இருக்கிறான்.    

பல்தேவை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், முதலில் பி.ஏ வான விக்ரமை தான் தொடர்புகொள்ள    வேண்டும். சொந்த மகள் என்ற உரிமையில், சட்டென்று மொபைல் எடுத்து, நினைத்த நேரத்தில் எல்லாம் சம்யுக்தா, பல்தேவை அழைத்து விட முடியாது. யாராக  இருந்தாலும், விக்ரமை தாண்டியே பல்தேவை நெருங்கவோ, பேசவோ முடியும்.

விக்ரம்!…  

5 அடி 7 அங்குல உயரத்தில், 70 கிலோ எடையில், 40-34-12  என்ற உடல் அமைப்பில், சட்டென்று பார்க்க மலையாள நடிகர், ‘ஜெயசூர்யாவை’ போல் இருந்தான்.     

பல்தேவிற்கு வலது கை, இடது கை, நம்பிக்கை, தும்பிக்கை என்று எல்லா கையும் இவன் தான்.   

மாலினி உயிரோடு இருந்தபோது, ‘தூரத்து சொந்தம்’ என்று பல்தேவ் வீட்டிற்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்தது விக்ரம் ஒருவனை மட்டும் தான்.எப்படி உறவு என்று பல்தேவ் யாரிடமும் சொன்னது இல்லை. விக்ரமை படிக்கச் வைத்தது  பல்தேவ் தான் என்ற சந்தேகம் சம்யுக்தாவிற்கு உண்டு. 

முதலில் சம்யுக்தாவிடமும், ஹேமாவிடமும் விலகியே இருந்தான். எல்லோரிடம் இருந்தும்  ஒரு ஒதுக்கம், விலகல்என்று இருந்தவனை, தன் கூட்டை விட்டு வெளியே வரச் செய்து, தங்கள் நட்பு என்னும் வட்டத்திற்குள் இணைத்தது ஹேமாவே தான்.   

‘த்ரீ மஸ்கட்டரியார், மூன்று சிப்மங்கஸ்’, என்று சொல்லும் அளவுக்கு, பிரிக்க முடியாத ஆழ்ந்த நட்பு மூவருக்குள்ளும் உருவாகியிருந்தது. 

டெல்லியில் ஹாஸ்டெலில் படித்துக் கொண்டிருந்தவன், வார இறுதி நாட்களில் சென்னைக்கு வந்து விடுவான். இல்லையென்றால் மாலினி இருந்த வரை அவருடன் சம்யுவும், ஹேமாவும் விக்ரமை காண செல்வார்கள்.    

விக்ரம் பள்ளி முடித்ததும், வெளிநாட்டில் சென்று படிக்கச் மூன்று வருடம், ஒரு வருடம் தனியார் நிறுவனத்தில்  ஆடிட்டிங் வேலை என்று சம்யுவையும், ஹேமாவையும் பிரிந்து சென்றான்.  

CA/chartered accountant முடித்தபிறகு கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களுக்கு மேலாகப், பல்தேவிடம் பி.ஏவாக, ஆடிட்டர் ஆகப் பணி புரிகிறான்.  

பல்தேவ் செய்யும் சட்டவிரோத செயல்கள்மூலம்  வரும் பணத்தை எல்லாம், ‘ஹவாலா சேனல்’ மூலம் வெள்ளையாக மாற்றுவது  மட்டுமே இவன் வேலை. மாஸ்டர் மைண்ட்.  

பல்தேவ் தன்னை அடுத்து ஒருவனை முழுமையாக நம்புகிறார் என்றால், மகன் ஸ்தானத்தில் வைத்திருக்கிறார் என்றால், அது விக்ரம் ஒருவனை மட்டும் தான். 

விக்ரம் சொன்னால் அது  சரியாகத் தான் இருக்கும் என்று நம்பும் அளவுக்கு விக்ரம், பல்தேவிற்கு இன்றியமையாதவன்.சொந்த மகள் சம்யுக்தாவிடம் கூட இந்தளவுக்கு பல்தேவ் பாசம் காட்டியதில்லை. அந்த அளவுக்கு விக்ரம், பல்தேவிற்கு ஸ்பெஷல்.      

எந்த வேலை செய்து, கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது என்பதெல்லாம் பல்தேவ் இவனிடம் சொன்னதும் இல்லை.    

‘நதிமூலம், ரிஷிமூலம் ஆராய கூடாது’ என்று சொல்வார்கள். நதியின் மூலத்தை/origin ஆராய்ந்தால், அதை நம்மால் குடிக்க முடியாது. அதே போல், ‘ரிஷிமூலம்’, ரிஷிகளின் முன் வாழ்க்கையை பற்றிச் சிந்தித்தால், அவா்களின் அருளும், ஆசியும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதால் ‘நதிமூலம், ரிஷிமூலம்’ ஆராய கூடாது. 

இன்றைய காலகட்டத்தில், நிழல் உலகத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும், என்னென்ன வேலை செய்து, எப்படியெல்லாம் பணம் வருகிறது என்று ஆராய கூடாது என்பதே ஹவாலா மூலம், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதன் அடிப்படை.     

ஹியூமன் smuggling, விபச்சாரம், ப்ரோனோக்ராபி போன்றவற்றில்  பல்தேவும்  இப்பொழுதெல்லாம் நேரிடையாக ஈடுபடுவதில்லை என்பதாலும், அதற்குச் சத்ருஜித், ஜோக்ராஜ் தனி குழு வைத்திருக்கிறார்கள் என்பதாலும், அதில் வரும் பணத்தை, விக்ரமை வைத்து வெள்ளையாக மாற்றுவது மட்டுமே பல்தேவ் வேலை.  

தங்க கடத்தல், போதை மருந்து கடத்தல், கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் குற்றங்கள், kidnap for ransom, சைபர் குற்றங்கள், பைனான்சியல் முறைகேடுகள் போன்றவற்றில் மட்டுமே விக்ரமின் பங்கு நேரிடையாக உண்டு.

மாபியா ஆப் இந்தியா குழுவின் தமிழக தலைமையில், பல்தேவுக்கு அடுத்த இடத்தில், பதவியில் இருப்பவன்.

இது எதுவும் சம்யுக்தா அறியாத ஒன்று. எப்படி பல்தேவின் இன்னொரு கருப்பு பக்கம் சம்யுக்தா அறியாமல் செய்யப்பட்டு இருக்கிறதோ, அதே போல் விக்ரம், பல்தேவுடன் இல்லீகல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதும் சம்யுக்தாவின் கவனத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

தாயை  இழந்த சமயத்தில், சம்யுக்தாவின் மனம்  தந்தையை ஆறுதலாய் தேட, அங்கு அந்தத்  தந்தை  இல்லாமல் போனார்.

ஆற்றுவார் தேற்றுவாரின்றி  கரைந்த சம்யுக்தாவிற்கு,  விக்ரம், ஹேமாவின் நட்பென்னும் கரமே பற்றுக்கோலாய் இருந்தது என்னவோ உண்மை. மாலினி இழப்பிலிருந்து சம்யுவை மீட்டவர்களும் இவர்கள் இருவர் தான்.   

விக்ரம், சம்யுக்தவிற்கும் இன்றியமையாதவன்.

மாலினி இறந்த பிறகு, பல்தேவ் பிசினெஸ் என்று  மகளைக் காண கூட வராமல் சுற்றி கொண்டு இருந்தாலும், வாரத்திற்கு, மாதத்திற்கு ஒரு முறை, சம்யுக்தாவை காண நேரில் வந்து விடுவான் விக்ரம்.

வர முடியாத நாட்களில், தினமும் சம்யுக்தாவிடம் பேசி, அன்றைய அவளின் பொழுதுகள் எப்படி போனது என்று அறிந்து கொள்ளாமல் சம்யு, விக்ரம்  நாள் முடியாது.

சம்யுக்தாவின் ஒட்டுமொத்த வாழ்க்கை, இவனின் நேரடி கண்காணிப்பில் விட்டுவிட்டு, பல்தேவ் மகளைப் பற்றிய கவலை இல்லாமல் இருப்பவர்.  

“போ விக்கி…  அப்படி என்ன தான் வேலை வேலைன்னு இருக்கார் டாடி. எனக்காகத் தானே இத்தனை பாடுபட்டு உழைக்கிறார். நான் இல்லை சொல்லலையே!… 

பட்…  கோடி  ரூபாய் அவர் கொண்டு வந்து கொடுத்தாலும், ஒரு மகளாய் அவர் கூட, டைம்   ஸ்பென்ட் பண்ண சிறு வயதில் இருந்தே, எவ்வளவு ஏங்கி இருக்கேன் என்று தெரியுமா?

இதோ ஹேமாவின் அப்பா, கூடத் தான் வேலையென்று நாடு விட்டு நாடு சுற்றி கொண்டிருக்கிறார். ஆனா, அவ கூட அவங்க அப்பா கூட ரொம்ப க்ளோஸ். அவங்களும் ஆப்சென்ட் பெற்றோர்கள் தானே!…” என்று சம்யு வருந்த, ஆறுதலாய் விக்ரம், ஹேமாவின் கரங்கள் நீண்டன.

“கூடப் படிச்ச பிள்ளைகளோட அப்பா எல்லாம், தினமும் ஸ்கூல் கொண்டு வந்து விட்டு, மீண்டும் கூட்டி போய்,  வீக் எண்டு சினிமா, ட்ராமான்னு   இருக்கும்போது, மனசு எப்படி இருக்கும் தெரியுமா?… அவர் பணத்தை வைத்து நான் இழந்த இதையெல்லாம்   மீட்க முடியுமா என்ன?

ஏதோ அம்மா செய்வாங்க தான். ஆனா, ஒரு பெண்    குழந்தைக்கு, ‘முதல் ஹீரோ அவளுடைய அப்பா’  தானே!…  அந்த ஹீரோ, என் வாழ்வில், ஏன்    இருந்தும், இல்லாமல் போனார்?… அப்பாவின் செல்ல இளவரசியாக இருக்கும் கொடுப்பணை, எனக்கேன்  இல்லாமல் போனது?

அம்மா இருந்தாங்க… அப்போ வேலைன்னு போனார். பார்த்துக்க, அன்பு காட்ட அம்மா இருந்தாங்க. ஆனா, அம்மா இறந்த பிறகு கூட, என்னை இங்கேயே விட்டுட்டு, வேலைன்னு வெளிநாட்டில் இருந்தால் எப்படி?.. பேச்சுக்குக் கூட என்னைக்  வந்து தங்கு என்றும் சொல்லவில்லை. நானே கேட்டும், ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று   ஏன் சொல்கிறார்?… இப்போ கூட விலகியே  இருந்தால் எப்படி விக்கி?”  என்று கண்  கலங்குபவளை, என்ன சொல்லித் தேற்றுவது என்று விக்கிரமிற்கு புரியாமல் தான் போனது.

விக்ரமும் தந்தை இல்லாமல் வளர்ந்தவன் தான். சம்யுக்தாவின் மனக்குமுறல் புரிந்து கொள்ள முடிந்த  அவனால், அதற்கான பதிலைத் தான் சொல்ல முடியாத நிலை.

சம்யுக்தா மௌனமாய் கண்ணீர் வடிக்க, அவளைத் தன் தோளின் மீது சாய்த்து, அணைத்து கொண்டவனின் உள்ளம், மௌன மொழியில் சம்யுக்தவிற்கான பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தது.

‘சம்யுக்தா!… உன்னை மாதிரித் தேவதை பெண்களிடம் சொல்லக்கூடிய பதிலும் இல்லை எங்கள் வாழ்வு.

தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் உன்னிடம், உன்  தந்தைக்கு பாசம், ‘பணத்தின் மீது மட்டுமே’ என்று  எப்படி சொல்வேன்?

‘உலகின் மிகக் கொடிய அரக்கன்’ உன் தந்தை என்று எப்படி, தேவதையிடம் சொல்ல முடியும்?… உன் வாழ்க்கையே பொய், கானல் நீர், ஒரு மாயை என்பதை எப்படி சொல்ல முடியும்?

செய்யும் தொழிலின் கறுப்புபக்கங்கள், உனக்குத் தெரிய கூடாது என்றால், உன்னைத் தூரத்தில் நிறுத்த வேண்டியது அவசியம் என்பது மற்றொரு காரணம்  என்பதை எப்படி சொல்ல முடியும்?

பல உயிர்களை அழித்து, பல குடும்பங்களைச் சிதைத்து, அதில் தான் சம்யுக்தா என்ற பெண்ணின் வாழ்வுக்கான அஸ்திவாரமே, அந்த நொடிவரை போடப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற உண்மையை எப்படி சொல்ல முடியும்?… சொன்னால் உன்னால் தாங்க முடியுமா?         

நிழல் உலகில் யார் எப்பொழுது நண்பர்களாய் இருப்பார்கள், யார் முதுகில் எப்பொழுது குத்துவார்கள், யார் பாசக்கயிறாய் மாறுவார்கள் என்பதெல்லாம் கணிக்க முடியாத ஒன்று. எனவே, உன் தந்தைக்கு குடும்பம் என்ற ஒன்றே இருப்பது, வெளிஉலகிற்கு தெரியாமல் மறைத்து வருகிறோம் என்பதை எப்படி சொல்வது?

நீ எந்த மனிதனின் பாசத்திற்காக, ‘அப்பா!.. அப்பா!.. என்று உருகி கொண்டு இருக்கிறாயோ, ‘அந்த மனிதனுக்கு குடும்பமே கிடையாது’ என்று இருப்பது மட்டும் உனக்குத் தெரிய வந்தால்!….   

அதுவும் மாலினி கொல்லப்பட்ட பிறகு, அது போன்ற ஒரு நிலைமை உனக்கு வந்து விடக் கூடாது என்பதில் பல்தேவ் அதிக கவனத்துடன் இருக்கிறார். வெளியுலகை பொறுத்தவரை பல்தேவ் திருமணம் ஆகாதவர். தனி கட்டை. மனைவி, மகள் என்று யாருமே கிடையாது. நானே அவரின் உறவு என்பது உட்பட எல்லாம் மறைக்கபட்டு இருக்கிறது. அப்படியொரு மாயையை உருவாக்கி இருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.’ என்று மனதோடு பேசிக் கொண்டு இருந்தான் விக்ரம். 

சமூக வலைத்தளங்கள் எதிலும் சம்யுக்தா, மாலினி, பல்தேவ் ஒன்றாய் இருக்கும் போட்டோ கிடைக்காது. அப்படியே இருந்திருந்தாலும் நீக்கப்பட்டு இருக்கும். மாலினி இருக்கும் போதே இந்த நடைமுறை பின்பற்ற வந்திருந்தது.

பல்தேவ் சம்யுக்தாவை சந்திப்பது கூடத் தங்களை யார் என்று தெரியாதவர்கள் இருக்கும் வெளிநாட்டில், ஏதாவது ஒரு பீச் ரிசார்ட்டில் தான் இருக்கும்.

“ஹே!… அங்கிளுக்கு என்னடி ஆச்சு?… ஆன்ட்டி இறந்த பிறகு, ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கார்… ஹி இஸ் ஹயிலி டெலூசினல்/delusional. எதுக்கு அப்பாவும், மகளும் மீட் செய்ய இத்தனை கெடுபிடி!… டாக்டர் கிட்டே கூட்டி சொல்றது பெட்டர்.” என்று ஹேமா சொல்லும் அளவுக்குத் தான், இவர்கள் சந்திப்பு இருக்கும்.

‘என்னவென்று சொல்ல முடியும்?… ஒரு நாட்டின் பிரதமருக்கு உண்டான பாதுக்காப்பு ஏற்பாடுகளைக் கடந்து தான் சம்யுவும், ஹேமாவும் விக்ரமுடன் பல்தேவை சந்திப்பார்கள். இப்படி பல்தேவை சந்திக்கும் சமயங்களில் வீட்டிலேயே மொபைல், லேப்டாப் போன்றவற்றை விட்டு வர வேண்டும் என்று ஆயிரம் கெடுபிடி இருக்கும்.

“எதுக்கு விக்கி… இதெல்லாம்…. ?” என்ற சம்யுக்தாவின் கேள்விக்கு,

“பாதுக்காப்பிற்காக…” என்று மட்டுமே விக்ரமால் பதில் சொல்ல முடியும்.

“யாரிடமிருந்து பாதுகாக்க இத்தனை கெடுபிடி?…” என்ற கேள்விக்குப் பதிலே இருக்காது.       

“பதில் சொல்லு விக்கி. கல்லு கிட்டே கேட்டால் கூடப் பதில் வந்துடும். நீ இருக்கியே!… என்னவோ போடா…” என்று சம்யுக்தா டென்ஷன் ஆகும் படி தான், இருக்கும் விக்ரம் மௌனம்.

‘என்னடி பதில் சொல்லச் சொல்றே!… பதிலை நான் சொன்னால் அதைத் தாங்க உன்னால் முடியுமா?  தவிர என்றைக்காவது, ‘காவல் துறை என்கவுன்ட்டர்’ என்று வந்து நின்றால் கூட, பல்தேவ் என்ற மனிதருடன் உனக்காக உறவு, வெளியே தெரிய கூடாது என்பதில் வெகுகவனமாய் இருக்கிறோம் என்று சொன்னால் அதை ஜீரணிக்க உன்னால் முடியுமா?

‘குற்றவாளியின் மகள்’ என்பது கதைகளில், சினிமாக்களில் வேண்டும் என்றால் படிக்கச் நன்றாக இருக்கலாம். ஆனால், நிஜ உலகத்தில், ‘ஒதுக்கம், புறக்கணிப்பு’ என்பது மரணத்தைவிடக் கொடுமையானது. சமூகத்தில் உனக்கு அப்படியொரு முத்திரை விழக் கூடாது என்று மிகக் கவனமாய் இருக்கிறோம் என்று எப்படியடி சொல்லச் சொல்கிறாய்?

காவல் துறை, சிபிஐ, ராப் போன்றவற்றின் விசாரணை முறைகள் எல்லாம், ‘மரணமே மேல்’ என்று கதறும் வண்ணம் இருக்கும். கொடிய  மிருகங்களை வேட்டையாடுபவர்களிடம் அன்பு, கருணை, இரக்கம் என்பதையெல்லாம் எதிர்பார்க்க தான் முடியாது. இங்கே அந்த மிருகம் வேட்டையாடபடவில்லை என்றால் அப்பாவி உயிர்கள் தான் ஆபத்தில் சிக்கும். அந்த நரகத்தை எல்லாம் பார்க்கவோ, அனுபவிக்கவோ கூடாது என்பதால் தான், இத்தனை மெனக்கெடுகிறோம் என்ற உண்மையைச் சொன்னால் தாங்குவாயா? 

எல்லா பாதுக்காப்பு துறை அதிகாரிகளும் பல்தேவிடம் கை நீட்டிப் பணம் வாங்குபவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே!… வெள்ளிக்காசுக்கு ஆசை பட்டுப் போட்டுக் கொடுக்கத் தயங்காத, ‘ஜுடாஸ்கள்’ இங்கே அதிகம் ஆயிற்றே!…

ஒரு பக்கம் எப்பொழுது பல்தேவை போட்டுத் தள்ளலாம் என்று காத்திருக்கும் மாபியா குழுக்கள், இன்னொரு புறம் பாதுகாப்பு துறை  என்று  யாரின் கையில் நீ சிக்கினாலும், ‘உன் கதை அதோடு முடிந்தது’  என்பதை வாய் விட்டு என்னைச் சொல்லச் சொல்கிறாயா?…’  என்று பதில் சொல்ல முடியாதவனாய் கற்பாறையை போல் நிற்க வேண்டிய அவசியம் விக்ரமிற்கு. 

இப்படி சம்யுக்தாவின் வாழ்வில், நெருங்கிய இரு தோழமைகளில் ஒருவனான, விக்ரமிடம் கூடத்   தெரிவிக்காமல் தான், சம்யு ஈஸ்வரை மணக்க முடிவு எடுத்தது.      

நண்பனாய் இருந்தாலும், ஈஸ்வருக்கும் தனக்குமான காதலை பற்றி விக்ரமிடம் சொல்ல, ஏதோ தயக்கம்  சம்யுக்தாவை தடுக்க, சம்யுக்தாவின் இந்தக் காதல், திருமணம் விக்ரம், பல்தேவ் காதுகளுக்கு எட்டாமல் போனது.

‘நட்பு தானே!…’ என்று சம்யு, ஈஸ்வரின் பழக்கத்தை, அசிரத்தையாக இருந்து விட்ட விக்ரம், ‘அது காதல்’  என்று தெரிந்து இருந்தால், ஈஸ்வரை கொலை செய்யக் கூடத் தயங்கி இருக்க மாட்டான் என்பது தான் உண்மை.  

ஏனென்றால் விக்ரம் என்பவன் சம்யுக்தாவிற்கு நண்பன், பாதுகாவலன், வழிகாட்டி மட்டுமல்ல காதலனும் கூட.

விக்ரம் சம்யுக்தாவை, சம்யுக்தாவே அறியாமல்  காதலிக்கிறான்.

‘தன் கையை மீறி எங்கே போய் விடப் போகிறாள்!…’ என்ற எண்ணம், பிறகு, ‘தன் மனதை சொல்லிக் கொள்ளலாம்’ என்ற அசிரத்தை,  பல்தேவிற்கும், ‘சம்யுவை விக்ரமிற்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருப்பதால்  பிரச்சனை இல்லை’ என்று விக்ரம் அஜாக்கிரதையாக இருந்து விட, விக்ரம், பல்தேவ்  கட்டுக்காவலையும் மீறிச் சம்யுவின் மனம் ஈஸ்வர் மேல் சாய்ந்திருந்தது.

‘இலவு காத்த கிளியாக’ விக்ரம் இருக்க, பெண் கிளியோ, இன்னொரு ஆண் கிளியைத் தன் வாழ்க்கை துணையாகத் தேர்ந்தெடுத்து விட்டது.  

அத்தனை நெருங்கிய நண்பனான விக்ரமிடம், ஈஸ்வர் மேலிருந்த தன்  காதலை சொல்லச் சம்யுக்தாவை ஏதோ ஒன்று தடுத்தது.  ஒருவேளை விக்ரம் தங்கள் காதலை அறிந்தால், அது நிச்சயம் பல்தேவ் காதுகளுக்குப் போய் விடும் என்ற முன்னேர்ச்சரிக்கையோ என்னவோ!…  

ஒருவேளை சம்யு, ஈஸ்வர் காதலுக்கு, பல்தேவ் ஒற்றுக்கொள்ள போவதில்லை என்று உள் மனம் சம்யுவை எச்சரித்ததோ!…   

இல்லை இப்பொழுது ஈஸ்வரை மணக்கவில்லை என்றால், எப்பொழுதும் அவன் தனக்கானவன் இல்லை என்று உள் மனம் உணர்ந்ததோ, சம்யு மணப்பெண்ணாகக் கோயிலில் காத்திருந்தாள்.    

‘ஒருவேளை முன்னரே விக்ரமிடமாவது  சொல்லியிருந்தால், பின்னர் நடக்கும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்தி இருக்கலாமோ!…’ என்று பலமுறை தன்னை தானே நொந்து கொள்ள போவதை சம்யு அறியவில்லை.  

திருமணம் முடித்து, ‘மாலையும் கழுத்துமாய் போய்   நின்று, ஆசீர்வாதம் வாங்கி திரும்பி விடலாம்’ என்ற அளவிற்கு தான் தந்தை மகளின் உறவு இருந்தது. 

History repeats.

அன்று, மாலினி குடும்பத்தை எதிர்த்து, பல்தேவை எப்படி கரம் பிடித்தாரோ, அதே போல் இன்று சம்யுக்தா, தன் தந்தை பல்தேவிடம் தெரிவிக்காமல் கூட, மணமேடை ஏற ஆயுத்தமாகி விட்டாள். என்னவொன்று மாலினி குடும்பம் முழுவதுமாய் விலகி விட்டது. பல்தேவ் அப்படி இருப்பாரா?

நீண்ட நெடிய மன போராட்டத்திற்கு பிறகு, ‘ஆவது ஆகட்டும்’ என்று சம்யுக்தா, தன் தயக்கத்தையும் மீறி,  விக்ரமையும், பல்தேவையும் அழைத்தபோது, அவர்கள் சம்யுவின் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை. தொழிலைக் கவனிக்கும் வெறியில், சம்யு வழக்கம் போல், பின்னால் சென்று விட்டாள்.

‘தேஜ்’  என்பவன் ஏற்படுத்திய சேதத்திற்காகவும், அவனை அடக்கவும், மும்முரமாகச் சத்ருஜித்  விவாதம் செய்துகொண்டிருந்தான் பல்தேவிடமும், விக்ரமிடமும்.

சம்யுக்தா கோயிலில் இருக்க, அமெரிக்காவிலிருந்து சொந்த விமானத்தில் கிளம்பி இருந்த விக்ரமும், பல்தேவும், சென்னை நகரின் இன்னொரு மூலையில் ஒரு வீட்டில் இருந்த சத்ருஜித் உடன் பேச முயன்று கொண்டிருந்தார்கள். முயல மட்டுமே அவர்களால் முடிந்தது.

பேசச் சத்ருஜித் அமைதியாய் இருந்தால் தானே!…

சம்யுக்தா கோயில் வாசலில் வந்து இறங்குவதற்கு  சில மணி நேரம் முன்பிருந்தே, அதே சென்னையின் இன்னொரு பக்கத்தில் இருந்த மாளிகை போன்ற வீட்டினில் சத்ருஜித் கோபத்தின் உச்சத்தில் இருந்தான் என்று சொல்ல வேண்டுமோ!…

விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இருந்தே சத்ருஜித் உடன், வீடியோ காலில் இருந்தார்கள் பல்தேவும், விக்ரமும்.

‘மிருகம் உறுமுகிறதோ!…’ என்று சந்தேகபடும் வண்ணம் ஒருவன் ஆத்திரத்தில் கர்ஜிக்கும் ஒலி கேட்டது. தேஜ் ஏற்படுத்திய நஷ்டம், கொடுத்த தோல்விகளைத் தாங்க முடியாதவனாய், கொதிநிலையை எல்லாம் கடந்து, பார்க்கவே நிஜ அரக்கன் போல், காட்சியளித்து கொண்டிருந்தான் சத்ருஜித்.

விமான நிலையத்தை அடைந்து, எல்லா பார்மாலிட்டீஸ் முடிந்து, அங்கு இருந்த அவர்களின் சொகுசு ஜெட் விமானமான, ‘Dassault Aviation கம்பெனியின் பால்கான்/Falcon 8X என்ற விமானத்தில் பல்தேவ், விக்ரமின் பயணம் இந்தியாவை நோக்கி ஆரம்பமானது.     

‘டசால்ட் ஏவியேஷன்’ என்பது ஒரு பிரெஞ்சு விண்வெளி நிறுவனமாகும். இது இராணுவ விமானம் மற்றும் வணிக ஜெட் விமானங்களின் உற்பத்தியாளராக நிபுணத்துவம் கொண்டது.‘பால்கன் ஜெட் விமானங்கள்’ அவற்றின் செயல்திறன், performance, flexibility and comfort, , பெயர் பெற்றது. அதிக தூர பயணத்தை, எந்த இன்னலும் இல்லாமல், இன்னும் அதிக செயல்திறனுடன் சுலபமாகக் கடக்க உதவுகிறது.  

அதன் கேபின் எனப்படும் உள்புறம், ஏறக்குறைய 43 அடி கொண்டு, பால்கன் குடும்ப விமானங்களில் மிக நீளமானது. முப்பதிற்கும் மேற்பட்ட, தனித்துவமான தளவமைப்புகளின் தேர்வையும் வழங்குகிறது.பதினைத்து பேருக்கும் மேல் பயணிக்கக்கூடிய வகையில், ஒரு ஐந்து நட்சத்திர சூட்டுக்கு சமமான எல்லா வசதிகளும் கொண்ட ஜெட் அது. பறக்கும் சுவர்க்கம்.

விமானம் டேக் ஆப் ஆனதிலிருந்து முதல் அரை  மணி நேரம் வீடியோ அழைப்பு நிறுத்தப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்தபிறகும் கூட மீண்டும் சத்ருஜித்தை அழைக்கப் பல்தேவ் அவசரம் காட்டவில்லை.

அழகான பார்பி பொம்மை போன்ற விமான பணிப்பெண், மினி ஸ்கர்ட்டில் பல்தேவ், விக்ரமிற்கு தேவையான உணவினை பறிமாறினாள்.

“பாஸ் உங்களுக்குப் பிடித்த பிரெஞ்சு டோஸ்ட், ஆலிவ் பிஸ்ஸா… மிஸ்டர் விக்ரம்!… உங்களுக்குப் பிடித்த லசங்கா. வேறு எதுவும் வேண்டுமா?…” என்றாள் அவள்.

“ஹ்ம்ம் யெஸ் டியர்… நீ எப்படி இவ்வளவு அழகாய் இருக்கே என்று தெரிய வேண்டும்…” என்றான் விக்ரம் புன்னகையுடன்.

“ஓஹ் தாங்க்யூ டார்லிங்…” என்றவள் அடுத்த நொடி, விக்ரமின் மடியில் அமர்ந்து அவனை இறுக அணைத்திருந்தாள்.

“யு டூ லூக்கிங் ரியலி ஹண்ட்ஸோம் டியர்…” என்றவள் விக்ரம் கன்னத்தில் தன் இதழை ஆழமாய் புதைத்தாள்.  

விக்ரம் மடி மேல் அமர்ந்து, அவன் தட்டில் இருந்த உணவினை விக்ரமிற்கு ஊட்டி விட ஆரம்பித்தவளை அணைத்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.    

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அந்த இடத்தைச் சுத்தம் செய்தவள், “நான் எப்படி அழகாய் இருக்கேன் என்று தனியா வந்து தெரிஞ்சுக்கோங்கோ…” என்றவள், விக்ரம் கையில் ஒரு பேப்பரை கொடுத்து,

“இது என் பெர்சனல் மொபைல் நம்பர் டியர்… என் அழகை நீ ஆராய்ச்சி செய்ய  எங்கே, எப்போ சந்திக்கலாம் என்று கூப்பிட்டு சொல்லு… ஐ வில் பி வைட்டிங்…”என்றவள் கண் அடித்து விட்டு, பறக்கும் முத்தமொன்றை பறக்க விட்டு, ‘இல்லையா, இருக்கா என்ற சந்தேகம்’ வரச் செய்யும் இடையில் ஒரு நடனத்தையே ஆடிக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

“பொண்ணுங்க கிட்டே நீ ரொம்ப பிரபலம் என்று கேள்வி பட்டேன்… இப்போ தான் நேரில் பார்க்கிறேன். ரொம்ப வருசமாய் என் கிட்டே வேலை செய்யறா… உன் லீலையை அவ கிட்டே காட்டி, அவளை அம்மா ஆக்கிடாதே!…”என்றார் பல்தேவ்.

“சின்ன வயசில் நீங்கச் செய்யாதாத அங்கிள்?.. தானா வந்து பட்சி சிக்குது. பொறிக்கலைனா எப்படி?” என்றான் விக்ரம் தன் தோளை ஸ்டைலாகக் குலுக்கி.

“உண்மை… லஸ்ட் ரத்தத்தை சூடாகும் தான். ஆனால், காதல் இல்லா காமம் திகட்ட ஆரம்பித்து விடும் விக்ரம். முழுமை கிடைக்காது. காலம் செல்லச் செல்ல, தேவைக்கென்று உடல் இருக்குமே தவிர, அதில் நிறைவு இருக்காது. படுக்கைகளும், ஆதில் வரும் பெண்களும் மாறிக் கொண்டே இருக்கலாம். எல்லாம் ஒரு கால கட்டத்தில் அலுத்து விடும்.” என்றார் பல்தேவ்.

அவர்கள் பருகப் பழரசத்தை மீண்டும் அந்தப் பார்பி கொண்டு வைத்து வைக்க, அவளை இந்த முறை இழுத்து தன் மடி மீது அமர வைத்துக் கொண்ட விக்ரம்,

“அப்படி அலுக்கும்போது பார்த்துக்கலாம் அங்கிள். ஆனால், இந்தப் போதை அலுக்கவே அலுக்காது போலிருக்கே. அதுவரை, 

இன்பம் இரவு… தான்

எல்லாம் உறவுதான்

பாலில் பழம் போலே

இந்தப் பாவைக்… கொஞ்சுவாள்

பள்ளி வரச்…சொல்லி

இந்தத் தோகை கெஞ்சுவாள்

மறந்து நான்…

மயங்க…வா..

செவ்வாய்… இதழ் பெண்ணில்

எனை மூழ்கிக் களிக்கிறேன்” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து,  பாடலை மெல்ல பாட, கிண்கிணியாய் சிரித்தாள் அந்த விமான பணிப்பெண்.   

“ஒகே டியர்… எங்களுக்கு வேலை இருக்கு… யு கேன் கோ நவ்…” என்ற விக்ரம் அவளை விடுவிக்க, புன்னகையுடன் அகன்றாள் அவள்.

எதையும் பேசாமல், தீவிர யோசனையுடன் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்தவாறு ஆழ்ந்த யோசனையில் இருந்தார் பல்தேவ்.  

“என்ன அங்கிள்… வாட்ஸ் ஈட்டிங் யு… சில நாளாகவே ரொம்பவும் யோசனையில் இருப்பது போலிருக்கீங்க… என்ன விஷயம்?” என்றான் விக்ரம்.    

“எதுக்கு சத்ருஜித் நம்மை அமெரிக்க விட்டுக் கிளம்ப சொன்னான் என்று புரியவில்லையே!… அதான் யோசிச்சுட்டு இருக்கேன்.” என்றார் பல்தேவ் யோசனையுடன்.

“பின்னே அந்தக் கிழம் ஜோக்ராஜ் செய்து வைத்திருக்கும் வேலை மட்டும் வெளியே தெரிந்தால், இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவனின் தூரத்து சொந்தத்தைக் கூட விடாமல் கருவருப்பார்கள் என்பது புரிந்திருக்கும். அதான், அமெரிக்காவில் செயல்படும் கிளையை அப்படியே, சார்லி கிட்டே கொடுத்துட்டு, வருமானத்தை மட்டும் வெளிநாட்டு வங்கிக்கு மாற்றச் சொல்லிட்டான். நான் தான் அதைச் செய்து கொடுத்தேன். உங்க கிட்டே சொன்னதாய் சொன்னானே. சொல்லலையா?…” என்றான் வீக்கம் குழப்பத்துடன்.

இல்லையென்பது போல் பல்தேவ் தலையசைக்க, “மீண்டும் தமிழக பொறுப்பை அந்தப் பரணியிடமிருந்து உங்களுக்குக் கொடுக்க என்று நினைக்கிறன்.நேத்து இரவிலிருந்து அந்தப் பரணியை காணோமாம். தூக்கியது சத்ருவா, தேஜா என்று குழப்பமாய் இருக்கு.” என்றான் விக்ரம்.

“நிச்சயம் இது சத்ரு வேலையாகத் தான் இருக்கும்.” என்றார் பல்தேவ் ஆருடம் போல்.           

“சான்ஸ் இருக்கு. எத்தனை கோடி பொருள், இடம் சேதம். ஜோக்ராஜை கூடச் சமாளித்து விடலாம். ஆனால், சத்ரு ஈகோ பிடிச்சவன் ஆச்சே!… மற்றவர்கள் முன்னிலையில் தேஜ் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தோல்விகள், நம்முடன் தொழில் செய்யும்  பார்ட்டி முன்னிலையில் பலத்த தலைகுனிவு ஆச்சே!… 

அமெரிக்காவில் பீட்டரை நியமித்து, சார்லிக்கு எதிரியாகி  ஜோக்ராஜ் எப்படி தப்பு செய்தாரோ, அதே போல் தமிழகத்தில் பரணி ‘தேஜ்’ என்பவனை ஆலமரமாய் வளர விட்டு இருக்கிறான்.” என்றான் விக்ரம்.

“இல்லீகல் பிசினெஸ் என்றாலும், இதிலும் ஒரு எதிக்ஸ் இருக்கு. நமக்குத் துணையாய் இருப்பவர்களைப் பகைத்து கொள்ள கூடாது. அவர்களின் பொருளுக்கோ, உடைமைக்கோ, பெண்களுக்கோ ஆசைப்பட்டால் அது,  ‘full blown warக்கு’ அறைகூவல் விடுவது போல் என்று தெரியாமல், தொடைக்கு நடுவே மட்டும் அந்த ஜோக்ராஜ் சிந்திப்பதால் வரும் பிரச்சனை இதெல்லாம்.” என்றார் பல்தேவ் கடுப்புடன்.

“அணையை உடைத்த பிறகு, ‘வெள்ளத்தை கட்டுப்படுத்து’ என்று நம்மை அனுப்பி வைத்தால் மட்டும் நாம் என்ன செய்ய முடியும்?… அமெரிக்காவில் எல்லாவற்றையும் செய்த செயலுக்கு மன்னிப்பாகத் துறக்க வேண்டிய கட்டாயம் சத்ருஜித்திற்கு. தங்கள் மேல் குற்றம் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் அங்கே. அதுவே இப்பொழுது தமிழகத்தில் நடக்கிறது.

பரணியும், ஜோக்ராஜ் சேர்ந்து சிறு ஓட்டை தானே என்று கவனிக்காமல் விட்ட தேஜ், அவன் சிறு ஓட்டை அல்ல, அணையையே தகர்க்க கூடிய டைனமைட் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது இங்கே தமிழகத்தில் அணை உடையாமல் காக்க உங்களை வரச் சொல்லி இருக்காங்க.” என்றான் விக்ரம்.

“பரணி செய்து வைத்திருக்கும் வேலைக்கு, இதுவும் அமெரிக்கா மாதிரி தான் மாறப் போகிறது. அடிமேல் அடி என்று தேஜ் மூச்சு விட்டுச் சமாளிக்க கூட நேரம் விடாமல் அடித்துக் கொண்டே இருக்கிறான். யார் இந்தத் தேஜ் என்று ஏதாவது தெரிந்ததா விக்ரம்?…” என்றார் பல்தேவ் யோசனையுடன்.

“விசாரிக்கச் சொன்னேன்… ஏதோ அறுபது வயது கிழம் என்கிறார்கள். தூரத்து ஸ்னாப் ஷாட் மட்டும் கிடைத்தது.” என்றவன் தன் லேப்டாப்பில் ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.

“ஒண்ணுமே தெரியலையே!…” என்றார் பல்தேவ் கடுப்புடன்.

“அந்த ஆளோட ஆட்களுக்கே, அந்தக் கிழம் யார் என்று தெரியவில்லை. அந்த ஆள் நேரிடையாக எதிலும் ஈடுபடுவதில்லையாம். எல்லாமே போன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மட்டும் தான். ஒரு ராணுவத்தின் கட்டுக்கோப்போடு அவன், குழு செயல்படுது. எந்த ஒழுங்கீனத்திற்கும் இடமில்லை. 

தப்பு செய்தால், கழுத்தில் தலை இருப்பதில்லையாம். எந்தளவுக்கு விசுவாசமாய் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு மதிப்பு, மரியாதை எல்லாம் கொடுக்கப்படுகிறதாம். உயிரோடு அந்தக் குழுவின் ஆள் ஒருவனையும் பிடிக்க முடியவில்லை. பிடிபடும் நிலை வந்தால், தங்கள் உயிரையே தாங்களே துறக்கிறார்கள்.  

ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட்டில் இருக்கும் அடிமட்ட ஆட்களுக்கு, அந்த டிஸ்ட்ரிக்ட் தலைவனைத் தாண்டி வேறு யாரையும் தெரியவில்லை. இவர்களுக்கு மேல் எத்தனை கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.” என்றான் விக்ரம் தான் சேகரித்த தகவல்களைப் பல்தேவிடம் காட்டியபடி. 

“இப்படியொரு குழு அமைப்பை நான் கேள்விப்பட்டதில்லையே விக்ரம். ஜோக்ராஜ் குழு கிட்டத்தட்ட ஐம்பது வருடமாய் இருக்கு. இந்த அமைப்பில் கூட,  இப்படியொரு விசுவாசத்தை நான் பார்த்ததில்லையே!…” என்றார் பல்தேவ் வியப்புடன். 

“வருஷம் முக்கியமில்லை அங்கிள். எங்குமே தலைவன் ஒழுங்காய் இருந்தால், திறமைசாலியாய், முன்னோக்கு சிந்தனை கொண்டவனாக இருந்தால், இல்லீகல் துறையில் கூட ஒரு ராணுவத்தின் கட்டமைப்பைக் கொண்டு வர முடியும் தான்.       

இந்தப் பக்கம், ‘உங்களைப் பாதுகாக்க பணமும்  வாங்கிட்டு, உன் வீட்டு பெண்கள் மேலேயும் கை வைப்போம்… ’ என்று சொன்னால், ஜோக்ராஜ், பரணியில் பாதிக்கப்பட்ட எல்லோரும் தேஜ் பின்னால் நிற்கிறாங்க.

அவனுங்க கோடிகணக்கில், ‘ப்ரொடெக்ஷன் மணி’ கொட்டி கொடுப்பதே தங்களையும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் பாதுக்காப்பாக வைக்கத் தான். இந்தப் பக்கம் பணமும் வாங்கிட்டு, உன் வீட்டு படுக்கை அறைவரை வருவேன் என்றால் எவனால் அமைதியாக இருக்க முடியும்?

காவல் நாய் என்ற நிலையில் இருப்பவர்களே, வீட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவித்தால் யார் தான் சும்மா இருப்பார்கள்?     

தேஜ்ஜை, இந்த அரக்கர்களிடமிருந்து தங்களைகாக்க வந்த ரட்சகனாகவே பார்க்கிறார்கள்.     

தேஜுக்கு இன்னொரு பட்ட பெயரும் கொடுத்து இருக்காங்களாம், ‘Archangel Michael’ என்று…” என்றான் விக்ரம்.

“Archangel Michael அப்படி என்றால் ?…” என்றார் பல்தேவ் வியப்புடன்.

பல நூற்றாண்டுகளாக நம் கவனத்தை ஈர்த்த மிகச் சக்திவாய்ந்த  தேவதைகள், ‘Archangel’ கருதப்படுகிறார்கள். ‘Arch’ என்ற பெயர் கிரேக்க மொழியில், ‘ஆளுமை, தலைமை’ என்று பொருள்.   

‘Archangel Michael என்றால், ‘கடவுளைப் போலவே  இருப்பவர், பாதுகாப்பு தூதன், சக்திவாய்ந்தவர் என்று பொருள்.  ‘தன்னிகரற்ற தலைவன்  நீதி, கருணை மற்றும் நீதியின் ராட்சனாகவும் இருப்பவன்’ என்று பொருளாம். பயத்தையும், சந்தேகத்தையும் விடுவிக்க உதவுபவனாகவும், மேலும் வாழ்க்கை மாற்றங்களைச் கொண்டு வருவதில் நிகரற்றவன் என்றும் போற்றுகிறார்கள்.பாதுகாப்பு, தைரியம், வலிமை, உண்மை மற்றும் நேர்மை ஆகியவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பவனாக இருப்பவன் என்று பொருளாம்.” என்றான் விக்ரம்.

“எந்த லூசு இப்படியெல்லாம் ஓவர் பில்ட் அப் கொடுத்தது விக்ரம்.” என்றார் பல்தேவ் நக்கலாக.

“நானும் இப்படி தான் கிண்டலாகச் சிரித்து இருப்பேன் அங்கிள். ஆனால்,  சொன்ன ஆள் அப்படிப்பட்டவர். அவர் வாயில் இருந்தே, இப்படி அந்தத் தேஜ் பற்றி, ஒரு புகழ்ச்சி வருகிறது என்றால் அது சாமானியமானது இல்லை அங்கிள்.” என்றான் விக்ரம்.

“யார் சொன்னது?” என்றார் பல்தேவ் திகைப்புடன்.

“அமெரிக்காவின் சார்லி Carmen Dinunzio.” என்றான் விக்ரம்.

“என்னது?” என்றார் பல்தேவ் ஸ்தம்பிப்புடன்.

‘தன் காதில் சரியாகத் தான் விழுந்ததா?…’ என்று திகைப்பு நீங்காதவராக வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார் பல்தேவ்.

“ஹ்ம்ம்!… சத்ருஜித் குழுவையே அமெரிக்காவில் இதற்கு மேல் இருக்க முடியாமல் செய்த, அமெரிக்காவின் நிழல் உலக சக்ரவர்த்தியே கொடுத்த பெயர்.” என்றான் விக்ரம்.

“அவனுக்கும் இவனுக்கும் எப்படி கனெக்சன்?” என்றார் பல்தேவ்.

“எல்லாம் ஜோக்ராஜ் மூலமாகத் தான்…” என்ற விக்ரம் ஆழ்ந்த பார்வை பார்க்க, பல்தேவ் கண்கள் திகைப்பில் விரிந்தது .

“சார்லி மனைவியைக் காப்பாற்றி கொடுத்தது தேஜ் தான். முழு விவரம் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது அமெரிக்காவின் நிழல் உலக சக்ரவர்த்தியின் தோழன், இந்தக் கிழம்.” என்றான் விக்ரம்.

வெகுநேரம் யோசனையில் இருந்த பல்தேவ், “ஆழம் தெரியாமல் ஜோக்ராஜ், சத்ரு கால் விட்டுட்டாங்களா?” என்றார்.

“அப்படி தான் அங்கிள் எனக்கும் தோணுது… இந்தியாவில் எத்தனையோ மாபியா குழு இருக்கு. எத்தனையோ ரவுடி, தாதா கும்பல் இருக்கு.அவர்கள் எல்லோரையும் விட்டுட்டு, தேஜ், சத்ரு, ஜோக்ராஜை மட்டுமே டார்கெட் செய்துட்டு இருக்கான். நேத்து இரவு மட்டும் பல கோடி ரூபாய் பொருள், இடம் எல்லாம் சேதம். சத்ரு நடத்தும் மசாஜ் பார்லர், டான்ஸ் கிளப், ஹோட்டல், ரிசார்ட், பார் என்று நிறைய இடத்தை அழித்து இருக்கிறான். சத்ரு வெளியே சொல்லலை. ஆனால் ஹார்பரில் பரணி கண்ட்ரோலில் இருந்த குடவுனில் இருந்த பொருள் எல்லாம் தேஜ் ஆட்கள் சுத்தமாய் வழிச்சி எடுத்துட்டாங்க. என்று தகவல் வந்திருக்கு.”என்றான் விக்ரம்.

“அங்கே அந்தக் குடவுனில் அப்படி எதை வைத்திருந்தான்?…”என்றார் பல்தேவ் யோசனையுடன்.

“ஒரு கண்டெய்னர் முழுக்க பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட பெண்கள், விற்க கடத்தப்பட்ட குழந்தைகள்.

 850 கிலோ கேட்டமைன்,  100 கிலோ  marijuana, 880 grams of cocaine, Crystal meth, Methadone என்ற போதை பொருட்களை மனிதர்கள் உடலுக்குள் வைத்துப் பாகிஸ்தானிலிருந்து கடத்தியதை வேற கஸ்டம்ஸ் அதிகாரிங்க கிட்டே மாட்டி விட்டு இருக்கான்.ஏறக்குறைய 200 மியூல்கள் ரெண்டு மாதத்தில் கைதாகி இருக்கிறார்கள். அங்கிருந்து வரும் போதை மருந்துகளை, இந்தக் குடவுணுக்குள் வைத்துத் தான் வெளியே எடுப்பது புது தொழில்.

போதைப்பொருள் விற்பனை, ஆபாசப் படப் பரிமாற்றம் மற்றும் பிற சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் மறைக்கப்பட்ட இணைய தளத்தை டார்க்நெட் குறிக்கிறது.

அதன் இறுதி முதல் இறுதி குறியாக்கத்தின் காரணமாக, இது கிராக் செய்ய மிகவும் கடினமாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.கணக்கில் வராத  கிரெடிட் கார்டு எண்கள், அனைத்து வகையான மருந்துகள், துப்பாக்கிகள், கள்ள பணம், திருடப்பட்ட  நற்சான்றிதழ்கள், ஹேக் செய்யப்பட்ட நெட்ஃபிக்ஸ் கணக்குகள் மற்றும் பிறரின் கணினிகளில் நுழைய உதவும் மென்பொருளை வாங்கலாம். 

அங்கே ஆயுத விற்பனையைத் துவக்கி இருக்கிறார். ஆர்டரை கப்பலில் ஏற்றுவதற்கு முன் அதைப் பழம், பூக்கள் என்று பேக் செய்ய அங்கே வைத்திருக்கிறார். எல்லாம் ஹோகயா… ஹோமம் வளர்த்துட்டான்.” என்றான் விக்ரம் கிண்டலாக.

பல்தேவ் ஏதோ சொல்வதற்குள் சத்ருவிடமிருந்து வீடியோ அழைப்பு வர, அதனை ஏற்க வேண்டிய கட்டாயம்.   

“ஸ்பீக் அபவுட் தி டெவில்… இட் அப்பியர்ஸ்…” என்ற பல்தேவ், வேண்டா வெறுப்பாய் அந்த வீடியோ அழைப்பதை ஏற்றார்.

கிரிக்கெட் மட்டையுடன் நின்றவன், அழைப்பு ஏற்கப்பட்டதும் அதை லேப்டாப் இருந்த டேபிள் மேல் வீசியெறிந்தான்.  சத்ருஜித் ஏதோ சைகை செய்ய, அருகில் இருந்தவன் அவனுக்குக் குடிக்க எதையோ எடுத்து வந்து கொடுத்தான்.

அழைப்பை மியூட் போட்ட பல்தேவ் கோபத்துடன், “ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானம். அதுபோல், இந்த லூசு கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கு. அமெரிக்காவில் இனி காலையே வைக்க முடியாது. இங்கேயும் அதே நிலைமை வரப் போகுது… இவனுக்கு விளையாட நேரம் கிடைச்சது பாரு…” என்று விக்ரமிடம் பொரிந்து தள்ள, பதில் சொல்லாத விக்ரம் பல்தேவ் கையைப் பிடித்து அழுத்தினான்.

விக்ரம் உடல் விறைத்து, நிமிர்ந்து அமர்ந்திருக்க, என்னவென்று கண்களால் பல்தேவ் கேட்க, ஆள் காட்டி விரலை நீட்டி, விடீயோவை காண்பித்தான். விக்ரமின் விரல் எதைச் சுட்டி காட்டுகிறது என்று ஊன்றிக் கவனித்த பல்தேவின் விழிகள் விரிந்தது.

டேபிள் மேல் சத்ருஜித் தூக்கி எறிந்திருந்த கிரிக்கெட் மட்டையின் அடி பகுதி ரத்தத்தால் ஊறி இருக்க, அதிலிருந்து ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. சத்ருஜித்தின் வெள்ளை ஆடை முழுவதும் அங்கங்கே சிகப்பு சிகப்பாய் ரத்த திட்டுகள்.

ஆம், சத்ருஜித் கிரிக்கெட் தான் ஆடி இருந்தான் .

பால் வைத்துக் கிரிக்கெட் ஆடுவார்கள், பேஸ்பால் ஆடுவார்கள். மனிதனை பந்தாய் வைத்து அடித்து விளையாடும் ஆட்டத்தினை ஆடியிருந்தான் சத்ருஜித்.

குழப்பத்துடன்  பல்தேவ், விக்ரமை பார்க்க, “நேத்து நைட்டிலிருந்து பரணி மிஸ்ஸிங் என்று சொன்னேனே!…” என்றான்.

குடித்து முடித்தபிறகு, கோபம் அப்பொழுதும் அடங்காதவனாய் கையில் இருந்த கண்ணாடி கோப்பையைத் தூக்கி எரிய, அது எதிரில் நின்றிருந்தவன் நெற்றியில் பட்டு, அவன் மண்டையை பிளந்தது. மண்டை உடைந்து ரத்தம் கொட்டி கொண்டிருக்க, வலி உயிர் போகும் அளவுக்கு இருக்க, அடிபட்டவனின் வாயில் இருந்து சிறு முனகல் கூட வரவில்லை. அப்படி வந்தால் மண்டையோட்டையே முழுதாய் உடைத்து விட்டுத் தான் சத்ருஜித் ஓய்வான் என்பதால், கொட்டிய ரத்தத்துடன் தள்ளாடி நின்றுகொண்டிருந்தான் கோப்பையால் அடி வாங்கியவன்.

இன்னொருவன் வந்து கைத்தாங்களாய் அடிபட்டவனை அழைத்துப் போகும் வரை, கற்சிலையாக நின்றிருந்த அடிபட்டவனையே, ஒரு வித ரசனையோடு, உதட்டில் புன்முறுவலோடு, கண்கள் சந்தோஷத்தில் மின்னப் பார்த்துக்கொண்டிருந்தான் சத்ருஜித். 

“சைக்கோ!…” என்று முணுமுணுத்தது பல்தேவின் உதடுகள்.

பல்தேவும் இத்தனை வருடத்தில் எத்தனையோ உயிரை எடுத்து இருக்கிறார் தான். எத்தனையோ பாவங்களைச் செய்து இருக்கிறார் தான். தகவல் கிடைக்க எதிரிகளைப் பிளந்து கட்டியிருக்கிறார் தான்.  ஆனால், சத்ருஜித்  இது எல்லாவற்றையும்  வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தான் ரசனை என்ற பெயரில்.

‘மென்மையாக, கவர்ச்சிகரமாகப் பேசும் ஆற்றல். ஆனால், அதில் எள்ளளவும் உண்மையோ, நேர்மையோ இருக்காது. அதிகளவு ஈகோ, ‘தான் மட்டுமே சகலமும்’ என்ற கர்வம், வருத்தம் இல்லாத குற்றமின்மை, பச்சாத்தாபம் இல்லாத, வஞ்சகமுள்ள, manipulative, மற்றவர்களைத் தன் விருப்பத்திற்கு வதைத்து ரசிக்கும், மேலோட்டமான உணர்ச்சிகள்/ Shallow emotions, மனக்கிளர்ச்சி, மோசமான நடத்தை கட்டுப்பாடுகள், உற்சாகத்தின் தேவையாக மற்றவரை வதைப்பது, பொறுப்பு இல்லாமை, சமூக விரோத நடத்தை…’ என்று இவையெல்லாம் உலகில் உள்ள மிகக் கொடூர சீரியல் கொலைகாரர்களிடம் காண முடியும் என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்வார்கள். 

அது எல்லாம் ஒட்டுமொத்தமாய் இருக்கும் ஒரு சைக்கோ சத்ரு.  

“I preyed upon the weak, the harmless and the unsuspecting அண்ட் ஐ லவ் இட். அழுகை, இரத்தம், வேதனை, எனக்கு நிம்மதியையும் கிளர்ச்சியும் கொடுக்கிறது. நான் நிறுத்த முடியும் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. எனக்கு மற்றவர்களை வதைத்துப் பார்ப்பதில் எனக்குச் சந்தோசம் கிடைக்குது.”  என்று முன்பொருமுறை, சத்ருஜித் தன்னிடம் சொல்லியதை நினைத்துப் பார்த்த பல்தேவின் அரக்க மனதையும் அசைத்துப் பார்த்தான் இந்த ராட்சசன்.  

ஆட்டம் தொடரும்…