ishq wala love 6

ishq wala love 6

அத்தியாயம் 6

         மனிதன் நினைத்தால் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். ஆம், டாமாகிய நான் மதியை வைத்து தான் எனது  விதியை வெல்லப்போகிறேன்மதியை வைத்து இந்த எழில் மதியை வைத்து

                       -Dude Tom Jacabs

 

                “இவ்வளவு பெரிய கட்டையை எதுக்கு காலுல போட்டுட்டு திரியுற? அசம்பாவிதம் எதாவது நடந்தா அந்த வெள்ளைக்காரன் கிட்ட இருந்து உன்னால தப்பிச்சு வர முடியுமா? போ போய் செருப்பை மாத்திட்டு வா கேனைப்பையன் மவளே…” என்று தன்னை தானே திட்டிக் கொண்டு சின்னதம்பி எழிலிடம் வல்லென்று விழ,

                   அவளோ சின்னதம்பிக்கும் மேல் கோவத்தில் இருந்தாள். இருக்காதா பின்னேடாமுடன் செல்ல வேண்டிய மீட்டிங்கிற்கு என்று  கிளம்பி வந்தவளை படாத பாடுப்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

              அழகான அடர் சிவப்பு நிற புடவை உடுத்தி அதற்கு ஏற்றாற்ப் போல் முத்து வைத்த சிறிய காதணியும் ஒற்றை சங்கிலியும் அணிந்து கூந்தலை விரியவிட்டு தேவதை போல் வந்தவளை எங்கே அந்த பிரம்புஎன்பதைப் போல் பார்த்து வைத்தவர்,

       “இது என்ன நீ அந்த வெள்ளைக் காரன் கூட கல்யாணத்துக்கா போற? இல்லைலஅப்புறம் ஏன் இப்படி வந்திருக்க போ போய் ஒரு சுடிதாரை போட்டுட்டு வா போஇதை கட்டிட்டு உன்னால எங்கே இருந்தாச்சும் தப்பிச்சு வர முடியுமா?”  என்று திட்டி அனுப்பினார்.

              சின்னதம்பி தன்னை டாமிற்கும் விக்ரமிற்கும் உதவ அனுமதித்ததே பெரிது அதிலும் இங்கு தங்க சம்மதித்தது எல்லாம் வரலாற்று புத்தகத்தில் பதியும் அளவிற்கு மாபெரும் சம்பவம்.

       சின்னதம்பி ஹோட்டலில் சண்டையிட ஆயத்தமானவுடனே சட்டென்று அவரை பிடித்து அடக்கியவள் ஒன்றும் பேசாமல் இருக்குமாறு கெஞ்ச இருக்கும் இடம் உணர்ந்து சின்னதம்பியும் அமைதியாகினார்.

    சாப்பிட்டு முடித்துவிட்டு விக்ரமும் டாமும் விடைப்பெற்றவுடனே ஆட ஆரம்பிக்க போனவரை நிறுத்த எப்பொழுதும் போல் தன்னை காப்பாற்றும் மகாசக்தியான ராஜிக்கு அலைப்பேசியில் அழைத்து அவர் கையில் கொடுத்துவிட,

           அவள் எப்பொழுதும்போன்று  என்ன என்னமோ பேசி, டாம் செய்ய போகும் உதவியை சொல்லி சின்னதம்பி மனதில் இருக்கும் இரக்கத்துக்கான பையை அவள் பேச்சு என்னும் சிறிய ஊசியால்  குத்தி உடைத்து, இரக்கம் என்னும் நீரை அவர் இதயம் முழுவதும் கசியவிட்டுவிட்டுநாளைப்பின்ன நம்மனால தான் நாலு பச்சை மண்ணுங்களுக்கு கிடைக்க வேண்டிய உயிர் காக்கும் உதவி கிடைக்காம போய்டுச்சுன்னு யாராச்சும் ஒரு வார்த்தை சொல்லிட்டாங்கனா நம்ம மனசு ஆறுமா அப்பா சொல்லுங்கஎழில் இருந்து உதவி பண்ணட்டும். நீங்களும் கூட இருங்க. அது கூடவே ரெண்டு ஒட்டு திரியுங்கள அதுகளையும் இருக்க வைங்கஅந்த போட்டோ விசயத்தை நான் அதட்டி சொல்லிறேன் அவக்கிட்டநீங்க ஒன்னும் கேட்காதீங்கசரிதானே அப்பா?” என்று விதவிதமாக பேசி அவரை சரியென்ற பதிலை தவிர வேறு எதையும் சொல்ல முடியாதவாறு  சம்மதிக்க வைத்தாள் ராஜி.

(இந்த ராஜி யாரென்றால் சின்னதம்பியின் பால்ய நண்பரான சுந்தரத்தின் மூத்தமகள். எழிலின் உயிர் தோழி.ராஜிக்கு எழில் உயிர் வாங்கும் தோழி. சின்னதம்பிக்கு இன்னொரு செல்ல மகள். “நீயென் தெரிவின் கர்வம்மில் இவளை பற்றி விரிவாக இருக்கும்.. விருப்பமுள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளவும்.)

       இப்படி ராஜி பேசிபேசியே மலையிறக்கிய சின்னதம்பியை தான் மட்டும் எதாவது அவர் சொல்பேச்சு கேட்காமல் வெறியேற்றினோம் என்றால் அவ்வளவு தான். மீண்டும் மலையேற ஆரம்பித்து விடுவார் அதன் பிறகு ராஜி என்ன யார் சொன்னாலும் ஒரு பருப்பும் வேகாது என்று தெரிந்தவள் ஒன்றும் சொல்லாமல்  தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்.

      அந்த அறைக்குள் நுழைந்தவுடனே அவளுக்கு சிரிப்பாக வந்து தொலைத்தது. ஏனென்றால் சின்னதம்பி செய்த கூத்து அப்படிபட்டது.

      மாலை ஐந்து மணிப்போல் நால்வரும் அதாவது எழில் சின்னதம்பி நிரஞ்சன் சந்தியா ஆகிய அனைவரும் விக்ரமின் பங்களாவிற்கு வந்தனர்.

            அவர்களை வரவேற்று தேநீர் கொடுத்த வேலையாள் அருகருகில் இருந்த   இரண்டு அறைகளை காட்டி தங்கிக்கொள்ளுமாறு கூறியவர், எழிலை ஆறுமணிப்போல் நடக்கப்போகும் மீட்டிங்கிற்கு கிளம்பி இருக்குமாறும் டாம் சார் வந்து அவளை அழைத்து செல்வார் என்றும் கூறிவிட்டு சென்று விட்டார்.

                ஒரு அறையில் எழிலும் சந்தியாவும் மற்றொரு அறையில் சின்னதம்பியும் நிரஞ்சனும் தங்குவதாக முடிவெடுத்து அவரவர்கள் அறையில் நுழைந்தனர்.

           சந்தியாவும் எழிலும் தங்களது அறைக்கு சென்று முழுதாக பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது. அதற்குள் கதவை தட்டிக்கொண்டு உள் நுழைந்த சின்னதம்பி எழில் அந்த ஒரத்துல போய் நில்லுஎங்கே சந்தியா?” என்று கேட்டவர் பதிலை கூட வாங்காமல் விளக்குளை  எல்லாம் அணைத்தவர் சன்னல், கதவு என்று எல்லாத்தையும் அடைத்து அறையை இருள் சூழ செய்துவிட்டு தனது கைப்பேசியை எடுத்து கேமராவை இயக்கி அந்த அறை முழுவதும் சுற்றி வந்தார்.

    

         அவர் உள்நுழைந்து தன்னை பேசக்கூட விடாமல் அறையை இருட்டாக்கியதோடு மட்டுமில்லாமல் இப்படி வேறு செய்யவும்இப்ப தான் புரியுது நான் ஏன் இவ்வளவு லூசா இருக்கேனு? விதை ஒன்னு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்…” என்று முனங்கி கொண்ட எழில் ஒன்றும் கூறாமல் அமைதியாகி விட,

                வந்தவுடனே இயற்கை சந்தியாவை பலமாக அழைத்துவிட அதற்கு விடை தருவோம் என்று நினைத்தவள் அந்த அறையில் இருந்த ஒய்வுஅறைக்கு சென்று  தனது தேவையை தீர்த்துக்கொண்டு திரும்பும் நேரம் அங்குள்ள கண்ணாடிக்கு அருகிலிருந்த  பொருளை பார்த்து சட்டென்று நின்று விட்டாள்.

         ஏனென்றால் அங்கு இருந்த பொருள் அப்படிபட்டது. அழகு நட்சத்திரங்களின் சிவந்த மேனியின் ரகசியம் அதாங்க சில ஆயிரம் மதிப்புக் கொண்ட முகம் கழுவும் ஃபேசியல் கீரிம். அதை பார்த்தும் கண்டும் காணாத மாதிரி சந்தியாவால் செல்ல முடியவில்லை.

          அதற்கு முதல் காரணம் அவளது மாநிறம். இரண்டாவது காரணம் பால் பவுடரில் முக்கி எடுத்ததைப் போல் வெள்ளை வெளிரென்று இருக்கும் அவளது கணவன். மூன்றாவது அந்த நிறத்தை வைத்து கொண்டு சந்தியாவை தும்பை பூவில் தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்று   நினைக்க வைக்கும் அளவிற்கு அவள் கணவன் பிரேம்குமார் இவளை கலாய்க்கும் கலாய்ப்பு. நான்கு அதன் விலை சில ஆயிரங்கள் இப்பொழுது ஒசி.

              இந்த நான்கு இன்றியமையாத காரணங்களால்  அதை எடுத்து தனது முகத்தில் அப்ப ஆரம்பித்திருந்தாள் சந்தியா. அவள் தனது முகத்தில் மானாவாரியாக அப்பி கொண்டிருக்கும் போதே சின்னதம்பி அனைத்து விளக்குகளையும் அணைத்தவர் ஒய்வு அறையின் விளக்கையும் சேர்த்து  அணைத்திருக்க  இவள் தடவிக்கொண்டே உள்ளிருந்து கத்த அது ஒரு சவுண்ட் ப்ரூப் குளியலறை என்பதால் அவளது குரல் வெளியே கேட்காமல் போய் விட்டது.

                   இதற்காக வெளியே வர விரும்பதாவள் நன்றாக முகம் முழுவதும் அப்பிக்கொண்டே வெளியே வந்தாள். அங்கு அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க ஒன்றும் தெரியாமல் தடுமாறியவளுக்கு ஒருத்தரின்  வரிவடிவம் தெரிய அது எழில் என்று நினைத்தவள் அவளை நோக்கி முன்னேறினாள். அவள் சென்றது சின்னதம்பியின் முதுகுக்கு பின்னால்

         அலைப்பேசி கேமராவில் பார்வையை பதித்துக் கொண்டே திரும்பியவர் அதில் தெரிந்த உருவத்தை கண்டு பயந்து போய்அம்மாபேய்…” என்று கத்த சந்தியாவும் இருட்டில் இருந்த உருவம்  தீடிரென்று ஆண் குரலில் கத்தவும் அதில் பயந்து ஏஏஏஏஏஏதிருடன் திருடன்…” என்று அலற , இவர்கள் இருவரது அலறலில் ரிப்ளேக்ஷன் ஆக்சனாக எழிலும்ஆஆஆஆஆஆஆ…” என்று பெருங்குரலெடுத்து அலற, எழிலது அலறலில் மீண்டும் சின்னதம்பி பயந்து தனக்கு முன்னிருந்த பச்சை உருவத்தை பார்த்து கத்த சந்தியாதிருடன் திருடன்என்று அலற எழில் அலறிக்கொண்டே நகர்ந்ததில் அவள் நின்றிருந்த இடத்தில் அழகுக்காக வைத்திருந்த ஜாடி விழுந்து உடைய மீண்டும் மூவரும் ஒரே நேரத்தில் அலறினர்.

      அந்த அலறலில்  பக்கத்து அறையில் இருந்த நிரஞ்சன் என்னவோ எதோவென்று பயந்து வந்து மூவரும் இருந்த அறைக்கதவை திறக்க முயல முடியவில்லை. அப்பொழுது தான் அது உள்ளிருந்து பூட்டிருப்பது தெரிந்தது. எனவே கதவை பலம் கொண்ட மட்டும் தட்ட அதில் அலறிக்கொண்டிருந்த மூவரும் பயமாகி இன்னும் கத்த துவங்கினர்.

              “அப்பாஅப்பா…”

               “ஆஆஆஆஆஆஆபேய்பேய்பேய்…”என்று சின்னதம்பி கத்த

          “ஆஆஆஆஆபேபேபேபேபேபேபேபே….திருடன்திருடன்காப்பாத்துங்ககாப்பாத்துங்க…”

இந்த சத்தத்தில் இவர்களுக்கு அறையை காட்டிசென்ற வேலையாளும் வந்துவிட நிரஞ்சன் அறை உள்பக்கமாக பூட்டி இருக்கிறது. உள் இருப்பவர்கள் கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் கூற அந்த வேலையாள் சென்று அந்த அறையின் இன்னொரு சாவியை கொண்டு வந்தவர் கதவை திறந்துவிட்டார்.

                  கதவு திறந்தது கூட தெரியாமல் மூவரும் இன்னமும்  கத்திக்கொண்டிருக்க அறையின் உள் வந்த வேலையாள் விளக்குகளுக்கான விசைபலகையை சட்டென்று அடைந்து விசையை இயக்க விளக்குகள் ஒளிர்ந்தன.

               “என்ன ஆச்சு? ஏன் இப்படி கதவை மூடிட்டு கத்திக்கிட்டு இருக்கீங்க?” என்று நிரஞ்சனின் குரல் கேட்கவும் தான் வாயை மூடி கண்களை திறந்து தனக்கு முன்னிருந்தவர்களை சின்னதம்பியும் சந்தியாவும் ஒழுங்காக பார்த்தனர்.

              அதில் தனக்கு முன்னிருப்பவர் சின்னதம்பி என்றுணர்ந்த சந்தியாசுமால் ப்ரோ நீங்களா?” என்று கேட்க, அவரும் சந்தியாவை பார்த்து நீயா என்று கேட்கஆமாம் நான் தான்…” என்றவள் திரும்ப, அவளை பார்த்த நிரஞ்சனும் எழிலும் ஆஆஆ என்று அலற, “நீங்க ஏன் கத்தி தொலையுறீங்க தரித்துரங்களா?” என்றவாறு தனக்கு பக்கவாட்டில் கண்ணாடி பதிப்பிக்கபட்டு இருந்த வாட்ரோப்பில் தனது முகத்தை பார்த்தவள்ஐயோ பேய்பேய்…” என்று கத்த அங்கிருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்

           இவற்றை எல்லாம் எண்ணி சிரித்தவாறு ஒரு வெண்மை நிற அனார்கலி சுடிதார் அணிந்து வந்தாள் எழில்.

              அதிலும் குறையை கண்டுபிடித்தவர்இது என்ன தலை முடியை விரிச்சு போட்டுட்டுஅது கண்ணுல விழும் காதுல விழும் அதை ஒதுக்குறத்துக்கே உனக்கு நேரம் சரியா போய்டும். இதுல உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எப்படி கண்டுப்பிடிப்ப? ” என்று திட்ட அவரை முறைத்தவாறே தனது விரிந்து கிடந்த கூந்தலை சுருட்டி அழகான ஒரு கொண்டையாக்கி ஒரு ரப்பர் பேண்டில் அடக்கினாள். அதுவும் அவளுக்கு ஒரு அழகாக தான் இருந்தது.

             அதற்கு பிறகு தான் இப்படி அவளது கால்களில் அணிந்திருந்த குதிகால் கொஞ்சம் அதிகம் வைத்திருந்த காலணிகளை பார்த்துவிட்டு இப்பொழுது திட்டிக் கொண்டிருக்கிறார்.

                    “எப்பாசத்தியமா செம காண்டு ஆயிட்டேன் சொல்லிட்டேன். இது என்ன நம்ம வீடா ஒன்னு ஒன்னா போய் மாத்திட்டு வர. வந்த இடத்துல என்ன கொண்டு வந்தமோ அதானே போட முடியும். எங்க்கிட்ட வேற செருப்பு எல்லாம் இல்லை.” என்று கொலைவெறியாகி எழில் கத்த அவள் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தவர்

                    “இப்ப எதுக்கு கத்துற சொல்ல வேண்டியது தானேசரி உன் போனை குடு…” என்று கேட்டு அவளது கைப்பேசியை வாங்கியவர் அந்த அறையில் அமர்ந்திருந்து இவ்வளவு நேரம் அங்கு நடந்ததையெல்லாம் எதோ தங்களுக்கு முன் பிக் பாங்க் தியரி சீரியல் ஒடுவதைப் போல் ரசித்து சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவையும் நிரஞ்சனையும் நோக்கி சென்றார் சின்னதம்பி.

                “டேய் இந்த படத்துல எல்லாம் வரும்ல எதோ இந்த போன்ல இருக்குறதை ஒன்னை ஆன் பண்ணிவிட்டா போன் வைச்சு இருக்கவங்க எங்கே இருக்காங்கனு கண்டுப்பிடிக்க முடியும்ல …” என்று நிரஞ்சனை நோக்கி கேட்டார் சின்னதம்பி.

              “ம்ம்… GPS மாமா அது. ” என்றவன் எழில் மற்றும் தனது கைப்பேசியில் GPS Locator செயலியை பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்தான்.

    “ஏன் சுமால் ப்ரோ? உங்க மக பேருல ஒரு ஐம்பதாயிரம் கோடி சொத்து இருக்குமா?”  என்று சந்தியா நக்கலாக கேட்க ,

            அதை புரிந்துக் கொண்டவர்என் மகள் மதிப்பு என்னை பொறுத்த வரை ஐம்பதாயிரம் கோடிக்கும் மேல…” என்று கூற,

                 “ரொம்ப தான்சுமால் ப்ரோ பயப்படாதீங்க. அவங்க ரொம்ப பெரிய இடம்நீங்க நினைக்குற மாதிரி சில்லறை வேலை எல்லாம் பார்க்க மாட்டாங்க. சோ பதட்டப்படாதீங்க…” என்றுமுதலில் நக்கலாக இழுத்தவள் பிறகு அவர் மிகவும் பயப்படுவதை புரிந்துக் கொண்டு ஆறுதலாக அவர்களை பற்றிக் கூறினாள் சந்தியா.

        சந்தியாவிற்கு சரி என்பதைப் போல் தலையாட்டியவருக்கு  எதுவோ சரியில்லை என்று அவரது உள்மனது சொல்லிக் கொண்டே இருந்தது. எழில் சந்தியாவை நோக்கி ஒரு நன்றி பார்வையை செலுத்த சந்தியா பதிலுக்கு கண்ணடித்தாள்.

                  செயலி பதிவிறக்கம் ஆகிருக்க எழிலது கரத்தில் அலைப்பேசியை கொடுத்தவன்மொபைல் ஸ்விச் ஆப் ஆகாம பார்த்துக்கோ மதிடிரைவர் வருவாரா இல்லை அவன் டிரைவிங்கா?”   என்று நிரஞ்சன் விசாரிக்க ஆரம்பித்தான்.

               அடுத்து நீயா ராசா என்பதைப் போல் சந்தியாவும் எழில்மதியும் அவனை பார்த்தனர்.

                     “சரி நான் போய் டிரைவரை பார்த்து பேசிட்டு அவர் நம்பர் வாங்கிட்டு வரேன்..” என்றவாறு நிரஞ்சன் அவ்விடம் விட்டு அகன்றான்.

                        “ஆமாம் சுமால் ப்ரோ என்னத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரூம்குள்ள வந்து இருட்டுக்குள்ள போட்டோ எடுத்துட்டு இருந்தீங்க?”

                    “அதுவா? எதாவது கேமரா ஒளிச்சு வைச்சு இருக்காங்களானு பார்த்தேன். வேற ஒன்னும் இல்லை.” என்று கூற சந்தியாவும் எழிலும் அவரை ஆவென்று பார்த்தனர்.

                      இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு வேலையாள் வந்து எழிலை டாம் அழைப்பதாக கூற, அவருடன் சென்றாள்.

        அவருடன் மாடிப்படியில் ஏறிக்கொண்டே  “எப்ப வந்தாங்க சார்?” என்று கேட்க,

          “மத்தியானம் மூனு மணிக்கு மேல…”

           “அதுக்கு அப்புறம் வெளியே போய்ட்டு எப்ப வந்தாங்க?”

             “இல்லையே அதுக்கு பிறகு வெளியே போல அவங்க ரூம்ல தான் இருந்தாங்க…” என்று கூறி ஒரு அறையின் வாயிலில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

                  ‘அடேய்டேய்வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே ஒரு வார்த்தை வாங்கனு கூப்பிடல யாரையும்…’ என்று நினைத்தவாறு அறை கதவை தட்ட,

              “எஸ் கமின்…” என்ற டாமின் குரலைக் கேட்டு அந்த அறையின் உள் சென்றாள். அது ஒரு அலுவலக அறை.

  அங்கிருந்த ஒரு மேஜையில் வெண்மை நிற மேல்சட்டையும் கருமைநிற கால்சட்டையும் அணிந்து கையிலிருந்த ஒரு சிவப்புநிற கோப்பை மிக கவனமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

            அவள் உள்நுழைந்தவுடனே அவளது முகத்தை கூட பார்க்காமல் ஒரு கைப்பை போன்று இல்லை அதைவிட கொஞ்சம் பெரிதாக, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டுமென்றால் ஒரு நான்கு செட் துணி எடுத்து வைக்க பயன்படுத்துவோம் அல்லவா அப்படி ஒரு பையை அவளிடம் நீட்டினான்.

        எழில் என்னவென்று கேட்க திறந்துபார் என்பதைப் போல் செய்கையில் கூறியவன் அவனது கையிலிருந்த ஒரு கோப்பில் கவனமாக இருந்தான்.

        அதை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஒரு பெட்டிக்கடையே அதற்குள் ஓளித்து வைத்திருந்தான். மடிக்கணினி, நோட் பெட், பேனா பென்சில் அளவுகோல் ஸ்கேட்ச் கூட இருந்தது. பதிவாக்கி(ரெக்கார்டர்), தண்ணீர் பொத்தல், பெயர் வாசிக்க முடியாதளவு சிக்கலாக இருந்த இரு ரொட்டிப்பைகள், ஒரு சிறிய முதலுதவி பெட்டி, அடுத்து ஒரு பாலிதீன் பையில் இவனுடைய இரு சட்டைகள் இருந்தன.

             ‘அடேங்கப்பா ஆத்திரம் அவசரத்துக்கு கடைக்கு எல்லாம் போக வேண்டியதே  இல்லை போலயேடோரா மாதிரி பாக்பாக்குள்ளயே எல்லாம் வைச்சுருப்பான் போலஹா ஹா ஹா.. பாக் வைச்சுருக்கது நான் சோ டோரா நான்என் கூட வர குரங்கு புஜ்ஜி இவனா..ஹா ஹா ஹாஎன்று மனதிற்குள் நினைத்துக் சிரித்துக் கொண்டவள்,

       வெளியே பவ்யமாக பார்த்து போகலாமா சார்?” என்று அவனிடம்  கேட்டாள்.

            அப்பொழுது தான் அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒரு ரசனையுடன் கூடிய பார்வையை அவளை நோக்கி செலுத்தியவன் அவளை பார்த்து மெலிதாக சிரித்தான்.

                   “லூசு பையன் எதுக்கு நம்மள ஒரு மார்க்கமா பார்த்துட்டு சிரிக்குறான்…” என்று தன்னையறிமால் தமிழில் கொஞ்சம் சத்தமாகவே முனுமுனுத்த எழில் கடமைக்கே என்று சிரித்து வைத்தாள்.

                   “ம்ம்போலாம்…” என்றவன் தனது கையிலிருந்த கோப்பை அவளை நோக்கி நீட்ட அதை வாங்கி எழில் அவன் கொடுத்த கைப்பையில் இருந்த இன்னொரு உறையில் வைக்க, எழில் சரியாக அந்த கோப்பை பையில் வைத்துவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு டாம் அந்த அறையை விட்டு வெளியேற அவளும் அவன்பின்னே சென்றாள்.

                  “ப்பாஎன்ன உசரமா இருக்கான்என்ன சாப்பிட்டு இப்படி வளர்ந்துருப்பான். ஒருவேளை எதுவும் இந்த தென்னை மரத்துக்கும் பனை மரத்துக்கும் போடுற உரம் கொடுத்து இவனை வளர்த்து இருப்பானுகளோஇருக்கும் இருக்கும் யார் கண்டா ?” என்று அவன் பின்னே மாடிப்படியில் இறங்கிக் கொண்டே கேள்வியும் நானே பதிலும் நானே என்று புலம்பியவாறு இறங்கினாள்.

             டாம் சட்டென்று நின்று அவளை நோக்கி திரும்பிஏதாவது சொன்னியா ஜெர்ரி?” என்று சிரிப்புடன் கேட்க , நல்லவேளையாக எதற்கும் இருக்கட்டும் என்று அவனை  இரண்டு படி இடைவெளி விட்டு  தொடர்ந்து வந்ததால் அவனை இடித்துவிடாமல் நின்றவள்இல்லையேஒன்னுமே சொல்லலையே…” என்று திருதிருவென்று முழித்தவாறு உதட்டை பிதுக்கி கூற அவளை நம்பாது பார்த்தவன்இல்லையே எனக்கு நீ என்னமோ கேட்டதைப் போல் இருந்ததே…” என்று மீண்டும் அழுத்தி கேட்க வேணாம் அழுதுருவேன்  என்று சொல்வது போல் முகத்தை வைத்துக் கொண்டு இல்லை என்று எழில் வேகமாக தலையை ஆட்ட பிழைத்து போ என்பதைப் போல் சிரித்துவிட்டு படிகளில் இறங்க ஆரம்பித்தான்.

                        இவர்கள் இருவரும் நின்று பேசியது ஹாலில் அமர்ந்திருந்த சின்னதம்பி நிரஞ்சன் சந்தியாவிற்கு நன்றாகவே தெரிந்தது.

              சின்னதம்பிபாதிபடில நின்னுட்டு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு உனக்கு வெள்ளைக் குரங்கே. பிள்ளை சட்டுன்னு பயந்திருச்சுஎன்று மனதிற்குள் டாமை திட்ட

               நிரஞ்சன்ஏய் பெரியம்மா உனக்கு வைக்குறேன் பெரிய ஆப்பாஇவங்ககிட்ட போய் இவளை கோர்த்து விட்டுருக்க…’

                சந்தியாஎன்னாமா இருக்கான் இந்த பாஞ்சாலிஇந்த வொயிட் ஷர்ட் செமையா இருக்குஹை நம்ம எழிலும் வொயிட் சுடி மாட்சுக்கு மாட்ச்குட் பேர்அடுத்த தடவை எங்கயாவது போகும் போது நம்மளும் மாட்சிங்கா போட்டுட்டு போனும் நம்ம பிரேமானாந்தா கூட…’  என்று கீழே இருந்த மூவரும் ஆளுக்கு ஒன்றாக  நினைத்துக் கொண்டு அவர்களை பார்த்திருந்தனர்.

              கீழ் இறங்கி அவர்களை நோக்கி வந்தனர் இருவரும்.

            அவர்களை பார்த்து வரவேற்பாக சிரித்தவன்வெல்கம் அங்கிள், சந்தியா! சாரி உங்க பேர் மறந்துட்டேன்…”  என்று அனைவரையும் வரவேற்றவன் நிரஞ்சனை வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

             சின்னதம்பி சிரித்துவைக்க, சந்தியாஹாய் மிஸ்டர் பாஞ்சாலி…” என்று சிரிக்க , நிரஞ்சன் அவனை கண்டுகொள்ள கூடவில்லை. சின்னதம்பியிடம் அவன் ஆங்கிலத்தில் கூறியதை தமிழில் கூறிக் கொண்டிருந்தான்.

       நிரஞ்சனது திமிரில் சிறிது உதட்டை சுழித்தவன் சந்தியாவை நோக்கிஇப்ப எனக்கு லேட் ஆச்சுபட் நான் திரும்பி வந்த பின்னாடி நீங்க கண்டிப்பா அந்த பாஞ்சாலிக்கு அர்த்தம் சொல்லனும்…” என்று டாம் கூற சந்தியா முழிக்க ஆரம்பித்தாள். என்னவென்று விளக்கம் கூறுவாள்.

       ‘மவனே இனிமே உன் கண்ணுல சிக்குனா தானே டாஎன்று மனதிற்குள் நினைத்தவள் அவனை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்துவைக்க அந்த பெயரின் அர்த்தம் புரிந்த எழில் சந்தியாவின் நிலைமையை நினைத்து செத்தான் டா சேகரு என்று நினைத்து வாய்க்குள் சிரிப்பை அடக்கி கொண்டு நின்றாள்.

           “சரி அங்கிள் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கஉங்க பொண்ணை பத்திரமா கொண்டு வந்து விடுறேன்…” என்று சிரிப்புடன் கூறிவிட்டு அவரது பதிலுக்கு கூட காத்திராமல் அந்த இடத்தை விட்டு அகன்றான். அவனது பேச்சில் சிறிது நக்கல் இருந்ததோ

 அதை நிரஞ்சன் சின்னதம்பிக்கு மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருக்க எழில்அப்பா போய்ட்டு வரேன். நிரஞ் சந்து பாய்…”என்றவாறு டாமின் பின்னே விரைந்தாள்.

        “பார்த்து போய்ட்டு வா…” என்று சின்னதம்பி கூறுவதற்குள் அவள் வாசல் கதவை தாண்டி சென்றிருந்தாள்.

      “ஆமாம் டா டேய் இந்த ஆங்கிள்னா மாமானு தானே அர்த்தம்…” என்று சின்னதம்பி கேட்க ,

           “ஆமாம் சுமால் ப்ரோ அதுவும் பொண்னை கட்டிக் கொடுக்க போற முறையான மாமானு அர்த்தம்…” என்று சிரிப்புடன் நக்கலாக கூறியவாறு அவ்விடத்தை விட்டு அகன்றாள் சந்தியா.

            “அப்டியா டா டேய் நிரஞ்சன்…” என்று சின்னதம்பி பதறிபோய் மூச்சை இழுத்து பிடித்த படி வினவ,

              “இல்லை மாமா பொய் சொல்லுறா அவ…” என்று நிரஞ்சன் கூறிய பின்பு தான் சிறிது மூச்சையே வெளிவிட்டார்.

             “ஏன் டா இந்த சித்தப்பா பெரியப்பாவ எல்லாம் இந்த இங்கிலிசுல எப்படி கூப்பிடுவாங்க…”

                “அதுவும் அங்கிள் தான்…” என்று நிரஞ்சன் கூற,

என்னடா இது விளங்காத பையன் பாசையா இருக்கு…” **********************************************************************************

           அலுவலக கூட்டங்கள் நடப்பதற்கென்றே கட்டிவைத்ததைப் போல் இருந்தது கடற்கரைக்கு மிக அருகில் கட்டமைக்கப்பட்டு  இருந்த அந்த ரிசார்ட்.

           ஒரு நீண்ட வளாகம் மாதிரி கூரையால் வெய்யப்பட்டதைப் போன்ற மேற்கூரையும் இருபக்கமும் சுவர்கள் இல்லாது நீண்ட தடுப்பு மட்டும் போடப்பட்டு நிறைய மேஜைகள் நாற்காலிகள் என்று இருந்த அந்த ரிசார்ட்டின் உணவகபகுதியில் இருந்தனர். கடற்காற்று வேறு படபடவென்று உள்ளே வீசிக் கொண்டிருந்தது.      

           சதுரவடிவ மேஜையில் நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.

            இவர்கள் சந்திக்க வந்த நபர் வர தாமதமாகிறாதா இல்லை இந்த டாம் சொன்ன நேரத்திற்கு முன்னாடி வந்துவிட்டானா என்று சரியாக தெரியவில்லை எழிலுக்கு. ஏனென்றால் டாமும் எழிலும் இந்த இடத்தை அடைந்து சரியாக பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. வந்ததிலிருந்து டாம் இவளை கண்டுக்கொள்ளவும் இல்லை அவர்கள் இவ்வளவு நேரம் ஆகியும் வராமல் இருப்பதற்காக எரிச்சல்படவும் இல்லை. அவனது அலைப்பேசியில் அமைதியாக எதையோ மும்முரமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

            இதற்கிடையில் வெயிட்டர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க அதற்கும் அவன் நிமிராமல் இருந்துவிட ஒன்றும் வேண்டாம் என்று அனுப்பிவிட்டிருந்தாள்.

          அதற்கு பிறகு எழிலும் அவனை கண்டுக்கொள்ளாமல் சுற்றியிருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தாள். பக்கத்து மேஜையில்  இருந்த காதலர்கள் அவளது கவனத்தை மொத்தமாக கவர்ந்துவிட அவர்களையை பார்க்க ஆரம்பித்திருந்தாள். அவள் மட்டுமில்லாது அங்கிருந்த நிறைய பேர் அவர்களை தான் பார்த்திருந்தனர்.

                 அந்த பெண் ஒல்லியாக சிவப்பாக சிறிது குட்டையாக எப்படியென்றே சொல்லமுடியாதவாறு பார்ப்பவர்களுக்கு  சாய்பல்லவியை  ஞாபகப்படுத்தி கொண்டிருந்தாள். அந்த ஆண் எப்படியும் குறையாது ஆறடி இருப்பான், கருத்த நிறம் கண்களுக்கு கீழ் இருந்த முகத்தை மறைப்பது போல் மண்டி வளர்ந்திருந்த தாடி என்று பார்த்தாலே உனக்கு லவ் பெயிலியரா பா தம்பி என்று கேட்கும் அளவிற்கு இருந்தான்        

               அந்த பெண் எங்கோ வெறித்து பார்த்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள். அந்த பையன் தான் அவளது சிரத்தை தனது இரு கரங்களால் தாங்கிக் கொண்டு எதுவோ பேசிக் கொண்டே இருந்தான். என்னவென்று அவர்களுக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த எழிலுக்கே கேட்காத வண்ணம் மிக அமைதியாக பேசிக் கொண்டிருந்தான். ஆனால் எழிலால் ஒன்று புரிந்துக்கொள்ள முடிந்தது அவன் எதற்கோ அந்த பெண்ணிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறான் என்பது அவன் கண்களில் காதல் விடாதுகொட்டிக் கொண்டிருந்தது. ஆனால்  அந்த பெண் அவனை கண்டுக் கொள்ளகூட வில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள்.

             இப்படியே மேலும் ஒரு பத்துநிமிடங்கள் கடந்திருக்க அவளிடம் இவ்வளவு நேரமும் எதுவோ புரியவைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தவனுக்கு  அவளது கண்டுக்கொள்ளாத தன்மை சிறிதுசிறிதாக அவனுள் கோவத்தை எற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது அவன் முகத்திலே தெரிந்தது. முழுவதும் கோவம் என்னும் அரக்கன் அவனை பிடித்துக்கொள்ள சட்டென்று தான் அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்தவன்,

                  “வதிநீ என்ன தான் நினைச்சுட்டு இருக்க? நான் சொல்லுறது எதுவுமே கேட்க கூடாதுன்னாஇல்லை இவன் யாரு என்னை சொல்றதுன்னா? ” அப்பொழுதும் அந்த பெண் அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை இவ்வளவு நேரம் எங்கு வெறித்திருந்தாளோ அங்கு தான் வெறித்திருந்தாள். அதில் அவன் இன்னும் கடுப்பானது போல் எழிலுக்கு தோன்றியது.

                அது உண்மை என்பதைப் போல் இவ்வளவு நேரம் அனுசரனையாக பிடித்திருந்த அவளது முகத்தை கோவத்துடன் பற்றி தனது புறம் திருப்பியவன்என்ன என்னையும் கொன்னுட்டு நிம்மதியா இருக்கலாம்னு நினைக்குறியா?” என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் அந்த பெண் கண்களிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட அவனது கோவம் பறந்து சென்றுவிட்டதைப் போல் அவனது முகத்தில் எதோ பதட்டம் வந்து தொற்றிக் கொண்டது.

                  “ஸாரி வதிசாரி வதிமன்னிச்சுரு …” என்று கெஞ்சியவன் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் நொடிப்பொழுதில் அவளது காலிலே விழுந்து விட்டான். எழில்மதியிலிருந்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் ஆஆஆஆஆவென்று வாயை பிளந்தவாறு அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

            அந்த பெண் சட்டென்று எழுந்து அவனை கண்டுக்கொள்ளாமல் வெளியே செல்ல, அவன் வேகமாக பில்லிற்கான பணத்தை வைத்து விட்டு அவள் பின்பு ஒடியவன் வாசலிற்கு அருகில் நெருங்கியவுடன் என்ன நினைத்தானோ நின்று திரும்பி நொடி நேரத்தில் அனைவரையும் தனது பார்வையால் சுற்றி வந்தவன்சாரி ஹைய்ஸ்…”   என்று கத்திவிட்டு ஒடி விட்டான்.

              அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த டாம் கடகடவென்று சிரித்துகொண்டேஇடியட்பப்ளிக் நியுசன்ஸ்…” என்று கூற ,

           அவனை பார்த்த எழில்லவ் அது..”

             “லவ் மை ஃபுட்…” என்று நக்கலான குரலில் டாம் கூற எழில் வெறியாகிவிட்டாள்.

                “உங்களை மாதிரி வாரத்துக்கு ஒரு கேர்ள் ப்ரண்ட் மாத்துருவங்களுக்கெல்லாம் எப்படி தெரியும். லவ்வோட அருமை…”

                  “ஆனால் உனக்கு ரொம்ப தெரியும் போலவே…” என்று கேட்க அதற்கு எழில் எதோ மறுமொழி கூறுவதற்குள் இவர்கள் பார்க்க வந்த நபரும் அவரது காரியதரிசி கொஞ்சும் கிளியும் வந்துவிட எழில் அமைதியாகி விட்டாள்.

 

  

                

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!